அனைவருக்கும் எந்த வழிபாடு முதன்மையானது?
ஜோதிட ரத்னா வித்யாதரன்: பொதுவாக இறைவழிபாடு நல்லது. முதன்மை வழிபாடு குலதெய்வம். தினசரி நினைத்துக் கொள்வது என்பது நல்லது. ஏனென்றால் பலருக்கும் குல தெய்வம் காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடங்களில்தான் இருக்கிறது. அதனால் எப்போதும் சென்றுவர முடியாது. ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்குச் சென்று வருவது நல்லது.
இதுதவிர, தசா புத்திகளை அடிப்படையாக வைத்து இந்த திசையில் இந்த தெய்வங்களை வழிபட்டால் நல்லது என்று சொல்கிறோம். உதாரணத்திற்கு, செவ்வாய் திசை, குரு திசை நடக்கும் போது முருகரை விடாமல் வழிபடுங்கள். கந்த சஷ்டி கவசத்தைப் படியுங்கள் என்று சொல்கிறோம். இதில் முதன்மை வழிபாடாக மூலவர், முதல்வர் விநாயகருக்கு கொடுப்போம்.
இஷ்ட தெய்வம், குல தெய்வம், தசா புத்தி தெய்வம் என்று பல தெய்ங்கள் உண்டு. சிலரிடம், நீங்கள் சிவ வழிபாடுதான் செய்ய வேண்டும் என்று சொல்வோம். அதற்கு அவர்கள், நீங்க என்னதால் சொன்னாலும் திருப்பதிக்கு போகாமல் இருக்க முடியாது. மாதத்திற்கு ஒரு முறையாவது திருப்பதிக்கு போய் வருவேன் என்று சொல்வார்கள். ஆகையால், இஷ்ட தெய்வம் என்று ஒன்று வருகிறது. அவர்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்துக் கொள்ளலாம். ஏனென்றால், சிலருக்கு அவர்களுக்கு பிடித்த இடங்களுக்குச் சென்றால் திருப்தி உண்டாகும். இதுபோல அவர்களையும் மீறி ஒரு சக்தி அவர்களுக்கு நிம்மதியைத் தருவதாக உணர்வார்கள். அதன்படி வணங்கிக் கொள்ள வேண்டியதுதான்.......
எங்களுடைய குலதெய்வம் பச்சைஅம்மா - Near Perampakkam
குலத்தைக் காப்பதால் தான் குலக் கடவுள் . மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்புப்பெயர் குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. ‘குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடையவேண்டும், பின்னோர் செழிக்க வேண்டும்’ என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். பல பிரச்சினைகளில் சிக்கி உழல்பவர்கள், பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்.
குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது. அய்யனார், சுடலை மாடன் என்று பல (கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர். (உதாரணமாக ஊரைக் காக்க கள்ளர் அல்லது எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்கள்) பெரும்பாலான குல தெய்வங்களுக்கு பின் இம்மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும்.
குலதெய்வ வழிபாடு;
----------------------------
நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும்,ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும்.இவர்களுக்கு காவல் தெய்வம்,குல தெய்வம் வழிபாடு இருக்கும்.பிறக்கும் குழந்தைகளுக்கு,முதல் முடி குல தெய்வம் கோயிலில் சென்று மொட்டை போடுவார்கள்.சில்ர் காது குத்துவார்கள்.
குலதெய்வம் வழிபாடு இந்து சமயத்தினருக்கும் முக்கியமான ஒன்றாகும்.அடிப்படையில் நம்முடைய இந்து மதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது.குல தெய்வ வழிபாடு மனிதனின் லௌதீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது.அப்படியானால் குலதெய்வமும்,இறைநிலையும் வேறுவேறா?அப்படி கிடையாது,அதாவது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணரே இதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.
உலகத்தில் இன்பத்தையும்,பற்றையும் ஒதுக்கிவிட்டு வாழ்வதற்கு எல்லொராலும் முடியாது,லௌதீக வாழ்வு வாழ்வபவர்களுக்கும் தான் இறைதூதர்களையும்,தேவதைகளயும் இறைவன் படைத்திருக்கிறார்.அவர்களே குலதெய்வங்கள் ஆவார்கள்.
குல தெய்வத்தை கும்பிடும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள்,முழுவதும் பங்காளி ஆவார்கள்.இவர்கள் அண்ணன்,தம்பி உறவு முறையாக கருதுபவர்கள்.இவர்களுக்குள் பெண் கொடுக்கவோ,எடுக்கவோ மாட்டார்கள்.
மேலும் நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும்,முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும்.எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும்.மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும்,சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.
பெருகிவரும் குலதெய்வ வழிபாடு
by ஜெகதீஸ்வரன்
இந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பியிருக்கின்றார்கள். சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விஷ்னுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு மக்களிடையே பெருகி வருகிறது.
நம் முன்னோர்கள் –
குலதெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்றுவிக்கப்பட்டதோ, ஆகாசத்திலிருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருப்பதாக அறிந்து வியந்து போகிறேன்.
மதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னிபினைந்த வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும்.
அழிவு –
தெய்வங்களை அரசியலாக்கிய காலகட்டத்தில், திடீரென வெளிபட்ட பார்பாணிய எதிர்ப்பினால் அதிகம் பாதிக்கப்பட்டது குலதெய்வங்கள் தான். பல சிறு தெய்வங்களின் வரலாற்று உண்மைகள் தெரியாமல் போய்விட்டன. அவற்றின் முக்கியத்துவத்தினை உணராமல் பல கோயில்கள் பராமரிக்கப்படாமலும், அழிந்தும் விட்டன.
குலதெய்வம், மதுரைவீரன் என வரலாற்றை சொல்லி வந்த திரைப்படத்துறை கூட பின்நாளில் மாற்றம் கண்டுவிட்டது. விருமாண்டி என்ற தெய்வத்தின் பெயரை வைத்து எடுக்கப்பட்ட படத்தில்கூட அதன் வரலாற்றை சொல்லாமல் விட்டுவிட்டார் கமல். சர்ச்சைக்கு உள்ளான அந்த படத்தின் ஒரு வில்லு பாட்டில் விருமாண்டி வரலாற்றை அறிந்தேன். அந்தப் பாடல் படத்தில் இடம் பெறாமலே போய்விட்டது.
இப்படி எல்லா தரப்பும் செய்த சதியால், சில தமிழர்களுக்கு குலதெய்வ பெயரைத் தவிர மற்ற எந்த செய்தியும் தெரியவில்லை. அதிலும் சிலருக்கு தெய்வங்களின் பெயர்களும் கூட தெரிவதில்லை. இது மிகவும் வேதனையான செய்தி. நம் முன்னோர்களின் வரலாறுகளை நாம் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.
மாசி பெரியண்ண சாமி பற்றி படிக்க -
கொல்லிமலை மகிமைகள்
பெரியசாமி கதை கோயில் படங்களுடன்
மாசி பெரியண்ண சாமி் (விக்கிசோர்சில்)
(நன்றி – நண்பர் ஞானப்பித்தன் (எ) வெற்றிக்கதிரவன் அவர்கள் லிங்க் பற்றி ஞாபகம் செய்தமைக்காக)
மறந்துவிட்ட மீடியாக்கள் –
மகாபாரதத்தையும், ராமயணத்தையும் மட்டும் மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் ஒளிபரப்பு செய்யும் மீடியாக்கள் சிறுதெய்வங்களின் வரலாற்றையும் பதிவு செய்து ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். சிறுதெய்வங்களின் கதைகளில் தியாகம், வீரம், அன்பு, அறிவு என பல விதமான சுவைகள் இருக்கின்றன. என்னுடைய குல தெய்வத்தின் வரலாற்றை எப்படியோ அறிந்துகொண்டேன். ஆனால் மற்ற தெய்வங்களின் வரலாற்றை கண்டறிய கொஞ்சம் சிரமாக உள்ளது. நண்பர்களுக்கு அவர்களின் தெய்வங்களைப் பற்றி தெரியவில்லை.
குலதெய்வம் பற்றி வலையில் தேடினால் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் படத்தினைப் பற்றிய செய்தி தான் வருகிறது. அப்போதும் சில பெரியவர்கள் இட்ட குலதெய்வ கட்டுரைகளை சேமித்து வைத்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவை மிக சொற்பமான அளவே இருக்கின்றன. சிறு தெய்வங்களின் கதைகள் சொல்லும் புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் எல்லாவற்றையும் இணையத்தில் வெளியிடுவேன்.
ஆவணப்படுத்துங்கள் –
ஒரு தனி மனிதனாக எல்லாவற்றையும் ஆவணம் செய்ய இயலாது. உங்களுடைய குலதெய்வத்தினை பற்றி முழுமையாக அறியுங்கள். அதன் வழிபாட்டு முறைகள், வரலாற்று கதைகள் என எல்லாவற்றையும் ஆவணப்படுத்துங்கள். வலைப்பூக்கள் தொடங்கியுள்ள நண்பர்கள் இந்த பணியை செம்மையாக செய்துவிடுவார்கள். சிலர் செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.
வலைப்பூக்களில் எழுதி பழக்கமில்லாதவர்களும், வலைப்பூகளை தொடங்காதவர்களும் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள் -
தமிழ் எழுதியான என்.எச்.எம்ஐ உங்கள் கணினியில் பதிவிரக்கம் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் எளிமையான தமிழ் எழுதி, தட்டச்சு பலகையின் மாதிரியும் இதோடு உள்ளது. (மற்ற தமிழ் எழுதிகளின் இணைப்புகள் இந்த தளத்திலே இடது புறமாக கொடுக்கப்பட்டு உள்ளது).
உங்கள் குலதெய்வ வழிபாட்டு முறை, சிறப்பான பெயர்கள், வரலாறு, அமைவிடங்கள் என எல்லாவற்றையும் தமிழில் எழுதிக் கொள்ளுங்கள்.
Thank:
https://sagotharan.wordpress.com/2009/12/08
https://saathesh.blogspot.com/2012/09/blog-post.html
https://karthikai.com/2011/12/06/kula-deivam/
Thanks & Regards
ஹரிமணிகண்டன்
Harimanikandan .V
Harimanikandan .V
(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)
No comments:
Post a Comment