This is one of tool to find HIM
Wednesday, November 30, 2016
Thursday, November 24, 2016
குலதெய்வத்தை கூப்பிடுவது எப்படி..?
குலதெய்வத்தை கூப்பிடுவது எப்படி..?
நம் குடும்பத்தை காப்பது நமது குலதெய்வத்தை விட வேறு ஒருவர் இல்லை. நாம் கூப்பிடும்போது ஓடிவருப்பவள் தான் நமது குலதெய்வம். குலதெய்வத்தை கொண்டாடுபவனுக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் என்பது முற்றிலும் உண்மை. குடும்பத்தில் காலா காலத்தில் திருமணம் நடைபெறுவதற்கும், திருமணம் முடித்தவர்களுக்கு சந்ததி தோன்றுவதற்கும், தொழில் வியாபார அபிவிருத்தி அடைவதற்கும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து நடத்தி தருபவர்
பொதுவாக ஐந்தாமிடத்தை வைத்து குலதெய்வத்தை குறிக்கலாம் என்றாலும், இது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. காரணம் ஒரு வீட்டில் இரண்டு மூன்று அண்ணன் தம்பிகள் இருக்குபோது ஒவ்வொருவருக்கும் ஐந்தாமிடம் வேறுபாடும் போது, அந்த வீட்டிற்குரிய குலதெய்வம் கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்படும்.
குடும்பத்தின் கோத்திரம் தெரிந்தால், கோத்திர பங்காளிகளிடம் சென்று அறிந்து கொள்ள முடியும். ஒரு சிலருக்கு கோத்திரம் ஒன்றாக இருந்தாலும் சூத்திரங்கள் மாறுபடும். அப்பொழுதும் சில குழப்பங்கள் தோன்றும்.
ஐந்தாமிடம் பெண் ராசியாக இருப்பின் அம்மன், அம்பாள் போன்றவர்கள் என்பதும், ஆண் ராசியாக இருப்பின் அய்யனார், கருப்பன், என்பதுமாக பார்கின்றனர். ஒரு சிலர் ராசியின் அதிதேவதை கொண்டு குலதெய்வத்தை குத்துமதிப்பாக கூறுவார்கள்.
ஒவ்வொரு குடும்பத்தில் தந்தை தாத்தா குலதெய்வத்தை சென்று வணங்கும்போது அடுத்து வரும் பிள்ளைகளும் தொடர்வார்கள். இவர்களின் தொடர்ச்சி எப்பொழுது விடுபடுகிறது என்றால், அந்த குடும்பத்தில் தாத்தா மற்றும் அவருக்கு முந்தைய தலைமுறையில் சில பெரும்பாவங்களை செய்யும்போது பிறக்கும் பேர குழந்தைகளுக்கு ஐந்தாமிடம் பாவகிரகங்களின் ஆதிக்கத்தில் வந்துவிடுகிறது. இதனால் குலதெய்வ வழிபாடு நின்றுவிடுகிறது. இதற்கு தான் குலதெய்வ சாபம் என்கின்றனர்.
ஒரு சிலருக்கு ஜாதகமே இல்லாமல் போகக்கூடிய நிலை இருக்குபோது, இந்த ஐந்தாமிடத்தை பற்றி கூட தெரிந்து கொள்ள இயலாமல் போகிறது.
ஆக, இந்த ஐந்தாமிடத்தை வைத்தோ, ஒன்பதாமிடத்தை வைத்தோ மிக சரியாக கணிக்க இயலாது. இதற்கும் மேலாக இறைவனின் அருள் இருந்தால் தான் குலதெய்வமே கூட கண் முன் தோன்றும். இது சில நேரங்களில் பிரசன்னத்தின் மூலமாக அறியலாம்.
சில குடும்பங்களில் பூவாடைகாரி என்று புடவையை மடித்து வைத்து வணங்கிவருவார்கள். அதாவது, பூவும் பொட்டுவுடன் ஒரு கட்டுகழுத்தி என்கின்ற சுமங்கலி பெண் இறந்து விட்டு இருக்கும்போது, அந்த பெண்மணி நம் குடும்பத்தை காப்பாள் என்ற ஐதீகம்.
சில நேரங்களில் அசரீர் மூலமாக அறியலாம்.கோத்திரம் அறிந்து, அந்தந்த கோத்திர ரிஷிகளின் நட்சத்ர, கோவில் அல்லது தெரிந்த சமாதிகளுக்கு சென்று வழிபடலாம்.
அடுத்து,
ஒரு சிறிய வழி ஓன்று உள்ளது, நாம் இருக்கும் இடத்தின் எல்லை தெய்வத்தை வணங்கி, குலதெய்வத்தை காட்டும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். அதற்காக சிறு காணிக்கைகளை வீட்டில் போட்டு கொண்டு வரவேண்டும். இந்த வேண்டுதல் ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் உங்கள் குலத்தில் உங்கள் உறவினர்களாக உள்ள ஒருவர் மூலம் நிச்சயம் உங்கள் குலதெய்வம் தெரியவரும்.
அடுத்து
மாதா, பிதா, குரு தெய்வம் என்பதை அனைவரும் அறிவர், எனவே குலதெய்வம் தெரியாதவர்கள் தாய்தந்தையரை வணங்கினாலே போதும். இல்லை உங்களது அஞ்ஞானத்தை யார் போக்கினாரோ அவரையே நீங்கள் குருவாக நினைத்து வந்தாலே போதும்.
அடுத்து
பிரசன்னத்தின் மூலம் அன்றைய பிரசன்ன கட்டத்தில் உதயத்தையும், உதயத்தில் நின்றவரையும் வைத்து அறியமுடியும்.
அடுத்து
உங்களுக்கு குழப்பம் வருவதாக உணர்ந்தால், கவலையே படவேண்டாம், நமது இந்து மதம் ஆறு மதங்களை கொண்டது என்றாலும், இவை ஆறும் சேர்ந்து இரண்டு பெரிய பிரிவுகளாக சைவம், வைஷ்ணவம் என்று உள்ளது. எனவே உங்கள் மரபு சைவ மரபாக இருப்பின் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு (அல்லது சிதம்பரம்) சென்றோ, வைஷ்ணவமாக இருப்பின் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு (அல்லது திருப்பதி) சென்றோ தொடர்ந்து வழிபட்டு வந்தால் குலதெய்வம் ஒரு நாள் உங்கள் முன் வந்து நிற்கும்.
(என்ன இவர் ஜோதிட ரீதியாக கூறி முடிக்காமல், ஆன்மீகத்தில் முடித்துவிட்டாரே என்று தாங்கள் நினைக்க தோன்றும். ஜோதிட ரீதியாக எந்த மார்க்கமாக குலதெய்வத்தை குறிப்பிட்டு கூறினாலும், சில வருடங்களுக்கு பிறகு, அதில் மனதிற்குள் சந்தேகம் ஏற்படுவதையும், சில நாட்கள் கழித்து அதையும் தொடராமல் விட்டுவிடுவதும் அனுபவத்தில் காண்கிறேன்..
other link :
Kuladeivam குலதெய்வம் : https://sadhanandaswamigal.blogspot.com/2012/12/kuladeivam.html
குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
குலதெய்வம் எதுன்னே தெரியாதா ?
குலதெய்வமும் # தேவதையும்
Monday, November 21, 2016
Thursday, November 10, 2016
சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிப்பது
சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிப்பது குறித்து தான். நான் இது தொடர்பாக எழுதும் ஒரே பதிவு. இறுதியான முடிவை ஐயப்பனே எடுப்பார் என்பதால் அமையாகவே இருந்தேன். நண்பர்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பதிவு.
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்
ரொம்பவும் டெக்னிக்கலாகவும், சாஸ்த்ர ரீதியாகவும், லௌகீக ரீதியாகவும் இதில் உள்ள விஷ்யங்களை பலரும் கூறி விட்டார்கள். நான் என் மனதுக்கு பட்ட சில விஷயங்களை பட்டியல் இடுகிறேன்.
ஏற்கனவே ஒரு நூலில் ஐயப்பன் குறித்த கேள்வி பதிலுக்கு இது குறித்து விளக்கம் அளித்துள்ளேன். எனினும் இன்னும் சற்று விரிவாகக் காண்போம்.
1. சபரிமலைக்கு பெண்கள் எல்லோரும் செல்லலாம் என்று தீர்ப்பு ஏதும் இன்னும் வரவில்லை. பலரும் கேரள அரசு ஆணை பிறப்பித்து விட்டதாகவும், தீர்ப்பு வந்து விட்டதாகவும் கருதி பல பதிவுகளை இடுகிறார்கள். இது சரியல்ல !
கேரள அரசு மாறி இருப்பதால் அவர்கள் நிலைப்பாடும் மாறி இருக்கிறது. இதற்கு முந்தைய அரசு - ஆலயத்தில் ஆசார நியமங்களில் தலையிடுவது சரியாகாது என்ற நிலைப்பாட்டில் இருந்தது, இப்போது கடவுள் நம்பிக்கையற்ற அரசு வந்திருப்பதால் பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிப்பதில் எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று கோர்ட்டில் சொல்லி இருக்கிறது. அவ்வளவு தான்.
அடுத்த விசாரணை 2017 பிப்ரவரி க்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இறுதித் தீர்ப்பு வருவதற்கு ஒரு மாமாங்கம் கூட ஆகலாம்.
2. சபரிமலையில் பெண்களே அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் சரியல்ல. 10 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளும் 50 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்களும் அனுமதிக்கப்படவே செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தடையும் இல்லை.
3. ஐயப்பன் ப்ரம்மசர்யத்தில் இருப்பதால் பெண்களைக் காணமாட்டார் - என்பது சரியான வாதம் அல்ல !
ஐயப்பன் யாரையுமே தன்னை தரிசிக்கத்தடை விதிக்கவில்லை. நம் அனைவரையும் படைத்தது அவனே. ஐயப்பனுக்கு ஜீவன்களிடம் எந்த விதமான பாகுபாடும் கிடையாது. ஆனால் சபரிமலைக்கு வர சில நியமங்கள் உண்டு.
இதில் முக்கியமான விஷயம் - சபரிமலை யாத்திரையின் அடிப்படை 41 நாட்கள் விரதம். அதுவும் பண்டைய காலத்தில் 56-60 நாட்கள் விரதம் நிச்சயம் இருப்பார்கள்.
பெண்களால் குறிப்பிட்ட வயது அடையும் வரை இந்த விரதத்தை முறையாக கடைப்பிடிப்பது என்பது ப்ராக்டிகலாக இயலாத காரியம்.
மேலும் நமது சாஸ்திரங்கள் நமக்காக நிறைய காருண்யங்களை வகுத்திருக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு; அவர்களின் நன்மைக்காகவும் பாதுகாப்புக்காகவும் நமது வேதங்களில் உள்ள தர்மசாஸ்திரங்கள் பெண்களுக்கென்று சிறப்பான இடத்தை அளித்திருக்கின்றன. தற்கால நவீன சிந்தனையாளர்களுக்கு இது புரியாது.
இன்றைய நவீன காலத்தில் நமது சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ள காருண்யங்களை நாம் சரிவர புரிந்து கொள்ளாமல் அவற்றை விட்டு விலகிவிட்டோம். நமது சாஸ்திரங்களின்படி ஆணைவிட பெண் எந்தவிதத்திலும் குறைந்தவளில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே. ஆண் தனது குருவிற்கு சேவை செய்கிறான். பெண் தனது கணவனுக்கு பணிவிடை செய்கிறாள். ஆண்களும், பெண்களுக்கு சில பணிவிடைகளை செய்தாக வேண்டும். நமது வேதங்களின்படி ஆண் எந்த விதத்திலும் பெண்ணைவிட உயர்ந்தவன் இல்லை. ஆண் தனது கடமைகளை வேறுவிதமாக செய்கிறான். அவ்வளவுதான்.
பெண்களுக்கு வீட்டு கடமைகள் அதிகமாக இருப்பதால் அவர்களால் யாத்திரைக்கான விரத நடைமுறைகளை கடைபிடிப்பது மேலும் சுமையாக இருக்கும். ஆண்கள் செய்யும் நல்ல கர்மங்களின் பலன்களில் 50% பெண்களைச் சேரும். மாறாக ஆண்கள் செய்யும் தீயகாரியங்களால் விளையும் பாபங்கள் அனைத்தும் ஆண்களை மட்டுமே சேரும்.
இதற்கு நேர்மாறாக பெண்கள் செய்யும் நல்ல கர்மங்களின் பலன்கள் அனைத்தும் பெண்களுக்கு மட்டுமே சேரும். அவர்கள் செய்யும் தீயகாரியங்களால் விளையும் பாபங்களில் 50% ஆண்களுக்கும் சேரும். என்ன வினோதம்!
விரத காலத்தின் போது நம்மில் பலர் நமது தாயாரையும், சகோதரிகளையும், மனைவியையும் எந்த அளவிற்கு சிரமத்துக்கு உள்ளாக்குகிறோம்? நாம் மலைக்கு மாலை போட்டுக் கொண்டால் அவர்களும் மாலை போடாமலே விரத முறைகளை அனுஷ்டிக்கிறார்கள்.
விரத காலத்தின் போது நம்மில் பலர் நமது தாயாரையும், சகோதரிகளையும், மனைவியையும் எந்த அளவிற்கு சிரமத்துக்கு உள்ளாக்குகிறோம்? நாம் மலைக்கு மாலை போட்டுக் கொண்டால் அவர்களும் மாலை போடாமலே விரத முறைகளை அனுஷ்டிக்கிறார்கள்.
அதனால் நாம் சிரமப்பட்டு யாத்திரை சென்று பெறும் புண்ணியத்தில் 50% வீட்டில் இருந்து நமக்கு சேவை செய்வதன் மூலம் பெண்கள் அடைகின்றனர். ஆக மொத்தத்தில், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான ஐயனை பொறுத்தவரை அவனை தரிசிக்க பெண்கள் வரத்தடையில்லை. மாறாக அவர்கள் சிரமப்பட்டு வரவேண்டிய அவசியமேயில்லை என்பதுதான் உண்மை.
Should Not Come-க்கும் Need Not Come-க்கும் உள்ள மாறுபாட்டை புரிந்து கொள்வோம்.
4. மேலே உள்ள விதிமுறையைப் படித்தவுடன் எழும் கேள்வி - அப்படியானால் இப்போது செல்லும் ஆண்கள் எல்லோரும் 41 நாள் விரதம் இருந்துதான் செல்கிறார்களா? என்பது.
பண்டைய காலத்தில் விரதம் இல்லாமல் சபரிமலையை நினைக்கக் கூட மாட்டார்கள். ஸபரிமலையில் தீ விபத்து உண்டான போது உதவிக்கு சென்ற மக்களும் போலீசாரும் - நாம் விரதம் இல்லாமல் இருக்கிறோமே? சபரிமலையை ஏறினால் நமக்கும் ஏதும் தீமை வந்து விடுமோ என்று பயந்து தயங்கி - மலை ஏறாமல் நின்றதைக் கண்டதாக என்னுடைய தாத்தா (குருஸ்வாமி கல்பாத்தி ஸ்ரீநிவாஸ ஐயர்) கூறி இருக்கிறார்.
முற்காலத்தில் இருந்த கடுமையான நியமங்கள் இப்போது யாரும் கடைபிடிப்பது இல்லை. ஐயப்பன் என்றால் ஒரு பயம்-பக்தி இருந்தது. இபோது பக்தி மட்டும் தான் இருக்கிறது. சிலரிடம் பயம் குறைந்த மாதிரி தெரிகிறது. முறையாக விரதம் அனுஷ்டித்த பின்னரே பெருவழிப்பயணமும், பதினெட்டாம்படியில் ஏறவும் செய்தார்கள். இப்போது ஆயிரம் காரணம் சொல்லி விரதம் இருக்க முடியாத நிலையை நியாயப்படுத்துகிறார்கள். இந்த விஷயம் சரியானாலே எல்லாம் சரியாகி விடும். நாம் நம் விரதத்தை ஒழுங்காக இருப்போம் - மற்றதை ஐயப்பனிடம் விட்டு விடுவோம்.
5. எல்லாவற்றுக்கும் மேலாக சபரிமலையில் ஓர் இலை அசைய வேண்டுமானாலும் கூட அது ஐயப்பனின் அனுமதி இன்றி நடக்காது. பலரது வாழ்விலும் ஐயப்பன் நிகழ்த்திக் காட்டி உணர்த்திய சத்தியம் இது ! எனவே நமது சுப்ரீம் கோர்ட் - அந்த் ஐயப்பன் தான். அவன் என்ன முடிவு செய்கிறானோ அதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அவன் பேசும் தெய்வம் ! நிச்சயம் அவனே இதற்கு ஒரு முடிவு கொடுப்பான்.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா !
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்
Friday, November 4, 2016
Thus Spake Dhanvantri @ Maruderi
Thank : https://18siddhar.blogspot.com/2016/11/thus-spake-dhanvantri-maruderi.html
உயர்ந்ததோர் பெருவழியே சோதி தன்னை
உணர்வுக்கு அப்பாலே நின்று காக்கும்
ஆதியாம் பரம்பொருளின் பதத்தை போற்றி
அறிவிக்க அவுடதத்தின் நிலைகள் தன்னை
The highly regarded LIGHT of the Vast-Path
That Guards us and is beyond Senses
To the Feet of Supreme Originator I salute
and express the greater states of medicine
மேலான மானுடங்கள் துதித்து இன்று
மருந்தின் வகை யாகமதை அருளிச்செய்ய
செய்யவே எத்தனித்து பிருகு தானும்
சென்மங்கள் பலதுதனில் இருந்த கர்மம்
Adored by Noble human-beings (@ Maruderi) today
To do Yagna of Medicinal Herbs and get blessed
Thus endeavored the Guru- Bhrigu
On karma that was accumulated by many births
கர்மத்தை கொண்டுமே வாழும் மாந்தர்
கலக்கங்கள் தீர்க்கவே புவனம் தன்னில்
சோதியில் எழுந்தருள அழைத்து நின்றார்
சுத்தமுள்ள வைராக்கியம் கொண்ட மகான்
With the Karmas the Human race continues to lives
To eliminate the confusion in this Land
He Invited me to join the Light (Agandam @ Maruderi) and bless
He A Guru of Extremely-Pure-Will-Power (Vairaagya)
மகானாய் ரிஷிவர்கமாய் ஈசனுக்கு அம்சமாய்
மகத்துவங்கள் கொண்ட எமது மாலவரின்
பிறவியதிலும் பற்ப்பல வடிவம்கண்ட ரிஷிதான்
பிருகு மாற்றமில்லா கணிதத்தில் உயர்ந்தவன் தான்
பிருகு மாற்றமில்லா கணிதத்தில் உயர்ந்தவன் தான்
As Mahaan (Noble Soul), As Rishi (Meditating Lineage) and As Eshwar's Amsa (Lord Shiva's Amsa)
As my Lord Malan's Maha-ttuvams
In his (Malan's) Births as Rishi who also took multiple Forms
is The Bhrigu an unflinching expert of Mathematics
தானென்ற நிலை கொண்ட மாந்தர்களை
தர்கித்து சோதிக்கும் குணம்தான் உண்டு
உண்டு அவர்களை சோதித்து உண்மையை
உணர்த்தவல்ல குரு தான் அப்பா
உணர்த்தவல்ல குரு தான் அப்பா
On Human-beings who are self-centered
Has a Nature to debate and Test them
Yes after testing, makes them realize truth
Such is the class of Bhrigu, my Son
இப்புவனமதில் மண்டி கிடக்கும் மாய
தன்னை உணர்த்தி உத்தம நெறி தன்னை
அறிவிக்க மீண்டுமே அவதாரமாக சோதியில்
எழுந்த அருள சித்தம் கொண்டார்
தன்னை உணர்த்தி உத்தம நெறி தன்னை
அறிவிக்க மீண்டுமே அவதாரமாக சோதியில்
எழுந்த அருள சித்தம் கொண்டார்
In the world that is infested with Maya (Not relevant to Truth)
To reveal and spread the best principles
and Pronounce, Has wished to take the Avatar of Jyothi (Again)
Thus he decided to raise and Bless
கொண்டவிதம் பல எல்லை இருந்திட்டாலும்
குறித்திட்ட சட்டத்திட்டம் அகோரன் தன்னை'
தன்னையுமே மருத்துவத்தின் தாயும் தந்தை
குணமான தன் எல்லைகொண்டு இயங்க
As he decides though there were many of his places
The Principled, Lawful, Decisive and planned AGHORA (Bhrigu)
As Medicine's father and mother (Per song suits both: Dhanvantri and Bhrigu:)
Decided to take a space for him to operate as he wants
இயங்கவே இத்தலத்தை தேர்ந்து எடுத்து
இயல்கின்ற பூசை தனை வகைப்படுத்தி
வகைப்படுத்தி லோகமெல்லாம் அறியவேண்டி
வாக்குதனை அருளிசெய்தார் மகிழ்வே கொண்டோம்
To operate he chose this place of Maruderi
and categorized Puja principles that are Possible
Grouped thema and announced to the world
On hearing his blessed verses I was happy
கொண்டதொரு கதிர்நீச்ச திங்கள் தன்னில்
குறைவரவே புனர்பூசமதில் உபய ராசிதன்னில்
தன்னிலே எழுந்தருளி கடத்தில் அக்னியில்
பூரணமாய் ஈந்ததையே ஏற்று கொண்டோம்
In the month of Aippasi (Tamil Month)
on the star of Punarpoosam in Ubaya Rasi
to raise and bless from Agni (in Yagna)
Accepted everything that was given in Totality
கொண்டவிதம் மாந்தர்களின் சிரமம் தன்னை
குறிப்பான மழலையர்கள் பிணிகள் போக்க
போக்கவே வருந்தியே இட்ட பொருளால்
பிரம்மை யென்னும் மயக்கத்தை அறுக்கவல்ல
Thus accepted the problem of people
especially to cure illness of Children
with worried-mind goods dropped in Yagna
can cure the acute state of mind
வல்லதொரு ஆசிகளை இன்று நாங்கள்
வகுத்து ஈந்தோம் மழலைகளுக்காய் குற்றம்போக்கி
மழலையென்று குறிப்பது யாதென்றால்
மானுடத்தின் அறியாமையில் வீழ்ந்துகிடக்கும் யாவருமே மழலையப்பா
We gave firm blessing's today
categorically for children to attain cure
what I mean by Children here is
all those who are subject to ignorance
பூரணமாய் இன்றுமே நிறைந்த சித்தம்
புளகாங்கிதம் கொண்டோமே அறியக்கண்டாய்
கண்டதொரு சீந்தில் என்னும் மருந்துதன்னை
காலத்தில் வகைமறந்து நின்றார் கண்டோம்
with completeness today there was fullness of sitham
took a higher state and you have seen that
Thus the medicine Seenthil (Amritavalli)
has been forgotten and I know that
கண்டதொரு சாகாத மூலி அப்பா
காலம் நிலை கடுமையதை கடந்து வளரும்
ஆயிரம் பிணிபோக்கும் சீந்தில் யப்பா
அதற்குரிய மகத்துவத்தை அறிய சொன்னால்
Known/Understood immortal herb my son
That stands beyond time, toughness and exists
Cures a thousand diseases Oh Son (Seenthil/AmruthValli/ Guduchi)
To say its medicinal properties and know
சொன்னவிதம் பெண்நோயும் நரம்புநோயும்
பூரணமாய் கொள்வதற்கு இதுவே சித்தம்
சித்தப்படி இன்றுமே வாகட தலைவனாக
செப்புகின்றோம் உங்களுக்கு ஆசி தன்னை
As said for diseases in nervous system
to consume it for full cure is the intention
Thus today as the head of Medicines
I express by blessing to you all as
ஆசி தன்னை கம்பீர வாக்குதன்னில் அறிவிக்க
ஆத்மம் அது உணர வேண்டி
வேண்டியே செங்கோல் ஏந்திநின்ற அய்யன் என்று
அம்ரித கலசம் கொண்டுமே ஆட்சிசெய்ய
Is my blessing and I announce in Bold Verses
To understand and realize the Athman
Called as the sire who hold's the King's staff and
Rules using the Amritha Kalasa
செய்யவே இன்று ஒரு வாக்குச்சொல்ல
சித்தநிலைதனிலே அமிர்தம்யெல்லாம் சீவனுக்குள் இருக்குதப்பா
கலந்திருக்கு கர்மமும்தர்மமும் ஒன்றாய் நின்றால்
கருத்தறிய முடியுமோ மானுடங்களே
கலந்திருக்கு கர்மமும்தர்மமும் ஒன்றாய் நின்றால்
கருத்தறிய முடியுமோ மானுடங்களே
Let me tell the Verse of the day
In Siddha-state Amrit is inside the Jeeva
united as Karma&Dharma ; If united together -
-Can that Crux be understood by humans.?
உத்தமாய் இருநிலைக்கும் ஒன்றாய் நின்று
ஆக்கினையால் ஆட்கொண்ட விதத்தில் தானே
தான் இதுகால் மானுடங்கள் தடுமாற்றத்தில்
தன் குறையை பிறரிடத்தில் கேட்டுநின்றார்
With greatness both states come together
due to sensual pleasure affecting the Aagnya
due to sensual pleasure affecting the Aagnya
These days Humans are disoriented
For their own issues seek&wait for solutions from outsiders
தனுக்குரிய உணவையும் ஆற்றல்களையும் பிறர்க்கீந்து கையேந்தி நின்றார்
சுயமாக வாழ்வதற்கு அனுப்பிவைத்தோம் சுத்தமத்தில் மாயைவிழுந்து
தன்பொருட்கள் யாவையுமே இழந்து நின்று
தன்பொருட்கள் யாவையுமே இழந்து நின்று
தயைவேண்டி இது காலம் வரத்தை வேண்டிநின்றீர்
After giving/wasting away the food and their energy they are asking for Help like Alms
We sent you to be INDEPENDENT: But in Pureness fell MAYA
Due to which all the things possessed (in self) were Lost
Expecting Sympathy NOW you are asking for boons/cures :)
உத்தமமாய் ஞானபூமி சித்தர்கள் வாழந்ததொரு திராவிடதேசமதில்
அகத்தியனும் இன்னும்பல சித்தர்கள் தானும்
அணிவகுத்து ஆசிரமம் தானமைத்து உத்தமமருந்து விதிகளை
உயர் வாக்குகளை மறையாமல் ஈந்தார் அப்பா
In the Philosophical Land of Siddhars who dwelled in South (Dravida Desa)
Were Sage Agasthya and other Great Siddhas
Who created Multiple Ashrams and Formulated Rules of Higher Medicines
Gave directions and details without hiding them, my SON
அவ்விதமே புள்ளிருக்கு வேலூர் தலத்தில்
அழகுபடயாம் அமர்ந்து முருகனின் ஆற்றலை வேண்டி
நறுந்தமிழில் நாமகிழுந்து நின்றோம்
அழகுபடயாம் அமர்ந்து முருகனின் ஆற்றலை வேண்டி
நறுந்தமிழில் நாமகிழுந்து நின்றோம்
நல்லபல ஆகுதிகள்பெற்று நிலைத்திருந்தோம் அப்பா
In that Manner in Pullirukku Velur ( Vaitheeswaran)
with beauty I sat in need of Muruga's energy
and with happiness hearing the sweet Tamil Verses
Received great Agudhi and stood there Always
இக்காலமதில் மாந்தர்கள் துன்பம் போக்க
இன்றும் அத்தலத்தில் சூட்சமாகநின்று அருளாசி ஈந்திருக்கோம்
அதற்குரிய நிலையொப்ப இத்தலத்தில் அணிவகுத்து என்றுமே நிரந்தரமாய் பிருகுமுனி நாளதிலும் நல்லதொரு
ஆசிஈய மருந்திற்கு ஆற்றலை ஈந்து நிற்போம்
ஆசிஈய மருந்திற்கு ஆற்றலை ஈந்து நிற்போம்
This Period for human's to eliminate their Worries
Even today (Vaitheeswaran)) in hidden form are my blessings
Equivalent to that @Maruderi we will assemble always including Bhrigu's day (Rohini Star)
Will bless and Energize the Medicines going forward
நின்றதொரு பல எல்லை மாந்தர்கள்
நிச்சயித்து இத்தலத்தில் எம்மை வேண்டி
வேண்டியே நீரெடுத்து அருந்தி சென்றாலும்
வினைகள் விக்கினங்கள் தீரவல்லது என்று ஆசியீந்தோம்
Stood here are people from different places (District, States and Country)
in the designated place venerating me
by revering and taking water or consuming
can cure from diseases and suffering is my blessings
பூரணமாய் மந்திரத்திற்கு பலனும் இல்லை
புரிந்துயுணர்ந்து யிடும் ஓர்பொருளுக்கு வலிமையுண்டு
இத்தருணம் மலடு குற்றங்கள் கொண்ட மாந்தர்கள் பல வந்திருக்க
காலத்தில் சந்தான குறை போக்கும் பஞ்சம ஸ்தான குறைப்போக்கும்
Fullness is obtained not just by Mantra
To understand, realized and then drop the items in Yagna has more Power
This point as I see many people with infertility have reached this place
For progeny and removal of issues with 5th house blessed are all
புத்தி புண்ணிய பூர்வபுண்ணிய குறைகள் நீங்க இத்தலத்தில் ஆசி ஈந்த விதம் யாதொரு பிணி குறைகள் அகல
பூரண பூரணமாய் என் அவதாரமான விஷ்ணுவையும் திருமகளையும் வேண்டி நல்ல பல ஆசிகளை ஈந்தோம்.
பூரண பூரணமாய் என் அவதாரமான விஷ்ணுவையும் திருமகளையும் வேண்டி நல்ல பல ஆசிகளை ஈந்தோம்.
நவின்றது சித்தன் சித்தர்களுடைய அருளால் வேண்டுதலால் சந்தியா காலமதில் உரைக்கும் வாக்கை கூர்ந்து கவனித்து கூர்ந்து கவனித்து கூர்ந்து கவனித்து
குறை பல போக்கி வாழ்வீர் ஆசி பல முற்றே
குறை பல போக்கி வாழ்வீர் ஆசி பல முற்றே
Intelligence issues, Previous Karma issues to be removed in this place, blessings in this place to cure all types of illness and diseases
By Complete Completeness avatar of Vishnu and Thirumagal in my mind all blessing was given to people here
Thus says the SIDDHAN, by the Grace of Siddhas in this evening... what I have said FOCUS my VERSES, FOCUS my VERSES, FOCUS my VERSES
to remove many obstacles and live properly..so are my blessings and thus I end...
ஸ்ரீபிருகு அருள் நிலையம் -மருதேரி