Thursday, September 18, 2025

அமுது பாறை ..

இன்று காலை Kaalachakram Narasimmaa Tan அண்ணா பல சமையல் அறை விஷயங்களை எழுதி வருகிறார் .. 

நான் ஸ்ரீரங்கத்தில் 1980 களில் - பழைய பெரிய வசதியான வீடுகளில் கண்ட விஷயம் - 

அமுது பாறை .. 
இதை படை கல் என்றும் அழைக்கிறார்கள் - சுட சுட அரிசியை வேக வைத்து - சாதமாக வடித்த பின்னர் - அதை இந்த கல்லில் பரப்பி - சூடு ஆற்றி - அது கட்டி ஆகாமல் உதிர்த்து விட்டு அதில் புளியோதரை சாற்றை ஊற்றி - கலப்பார்கள் .. 

நான் ஒரு வயதான கோவில் சமையல்காரரிடம் கேட்ட பொது - சாதத்தை - இப்படி சூடான ஆவியை நீக்கி - கட்டி இல்லாமல் - பாறையில் இட்டு - மிதமான சூட்டில்  பின்னரே சாப்பிட வேண்டும் - அதை போலவே எல்லா கோவில்களிலும் தெய்வ மூர்த்தங்கள் முன்பும் இப்படி துணியை விரித்து - அதில் உணவை பரப்பி படைப்பார்கள் என்று சொன்னார் .. 

இன்று இருக்கும் அவசர உலகில் குக்கர் விசில் போவதற்கு முன்பாக மூடியை திறக்க எத்தனிக்கு நிலை !!! - அந்த சமயல் காரர் சொன்ன விஷயம் - சாதத்தை மட்டும் சாப்பிடாமல் அதை வேகவைக்கும் ஆவியையும் சேர்த்து வயற்றின் உள்ளே அனுப்பினால் என்ன ஆகும் ?? 

கருங்களில் பெரிய நீர் தொட்டிகள் பல பாத்திரங்கள் இருந்தும் ஏன் உணவு சமைக்க கல்லு டேங்க் ??  - இந்த அமுது பாறைகள் இல்லாத கோவில்கள் தமிழகத்தில் இல்லை - இவைகளின் பயன்பாடுகள் பற்றிய அறிவு தற்சமயம் இல்லை !!! 

விஜயராகவன் கிருஷ்ணன்

Wednesday, September 17, 2025

அரகஜா எளிமையான முறையில் தயாரிக்க



அரகஜா எதற்கு பயன்படும்?




ஒரு குறிப்பிட்ட ஒரு மைய புள்ளியை மையமாக கொண்டு தான் எல்லா சக்திகளும் செயல்படுகிறது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனையோ அல்லது பொருட்களையோ உற்று பார்க்கும் போது அந்த மனிதனின் கண்ணிலிருந்து வெளிப்படும் காந்த சக்திகள் magnetic vibrations அந்த பொருளை தாக்கும். இதுவே கண்தீருஷ்டி என்று சொல்கிறோம்.

உதாரணமாக, ஒருவர் புது வீடு கட்டி வருவார் அவ்வழியே செல்லும் நல்லவர் கெட்டவர் என்று அந்த வீட்டை உற்று பார்த்து சென்று வருவார்கள் அவ்வாறு நல்ல எண்ணங்கள் கொண்டவர் பார்க்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் தீய எண்ணம் கொண்ட வயிதெறிச்சல் கொண்டவன் பார்க்கும் போது அவனின் கொருற எண்ணத்தின் அதிர்வுகள் vibrations அந்த வீட்டை தாக்கும் அல்லது அந்த வீட்டின் உரிமையாளர்களைமோ உடல் நல பாதிப்புகள் உருவாகும். இதுவும் ஒரு எண்ண சக்தியின் வெளிப்பாடே. இதற்காக அந்த காலத்தில் இந்த மாதிரி புது வீடு கட்டுபவர்கள் அந்த வீட்டின் மேல் ஒரு ஆள் உயர வைக்கோல் பொம்மை செய்து வைப்பார். அவ்வாறு அந்த புதியதாக வீட்டை பார்க்கும் போது வீட்டின் மேல் கண் பார்வை செல்லாது மாறாக புதியதாக அந்த வீட்டின் மேல் வைக்கபட்டுள் வித்தியாசமான பொம்மையை நோக்கி தான் செல்லும். அதோபோல் அந்த பொம்மையினை பார்பவர்களின் எண்ணம் அந்த பொம்மையை தீயசக்தி தாக்கும். பிறகு ஒருநாள் அந்த வீட்டின் புதுமனை புகுவிழாவின் முன் நாள் நள்ளிரவில் அந்த பொம்மையை எவரும் பார்க்காத வண்ணம் தீயிட்டு கொளுத்துவார்கள். அந்த தீய சக்திகள் தீயில் கருகும்.

அதேபோல் தான் கோவிலில் உற்சவம் போது சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்துவிட்டு இறுதியில் ஒரு சாமியின் முகத்தில் ஒரு சிறிய கருப்பு நிற பொட்டு கண்ணத்தில் வைப்பார்கள். இதுவும் சாமியின் அலங்காரத்தை கெடாமலும் சாமிக்கு கண்தீருஷ்டி ஏற்படாமல் இருக்கவும் இதை பயன்படுத்துவது மரபு.

இதே போல் திருமண அலங்காரம் போது மணமகன் மணமகள் கன்னத்தில் தீருஷ்டி பொட்டு வைப்பார்கள் இதுவும் ஒருவித தோஷம் குறைப்பே....

எந்தவொரு ஆலயத்தில் ஒரு சக்தி இருக்கும் அந்த இறை சக்தியை நாம் பெற, உள்வாங்க பெண்கள் கண் புருவத்தில் அல்லது ஆண்கள் சுழி மற்றும் நெற்றியில் அரகஜா வைத்து கொண்டு பிரார்த்தனை செய்தால் போதும் உங்கள் வேண்டுதால் விரைவாக நடக்கும். தினமும் நெற்றியில் வைத்து கொள்ளலாம் இதனால் எல்லாவிதமான நன்மைகள் வந்து சேரும்.

ஆகவே ஒருவரின் நல்வாழ்வு மேம்படவும் கண்தீருஷ்டி தோஷம் இல்லாமல் வாழ்வும். இறைவழிபாடுபோது இறை சக்தியை முழுவதும் பெற இந்த அரகஜா உதவும். அரகஜா பயன்படுத்தி பலனடைந்தவர்கள் ஏராளம். அரகஜா அனைவரும் வைப்பது என்பது புதிய முறை இல்லை. இது காலகாலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வரும் முறைதான். நாம்தான் அதை பயன்படுத்த வில்லை. இன்று முதல் தொடர்ந்து 27 நாட்கள் இந்த அரகஜா பயன்படுத்தி வாருங்கள் உங்களுக்கு உண்டாகும் சிறு பிரச்சினை கண்தீருஷ்டி, காரியதடை, வியாபாரம் சரிவு, திருமண தடை, திருமணம் தள்ளிப் போகுதல், அனைத்து கைகூடும்.
         ஆகவே அரகஜா என்பது அருமையான நல்ல பலன் தரும் பொருள். உங்கள் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் தேடி தூய அரகஜா வாங்கி பயன்படுத்துங்கள்.

(எளிமையான முறையில் தயாரிக்க வசம்பு, தர்ப்பை, வெட்டிவேர், பச்சை கற்பூரம், விரல் மஞ்சள், பூனுகு இவற்றை கொஞ்சமாக நெய் தடவி காமாட்சி விளக்கில் எரிந்து கலக்கினால் ரெடி. இது ஒருவகை. இன்னொரு வகை குப்பை மேனி, தொட்டாசுருங்கி போன்ற மூலிகைகளின் வேரை சாபநிவர்த்தி செய்து எடுத்து அதை எரிந்து செய்யும் முறை, இப்படி பல வகை உண்டு.

          - சித்தர்களின் குரல்.