Sunday, September 1, 2019

32 கணபதி வடிவங்களும் – மந்திரங்களும்.



32 கணபதி வடிவங்களும் – மந்திரங்களும்.


1. பால கணபதி

கரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம் பால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்

2. பக்த கணபதி

நாளிகேராம்ர கதலீ குளபாயஸ தாரிணம் ஸரச்சந்த்ராப வபுஷம் பஜே பக்த கணாதிபம்

3. ஸக்தி கணபதி

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே

4. ஸித்தி கணபதி

பக்வ சூத பலகல்ப மஞ்ஜரீ மிக்ஷூ தண்ட திலமோதகைஸ்ஸஹ உத்வஹத் பரஸூஹஸ்த தே நம: ஸ்ரீ ஸம்ருத்தியுத தேவ பிங்கல

5. உச்சிஷ்ட கணபதி

நீலாப்ஜம் தாடிமீ வீணா ஸாலீ குஞ்ஜாக்ஷ ஸூத்ரகம் தததுச்சிஷ்ட நாமாயம் கணேஷ: பாது மோக்ஷத: சதுர்புஜம் ரக்ததநும் த்ரிநேத்ரம் பாஸாங்குசம் மோதகபாத்ர தந்தகம் கரை: ததாநம் ஸரஸீருஹஸ்தம் உந்மத்த-முச்சிஷ்ட கணேசமீடே

6. க்ஷிப்ர கணபதி:

தந்த கல்ப லதாபாஸ ரத்நகும்பாங்க குஸோஜ்வலம் பந்தூக கமநீயாபம் த்யாயேத் க்ஷிப்ரகணாதிபம்

7.விக்ந ராஜ (விஜய) கணபதி

பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந: விக்நம் நிஹந்து நஸ்ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக:

8.ஸ்ருஷ்டி கணபதி

பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந: விக்நம் நிஹந்து நஸ்ஸோண: ஸ்ருஷ்டிதக்ஷோ விநாயக:

9.ருணமோசந கணபதி:

பாஸாங்குஸௌ தந்த ஜம்பூ ததாந ஸ்படிகப்ரப: ரக்தாம்ஸூகோ கணபதிர் முதேஸ்யாத் ருணமோசக: ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஸம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம் ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமாநம் ஸித்தைர்யுதம்தம் ப்ரணமாமி தேவம்

10.டுண்டி கணபதி

அக்ஷமாலாம் குடாரஞ்ச ரத்நபாத்ரம் ஸ்வதந்தகம் தத்தேகரைர் விக்நராஜோ டுண்டிநாம முதேஸ்துந:

11.த்விமுக கணபதி

ஸ்வதந்த பாஸாங்குச ரக்ந பாத்ரம் கரைர் ததாநோ ஹரி நீல காத்ர: ரக்தாம்ஸூகோ ரத்ந கிரீட மாலீ பூத்யை ஸதாமே த்விமுகோ கணேஸ:

12.யோக கணபதி

யோகாரூடோ யோகபட்டாபிராமோ பாலார்காபஸ்சேந்த்ர நீலாம்ஸூகாட்ய பாஸேக்ஷ் வக்ஷாந் யோக தண்டம் ததாநோ பாயாந்நித்யம் யோக விக்நேஸ்வரோந:

13. ஏகதந்த கணபதி

லம்போதரம் ஸ்யாமதநும் கணேஸம் குடாரமக்ஷஸ்ரஜ மூர்த்வகாப்யாம் ஸலட்டுகம் தந்தமத: கராப்யாம் வாமேதராப்யாம் ச ததாநமீடே

14. ஹேரம்ப கணபதி

அபய வரத ஹஸ்த: பாஸ தந்தாக்ஷமாலா ஸ்ருணி பரஸூ ததாநோ முத்கரம் மோதகம் ச பலமதிகத ஸிம்ஹ: பஞ்ச மாதங்க வக்த்ரோ கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப நாமா

15. ந்ருத்த கணபதி

பாஸாங்குஸாபூப குடாரதந்த சஞ்சத்கரா க்ல்ருப்த வராங்குலீயகம் பீதப்ரபம் கல்பதரோரதஸ்தம் பஜாமி ந்ருத்தோப பதம் கணேஸம்

16. ஹரித்ரா கணபதி

ஹரித்ராபம் சதுர்பாஹூம் ஹரித்ரா வதநம் ப்ரபும் பாஸாங்குஸ தரம் தேவம் மோதகம் தந்தமேவச பக்தாபய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாஸநம் பாஸாங்குஸௌ மோதகமேகதந்தம் கரைர் ததாநம் கநகாஸநஸ்தம் ஹாரித்ரகண்ட ப்ரதிமம் த்ரிநேத்ரம் பீதாம்ஸூகம் ஹரித்ரா கணேஸமீடே

17. தருண கணபதி

பாஸாங்குஸாபூப கபித்த ஜம்பூ பலம்திலாந் வேணுமபி ஸ்வஹஸ்தை: த்ருத: ஸதாயஸ் தருணாSருணாப: பாயாத் ஸயுஷ்மாந் தருணோ கணேஸ:

18. வீர கணபதி

வேதாள ஸக்தி ஸரகார்முக சக்ர கட்க கட்வாங்க முத்கர கதாங்குஸ நாகபாஸாந் ஸூலஞ்ச குந்த பரஸூத்வஜ முத்வஹந்தம் வீரம் கணேஸ மருணம் ஸததம் ஸ்மராமி

19. த்வஜ கணபதி

ய: புஸ்தகாக்ஷ குணதண்ட கமண்டலு ஸ்ரீர் நிவ்ருத்யமாந கரபூஷண மிந்துவர்ணம் ஸ்தம்பேரமாநந சதுஷ்டய ஸோபமாநம் த்வாம் ஸம்ஸ்மரே த்வஜகணாதிபதே ஸ தந்ய:

20. விக்ந (புவநேச) கணபதி

ஸங்கேக்ஷூசாப குஸூமேஷூ குடாரபாஸ சக்ராங்குஸை: கலம மஞ்ஜரிகா ககாத்யை: பாணிஸ்திதை: பரிஸமாஹித பூஷண ஸ்ரீ விக்நேஸ்வரோ விஜயதே தபநீய கௌர:

21. ஊர்த்வ கணபதி

கல்ஹார ஸாலி கமலேக்ஷூக சாபபாண தந்தப்ரரோஹககதீ கநகோஜ்வலாங்க: ஆலிங்கநோத்யதகரோ ஹரிதாங்கயஷ்ட்யா தேவ்யாதிஸத்வ மபய மூர்த்வ கணாதிபோமே

22. லக்ஷ்மீ கணபதி

பிப்ராணஸ் ஸூகபீஜபூர கமலம் மாணிக்ய கும்பாங் குஸாந் பாஸங் கல்பலதாஞ்ச கட்க விலஸத் ஜ்யோதிஸ் ஸூதா நிர்ஜர: ஸ்யாமேணாத்த ஸரோருஹேண ஸஹிதோ தேவீத்வயே நாந்திகே கௌராங்கா வரதாந ஹஸ்த கமலோ லக்ஷ்மீ கணேஸோSவதாத் தந்தாபயே சக்ரவரௌ ததாநம் கராக்ரகம் ஸ்வர்ணகடம் த்ரிநேத்ரம் த்ருதாப்ஜ மாலிங்கிதமப்தி புத்ர்யா லக்ஷ்மீ கணேஸம் கநகாபமீடே

23. மஹா கணபதி

ஹஸ்தீந்த்ராநநம் இந்துசூடம் அருணஸ் சாயம் த்ரிநேத்ரம் ரஸாத் ஆஸ்லிஷ்டம் ப்ரியயா ஸ பத்மகரயா ஸ்வாங்கஸ்தயா ஸந்ததம் பீஜாபூர கதேக்ஷூ கார்முக லஸச் சக்ராப்ஜ பாஸோத்பல வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரக்நகலஸாந் ஹஸ்தைர் வஹந்தம் பஜே

24. ஏகாக்ஷர கணபதி

ரக்தோ ரக்தாங்க ராகாம் ஸூக குஸூமயுதஸ்தும் திலஸ் சந்த்ரமௌலி: நேத்ரைர் யுக்தஸ்த்ரிபி: வாமநகர சரணோ பீஜபூரம் ததாந: ஹஸ்தாக்ரா க்ல்ருப்த பாஸாங்குஸ ரதவரதோ நாகவக்த்ரோSஹி பூஷோ தேவ:பத்மாஸநஸ்தோ பவது ஸூககரோ பூதயே விக்நராஜ:

25. வர கணபதி

ஸிந்தூராபம் இபாநநம் த்ரிநயநம் ஹஸ்தே ச பாஸங்குஸௌ பிப்ராணம் மதுமத் கபாலம் அநிஸம் ஸாத்விந்து மௌலிம் பஜே புஷ்ட்யாஸ்லிஷ்டதநும் த்வஜாக்ர கரயா பத்மோல்லஸத்தஸ்தயா தத்யோந்யாஹித பாணிமாத்தவ வஸூமத் பாத்ரோலஸத் புஷ்கரம்

26. த்ரயாக்ஷர கணபதி

கஜேந்த்ரவதநம் ஸாக்ஷாச் சலாகர்ண ஸூசாமரம் ஹேமவர்ணம் சதுர்பாஹூம் பாஸாங்குஸதரம் வரம் ஸ்வதந்தம் தக்ஷிணே ஹஸ்தே ஸவ்யே த்வாம்ரபலம் கதா புஷ்கரே மோதகஞ்சைவ தாரயந்தம் அநுஸ்மரேத்

27. க்ஷிப்ர-ப்ரஸாத கணபதி

த்ருதபாஸாங்குச கல்பலதாஸ் வரதஸ்ச பீஜபூரயுத: ஸஸிஸகல கலிதமௌளி: த்ரிலோசநோருணஸ்ச கஜவதந: பாஸூர பூஷணதீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்டரோல்லஸித: விக்நபயோதரபவந: கரத்ருத கமலஸ்ஸதாஸ்து பூத்யை

28. உத்தண்ட கணபதி

கல்ஹாராம்புஜ பீஜபூரக கதா தந்தேக்ஷூ பாணைஸ்ஸதா பிப்ராணோமணி கும்பஸாலி கலஸோ பாஸஞ்ச சக்ராந்விதம் கௌராங்க்யா ருசிராரவிந்த கரயா தேவ்யாஸ் ஸதாஸம்யுத: ஸோணாங்கஸ் ஸூபமாதநோது பஜதாம் உத்தண்ட விக்நேஸ்வர:

29. த்ரிமுக கணபதி

ஸ்ரீமத்தீக்ஷ்ண ஸிகாங்குஸாக்ஷவரதாம் தக்ஷே ததாந: கரை: பாஸாம்ருத பூர்ணகும்ப-மபயம் வாமே ததாநோ முதா பீடே ஸ்வர்ணமயாரவிந்த விலஸத் ஸத்கர்ணிகா பாஸூரே ஆஸீநஸ்த்ரிமுக: பலாஸருசிரோ நாகாநந: பாதுந:

30. ஸிம்ஹ கணபதி

வீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம் தக்ஷே விதத்தே கரை: வாமே தாமரஸஞ்ச ரத்நகலசம் ஸந்மஞ்ஜரீ சாபயம் ஸூண்டாதண்டலஸந் ம்ருகேந்த்ரவதந: ஸங்கேந்துகௌர: ஸூப: தீவ்யத் ரத்ந நிபாம்ஸூகோ கணபதி: பாயாதபாயாத் ஸந:

31. துர்கா கணபதி

தப்தகாஞ்சந ஸங்காஸஸ்ச அஷ்டஹஸ்தோ மஹத்தநு: தீப்தாங்குஸம் ஸரஞ்சாக்ஷம் தந்தம் தக்ஷேவஹந் கரை: வாமே பாஸம் கார்முகஞ்சலதாம் ஜம்பூத்யதத் கரை: ரக்தாம்ஸூகஸ்ஸதா பூயாத் துர்கா கணபதிர் முதே

32. ஸங்கடஹர கணபதி

பாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே லஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்ந ஸோபாட்யாம் தக்ஷேSங்குஸ வரதாநம் வாமே பாஸஞ்ச பாயஸ பாத்ரம் நீலாம்ஸூகலஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந் ஸங்கடஹரண: பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்

Saturday, August 31, 2019

ஹரிதாளிகா விரதம்

ஹரிதாளிகா விரதம் 

01.09.20195

தொகுப்பு : தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்.

பாத்ரபத மாத சுக்ல பக்ஷ த்ருதியை  அன்று தேவியை பூஜித்து செய்ய வேண்டிய விருதம் இது. 

திருமணம் நடைபெற வேண்டிய கன்னி பெண்கள்  இன்று மாலையில் தனது வீட்டில் வ்ருஷபத்தின் மீது பார்வதியுடன்   அமர்ந்திருக்கும் சிவன் படத்தை வைத்து கெளரீ ஸஹித மஹேஸ்வராய நம: என்று சொல்லி பூஜை அஷ்டோத்ர அர்ச்சனை செய்து பதினாறு தட்டுகளில்  வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழங்கள் தேங்காய் நிவேதனம் செய்து தெரிந்த ஸ்தோத்ரங்கள் சொல்லி ப்ரார்தித்து  ""மயாபி யேந காமேந பூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம் தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸன்னாப வ பார்வதி"" (ஸ்மிருதி கெளஸ்துபம்—208)

என்னும் ஸ்லோகம் சொல்லி ப்ரார்திக்கவும்.பிறகு இந்த 16 தட்டுகளையும் எட்டு தம்பதிகளுக்கு கொடுத்து நமஸ்கரித்து ஆசி பெறவும்..இவ்வாறு செய்வதால் பெண்கள் சாஸ்திர ஸம்மத முறையில் தாங்கள் விரும்பும் நபருடன் திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ முடியும் என்கிறது சாஸ்திரம்..

ஹிமவான் தன் பெண்ணான பார்வதியை சிவனல்லாத ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுக்க தீர்மானித்தார். . பார்வதியின் தோழிகள் பார்வதியை வேறு ஒரு நதி கரைக்கு அழைத்து சென்று இந்த விரதம் செய்ய சொன்னார்கள். . இதன் பயனாக பரமசிவன் நேரில் வந்து ஹிமவானின் ஸம்மதத்துடன்  பார்வதியை ஏற்று கொண்டதாகவும் பவிஷ்யோத்திர புராணம் கூறுகிறது. .

 ஆகவே தான் "ஆலிபி; ஹாரிதா யஸ்மாத் தஸ்மாத் ஸா ஹரி தாளிகா " என்பதாக ஆலி எனப்படும் தோழிகளால் அபகரித்து செல்லப் பட்டதால் இந்த விருதத்திற்கு ஹரிதாளிகா விருதம் எனப்பெயர் ஏற்பட்டது.

பலன்கள் :  நோய்கள் தீரும். ஆரோக்கியம் ஏற்படும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாயிருப்பர். உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

கெளரீ வ்ரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்து அருளை பெறுவது;-. கெளரீ என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று அர்த்தம்.. ஆகவே தான் சுக்ல பக்ஷத்தில் (வெளுத்த பக்ஷத்தில்) அம்பாள் பூஜிக்கபடுகிறாள்.

ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷத்தில் (வளர் பிறையில்) இந்த கெளரீ விரதம் வருகிறது. அனைத்து கெளரீ பூஜைகளிலும் நியமங்கள் பூஜைகள், ஒரே மாதிரி தான் என்றாலும்

ஒவ்வொரு மாதமும் அந்தந்த பெயருக்கேற்ப சில மாறுதல்களும் உண்டு. எல்லா கெளரி வ்ருத பூஜைகளிலும் சிவனும் அம்மனும் சேர்த்து பூஜை செய்யவும்.

குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மரத்தடியில் இந்த பூஜை செய்ய பட வேண்டும் அந்தந்த மரத்தின் ஒரு குச்சியை உங்கள் வீட்டில் பூஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டியதுதான்.

அம்மரத்தின் இலைகளை பறித்து வந்து பூஜை மண்டபம் அலங்கரிக்கலாம், அல்லது அந்த இலைகள் மீது அம்மனை வைத்து பூஜிக்கலாம்.

அம்மனுக்கு எதிர் திசையில் உட்கார்ந்துகொண்டு கெளரீ பூஜை செய்து விட்டு அருகிலுள்ள சிவன் கோயில் சென்று சிவனையும், அம்பாளையும்
தரிசனம் செய்து விட்டு பூஜையில் நிவேதனம் செய்ததை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தனது குடும்பத்துடன் பக்தியுடன் சாப்பிட வேண்டும்
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படவும் அன்பு, பாசம் ஏற்படவும். பார்வதியை பூஜிக்க வேண்டும் என்கிறார், ஶ்ரீ சுகாச்சார்யார் ஶ்ரீ மத் பாகவத புராணத்தில். 

ஸம்வத்ஸர கெளரீ வ்ரதம்:-சைத்ர மாத சுக்ல பக்ஷ ப்ரதமை திதி
இன்று இந்த பூஜை செய்வதால் குடும்பத்தில் திருமணம் , கிருஹப்ரவேசம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் அந்த வருடம் பூராவும் நடக்கும்.

ஸெளபாக்கிய கெளரீ வ்ரதம்:-சைத்ர மாத சுக்ல பக்ஷ த்ருதீயை திதி ; இதை செய்வதனால் படிப்புக்குகந்த வேலை கிடைக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிட்டும். பலவகையிலும் அதிருஷ்டம் கிடைக்கும். 

சித்ரா பெளர்ணமி, ஸம்பத் கெளரி வ்ரதம்.

வைசாக மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி. வார்த்தா கெளரி வ்ரதம். 
இதை செய்வதால் தகுந்த நபரிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வந்து சேரும்.

புன்னாக கெளரீ வ்ரதம்: .ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ த்விதியை திதி. புன்னை மரத்தடியில் அல்லது புன்னை மரத்து இலைகள், பூக்கள் மீது அம்பாளை வைத்து பூஜை செய்யவும்
.புன்னை இலைகளால் புன்னை பூக்களால் அர்ச்சனை செய்யவும். இதனால் மனதிலுள்ள ஆசாபாசங்கள் நீங்கி மனம் அமைதியாக இருக்கும்.

கதளீ கெளரீ வ்ரதம். ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி
வாழை மரத்தடியில்/ வாழை இலை மீது அம்மனை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

பூஜையில் 108 வாழை பழங்கள் நிவேத்யம் செய்து அதை எட்டு வயதுள்ள சிறுமிகளுக்கு தர வேண்டும். இதனால் ஜாதகத்தில் சுக்ர கிரஹத்தால் ஏற்பட்டுள்ள களத்ர தோஷம் நீங்கி திருமணம் , குழந்தை செல்வம் போன்ற நன்மைகள் கிட்டும்.

சமீ கெளரி வ்ரதம்:-ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி திதி: வன்னி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். அல்லது வன்னி மரத்து கிளைகளை கொண்டுவந்து அதன் நடுவில் அம்மனை வைத்து கெளரி பூஜை செய்யவும்

.வன்னி மர இலைகளால் அஷ்டோத்ரம் சொல்லி அர்ச்சனை செய்யவும். கல்வியில் நாட்டம், தேர்வில் வெற்றி, நல்ல அறிவாற்றல், கூர்மையான புத்தி ஞாபக சக்தி கிட்டும். 
.:-
ஸ்வர்ண கெளரீ வ்ரதம்:-ஷ்ராவண மாத சுக்ல பக்ஷ த்ருதியை திதி 
தங்க நகைகளில் அம்மனை ஆவாஹணம் செய்து தங்க நகைகளால் விசேஷ அலங்காரம் செய்து பூஜை செய்யவும்.
இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் சக்தி வசதி, அதிர்ஷ்டம் கிடைக்கும். தங்க ஆபரணங்கள் போட்டுகொள்ளும் யோகமும் கிட்டும்.

ஹரிதாளிகா கெளரி வ்ரதம்.(). ஹரிதாளம் என்பது ஒரு வாஸனை பொருள். இதை தமிழில் அரிதாரம் என்பார்கள். நிறைய வாஸனை பொருட்களால் அம்மனை அலங்கரித்து , பூஜை செய்பவரும் வாஸனை த்ரவ்யங்களை

பூசிக்கொண்டு வாஸனையுள்ள மலர்கள் இருக்கும் செடிக்கடியில் அம்மனை வைத்து பூஜிக்க வேண்டும். இதனால் பல நன்மைகள் கிடைக்கிறது. நாம் எதிர்பாராமல் நமக்கு நேரும் அனைத்து விபத்துகளிலிருந்தும் அம்மன் அருளால் விடுபட்டு விடலாம். 

அனந்த கெளரீ வ்ரதம்:-பாத்ரபத மாத சுக்ல பக்ஷ சதுர்தசி திதி:- 
பாம்புகளின் தலைவர்களில் ஒருவனுக்கு அனந்தன் என்று பெயர். பாம்பு புற்று அருகில் அல்லது பாம்பு விக்கிரஹம் அல்லது பாம்பு படம்அருகில் அம்மனை வைத்து பூஜை செய்யலாம்.
இதனால் முடிவற்ற குறைவற்ற செல்வம் நிம்மதியும் கிட்டும். ராஹு கேதுக்களால் ஏற்படும் ஸர்ப்ப தோஷம் விலகும்.

பாத்ரபத மாத க்ருஷ்ண பக்ஷ அமாவாசை திதி. மாஷா கெளரி வ்ரதம்.. மாஷம் என்றால் உளுந்து. . உளுத்தம் பருப்பு உபயோகித்து செய்யும் எல்லா பொருட்களும் நிவேத்யம் செய்யலாம்.. இதனால் பித்ரு சாபம் பித்ரு தோஷங்கள் நீங்கும்.வம்ச வ்ருத்தியாகும்.

பாத்ரபத மாத க்ருஷ்ண பக்ஷ த்ருதியை திதி. ப்ரஹதி கெளரி வ்ரதம். ப்ருஹதி என்றால் கண்டங்கத்ரிக்காய். இந்த செடிகள் இருக்கும் இடத்தில் பூஜை செய்யலாம். 
அல்லது கண்டங்கத்ரிக்காய் அம்மனுக்கு அருகில் வைத்து பூஜிக்கவும். கத்திரிக்காய் சாதம் நிவேத்யம் செய்யவும்..இதனால் நாம் விரும்பும் அளவை விட மிக பெரிய அளவில் நாம் எதிர் பாராத நேரத்தில் நன்மைகள் வருகிறது.

ஆஸ்வயுஜ மாத சுக்ல பக்ஷ தஸமி திதி;.தசரத லலித கெளரி வ்ரதம். லலிதா என்றால் அழகானவள் என அர்த்தம். தேர் போல் கோலம் போட்டு

அதன் மேல் அம்மனை வைத்து பூஜிக்க வேண்டும்.இதனால் கார், ஸ்கூட்டர், சைக்கில் போன்ற வாஹனங்கள் கிடைக்கும். வாஹன பிரயாணமும் ஆபத்து இல்லாமல் அமையும்.

ஆஸ்வயுஜ மாத க்ருஷ்ண பக்ஷ த்விதீயை திதி சந்திரோதய கெளரி வ்ரதம்:-சந்திரன் உதயமான பிறகு சந்திரன் கிரணங்கள் விழும் இடத்தில்அம்மனை பூஜிக்கவும்.
இதனால் மனதிலுள்ள குழப்பங்கள் நீங்கும். மன நிலை பாதிக்கபட்டவற்கு ஆரோக்யம் கிட்டும். விரைவில் தீர்மானம் எடுக்கமுடியும்.

ஆஸ்வயுஜ க்ரிஷ்ண பக்ஷ அமாவாசை திதி.(தீபாவளி).. கேதார கெளரி வ்ரதம். கேதாரம் என்றால் விவசாயம் செய்யும் வயல் என்று அர்த்தம்.வயலின் நடுவில்
அல்லது அப்போது விளைந்த பயிர்களின் நடுவில் அம்மனை வைத்து பூஜிக்கவும். இதனால் விவசாயம் நன்கு செழிக்கும். ஸத்தான உணவு தான்யங்கள் குறைவின்றி கிடைக்கும்.

கார்திக சுக்ல பக்ஷ த்ருதியை –த்ரீலோசன ஜீரக கெளரி வ்ரதம். அம்மனுக்கும் மூன்று கண்கள் உண்டு. அம்மனை மூன்று கண்களுடன் 
படம் வரைந்து அல்லது கோலம் போட்டு பூஜிக்க வேண்டும். ஜீரக பொடி சாதம் நிவேத்யம். ஜீரகம் கரைக்கப்பட்ட வெந்நீர் நிவேத்யம். இதனால் நீண்ட பார்வை கிட்டும். கண்கள் நோய் அகலும்.

கார்த்திக மாத சுக்ல பக்ஷ பெளர்ணமி திதி கார்தீக கெளரீ வ்ருதம்; 
முருகனுடன் சேர்த்து அம்மனை பூஜிக்கவும். முருகனுக்கு தேனும், தினை மாவும் நிவேத்யம். இதனால் சொந்த வீடும் பூமியும் கிடைக்கிறது. நிலம், வீடு ஸம்பந்தமான ப்ரச்னைகள் தீரும். ரத்த ஸம்பந்தமான நோய்கள் தீரும்.

மார்கசீர்ஷ சுக்ல பக்ஷ துவிதீயை. திந்திரிணீ கெளரி வ்ருதம்.
திந்திரிணீ என்றால் புளி. புளிய மரத்தினடியில் பூஜை செய்யலாம்.புளிப்பு பொருட்கள், புளியஞ்சாதம் நிவேத்யம். இதனால் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கிடைக்கிறது.

மார்கசீர்ஷ சுக்ல பக்ஷ சதுர்தி திதி;- பத.ரீ கெளரி வ்ருதம். இலந்தை மரத்தினடியில் அம்மனை பூஜிக்கவும்..இலந்தை பழம் நிறய நிவேத்யம் செய்து தானும் உண்டு பிறருக்கும் கொடுக்கவும். 
இதனால் சிறந்த ஞானம் கிட்டும்.வாழ்க்கை இறுதியில் ஆத்ம தரிசனம் கிட்டும். உபநிஷத் கருத்துக்கள் நன்கு புலப்படும்.

புஷ்ய மாத க்ருஷ்ண பக்ஷ தசமி திதி. த்ரைலோக்ய கெளரி வ்ருதம். 
த்ரைலோக்ய கெளரி வ்ருதம். மூன்று உலகங்களுக்கு அரசியாக அம்மனை பாவித்து வழி பட வேண்டும்.இத்னால் நாம் விரும்பும் உயர் பதவி கிடைக்கும்.உயர்ந்த அரசு வேலை கிடைக்கிறது.

Friday, August 30, 2019

Historic letter from Ramana Maharishi went he left home to Arunachala

Historic letter from Ramana Maharishi went he left home to Arunachala : (the image is his original handwritten letter)
No photo description available.

நான் என்னுடைய தகப்பனாரைத் தேடிக் கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டேன். இது நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது.

ஆகையால் இதற்காக யாரொருவரும் விசனப்பட வேண்டாம். இதைப் பார்ப்பதற்காக பணமும் செலவு செய்ய வேண்டாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ. 2 இதோடு கூட இருக்கிறது.
இப்படிக்கு
..............
It's a cosmic cycle : exactly 120 years ago on this same date 29-08-1896 Ramana's journey begun.
Arunachala Arunachala! !!

Thursday, August 29, 2019

ஜீவ ஸமாதி

Thank to: https://suganesh80.blogspot.com/

ஜீவ சமாதி

நண்பர் ஒருவர் நேற்று என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ? என்று கேட்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு.
நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.

சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.

அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.
உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா ? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.
ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர். திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு. அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் வாதிடுவோர் உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.
இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.

இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ? அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.

சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும். மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார். வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.
நண்பர் ஒருவர் நேற்று என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ? என்று கேட்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு.
நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.
சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.
உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா ? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.
ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர். திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு. அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் வாதிடுவோர் உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.
இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ? அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.
சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும். மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார். வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.

Friday, August 23, 2019

எங்கே ஒரிஜினல் திருநீறு கிடைக்கும் ?


எங்கே ஒரிஜினல் திருநீறு கிடைக்கும் ?

திருவீழி மழலை கோசாலை , விழுப்புரம் கோசாலை , மதுராந்தகம் கோசாலை போன்ற பல்வேறு கோசாலைகளில் மற்றும் நிறைய இடங்களில் வேத முறைப்படி தயாரித்த பசுஞ்சாண திருநீறு கிடைகின்றன.
மேலும் , விலாசங்கள் சேகரித்த வகையில் கீழ்கண்ட இடங்களில் தொடர்பு கொண்டு சுத்தமான திருநீறு நீங்கள் பெறலாம் ! 
●▬▬▬▬▬▬●
1 ) களக்காடு - திருநெல்வேலி - Sri Shivalinga Vibhuthi, Surandai, Kalakkadu, Thirunelveli District. Contact Sri K. Muthukrishnar, Mob : 093610 10678.
●▬▬▬▬▬▬●
2 ) கூடலூர் - காஞ்சிபுரம் - Govindan Goshala, Gudalur Village, near Madurantakam, Kanchipuram district. Run by Sree Krishna Charitable Trust. www.goseva.net - Contact Sri T Radhakrishnan, Mob: 98400 41151
●▬▬▬▬▬▬●
3 ) திருவீழிமிழலை - திருவாரூர் - Go Rakshana Samiti, Thiruveezhimizhalai village, Kudavasal Taluk, Tiruvarur districtwww.gorakshana.org - Contact: Sri Guruprasad: Mob :94444 11772
●▬▬▬▬▬▬●
4 ) பாண்டிச்சேரி - Sri Viswanathaswami Devasthanam (affiliated to Sri Kanchi Kamkoti Peetam Sankara Matam) Vanjiyur Village, T.R Pattinam Commune, Karaikal District, Pondicherry. Mob : 04368 224822
●▬▬▬▬▬▬●
5 ) பனம்பட்டு - விழுப்புரம் - Sri Kanchi Kamakoti Peetadhipathi Sri Chandrasekharendra Saraswathi Swamigal Memorial Goshala Panambattu Village, Near Villupuram. Contact: Sri Sundaresan Mob :90037 70645
●▬▬▬▬▬▬●
6 ) ஊர்குடி - திருவண்ணாமலை - Sree Goshala - Oorkudi village between Vandavasi and Thiruvannamalai. Contact: Sri Rajendran Mob :+91 99623 55712
●▬▬▬▬▬▬●
7 ) கருப்பூர் - கும்பகோணம் - Thirucherai Goshala - Karuppur - Near Nachiyar Koil, Kumbakonam. Contact: Sri Sampath Mob :+91 76390 72602 
●▬▬▬▬▬▬●
8 ) நெட்ட வேலாம்பாளையம் - திருச்செங்கோடு - Subhashree Gousala, Nettavelampayalam, Anangur Post, Tiruchengode Taluk. Contact: Sri Sankar Mob :+91 98433 38299
●▬▬▬▬▬▬●
9 )திண்டுக்கல் - Sri Vaitheeswaran, Dindigul. Contact Mob :+91 90252 51072, https://thirumoolarvibuthi.blogspot.com/
●▬▬▬▬▬▬●
10 ) அச்சரப்பாக்கம் - காஞ்சிபுரம் - Sri Bala Veda Patasala, Acharapakkam, Kanchipuram district. https://balavedapatasala.hpage.in/ - Sri R Balakrishnan Mob :+91 98409 12762
●▬▬▬▬▬▬●
11 )ஆத்தூர் - காஞ்சிபுரம் - Chaturveda Vidya Ganapathi Vedashram Veda Patasala, Athur Village, Kanchipuram district.https://athurvedapatasala.hpage.in/ . Sri R Kamakoti: Mob :+91 9884 402624
●▬▬▬▬▬▬●
12 ) அசோக் நகர் சென்னை - Shree Krishna Charitable Trust ,New no 14(old no 11),16th Avenue,Ashok Nagar,Chennai 600083.. Ph:044 24899926.-
Their GOSHALA at 68,Goodalur Village, Madurantakam Taluk, Kancheepuram dist, Contact person:Mr. T.Radhakrishnan B.Com, ACA. Mob :098400 41151., Email:rk@goseva.net
●▬▬▬▬▬▬●

✿ கீழே படத்தில் அச்சரப்பாக்கம் காஞ்சிபுரம் ஸ்ரீ பால வேத பாட சாலையில் விபூதி குண்டத்துக்கு பூஜை செய்யும் காட்சிகள் ✿
.. 
நன்றி சைவம் org


My other link :

சித்தர்கள் திருநீறு [ விபூதி ] தயாரிக்கும் முறை https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_37.html


துளசி, வேப்பிலை, மஞ்ஜள்


Thank: https://aanmikam.blogspot.com/2011/01/blog-post_6844.html

மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம், துளசி வேப்பிலை, மஞ்ஜள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான். ஆகவே நாம் அவைகளைக் கையில் வைத்துக் கொண்டு மனமார ப்ரார்த்தனை செய்து அவகளை வணங்கிவிட்டு உபயோகித்தால் எப்படிப்பட்ட வியாதியும், த்ருஷ்டிகளும் விலகும் என்பது நான் கண்கூடாகக் கண்டவன். நான் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.


மானசா என்கிற ஜரத்காரு தேவி என்கிற சக்தியின் ஸ்லோகம் ஒன்று இருக்கிறது:

" ஓம் ஐம் ஹரீம் ஸ்ரீரீம் க்லீம் ஜம் மனஸா தேவ்யை நமஹ: "


கையில் கொஞ்ஜம் திரு நீரு வைத்துக் கொண்டு இந்த ஸ்லோகத்தை மானசீகமாக, ஜரத் காரு தேவியைப் ப்ரார்த்தித்து 108 தடவைகள் உச்சரித்து பயத்தால், அல்லது த்ருஷ்டியால் அழும் குழந்தைகளுக்கு நெற்றியில் இந்த திருநீற்றினை இட்டுப் பாருங்கள், உடனே பலன் கிடைக்கும். குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு விளையாடத் துவங்கும். இது என் அனுபவ பூர்வமான உண்மை.



மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம், துளசி வேப்பிலை, மஞ்ஜள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான்.

துளசி, வேப்பிலை, மஞ்ஜள்

அமைதி, சாந்தம், ஆழ்நிலை உட்ப்ரயானம், இவை அத்தனைக்கும் முந்தைய படிதான் ஒலி, சப்தம், மொழி, எல்லாமே. ஒவ்வொரு மனிதனும் பிறப்பதிலிருந்து பயபக்தி, இறை கானங்கள், உச்சாடனங்கள் இவைகள் போதிக்கப்பட்டு வளர்க்கப் படுகிறான். இறைவனை நம்புவோர்கள் மட்டுமே இதை நம்புவார்கள், ஆனால் இவை எல்லாமே ஒவ்வொரு படிக்கட்டுக்கள், ஒவ்வொன்றாகத் தாண்ட வேண்டும். அமைதியாக, சாந்தமாக, ஆழ்நிலை உட்ப்ரயாணம் செய்ய, மந்திர உச்சாடனத்துக்கு நிச்சயமாகப் பலன் இருக்கிறது. அதன் ஒலி அதிர்வுகள் ஏற்படுத்தும் ஒன்று கூடிய மஹாசக்தி, எப்படிப்பட்ட நல்ல விளைவுகளையும் மிக எளிதாக ஏற்படுத்தும். நம்முடைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அத்தனை விஞ்ஞான முன்னேற்றமும் கண்டு பிடிக்கப் பட்டவையே, உருவாக்கப் பட்டவை அல்ல. ஆக, ஏற்கெனெவே இந்தப் ப்ரபஞ்ஜத்தில் இருப்பதை விக்ஞானிகள் அல்லது மெய்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள் அவ்வளவே.
ஒவ்வொரு விஞ்ஞானி ஒவ்வொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும் போதும் அவர்களுடைய அறிய செயல் திறன் அதிர்வுகளும் ப்ரபஞ்ஜத்தின் இயற்கையான அதிர்வுகளும் அல்லது அலை வரிசைகளும் ஒரு இணையாக சந்திக்கும் போது நிகழ்வதுதான் கண்டுபிடிப்புகள். அல்லது மெய்ஞானிகள் தங்களுடைய ஆசார அனுஷ்டான வழிமுறைகளால் தம்மை உணர்ந்து உள்ளுக்குள்ளே இருக்கும் ஆன்ம சக்தியை அடைந்து அந்த ஆத்ம சக்தியின் மூலமாக ப்ரபஞ்ஜத்தின் உன்னதமான சக்தியின் அலைவரிசையைத் தொட்ர்பு கொண்டு தம்முடைய ஆத்ம சக்தியை அந்த அலைவரிசையோடு ஒத்துப் போகச் செய்து அதன் மூலமாக தாம் உணர்ந்த அற்புதங்களைக் கண்டு பிடிப்பாக மக்களுக்குச் சொல்லி அவர்களை உய்யச்செய்வது இவை தான், மந்திர அல்லது தந்திர அல்லது விக்ஞான அல்லது மெய்ஞான வழிகள். ப்ரசாதம்
இறைவனை நம்புகிறவர்கள் மட்டுமே ப்ரசாதம் என்னும் சொல்லையே நம்புவர். ப்ரசாதம் என்பது நாம் அதாவது மானிடர்களாகிய நாம் நம்மைப் படைக்கும் முன்னரே நாம் உயிர் வாழ்வதற்காக, பிணியில்லாமல் இருப்பதற்காக, அப்படியும் மீறிப் பிணிகள் வந்தால் அவற்றைப் போக்கிக் கொள்வதற்காக அனைத்து வழிகளையும் படைத்த இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்தான், அதிலும் குறிப்பாக ப்ரசாதம் என்கிற வார்த்தையை நம்புகிறவர்களிடம் நான் நகைச்சுவையாக ஒரு கேள்வி கேட்பதுண்டு, "ப்ரசாதமாகப் படைக்கும் உணவை நீங்கள் எந்த தெய்வத்துக்குப் படைக்கிறிர்களோ அந்த தெய்வம் உண்மையிலேயே உண்டு மிகுதியை உங்களுக்குப் ப்ரசாதமாகத் தருகிறது என்று நம்புகிறீர்களா?" என்று.

ஆமாம் நம்புகிறோம் என்று பதில் சொன்னவர்களிடம் நகைச்சுவையாக மீண்டும், "அப்படியானல் சரி, நீங்கள் படைக்கும் உணவுப் பொருட்களை உண்மையிலேயே இறைவன் உண்பதானால் நீங்கள் அளித்த உணவின் அளவு கொஞ்ஜமாவது குறைந்திருக்க வேண்டுமே" என்று. அதற்க்கு இதுவரை பதிலளித்தவர்கள் இல்லை. நட்ட கல்லும் தெய்வமே, நம்முள் நாதன் இருந்தால். நம்பிக்கைதான் வாழ்க்கை. மேலும் நாம் அளிக்கும் எதுவாக இருந்தாலும் சரி, நம்மைப் படைத்த இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக நாமே ஏற்படுத்திக் கொண்ட விஷயங்கள்தான் ப்ரசாதம் படைப்பது என்பது. உண்மையிலேயே நாம் படைப்பதை இறைவன் ஏற்றுக் கொண்டு இறைவன் அதை உண்ண ஆரம்பித்து விட்டால் நாம் அடுத்த முறை படைப்போமா என்பது சந்தேகமே. ப்ரசாதம் என்பதன் தாத்பரியமே நாம் செலுத்தும் நன்றிக் கடன், மேலும் நம் நம்பிக்கை சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குப் படைத்துவிட்டு நாம் சாப்பிட்டால் அந்த உணவு வகைகளில் ஏதேனும் தோஷங்கள், அல்லது மருத்துவ நிபுணர்கள் கூறுவது போல ஏதேனும் ஒவ்வாமையான விஷயங்கள் இருக்குமானால் அவைகளை இறைவன் நீக்கிவிடுவான் என்னும் நம்பிக்கை இவ்வவளவே.

மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம், துளசி, வேப்பிலை, மஞ்ஜள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான். அதே இறைவன் இவை எல்லாவற்றையும் உபயோகித்துப் பலன் அடையும் சக்தியையும் நமக்களித்திருக்கிறான். ஆகவே நம்பிக்கை உள்ளவர்கள், அல்லது இறைவன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் யார் உபயோகித்தாலும் இவை நிச்சயமாகப் பலன் தரும் வண்ணம் அருள் செய்திருக்கிறான் கருணை மனம் கொண்ட இறைவன்.
திரு நீறு + திருநாமம்
திரு நீறு என்பதே பசுமாட்டின் சாணம்; அதைக் காய வைத்து, அதை நெருப்பிலிட்டு, அதன் மூலமாக வரும் சாம்பல். பசுமாட்டின் சாணம் ஒரு கிருமி நாசினி என்று விக்ஞான பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம். அதனால்தான் நம் முன்னோர்கள் சுகாதாரம் கருதிப் பசுமாட்டின் சாணத்தைத் தண்ணீரிலே கலந்து, தாங்கள் வாழும் பகுதிகளில் தெளித்து, நோய்க் கிருமிகளிடமிருந்து ஓரளவு தப்பித்து வாழ்ந்தனர். நம்முடைய மூத்தோர்களால் மெய்ஞ்ஞானம் என்று சொல்லப் பட்ட அனைத்துமே விக்ஞானம்தான். அக்காலத்தில் மக்களுக்கு விக்ஞானம் என்றால் புரியாது அதனால் மெய்ஞானம் என்று சொல்லி வைத்தனர்.  இயற்கையாகவே கிருமி நாசினியாகச் செயல் படும் விபூதி, திருநீறு இவைகளை நாம் கையில் வைத்துக் கொண்டு மந்திர உருவேற்றினால் இன்னும் கூடுதலாக சக்தி பெற்று, நம்மைப் பல நோய்களிலிருந்து காப்பாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல் வைணவர்கள் தரிக்கும் நாமம் என்று சொல்லப்படும் வெள்ளைக் கட்டி, அதைக் குழைத்து நெற்றியிலே இட்டுக் கொள்ளும் போது நாமக்கட்டி என்று சொல்லப் படுகின்ற அதில் சுண்ணாம்பும் கலந்திருக்கின்ற காரணத்தால் நாமமும், அதன் நடுவிலே இட்டுக் கொள்ளும் ஸ்ரீ சூர்ணம் என்னும் சிவப்புக் கோடு, மஞ்ஜள் என்னும் கிருமி நாசினியை உபயோகித்து உருவாக்கப் பட்டிருப்பதால், நாம் நம் நெற்றியில் இவைகளைத் தரிக்கும் போது நெற்றியின் நடுப் பகுதியான முக்கியமான சைனஸ் என்னும் நரம்புகளில் அனாவசியமாகச் சேரும் தண்ணீர் ந்மக்கு ஏற்படுத்தும் தலைவலி, கழுத்து வலி போன்ற நோய்களைத் தடுக்கும் கிருமி நாசினியாகச் செயல் படுவதால் நம் முன்னோர்கள் முன்னரே அறிந்து தீர்கதரிசனத்துடன் கண்டு பிடித்து வைத்திருக்கும் இவைகளை இறைவன் ப்ரசாதமாக நாம் நினைத்து அணிவதனால், செயற்கையாகத் தயாரிக்கும் மாத்திரைகளை உபயோகிக்கும் நிலை நிச்சயமாகக் குறையும்.
வில்வம்
அரசமரம், வில்வ மரம் இவைகள் வெளியிடும் காற்று இயல்பாகவே மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்க வல்லது என்று விக்ஞானிகளே ஒத்துக் கொண்டுள்ளனர். புற்று நோய் என்னும் கொடிய நோய் வில்வ இலைகளை தினமும் சேர்த்துக் கொண்டால் தீர்ந்துவிடும் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்வர். சூட்டுக்குச் சூடு தான் நல்வினை பயக்கும் மருந்து, ஆகவே நம் உடல் சூடு அதிகமாகும்போது வில்வ இலையின் சூடு நம் உடலில் சேரும்போது இயல்பாகவே நாம் சமனப் பட்டு நோய் தீரும். அதை இறைவனுக்கு அவன் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு ப்ரசாதமாக சேர்த்துக் கொண்டால் அவன் அருளும் சேர்ந்து நாம் பூரண குணமடைவோம் எனபதில் என்ன சந்தேகம்?
அரச மரத்தின் காற்று பெண்களின் கர்பஸ்தானத்தில் இருக்கும் பல ஒவ்வாமைகளைச் சரி செய்து அவர்களுக்கு மகப் பேறு அளிக்க வல்லது. அதனால்தான் பெரியவர்கள் மகப் பேறு கிட்டாதவர்களை அரச மரத்தை ப்ரதட்ஷனமாக வரச் செய்வர். அவர்கள் ப்ரதட்ஷணமாக வரும்போது அந்த அரச மரக் காற்றில் இருக்கும் நல்ல விளைவுகள் ஏற்படுத்தக் கூடிய வாசம் அப் பெண்களுக்குக் குறைகளைக் களைந்து புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும் என்று சொல்லுகிறார்கள்.
துளசி, வேப்பிலை, மஞ்ஜள்
சைவ ஆலயங்களில் திருநீறு, மற்றும் வில்வ இலைகள் அவைகளை ப்ரசாதமாக கொடுக்கும் வழக்கமும், வைணவ ஆலயங்களில் துளசி கலந்த தீர்த்தமும், மஞ்ஜள் கலந்த குங்குமமும் ப்ரசாதமாக அளிக்கும் வழக்கமும் மிகவும் யோசித்துப் பெரியோர்களால் ஏற்படுத்தப் பட்டது. முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடுஎன்கிற கண்ணதாசனின் கவிதை வரிகள் நமக்கு வலுவூட்டுகிறது. சைவம், வைணவம் அதன் பின்னே சாக்தம் என்று சொல்லக்கூடிய சக்தி வழிபாட்டுக் காரர்கள், வேப்பிலையில் மஞ்ஜளைப் பூசி அதை அம்மனாகிய சக்திக்கு அணிவித்து, அதையே ப்ரசாதமாக வாங்கித் தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் வேப்ப மரத்தை நட்டு வளர்ப்பார்கள். நல்ல வெய்யில் காலத்தில் வேப்ப மரத்தடியின் கீழ் அமர்ந்து பாருங்கள் எவ்வவளவு குளிர்ச்சியாய் இருக்கிறதென்று. மஞ்ஜளும் வேப்பிலையும் குளிர்ச்சி. ஆகவேதான் வேனல் காலங்களில் வரும் கட்டிகள் அம்மை போன்ற நோய்கள் தீர வேப்பிலையையும் மஞ்ஜளையும் அரைத்துத் தடவுகின்றனர். வேப்பிலையும் மஞ்ஜளும் கருணையோடு நம்மைக் காக்கும் உலக மாதாவான அன்னையின் அருளும் அதில் சேரும்போது நோய்கள் தீரும் என்பதில் என்ன சந்தேகம்?
சிவன்
சிவன் அபிஷேகப் பிரியன். ஏனென்றால் ஒரு கையில் அக்னி, உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பல் என்று நம்முடைய பாபங்களைத் தீர்க்க, பெற்ற தாய் போல அவன் தாங்கிக் கொண்டிருக்கிறான் அத்தனை வெப்பத்தையும். அந்த வெப்பம் தணிய அவன் அபிஷேகப் பிரியனாயும் வில்வ இலை தரித்தும் பசுஞ்சாணத்தல் செய்யப்பட்ட திருநீறையும், குளிர்ச்சியான சந்திரனையும், கங்கையையும் தலையிலே அணிந்து கொண்டு பனிமலையிலே, அதாவது கையிலாயத்திலே வாசம் செய்கிறான்.
சக்தி
அது மஹா விஷ்ணுவாக இருக்கட்டும், ஈசன் சிவனாக இருக்கட்டும், அனைவருக்கும் சக்தியாய் ஒளிர்பவள் சக்தி அதனால்தான் சக்தியானவள் அனைவருக்கும் அருள்பாலிக்கும் படியாக மந்திர ஒலிகளுக்கும், இறைவன் ப்ரசாதமான திருநீறு, வில்வம், துளசி வேப்பிலை, மஞ்ஜள், இவைகள் அனைத்துக்கும் இறைவனே சக்தி கொடுத்திருக்கிறான் என்று சொல்லக் கூடிய இறைவனுக்கே சக்தி கொடுப்பவள் அன்னை. ஆதலால் தான் அவள் திருநீறு, வில்வம், துளசி வேப்பிலை, மஞ்ஜள், குங்குமம் இவைகள் அனைத்துக்கும் சக்தி கொடுப்பவளாக அத்தனையையும் தான் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு ப்ரசாதமாக அளித்துக் காக்கிறாள்.

சும்மா 2 -- எஸ்.ஜெயபாரதி

சும்மா #2

வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

 

    இந்த "சும்மா" என்ற சொல்லில் அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது?

    ஒரு பொ¢ய விசேஷம் உண்டு.

    உண்மையிலேயே அதனுடைய அர்த்தம் சொல்லிலோ அல்லது வாக்கியத்திலோ அடங்கிவிடமாட்டாது.

    இதை விளக்க வேண்டுமானால் உள்ளத்தின் அமைப்பையும், எண்ணங்களின் பிறப்பையும் சிறிதாவது உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.

    முதலில் உள்ளத்தின் அமைப்பை நோக்குவோம்.

    பண்டைய இந்திய வல்லுனர்கள், உள்ளத்தில் நான்கு கூறுகள் இருப்பதாகக் கண்டனர். மனசு, சித்தம், புத்தி, அஹம்காரம் எனபவையே அவை.

மனசு:
"மனசு" - புலன்களின் வாயிலாக வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் தகவல்களையும் இது வாங்கி, உடலின் இயக்கங்களோடு தொடர்பு படுத்தும். அதனிடம் வந்து சேரும் உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவகையில் அது மாறிக்கொண்டே இருக்கும். பல நூற்றுக்கணக்கான தாக்கங்கள் அதற்கு ஏற்பட்டுக்கொண்டேயிருப்பதால் அது சதா சலனத்திலேயே இருக்கும்.

நினைவுகள் மனசுக்கு வந்து சேர்ந்து, மனசில்தான் பரவி, விரவி, மின்னி, மறையும். அதனிடம் வந்து சேரும் தாக்கங்களையும் தகவல்களையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் பகுத்து ஆயும் ஆற்றல் அதனிடம் இல்லை. முடிவுகளை எடுக்கும் தன்மையும் கிடையாது. மனசில் வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் ஒருவித primitive நிலையில்தான் மனசு எடுத்துக்கொள்ளும்.

ஏதோ ஒரு நல்லது,கெட்டது, இன்பமானது, ஆபத்தானது, துன்பமானது என்ற அளவில்தான் எடுத்துக்கொள்ளும். மூளையின் Reptilian Brain பகுதியும் ஓரளவிற்கு இந்த மாதி¡¢தான்.

மனசு என்பது நம்முடைய எண்ணங்களின் வெளிப்படையான நிலைக்களன். அங்குதான் எண்ணங்களின் ஆக்கம் முழுமையாக வெளியில் தொ¢யும். நாம் முழு உணர்வுடன் விளங்கும் full-conscious stateஐ மனசு manifest செய்கிறது.

மனசு, உணர்ச்சிகளாலும் பாவங்களாலும்(EMOTIONS and not sins) எளிதாக இழுத்தடிக்கப்படவும், உந்தப்படவும், உதைக்கப்படவும் கூடியது.

"சித்தம்" என்பது சற்று சிக்கலானது. உணர்வுகள், நினைவுகள், ஞாபகம், போன்றவற்றின் அடித்தளம். இங்கிருந்துதான் எண்ண அலைகள் மேலே எழும்பி மனசுக்கு வரும். ஆற்றின் அடிமட்டத்தில் அமைந்துள்ள ஆற்றுப்படுகைதான் சித்தம் என்று கொண்டோமானால், அதன்மேல் ஓடும் ஆற்று நீரோட்டம், அதில் உள்ள சுளிப்புகள், சுழற்சிகள், அலைகள், குமிழிகள் போன்றவை மற்ற அம்சங்களாகிய மனசு, அஹம்காரம் போன்றவை.

This is a huge pool of sensory impressions and data.

உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் எண்ண எழுச்சிகளும் இங்கிருந்துதான் மனசுக்கு வரும்.

அதே சமயத்தில் எந்தவித தூண்டுதலும் இல்லாத போது, தன்பாட்டுக்குக் குமிழிகளைப்போல் நினைவுகளையும் ஞாபகங்களையும் fantasy எனப்படும் பகற்கனவுகளையும் மேலே அனுப்பும். அவை மனசின் மேற்பரப்பில் குமிழிகளாகத் தோன்றி வெடித்துச் சிதறி மறையும்.

சில சமயங்களில்,

"அந்த நாள் ஞாபகம் இந்த நாள் வந்ததே!
நண்பனே!
நண்பனே!
நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே?
அது ஏன்? ஏன்? ஏன்?
நண்பனே!"

என்று சிம்மக்குரலெடுத்துப் பாட வைக்கும்.

"அஹம்காரம்"-

சாதாரணமாக இதை வேறு பொருளில் கொள்வார்கள். ஏதோ திமிர் சம்பந்தப்பட்டது போலத் தோன்றும். அவ்வாறல்ல.

"நான்" என்னும் தன்மைதான் அஹம்காரம்.

நம்முடைய ஆன்மா பல பிறவிகளை எடுக்கிறது அல்லவா? ஒவ்வொரு பிறவியிலும் அது தான் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல், தொடர்புகள், உறவுகள், விருப்புகள்,வெறுப்புகள், அடையாளங்கள் முதலியவற்றை வைத்துத் தன்னையே "தான்", "நான்","எனது" என்று தன்னிலைப்படுத்திக் கொள்ளும். அந்தப் பிறவியில் அந்தக் குறிப்பிட்ட தன்மைகளே சாஸ்வதமானவையாகவும் நிச்சயமானவையாகவும் தோன்றும். ஆனால் அதன் முற்பிறவியில் முற்றிலும் வேறு தன்மைகளையும் அடையாளங்களையும் கொண்டதாக விளங்கியிருக்கும். மனிதனாகவே பிறந்தாலும் கூட ஊர், பேர், உறவு, சொந்தபந்தம், விருப்புவெறுப்பு, ஆற்றல், படிப்பு, இனம், மொழி,என்றவாறு முற்றிலும் மாறுபட்ட கூறுகளைக் கொண்டதாக அந்தப் பிறவி விளங்கக்கூடுமல்லவா?

அடுத்த பிறவியிலோ இன்னும் வேறு நிலைமைகள் விளங்கலாம்.

ஆனால், ஒரே ஆன்மாதான் இத்தனை பிறவிகளில் வேறு வேறு அடையாளங்களுடன் விளங்குவதை அந்த ஆன்மா உணரமாட்டாது. அதையெல்லாம் அஹம்காரம் மறைத்துவிடும். இந்த அஹம்காரமே ஒட்டுமொத்தத்தில் பிறவியெடுத்துள்ள ஆன்மாவை இறைவனிடத்திலிருந்து தனிமைப்படுத்திவிடும்.

"அதாண்டா, இதாண்டா, அருணாசலம் நான்தாண்டா"

என்று தன்னையே எல்லாமாக அறிந்து, எல்லாவற்றிலும் தன்னையும், தன்னில் எல்லாவற்றையும் கண்டு, தானே அந்த அருணாசல பரசிவமான பிரம்மம் என்ற பிரம்மஞானமெல்லாம் ரஜினியைப் போன்ற SUPERMANனுக்கே தோன்றக்கூடும்.

"புத்தி" என்பது பகுத்து அறிவது, உணர்வுகளை அலசுவது, நல்லது/கெட்டது, நியாய அநியாயங்கள் போன்றவை, மனசாட்சி, சித்தாந்தங்கள், தீர்மானங்கள், தர்க்கங்கள், நிச்சயங்கள் போன்றவற்றை நடத்தும். நாம் அறிவுபூர்வமாகச் செய்யவேண்டிய நடவடிக்கைகளை ஆணைகளாக்கி மனசுக்கு அனுப்பும்.மனசின் ஓட்டங்களை அனுமானிப்பது, அளவெடுப்பது, கவனிப்பது, கட்டுப்படுத்துவது எல்லாம் செய்யும். நம்முடைய சுற்றுச் சூழல்களுக்கு ஏற்ற விதங்களில் நம்முடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொடுக்கும். அழகுணர்வு, இசை ரசனை,போன்றவற்றின் இருப்பிடம்.

சில சமயங்களில் உணர்ச்சிபூர்வமான தாக்கங்களுக்கு புத்தி அடங்கிவிடும். சில சமயங்களில் பழக்கவழக்கங்களாலும், ஆழமாக விதைக்கப்பட்ட நம்பிக்கைகளாலும் முடக்கப்பட்டு விடும். ஆனால் புத்தியால் இவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

இதையெல்லாம் யோக சாத்திரத்தில் காணலாம். ஆனால், பதஞ்சலி முனிவர், தன்னுடைய அஷ்டாங்க யோக சம்பந்தத்தில் இந்த நான்கினையும் கூறவில்லை. அவர் ஒட்டுமொத்தத்தில் "சித்தம்" என்ற ஒரே சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறார்.

"யோகாஸ் சித்த வ்ருத்தி நிரோதஹ",

என்று மாத்திரம் ரத்தினச்சுருக்கமாகக் கூறிவிட்டார்.

பல்வேறு காலங்களில் எழுதியுள்ள பல்வேறு அறிஞர்கள், "சித்தம், "மனது" என்பனவற்றுக்குப் பலவகையான பொருள்வேறுபாடுகள் ஏற்படச் செய்திருக்கிறார்கள்.)

ஆகமொத்தத்தில் உள்ளத்தில் இவ்வளவும் இருக்கிறது.

எண்ணங்களின் தோற்றம் ஏற்படுவதைக் கவனிப்போம்.