Friday, October 7, 2011

Inner Girivalam உள்ளடங்கி கிரிவலம்


திருவண்ணாமலை உள்ளடங்கி கிரிவலம்
Thiruvannamalai Inner Girivalam 
Thiruvannamalai Inner Girivalam path is quite closer to the hill. The sacred hill of Siva has got lots of mysteries around and great souls still stay in caves and hillside which acts as power point. 


Thank to my Guru; Take us with there permission for Inner Girivalam on 1st October 2011. We also thank to my friend Mr. D.K. Deiva, connection us to join in "Thiruvannamalai Inner Girivalam" through 18Siddhar-and-techniques & Agnilingam Groups .

We start our Girivalam about 9.15 AM at Ramana maharshi ashram by Mr. Light swami. He well knows person in Thiruvannamalai girivalam committee. In his earlier time he will carry Light on girivalam way and now also he doing religious services in Thiruvannamalai.

Bhairavar [Dog] welcome us to end our Inner Girivalam at 2.30 PM near Annamalai Panjamuga viewpoint.

On Inner Girivalam we got lot of informational about Annamalai and also we see Nandi Face, Kattu Siva , Kannappar nayanar temple, Lotus pond and also different face of Annamalai Hill. We want to thank Vellore Mr. Kesavan explained about all above places.

It was a fulfilling Experience, we all had during our Thiruvannamalai Inner Girivalam . Such a trip can be organized only with coordination among the participants. We thank every one of our groups for the participation. But the bonding with we jelled during our trip was something which can only come with those whose goals are pointed towards one direction. We sure Arunachala will lead us to our goal of self-realization.

It is not possible to write in one blog, later I will explain each place in coming blogs...
                                                                                                                  Unbelievable Thiruvannamalai inner girivalam


Thiruvannamalai Inner Girivalam Stating by Mr.Light Swamy


View Annamalai hills


Nice view Annamalai hills other site..


Devotional speech...

Vellore Mr Kesavan explained about Ruthratcham...

Nandi Face in Annamalai hills ..

Nice view Annamalai hills ..

Mystic selvam ayya also travels with me...About: Mystic Selvam

Miracle image

Thiruvannamalai Inner Girivalam view Annamalai hills

Lotus pond..

Other view Nandi face in Annamalai hills

Other view Nandi face in Annamalai hills



Woman Show this fruit..

view elephantAnnamalai hills




Rest below vanni tree




Woman Show this fruit.. it help us on that way..because we don't have water


This is Fruit..



Top of Annamalai hills



Nice Way.. with Annamalai hills



Near  to ending point..


Bhairavar welcome us..


Nice View Annamalai Panjamuga


Annamalai hills view from ramana maharshi ashram


Group Photo ...



End speech by Light Swamy...






More about Inner Girivalam : https://richardarunachala.wordpress.com

Friday, September 23, 2011

Sivavakkiyar சிவவாக்கியர்



சித்தர் சிவ வாக்கியர்


சிந்தனைச் செல்வர் சித்தர் சிவ வாக்கியரின் சில பாடல் வரிகளைக் கொண்டு அவர் நாத்திகர் என்ற கருத்து பரவலாகச் சிலரால் கூறப்படுகிறது. குறிப்பாக,
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்…
- என்ற வரிகளைச் சுட்டுகிறார்கள். வசதியாக பாடலின் இறுதி வரியான “ சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ என்பதை எளிதில் மறந்து விடுகிறார்கள்.
இந்தப் பாடல் வரிகளில் எங்கே நாத்திக் கருத்துக்கள் உள்ளது?. அவர் சமயச் சடங்குகளைக் கண்டிக்கிறார். உண்மைதான். ஆனால் நாதன் உனக்கு உள்ளேயே இருக்கும் போது வெளியில் போய் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கிறாயே! மூடா. போலியான சடங்குகள் எதற்கு? உனக்குள் இருக்கும் ஜோதியைத் தேடு. அதை விடுத்து வெளியில் இறைவனைத் தேடிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. கறி சமைக்கப் பயன் படும் பாத்திரம் – வெறும் பாத்திரம் மட்டுமே. அதனால் அதன் சுவையை உணர்ந்து கூற இயலுமா? முடியாது. அது போல உருவ வழிபாடும், பூஜை, ஆராதனைகளும் இறைவனை உணர்வதற்கான பாவனையேயன்றி அவையே இறைவனாக மாட்டா. அதன் மூலம் இறைவனை உணர்ந்து அடைய வேண்டுமே தவிர, அதுவே முழுமையானதல்ல என்பதைத்தான் அவர் தனது பாடல் வரிகள் மூலம் சுட்டுகிறார்.
அதுபோல

கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
- என்ற வரிகளைச் சொல்வார்கள்.
ஆனால் அதன் தொடர்ச்சியான

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
என்ற வரிகளை வழக்கம் போல மறந்து விடுவார்கள். இந்தப் பாடலுக்கு விளக்கமே தேவையில்லை. மனதுக்குள்ளேயே அனைத்தும் உள்ளது என்பதை மிக அழகாகச் சொல்கிறாரே சிவ வாக்கியர்.
உள்ளத்தில் உள்ளத்தைக் கடந்து செல்ல ’கடவுளை’ அடையலாம் என்கிறார் சிவ வாக்கியர். உள் கட உள் கட கடவுளை அடையலாம் என்பதே அவரது கருத்து.
இதனை

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
என்று மிக அழகாக விளக்குகிறார்.
மேலும்

”உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே”
என்றும் அவர் கூறும் பாங்கு வியக்கத்தக்கது.
நீண்ட காலம் உடலைப் பாதுகாப்பது என்ற சூட்சுமத்தினை

ஈராறு கால் கொண்டெழுந்த புரவியைப்
போராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீராயிரமும் நிலமாயிரத்தாண்டும்
போராது காயம் பிரான் நந்தி ஆணையே
என்று அவர் கூறுவதையே திருமந்திரமும் பலவிதங்களில் விதந்தோதுகிறது.
ஞானம் எய்துவது எப்படி என்பதை சிவ வாக்கியர்,

உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் ஆணை அம்மை ஆணை உண்மையே
என்கிறார்.
மேலும் அவர் சொல்கிறார்,

ஓடியோடி யோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே
என்கிறார். இதயத்துள்ளே இருக்கும் இறைவனைக் காணாமல் வெளியே தேடியலைந்து, இறுதியில் எங்கும் காண இயலாமல், இறைவனை, அந்த அருட்பெருஞ்சோதியை உணரவும் முடியாமல் மாண்டுபோனவர்கள் கோடி கோடிப் பேர் என்கிறார்.
பிரம்ம ஞான தத்துவத்தைச் சிவ வாக்கியர் தனது பல பாடல்களில் சுட்டுகிறார்.

அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
- என்கிறார். அதாவது விஷ்ணு அல்ல. பிரம்மாவும் அல்ல. அதற்கு அப்பாலுக்கும் அப்பால் இருக்கிறார். அவர் கருமை செம்மை வெண்மை என பல நிறங்களைக் கடந்து அந்த அனைத்து நிறங்களுக்கும் காரணமாய் இருக்கிறார். அவர் தன்மை பெரியதும் அல்ல. சிறியதும் அல்ல. அதையும் கடந்தது. பற்ற முடிந்தவர்கள் பற்றிக் கொள்ளுங்கள் என்கிறார்.
அது மட்டுமல்ல; எந்த நாமத்தை இடைவிடாது சொன்னால் உயர்நிலையை அடையலாம் என்பதையும் அவர் தனது பாடல்களில் சொல்லுகிறார்.
……………………………………………………………..
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே…
……………………………………………………………..
ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே…
என்றும்
கார கார கார கார காவலூழி காவலன்
போர போர போர போர போரினின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்களேழு மெய்தஸ்ரீ
ராம ராம ராம ராம ராமவென்னு நாமமே
என்றும்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
என்றும் சொல்கிறார்.
மட்டுமல்ல;
போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.
என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சிவ வாக்கியர் கூறும் மறை ஞான இறைவன் யார் என்பதை நாம் உணரலாம்.
இனிமேலாவது வெட்டி மன்றத்தில் பேசுபவர்கள் அல்லது கட்டுரைகளில் எழுதுபவர்கள் “சிவ வாக்கியர்” பாடல்களை முழுமையாகப் படித்து உணர்ந்தும், அவரது ஆன்மீகப் பார்வை என்ன என்பது குறித்த புரிதலும் தெளிவும் பெற்றுப் பேசுதல், எழுதுதல் சிறப்பு. அதனை விடுத்து ”சிவவாக்கியர் ஒரு நாத்திகர்” என்றெல்லாம் உளறினால், அவர்களைப் பார்த்து நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

-Thank ramanans

Monday, September 19, 2011

Homam Mantras ஹோம மந்திரங்களும்


Homam Mantras 

 ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:


1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.




Monday, August 29, 2011

திரு.மிஸ்டிக் செல்வம் : நமது ஆன்மீக வழிகாட்டி [ Mystic Selvam ]


 நமது ஆன்மீக வழிகாட்டி  - திரு.மிஸ்டிக் செல்வம் 
[ Mystic Selvam ]
        
  தமிழ்நாட்டின் ஆன்மீக வழிகாட்டி மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கி.பி.1937 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு.பொ.செல்லப்பா அவர்கள்.பள்ளிப்படப்பிற்குப்பின் 19 ஆம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்த அவர்,திருச்செந்தூரில் பணிநிமித்தமாக சில காலம் தங்கியிருந்தார்;அப்போது அவருக்கு சில தெய்வீக அனுபவங்கள் ஏற்பட்டன. இதனால், அவருக்கு அசாதாரண தெய்வீக சக்திகள் உண்டாயின. இவருக் மனைவியும் ஒரு மகனும் உண்டு.        
       

கி.பி.1960 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமியன்று ஐந்தருவி தவத்திரு.சங்கரானந்தாவிடம் அஜபா காயத்ரி உபதேசம் பெற்றார். பின்னர் ஆன்மீக அன்பர்கள்,யோகிகள்,சாத்திர வல்லுநர்கள், சித்தர்கள் ஆகியோரின் நட்பையும், ஆசியையும் பெற்றதுடன், பயிற்சிகளையும் மேற்கொண்டார். மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள்,நூல்களை முழுமையாகக்கற்று ஆய்வு செய்தார். குருவின் ஆணைப்படியும்,தாம் பெற்ற பயிற்சிகளாலும் திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் சித்த மார்க்கம், அஷ்டகர்மம், அஷ்டாங்க யோகம், மானசயோகம் , மூலிகை மர்மங்கள், சூட்சும உலகம், மந்திர ரகசியம், கிரக இயக்கங்கள், பிரபஞ்ச கதிர்வீச்சுக்கள், ஜோதி வழிபாடு, சூரிய வழிபாடு, மதங்களின் வணக்கமுறை, விஞ்ஞான சைவம் ஆகியவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்துள்ளார்.

 40 ஆண்டுகளாக தாம் கண்டறிந்த ஆய்வுகளை கோவை மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் ஆசியுடனும், வழிகாடடுதல்படியும் ஞான சிந்தாமணி, ஜோதிட பூமி,ஜோதிட அரசு, ஸ்ரீவராஹி விஜயம், பேசும் தெய்வம் போன்ற பத்திரிகைகள் மூலமும் மற்றும் ஆன்மீகக்கருத்தரஙகுகள் மூலமாகவும் வெளியிட்டு ஆன்மீக விழிப்புணர்வை உண்டாக்கினார்.

திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டததில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது. உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது.திரு.மிஸ்டிக் செல்வம் ‘சிவ பராக்கிரமம்’,  ‘ஸ்ரீசொர்ணபைரவர்',  ‘ஆன்மீகத்திறவுகோல்' என்னும் நூல்களை எழுதியுள்ளார்.


[ NoteMysticSelvam Ayya have written books Sri Swarna bhairava, Aanmika Thiravukol, Siva Parakramam about 64 siva ..
Selvam ayya Brother republished Aanmika thiravukol and Sivaparakramam , but Sri Swarna bhairava on print , He only having all copyright's. This 2 book avalable in link.... 

மிஸ்டிக் செல்வம் அய்யாவின் நூல் ‘ஆன்மீகத்திறவுகோல்' , ‘சிவபராக்கிரமம்’ ,'ஸ்ரீ சொர்ண பைரவர் ' என்னும் நூல்கள் மீண்டும் வெளி வந்து உள்ளன. ஆன்மீக அன்பர்கள் வாங்கி பயன் பெறவும்.
ஆன்மிகத் திறவுகோல் (யோகம், ஞானம், உபதேசம், பரிகாரம்)
அட்டாட்ட விக்கிரக லீலையாகிய சிவபராக்கிரமம்
ஸ்ரீ சொர்ண பைரவர்
இந்த மூன்று நூல்களுடன் ஸ்ரீ வராகி மாலை என்னும் நூல் மற்றும் ஆன்மீக சாதனைக்கான சில பொருள்களும் இலவசமாக அனுப்பப் படும்.
திரு.மிஸ்டிக் செல்வம் அய்யாவின் உடன் பிறப்பான திரு.பண்டிட் பாலன் அவர்கள் இதை எங்களிடம் கொடுத்து உள்ளார்.
Other Place :
Vasu 9003152313
Anumanthu 6380337139
vinjoth kumar 9788896161
Velmurugan 9841171383


Buy in online  Nammabooks.com
Aanmika thiravuko :  https://goo.gl/bCPgdE
Sivaparakramam :  https://goo.gl/uDVgkd


Ayya written small article about Aanmiga in various weekly and monthly Aanmika book .  Most of Shri Mystic Selvam ayya article are collate , compiled and  about 200 articles republished by "Mysitic (India) mission" in two volumes book “Anmeega Payanam “. If you needed this book want to become a members in Mysitic (India) mission . This book is very treasure to Us. ]

Aanmiga payanam volumes 1 [77 articles / 280 pages]

Aanmiga payanam volumes 2 [118 articles / 278 pages]


இவரடைய சொர்ணபைரவர் நூல் மூலம் கவனிப்பாரற்றுக்கடந்த தமிழ்நாடுப்பைரவ சன்னதிகள் விழிப்புணர்வைப் பெற்றன. ‘ஆன்மீகதீபம்’ என்னும் நூலை தொகுத்துவந்தார்.

திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சமாதி தூத்துக்குடி அருகில் இருக்கும் முடிவைத்தானேந்தல் கிராமத்தை அலங்கரிக்கிறது.திரு.ராஜாசுவாமிகள் இதை நேர்த்தியாக பராமரித்துவருகிறார்.இங்கு செல்ல விரும்புவோர்,திருநெல்வேலி டூ தூத்துக்குடி செல்லும் வழியில் வாகைக்குளம் என்ற ஸ்டாப்பில் இறங்கி, முடிவைத்தானேந்தலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.தினமும் இரவு 7 மணிக்கு திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சமாதியில் சந்திக்கலாம். பிரதி பவுர்ணமி தோறும் அன்னதானம் நடைபெற்றுவருகிறது

திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சகோதரி திருமதி.Dr.விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் ஆவார் [கிராமியப் பாடல்களை பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர்களில்].இவர்தான் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் மதுரை ஆன்மீகப் பயிற்சி வகுப்புக்களை ஆடியோவாகப் பதிந்து விற்பனை செய்து வருகிறார். 


திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில் 
மந்திரப்பிரயோகம்     

விபூதிப்பிரயோகம்

ருத்ராட்சப் பிரயோகம்
சங்குப்பிரயோகம் 

 அஞ்சனப்பிரயோகம் 
 யந்திரப்பிரயோகம் ,காலதோஷ நிவாரணம்,வாஸ்துதோஷ நிவாரணம்,பிதுர்தோஷ நிவாரணம் என்று பயிற்சி வகுப்புகள் மூலம் தம்மை நாடி வந்த தென்னாட்டு ஆன்மீக அன்பர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளார்.அதன்மூலம் பயிற்சி பெற்றவர்கள் ஏராளம்.இப்பயிற்சி ஆதாயத்திற்காக நடத்தப்பட்டவை அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 
மதுரை டீன் பிரம்ம ஸ்ரீசித்த வித்யார்த்தி டாக்டர்(கேப்டன்) டி.சக்திவேல் எம்.டி.,கார்டியோ அவர்களின் பரிந்துரையின் பேரில் கல்கத்தா இந்திய மாற்றுமுறை மருத்துவ போர்டு திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு, சிவமண மருத்துவ ஆராய்ச்சிக்காக (ருத்ராட்சதெரபி) டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவரது நீண்டநாள் ஆசையாக பின்வருவன அமைந்திருக்கின்ற:

1.சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதை ஒரு மரபாக்குதல் 
2.உலக சகோதரத்துவத்தை வளர்த்தல்
3.ஆன்மீக நூல்கள் அச்சிட்டு வெளியிடுதல்,ஆன்மீகக்கூட்டங்கள்,கலைநிகழ்ச்சிகள்,ஆன்மீக அறிஞர்களை கவுரவித்தல்,அரிய ஆன்மீக நூல்களை சேகரித்து விஞ்ஞான ரீதியில் பாதுகாத்தல்
4.வயது முதிர்ந்த,கவனிப்பாரற்ற ஆன்மீகப்பெரியோர்களை பராமரித்தல்,மருத்துவ உதவி செய்தல்
5.தேவைப்படும் இடங்களில் இயன்ற அளவு அன்னதானம் செய்தல்
6. “ஓம் சிவசிவ ஓம்” என்ற மந்திரத்தைப் பரப்புதல் 108 times chat : https://www.mediafire.com/?986gcv5h797h41l 

 i added Mystic Selvam  Speech ...
You can call be any time / Drop mail me.chamundihari@gmail.com


[ all take from Net ... ]