ஸ்ரீ சத்குருமகான் படேசாஹிப் 21-2-2014

Bade saheb |
விழுப்புரதிலிருந்து புதுவை செல்லும் 20 கிலோமீட்டர் தொலைவில் கண்டமங்கலம் ரயில்வே கேட் உள்ளது. இதன் இடது புறத்தில் 2 கீ.மீ தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு மஹா சித்த புருஷரான ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் தன் ஜீவ சமாதியில் இருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அற்புத ஆற்றல் படைத்த சித்தர் இவர்.
ஸ்ரீ படே சாஹிப் சித்தர் அமைதியானவர். இப்புனித பெரியவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் மதங்களை தாண்டி அருள் செயல் புரிபவர். "படே" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவரை "படே சாயபு" என்று அழைத்தனர்.
இவர் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து வைத்தியம் செய்வார். மக்கள் குறைகளை கேட்டு தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவர். பச்சிலைகளை அரைத்து நோய்களை தீர்ப்பார். விபூதியை பிரசாதமாக கொடுப்பார். சிரசில் கைவைத்து நோயின் கொடுமையை குறைப்பார். சிறிது நேரத்தில் நோய் வந்த சுவடு தெரியாமல் பறந்து ஓடிவிடும்.
இது சித்தர் பீடத்தின் முகப்புத் தோற்றம்.
![]() | ||

Other link :
https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/sri-bade-sahib-siddha-pondicherry.html
https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/sri-bade-saheb.html
https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_3.html
சரியான தருணத்தில் அருமையான பகிர்வு...ஸ்ரீ மகான் படே சாஹிப் திருவடி போற்றி வணங்கி அவர் அருள் பெறுவோம்..ஓம் நமசிவய
ReplyDeleteOm siva siva om
ReplyDelete