ல,ள,ழ, ந,ன,ண,ர,ற ள properly? - Dr.T.Muththu Kannappan ( https://www.facebook.com/media/set/?set=a.10150169499072473.292214.141482842472 )எழுத்துக்களைச் சரியாக
உச்சரிக்கவில்லையென்றால் சொற்களின் பொருள்கள் வேறுபட்டுவிடும். நாம் பேசுவதன் கருத்தைப் பிறை தெளிவாக மயக்கத்திற்கு இடமின்றி உணர்ந்துகொள்ள வேண்டுமெனில் நாம் சொற்களில் உள்ள எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்க வேண்டும். தமிழ் மொழியில் சில எழுத்துக்களை உச்சரித்தல் கடினமானது. சிற்சில எழுத்துக்களின் உச்சரிப்புகளில் நுண்ணிய வேறுபாடுகளே உள்ளன. தமிழ் மொழிக்கே சிறப்பாக அமைந்துள்ள சில (ல,ள,ழ, ந,ன,ண,ர,ற) எழுத்துக்களைச் சரியாக உச்சரிப்பதற்கு இது உங்களுக்குத் துணையாக இருக்கும் என எண்ணுகிறோம். உச்சரிப்புக்கு முதன்மையாய் உள்ளது வாய். வாயில் பலவேறு பகுதிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை.நா(க்கு)பற்கள

1அவ் வழி,பன்னீர் உயிரும் தம் நிலை திரியாமிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். 2அவற்றுள்,அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்.
3இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்னஅவைதாம்,அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய.
4உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும். 5தம்தம் திரிபே சிறிய என்ப. 6ககார ஙகாரம் முதல் நா அண்ணம்.
7சகார ஞகாரம் இடை நா அண்ணம்.
8டகார ணகாரம் நுனி நா அண்ணம்.
9அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின.
10அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்நா நுனி பரந்து மெய் உற ஒற்றதாம் இனிது பிறக்கும் தகார நகாரம்.
11அணரி நுனி நா அண்ணம் ஒற்றறஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்.
12நுனி நா அணரி அண்ணம் வருடரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.
13நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உறஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.
14இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம்.
15பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசைகண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும்.
17மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும்.
18சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணிஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும்.
19எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்துசொல்லிய பள்ளி எழுதரு வளியின்பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்துஅகத்து எழு வளி இசை அரில் தப நாடிஅளபின் கோடல் அந்தணர் மறைத்தே.
20அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே.


(எ-டு)
கல்,பல்,பல,நலம்,பலப்பல,அல்லல்,வல்லவன்,நல்லார்,மலை,
பல்லி,பல்லெல்லாம். — with Amutha Arumugam.

நுனி நா(க்கு)ச் சற்று மேல்நோக்கி வளைந்து அண்ணத்தின் (மேல்வாயின்) நடுப்பாகத்தை அல்லது அதற்குச் சற்றுக்கீழ் தடவுதலால் " ள " வரும். நா தடவாமல் அப்படியே பொருந்தி நின்றால் அதன் மெய்யெழுத்தாகிய " ள் " வரும். ஒலித்துப் பாருங்கள்.
(எ-டு)
பளபள,வளம்,கள்,பள்ளம்,உள்ளே,தள்ளு,பிள்ளை — with Amutha Arumugam.

நாவின் நுனி மேல்நோக்கி (உள்நாக்கை நோக்கி) வளைந்து, சிறிது வருடி (தடவி)னால் " ழ " வரும். நா பொருந்தினால் அதன் மெய்யெழுத்தான " ழ் " வரும். இவ்வெழுத்தைப் பலமுறை உச்சரித்துப் பாருங்கள்.
(எ-டு) தமிழ்
பழம்,விழா,கூழ்,ஏழை,எழில்,உழுதொழில்
" ஏழைக் குழந்தை வாழைப்பழத்துக்கு விழுந்து விழுந்து அழுதது " என்னும் இத்தொடரைப் பலமுறை சொல்லிச் சொல்லிப் பழகுங்கள். " ழ " கரம் உங்கள் நாவில் ஒழுங்காகத் தவழும். — with Amutha Arumugam.















அருமை ஐயா. தெளிவான விளக்கம். நம் தமிழ் மக்களுக்கு இது இன்றியமையாதது.
ReplyDelete