Friday, January 5, 2024

தேங்காய் உடைப்பதன் தத்துவம்!

 கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.


தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.


உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.


இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.


ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.


இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

"என் செயலாவது யாதென்று மில்லை"

சித்தர்களின் வழியில் -- குரு நமச்சிவாய சுவாமிகள்

 சித்தர்களின் வழியில் -- குரு நமச்சிவாய சுவாமிகள்


          அண்ணாமலைக்கு வாவென்று அழைத்து ஆட்கொண்ட ஞான தபோதர் குகை நமச்சிவாயர் ஒரு சிவயோகியாக,சித்தராக சமாதி முக்தி அடைந்தார்.அவர் அண்ணாமலையில் ஒரு குகையில் சிவயோகத்தில் இருந்து வந்தமையால் குகை நமச்சியாவ மூர்த்தி எனக் கூறப்பட்டார்.


                அவருக்கு நமச்சிவாயர் என்றொரு மாணவ சீடன் இருந்தார். அவர் ஞானாசிரியரின் அருகிலிருந்து அன்புடன் பணி செய்து வந்தார். குகை நமச்சிவாயர் குகையின் பக்கத்தில் வளர்ந்தோங்கி இருந்த ஆலமரத்தில்  மரத்தில் ஊஞ்சலிட்டு அதில் யோக நித்திரை கொள்வது வழக்கம்.


                [இன்றும் ஒரு வளர்ந்தோங்கி ஆலமரம் கோயில் நுழைவாயிலிலும்,


         குகை நமச்சிவாயர் சமாதி அருகிலும் இருக்கிறது.]  அதன்போது ஞானாசிரியன் அருகிலிருந்து பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது ஆசிரியர் அருகில் இருந்தபோதும் 'குலுக்' என்று நகைத்தார். ''நமச்சிவாயம் என்ன அதிசயம் கண்டு நகைத்தாய்?'' என்று குகை நமச்சிவாயர் கேட்டார்.


          அப்பொழுது மாணவ சீடராகி நமச்சிவாயர், ''ஐயனே திருவாரூரின் கண் தியாகராசப் பெருமானைத் திருவீதியின் கண் எழுந்தருளச் செய்து உலா வரும் போது, நாட்டியப் பெண்கள் ஆடிக்கொண்டு வர, அவர்களுள் ஒருத்தி கால் இடறி விழுந்தாள்; அங்கிருந்த அவைவரும் நகைத்தார். யானும் நகைத்தேன்'' என்றார்


                   இதுபோன்று ஒருநாள் ஞானாசிரியரின் அருகில் இருந்தபோது,தம் ஆடையைப் பற்றி தேய்த்தார்.''ஏன் இவ்வாறு ஆடையைப் பற்றித் தேய்த்தனை" என்று குகை நமச்சிவாயர் கேட்ட போது. ''பெருமானே! தில்லை மாநகரிலே பொற்சைபையிலே திரைச்சிலை இட்டிருந்தார்கள். அதன் அருகில் குத்துவிளக்கு சுடர் விட்டு எரிந்துகொண்டிருந்தது, அதனை ஓர் எலி பற்றி இழுத்துகொண்டு சென்றது, அச்சுடர் திரைசீலையில் பட்டதனால் அத்திரைச்சிலையில் தீப்பற்றிக்கொண்டது. அங்கிருந்தவர்கள் அத்தீப் பரவாமல் சீலையைப் பற்றிக் கசக்கினர், யானும் கசக்கினேன்'' என்றார்.


 


                பின்பு ஒருநாள் குகை நமச்சிவாயர் மாணவர் உள்ளத்தை அறியவும், சோதனை செய்யவும் தேர்ந்து அறியவேண்டி வாந்தி எடுத்து அதைத் திருவோட்டில் பிடித்து, ''இதை மனிதர் கால் அடிபடாத இடத்தில் இட்டுவருக'' என்று கட்டளை இட்டார்.அதை நமச்சிவாயர் ஏற்றுக்கொண்டு மனிதர் உலவாத, கால் அடிப்படாத இடம் எதுவென ஆராய்ந்து பார்த்தார். அப்படி ஒரு இடம் இல்லை என்று அறிந்து, அதனை தாமே உட்கொண்டார்.


 


ஆசிரியர் இந்த அருஞ்செயலைக் கண்ணுற்று, ''அன்பனே! அடிபடாத இடத்தில் வைத்தணையோ?''  என்று கேட்டார்.


அதற்கு பதிலாக, ''அய்யனே, அதனை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தேன்...'' என்று மிகவும் பணிவாக விடை அளித்தார்.


 


                மாணவர் செய்த மூன்று அருஞ்செயல்களையும் கண்ட நமச்சிவாய மூர்த்தி, மாணவருடைய ஞான நிலை நாளுக்கு நாள் உயர்ந்து அறிந்து ''அவரை அவர்க்கேற்றதொரு புனிதமான இடத்திற்கு அனுப்பிவைத்தல் வேண்டும்'' என முடிவு செய்தார். உடனே ஒரு வெண்பாவில் பாதி வெண்பாவினைக் குகை நமச்சிவாயர் இயற்றி பாடினார்.


                                        நேரிசை வெண்பா....


                                ''ஆல்பழுத்துப் பக்கியினுக் காகார மானதென


                                   வேல் பழுத்து நின்றநிலை வீணிலெனச் -------- என்று பாடி நிறுத்தினார்.

அருகிலிருந்த குரு நமச்சிவாய மாணவ சீடன், ''சுவாமி! குறை வெண்பாவையும் முடிக்கலாமே'' என்றார். அப்போது குகை நமச்சிவாயர். ''அப்பா நமச்சிவாயம்! எஞ்சியுள்ள அரை வெண்பாவையும் நீயே முடிப்பாயாக!'' என்றார்.ஆசிரியர் கூறியன கேட்டசீடன், ''பெருமானே! குருவின் வாக்கிற்கு அடாத எதிர்வாக்கினை அடியேன் கூறுதல் பொருந்தாதே'' என்றார். அப்போது குரு '' நீ அருள்நிறை மாணவன், ஆதாலால் எஞ்சிய வெண்பா அடிகளைப் பாடுக!'' என்றார். அப்போது மாணவர், நல்லாசிரியன் கட்டளைக்கு கட்டுப்பட்டு,


                                     -----''சால்வன


                                                செய்யா வொருத்தாருடன் சேர்ந்து மிருப்பீரோ


                                                வையா நமசிவா யா''   --    என்று முடித்தார்.


 அருள்நிறை மாணவரைப்பற்றி அறிய வேண்டுவனவற்றை தெளிவாக அறிந்துகொண்ட ஞானாசிரியர், ''அப்பனே! நமசிவாயம்! உனக்கு ஒப்பான மாணவனை எங்கும் காண்டல் அரிது; ஆகையால் இன்றுமுதல் நீ குரு நமச்சியாய மூர்த்தி எனத் திருப்பெயர் பெற்றாய்!'' என்று தழுவிக்கொண்டு,''என் கண்ணுட் கருமணியே!'' ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக்கட்டுதல் கூடாது; ஆகையால் அறியாமையை நீக்கி அறவொளியை வழங்கும் அம்பலவாணர் எழுந்தளிருயிருக்கும் திருத்தில்லை எனப்பெறும் சிதம்பரத்திற்குச் செல்க! அங்கு உம்மால் நடைபெற வேண்டிய பல திருப்பணிகள் உள்ளன'' என்று கட்டளையிட்டார். அப்போது கரு நமச்சிவாயர் ஞானாசிரியரை நோக்கி, ''ஐயனே! ஞானாசிரியர் திருவடிகட்குப் பணி செய்யும் பேற்றினை இழந்து, நாள்தோறும் செய்யும் குரு தரிசனத்தை இழந்து வேறொரு நகர்க்கு எவ்வாறு செல்வேன்''  என்றார்.


     குகை நமச்சிவாயர் மாணவரை நோக்கி, ''நீர் பெருமான் எழுந்தளியிருக்கும் சிதம்பரத்திற்கு சென்று பொன்னம்பலத்தின் முன்னே நின்று கூத்தப்பெருமானை வணங்கி நிற்பீராக! அங்கே, அப்பெருமான் நம்மைபோல் தரிசனம் கொடுத்தால் இருப்பீராக; இன்றெல் இவ்விடம் வந்து சேர்க!'' என்று சொல்ல.மாணவர்,''நன்று! என்று நவின்று பத்துப்பாடல்களால் ஆசிரியர்க்கு வணக்கம் தெரிவித்து நினறார். ஆசிரிடமிருந்து ''புறப்படலாம்'' என்ற சொல் பிறந்தது. உடனே குரு நமச்சிவாயர் தனியாக சாயுங்கால் நேரத்தில் புறப்பட்டுக் கிழக்கு நோக்கி ஒரு காத தூரம் நடந்தார். இருள் வந்தது. அங்குதத் தகுதியானதொரு இடம் பார்த்து ஒரு ஆலமரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார். பின் பசி மேலிட்டு, உண்ணாமுலை அம்மையாரை நோக்கி ஒரு வெண்பா பாடினார்.


                                                ''அண்ணா மலையா ரகத்துக் கினியாளே


                                                உண்ணா முலையே உமையாளே- நண்ணா


                                                நினைதொறும், போற்றிசெய நின்னடிய ருண்ண


                                                மனை தொறும் சோறுகொண்டு வா...''


 எனறு குரு நமச்சிவாய சுவாமிகள் இவ்வண்பாவினைப் பாடிய நேரத்தில், அண்ணாமலையாருக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து பொன்தபாளத்தில் இட்டு நிவேதித்துக் கோயிலில் வைத்து அதனை எடுத்துச் செல்ல மறந்தவராய்க் காப்பிட்டு அர்ச்சகர் முதலியோர் அவரவர் வீடு சேர்ந்தனர்.அதனை அறிந்த உண்ணாமுலைத் தாயார் அந்நிவேதனத்தைத் தட்டுடன் கொண்டு வந்து குரு நமச்சிவாயமூர்த்திக்குக் கொடுத்துவிட்டு சென்றார்.


    விடிந்தபின் அர்ச்சகர் முதலியோர், கோவிலுக்கு சென்று கதவைத் திறந்து பார்த்தபோது,பொற்றாம்பாளம் காணப்படவில்லை.அர்ச்சகர்களும், ஊரின் உள்ள பெரியோரும் திகைப்புற்று, ''யாரோ கள்வர்தாம் களவாடி இருக்கவேண்டும்'' என்று கருதி ஆராய்ந்து பார்க்கலாயினர். இதனால் இருபது நாழிகை மட்டும் கோயில் பூசை நடைபெறாமல் இருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு அர்ச்சகர் சிறுவன் தெய்வமுற்று, ''நமச்சிவாயா மூர்த்தி சிதமபரத்திற்கு செல்லும் வழியில் ஒரு ஆலமரத்தின் கீழ் இருக்கிறார். அவருக்கு உண்ணாமுலைத் தாயார் அமுது கொண்டு போய்க் கொடுத்தார். அங்கே தாம்பாளம் கிடக்கிறது எடுத்துக் கொண்டு வரவும்! என்றான்


அதனைக் கேட்ட அர்சசகர்களும் பிறரும் இறைவனை வாழ்த்தி அவ்விடம் சென்று தாம்பாளத்தைக் கண்டெடுத்துக் கொண்டு அண்ணாமலைக்கு வந்து சேர்ந்தனர். மறுநாள் பகலவன் தோற்றமாகும் போது குரு நமச்சிவாயர் எழுந்து தன் ஞானாசிரியைத் தொழுது கிழக்கு நோக்கிச் செல்லும்போது, இருடிவனம் என்பதொரு திரு நகரினைக் கண்டார்.அந்நகரினைக் கண்டார். அந்நகரில் அம்மையும்,அப்பனும் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் எழுந்தருளியுள்ளனர். அவ்வடிவம் அகத்திய முனிவரால் பூசிக்கப் பெற்றதாகும்.அங்கு ஐயாயிரம் கொண்டான் என்றொரு புனிதத் தீர்த்தம் உண்டு. அதில் நீராடி பூசை முடித்துத் தூயமனத்துடன் சுவாமியை துதித்துச் சிவயோகத்தில் இருக்கும்போது பசி வந்தது.அப்போது, அன்னை பராசக்தியை நோக்கி,


                                ''தாயிருக்கப் பிள்ளை தளருமோ தாரணியில்


                                நீயிருக்க நான் தளர்தல் நீதியோ - வேயிருக்கும்


                                தோளியோ விண்ணோர் துதிக்கும் திருமுத்து


                                வாளியே சோறுகொண்டு வா''


என்று ஒருவெண்பாவினை இயற்றினார். அம்மை அதனைத் திருச்செவியில் ஏற்று ''குருநமச்சிவாயா! நான் இடப்பாகம் பிரியாமல் இருப்பவும் நீ என்னை பிரித்துப் பாடியது முறையோ? இப்போது உன் வாக்கினால் சேர்த்துப் பாட வேண்டும்'' என்று கூற குருநமச்சிவாயா மூர்த்தி,


                                '' மின்னும் படிவந்த மேக களத் தீசருடன்


                                  மன்னும் திருமுத்து வாளியே - பொன்னின்


                                  கவையாளே! தாயே! என் கன்மனத்தே நின்ற


                                  மலையாளே சோறு கொண்டு வா''


         என்று ஒரு வெண்பாவைவினால் சேர்த்துப் பாடினார்.உடனே அம்மையார் அமுதுகொண்டு வந்து கொடுத்தார். அதனை உட்கொண்டு புறப்பட்டு விருத்தாசலம் வந்து பழமலை நாதரையும் பெரியநாயகி அம்மையையும் வழிபட்டு ஒரு குளக்கரையில் சிவயோகத்திலிருக்கும் போது பசி அணுகிற்று. அப்போது,


                                                ''நன்றிபுனை யும் பெரிய நாயகியெ நுங்கிழத்தி


                                                என்றும் சிவன்பா லிடக்கிழத்தி - நின்ற 


                                                நிலைக்கிழத்தி மேனிமுழு நீலக் கிழத்தி


                                                மலைக்கிழத்தி சோறுகொண்டு வா...''


 -என்ற வெண்பாவைப் பாடினார்.அம்மையார் தண்டூன்றி விருத்தாம்பிகையாய் வந்து, குரு நமச்சிவாயாரைப் பார்த்து, ''என்னப்பா! உன்னுடைய சொல்லினால் என்னைக் கிழத்தி கிழத்தி என்று பாடுதல் நலமா? கிழவிக்கு நடக்க இயலுமா? தண்ணீர் எடுக்க கூடுமோ? உகட்டுப்பட்டு, உணவு கொண்டு வர உடலில் உரம் இருக்குமோ? என்றார்.


உடனே, குரு நமச்சிவாய தேவர்


                ''அன்னையே! ஆண்ட கோடி ஈன்ற பின்னும் கன்னி என மறைபேசும் ஆனந்த ரூப மயிலே!


                பாலகாசியில் பாலாம்ப்¢கை; இது விருத்தகாசி; நீர் பெரிய நாயகி; இங்குள்ள இங்குள்ள


                இறைவனும் பழமலை நாதர்; அதுபற்றியே யான் அவ்வாறு சொல்லினேன்'' என்றார்.


]


அடியவர் கூறியன கேட்ட அம்பிகை


                '' என அருமை மகனே! நமச்சிவாயம்! உன்னுடைய இனிய வெண்பாவிலே என்னை இளமையாக


                வைத்துப் பாடுக!'' என்றார். குரு நமச்சிவாய தேவர்


                ''கருணை கடலே! இரண்டு அம்மையார் ஆக கூடுமே'' என்று சொல்ல அம்மையார்


                ''அதனால் பிழை ஒன்றும் இல்லை பாடுக! என்றார். உடனே குரு நமச்சிவாயர் பின்வரும்


                வெண்பாவினைப் பாடி மகிழ்ந்தார்.


   

'கருணை கடலே! இரண்டு அம்மையார் ஆக கூடுமே'' என்று சொல்ல அம்மையார்


                ''அதனால் பிழை ஒன்றும் இல்லை பாடுக! என்றார். உடனே குரு நமச்சிவாயர் பின்வரும்


                வெண்பாவினைப் பாடி மகிழ்ந்தார்.


                                                ''முத்தநதி சூழும் முதுகுன் றுறைவானே


                                                பத்தர் பணியும் பதத்தாளே!


                                                அத்தர் இடம்தாளே மூவா முலைமேல் எழிலார


                                                வடத்தாளே சோறுகொண்டு வா...''


                இவ்வெண்பாவைச் சொல்லியவுடன் அம்மையார் பாலாம்பிகையாய்ச் சோறு கொண்டு வந்து கொடுத்தார். அதனையுட்கொண்டு வழிநடந்து புவனகிரிக்கு வந்து ஆனந்தத் திருநடனம் புரியும் ஐயன் தில்லை அம்பலவாணப் பெருமான் எழுந்தளியிருக்கும் தில்லைத் திருக்கோயில் கோபுரம் கண்டு வணங்கி,


                                '' கோபுரங்கள் நான்கினையும் கண்டமட்டில் குற்றமெலாம்


                                   தீபரந்த பஞ்சதுபோல் சென்றதே - நூபுரங்கள்


                                   ஆர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின்பாதம்


                                   பார்க்கின்றார்க் கென்ன பலன்...''


என்ற இவ்வெண்பாவைக் கூறிகொண்டே சிதம்பரம் சென்று திருக்கோயிலுட் புகுந்து, சிவகங்கையில் நீராடி,


                                ''கண்டமட்டில் கண்ட வினை காதம்போம்


                                கையிலள்ளி கொண்டமட்டில் கொண்டவினை


                                வண்டமிழ்சேர் வாயார வேபுகழும் வண்ணச் சிவாமித்


                                தாயார் திருமஞ் சனம்....''


என்ற வெண்பாவினைச் சொல்லிக் கொண்டே கனக சபைக்கு முன்சென்று பெருமானை வணங்கும் போது, கூத்தப் பெருமான்,அண்ணாமலையில் குகைக்கண் அமர்ந்திருக்கும் குகை நமச்சிவாயரைப் போலவே காட்சி கொடுத்தார். அப்போது வாழ்த்தி வணங்கி நின்று,


                                ''திருவண்ணா மலையிற் குகை நம சிவாய


                                தேசிக வடிவமா யிருந்து


                        கரவனா மடியேன் சென்னிமே லுனது


                                கழலினை வைத்தவா நுறுரேன்


                                விரகின் நாரியரைப் புதல்வரை பொருளை


                                வேண்டிய வேண்டிய தனைத்தும்


                                பரவினார் புகழ்வார்க் களித்திடும் பொன்னம்


                                பலவனே பரமா சிரியனே...''


                என்ற பாடலை முதலாக கொண்டு தொடங்கி, ஒரு நாழிகை அளவிற்குள் நின்ற இடத்திலேயே, உலகத்தை மறந்து நின்று, ''என்று வந்தாய் எனும் எம்பெருமான்' என்ற திருக்குறிப்பில் ஒன்றி இருந்து நூறு பாடல்களைப் பாடினார். பிறகு ஓர் அறையில் அமர்ந்து சிவயோகத்தில் அமர்ந்தார்.


                அந்நாளில் தில்லை மூவாயிரவருள், சீவன்மூத்தர், சடாமுத்தர். மாகமுத்தர் என்ற மூவர் என்ற மட்டும் பல்லக்கேறும் தனிச்சிறப்புடையவர்களாக இருந்தனர். அவர்கள் கனவில் ஆடல் அழகராகிய அம்பலவாணப் பெருமான் தோன்றி, ''திருவண்ணாமலையில் இருந்து ஞானி நம் திருநகரில் வந்து தங்கியிருக்கிறார்; அவர் சிவயோகத்தில் மிகுதியாக ஈடுபட்டிருப்பவர். அவருக்கு தனிமையான இடத்தினைத் தருதல் வேண்டும். அவரால் நமக்குப் பற்பல பணிகள் நடைபெற இருக்கினறன. அவருக்கு தகுதியான இடத்தினை தருதல் வேண்டும் நாம் இருமுறை திருவடி வைத்திருக்கின்றோம்.


அவ்விடத்தில் குரு நமச்சிவாயரைக் கொண்டு போய் விடுவீராக" என்று திருவாய் மலர்ந்தளினார். அவ்வாறே அர்ச்சகர் மூவரும் குரு நமச்சிவாயரை அவ்விடத்தில் கொண்டு போய் விட்டுத்திரும்பினர். அங்கே யோகத்தில் இருக்கும்போது நமச்சிவாயருக்குப் பசியுண்டாயிற்று. அப்போது,


அவ்வாறே அர்ச்சகர் மூவரும் குரு நமச்சிவாயரை அவ்விடத்தில் கொண்டு போய் விட்டுத்திரும்பினர். அங்கே யோகத்தில் இருக்கும்போது நமச்சிவாயருக்குப் பசியுண்டாயிற்று. அப்போது,


                                '' ஊன்பயிலும் காயம் உலராமல் உன்றனது


                                  வான்பயிலும் பொன்னடியை வாழ்த்துவேன் - தேன்பயிலும்


                                  சொல்லியல் நல்லார் துதிக்கும் சிவகாம


                                  வல்லியே சோறு கொண்டு வா


-- இவ்வெண்பாவினைச் சொல்லினார்.


                                உடனே சிவகாமி அம்மையார் அமுது கொண்டுவந்து நின்று,


                                '' கொண்டுவந்தேன் சோறு குகை நமச்சி வாயரது


                                  தொண்டர் அடியார் சுகிக்கவே - பண்டுகந்த


                                  பேய்ச்சிமுலை யுண்ட பெருமாளுடன் பிறந்த


                                   நாச்சி சிவகாமி நான்...''


என்ற வெண்பாவினைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறாகவே, சிவகாமசுந்தரி தேவியார் குரு நமச்சிவாயருக்கு ஒவ்வொரு நாளும் அன்னம் அளிக்க குரு நமச்சிவாயர் யோகத்தில் இருந்து வந்தார்.


 


                இவ்வாறாக இவர், சிவயோகத்தில் இருக்கிற காலங்களில் இவரை காணவரும் அன்பர்கள் பொன்னையும் பொருளையும் எதிரில் வைத்துவிட்டுச் சென்றார்கள். அவற்றைக் கண்ட குரு நமச்சிவாயர், ''இவை இவ்விடத்திற்கு என் வந்தன? இவை ஆட்கொல்லி, இங்கு இது வேண்டாம்'' என்று அந்த நேரத்தில் இருந்தவர்களை எடுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டு விடுவார். இவற்றை கண்ட தில்லை மூவாயிரம். ''இவ்வளவு செல்வமும் வீணாகிறதே!'' என்று தம்முடன் கூடிப்பேசிக் குரு நமச்சிவாயர் இடம் சென்று, ''சுவாமி,நீர் இவ்விடத்தில் இருப்பதனால், அன்பர்கள் தரும் பொருள்கள் வீணாகின்றன.திருக்கோயிலின் உள்ளே வந்து தங்கினால், எல்லாப் பொருளும் பல்வேறு வகையான திருப்பணிகள் செய்வதற்கு பயன்படும்.பல கட்டளைகள் நடைபெற வழியுண்டாகும்'' என்று வேண்டிக்கொண்டனர்.


                அப்போது குரு நமச்சிவாய தேவர், அர்ச்சகர்களை நோக்கி. ''நாம் நமது குருவின் ஆணைப்படி இவ்விடத்தில் வந்திருக்கிறோம்.ஆதலால் யாம் அங்கு வர இயலாது'' என்று மறுத்துவிட்டார்.உடனே, தில்லை மூவாயிரவருள் சிறப்புற்றிருந்த சீவன்முத்தர்,சடாமுத்தர், மகாமுத்தர் ஆகிய மூவரும் அம்பலத்தாரிடம் சென்று, ''பெருமானே! குரு நமச்சிவாய மூர்த்தி கோயிலுக்குள்ளே வந்தால் பல திருப்பணிகள் நடைபெறவும்,பல அறக்கட்டளைகள் தொடர்கள் தொடர்ந்து நடைபெறவும், வழியுண்டாகும்.'' என்று சொன்னார்கள்.''நன்று, நீவீர் சென்று அழைத்தால் வாரார் யாமே சென்று அழைப்போம்'' கூறி, மூப்பு நிறைந்த அடியவராய்த் தண்டு கமண்டலம் பிடித்துக் கொண்டு திருப்பாற்கடல் என்னும் இடத்திற்கு வந்து குரு நமச்சிவாய மூர்த்தியின் எதிரே நின்றார். குரு நமச்சிவாயர்யோகம் தெளிந்து முன் நிற்பவரைப் பார்த்தார். குரு நமச்சிவாயர் யோகம் தெளிந்து முன் நிற்பவரைப் பார்த்தார். கண்ணுற்றவுடனே, ''ஐயனே!போற்றி'' என்றார்.வந்து நின்ற வரும் ''போற்றி போற்றி'' என்றார். குரு நமச்சிவாயர், வந்து நின்ற முதுமை நிறைந்த அடியாரைப் பார்த்து, ''ஐயா!நீங்கள் இருப்பது எந்த ஊர்?'' என்றார். அவர் ''நாம் இருப்பது தில்லைவனம்'' என்றார் உம்முடைய பெயர் என்ன?'' என, ''எம் பெயர் அம்பலத்தாடுவார்'' என்றார்.


''நீர் என்ன அலுவலாக இங்கு வந்தீர்'' என்று கேட்க எனக்கு அன்னம் தேவையாக இருக்கிறது; இவ்வூர் எங்கும் சுற்றினேன், அன்னம் கிடைக்கவில்லை, இவ்விடத்தில் அன்னம் கிடைக்கும் என்று சொல்லினர். ஆகவே, உம்மிடம் வந்துள்ளேன்'' என்றார்.முதியராய் வந்து நின்ற அடியவர்,. அப்பொழுது குரு நமச்சியாவாய மூர்த்தி, ''ஐயா! என்னிடம் அன்னம் இல்லை. எனக்குச் சிவகாசுந்தரி அம்மையார் உணவளித்து வருகிறார். எம்மிடம் பாத்திரம் கூட இல்லை'' என்று சொல்லினார்.அப்போது வந்த முதியவர்''சுவாமி! என்னிடம் பாத்திரம் இருக்கிறது''என்று சொல்லிச் சந்திரனைப் பாத்திரமாக வைத்தார்.அப்போது குரு நமச்சிவாயர்,அன்னை சிவகாமசுந்தரியைச் சிந்தனை செய்தார். அன்னம் வந்தது! முதிய அடியவரை நோக்கி ''இதனை ஏற்றுக்கொள்ளும்''என்றார்.



அப்போது குரு நமச்சிவாயர்,அன்னை சிவகாமசுந்தரியைச் சிந்தனை செய்தார். அன்னம் வந்தது! முதிய அடியவரை நோக்கி ''இதனை ஏற்றுக்கொள்ளும்''என்றார்.


           அப்போது அம்பலத்தாடுவார், 'நாம் இதனை ஏற்றுக்கொள்ளோம்' என்றார். குரு நமச்சியாவர் ''காரணம் என்ன?'' என்று வினாவ, அடியவர், ''ஐயா! இவ்வாறே ஒவ்வொரு நாளும் உணவளிப்பதாக உறுதி கூறினால் ஏற்றுக்கொள்வோம், இன்றேல் ஏற்றுக்கொள்ளோம்'' என்றார்.அது கேட்ட குரு நமச்சிவாயர், ''நீர் மிகவும் மூப்படைந்திருக்கின்றீர்! யானோ, இன்று இவ்வூரில் இருக்கிறேன், நாளை காசியோ,இராமேசுவரமோ அறியேன்; இவ்வாறு இருப்ப உமக்கு நித்தியம் அன்னம் கொடுக்கிறோம் என்று எவ்வாறு கூற இயலும்?'' என்றார்.அப்போது அம்பலத்தாடுவார், ''ஐயா! நீர் செல்லும் திசைகளில் யாம் உமக்கு முன்னே நடந்தால் அன்னம் கொடும். உமக்குப் பின்னால் நடந்தால் அன்னம் வேண்டாம் என்றார்.அப்போது, குரு நமச்சிவாயர், 'நீர் முன்னே நின்றால் அன்னம் கொடுக்கிறேன், இன்றேல் இயலாது'' என்றார்.அம்பலத்தாடுவாரும் அதற்கு இசைந்தார். ஆகவே குரு நமச்சிவாயர் சுவாமியை பார்த்து ''உணவு கொள்ளும்''என்றார்.அதற்கு அவர்,' திருநீற்றுக் கோயிலையும் உருத்திராக்கத்தையும் தொட்டு உறுதி கூறிக்கொடுத்தால் கொள்வோம்''என்றார்.குரு நமச்சிவாயர் அவ்வாறே செய்ய, வந்த அடியவர் கொடுத்த அமுதைக் கொள்வது போல் காட்டி, ''நீர் வேட்கை தணியுமாறு தண்ணீர் தரவேண்டும்'' என்றார். குரு நமச்சிவாயர் அருகிலிருந்த திருப்பாற்கடல் எனப்படும் நீர் நிலைக்காட்டி,''அதன்கண் நீர் அருந்துக!'' என்றார். அவ்வாறே நீர் அருந்தச் செல்பவர் போல் காட்டி மறைந்தருளினார்.


 


                மறைந்தருளிய அம்பலத்தாடுவார் தில்லை மூவாயிரவரிடம், 'நாம் சென்று குரு நமச்சிவாயன் கோயிலுக்குள் வருவதற்குரிய வழியை வகுத்து விட்டோம், நீவீர் அனைவரும் கூடி விருதுகளுடனும் நாம் ஏறும் பல்லக்கு உடனும் சென்று, வீதிவலமாக நம்மிடம் அழைத்து வருக!'' என்றார்.அவ்வாறே தில்லை மூவாயிரவரும் சென்று வணங்கிப் பல்லக்கில் ஏறுமாறு வேண்டினர். குரு நமச்சிவாயரை நோக்கி,''சுவாமி! இது பல்லக்கன்று, சூன்ய சிங்காசனம் என்றனர்.  அப்பொழுதும் குரு நமச்சிவாயர் மறுத்துவிட்டார்.


              =====================================


பிறகு மூவாயிரம், '' ஐயனே! நேற்று நண்பகலில் எம்பெருமான் உம்மிடம் வந்தார் அல்லவா, நீர் அவரிடம் யாது கூறினீர்''  என்றார்கள்.குரு நமச்சிவாயர் யோகக் காட்சியினால் பார்த்தார்.


சபாபதியின் காட்சி கிடைத்தது. ''சபாநாயகர் இவ்விடத்தில் வந்து என்னுடன் உடையாடி அங்கும் சென்று செய்தி கூறினரோ!'' என்று பரமன் அருளைப்பாராட்டி,


                                                சங்கயமாய் அம்பலவர் தாமே எழுந்தருளி


                                                யிங்கெமக்குப் பிச்சை யிடுவென்ன-வங்கமுது


                                                திட்டமு டன் நமக்கு நீதினமு மேசர்வ


                                                கட்டளையுண் டாக்குகென்றார் காண்''


என்றவெண்பாவைப் பாடிக்கொண்டே பல்லாக்கில் ஏறி, அல்லாகிய இருவினை தனையறுத் தடியினை தருவாரோ? மல்லல் நீடிய புவியின் மேலின்னமும் வரும் பிறப்பறுப்பாரோ? நல்ல மாமுலை மாதுமை நாயகர் நாயகர் நான் நிதம் நவின்றேத்தும் தில்லைநாயகர் அம்பலத் தாடுவார் திருவுளம் தெரியாதோ! என்ற ஓதிக்கொண்டே கோயிலுக்குட் சென்று கொடி மரத்தருகே பல்லாக்கில் இருந்து இறங்கிப் பஞ்சாக்கரமதில் மட்டும் பாதக்குறடு  இட்டு சென்றார்.பிறகு பொன்னம் பலத்தை அணுகி, திருநடம்புரி தேசிகனை வணங்கி தில்லை மூவாயிரவரைப் பார்த்து, இப்போது நாம் உண்டாக்க வேண்டிய கட்டளையாது!'' என்று வினவினார்! அப்போது சபாநாயகர்,''சர்வ ஜனத்துக்கும் சர்வ கட்டளை என்று அசரீயாய் நின்று உணர்த்தினார். ''சபாநாயகர் பிச்சை கொடுத்தால் கட்டளை எப்போதும் தொடந்து நடைபெறும்'' என்று சொல்லிக்கொண்டே பொற்றாம்பாளத்தைக் கையில் ஏந்தி


                                ''காத லுடன் சர்வ கட்டளையாய் உன்னுடைய


                                பாத மலர்ப்பூசை பண்ணவே - ஓது


                                குருவா யெனையாண்டு கொண்டவனே! பிச்சை


                                தருவாய் சிதம்பர நாதா''


என்ற வெண்பாவைப் பாடினார்.



''சபாநாயகர் பிச்சை கொடுத்தால் கட்டளை எப்போதும் தொடந்து நடைபெறும்'' என்று சொல்லிக்கொண்டே பொற்றாம்பாளத்தைக் கையில் ஏந்தி


                                ''காத லுடன் சர்வ கட்டளையாய் உன்னுடைய


                                பாத மலர்ப்பூசை பண்ணவே - ஓது


                                குருவா யெனையாண்டு கொண்டவனே! பிச்சை


                                தருவாய் சிதம்பர நாதா''


என்ற வெண்பாவைப் பாடினார்.


                அப்போது குரு நமச்சிவாயர் வேண்டுளுக்கிணங்கி அங்கு வந்திருந்த அடியார்களும் அன்பர்களும் காணுமாறு தங்ககாசு ஒன்று தட்டிலே வீழ்ந்தது ''நடராசப்பெருமானே நாம் அனைவரும் காணுமாறு பிச்சையிட்டார். ஆகவே நாமும் நன்கொடையளிக்க வேண்டும்'' என்று வந்திருந்த பெரும்பான்மையினர் பொன்னும்,பொருளும் போட்டார்கள்.குரு நமச்சிவாயர் தங்கத் தட்டினைத் தனக்கு முன்னிருந்த அர்ச்சர்களிடம் கொடுத்து அவ்விடத்தை விட்டு புறப்பட்டார். அப்போது சிறிது தாங்கிற்று. உடனே குரு நமச்சிவாயர் ''இதற்குக் காரணம் என்ன?'' என்று மூவாயிரவரை கேட்டார். அதற்கு அவர்கள் ''நாங்கள் ஏதும் அறியோம்''என்றனர். குரு நமச்சிவாயர் யோகக் கண்கொண்டு நோக்கினார். மூவாயிரைவரை நோக்கி,சுவாமிக்கு அணிகலன் இருந்ததுண்டா? என்று வினாவினார். அவர்கள்''இல்லை'' என்றனர். பின், சிறிது நேரம் சிந்தைனை செய்து ''பதஞ்சலியாக்கிர பாதர்காலத்தில் பாதச்சிலம்பும் கிண்கிணியும் இருந்தன' என்று சொல்வார் யாம் கண்டதில்லை என்றார்கள். அவர் தம் கூற்றினைக் கேட்ட குரு நம்ச்சிவாயர், சிற்பிகளை அழைப்பித்துப் ''பாதச்சிலம்பும் கிண்கிணியும் விரகண்டா மணியும் செய்யவேண்டும், அவற்றைச் செய்ய எவ்வளவு பொன் தேவைப்படும்'' என்றார்.சிற்பிகள்'' அவற்றைச் செய்ய ஐம்பதினாயிரம் பொன் தேவை'' என்றார். வந்து சேர்ந்திருக்கின்ற பொன்னையும் பொருளையும் கொடுத்துத் திருவாபரணம் செய்து முடிக்குமாறு சிற்பிகளிடம் கூறி அனுப்பிவிட்டு திருக்கோயிலின் ஒருபுறத்தே அமர்ந்திருந்தார்.


 


                அப்போது தில்லை மூவாயிரவர்கள் ஒன்று சேர்ந்து ''நாம் அனைவரும் இவரைத் துணையாகக்கொண்டு நல்வாழ்வு வாழலாம் என்று நினைத்திருந்தோம்.செல்வத்தை எல்லாம் சிலம்பும், கிண்கிணியும் வீரகண்டாமணியும் செய்யக் கொடுத்துவிட்டாரே!'' என்று குரு நமச்சிவாயர் மேல் குறைகூறிப் பேசினார். அன்றியும்''சிலம்பும் கிண்கிணியும் வீரகண்டா மணியம் அணிந்துவிட்டால்,அம்பலவாணர் இவருக்கு நடனம் செய்து காட்டுவரோ?'' என்று ஏளனமாகப் பேசினர்.


இவர்தம் உரையாடல் குரு நமச்சிவாயர்தம் செவியில் பட்டது. இவர்தம் நிலை இவ்வாறு இருப்ப, நாற்பதாம் நாள் சிலம்பும் கிண்கிணியும் செய்யபெற்று வந்து சேர்ந்தன. அப்போது குரு நமச்சிவாயர் தில்லை மூவாயிரம் பிறரையும் அழைத்து,இப்போது தில்லை அம்பகூத்தன் நடனம் செய்து காட்டினால் அவைவரும்  காண்பீரோ?'' என்றார். அங்கிருந்தார் அனைவரும் ''அம்பலவாணர் திருக்கூத்தினைக்காண எத்தனை பிறவிகளில் நாங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும்ம். மூவேழ்தலை முறையினரும் கரையேறிவார்களே! என்றார்கள்.


 


                குரு நமச்சிவாய மூர்த்தி நடராசப்பெருமான் திருவடிகளில் சிலம்பும் கிண்கிணியும் அணிந்து


       தரிசனம் செய்யுமாறு சொல்லியபின் இறைவன் திருநடனத்தை காண் விரும்பினராய்,


                                ''அம்பலவா ஓர்கால் அடினால் தாழ்வாமோ


                                   உம்பாரெல்லாம் கண்டதென கொப்பாமோ - சம்புவே


                                வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென


                                   ஒத்துப் பதஞ்சலிக்கு மோ''


என்ற பாட்டினை பாடினார். உடனே கல கல வென்றொரு ஓசை கேட்டது.குரு நமச்சிவாயர் நின்று தோத்திரம் செய்வாராயினர். தில்லை கூத்தன்  நடனம் செய்யத் தொடங்கினார். எல்லோரும் கீழே விழுந்து வணங்கி அசைவற்றிருந்தார்கள். அப்போது மூவாயிரவருள் மூன்று பேர் ''நீண்ட நேரமாகத் திருநடனம் நிகழ்கிறபடியால் நடனத்தை நிறுத்தவேண்டும்'' என கூறக் குரு நமச்சிவாயர், ''ஆடச் சொல்கிறவர் நாமோ?'' என்றார். மீண்டும் அந்த மூவரும், '' தாளம் போடுகினறவர்கள் நிற்கவேண்டும்'' என்றனர். அப்போது குரு நமச்சிவாயர் அம்பலவாரை நோக்கிப் ''பெருமானே! தூக்கிய கால் நோகாதோ? துட்டன் முயலகன் மேல் ஊன்றிய கால் சலியாதோ? என்று கருத்து அமைய ஒரு வெண்பா இயற்றினார். உடனே, நடனம் மிகவும் சிறப்பாக நடைபெறலாயிற்று.



''ஆடச் சொல்கிறவர் நாமோ?'' என்றார். மீண்டும் அந்த மூவரும்,


  '' தாளம் போடுகினறவர்கள் நிற்கவேண்டும்'' என்றனர்.


  அப்போது குரு நமச்சிவாயர் அம்பலவாரை நோக்கிப்


 '' பெருமானே! தூக்கிய கால் நோகாதோ?


   துட்டன் முயலகன் மேல் ஊன்றிய கால் சலியாதோ?


   என்று கருத்து அமைய ஒரு வெண்பா இயற்றினார்.


  உடனே, நடனம் மிகவும் சிறப்பாக நடைபெறலாயிற்று.


    


  குரு நமச்சிவாயர் மீண்டும் மனமுருகி வெண்பா ஒன்றினை பாட திருநடனம்


நின்றது.அதற்கு மேல் தில்லை மூவாயிரம் கூடி, ''குரு நமச்சிவாயர்


பரிபூரணத்தை அடைந்து காரணமானதால் நாங்கள் பூசிப்போம்'' என்று


சொல்லிக்கொண்டார்கள். குரு நமச்சிவாயர் மேல் குடிமக்களும்


'பெருசெல்வரும் வள்ளல் தன்மையுடையவர்களும், குறுநில மன்னர்களும்,


அளவற்ற அன்புக்கொண்டு அவர் பெயரால் நடைபெறும் அம்பலவாணர்


திருக்கோயில் திருப்பணிக்கு நிறைவான பொருளைக் கொடுத்தனர்.


பல்வேறு அறக்கட்டளைகள் ஏற்பட்டன.அன்றியும் எழுபத்திரண்டு


தம்பிரான்களுக்குப் பல்லக்கும் விருதும் மற்றும் கொடுத்து நாடெங்கும்


அனுப்பிக் கோயில் திருப்பணிகளும், அறக்கட்டளைகளும் விரிவாகவும்


சிறப்பாகவும் நடைபெற வழி வகுக்கப்பெற்றது. இவ்வாறாக் குரு நமச்சிவாய


சுவாமிகள் காலத்தில் சைவம் தழைத்து ஓங்கிற்து, கோயில் திருப்பணிகள்


விரிவாக நடைபெற்றன. பல்வேறு அறக்கட்டளைகள் உண்டாயின.


                     குரு நமச்சிவாய மூர்த்தி, தலயாத்திரை பல இடங்களுக்குச் சென்று,


ஆங்காங்குள்ள பெருஞ்செல்வர்கள் தானமாகக் கொடுத்த பல கிராமங்களைத்


திருமடத்தில் நடைபெறும் அன்றாட தருமங்களுக்காவும் அம்பலக் கூத்தர்


திருக்கோயிலில் நடைபெறும் சர்வ கட்டளைக்காகவும் சிலாசனம் செய்து


வைத்தார். இவ்வாறாகப் பல சிவ தருமங்கள் சிறப்பாக நடைபெற


வழிவகுத்த பின்னரும் பல்லாண்டு வாழ்ந்திருந்து, திருப்பெருந்துறை


சென்று அங்கே இலிங்காரம் ஆயினர்.


 


                ''வத்தீச் சுரவருடம் வைகாசி தேதிநவம்


                   இந்துநா னாழிகை யேழரைமேல் - வந்தகுரு


                தானா மருணகிரி தாணுசிவ லிங்கத்துள்


                   ஆனால் நம்ச்சிவா யன்.."


       குரு நமச்சிவாயர் அம்பல கூத்தருக்கு அளித்த நிலங்கள் அணிகலன்கள்,


தோப்புகள் பற்றிய கல்வெட்டுகள் தில்லைக் கோயிலிலும் பிற இடங்களிலும்


மிகுதியாகக் காணப்படுப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.


                                   --  நிறைவு --

               <><><><><><><><><><><><><><><><><><><>           

 


                செவிவழி கேட்ட ஒரு செய்தி. தில்லை [சிதம்பரம்] கோயிலுள் ஒரு சுரங்கம்


                உண்டு எனவும், அந்நியர் படையெடுப்பின்போது பொன், தங்க ஆபரணங்கள்,


                நவரத்தின கற்கள் யாவும் அங்குதான் மறைத்து வைக்கப்பட்டது எனவும்,


                இன்னும் அந்த சுரங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.


                ஆனால், அந்த சுரங்கள் பற்றிய இரகசியம்- அதன் உள்ளடக்கம் யாவும்


                கோயில் தலைமை குருக்கு ஒருவருக்கு மட்டும் தெரியும் என்றும்-


         அவர் ஒருவர்தான் செல்ல அனுமதியுண்டு என்றும் -


          மற்றவர்களுக்கு இந்த இரகசியம் சொல்லக்கூடாது என்ற இரகசிய


          காப்புறுதி உண்டு என்றும் சொல்லப்படுகிறது....??? !!!


                தெரிந்த அன்பர்கள் விபரம் கூறலாம். இது சிதம்பர இரகசியம் அல்ல.


                ஒருகால்.... இதுதான் சிதம்பரம் இரகசியமோ....!


யோகாசனமும் அதற்குரிய மாற்று ஆசனங்களும்

 

வியாழன், 17/06/2010 - 7:05pm ? vinoth

ஒவ்வொரு ஆசனத்திற்கும் அதற்கேற்ற மாற்று ஆசனங்கள் உள்ளது. ஒரு ஆசனம் செய்த பிறகு அதற்குரிய மாற்று ஆசனத்தை செய்தால் அந்த ஆசன்ததிற்குரிய முழு பலனை பெற முடியும்.

சவாசனம்/சாந்தியாசனம் கடைசியாக செய்ய வேண்டிய ஆசனம். அதற்கு மாற்று ஆசனம் யோகாசனம் செய்வதை நிறுத்தி சாதாரண நிலைக்கு வருதலாகும். இதைத்தவிர முக்கியமான ஆசனங்களுக்கு அதற்குரிய மாற்று ஆசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசனம்மாற்று ஆசனம்
பத்மாசனம்சுகாசனம் - சாதாரணமாக உட்காருதல்
உத்தித பத்மாசனம்சுகாசனம் - சாதாரணமாக உட்காருதல்
யோகமுத்ராபுஜங்காசனம், மச்சாசனம, பிறையாசனம்
பச்சிமோத்தாசனம்சக்ராசனம், தனுராசனம்
உத்தான பாத ஆசனம்சலபாசனம்
வபரீத கரணிமச்சாசனம், பிறையாசனம்
சர்வாங்காசனம்மச்சாசனம், பிறையாசனம்
ஹலாசனம்சக்ராசனம், பிறையாசனம்
புஜங்காசனம்யோகமுத்ரா
சலபாசனம்உத்தான பாத ஆசனம்
தனுராசனம்ஹலாசனம், பச்சிமோத்தாசனம்
மயூராசனம்சக்ராசனம்
உசர்ட்டாசனம்சர்வாங்காசனம், ஹலாசனம்
மச்சாசனம்சர்வாங்காசனம், பச்சிமோத்தாசனம்
வலது அந்தர்மத்ச்யேந்தாசனம்இடது அந்தர்மத்ச்யேந்தாசனம்
அர்த்தசிரசானம்நின்ற பாத ஆசனம்
சிரசாசனம்நின்ற பாத ஆசனம்
நின்ற பாத ஆசனம்அர்த்தசிரசானம், சிரசாசனம்
வலது திரிகோணாசனம்இடது திரிகோணாசனம்
பாதஹஸ்தாசனம்ஹலாசனம், சக்ராசனம், பிறையாசனம்
பிறையாசனம்பாதஹஸ்தாசனம்
சக்ராசனம்யோகமுத்ரா, ஹலாசனம்
உட்டியாணாநௌலி
நௌலிஉட்டியாணா
உட்கட்டாசனம்பத்மாசனம், உத்தான பாத ஆசனம்
ஜானுகீராசனம்பச்சிமோத்தாசனம்
ஹஸ்தபாதாங்குசாசனம்தனுராசனம், நின்ற தனுராசனம்
வஜிராசனம்மகாமுத்ரா, யோகமுத்ரா
சப்தவஜிராசனம்விபரீதகரணி, சர்வாங்காசனம்
http://tamil2friends.com/node/26341

சும்மா

 இக்கட்டுரை என்னால் எழுதப்பட்டதல்ல. நமது கோப்பில் இவ்வளவு நாட்கள் மறைவாக இருந்துள்ளது. கட்டுரையின் சாரம், எழுத்து நடை கவனிக்கும் போது டாக்டர். ஜெயபாரதி அய்யா கட்டுரை மாதிரி தெரிகிறது. பலரும் படித்து பயன் பெற வேண்டுமென்ற எண்ணத்தில்

இதனை தளமேற்றுகிறேன்

----------------------------------------------------------------------

சும்மா #1

 திருஞான சம்பந்தப் பெருமான் கூறுகிறார்,

      போகம் மறியார் துவர் போர்த்துழல்வார்

      ஆகம் மறியா வடியா ரிறையூர்

      மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூன்

      மீகம் மறிவார் வேணு புரமே

 

  மிக அருமையான பாடல்இதிலே மூகம் என்பது மௌனம் என்றும் சொலற சும்மா இருத்தல் என்று சொல்லப்படும் நிலையேமூகம் என்னும் தேனருஞ்சொல்லை தமிழர்கள் உள்ளார்ந்து எடுத்தாளவேண்டும்மூகம் என்னும் சொல் பன்முகப் பொருள் நிறைந்த அருமையான சொல்நான் என்னும் எண்ணம் அற 'தன்மை வாயிலாராய்', தன்னுள் தானாய் ஊன்றி னிற்கும் நிலை.

  'ஆகம் அறியா அடியார்என்பதும் மிக ஆழமான பொருள் கொண்டதுதான்.மௌனகுரு சுவாமிகள் ஒருமுறை நிர்வாணமாக நடந்து செல்கையில்ஒரு போர்வீரன் அவரைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்தான்எவ்வித பிரக்ஞையும் இன்றி நடந்து சென்ற சுவாமிகளின் கையை வெட்டிவிட்டான்அப்போதும் ஏதும் உணராமலேயே  சுவாமிகள் நடந்துசென்றார்.

    யாரோ கையை எடுத்து வந்து கொடுத்ததாகவும் கையை திரும்பவும் ஒட்டிக்கொண்டதாகவும் சொல்வார்கள்அவதூதர் என்னும் அடியார்கள் உடல் பிரக்ஞை இல்லாதவர்கள்சமணர்களில் 'திகம்பர சமணர்என்போரும் அப்படித்தான்.

   இந்த "சும்மாஎன்ற சொல்லில் அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறதுஒரு பொ¢ விசேஷம் உண்டு உண்மையிலேயே அதனுடைய அர்த்தம் சொல்லிலோ அல்லது வாக்கியத்திலோ அடங்கிவிடமாட்டாது. இதை விளக்க வேண்டுமானால் உள்ளத்தின் அமைப்பையும்எண்ணங்களின் பிறப்பையும் சிறிதாவது உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.

 முதலில் உள்ளத்தின் அமைப்பை நோக்குவோம்.

பண்டைய இந்திய வல்லுனர்கள்உள்ளத்தில் நான்கு கூறுகள் இருப்பதாகக் கண்டனர்.மனசுசித்தம்புத்திஅஹம்காரம் எனபவையே அவை. -- மனசு:

 "மனசு" -

புலன்களின் வாயிலாக வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் தகவல்களையும் இது வாங்கிஉடலின் இயக்கங்களோடு தொடர்புபடுத்தும்.அதனிடம் வந்து சேரும் உணர்வுகள்எண்ணங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவகையில் அது மாறிக்கொண்டே இருக்கும்பல நூற்றுக்கணக்கான தாக்கங்கள் அதற்கு ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால் அது சதா சலனத்திலேயே இருக்கும்.

 நினைவுகள் மனசுக்கு வந்து சேர்ந்துமனசில்தான் பரவிவிரவிமின்னிமறையும்.அதனிடம் வந்து சேரும் தாக்கங்களையும் தகவல்களையும் ஆழமாகவும்,அழுத்தமாகவும் பகுத்து ஆயும் ஆற்றல் அதனிடம் இல்லை.முடிவுகளை எடுக்கும் தன்மையும் கிடையாதுமனசில் வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் ஒருவித primitive நிலையில்தான் மனசு எடுத்துக்கொள்ளும்.ஏதோ ஒரு நல்லது,கெட்டதுஇன்பமானதுஆபத்தானதுதுன்பமானது என்ற அளவில்தானஎடுத்துக்கொள்ளும்மூளையின் Reptilian Brain பகுதியும் ஓரளவிற்கு இந்தமாதி¡¢தான்.

 மனசு என்பது நம்முடைய எண்ணங்களின் வெளிப்படையான நிலைக்களன்அங்குத்தான் எண்ணங்களின் ஆக்கம் முழுமையாக வெளியில் தொ¢யும்.நாம் முழு உணர்வுடன் விளங்கும் full-conscious state மனசு manifest செய்கிறது.


மனசுஉணர்ச்சிகளாலும் பாவங்களாலும்(EMOTIONS and not sins) எளிதாக இழுத்தடிக்கப்படவும், உந்தப்படவும்உதைக்கப்படவும் கூடியது.

 சித்தம்:

"சித்தம்என்பது சற்று சிக்கலானது.உணர்வுகள்,நினைவுகள்ஞாபகம்போன்றவற்றின் அடித்தளம்.

இங்கிருந்துதான் எண்ண அலைகள் மேலே எழும்பி மனசுக்கு வரும்.ஆற்றின் அடிமட்டத்தில்

அமைந்துள்ள ஆற்றுப்படுகைதான் சித்தம் என்று கொண்டோமானால்அதன்மேல் ஓடும் ஆற்று

நீரோட்டம், அதில் உள்ள சுளிப்புகள்,சுழற்சிகள்,அலைகள்குமிழிகள் போன்றவை மற்ற

அம்சங்களாகிய மனசு, அஹம்காரம் போன்றவை.

This is a huge pool of sensory impressions and data.

உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் எண்ணஎழுச்சிகளும் இங்கிருந்துதான் மனசுக்கு வரும்.அதே சமயத்தில் எந்தவித தூண்டுதலும் இல்லாத போதுதன்பாட்டுக்குக் குமிழிகளைப்போல நினைவுகளையும் ஞாபகங்களையும் fantasy எனப்படும் பகற்கனவுகளையும் மேலே அனுப்பும்அவை மனசின் மேற்பரப்பில் குமிழிகளாகத் தோன்றி வெடித்துச் சிதறி மறையும்.

"அஹம்காரம்"-சாதாரணமாக இதை வேறு பொருளில் கொள்வார்கள்ஏதோ திமிர் சம்பந்தப்பட்டது போலத் தோன்றும்அவ்வாறல்ல.

"நான்என்னும் தன்மைதான் அஹம்காரம். நம்முடைய ஆன்மா பல பிறவிகளை எடுக்கிறது அல்லவாஒவ்வொரு பிறவியிலும் அது தான் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல்தொடர்புகள்உறவுகள்விருப்புகள்,வெறுப்புகள்அடையாளங்கள் முதலியவற்றை வைத்துத் தன்னையே "தான்", "நான்","எனதுஎன்று தன்னிலைப்படுத்திக்கொள்ளும்.அந்தப் பிறவியில் அந்தக் குறிப்பிட்ட தன்மைகளே சாஸ்வதமானவையாகவும் நிச்சயமானவையாகவும் தோன்றும்ஆனால் அதன் முற்பிறவியில் முற்றிலும் வேறு தன்மைகளையும்அடையாளங்களியும் கொண்டதாக விளங்கியிருக்கும்.மனிதனாகவே பிறந்தாலும் கூட ஊர்பேர்உறவுசொந்தபந்தம்விருப்புவெறுப்புஆற்றல்படிப்புஇனம், மொழி,என்றவாறு முற்றிலும் மாறுபட்ட கூறுகளைக் கொண்டதாக அந்தப் பிறவி விளங்கக்கூடுமல்லவா?

 அடுத்த பிறவியிலோ இன்னும் வேறு நிலைமைகள் விளங்கலாம்.ஆனால்ஒரே ஆன்மாதான் இத்தனை பிறவிகளில் வேறு வேறு அடையாளங்களுடன் விளங்குவதை அந்த ஆன்மா உணரமாட்டாதுஅதையெல்லாம் அஹம்காரம் மறைத்துவிடும்.இந்த அஹம்காரமே ஒட்டுமொத்தத்தில் பிறவியெடுத்துள்ள ஆன்மாவை இறைவனிடத்திலிருந்து தனிமைப்படுத்திவிடும்.

"புத்திஎன்பது பகுத்து அறிவதுஉணர்வுகளை அலசுவதுநல்லது/கெட்டதுநியாய அநியாயங்கள் போன்றவைமனசாட்சிசித்தாந்தங்கள்தீர்மானங்கள்தர்க்கங்கள்,நிச்சயங்கள் போன்றவற்றை நடத்தும்நாம் அறிவுபூர்வமாகச் செய்யவேண்டிய நடவடிக்கைகளை ஆணைகளாக்கி மனசுக்கு அனுப்பும்.மனசின் ஓட்டங்களை அனுமானிப்பதுஅளவெடுப்பதுகவனிப்பதுகட்டுப்படுத்துவது எல்லாம் செய்யும்.நம்முடைய சுற்றுச் சூழல்களுக்கு ஏற்ற விதங்களில் நம்முடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொடுக்கும்அழகுணர்வுஇசைரசனை,போன்றவற்றின் இருப்பிடம்.

 சில சமயங்களில் உணர்ச்சிபூர்வமான தாக்கங்களுக்கு புத்தி அடங்கிவிடும்சில சமயங்களில் பழக்கவழக்கங்களாலும்ஆழமாக விதைக்கப்பட்ட நம்பிக்கைகளாலும் முடக்கப்பட்டு விடும். ஆனால் புத்தியால் இவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.--



அஷ்டாங்க யோக சம்பந்தத்தில் இந்த நான்கினையும் கூறவில்லைஅவர் ஒட்டுமொத்தத்தில் "சித்தம்" என்ற ஒரே சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறார்.

  "யோகாஸ் சித்த வ்ருத்தி நிரோதஹ",

என்று மாத்திரம் ரத்தினச்சுருக்கமாகக் கூறிவிட்டார்.

  பல்வேறு காலங்களில் எழுதியுள்ள பல்வேறு அறிஞர்கள், "சித்தம், "மனதுஎன்பனவற்றுக்குப்

பலவகையான பொருள்வேறுபாடுகள் ஏற்படச் செய்திருக்கிறார்கள்.)

ஆகமொத்தத்தில் உள்ளத்தில் இவ்வளவும் இருக்கிறது.

எண்ணங்களின் தோற்றம் ஏற்படுவதைக் கவனிப்போம்.

 எண்ணங்களின் பிறப்பை இப்போது பார்ப்போம்.

  உள்ளத்தில் எப்போதும் இரண்டு செயல்கள் மாறி மாறி நடந்துகொண்டே இருக்கின்றன.

ஒன்றுநினைப்பு.

இன்னொன்றுமறப்பு.

  மனத்திரையில் ஓர் எண்ணம் தோன்றுகிறதுநம்மை அறியாமலேயே அது போய் விடுகிறது.

ஆனால்வேறொன்று வந்து விடுகிறதுஇருந்தாலும்மனது வெற்றிடமாக இருப்பதேயில்லைமனதில்

எந்தவொரு நினைப்புமே இல்லாமலோமறப்பும் இல்லாமலோ இருப்பது கடினமாக இருக்கிறது.

  நினைப்புஎன்பது எப்படி ஒரு active process ஸோ அதுபோலவே மறப்பு என்பதுவும்

ஒரு active processதான்ஒன்றை நாம் உணருகிறோம்இன்னொன்றை நாம் உணருவதில்லை.

  மறப்பு என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம்தான்.

 

      "நினைக்கத் தொ¢ந்த மனமே!

      உனக்கு மறக்கத் தொ¢யாதா?"

 நினைவெல்லாம் மறக்கமுடியாமல் போனால் பைத்தியம் அல்லவா பிடித்துவிடும்!

  பழங்காலத்து யோக நூல்களில் எண்ணத்தை "வாக்என்று குறிப்பிடுகிறார்கள்இந்த

வாக்குகளில் நான்கு உண்டுபராபஸ்யந்திமத்யமாவைகா¢ ஆகியவைவைகா¢யும் இரண்டாக இருக்கிறது.சொல் வடிவத்திலும் வாக்கிய அமைப்பிலும் எண்ணம் விளங்குவதைத்தான் "வைகா¢" என்கிறோம்அது பேச்சாக வெளியில் பா¢ணமிக்கும்போது அதை"தூல வைகா¢" என்றும்வெறுமனே அதே வடிவில் மனதில் மட்டுமே வெளிப்பாடு கொண்டு விளங்கும்போது அதனை "சூட்சும வைகா¢" என்றும் கூறுகிறோம்.இதெல்லாம் ஏதாவது ஒரு மொழியில் அமைந்திருக்கும் - தமிழ் , இந்திஆங்கிலம் என்று.

 வைகா¢ வாக்குக்கு அடிப்படையான இன்னொரு நிலையில் அதற்கு முன்னதாக விளங்கும்இதனை

"மத்யமாவாக் நிலை என்போம். Instinct என்பது சொல் வடிவம் பெறாத ஓர் எண்ணக்கூறு.

 

      இதைப்போன்ற நிலையில்தான் மத்யமா விளங்கும்இதை யோக நூல்கள் மயில் முட்டையுடன்

ஒப்பிடும்மயில் முட்டையில் வெளியே ஓடு இருக்கிறதுஅதனுள்ளே வெண் கருமஞ்சள் கரு எல்லாம் இருக்கின்றனஅதற்குள் மயிலின் அனைத்துக்கூறுகளும் விளங்குகின்றன.இதுவேதான் முழு மயிலாகப் பா¢ணமிக்கிறதுமயிலை வைகா¢ என்றால் முட்டைதான் மத்யமாமத்யமா நிலையில் இருக்கும்எண்ணத்தை நாம் சாதாரணமாக முழுமையாக அறிந்து கொள்ள முடியாதுஆனால்வைகா¢ நிலையில் உணரலாம்யோகிகள் மத்யமா நிலையை உணருவார்கள்.

  இதற்கும் அடிப்படையான இன்னொரு புராதன நிலை உண்டுஅதை "பஸ்யந்திஎன்று கூறுவார்கள்மத்யமா நிலையில் பா¢ணமிக்கும் முன்னதாக எண்ணம் பஸ்யந்தி நிலையில் விளங்கும். இந்த நிலை இன்னும் சூட்சுமமானதொன்றுவிதையிலிருந்து வெளிவந்த முளையைப்போன்ற நிலை.

  இதற்கும் அடிப்படையான ஆதார நிலையை "பராவாக் என்பார்கள்முளைக்கும் முன்னால் உள்ள விதையின் நிலையைப் போன்றது அதுயோக நூல்கள் பராவை ஆலவிதைக்கு ஒப்பிடும்ஆலவிதையிலிருந்து முளை தோன்றிஅது செடியாகிஅதன் பின்னர் தண்டுகிளைகொப்புகாம்பு, இலைவிழுதுஎன்ற முழு ஆலமரமாகப் பா¢ணமிக்கின்றது அல்லவா?

 

ஆலவிதை - பரா

முளை - பஸ்யந்தி

செடி - மத்யமா

ஆலமரம் - வைகா¢--


இப்படியாகத்தான் எண்ணம்பேச்சுஎழுத்து எல்லாம் தோன்றுகிறதுமாபெரும் யோகியரே பஸ்யந்திபரா வரைக்கும் சென்று வாக்எண்ணங்களை உணரமுடியும்அப்படிப்பட்டவர்கள் பரா நிலையிலேயே எண்ணத்தின்பிறப்பை நிறுத்தி விடுவார்கள்.

 இந்த நிலைதான் "சும்மாஇருக்கும் நிலை.

 "சொல் அறசும்மா இரு!" என்பது அருணகி¡¢யாருக்கு முருகன் கூறிய உபதேசம்அந்த மாபெரும் பொருள் அறியமுடியவில்லை என்று அருணகி¡¢யார் கூறுகிறார்.

 எண்ணங்களை அற்றுப்போகச் செய்ய வேண்டுமானால்முதலில் வைகா¢யை அடக்கிமத்யமாவை அடக்கிபஸ்யந்தியையும் அடக்கிமுடிவில் பரா நிலையில் ஒன்றுமே எழும்பாமல் நிறுத்தவேண்டும்.

 இவ்வாறு செய்யும் அதே நேரத்தில் "மனஸ்எனப்படும் உள்ளப்பகுதி ஒடுங்கி விடும்ஏனெனில் அங்கு எண்ணங்கள் ஏதும் நிலவ மாட்டாபுத்திசித்தம்அஹம்காரம்,ஆகிய மற்றவையும்கூட இல்லாமல் போய்விடும்மனசு அழிந்த நிலை இதுதான்இந்த நிலையில்தான் உணர்வுகள்கூட இருக்கமாட்டாதேஆகவே எதுவும் உணரப்படவும் மாட்டாதுபதிப்பிக்கப்படவும் மாட்டாது.

 இதுதான் நினைவும் மறப்பும் அற்ற நிலை.

நினைப்பு இருந்தால்தானே மறதி ஏற்படுவதற்கு?

இதைத்தான் "சும்மாஇருத்தல் என்பார்கள்.

   "தி¡¢புடி ஞானம்என்று ஒரு விஷயம் இருக்கிறதுகாண்பான்காணும் செயல்காட்சிப்பொருள்இவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகள்இதைத்தான் தி¡¢புடி என்பது.  சும்மா இருக்கும்போது தி¡¢புடி ஞானம் அற்றுப் போய்விடும்.

மனசு இயங்கும்போது உணர்வுகள்உணர்ச்சிகள் இருக்கும்உணர்வு இருந்தால்தான் ஓர் அனுபவம் எப்படியிருக்கும் என்பதை உணரமுடியும்.  ஆனால்உணர்வுமனசு எல்லாம் இருக்கும்போது சும்மா இருக்கும் நிலை ஏற்படமாட்டாதுசும்மா இருக்கும்போதோ மனசுஉணர்வுகள் இரா.

 ஆகவேதான் சும்மா இருக்கும் தன்மை எப்படியிருக்கும் என்பதனைச் சொல்ல முடியாது.

  "கண்டவர் விண்டதில்லைவிண்டவர் கண்டதில்லை"

   நினைப்பும் இல்லைமறதியும் இல்லை;

    வாக்கும் இல்லைமனமும் இல்லை;

    இரவும் இல்லைபகலும் இல்லை.

 அது ஒரு Twilight Zone.

 "வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் உள்ளம் தெளிவித்து"

                                                      = ஒளவையார்

ஒளவையார் "விநாயகர் அகவ"லில் மேற்கூறியவாறு சொன்னவாக்கும் மனமும் இல்லாத நிலைதான்

"சும்மா இருப்பது".

  ஆங்காரம் உள்ளடக்கிஐம்புலனைச்சுட்டறுத்துத்

      தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?        - பத்திரகி¡¢யார்

  அந்தத் தூங்காமல் தூங்கும் நிலையும் அதுதான்ஐம்புலன்களின் செயல் பாட்டினைநிறுத்தினால் ஆங்காரமாகிய "தான்என்னும் உணர்வு இருக்கமுடியாது அல்லவா?

   "வேட்டை பொ¢தென்றேவெறி நாய் துணை கொண்டு,

      காட்டில் புகுவேனோகண்ணேரகுமானே!"

                                          - குணங்குடி மஸ்தான்

  ஐம்புலன்களை மஸ்தான் சாகிபு வெறிநாய்களாக உருவகப்படுத்தியிருக்கிறார்.

      இதனை "ரகுமான் கண்ணிஎன்னும் பகுதியில் காணலாம்.

   அவர்கள் யோகியராக இருக்கட்டும்; Sufiக்களாக இருக்கட்டும்யூத Essenes ஆக இருக்கட்டும்; Augustine, St.Theresa போன்ற ChristianMystics ஆகவோசீன Taoist ஆகவோ, Zen பெளத்தராகவோஅல்லதுநம் தமிழ் சித்தர்களாகவோ இருக்கட்டும்யாராகவே இருந்தாலும்அவர்களுடையது ஒரு c ommon மொழி.

   அதுதான் "சும்மா இருக்கும்மொழி.

 ¡¢ஷி தன்னுடைய posting ஒன்றில் ஜாக்ரத்ஸ்வப்னாஸுஷுப்திது¡¢யம் ஆகியவற்றைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

   இவையெல்லாம் மனிதனின் உணர்வுகளின் பல்வேறு நிலைகள். They are various levels of Human Consciousness. இவற்றை "அவஸ்தைகள் என்பார்கள்இவற்றுடன் து¡¢யாதீதம் என்பதனையும் சேர்த்து "பஞ்சாவஸ்தைகள்என்பர்.

         காதெல் பெஸாஸ்ஸெகாதெல் பெஸாஸ்ஸெ

      ஏதோ சவுக்கியம் பெர்வாயில்லை

      காதெல் பெஸாஸ்ஸெகாதெல் பெஸாஸ்ஸெ

      நானும் அவெஸ்த்தெயும் பெர்வாயில்லை......

 என்பதில் வெரும்...மன்னிக்கவும் வரும் 'அவெஸ்த்தைவேறு

     இது வேறு.

 1. ஜாக்ரத் அல்லது சாக்கிரம் என்பது முழு நினைவோடு இருக்கும் விழிப்பு நிலையாகும்இதனை தமிழ்  சித்தர் மரபு "நனவுஎன்று அழைக்கும் மூளையில் தோன்றும் "Electro Encephalography" யில் "beta rhythm" காணப்படும்.

  2. ஸ்வப்னா அல்லது சொப்பன நிலையாகிய கனா நிலை - தூக்கத்தில் கனவு காணும் நிலையாகும் இது.   இதனை "Rapid eye Movement Phase of Sleep" அல்லது "REM Stage of Sleep"   என்றும் கூறுவார்கள்

இதன்போது மூளையின் E.E.G.யில் "theta rhythm" பதிவாகும்.

   3. ஸுஷுப்தி அல்லது சுழுத்தி அல்லது உறக்க நிலை -கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கம்தூங்க ஆரம்பித்து அரைமணியிலிருந்து ஒன்றரை மணி நேரம் வரையில் இந்த நிலை பெரும்பாலும் நீடிக்கும்இதில் E.E.G. patternஇல் "delta rhythm" தோன்றும்.

  4. து¡¢ நிலைஇது சமாதி நிலைசும்மா இருக்கும் நிலை.இதன் ஆரம்ப நிலைகளில் E.E.G. யில் "alpha rhythm" தோன்றும்.

  5. து¡¢யாதீதம் - இது போக்கும் வரவும் அற்ற நிலைசிவபுராணத்தில் மாணிக்கவாசகர்  சொல்லியிருக்கிறார் அல்லவா?

      "போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனே"

பிறப்பு இறப்பு ஏற்படாத நிலை. 'உயிர்ப்படக்கம்என்று சித்தர்கள் கூறுவார்கள்இதுதான் "நிர்விகல்ப்ப  சமாதிஎனப்படுவது. "சாயுஜ்ஜியம்என்பதுவும் இதுபோன்றதுதான்.

 தமிழ் சித்தர்கள் இவற்றிலேயே உட்பி¡¢வுகளைக்கூட கண்டிருக்கின்றனர்.

 1. சாக்கிரத்தில் சாக்கிரம் - மனதை வெளியில் போய் அலையவிடாமல் ஒரே விஷயத்தில் ஆழமாக ஈடுபடுத்துவதுஅந்நிலையில் ஏற்படும் சிந்தனைகளை மனதில் ஆழமாகப் பதிய வைத்து நினைவில் இருத்திக் கொள்வது.

 2. சாக்கிரத்தில் சொப்பனநிலை - விழிப்பு நிலையிலும்கூட மனதை அவ்வப்போது வேறு சில Fantasy -களில் சஞ்சா¢க்க விடுவதுசில விஷயங்கள் மறந்தும் சில விஷயங்கள் மனதில் நிற்பதுமாக உள்ள நிலை. "Day- dreaming".3. சாக்கிரத்தில் சுழுத்தி நிலை - கண்கள் விழித்திருந்தாலும்கூட விஷயங்களை கவனிக்காமல் மனதை உறக்க நிலையில் வைத்திருப்பது

.4. சாக்கிரத்தில் து¡¢யம் - விஷயங்களை மிக ஆழமாக non - verbal நிலையில் ஆராய்ந்து ஆழ்ந்திருத்தல். Abstract thought. "ஐன்ஷ்டைன்நிலை.

 5. சொப்பனத்தில் சாக்கிரம் - தூங்கிக் கனவு கண்டுஎழுந்த பின் கனவில் கண்டது அனைத்தையும் சொல்லமுடிவது.

  வெள்ளையம்மாள் பாதர் வெள்ளையிடம் பாடிய,

  "போகாதேபோகாதேஎன் கணவா!

  பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்"

என்ற பாட்டின் நிலை.

6. சொப்பனத்தில் சொப்பனம் - கண்ட கனவில் சிலவற்றை மட்டும்

      ஞாபகத்தில் வைத்து மற்றவற்றை மறந்து விடும் நிலை.

 7. சொப்பனத்தில் சுழுத்தி - கண்ட கனவு முற்றாக மறத்தல்.

 8. சொப்பனத்தில் து¡¢யம் - சொல்லத்தொ¢யவில்லை.

 

  மொத்தம் 30 கொக்கி களையும் இணைத்து கார்பனுடன் ஹைட்ரஜன் அணுக்களை சா¢யான அமைப்பில்இணைக்கவேண்டும்.ஆனால் இது எப்படி என்பதுதான் பு¡¢யவில்லை.

   இதில் ஆய்வுகள் நிகழ்த்தி வந்த Dr.Kekule பல நாட்கள் போராடியும் இணைப்பை சா¢யாக உருவகப்படுத்த முடியவில்லைஎப்படியும் சில வேலன்ஸி கொக்கிகள் சும்மா தொங்கினஎன்னும்பொழுது பென்ஸீன் மாலிக்கியூல் எப்படியிருக்கும் என்பதுவும் தொ¢யமுடியாமல் இருந்தது.

      ஒரு நாள்கெக்கூலே தூங்கிக் கொண்டிருந்தார்அப்போது ஒரு விசித்திரமான கனவுஒரு பாம்பு நெளிந்துஆடி வந்ததுபின்னணியில் நாகின் மெட்டு கேட்டதா என்பது தொ¢யாதுஅந்தப் பாம்பு அப்படியே சுருண்டு தன்னுடைய வாலைச் சுருட்டித் தன்னுடைய வாயில் திணித்துக் கொண்டதுஅப்படியே ஓர் அறுமுனைச் சதுக்க வடிவில் தோன்றியது.

    கெக்கூலே விழித்தெழுந்ததும் அந்த Hexagon வடிவத்தை வரைந்து ஓவ்வொரு முனையிலும் ஒவ்வொரு கார்பன் அணுவை வைத்து ஒவ்வொரு கார்பனுடனும் பக்கவாட்டில் ஒவ்வொரு ஹைட்ரஜன் அணுவைக் கொக்கி போட்டு இணைத்தார்.

அந்த Hexagon வடிவில் Benzene molecule இன் structural formulaவை ஏற்படுத்திவிட்டார்,

கெக்கூலேஇதுதான் அந்த famous Benzene Ring. Steroids போன்றவற்றின் ஆய்வுகளுக்கும் புதிய

கண்டுபிடிப்புகளுக்கும் Benzene Ring தான் அடிப்படை. (கெக்கூலேயை "Lord of the Rings"

என்றோ "Ring-master" என்றோ அழைக்கலாமோ?)

 

9. சுழுத்தியில் சாக்கிரம் - தூங்கிய தூக்கத்தின் தன்மையை விழித்ததன்பின் உணர்ந்திருத்தல்.

 10. சுழுத்தியில் சொப்பனம் - தூங்கினோமாதூங்கவில்லையா என்ற ஐயப்பாடு உள்ள நிலை.

 11. சுழுத்தியில் சுழுத்தி - தூங்கியதுகூட தொ¢யாத நிலை.

 12. சுழுத்தியில் து¡¢யம் - Hypnosis, Mesmerism செய்வதெல்லாம் இந்த மாதி¡¢ மனமுறங்கிய நிலையில்தான்  இந்த அளவிற்குப் பண்டைய கால சித்தர்கள் கண்டவர்கள்  இவைகளை எங்கேயோ விட்டுவிட்டோம்

  Biofeedback கருவிகளின் உதவியோடு இந்த நிலைகளை நன்றாக ஆராயலாம்.

  இதனால் மனதைப்பற்றிய ஆய்வுகளில் புதிய எல்லைகளைக் கண்டறிய முடியும்இதனால் ஏற்படும் லாபமோ அளவிடப்பட முடியாததாக இருக்கும்.

  சித்தர்கள் நூல்களைப் 'பு¡¢ந்து கொள்ள முடியாத குப்பைகள்என்று நினைக்கும் கருத்தை அகற்றி, அவற்றைப் புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க வைக்கும்இதனால் நாம் அளவிட்டு அறிந்து கொள்ளும் விஷயங்களை நாம் எத்தனையோ விதங்களில்  பயன்படுத்தலாம்அந்தந்த நிலைகளைவெளிக்கருவிகளினாலோ அல்லது மருந்துகளினாலோ செயற்கையாக ஏற்படுத்த முடியுமா?

   எப்படிச் செய்யலாம்?  மனோதத்துவ ¡£தியில் இதற்கு என்னென்ன applications உண்டுமனோவியாதிகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் பயன்படுமா?

  REM Sleep இல் இருக்கும்போதெல்லாம் தொடர்ச்சியாகத் தூக்கத்தை மூன்று நாட்களுக்குக்

 கலைத்துவிட்டோமானால் தற்காலிக புத்திமாறாட்டம் ஏற்படும்.

      Relaxation Response போல இந்த நிலைகளை develope செய்யமுடியுமா?...etc.

      Gentlemen! The sky is the limit!--

சும்மா இருத்தலுக்கு என்ன செய்யவேண்டும்?நம் மனதில் ஓடும் எண்ணங்களை trace பண்ணவேண்டும்எங்கிருந்து தோன்றுகின்றன?எங்கே செல்கின்றனஎன்ன sequence of thought ஏற்படுகிறது?என்பனவற்றையெல்லாம் impartial observer ஆக இருந்து கவனிக்க வேண்டும்.வேற்றுப்புலனுணர்வுத்தூண்டுதல்கள் sensory stimulations குறைக்கப் படவேண்டும்.

  கண்களை லேசாக மூடிக்கொள்ளலாம்வெளி ஓசைகள் கேளா வண்ணம் தடைசெய்ய ஏதாவது மெல்லிசையைக் கேட்கலாம்சில Kitaro pieces, Enigma, Gregorian Chants, Baroque musicபோன்றவற்றைக் கேட்கலாம்நம் பக்கத்து இசையானால் குழல்வீணைபோன்ற கருவிகளில் இசைக்கப்படும் வசந்தாநீலாம்பா¢, மோஹனம்கானடாதன்யாசி போன்ற ராகங்களைக் கேட்கலாம்அல்லது வெறும் தம்பூராவை மீட்டிக்கொண்டு அதன் சுருதியில் லயிக்கலாம்ஊதுவர்த்தியைப் பற்ற வைத்துக்கொள்வதால் நுகர்வு உணர்ச்சியை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்சில வகையானவாசனைகள் மனச்சாந்தியை ஏற்படுத்தும்சந்தன எண்ணெய்அரகஜாஜவ்வாதுரோஜா போன்றவை.

 இதுதான் ஆரம்ப நிலை ஒரு காலத்தில் சும்மா இருக்கும் நிலையை அடையலாம்.

 சும்மா என்ற சொல்லைத் தற்சமயம் பல வகையான அர்த்தங்களில் பயன்படுத்துகிறோம் அல்லவா?

சிற்சில பிரயோகங்களைப் பார்ப்போமே?

 

(1) பேசாமல் இருப்பது:

என்னவேஅப்பொம் பிடிச்சு பாக்கேன்?

தொணதொணன்னுன்னு பேச்சிக்கிட்டே இருக்கீர்இப்பொம் கொஞ்சம் சும்மா இரும்.

 

(2) ஒன்றும்செய்யாமல் இருப்பது:

துருதுருன்னு எதையாவது செய்யாமல் கொஞ்சம் சும்மா இரு!

 

(3) இயல்பாக normal ஆக இருப்பது:

என்னா மம்முதுஒங்க வாப்பா முடியாம இருந்தாலுவளேஇப்ப எப்பிடி இருக்காலுவ?

இப்ப பரவாயில்லைமாமுசும்மாதான் இருக்காஹ.

 

(4) வெறுமையாக இருப்பது:

அந்த வீட்டுல யாரும் குடி வந்துட்டாஹளாஇல்லைஇன்னும் சும்மாதான் கிடக்குது.

அவள் காதுல கழுத்தில ஒண்ணுமே நகைநட்டு இல்லாம சும்மா இருக்கே?

 

(5) தொழிலின்றி இருப்பது:

ஏனுங்கோஉன்ற பையன் வேலையில சேர்ந்துட்டானுங்களா?;இல்லீங்களேசும்மாதானே இருக்குறானுங்கோ!

 

(6)காரணமின்றி:

அடங்க இஸ்க்கிஇன்னாபா இம்மாந்தொலை வந்து கீறேசெம்மாதாங்கண்ணு.

 

(7)பயனின்றி:

ஏங்க்றேன்கானா ரூனா பானா ழானாஎன்னங்கிறேன்?

அந்த வடுவாப்பய சும்மா வெட்டித்தனமா இஙிண வந்துக்கிணும் அஙிண போயிக்கிணுமா இருக்கான்?

 

(8)விளையாட்டாய்ச் சொல்வது:

ஏண்டாகுருத பறக்குதுன்னுட்டு சொன்னகுருத எங்கனாச்சும் பறக்குமாசும்மா சொன்னேன்.

 

(9) கருத்தில்லாமல்:

இவ்வளவு நேரம் சும்மாவா உங்கிட்டே அவ்வளவு கதையும் சொன்னேன்?

 

(10) இலவசமாக:

இது என்ன விலைக்கு வாங்கினே?

விலைக்கெல்லாம் வாங்கலைசும்மா கெடச்சுது.

 

(11)ஓய்வு எடுத்தல்; relaxing:

ரொம்ப tired  இருக்குகொஞ்சநேரம் சும்மா இருக்கேன்.

 

(12) அடிக்கடி:

ஏன் சும்மா வந்துண்டே இருக்கேள்?

 

(13) தடங்கலின்றி:

மத்தவங்களுக்குத்தான் பர்மிஷனெல்லாம் தேவைநீங்க சும்மா வாங்க.

(14) பயன்படுத்தப்படாமல்:

சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!என்ற சொல் கன்னடத்திலும்

மலையாளத்திலும் இருக்கிறதுவேறெந்த இந்திய மொழியிலும் இருக்கிறதா என்பது தொ¢யவில்லை.

.

(எங்கே போகிறாய்?)

(சும்மா நடந்துகொண்டிருக்கிறேன்.)

 

பல வட்டாரசமூகபேச்சுமரமுகளில் இருப்பதைக்காணலாம். ;சும்மா என்னும் சொல்லைபயன்படுத்துகிறார்கள்

என்பதையே அது சற்று அழுத்தமாகக் காட்டும்அவ்வளவுதான்.

மேலே உள்ளவற்றுடன் இதையும் சும்மா சேர்த்துக்கொள்ளுங்கள்.

பொண்ணு ஒருத்தி...

சும்மா சும்மா

அவளும் நானும்

சும்மா சும்மா

அஞ்சு மணிக்கி

சும்மா சும்மா

சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா...சும்மா...சும்மா சும்மாதானே:-)--

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை