Saturday, July 5, 2014

சும்மா இருந்தால் சுகம் கிடைக்கும்



அன்புடையீர் 

              ஆன்மா இன்பதுன்பங்களை அனுபவிக்க இந்த உடலை எடுத்து வந்துள்ளது . இன்பம் துன்பம் இரண்டுக்கும் காரணம் ஆசை . ஒரு பொருள் தன் ஆசை படி கிடைத்துவிட்டால் இன்பம் அது கிடைக்காவிட்டால் துன்பம் தரும். இந்த இன்பம் ,துன்பம் மற்றும் ஆசை முதலிய மூன்றும் நம்முள் தானே இருக்கிறது .இந்த மூன்றுக்கும் காரணம் நம் கையில்தான் உள்ளது . 

             ஆன்மாவுக்கும் உடலுக்கும் நடுவே மனம் உள்ளது. ஆன்மா ஆனந்தமயமானது அந்த ஆனந்தம் உடலில் பாய்ந்தால் ,அதனை அனுபவிக்க வெளி உலக சூழல் ஆனந்தம் தருமாறு மாறிவிடும். உடலில் ஆனந்தம் பாய்வது குறைந்தால் உலக சூழல் துக்கம் தருமாறு மாறிவிடும். ஆனந்தம் வெகுவாக குறைந்துவிட்டால்  பசி பிணி மூப்பு உறக்கம் வந்துவிடும் கடைசியாக மரணம் ஏற்படும் .

            உடல் ஆனந்தத்தை அனுபவிப்பது மனதின் அடர்த்தியை பொருத்து அமையும். மனதின் அடர்த்தி குறைய குறைய பசி பிணி மூப்பு உறக்கம் குறைந்துவிடும் . மரணமிலா பெரு வாழ்வு கிட்டும். மனதின் அடர்த்தி ஆசையின் அளவை பொருத்து அமையும். ஆசைகள் அதிகரித்தால் அதனை அடைய உண்டாகும் எண்ண பதிவுகள் அதிகரிக்கும். எண்ண பதிவுகள் அதிகரித்தால் மனம் தடிமன் அதிகரிக்கும். மனதின் அடர்த்தி அதிகரித்தால் இன்பம் குறைந்து துன்பமே ஏற்படும். மரணம் உண்டாகும் .

           ஆசை இல்லாமல் இருந்தால் எண்ணங்கள் இல்லாமல் போகும் அதனால் மனதின் அடர்த்தி குறையும் . அடர்த்தி குறைந்தால் ஆனந்தம் உடலில் பாயும் தானே வெளி சூழல் ஆனந்தமாக மாறிவிடும். மனதை இல்லாமல் செய்து ஆன்மாவையும் உடலையும் சேர்த்தால் பசி பிணி மூப்பு உறக்கம் மறைந்து சுத்த தேகம் உண்டாகும் அதன் பின் பிரணவ தேகம் மற்றும் ஞான தேகம் உண்டாகி மரணமிலா பெரு வாழ்வு அடைந்திடலாம்.

           ஆதலால் ஆசைகளை துறந்து சும்மா இருந்தால் சுகம் கிடைக்கும் .


 Dheena Dayaalan <uyir73@gmail.com>                                                  
 Date: Wednesday, June 25, 2014 

           

No comments:

Post a Comment