Saturday, September 10, 2022

.பஞ்ச வில்வங்களில் ஒன்று. விளா

விளா.பஞ்ச வில்வங்களில் ஒன்று. 



( பஞ்ச வில்வம், பஞ்ச முக அர்ச்சனை பற்றிய அடியேனின் முந்தைய  பதிவு இணைப்புடன்)

அருகி வரும் மரங்களில் இஃதும் ஒன்று. 

ஹுனிசினஹள்ளியில்( தர்மபுரி மாவட்டம்) கண்டேன். 

    சிவபெருமானுக்கு உகந்த பத்திரமாக வில்வ இலை போற்றப்படுகின்றது.

வில்வத்திற்குச் சமமாக ஆகமங்களில் சில பத்திரங்கள் (இலைகள் )சிவபூஜைக்கு உகந்தனவாகச்  சொல்லப்பட்டுள்ளன.

      இவை, வில்வத்தைப் போன்றே மூன்று இதழ்களைக் கொண்டதாக விளங்கும்.வில்வத்தோடு சேர்த்து இவைகள் பஞ்சவில்வம் என்று அழைக்கப்படும்.

   மூன்று இதழ்கள் கொண்டுவிளங்குவதால் இவைகளுக்குச் சூலபத்ரம் என்ற பெயரும் உண்டு.

"குந்தாக்யம் சுகபில்வம் ச நிர்ஜீவித கபித்தகம்,
ஏதாநி சூல பத்ராணி பஞ்ச பில்வ மிதி ஸ்ருதம் "
                                -காரணாகமம்.

   குந்தம்           -ஸ்ரீ முல்லை இலை.
 சுகபத்ரம்         -ஸ்ரீ கிளுவை இலை.
  பில்வம்           -ஸ்ரீ வில்வ இலை.
நிர்ஜீவிதம்       -ஸ்ரீ வெண்நொச்சி இலை.
கபித்தம்            - ஸ்ரீ விளாமர இலை

  இவை ஐந்தும் பஞ்சவில்வம் என்று போற்றப்படுகின்றன.இவை ஐந்தும் கொண்டு சிவப்பரம்பொருளின் ஐம்முகங்களுக்கும் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகப்பெரும் சிவப்  புண்ணியமாகும்.

 மேலும், முல்லை பத்ரம் இல்லாது மாவிலங்கை பத்ரம் பயன் படுத்துவதும் நூலில் உள்ளது.

 புஷ்பவிதி நூல், 

" மெச்சியேயடியவர்வியந்து
சாத்திடு
நொச்சியேநறுவிளாநுவன்ற
கூவிளம்
வைச்சிடுங்கிளுவையே
மாவிலிங்கையின்
பச்சிலையென்றிவைபஞ்ச
வில்வமே"

 என்று கூறுகின்றது.

தரையோடு ஒட்டிப் படரக்கூடியது நில விளா என்றும், சிறிய மரமாக வளரும் இயல்புடையதை சித்தி விளா என்றும்,  பெரிய மர வகுப்பைச் சார்ந்ததைப் பெருவிளா மரம் என்றும் கூறுவர். இங்கு, நாம்,பெருவிளா மரம் பற்றிய செய்திகளைக் காண்போம். 

கடிபகை, கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளி போன்றவை விளாவின் வேறு பெயர்களாம்.

விளாமரத்தின்  தாயகம் நம் பாரதப் புண்ணிய பூமி.  இலங்கை,மலேயா,தாய்வான், மியான்மர்,பிலிப்பைன்ஸ்  போன்ற கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியது. 

 . இது எங்கும் வளரும். மர வகுப்பைச் சார்ந்தது. இது காடுகளில் அதிகம் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டருக்கு மேல் வளராது. 

 வீடுகளிலும், கோயில்களிலும்,(   நாகப்பட்டினம் மாவட்டம், திருநன்றியூர், அருள்மிகு உலகநாயகி சமேத மகாலட்சுமிபுரீஸ்வரர்,  திருவாரூர் மாவட்டம், திருக்காறாயில், அருள்மிகு கண்ணாயிரநாதர் போன்ற  திருக்கோவில்களில் தலவிருட்சமாக உளது)தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.  மூன்று வகைகளில் இது பெரிய மர வகுப்பைச் சார்ந்து பெரு விளா மரம். இது, கருமைநிறமாக  இருப்பதால் கருவிளாம் என்று சொல்லப்படுகிறது. 

விளாமரம் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலைகள்.   இலைகள் 5-7 வரை இருக்கும்,  இதன் இலைகள் நல்ல மணத்தைக் கொண்டவை. இலை நீள் வட்ட வடிவமாக இருக்கும். இதன் காய்கள் பார்ப்பதற்கு வில்வக்காயைப் போன்று உருண்டையாக இருக்கும். இதன் விட்டம் 5-9 செ.மீ. இருக்கும். பழத்தின் ஓடு கெட்டியாக இருக்கும். உள் சதை பழுப்பு நிறத்தில் இருக்கும். விதைகள் வெள்ளையாக இருக்கும். காயாக இருக்கும் போது அதன் சதை துவர்ப்பாக இருக்கும். பழுத்தால் துவர்ப்பும் புளிப்பும் கலந்த சுவையாக இருக்கும். இது முள்ளுள்ள உறுதியான பெரிய மரம். 

விளாமரம் வளர்ந்த 5 வது வருடத்தில் காய் காய்க்கும்.  இதை எந்த பூச்சியும் தாக்காது. விளா ஓடு கைவினைப் பொருள்கள் செய்யப் பயன் படுத்துகிறார்கள். விளா விதைகளின் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. மொட்டுக் கட்டுதல் மற்றும் ஒட்டுக் கட்டுதல் மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.
விசாக நட்சத்திரத்தின் விருட்ச மரம் விளா. விசாக நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுக்களால் குழந்தை பாக்கியமின்மை, பிறக்கின்ற குழந்தை ஊனமாகப்பிறத்தல், வாயுத்தொல்லைகள், நோய்த்தொற்று, இருமல், ஆஸ்துமா, ஒவ்வாமை, சர்கரை நோய், மனப்பதற்றம், ஈறு மற்றும்
கர்பப்பைக் கோளாறுகள் ஆகியவை உண்டாகின்றன. இதனை விசாக நட்சத்திர தோசம் என்பர். விளாமரத்தின் நிழலில் இளைப்பாறினால் இந்த தோசத்திலிருந்து விடுபடலாம் என்று சோதிட சாஸ்திரம் கூறுகிறது. .

விளாம் பழத்தில், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து,  புரதச் சத்து, விட்டமின் ஏ, சி  ஆகிய சத்துகள் இருக்கின்றன. . உடம்பில் சுருக்கங்கள் ஏற்பட்டால் விளாம் பழத்தை சாப்பிட்டால் சுருக்கங்சள் ஓடியே போயிடும்.  

முகம் பொலிவாக வேண்டுமா,  இரண்டு தேக்கரண்டி  பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி கஸ்தூரிமஞ்சள், இரண்டு தேக்கரண்டி விளாம்பழத்தினை அரைத்து முகத்தில் தடவி, காய்ந்தப் பின்னர் குளிர் நீரில் கழுவினால்,  முகம்  பளப்பளவென்று  பிரகாசிக்கும். 

   உங்கள் கூந்தல் பட்டுப் போல மிருதுவாக இருக்க வேண்டுமானால், சிகைக்காயுடன் விளாம்பழ ஓட்டினையும் கலந்து அரைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் கேசம் மிருதுவாக இருக்கும்.

 இது குடல் புண், வாய்ப் புண்,  நரம்பு தளர்ச்சி, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்து. எலும்புக்கு வலுவினைத் தருவதுடன் இரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை எதிர்க்கும் சக்தியும் விளாம் பழத்திற்கு உண்டு.  

விளா மரத்தின் வேர், பட்டை, காய், பழம், பிசின், இலை, கொழுந்து என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்கள் கொண்டவை. குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை நோயினை நீக்குவதோடல்லாமல்,   விளாம்பழம் கல்லீரலையும், மண்ணீரலையும் வலிமைப்படுத்தி, எலும்புகளுக்கு சக்தியைத் தரக்கூடியது.   புத்துணர்ச்சியினையும், சக்தியையும் அளிக்கும். தொண்டை புண்களை ஆற்றி, பல் ஈறுகளையும் உறுதியாக்கும்.   

விளா  மரத்தின் பட்டை இருமல், இளைப்பு, நீர்வேட்கை, பிதற்றல், வெறிநோய், அழல்நோய், வாயு கோளாறு  போன்றவற்றிருக்கு சிறந்த மருந்தாகும். பட்டையை அரைத்து வெண் குஷ்ட நோய்ப் பகுதியில் தடவினால் குணமாகும். பிசினைப் பொடியாக்கி சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும். விளாம் பழம் நறுமணத்துடன் துவர்ப்பும், புளிப்பும் உடையது.  இதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சாப்பிட்டால் சுவை கூடும். பசியைத் தூண்டும்.  

விளாமரத்தின்  தளிர் இலையை அரைத்து சிறிதளவு மோரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். வயிற்றுக் கடுப்பும் குணமாகும். செம்பருத்தி இலையுடன், சமபங்கு விளா இலையையும் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்  தலைமுடி  பளபளவென்று பிசுக்கு இல்லாமல் இருக்கும்.   விளா இலையை குடிநீரிலிட்டு அருந்தி வர காய்ச்சல், இருமல், தேக வறட்சி நீங்கும்.  

"விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு" என்பது பழமொழி . இடு மருந்தை விளாம்பழத்து ஓடு முறிக்கும் என்பது பொருள் !

விளாம்பிசினை உலர்த்தி தூளாக்கி காலை, மாலை ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு (மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு), நீர் எரிச்சல், உள் உறுப்புகளில் ரணம் போன்றவை சரியாகும். இதைச் சாப்பிடும்போது உணவில் உப்பு சேர்க்கக்கூடாது.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விளா மரத்தின் பழங்கள் விரும்பி உண்ணப்பட்டாலும் இந்த மரத்தை ஆர்வமாக நட்டு வளர்க்க யாரும் முன்வராததாலேயே இஃது ஓர் அரிய வகை மரமாக மாறிவிட்டது.

பஞ்ச வில்வம், பஞ்ச முக அர்ச்சனை பற்றிய அடியேனின் முந்தைய  பதிவு இணைப்பு=

https://m.facebook.com/story.php?story_fbid=10208509800141802&id=1811732522

நன்றி:

EFLORA OF KARAIKAL DISTRICT.

தமிழ்நாட்டரசு வனத்துறை. 

சிவபூஜா பத்ததி- தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்.

சித்தமருத்துவர் அன்பர் அன்பரசு அவர்கள்.

எல்லாம் வல்ல சித்தர் !!!



திருவாலவாயாம் மதுரையம்பதியிலே ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருகின்ற திங்கட்கிழமை (12/09/2022) அன்று சுந்தரானந்த சித்தர் ஜென்ம தின குருபூஜை விழா என்று வழக்கில் இல்லாத ஒன்று புதியதாக ஏற்பாடு ஆகியுள்ளது !!! இத்தருணத்தில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் வீற்றிருந்து அருளும் சித்தரை பற்றின முக்கியமான தகவலை நாம் தெரிந்துகொள்வது இன்றியமையாதது !!!

சித்தர்கள் ஏராளமானோர் இருந்தாலும் அதில் 18 பேர் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர் !!! அதில் ஒருவர் சுந்தரானந்தர் என்படுகிறவர் !!! போகர் அகத்தியர் போன்றோர்களுடன் தொடர்புடையவராகவும், வாக்கிய சூத்ரம், வைத்தியதிரட்டு, தீட்சா ஞானம் போன்ற நூல்களை யாத்ததாகவும் கூறப்படுகிறது !!! இவர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தார் என்றும் எனவே வரும் திங்கட்கிழமை இவருக்கு ஜென்ம நக்ஷத்திரம் நிகழ்கிறது என்றும் சொல்லப்படுகிறது !!! இவை அனைத்தும் சுந்தரானந்தர் என்னும் சித்தருடன் தொடர்புடைய செய்திகள் !!!
மாமதுரையில் ஸ்வாமியே சித்தராக வந்து அடியார்களுக்கு அருள் செய்துள்ளார் !!! பொன்னனையாள் என்னும் அடியவள் திருப்பூவனத்தில் ஸ்வாமிக்கு பொன்திருமேனி செய்ய ஆசைப்பட சோமசுந்தரப்பெருமானே சித்தராக எழுந்தருளி பித்தளையை பொன்னாக மாற்றி அருளியனார் !! இவரே கல்யானைக்கு கரும்பு கொடுத்தவர் ஆவார் !!! இவரின் சரித்திரம் அறிய நமக்கு ஒரே reference  திருவிளையாடல் புராணம் !!! ஹாலாஸ்ய மஹாத்மியத்திலும் சரி வேம்பத்தூரார் மற்றும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணங்களிலும் சரி மதுரையின் கடவுள் சொக்கநாதப்பெருமான் சோமசுந்தரக்கடவுளே "ஆஞ்ஞா சித்தர்" "எல்லாம் வல்ல சித்தர்" "வல்ல சித்தர்" என்னும் பெயர் கொண்டு சித்தராக வந்ததாக தெரிவிக்கிறது !!! இந்த ஆஞ்ஞா சித்தருக்கான சன்னதியே மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி சன்னதி முதலாம் பிரகாரத்தில் கோஷ்ட துர்க்கைக்கு அருகில் நாம் காணலாம் !!! இவருக்கு ஓர் உற்சவ திருமேனியும் உண்டு !! வருடாவருடம் பொங்கல் அன்று லீலையோடு கூடிய புறப்படும் உண்டு !!!
மேற்கூறிய ஆஞ்ஞா சித்தர் எனப்படும் எல்லாம் வல்ல சித்தரின் புராண வரலாறு முழுவதுமாக 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தர் எனப்படும் சித்தரோடு முற்றிலும் வேறுபட்டது !!! எல்லாம் வல்ல சித்தர் போகரோடு தொடர்புடையவர் அல்லர் !!! சுந்தரானந்த சித்தர் கல்யானைக்கு கரும்பளித்தவரும் அல்லர் !!! மதுரையில் ஸ்வாமியின் திருநாமம் சுந்தரேஸ்வரர் என விளங்குவதாலும் அவரே சித்தராக வந்ததனாலும் சுந்தரானந்தர் என்னும் சித்தர் ஒருவர் இருப்பதன் காரணத்தினாலும் நேர்ந்த குழப்பம் இது !!! எடுத்துக்கட்டாக சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் விநாயகரின் அருளால் கைலாசம் ஏகிய ஒளவையாரும், வள்ளல் பாரியோடு தொடர்புடைய ஒளவையாரும் முற்றிலும் வேறுபட்டவர்கள் !!! வள்ளல் பாரியும் சுந்தர மூர்த்தி நாயனாரும் இரு வேறு காலத்தை சேர்ந்தவர்கள் !!! ஆனால் பெயர் ஒன்றாய் இருப்பதனால் இரண்டு ஒளவையையும் ஒன்று என கருதி நாம் குழப்பிக்கொண்டோம் !!! அதனைப்போலவே தான் இந்த சித்தர் கதையிலும் !!! எல்லாம் வல்ல சித்தர் 18 சித்தர்களில் ஒருவர் இல்லை !!! இவர் இறைவன் !!!
மதுரையில் சுவாமி விறகு வெட்டியாகவும், மண்சுமந்த கூலியாளாகவும், வளையல் வ்யாபாரியாகவும் வந்ததனைப் போலவே தான் எல்லாம் வல்ல சித்தராகவும் வந்தார் !!! சுவாமி புராணத்தின்படி பிச்சாடனராகவும் வந்துள்ளார் .. அதனை காட்டும் விதமாக அதே கோலத்தில் அவருக்கு எப்படி சன்னதி இருக்கிறதோ அதனைப்போலவே இங்கே சுவாமி எல்லாம் வல்ல சித்தராகவும் வந்துள்ளார் எனபதனை குறிக்க அதே கோலத்தில் அவருக்கு இங்கு மீனாட்சி அம்மன் கோவிலில் சன்னதி உள்ளது !!! சொக்கநாதப் பெருமான் ஆதி அந்தம் இல்லாத பரம்பொருள் !!! அவருக்கு ஜென்மதினமும் இல்லை அவரின் சமாதி என்று ஒன்று இல்லவும் இல்லை !!! 

மீனலோசனி பாசமோசனி !!!

Monday, July 25, 2022

ஆடி அமாவாசை நாளில் அன்னதானம் - ராமேஸ்வரம் 28/07/2022


ஆடி அமாவாசை நாளில் அன்னதானம் - ராமேஸ்வரம் 28/07/2022

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இணைந்து..
" பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை "  Regd.No 32/16
C/o சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell: 9442408009

Saturday, May 7, 2022

கயா கயா கயா என்று சொல்வது ஆதி சங்கரர்

இன்று ஸ்ரீ.சங்கர பகவத்பாதாள் ஜெயந்தி. அவர் எழுதிய இந்த அதி அத்புதமான ஸ்லோகத்தை சிந்திப்போம்.

''கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர்  தனது தாயின் கடைசி காலத்தில் தான்  வாக்கு கொடுத்தபடி  அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு  அவளது அந்திம கிரியைகளை செய்து  இயற்றிய  மனம் நெகிழும்  மாத்ரு பஞ்சகம்    5 ஸ்லோகங்கள்

விஷ்ணு பாதம்

பித்ரு ஸ்ரார்தம் கயாவில்  செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே  பிண்ட பிரதானம் செய்வது ஒரு  வழக்கம். 

''கயா  கயா கயா. என்று  சொல்வது  நமது பித்ருக்களுக்கு  ஸ்ரத்தையோடு  அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம்  செய்யும்  கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும்  வாழ்வில்  ஒரு தடவையாவது செல்ல வேண்டிய  இடம் கயா.  குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர்  வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத் 
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

'' அடே பயலே,  அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே  அவர்கள் சொல்படி நட.  அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்  தான் உன்  படிப்பு மூலம் கிடைக்கும்  சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில்  அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்  தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .

“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம்  64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.
ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு,  நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத'  என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு  (திருவாலங்காடு -  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள்.  இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை  அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக  சொல்லி  இடுகிறோம்.  அந்த பதினாறு தான் “மாத்ருp ஷோடஸி”.

1.  கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2.    மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
        தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
         தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது  ஸ்பெஷல்  பிண்டம் உனக்கு. என் தாயே.

4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
         தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  -- ஒரு பரிசு --  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன்.

5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
         தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ'' .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''

6.   ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
        தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்''  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'

7.     அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..\

8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \

9.  ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம்.
.
10.    திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ''கடிக்காதேடா..'' .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.''  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.'

12.    புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.

13.    யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா.

14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது.

15.    ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
         தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ''தன்னலமற்ற''   தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே.

16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசிர்வதி.

Tuesday, May 3, 2022

பொதியமலை உச்சியில் அகத்தியர் சிலை

Thank Facebook

பொதியமலை உச்சியில் 
அகத்தியர் சிலை  நிறுவுதல்.




 
நான் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி.

60 ஆண்டுகளுக்கு முன்- அதாவது 01.05.1971 நள்ளிரவு 1 மணிக்கு 'என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்ட' அகத்தியர் வாழ்ந்த பொதியமலை உச்சியில் அவரது சிலையை என் தலைமையில் சென்ற குழுவினர் நிறுவினோம். இதற்குப் பின்னே ஒரு வரலாறு உண்டு.

1970இல் கிறித்தவ ஆர்வலர்கள் பொதியமலை உச்சியில் ஒரு சிலுவையை நட்டு அதன் அருகில் Saint Augustus peak எனக் கல்லிலே பொறித்துத் தமிழ்ப் பண்பாட்டுத் தடத்தை சிதைக்க முற்பட்டனர். இச்செய்தி மலைவாழ் மக்கள் வழியே எங்களுக்குத் தெரிந்தது. பொறியாளர் சுந்தரம்பிள்ளை போன்ற உள்ளூர்ப் பெருமக்கள் பலருடைய ஒத்துழைப்புடன் காவல்துறை நீதித்துறை வழியே உரிய நடவடிக்கை எடுத்துச் சிலுவை அகற்றப்பட்டது. அதற்குப் பின்னர் இனியும் இது போன்று ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு நிகழக்கூடாது என்ற நினைப்பில் அகத்தியர் சிலையை நிறுவலாம் என்றேன். அதை ஏற்று உரிய ஏற்பாடு செய்து சிலைமுடிக்க மூன்று திங்கள் ஆயின. இடையில் மழைக்காலம் குறுக்கிட்டது.  

மலை ஏறுதல் அவ்வளவு எளிய செயலன்று. வேனில் வரட்டும் என்று பொறுத்திருந்தோம். அதுவரை பொறியாளர் சுந்தரம்பிள்ளையின் வீட்டு வளாகத்தில் சிலையை வைத்தோம், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து வழிபாடு செய்தனர். 

கல்லூரி முடிந்து வேனிலும் தொடங்கியது. முதலில் நாங்கள் 20 பேர் மட்டுமே மலையுச்சிக்குச் சென்று சிலை நிறுவுவது என்று திட்டம். அக்காலத்தில் நானே எதிர்பார்க்காத அளவு பெரும் செல்வாக்கும் புகழும் எனக்கு உண்டு. நான்  தலைமை வகிக்கின்றேன் என்று கேள்விப்பட்ட ஆண்-பெண் அறுபதின்மர் என்னிடம் வந்து தாங்களும் வருவதாக வேண்டினர். சிவபெருமான் தம் திருமணக் கோலத்தை அகத்தியருக்குப் பொதிய மலையில் காட்டியருளினார் என்னும் தொன்மத்தை உறுதியாக நம்பும்  ஆழ்ந்த சமயப் பற்றுள்ளவர்கள். பொதிகையைக் கைலாயமலை ஆகவே கருதக்கூடிய சைவர்கள். அவர்களுக்கு அகத்தியர் வாழ்ந்த புனித மலை உச்சிக்கு சென்று வழிபட வேண்டும் என்ற தணியாத ஆவல்; ஆதலால்  அவர்கள் வருவதற்கு உடன்பட்டேன்.
 
30 ஏப்ரல் 1971 விடியல் 4 மணிக்குப் புறப்பட்டோம், பொதிய மலை அடிவாரத்திலிருந்து 10 கி.மீ காரையாறு தாமிரபரணி நீர்த்தேக்கம்வரை பேருந்துப் பயணம். படகில் சென்று அக்கரையை அடைந்தோம். அங்கிருந்து  மலைக்காட்டுவழி நடைப்பயணம். ஏழரை மணி அளவில் கன்னிகட்டி பண்ணை  சேர்ந்தோம் . பண்ணை மேலாளர் எனக்கு நண்பர்.அவரிடம் செய்த முன்னேற்பாட்டின்படி காலை சிற்றுண்டி  முடித்து ப் பிற்பகலுக்குப் பொதிசோறு, வழிகாட்டிகள் பலர் துணையோடு 8 மணிக்குக் குழு புறப்பட்டது  அதன் பின்னர் கடினமான செடி கொடி அடர்ந்த கரடுமுரடான ஒற்றையடிப்பாதை. 30 கிலோமீட்டர் சுற்றி வளைத்து செல்ல வேண்டும்.
 
இடையில் கடுவா எனப்படும் புலி, சிறுத்தை,  மிளா எனப்படும் மாடு போன்ற மான், இயல்பாகவே ஊர்ந்து செல்லும் மலைபாம்புகள்.  காலில் ஒட்டிக்கொள்ளும் அட்டைகள் உள்ள இரண்டு காட்டாறுகள் , மேடுபள்ளம் செங்குத்து சரிவு  வழிகள் -இவற்றை எல்லாம்  பெரும் துன்பத்துடன் கடந்து மாலை 5 மணிக்கு உச்சிக்குச் சென்றால் கடைசியில்  ஏற முடியாதபடி மலைக்கவைக்கும் 150 அடி செங்குத்து உயரம் ,  ஒருவாறு சரிவுப் பாறையில் முளையடித்துக் கயிறு கட்டி மகளிரையும் சிலை நிறுவும் கனமான ஸ்தபதியாரையும்  உச்சிக்குக் கொண்டு சேர்க்கும் போது சரியாக ஏழு மணி . ஏறத்தாழ 100 பேருக்கும் மேலாக புழங்கக்கூடிய திடல் போன்ற உச்சிப்பகுதி . எல்லோருக்கும் களைப்பு மிகுதி இருப்பினும் சமையற்காரர்கள் உணவு சமைத்தார்கள் உண்ட பின் அனைவரும் உறங்கினோம்.

மறுநாள் காலை 01.05.1971 அன்று சிலையை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டது. நீர் வேண்டுமென்றால் கீழே 200 அடிக்கு அப்பால் சென்று தான் கொண்டு வர வேண்டும்.  உச்சியிலேயே ஒருபக்கம் நீர்ச்சுனை இருப்பதைக் கண்டறிந்து அங்கேயே 4-க்கு 6 அடி 3அடி ஆழம் என்ற வகையில் பாறையை வெடிவைத்து தகர்த்துப் பொறியாளர்கள்  நீரூற்று உண்டாக்கினர். நானும் சுந்தரம் பிள்ளையும் ஸ்தபதியார் அருகிருந்து சிலை நிறுவும் பணிக்கு உதவினோம். அவர் ஆகம முறைப்படி சடங்குகளை மேற்கொண்டார் மே முதல் நாள் நள்ளிரவு ஒரு மணிக்கு அகத்தியர் சிலையை நிறுவினோம்.
 
அடுத்த நாள் எங்களில் 15 பேரைத் தவிர ஏனையோர் காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு பாபநாசம் பொதிகையடிக்குத் திரும்பினர்.  விலங்கு, இயற்கைச் சீற்றத்தி னால்  சிலைக்கு ஊறு நேராத வாறு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, பின்னர் அடுத்திருக்கும் ஐந்துதலைப் பொதிகையையும், மலைமுகட்டில் தாமிரபரணி தோன்றும் இடத்தையும் பார்வையிட்டுப் பின்னர் நாங்கள் பொதிகையடி அடைந்தோம்.
 
நாளடைவில் அன்பர்கள் முயற்சியால் கல்லிடைக் குறிச்சியில் இருந்து நேரடியாகப் பொதிய மலை உச்சி அகத்தியர் கோயிலுக்குச் செல்லுமாறு பாதைகள் அமைக்கப்பட்டு, இப்போது ஆண்டுதோறும் இந்த மே முதல் நாளில் திருவிழா நடக்கின்றது என்று அன்பர்கள் தெரிவித்தார்கள். இந்த வரலாற்று- பண்பாட்டுச் சாதனையை எண்ணும்போது இதயம் பெருமிதத்துடன் இறும்பூது எய்துகிறது, நினைவலையில் நீந்தி மகிழ்கிறது.

Friday, March 18, 2022

Madurai Wedding Feast மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து


Madurai Sumptuous Wedding Feast 


A sumptuous feast awaits devotees on 14-04-2022 Madurai following the ‘Tirukkalyanam Virundhu ’ (celestial wedding) of Goddess Meenakshi and Lord Sundareswarar. The ‘Tirukkalyanam’ of Goddess Meenakshi with Lord Sundareswarar takes place on Wednesday at the junction of North and West Adi Streets.Being prepared by the Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai for the 24th consecutive year.

 The feast is being arranged for over 75000 devotees , we are arrange at Sethupathi school, Madurai . “The menu comprises boondhi, Chakkarai Pongal , lemon rice, Tomato rice, Sambar rice and curd rice with water packet ”.The feast will commence at around 8.30 a.m. and go on till the last devotee leaves the place.

When we started providing the feast 22 years back, only around 1,500 devotees took part in the feast at Meenakshi temple itself. Now, it has grown to provide for over 75,000 . we arrange at Sethupathi school ,Madurai .

Apart from the ‘Tirukkalyaa Virundhu,’ another special feast was provided on 13-04-2022 evening  Known as ‘Mappillai Azhaippu Virundhu’ [Night Dinner] the feast comprising kesari, pongal, vadai was provided for people. We are welcome you come cutting of vegetable for feast and service .

We need volunteers for feast service ,if you are interests please register with us.

Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai (Regd.No 32/16) 

Chamundi Supari
New 41 old 20/3 West Tower Street ,
Madurai -  625 001 
Cell: 9442408009 
chamundihari@gmail.com


[ Madurai Meenakshi Miracle pic 
 Madurai Meenakshi Tirukkalyanam [wedding] feast at Setupati 
School here on Friday 30/4/2015. by Selvam Ramaswamy ]


மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து

சோலைமலை முருகன் கோயிலில் 40 ஆண்டுகள் கார்த்திகை மாதம் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.

22 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தேனய்யா அவர்கள். அவர் மீனாட்சி கோயிலுக்கு இடமாற்றப்பட்ட போது. 

திரு சாமுண்டி விவேகானந்தன் அவர்களை அணுகினார். "திருக்கல்யாணத்தின் போது ஊழியர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யக்கூடாதா" என்று கேட்டபோது,

திருமண விருந்து யோசனை தோன்றியது. பொதுமக்கள் கொடுக்கும் பொருட்களை கொண்டு முதன்முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே செவ்வந்தீஸ்வரர் சன்னதி முன்பு 1500 பேருக்கு திருமண விருந்து

அளிக்க ஆரம்பித்தோம். இன்று வரை இது இறைவனின் அருளால் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. அம்மன் சமைக்கிறார். நாங்கள் கரண்டியாக இருந்து பரிமாறுகிறோம்'' .

10 ஆண்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தன்று, 10,000 பேருக்கு பக்த சபை சார்பில், ஆடி வீதிகளில் விருந்து அளிக்கப்பட்டு வந்தது பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு காவல்துறை தடைவிதித்தனர்.

இந்தாணடு திருக்கல்யாணம் 4-05-2020 அன்று   நடக்கிறது 100000 பேருக்கு வழங்கபடுகிறது.இதை முன்னிட்டு, பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது.இந்த விருந்தில், பூந்தி, வாழைப்பழம், வடை  , கல்கண்டு சாதம் , எலுமிச்சைச்சாதம் , தக்காளிச்சாதம் , சாம்பார்ச்சாதம் மற்றும் தயிர்ச்சாதம் தண்ணீர் பாக்கெட் தட்டில் வழங்கப்படும்இடம்பெறுகிறது.

03-05-2020 அன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது ,மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி ,பொங்கல், வடை இடம்பெறும்.

விருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.


திருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்ய அழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.  


"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை "  Regd.No 32/16
சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell: 9442408009 , 
chamundihari@gmail.com






Last year NewsPaper Report :





On the eve of Meenakshi Sundareswarar ‘Thirukalyanam’ (celestial wedding), the campus of Setupati Higher Secondary School is a hub of activity. While more than five hundred women are busy chopping vegetables in the school’s main hall , there are volunteers wheeling huge vessels of chopped vegetables and ingredients such as rice and pulses towards a kitchen set up in the school grounds. ( https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/preparing-a-banquet-for-75000-devotees/article7156379.ece )

Thanks  Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்

Free Tamil Devotional Speech 45 Hours CD                        
ஓம் சிவசிவ ஓம்
Be Good & Do Good

Last year 2018 


Pic Thank to
 — with Guna Amuthan and Selvam Ramaswamy.











 Pic by   

Sunday, December 26, 2021

27 நட்சத்திரங்களின் அம்சம், தன்மை சிறப்பு

 #27 நட்சத்திரங்களின் அம்சம், தன்மை சிறப்பு


1. ராசி – மேஷம்

நட்சத்திரம் – அசுவினி

வேதை (ஆகாத நட்சத்திரம்) – கேட்டை

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி,ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி

அனுகூல அதிர்ஷ்ட மலர் – செவ்வல்லி

அனுகூல தெய்வம் – இந்திரன்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைடூரியம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – கரும்பச்சை

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 1

2. ராசி – மேஷம்

நட்சத்திரம் – பரணி

வேதை (ஆகாத நட்சத்திரம்) – அனுஷம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பூசம், பூரம்,அனுஷம், பூராடம், உத்திரட்டாதி, விசாகம்

அனுகூல அதிர்ஷ்ட மலர் – வெண்தாமரை

அனுகூல தெய்வம் – லட்சுமி

அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைரம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்நீலம்

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2

3. ராசி – மேஷம்

நட்சத்திரம் – கார்த்திகை

வேதை (ஆகாத நட்சத்திரம்) – விசாகம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை,புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி

அனுகூல அதிர்ஷ்ட மலர் – மந்தாரை

அனுகூல தெய்வம் – சிவபெருமான்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – சிவப்பு

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 3


4. ராசி – ரிஷபம்

நட்சத்திரம் – ரோகிணி

வேதை (ஆகாத நட்சத்திரம்) – சுவாதி

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி,திருவாதிரை, அஸ்த்தம், சுவாதி, திருவோணம், சதயம்

அனுகூல அதிர்ஷ்ட மலர் – அல்லி

அனுகூல தெய்வம் – பார்வதி

அனுகூல, அதிர்ஷ்ட கல் – முத்து

அனுகூல, அதிர்ஷட நிறம் – வெள்ளை

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 4

5. ராசி – ரிஷபம்

நட்சத்திரம் – மிருகசீரிஷம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் –மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

அனுகூல அதிர்ஷ்ட மலர் – செண்பகப்பூ, பாரிஜாதம்

அனுகூல தெய்வம் – சுப்பிரமணியர்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – சிவப்பு, செம்மை

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 5


6. ராசி – மிதுனம்

நட்சத்திரம் – திருவாதிரை

வேதை (ஆகாத நட்சத்திரம்) – திருவோணம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – திருவாதிரை,அஸ்த்தம், சுவாதி, திருவோணம், சதயம் , ரோகிணி

அனுகூல அதிர்ஷ்ட மலர் – கருமை கலந்த மஞ்சள் பூ

அனுகூல தெய்வம் – பத்ரகாளி

அனுகூல, அதிர்ஷ்ட கல் – கோமேதகம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – கருமை கலந்த மஞ்சள்

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 6

7. ராசி – மிதுனம்

நட்சத்திரம் – புனர்பூசம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – உத்திராடம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – புனர்பூசம்,கார்த்திகை, உத்திரம், உத்திராடம், விசாகம், பூரட்டாதி

அனுகூல அதிர்ஷ்ட மலர் – முல்லை

அனுகூல தெய்வம் – பிரம்மா

அனுகூல, அதிர்ஷ்ட கல் – கனகபுஷ்பராகம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்மஞ்சள்

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 7


8 . ராசி – கடகம்

நட்சத்திரம் – பூசம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – பூராடம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பூசம், பரணி,பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – கருங்குவனை

அனுகூல தெய்வம் – எமதர்மராஜா

அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்

அனுகூல, அதிர்ஷட நிறம் – கருப்பு

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 8

9. ராசி – கடகம்

நட்சத்திரம் – ஆயில்யம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – மூலம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி,ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – வெண்காந்தள்

அனுகூல தெய்வம் – மகாவிஷ்ணு, பெருமான்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – மரகதம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 9


10. ராசி – சிம்மம்

நட்சத்திரம் – மகம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) -ரேவதி

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி,ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செவ்வல்லி

அனுகூல தெய்வம் – இந்திரன்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைடூரியம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – கரும்பச்சை

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 10

11. ராசி – சிம்மம்

நட்சத்திரம் – பூரம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – பூராடம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூசம்,பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செந்தாமரை

அனுகூல தெய்வம் – சிவபெருமான்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைரம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்நீலம்

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 11

12. ராசி – சிம்மம்

நட்சத்திரம் – உத்திரம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – உத்திராட்டாதி

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை,புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செந்தாமரை

அனுகூல தெய்வம் – லக்ஷமி

அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைரம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – சிகப்பு

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 12


13. ராசி – கன்னி

நட்சத்திரம் – அஸ்தம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – சதயம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி,திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – அல்லி

அனுகூல தெய்வம் – பார்வதி

அனுகூல, அதிர்ஷ்ட கல் – முத்து

அனுகூல, அதிர்ஷட நிறம் – வெள்ளை

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 4

14. ராசி – கன்னி

நட்சத்திரம் – சித்திரை

வேதை (ஆகாத நட்சத்திரம்) – மிருகசீரிஷம், அவிட்டம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் –மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செண்பகப்பூ

அனுகூல தெய்வம் – சுப்பிரமணியர்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – பவழம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – சிகப்பு

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 5


15. ராசி – துலாம்

நட்சத்திரம் – சித்திரை

வேதை (ஆகாத நட்சத்திரம்) – ரோகிணி

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி,சுவாதி, திருவாதிரை, சதயம், திருவோணம், உத்திரம்

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – மாந்தாரை

அனுகூல தெய்வம் – காளி மாதா

அனுகூல, அதிர்ஷ்ட கல் – கோமேதகம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – கருமஞ்சள்

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 6

16. ராசி – துலாம்

நட்சத்திரம் – விசாகம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம்,பூரட்டாதி

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை,புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – முல்லை

அனுகூல தெய்வம் – பிரம்மன்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – கனக புஷ்பராகம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – மஞ்சள்

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 7


17. ராசி – விருச்சிகம்

நட்சத்திரம் – அனுஷம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – பரணி

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூரம்,பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – குவளை

அனுகூல தெய்வம் – எமதர்மன், சூரியன்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்

அனுகூல, அதிர்ஷட நிறம் – நீலம், கருப்பு

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 8

18. ராசி – விருச்சிகம்

நட்சத்திரம் – கேட்டை

வேதை (ஆகாத நட்சத்திரம்) – அசுவினி

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி,ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி, மூலம்

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – வெண்காந்தள்

அனுகூல தெய்வம் – காளி மாதா

அனுகூல, அதிர்ஷ்ட கல் – மரகதம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 9


19. ராசி – தனுசு

நட்சத்திரம் – மூலம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – ஆயில்யம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி,ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செவ்வல்லி

அனுகூல தெய்வம் – இந்திரன்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைடூரியம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – கரும்பச்சை

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 1

20. ராசி – தனுசு

நட்சத்திரம் – பூராடம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – பூசம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூரம்,பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – வெண்தாமரை

அனுகூல தெய்வம் – லக்ஷ்மி

அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைரம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்நீலம்

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2

21. ராசி – தனுசு

நட்சத்திரம் – உத்திராடம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – பூரம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை,புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – தாமரை

அனுகூல தெய்வம் – சிவபெருமான்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 3


22. ராசி – மகரம்

நட்சத்திரம் – திருவோணம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – திருவாதிரை

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி,திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – அல்லி

அனுகூல தெய்வம் – பார்வதி

அனுகூல, அதிர்ஷ்ட கல் – முத்து, நீலக்கல்

அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 4

23. ராசி – மகரம்

நட்சத்திரம் – அவிட்டம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – மிருகசீரிஷம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் –மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செண்பகமலர்

அனுகூல தெய்வம் – சுப்பிரமணியர்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – பவழம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – சிகப்பு

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 5


24. ராசி – கும்பம்

நட்சத்திரம் – சதயம்

வேதை (ஆகாத நட்சத்திரம்) – ரோகிணி, திருவாதிரை

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி,திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – மந்தாரை

அனுகூல தெய்வம் – பத்ர காளி

அனுகூல, அதிர்ஷ்ட கல் – கோமேதகம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – கருமஞ்சள்

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 8, 9

25. ராசி – கும்பம்

நட்சத்திரம் – பூரட்டாதி

வேதை (ஆகாத நட்சத்திரம்) – உத்திரம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை,புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – முல்லை

அனுகூல தெய்வம் – பிரம்மா

அனுகூல, அதிர்ஷ்ட கல் – புஷ்பராகம்

அனுகூல, அதிர்ஷட நிறம் – மஞ்சள்

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 7


26. ராசி – மீனம்

நட்சத்திரம் – உத்திரட்டாதி

வேதை (ஆகாத நட்சத்திரம்) – பூரம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூரம்,பூசம், உத்திரட்டாதி, அனுசம், பூராடம்

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – கருங்குவளை

அனுகூல தெய்வம் – சனீஸ்வரன்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்

அனுகூல, அதிர்ஷட நிறம் – கருநீலம்

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2, 6, 8

27. ராசி – மீனம்

நட்சத்திரம் – ரேவதி

வேதை (ஆகாத நட்சத்திரம்) – மகம்

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி,ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – கருங்குவளை

அனுகூல தெய்வம் – சனீஸ்வரன்

அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்

அனுகூல, அதிர்ஷட நிறம் – கருநீலம்

அனுகூல, அதிர்ஷ்ட எண் – 6, 8