Monday, January 19, 2026

முனீஸ்வரன் வரலாறு

ஸ்ரீ முனீஸ்வரர்

முனீஸ்வரன் வரலாறு  மற்றும் 
முனீஸ்வரன் மந்திரம்:
முனீஸ்வரன் காயத்ரி: 

 முனீஸ்வரன் ஈசன் அம்சமாக கருதப்படுவர் ஆவார். முனிவர்களுக்கு எல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் என பொருள்படும் மேலும் முனீஸ்வரன் வழிபாடு என்பது இன்று நேற்று அல்ல பண்டைய காலத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டு இருக்கிறது கிராம காவல் தெய்வமாக மக்கள் வழிபாடு செய்கின்றனர். 

கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியப்பனி, முனியப்பர் எனவும் அழைத்து வழிபடுகின்றனர்

முனி என்றால் "ரிக் வேதத்தில்" "தெய்வ ஆவேசம் படைத்தவர்" என்றும், பயமற்றவர் என்றும் பொருள், நாட்டார் தெய்வங்களில் முனி என்பது காவல் தெய்வத்தின் பெயர்"பஞ்ச முனிகள்" அதாவது ஐந்து முனிகள், பச்சை அம்மனுக்கு காவலாக பூலோகம் வந்ததாக வரலாறு உண்டு. சில இடங்களில் சப்த முனிகள் உண்டு. ஈஸ்வர பட்டம் பெற்றவர் முனீஸ்வரர் ஆவர் இந்த முனீஸ்வரன், சிவ அம்சம் கூடியவர்.

முன்னொரு காலத்தில் "அந்தகாசுரன்" என்னும் அசுரன் தேவர்களையும், மக்களை வதைத்து, இடையூறு செய்து வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தங்களை காக்கும் படி அன்னை பராசக்தியை அனைவரும் வேண்டினர், பார்வதி அம்மன் "காத்தாயி" என்ற பெயரில் பூமியில் அவதரித்து அசுரனை அழிக்க காத்தாயி அம்மன் லடாமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, வாழ்முனி,சட்டைமுனி, என்று ஏழு முனிகளை உருவாக்கி, அந்த ஏழு முனிகளும் சேர்ந்து அந்த நரகாசுரனை அடக்கி வதம் செய்தனர், பின்பு முனிகள் அனைவரும் ஒரே வடிவமாக மக்களை காக்க பூமிக்கு வந்தனர். 

பொதுவாக மக்களுக்கு முனீஸ்வரனை பற்றி நிறைய குழப்பங்களும் சந்தேகங்களும் உண்டு, இதில் உண்மை எது பொய் எது என்றும் குழப்பங்களும் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் நம்மை மற்றும் பூலோகம் உயிரினங்கள் -  புல் முதல் அண்டசராசரம் வரை படைத்த இறைவன் ஈஸ்வரன் ஆவான்.  பரமாத்மாவில் இருந்தே ஜீவாத்மா பிரிந்தது. அதுபோல் தான் முனீஸ்வரன் சாட்சாத் ஈஸ்வரனின் அம்சமே. கலியுகத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கவும் மக்களை காக்கவும் வீர ஆவேசமாக அவதரித்தவரே "முனீஸ்வரன்" .

முனீஸ்வரன் வழிபாடு என்பது நம்மை காக்கும், ஆண்டி முதல் அரசன் வரை பாகுபாடின்றி வழிபாடும் தெய்வம் முனீஸ்வரன். கலியுகத்தில் ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் படியும் அவர்களுக்கு வழிபாடு செய்ய கூடிய  எளிய முறை உள்ள ஒரே வழிபாடு முனீஸ்வரன் வழிபாடு மட்டும் தான்.

எல்லா தரப்பு மக்களும் வழிபாடு செய்யவே கிராமங்கள் தோறும் சிறு ஆலயங்களிலும் முனிகள் வீற்றிருக்கின்றனர். 

சிவன, பெருமாள், அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு , இவர் தான்  காவலர் ஆவார். பெரிய ராஜகோபுரம் உள்ள கோவில்களிலும் முனீஸ்வரர்க்கு தனி சன்னதி உண்டு உதாரணமாக ஸ்ரீரங்கம் திருதலத்தில் ராஜா கோபுரத்தில் முனீஸ்வரர் சன்னதி உள்ளது. பல பெரிய தனி சன்னதிகளும் முனீஸ்வரன் காட்சி தருவதும் உண்டு இப்படி எல்லா இடங்களிலும் முனீஸ்வரன் வழிபாடு உண்டு. 

இவர் கனல் வீசும் கண் உடையவர், அருள் ஒளிரும் மேனி உடையவர், சகல சௌபாக்கியமும் தருபவர், நள்ளிரவில் கண்ட நெடிய வெண்புகை வடிவத்தில் வலம்வருபவர் என்று பல நம்பிக்கைகள் உண்டு. "நம்பினார் கெடுவதில்லை" என்ற வாக்கின் அடிப்படையில் நம்பி வழிபட்ட பலருக்கு முனீஸ்வரன் இப்படி காட்சி தந்த வரலாறுகள் நமது கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான கதைகள் உண்டு. 

நமது நாட்டில் மட்டுமல்ல "பர்மா" என்று அழைக்கப்பட்ட தற்போதைய "மியான்மர்" என்ற நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பு பல லட்சம் தமிழர்கள் வசித்தனர். "ரங்கூன்" என்று அழைக்கப்பட்ட "யாங்கூன்" இருந்து சுமார் 1 மணி நேரப்பயணம் வருகிற ஊர் "பிலிக்கான்" அங்கே முனீஸ்வரர்க்கு அற்புதமான ஆலயம் உள்ளது. நீதி, நியாயம்  இவற்றை மக்களுக்கு வழங்கி வருவதால் இந்த தேசத்து மக்கள் இவரை"ஜட்க் ஐயா" என்றே அழைக்கிறார்கள். 

பர்மா மட்டுமல்ல மலேஷியா, சிங்கப்பூர் சீனா, ஜப்பானிலும் முனீஸ்வரன் வழிபாடு உள்ளது.
இது சம்மந்தமான ஆராய்ச்சியில் உள்ளோம் தீர்க்கமாக. ஆராய்ச்சி செய்து தெளிந்த பின்பு உங்களுக்கும் தெரிவிக்கிறோம். 

மலேசியாவில் மட்டும் 500 இக்கும் மேற்பட்ட முனீஸ்வ்ர் கோவில்கள் உள்ளன.  Kuala Lumpur &  Penang உள்ள கோவில் விபரங்கள்  இதோ 

முனீஸ்வரன் மந்திரம்:
'ஓம் ஹம் ஜடா மகுடதராய 
உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய 
சத்ரு சம்ஹாரனாயஜடா 
முனீஸ்வராய நமஹ.'

முனீஸ்வரன் காயத்ரி: 
" ஓம் தத்புருஷாய வித்மஹே 
மஹாவீராய தீமஹி
தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத் "
 

ஸ்ரீ  முனீஸ்வரர்  ஒருவர் தானா? சில கோவில்ல ஆக்ரோஷமா அருவா, சுருட்டு, சாராயத்தோட  இருக்கிறாரு, சில கோவில்ல சாந்தமா தவம் கோலத்தில்  இருக்கிறாரே!!!

நான்  செவி வழி செய்தியாக கேட்டுள்ளேன்  ஸ்ரீ முனீஸ்வரர் சைவம் என்று! எத்தனை ஸ்ரீ முனீஸ்வரர்  உள்ளார் ?

ஸ்ரீ முனியாண்டி   to   ஸ்ரீ முனிஸ்வரன்

அதி காலங்களில் முனியாண்டி என்றே அழைக்கப்பெற்றார், எப்படி சனி பகவான் “ஈஸ்வரன்” பட்டம் பெற்றாரோ அதே போல்  முனியாண்டியும் “ஈஸ்வரன்” பட்டம் பேற்று ஸ்ரீ முனீஸ்வரன் என்று போற்றப்பெற்று , எல்லா காவல் தெய்வங்களும் முதற் கடவுளாக இருக்கிறார்.
“ஈஸ்வரன்” -  இறைவன் அல்லது ஆட்சியாளர் என்று பொருள்.

பொதுவாக சொல்வது சப்த முனிகள்- எங்களுக்கு தெரிந்ததை இங்கே குறிப்பிட்டுளோம் 

1. வாழ்  முனி
2.  செம் முனி 
3. கரு முனி 
4. வேத முனி 
5. கும்ப முனி 
6. ஜடா முனி 
7. நாத முனி 
8. முத்து  முனி 
9. சிங்க முனி 
10. லாட முனி 
11. சன்னியாசி முனி 
  விளக்கமாக பார்ப்போம்

சப்த முனிகள் ......

ஸ்ரீ முனீஸ்வரர் ஒருவர் தானா? சில கோவில்ல ஆக்ரோஷமா அருவா, சுருட்டு, சாராயத்தோட இருக்கிறாரு, சில கோவில்ல சாந்தமா தவம் கோலத்தில் இருக்கிறாரே!!!

ஏழு என்ற எண்ணிக்கையில் உள்ள சப்த கன்னிகளை வழிபடும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. 

அதே போல சப்த(7) முனிகளையும் அவரது 21 பரிவாரங்கள்  கொண்டாடும் மரபும், பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. 

சப்த முனிகள் 

1.ஜடா முனி 
2. வாழ்  முனி
3. தவ முனி 
4. நாத முனி 
5.  தர்ம முனி 
6. சிவ முனி 
7. மகா முனி

1. ஜடாமுனி

ரோம ரிஷியே ஜடாமுனியாக உள்ளார் என கூறப்படுகிறது. யோகப் பட்டை தரித்து, யோகாசனத்தில் பெரிய கூடைமுடிகளோடு இவர் காட்சி தருகிறார். அதிகமான ஜடைகளுடன் இருப்பதால், இவர் ‘ஜடாமுனி’ என வழங்கப்படுகிறார். குழந்தைகளுக்கு ஜடை விழுந்து முடி சிக்கலாகி விடும் போது இவருக்கு வேண்டிக் கொண்டு பயன்பெறுகின்றனர்.

2. வாழ்முனீ

அனைத்து பச்சையம்மன் ஆலயத்தில் மிகப்பெரிய வடிவத்தில் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பவர் வாழ்முனீஸ்வரர். திருமாலின் மறுவடிவான இவர், அன்னை பார்வதிக்கு காவலராக விளங்குகிறார். வான் முட்டிய கோலத்தில் இருப்பதால் இவருக்கு ‘வான்முனி’ என்று பெயர். இதுவே மருவி ‘வாழ்முனி’யாக வழங்கப்படுகிறது.

உக்கிர மாமுனியான இவர், வலது கரத்தில் மேல் நோக்கிய நீண்ட வாளையும், இடதுகரத்தில் கீழ்நோக்கிய குத்து வாளான சலாகையும் ஏந்தியுள்ளார். ஊன்றிய வலது காலடியில் அக்னிவீரன் தலை உள்ளது. இவர் போரிட வரும் வீர ராட்சதனைக் கத்தியால் குத்திய கோலத்தில் அமர்ந்துள்ளார். அனைத்து முனிவர்களுக்கும் இவரே பிரதானம்.

குழந்தைக்கு உண்டாகும் பாலரிஷ்டங்கள் நீங்க, இவர் மடியில் குழந்தைகளைப் படுக்க வைத்து எடுப்பார்கள். இவருக்குச் சிவப்பு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் எதிரிகள் தொல்லை விலகும். மேன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

3. தவ முனி
தவமுனி - அசுரர்களால்  தேவர்கள் மற்றும் ரிஷிகளின் யாகத்திற்கு நிறைய தடைகள் வந்தமையால், அவர்களுக்கு பாதுகாப்பிற்கும், அவர்கள்   பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கவும்  தவ முனி உறுதுணையாக இருந்தார். வெண்ணிற தாடியுடன் காணப்படுவர்.

4. நாதமுனி
இசையில் சிறந்து விளங்கும் நாரதரே ‘நாதமுனி’யாகக் கருதப்படுகிறார். முதுகில் நீண்ட சடை, எடுத்துக் கட்டிய ஜடாமகுடத்துடன், கையில் மகர யாழை இசைக்கும் தோற்றத்தில் இவர் காணப்படுகிறார். இவருக்கு விலங்கு போட்டு வைத்திருப்பார்கள். ‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்றாலும், பூமியிலும் அவர் ஏதும் கலகம் செய்யாமல் தடுக்கும் நோக்கில், இந்த முனிக்கு விலங்கு பூட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இவர் துடிப்பாகவும், அச்ச மூட்டுபவராகவும் இருப்பதால் இவரை விலங்கு பூட்டி வைத்துள்ளதாகவும் மற்றொரு காரணம் கூறப்படுகிறது. இவரிடம் வேண்டி குழந்தைப்பேறு பெற்றவர்கள் பிறந்த குழந்தைக்கு நாதமுனி என பெயர் சூட்டி மகிழ்கின்றனர். இவருக்கு ‘பூவிலங்கு முனி’ என்ற பெயரும் உண்டு.

5. தர்ம முனி 

தர்மமுனி என்பவர் , தர்மத்தை  நிலை நிறுத்தவும், நல்லதை  நடத்துவதற்கும், மக்களை  பாதுகாப்பவர் மற்றும் தீமையை அழிப்பவர்.
6. சிவன முனி
சிவ முனி- அவர் சிவனின் முகத்திலிருந்து தோன்றியதால் அவருக்கு சிவமுனி வடிவம் கிடைத்தது.
7. மகா முனி - அளவிட முடியாத தெய்வீக சக்தியைக் கொண்டிருந்த மகாமுனியாக ஆனார்.

21  பரிவார முனிகள்
சப்த முனிகளை பற்றி பார்த்தோம், இந்த பதிவில்  21 பரிவார முனிகளை பற்றி பார்ப்போம்

21  பரிவார முனிகள்

1.முனியாண்டி
2. பாண்டிமுனி
3. செம்முனி
4. கருமுனி
5.கொடுமுனி
6. தங்கமுனி
7. வேதமுனி
8. முத்துமுனி
9. லாட முனி
10. சத்திய முனி
11. சந்தனமுனி
12. கோரைமுனி
13. கொங்குமுனி
14. யோகமுனி
15. பாலயமுனி
16. கோட்டமுனி
17. பந்தள முனி
18.அக்னிமுனி
19. ராஜமுனி
20.சாமா / சலேமுனி
21. நொண்டிமுனி

செம்முனி, கருமுனி

இவர் சிவபெருமானின் அம்சமாகத் தோன்றி, பச்சையம்மனுக்குக் காவல் தெய்வமாக விளங்குகிறார். வாழ்முனிக்கு அடுத்த நிலையில் இருக்கும் முனிகள், செம்முனி - கருமுனிகளாகும். கருமுனி, பெயருக்கு ஏற்றபடி கருமை நிறத்திலும், செம்முனி, செந்நிறத்துடனும் காட்சி தருகின்றனர். இவர்கள் நீண்ட வாளையும், சலாகையும் ஏந்தி காட்சி தருகின்றனர் இவர்கள் மந்திர தந்திரங்களில் சிறந்தவர்களாகவும், பக்தர்கள் வாழ்வில் வளத்தை அளிப்பவர்களாகவும் திகழ்கிறார்கள். மேலைக் கடலோரத்து செம்மலை, கருமலையில் இருந்து இவர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. மக்களைக் காக்கவும், பச்சையம்மனுக்கு காவலராக நிற்கவும், சிவபெருமானின் அம்சங்களாக கருமுனி, செம்முனிகள் பூமிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காலடியில் தீயகுணம் கொண்ட மந்திரவாதிகளின் தலைகளைக் காணலாம்.

வேதமுனி

இவர் தன் கைகளில் ஏடுகளைத் தாங்கி, வேத நூல்களை பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் தோற்றத்தில் காணப்படுவார். வேத நூல்களை கற்பவர் என்பதால், ‘வேதமுனி’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஜடாமண்டலத்துடன் பிரமாண்ட மீசையும் கொண்டு காட்சி தருகிறார். இவர் வாழ்வில் நல்வழி காட்டுபவராக புகழப்படுகிறார்.

கும்பமுனி

கும்பத்தில் தோன்றிய முனிவர் அகத்தியர். இந்த அகத்தியரின் மறுவடிவமே கும்பமுனி ஆகும். அகத்தியரைப் போலவே, உருவத்தில் குள்ளமானவராக இவர் விளங்குகிறார். இவரை ‘முனிரத்தினம்’ என்றும் அழைப்பார்கள். செம்முனியும் அகத்தியரின் மறுவடிவம் என்று சொல்பவர்களும் உண்டு.

முத்துமுனி

முத்து மாலைகள், முத்து மகுடம், வெண்ணிற ஆடைகளைத் தரித்து வெண்மையான தோற்றத்தில் காட்சியளிப்பவர் முத்துமுனி ஆவார். பிரம்ம தேவரே ‘முத்துமுனி’யாக விளங்குகின்றார் என கூறப்படுகிறது. திருமாலின் அவதாரங்களில் ஒன்றான பரசுராமர்தான் ‘முத்துமுனி’ என்று சொல்பவர்களும் உண்டு. இவருக்கு ‘செட்டி முனி’ என்ற பெயரும் உண்டு. ஒரு சிலர் முருகப்பெருமானே முத்துமுனியாக இருப்பதாகவும் நம்புகின்றனர். இதனால் இவரை ‘முத்தையன்’ எனவும் அழைக்கிறார்கள்.

சிங்கமுனி

விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்தின் அம்சமே ‘சிங்கமுனி’ என கூறுகின்றனர். இவர் தனது கையில் வாளும், கேடயமும் கொண்டு விளங்குகிறார். முகம் சிலிர்த்த கோலத்தில் காட்சி தருகிறது. பிடரிகளுடன் கூடிய சிங்கமுகம் இவருக்கு அமைந்துள்ளது. இவரை வழிபாடு செய்தால், பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட துஷ்ட சக்திகள் அகலும். பெரும்பகை நீங்கும் என்பது நம்பிக்கை.

லாட முனி

பழங்காலத்தில் லாட தேசம் ஒன்று இருந்ததாகவும், அந்த தேசத்தைச் சார்ந்த முனியே ‘லாடமுனி’ என்றும் சொல்லப்படுகிறது. சில ஆலயங்களில் முனிகளின் வரிசையில், இந்த லாட முனியும் இடம்பெற்று இருப்பதைக் காணலாம். சில ஆலயங்களில் லாட சன்னியாசி என்ற பெயரில் இவர் வீற்றிருப்பார்.

சன்னியாசி முனி

முனிகள் கூட்டத்தில் உயரம் குறைந்த தனி மேடையில் இவரை தரிசனம் செய்யலாம். இவரை ‘சந்நாசி அப்பன்’ என்றும், ‘சன்னியாசி முனி’ என்றும் அழைப்பார்கள். இவர் கவுபீனம் (கோவணம்) தரித்து யோக தண்டத்துடன், புலித்தோலில் அமர்ந்து காட்சி தருவார். இவரோடு பைரவர் (நாய்) ஒன்றும் இருக்கும்......

உங்களுடைய வாழ்க்கையில் உள்ள அணைத்து பிரச்னைகளில் இருந்து விடுபட்டு, மன அமைதியாக, சந்தோஷத்துடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள  என்றும் நம்முடன் துணை இருக்கும் ஸ்ரீ முனீஸ்வரரையம்  வழிபடுங்கள்....

Monday, January 12, 2026

சூரியன் மறைவதற்குள் ஏன்பிணங்களை ...

சூரியன் மறைவதற்குள் ஏன்
பிணங்களை ...
 எரித்து விட வேண்டும் என்று கூறுகிறார்கள் ....

இறுதிச் சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். 

ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகிறது. 
ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.

இறந்தவர்கள் மரணத்திற்குப் பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்து இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகிறது. 

ஆனால் பல இறுதி சடங்குகள் ஏன் செய்யப்படுகிறது என்பதே நமக்கு தெரியாது. இந்த பதிவில் அனைத்து இறுதி சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்கள்.

மூக்கில் பஞ்சு வைப்பது.
இறந்தவர்களின் உடல் என்பது பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறி விடும். 

எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். 

இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். இதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். 

மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கத்தான்.

இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும். 
உயிர் சக்தியானது உடலை விட்டுப் பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறி விடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேறத் தொடங்கி விடும். ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றி வரும். இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றி வைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும். விளக்கேற்றி வைத்த பின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும்
ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகி விடும். அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரியானது ஒளிரும் ஆன்மாவை குறிக்கும்.

ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?
அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். 
எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாக கூறும் போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.

மூங்கில்களில் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது, இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல் இறந்து உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல் ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

கால்கள் சேர்த்து கட்டப்படுவது
இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இ.

இறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. 
உடலை எதிர்மறை சக்திகளின்பின்பற்றுவோம தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை...

இந்துரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது

நன்றி Pon Veera Pandian  sir.. 🙏🙏🙏

Tuesday, December 30, 2025

பரமபத சோபனம் !

பரமபத சோபனம் !

பரமபத சோபனம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் தொன்மையான விளையாட்டு.

இவ்விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கருதுகிறார்கள்.

தொன்மையான பரமபதம் (துணியில் வரையப் பட்டது)

பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது.

ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் பன்னிரெண்டாம் இடம் உண்மையையும், ஐம்பத்தொன்றாம் இடம் நம்பிக்கையையும், ஐம்பத்து ஏழாம் இடம் பெருந்தன்மையையும், எழுபத்தாறாம் இடம் ஞானத்தையும், எழுபத்தெட்டாம் இடம் சன்யசத்தையும் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் மட்டும் தான் ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.

நாற்பத்தொன்றாம் கட்டத்தில் கீழ்ப்படியாமை, நாற்பத்து நான்காம் கட்டம் அகந்தை, நாற்பது ஒன்பதாம் கட்டம் ஈனம், ஐம்பத்து இரண்டாம் இடம் களவு/திருட்டு, ஐம்பத்து எட்டாம் இடம் பொய்/புரட்டு, அறுபத்து இரண்டு மதுபானம் அருந்துதல், அறுபத்து ஒன்பது கடன், எழுபத்து மூன்று கொலை, எண்பத்து நான்கு கோபம்/வெஞ்சினம்/வஞ்சம், தொண்ணூற்று இரண்டு கர்வம், தொண்ணூற்று ஐந்து பெருமை, தொண்ணூற்று ஒன்பது காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன. பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம்/அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்ற கட்டங்களைக் கொடுக்கும்.

இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடக் கூடிய இந்த விளையாட்டு, தாயக்கட்டை உருட்டி அதில் வரும் எண்ணுக்குத் தகுந்தவாறு கட்டங்களில் காயை நகர்த்திச் செல்ல வேண்டும். விளையாட்டை ஆரம்பிக்க 'தாயம்' அதாவது 'ஒன்று' விழ வேண்டும். முதலில் மோக்ஷம் பெற்றவர் வெற்றி பெற்றவராவார்.
நூறாம் கட்டம் நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்று அழைக்கப் பட்டது.

பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே 
1.முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டுவிடும்.
2.இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம். 
3.இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் “திரும்பத் திரும்ப வந்து…!” பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம்.
4.இன்னும் இரண்டே கட்டம்…! எல்லாவற்றையும் விடப் பெரிய பாம்பு அங்கே இருக்கின்றது.
5.பயத்தால் உருட்டிய உடனே தாயம் விழுந்துவிடும். மீண்டும் அந்த விஷமான நிலைகள் பட்டவுடனே “ஜர்ர்ர்...” என்று கீழே இங்கே பன்றிக்குள் கொண்டு வந்து நம்மை விட்டுவிடும்.
6.ஆகவே கீழ் நிலைக்குக் கொண்டு வந்து மிக மோசமான சரீரங்களை எடுக்கும் நிலையை அது மீண்டும் உருவாக்கி விடுகின்றது. 
7.வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் ஏகாதசி.

பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது.

அன்றைய நாளில் சொர்க்கவாசல் என்று கோவில்களை எல்லாம் திறந்து வைப்பார்கள். நமக்கு இதைக் கதையாகச் சொல்லி ஏதோ பேருக்கு சொர்க்க வாசல் வழியாகச் சென்று சாமியைக் கும்பிட்டோம்… போனோம்… வந்தோம்… இராத்திரியெலாம் விழித்திருந்தோம்… இரவு பரமபதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும். (இன்று உள்ள சிலருக்கு இந்தப் பரமபதம் படம் என்றால் கூட என்ன…! என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை)

இந்தப் பரமபதத்தின் இரகசியம் தான் என்ன…!

மனதின்  குணங்கள் பதின்மூன்று

1 -          ராகம்
2 -          துவேஷம்
3 -          காமம்
4 -          குரோதம்
5 -          உலோபம்
6 -          மோகம்
7 -          மதம்
8 -          மச்ச்சரம்
9 -          ஈரிஷை
10-          அசூயை
11-          டம்பம்
12-          தர்பம்
13-          அஹங்காரம்

குணங்களை மாற்ற கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள்

1 -          சகுனம்
2 -          ஸ்தோத்திரம்
3 -          தியானம்
4 -          யாகம்
5 -          மெளனம்
6 -          பக்தி
7 -          சித்தி
8 -          சிரத்தை
9 -          ஞானம்
10-          வைராக்கியம் .

இந்த  பதின்மூன்று குணங்களையும் ,அவற்றை செம்மை படுத்தி நாம் பரவசு தேவனின் பரம பதத்தினை அடையும் வழிகளையும்,உதாரணங்களுடன் விளக்குவதே நாம் வெறும் சதுரங்க கட்டைகளை உருட்டி பாம்பு, ஏணி என விளையாடும் பரமபத சோபன படம்.பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும் (சோபிக்கும்) படம் .

நம் வாழ்க்கையில் எல்லாம் நல்லதைச் செய்வோம். அதே சமயம் நம்மை அறியாதபடி வேதனை என்ற நிலைகள் வரப்படும் போது அந்த விஷமான நிலைகள் “கொத்தப்பட்டு…!” நம் உடலுக்குள் நோய்களாகி விடுகின்றது.

நோயாகி விட்டால் இந்த மனிதச் சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரத்தைப் பெற்று விடுகின்றோம். 
1.அதிலிருந்து மீண்டு மீண்டும் மனிதனாக வளர்ச்சியாகி பல கோடி சரீரங்களைப் பெற்று… 
2.மீண்டும் இழந்து மீண்டும் வளர்ச்சி பெற்று… 
3.இப்படியே இழந்து இழந்து… இன்று நாம் இந்தச் சுற்றிலேயே தான் இருக்கின்றோமே தவிர
4.மெய் வழியின் தன்மையை அடையும் தன்மை (பரமபதத்தை) இல்லாது நாம் இருக்கின்றோம். 
5.அந்த மெய் வழி செல்வதற்கு என்ன வழி…? என்ற நிலையைத்தான் அன்று மெய் ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்தினார்கள்.

பரமபதம் அடைவது என்றால்…
1.பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களிலிருந்து அடுக்கடுக்காகச் சென்று 
2.மனித நிலைகள் பெற்று மனித நிலைகளிலிருந்து 
3.உயிரை ஒளியாக மாற்றி உச்சியிலே செல்லும் போது தான் 
4.அதாவது இந்த உடலை விட்டு (வெளியிலே) விண்ணிலே சென்று ஒளியாக நிற்க கூடிய நிலையைப் பரமபதமாகக் காட்டி
5.அதற்குகந்த நாளாக நாம் ஏகாதசியைக் காட்டினார்கள் ஞானிகள்.

பரமபத சோபன படம் என்பது பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும் (சோபிக்கும்) படம்.

*ஓம் நமோ நாராயணாய...*

Saturday, December 20, 2025

சபரிமலை பாதயாத்திரை விபரம் 2025. 🚶🚶🚶

பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சபரிமலை 57 ஆண்டு பாதயாத்திரை விபரம் 2025. 🚶🚶🚶

22.12.2025 காலை 7 மணி அளவில் மீனாட்சியம்மன் திருக்கோவில் வன்னி மரத்து விநாயகர் கோவிலில் காப்பு கட்டுதல்.

 23.12.2025 காலை 6:30 மணிக்கு தெற்கு கோபுரம் எதிரே உள்ள பைராகி மடம் ஆஞ்சநேயர் கோவிலில் இருமுடி கட்டி சபரிமலைக்கு பாதயாத்திரை புறப்படுதல்🚶🚶🚶
மதியம்:தென்பரங்குன்றம் ராமகிருஷ்ணா சேவாஸ்ரமத்தில் மதிய உணவு
 இரவு: திருமங்கலம் துளசி மணி ஐயப்பன் கோவில் சென்று ஓய்வு எடுத்தல்.

24.12.2025 
காலை:குன்னத்தூரில்  மதியம்: T.கல்லுப்பட்டி PWD பங்களாவில் ஓய்வு இரவு: பாறைப்பட்டி முருகன் கோவிலில்  தங்கல்.

25 12 2025 காலை: கிருஷ்ணன் கோவில் சிற்றுண்டி மதியம்: பிள்ளையார் நத்தம் சென்று  ஓய்வு  இரவு: ராஜபாளையம் சித்தி விநாயகர் கோவில் தங்கல்.

26.12.2025 காலை: சேத்தூரில் 
மதியம்: சிவகிரிக்கு முன்னாடி உள்ள கருப்பசாமி கோவில் மதிய  ஓய்வு  இரவு: வாசுதேவநல்லூர் விநாயகர் கோவில் தங்கல்.

27.12.2025 காலை: புளியங்குடி தாண்டி சிங்கிலிபட்டி மாரியம்மன் கோவில் 
மதியம்:  கிருஷ்ணா புரம் பிரத்தியங்கிரா கோவில் சென்று  ஓய்வு  இரவு: பன்பொழில் சிவன் கோவில் தங்கல்.

28.12.2025 காலை: மணலாற்றின் 
மதியம்:  அச்சன் கோவில் சென்று  ஓய்வு  இரவு: அச்சன் கோவில் தங்கல்.

29.12.2025 காலை: காட்டுவழிபாதையில் துரைபங்களாவில் 
மதியம்:  காட்டு வழிபாதையில் மதிய உணவு  உண்டு தொடர்பயணம்
இரவு: கல்லூளி எஸ்டேட் மாரியம்மன் கோவில் தங்கல்.

30.12.2025 காலை: கோணி அருகே சிற்றுண்டி , மதியம்:  கும்ளா மாதவன் நாயர் வீட்டில் மதிய உணவு உண்டு ஓய்வு  இரவு: ராணி கிருஷ்ணன் கோவில் தங்கல்.

31.12.2025 காலை:மக்கப்புலா ஆரியபவன் சிற்றுண்டி  மதியம்: எருமேலி தர்மசாஸ்தா தரிசித்து பின் BSNL ஆபிஸ் எதிரே உள்ள தர்மசாஸ்தா அன்னதான டிரஸ்ட் சென்று தங்கல்.
மாலை: பேட்டை துள்ளல்.

01.01.2026 அதிகாலை எருமேலியிலிருந்து பம்பை நோக்கி பெரியபாதையில் பயணம் ஆரம்பம்.
இரவு: கரிவலந்தோடு தங்கல்.

02.01.2026 அதிகாலை பம்பை சென்று பம்பையில் நீராடிவிட்டு மலையேறுதல்.
இரவு: ஐயப்ப சுவாமி தரிசனம் செய்து சன்னிதானத்தில் மாகுண்ட ஐயப்ப நிலையத்தில் தங்கல்.

03.01.2026 அதிகாலை நெய்யபிஷேகம் செய்து பிரசாதம் மற்றும் ஐயனின் அருளை பெற்று மதுரை புறப்பட்டு சுகமாக இரவு வந்தடைதல்.

பாதயாத்திரை குருநாதர் சாஸ்தா மாரி +91 78670 09008 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai Trust -
C/o Chamundi,  West tower Street, Madurai 
Cell: 9442408009

Sunday, December 7, 2025

பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 56ஆண்டு

    பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 56ஆண்டு




"வரும் 14.12.2024 ஞாயிறு அன்று நமது பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 56 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு  அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்

வரும் 14.12.2025 ஞாயிறு பழமுதிர் சோலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சபை சார்பில் விருந்து வழங்கப்படுகிறது"

Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai (Regd.No 32/16) 

Chamundi Supari 
New 41 old 20/3 West Tower Street ,
Madurai -  625 001 
Cell: 9442408009 
chamundihari@gmail.com

Thursday, September 18, 2025

அமுது பாறை ..

இன்று காலை Kaalachakram Narasimmaa Tan அண்ணா பல சமையல் அறை விஷயங்களை எழுதி வருகிறார் .. 

நான் ஸ்ரீரங்கத்தில் 1980 களில் - பழைய பெரிய வசதியான வீடுகளில் கண்ட விஷயம் - 

அமுது பாறை .. 
இதை படை கல் என்றும் அழைக்கிறார்கள் - சுட சுட அரிசியை வேக வைத்து - சாதமாக வடித்த பின்னர் - அதை இந்த கல்லில் பரப்பி - சூடு ஆற்றி - அது கட்டி ஆகாமல் உதிர்த்து விட்டு அதில் புளியோதரை சாற்றை ஊற்றி - கலப்பார்கள் .. 

நான் ஒரு வயதான கோவில் சமையல்காரரிடம் கேட்ட பொது - சாதத்தை - இப்படி சூடான ஆவியை நீக்கி - கட்டி இல்லாமல் - பாறையில் இட்டு - மிதமான சூட்டில்  பின்னரே சாப்பிட வேண்டும் - அதை போலவே எல்லா கோவில்களிலும் தெய்வ மூர்த்தங்கள் முன்பும் இப்படி துணியை விரித்து - அதில் உணவை பரப்பி படைப்பார்கள் என்று சொன்னார் .. 

இன்று இருக்கும் அவசர உலகில் குக்கர் விசில் போவதற்கு முன்பாக மூடியை திறக்க எத்தனிக்கு நிலை !!! - அந்த சமயல் காரர் சொன்ன விஷயம் - சாதத்தை மட்டும் சாப்பிடாமல் அதை வேகவைக்கும் ஆவியையும் சேர்த்து வயற்றின் உள்ளே அனுப்பினால் என்ன ஆகும் ?? 

கருங்களில் பெரிய நீர் தொட்டிகள் பல பாத்திரங்கள் இருந்தும் ஏன் உணவு சமைக்க கல்லு டேங்க் ??  - இந்த அமுது பாறைகள் இல்லாத கோவில்கள் தமிழகத்தில் இல்லை - இவைகளின் பயன்பாடுகள் பற்றிய அறிவு தற்சமயம் இல்லை !!! 

விஜயராகவன் கிருஷ்ணன்

Wednesday, September 17, 2025

அரகஜா எளிமையான முறையில் தயாரிக்க



அரகஜா எதற்கு பயன்படும்?




ஒரு குறிப்பிட்ட ஒரு மைய புள்ளியை மையமாக கொண்டு தான் எல்லா சக்திகளும் செயல்படுகிறது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனையோ அல்லது பொருட்களையோ உற்று பார்க்கும் போது அந்த மனிதனின் கண்ணிலிருந்து வெளிப்படும் காந்த சக்திகள் magnetic vibrations அந்த பொருளை தாக்கும். இதுவே கண்தீருஷ்டி என்று சொல்கிறோம்.

உதாரணமாக, ஒருவர் புது வீடு கட்டி வருவார் அவ்வழியே செல்லும் நல்லவர் கெட்டவர் என்று அந்த வீட்டை உற்று பார்த்து சென்று வருவார்கள் அவ்வாறு நல்ல எண்ணங்கள் கொண்டவர் பார்க்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் தீய எண்ணம் கொண்ட வயிதெறிச்சல் கொண்டவன் பார்க்கும் போது அவனின் கொருற எண்ணத்தின் அதிர்வுகள் vibrations அந்த வீட்டை தாக்கும் அல்லது அந்த வீட்டின் உரிமையாளர்களைமோ உடல் நல பாதிப்புகள் உருவாகும். இதுவும் ஒரு எண்ண சக்தியின் வெளிப்பாடே. இதற்காக அந்த காலத்தில் இந்த மாதிரி புது வீடு கட்டுபவர்கள் அந்த வீட்டின் மேல் ஒரு ஆள் உயர வைக்கோல் பொம்மை செய்து வைப்பார். அவ்வாறு அந்த புதியதாக வீட்டை பார்க்கும் போது வீட்டின் மேல் கண் பார்வை செல்லாது மாறாக புதியதாக அந்த வீட்டின் மேல் வைக்கபட்டுள் வித்தியாசமான பொம்மையை நோக்கி தான் செல்லும். அதோபோல் அந்த பொம்மையினை பார்பவர்களின் எண்ணம் அந்த பொம்மையை தீயசக்தி தாக்கும். பிறகு ஒருநாள் அந்த வீட்டின் புதுமனை புகுவிழாவின் முன் நாள் நள்ளிரவில் அந்த பொம்மையை எவரும் பார்க்காத வண்ணம் தீயிட்டு கொளுத்துவார்கள். அந்த தீய சக்திகள் தீயில் கருகும்.

அதேபோல் தான் கோவிலில் உற்சவம் போது சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்துவிட்டு இறுதியில் ஒரு சாமியின் முகத்தில் ஒரு சிறிய கருப்பு நிற பொட்டு கண்ணத்தில் வைப்பார்கள். இதுவும் சாமியின் அலங்காரத்தை கெடாமலும் சாமிக்கு கண்தீருஷ்டி ஏற்படாமல் இருக்கவும் இதை பயன்படுத்துவது மரபு.

இதே போல் திருமண அலங்காரம் போது மணமகன் மணமகள் கன்னத்தில் தீருஷ்டி பொட்டு வைப்பார்கள் இதுவும் ஒருவித தோஷம் குறைப்பே....

எந்தவொரு ஆலயத்தில் ஒரு சக்தி இருக்கும் அந்த இறை சக்தியை நாம் பெற, உள்வாங்க பெண்கள் கண் புருவத்தில் அல்லது ஆண்கள் சுழி மற்றும் நெற்றியில் அரகஜா வைத்து கொண்டு பிரார்த்தனை செய்தால் போதும் உங்கள் வேண்டுதால் விரைவாக நடக்கும். தினமும் நெற்றியில் வைத்து கொள்ளலாம் இதனால் எல்லாவிதமான நன்மைகள் வந்து சேரும்.

ஆகவே ஒருவரின் நல்வாழ்வு மேம்படவும் கண்தீருஷ்டி தோஷம் இல்லாமல் வாழ்வும். இறைவழிபாடுபோது இறை சக்தியை முழுவதும் பெற இந்த அரகஜா உதவும். அரகஜா பயன்படுத்தி பலனடைந்தவர்கள் ஏராளம். அரகஜா அனைவரும் வைப்பது என்பது புதிய முறை இல்லை. இது காலகாலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வரும் முறைதான். நாம்தான் அதை பயன்படுத்த வில்லை. இன்று முதல் தொடர்ந்து 27 நாட்கள் இந்த அரகஜா பயன்படுத்தி வாருங்கள் உங்களுக்கு உண்டாகும் சிறு பிரச்சினை கண்தீருஷ்டி, காரியதடை, வியாபாரம் சரிவு, திருமண தடை, திருமணம் தள்ளிப் போகுதல், அனைத்து கைகூடும்.
         ஆகவே அரகஜா என்பது அருமையான நல்ல பலன் தரும் பொருள். உங்கள் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் தேடி தூய அரகஜா வாங்கி பயன்படுத்துங்கள்.

(எளிமையான முறையில் தயாரிக்க வசம்பு, தர்ப்பை, வெட்டிவேர், பச்சை கற்பூரம், விரல் மஞ்சள், பூனுகு இவற்றை கொஞ்சமாக நெய் தடவி காமாட்சி விளக்கில் எரிந்து கலக்கினால் ரெடி. இது ஒருவகை. இன்னொரு வகை குப்பை மேனி, தொட்டாசுருங்கி போன்ற மூலிகைகளின் வேரை சாபநிவர்த்தி செய்து எடுத்து அதை எரிந்து செய்யும் முறை, இப்படி பல வகை உண்டு.

          - சித்தர்களின் குரல்.