Monday, March 20, 2017

அக்னிஹோத்ரம் agnihomam by Yourself!

Thank to https://blaufraustein.wordpress.com/
https://www.vedicastrologer.org/homam/index.htm
* * *

you can do agnihomam [ Homam ] Yourself  ..

“அக்னி ஹோத்ரம்”

எனக்குள் சில நாட்களாகவே ஒரு நெருடல். “ஏன் இப்படி புதிய புதிய நோய்கள் அவதாரம் எடுக்கின்றன?” என்று. அப்போது போபால் விஷவாயு சம்பவமும், அதிலிருந்து ஒரு குடும்பம் தப்பித்ததும்  பத்திரிகைகளில் வெளியாகி இருந்த செய்தி நினைவுக்கு வந்தது. வேதம்,  இதிகாசம், புராணம் இதிலெல்லாம் நம்பிக்கை கொள்வது அல்லது விட்டுவிடுவது என்பது தனிமனித விஷயம்.

ஆனால், சில பழமையான நூல்களில் சொல்லப்பட்டுள்ள சில பாரம்பரிய நம்பிக்கைகள் அது ஆன்மீகம் என்பதை விட அறிவியலாக இருந்திருக்கிறது என்பதை அது நினைவுபடுத்தியது. போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்லை. இதற்கு காரணம் யாகமல்ல. யாகத்தில் போடப்பட்ட பொருட்களும் அதிலிருந்த வெளிக்கிளம்பிய அனலும், மெல்லிய புகையும் தான் நச்சுப்புகையை அந்த வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியதும் தான் காரணம்!

இப்படி கொடுமையான விஷவாயுவை கூட முறியடிக்கும் சக்தி இந்த யாகத்திற்கு இருந்திருக்கிறது என்றால் இந்த ஈ, எலி, பன்றி, பறவை, கொசுக் காய்ச்சல்களை பரப்ப சுற்றுப்புற காற்றில் அலைந்து திரியும் கிருமிகளை அழிக்க முடியாமலா இருக்கும்? அதற்கும் பதில் சொல்லியிருக்கிறது அதர்வணம். சுற்றுப்புறக் காற்றில் உள்ள நோய்க் கிருமிகளையும், அசுத்தஙகளையும் நீக்கும் யாகத்தீக்கு ‘அக்னிஹோத்ரம்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

நல்ல சுற்றுப்புறத்தை ஐந்து எளிமையான அடிப்படையான மூலாதரமான விதிகளின் படி வேள்வித் “தீ” மூலம் உண்டாக்கலாம் என்கிறது சில பழங்கால வேதங்கள். அதில் ஒன்று தான் அக்னிஹோத்ரம். அதாவது வேள்வித்தீயின் மூலம் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தலாம் என்கிறது வேதங்கள்.

இந்த அக்னிஹோத்ரம் பற்றி ‘இன்ஸ்டிடியூட் பார் ஸ்டெடீஸ் இன் வேதிக் சையின்ஸ்’ என்ற நிறுவனம் வெளியிட்ட ஒரு கையேட்டில் காணப்பட்ட தகவல்கள் உங்கள் பார்வைக்கு….

 காற்றில் ஒரு ஊசி மருந்து

“நம் உடலில் நோயை உண்டாக்கும் நச்சுக்கிருமிகளை அறவே ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம். அதுபோல் நம்மை சுற்றி காற்றில் உலாவும் அசுததங்களை நம்மால் களைய முடியாத நிலையில் அவற்றின் தீய வினைகளிலிருந்து நம்மை காத்துக்கொளள முடியும்.

உடலில் ஊசி போடுவது போல சுற்றுப்புறக்காற்றில் செலுத்தப்படும் ஒரு ஊசி தான் அக்னி ஹோத்ரம். இந்த அக்னி ஹோத்ரத்தால் நமது சுற்றுப்புறம் மட்டுமல்ல. யாகத்தீயில் இருந்து வரும் மணம் நமது மனதையும் அமைதிப்படுத்துகிறது.

அக்னி ஹோத்ரம் என்பது….

இயற்கை சமன்பாட்டிற்கும் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும் அவசியமாக இருந்து ஜீவராசிகளின் சீர் பிரமாணத்திற்காக சூரியோதத்திலும் சூரிய அஸ்தமனத்திலும் செய்யப்படும் யாகத்தின் அடிப்படையிலான செயல்முறை.

சுற்றுப்புறக் காற்று தான் நமது நாசி வழியாக இழுக்கப்பட்டு உடலை உயிரோட்டமுடன் வைக்கிறது. இந்த சுற்றுப்புறக் காற்றுக்கு உயர்ந்த குணமளிக்கும் சக்தியை கொடுக்கும் ஒரு செயல்.

அக்னி ஹோத்ரம் செய்ய அடிப்படை தேவைகள்

1. நிச்சயமான நேரங்கள்

2. தீ (அக்னி) பசுஞ்சாண விரட்டியால் உண்டாக்கப்படுவது.

3. குறிப்பிட்ட அளவுடைய பிரமிட் தோற்றம் கொண்ட செப்பு பாத்திரம்.

4. சுத்தமான பசுநெய் தடவப்பட்ட முனை முறியாத பச்சரிசி

5. மந்திரங்கள்.

இதில் நிச்சயமான நேரங்கள் என்பது, இயற்கையின் தாளகதியான சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமனம்.

(சூரியோதத்தின் பல நெருப்புகள், ஒளி அலைகள், மின்சாரங்கள், ஈதர்கள் மற்றும் நுட்பமான சக்திகள் எல்லா வழிகளிலும் பரவி பாய்கின்றன. தீவிரமான இந்த ஒளி வெள்ளம் பரவசத்தை ஏற்படுத்தி சுறுசுறுப்பை உண்டாக்குகின்றது. மேலும் அது பாயும் வழியில் உள்ள எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி உயிர்ப்பிக்கின்றது. சூரிய அத்தமனத்தில் ஒளிவெள்ள அதிர்வுகள் மறைகின்றன. அப்பொழுது நோய்க்கிருமிகள் பெருகி அழிக்கும் சக்தியாக செயல்படும். எனவே அக்னிஹோத்ரம் செய்தால் சுற்றுப்புறக்காற்றில் கிருமிகளின் பெருக்கத்தை தடுக்கும்)

அக்னி (தீ) மற்றும் பிரமிட் பாத்திரம்

பிரமிட் உருவ (பிரமிட் என்ற வடிவத்தை பற்றி ஆய்வு செய்த லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம், அது அறிந்து கொள்ளப்பட்ட அனைத்து விஞ்ஞான மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விதிகளுக்கு சவாலாக உள்ளது என்றார்கள். (psychic discoveries Behind Iron Curtain) புத்தகத்தில் பிரமிட்டின் உட்பகுதியில் இருக்கும் மின்காந்த சக்தி அதனுள் இருக்கும் பொருட்களின் சிதைவடைதலை தடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. (பிரமிடில் வைக்கபட்ட உடல் சிதைவுறாது. துர்நாற்றம் வீசாது)

தாமிர பாத்திரத்தில் உலர்ந்த பசுஞ்சாண விராட்டியில் நோய் பரவுதலை தடுக்கும் மூலங்கள் உள்ளதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. பசுஞ்சாணத்தில் மென்தால், அம்மோனியா, பீனால், இன்டால், பார்மலின் முதலிய ரசாயனங்களும் முக்கிய நோய்க்கிருமிகளை அழிக்கும் சக்தியும் உள்ளது.  யாக மரங்கள் என்று கூறப்படும் ஆல் (Ficul Bengalnesis), அத்தி (Ficus Glometra), புரசு (Butea Prondosa), அரசு (Ficus Religiosa), வில்வம் (Aegle Marmelos) ஆகிய மரங்களில் உலர்ந்த குச்சிகள் மருத்துவ சக்தி கொண்டது. இவற்றை பசுஞ்சாணத்துடன் பயன்படுத்தும் போது நன்மைகள் அதிகரிக்கும்.
Image result for agni homam
செய்முறை

பசுஞ்சாண விராட்டியையும் உலர் மரக்குச்சிகளையும் பிரமிட் உருவ தாமிர பாத்திரத்தில் உள்ளே காற்றோட்டத்துடன் சரியாக எரிய வைக்க வேண்டும். அதிகாலையில் மற்றும் மாலையில் அக்னி ஹோத்ர நேரத்தில் (சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்) தீ கொளுந்து விட்டு எரியவேண்டும். புகை உண்டாக்கக்கூடாது. ஜுவாலை நெருப்பாக இருக்க வேண்டும். உடையாத முழுமையான பச்சரிசி – கைக்குத்தல் அரிசியை ஒவ்வொரு நேரத்திற்கு இரண்டு சிட்டிகைகளாக இந்த நெருப்பில் போட வேண்டும். சுத்தமான பசுநெய்யை இந்த நெருப்பில் சொட்டு சொட்டாக  விட வேண்டும். இந்த நெய், உப்பு சேர்க்காத பதப்படுத்தும் பொருள் அல்லது ரசாயனங்கள் சேர்க்காத சுத்தமான பசு நெய்யாக இருப்பது  முக்கியம். இப்படி வேள்வி தீயை வீட்டில், சரியாக சூரியோதத்திலும், சூரிய அஸ்தமனத்திலும் முறையே இரு தடவை செய்ய வேண்டும்.

இப்படி உருவாக்கும் வேள்வித் தீயிலிருந்து 4 வகையான வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

1 எத்திலின் ஆக்சைடு

2, புரேப்பலின் ஆக்சைடு

3. பார்மால்டிஹைடு

4. ப்யூட்டோ பயோலேக்டோன்.

இந்த வேள்வி தீயால் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். நெய்யை தீயில் சொட்டு சொட்டாக விடும் போது நெய்யானது உஷ்ணத்தைக் கொண்ட அசிட்டிலின் வாயுவை உற்பத்தி செய்கிறது. இது நம்மை சுற்றி இருக்கும் அசுத்தம் அடைந்த காற்றை உறிஞ்சி சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது.

மந்திரங்கள்

அதிகாலையில் உச்சரிக்கப்பட வேண்டிய அக்னிஹோத்ர மந்திரம்

சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் நம: |
பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நம: ||

மாலையில் உச்சரிக்கப்பட வேண்டிய அக்னிஹோத்ர மந்திரம்

அக்நயே ஸ்வாஹா அக்நயே இதம் நம: |
பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நம: ||

இந்த வேள்வி தீ எரியும்  போது நாம் அதன் அருகில் அமர்ந்து மந்திரங்களை சொல்லலாம். இந்த அக்னியானது தாமிரப்பாத்திரத்தில் எரியும் போது முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களுடன் இந்த மந்திரங்களை உச்சரித்து தியானம் செய்யுங்கள். மன இறுக்கத்திலிருந்து மீண்டு ஓய்வாக இருப்பதை உணர்வீர்கள்.

என்ன  நடக்கிறது?

இந்த ஜுவாலையின் அனல் நம்மை சுற்றி இருக்கும் நச்சுக்கிருமிகளை எல்லாம் கிரகித்து அழித்து விடும். ஒரு வீட்டில் தொடர்ந்து செய்யப்படும் போது அந்த வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் நோய்க்கிருமிகள் உலாவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே உங்கள் உடல் நலனை காக்க அக்னிஹோத்ரத்தை செய்து வரலாம்.

பொது  இடங்களில் செய்யலாம்

இந்த செயலை பல ஆயிரக்கணக்கான நோயாளிகள் குவிந்து வரும் அரசு மருத்துவமனைகள், மிக அதிக மக்கள் குழுமும் இடங்களில் எல்லாம் கடைப்பிடித்தால் அந்த இடங்களில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிக்கப்பட்டு சுற்றுப்புறக்காற்று சுத்தமானதாக மாறிவிடும். நோயாளிகளை பார்க்க வரும் நல்ல ஆரோக்கியமுள்ள பலர் இந்த நோய்க்கிருமிகளால் பாதிப்புள்ளாகாமல் தடுக்கும் ஒரு முயற்சியாக இந்த யாகத்தீ அமையக்கூடும். மேலும் நோயாளிகளின் நோய்க்கிருமிகளும் எளிதில் அவர்களை விட்டு விலகி குணமடைய வாய்ப்பிருக்கிறது. முயற்சிக்கலாமே!

அக்னி ஹோத்ரத்தின் நன்மைகள்

ஒருவரிடம் இருக்கும் போதைப் பொருள் பழக்கத்தின் தீவிரத்தன்மையை குறைக்கும்.

அதிசயிக்கத்தக்க அளவில் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் ஒரு அமைதியான மனதை ஏற்படுத்தும்.

முன்தலைவலி, சைனஸ், தோல் படை, மைக்ரேன் தலைவலி உள்பட சில நோய்களை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விவசாயத்தில் விதைகள் சீக்கிரமே முளை கிளம்பி தளிர் விடும். விளைச்சலை அதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீட்டின் சுவர் அணுக்கதிர் வீச்சுக்களை கூட தடுக்கும் சக்தி வாய்ந்ததாக ஒரு ரஷிய விஞ்ஞானி சொல்லியிருக்கிறார்.

நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பிரமிட் என்ற உருவத்தின் சக்தி சூரிய சக்தியைவிட புரட்சிகரமானதாக இருக்கும்.

பிரமிட் உருவ கட்டிடங்களில் இருக்கும் போது மனவியாதி நோயாளிகள் அபூர்வமான மன அமைதியை அடைகிறார்கள்.

பிரமிட்டில் மின்காந்த கதிர்களும், காஸ்மிக் கதிர்களும் குவிகின்றன.

இப்படி இதனை பற்றி பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. இங்கு சுருக்கப்பட்டிருக்கிறது.

Do Homam by Yourself!

click : https://www.vedicastrologer.org/homam/index.htm

Fire ritual is found in many ancient religions, including Hinduism, Zoroastrianism, Buddhism, ancient Greco-Roman religions, American Indian religions, Incan traditions etc. Fire is a representative of god on earth. Spending time worshipping god through fire purifies one's subtle consciousness. That happens because the internal fire responsible for purifying one's consciousness resonates to the external fire.

  • Importance of Homam!

    Title
    Read a white paper on the relevance and importance of homam as a spiritual sadhana. It addresses many questions, concerns and misconceptions.
    Click to read more
  • Mahaganapathi Homam

    Title
    Mahaganathi removes obstacles in material life and enables spiritual progress. Detailed homam manual, audio MP3 and video are available.
    Click to read more
  • Sri Mahalakshmi Homam

    Title
    Sri Mahalakshmi gives prosperity in various aspects of life, including spiritual life. Detailed homam manual is available.
    Click to read more
  • Vishnu Homam

    Title
    Vishnu protects one's sustenance and dharma and gives spiritual progress. Detailed homam manual is available.
    Click to read more
  • Sri Krishna Homam

    Title
    Sri Krishna is an incarnation of Vishnu on earth with the fullest manifestation of the abilities of Supreme Cosmic Being. Detailed homam manual is available.
    Click to read more
  • Narasimha Homam

    Title
    Narasimha is a lion-headed incarnation of Vishnu, who protected great devotee Prahlada. He gives bravery, strength and victory over internal & external enemies.
    Click to read more
  • Hanuman Homam

    Title
    Hanuman removes all fears and other mental shackles and makes one absolutely detached and blissful. Detailed homam manual is available.
    Click to read more
  • Shiva Homam

    Title
    Shiva gives highest detachment, contentment and bliss. Detailed homam manual is available.
    Click to read more
  • Kaala Bhairava Homam

    Title
    Bhairava removes all fears and other mental shackles and makes one absolutely detached and blissful. Detailed homam manual is available.
    Click to read more
  • Chandi Homam

    Title
    Chandi makes one fiercely and ruthlessly destroy subtle internal demons of pride, egosense, desires and attachments. Detailed homam manual is available.
    Click to read more
  • Sani (Saturn) Homam

    Title
    Sani gives discipline, patience, humility, perseverance and hones one's handling of the results of previous karmas. Detailed homam manual is available.
    Click to read more
  • Kuja (Mars) Homam

    Title
    Kuja (Mars) gives initiative, lands, properties and fighting ability and removes debts. Detailed homam manual is available.
    Click to read more

1 comment: