இன்று காலை Kaalachakram Narasimmaa Tan அண்ணா பல சமையல் அறை விஷயங்களை எழுதி வருகிறார் ..
நான் ஸ்ரீரங்கத்தில் 1980 களில் - பழைய பெரிய வசதியான வீடுகளில் கண்ட விஷயம் -
அமுது பாறை ..
இதை படை கல் என்றும் அழைக்கிறார்கள் - சுட சுட அரிசியை வேக வைத்து - சாதமாக வடித்த பின்னர் - அதை இந்த கல்லில் பரப்பி - சூடு ஆற்றி - அது கட்டி ஆகாமல் உதிர்த்து விட்டு அதில் புளியோதரை சாற்றை ஊற்றி - கலப்பார்கள் ..
நான் ஒரு வயதான கோவில் சமையல்காரரிடம் கேட்ட பொது - சாதத்தை - இப்படி சூடான ஆவியை நீக்கி - கட்டி இல்லாமல் - பாறையில் இட்டு - மிதமான சூட்டில் பின்னரே சாப்பிட வேண்டும் - அதை போலவே எல்லா கோவில்களிலும் தெய்வ மூர்த்தங்கள் முன்பும் இப்படி துணியை விரித்து - அதில் உணவை பரப்பி படைப்பார்கள் என்று சொன்னார் ..
இன்று இருக்கும் அவசர உலகில் குக்கர் விசில் போவதற்கு முன்பாக மூடியை திறக்க எத்தனிக்கு நிலை !!! - அந்த சமயல் காரர் சொன்ன விஷயம் - சாதத்தை மட்டும் சாப்பிடாமல் அதை வேகவைக்கும் ஆவியையும் சேர்த்து வயற்றின் உள்ளே அனுப்பினால் என்ன ஆகும் ??
கருங்களில் பெரிய நீர் தொட்டிகள் பல பாத்திரங்கள் இருந்தும் ஏன் உணவு சமைக்க கல்லு டேங்க் ?? - இந்த அமுது பாறைகள் இல்லாத கோவில்கள் தமிழகத்தில் இல்லை - இவைகளின் பயன்பாடுகள் பற்றிய அறிவு தற்சமயம் இல்லை !!!
விஜயராகவன் கிருஷ்ணன்
No comments:
Post a Comment