Showing posts with label ஆழ்மனதின் அற்புத சக்திகள். Show all posts
Showing posts with label ஆழ்மனதின் அற்புத சக்திகள். Show all posts

Friday, August 23, 2019

தேகமும் யோகமும் - கவியோகி வேதம்

THANK TO : https://www.vallamai.com/?p=55456 

About the Author

கவியோகி வேதம்
 has written 13 stories on this site.
kaviyogi.vedham@gmail.com http;//kaviyogi-vedham.blogspot.com/
PART1 
images
என்னிடம் யோகா-பயிற்சி பெற்ற அன்பர்களும் அவர்தம் நண்பர்களும் ‘சார்! ‘சார்! பிராணாயாமத்தைப்பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன் இல்லை,’ எந்த ஏட்டிலாவது,, இல்லை “வல்லமை’யிலாவது எழுதுங்களேன் என்றுஇடைவிடாது போன் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சொல்லலாம்தான். ஆனால் அது ஒரு தகுதியான குரு மூலமே கற்றுக்கொள்ளக்கூடியது. புத்தகத்தைப்பார்த்துக் கற்கும் வழி அன்று அது. மிக ஆழமான மூச்சு இழுத்தல் பற்றியும், மெதுவாகப் பின்பு விடுவதுபற்றியும் எவ்வளவுதான் இங்கே விவரித்தாலும் ஆசிரியர் மூலம் நீங்கள் கற்றால்தான் பயனளிக்கும். “ இனிஷியேஷன்’, அல்லது ஆசிரியர் உடல்தொட்டுப் பயிற்றுவிக்கும்( நேரடிக் கண்காணிக்கும்) வழிமுறைப்பயிற்சி அது.. ஏன் எனில் ஒரு ஆசான் பிராணாயாமம் சொல்லிக்கொடுக்கும்போது அவரது ‘வைப்ரேஷன்’ (-தொடு அதிர்வுகள்’ )மூலமே சீடனுக்கு அந்தத் தெய்வீகக்கலை வெற்றி கொடுக்கிறது. இது அனுபவ பூர்வ உண்மை. இதில் எள்ளளவும் ஐயமில்லை. மகான் விவேகாநந்தரின் சரித்திரத்தை ஆழமாகப்படிக்கும் எவரும் இதை ஒத்துக்கொள்வர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவரைத்தொட்டார். அவ்வளவுதான் தியானத்தில் ஆழ்ந்தார் விவேகாநந்தர்!!
yoga
..1980இல் நான் இதுபற்றி விளக்கமாக என் ‘கசின்’ (பெரியப்பா பையன்)இடம் எடுத்துச் சொல்லியும், ஒரு தகுந்த ஆசான் மூலமே நீ மூச்சிழுத்தல் பற்றிக் கற்கவேண்டும். என் புத்தகத்தைப் படித்துச் செய்யாதே என்று பல தடவை அவனிடம் சொல்லியும் கேட்காமல் அவன்தன் வீட்டில் என் யோகா மற்றும் பிராணாயாமப் புத்தகத்தை முன்னால் வைத்துக்கொண்டு அதில் சொன்னவாறு செய்ய ஆரம்பித்தான்.
சில இடங்கள் அவனுக்குப் புரியவில்லை. அப்படியும் மூச்சை ஏதோ ஒரு ரேஸ் குதிரை போல் காலைத் தூக்கிவைத்துக்கொண்டு(சீக்கிரமே இதில்) வெற்றி அடையவேண்டும் என்று தீவிர வெறியில்( என்மேல் பொறாமை?)_ மூச்சைப் பலமாக இழுத்து, ரொம்ப நேரம் கழுத்து நரம்புகள் புடைக்க நெற்றியில் மூச்சைத் தேக்கினான். வேகம் அதிகம் ஆனதால் மூன்றே நாளில் அவன் கழுத்துநரம்பு சுளுக்கிக்கொண்டது. மருந்து சாப்பிட்டுக் கொண்டே விடாமல் பலமாக இன்னும் மூன்று நாள் செய்தான். வெளியே விடும்போதும் உடல் பலத்தை அழுத்தி மூச்சைவிட்டான். புத்தகத்தையும் சரியாகப்படிக்கவில்லை.
பத்துநாள் கழித்து அவன் வீட்டுக்குச் சென்றால் அவனது பெரியப்பா, “பாருடா இவனை. இரண்டுநாளாக ஏதோ மனம் பேதலித்தவன் மாதிரி ஆகாயத்தையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான். யோகாவெல்லாம் பண்ற நீ இவனிடம் சொல்லி என்னவென்று கேட்டுச் சரி பண்ணக்கூடாதா? என்னிடம் பேசவே மாட்டேன் என்கிறானே,”- என்றுசொல்லிக் கண்கலங்கினார். நிதானமாகக் கேட்டதில், அவன் இது பற்றி என்னிடம் மெதுவாக விவரித்ததில் எல்லா விஷயமும் எனக்குப் புரிந்துபோச்! பிறகென்ன? ஒரு நரம்பு மற்றும் மன ஆலோசனை நிபுணரிடம் அவனை அழைத்துப்போய் எல்லாவற்றையும் சரி செய்தோம். அந்த அனுபவத்திற்குப்பிறகு அவனிடம் பிராணாயாமம் என்று ஆரம்பித்தாலே,அதோ அந்தத் ‘ தெனாலிராமனின் சூடான பால்கண்டால் நடுங்கும் பூனைமாதிரி’ பயப்பட்டான். தேவையா இது?
..அதனால்தான் சொல்கிறேன். மூச்சுப்பிராணாயாமம், தீவிர அழுத்தமான யோகா போன்றவற்றை ஒரு யோகா நிபுணர் மூலம் கற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. எனினும் மெது மெதுவாக இத்தொடரில் ஆபத்து இல்லாத மிகலேசான ஆசனங்கள் பற்றியும் அதிக மூச்சிழுப்பு தேவையில்லாத ஒருவகை த்யானம் பற்றியும் விளக்க இருக்கிறேன்.ஆனால்,..
..-தியானம் பயில்வதற்குமுன் மனத்தைப் பக்குவப்படுத்த, எண்ணங்களை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரத் தேவையான பயிற்சிகளை முதலில் இங்கே விவரிக்கின்றேன். ஏன் எனில் அவை கட்டற்ற எண்ணங்களை அடக்கி தியானத்தில் நமக்கு வெற்றியைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
..முதலாவதாக நம் ‘உள்மனதும் பழக்கவழக்கமும்’ எனும் மிகத் தேவையான விஷயம் பற்றி அலசுவோம். இது ஒரு அடிப்படைப் பயிற்சி ஆகும். கவனமாகப் படிக்கவும்.
ஒருநல்ல தெய்வீகமான பழக்கத்தை உள்மனம் வரை வளர்ப்பது என்பது நல்ல நிலத்தை உழுவது போன்றது.இதற்குச் சிலகாலம் பிடிக்கும். பொறுமை தேவை.ஏன் எனில் அது மனசின் ‘உள்’ளிலிருந்து வரவேண்டும்.இந்த நல்ல பழக்கம் பிற துணைப்பழக்கங்களை உருவாக்கும். அவை மனிதனை சரியான வாழ்க்கைப்பாதையில் செலுத்தும். இதற்கு நாமே முயன்று ‘செயல்தூண்டுதல்’ கொடுக்கவேண்டும். பின்பு அதுவே இயல்பாகி விடும்.உதாரணத்திற்கு ஒருவன் விடாமல் சிகரெட்டாக ஊதித் தள்ளுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கெடுதல் என்று தெரிந்தும் அவனால்சட்டென விட முடியாது. ஆனால் அப்பழக்கம், அவனுள் ஆஸ்த்மா என்னும் நோயை உண்டு பண்ணுகிறது. உடனே டாக்டரிடம் ஓடுகிறான்.அவர் அவனிடம்
“டேய்! நீ எப்படியாவது பாடுபட்டு இந்த சிகரெட் பழக்கத்தை ஒழி. ஆனால்தான் நீ பிழைப்பாய்.. இல்லாவிடில் நீ அடுத்தவருடமே பயங்கர இழுப்புநோயால் காலி!” எனச்சொன்னார் என்றால் முயன்று அவன் மெல்லமெல்ல அப்பழக்கத்தை நிச்சயம் விட்டுவிடுவான். ஏன் எனில் அவனது உள்மனமே பயப்படுவதனால். நிச்சயம் இது சாத்தியம். இல்லையா?
துன்பமான காலங்களில் தைரியத்தைக்காட்டும் திறனும், இச்சைப்படும்போதே சுயக்கட்டுப்பாட்டைக் காட்டும் வலிவும்,மனம் காயப்படும் போதும் மகிழ்ச்சியையே தேர்ந்தெடுக்கும் திறனும்,தடைகள் ஏற்படும்போது நல்லநம்பிக்கையுடன்(positive approach உடன்) நல்வாய்ப்பையே எதிர்பார்க்கும் ஆழமான எண்ணமும், ’தற்செயல்’ நிகழ்வுகள் இல்லை.ஏன் எனில் இவை நாம் மனரீதியிலும், உடல்ரீதியிலும் துணிச்சலுடன் கொடுக்கும் நிலையான, மாறாத ‘பயிற்சி’யின் பயனே ஆகும்.சரியா?அற்பமான சிறுசிறு விஷயங்களுக்கு எல்லாம் ஒரு கோழையைப்போன்று எதிர்மறையாக, அஞ்சியோ இல்லை எதிர்த்து நிற்கும் துணிவு இல்லாமல் ஒதுங்கியோ போனால், தியானம்
சித்திக்காது. மாறாக அந்தத் தடைகளையே, துன்ப நினைவுகளையே எண்ணுவதால மனம் தியானத்தில் நிலைக்காது. ஆனால் விடாமல் இயல்புப் பழக்கத்தை மீறி ஒருவன் மேலே சொன்னபடி பயிற்சி செய்தால் எந்த நிலைமையிலும் கலங்காதிருப்பான் அதே மனிதன்! பெரிய விஷயங்களையும் அவன்தான் துணிவோடு செய்து வெற்றியையே பரிசாகப்பெறுவான். இது நம் அனுபவ உண்மை.
ஆம்!பழக்கமாகும்வரை நாம் எந்த நல்லதைச் செய்யவேண்டும் என எண்ணுகிறோமோ அதை நீடித்து எப்போதுமே செய்ய முனைய வேண்டும்.அதில் தடை வந்தாலும் எதிர்த்து நல்லதையே செய்யவேணும்.பின் வாங்கலாகாது. ‘தீமை இது’ என்று ஒன்று தெரிந்துவிட்டால் அதிலிருந்து கட்டாயம் விலகி நிற்கக் கற்றுக் கொள்ளவேண்டும். பின்பு அதுவே நமக்குப் பழக்கமாகிவிடும்.தியானப் பயிற்சியாளனுக்கு அது வரும்முன்பே தீமை என்று தெரிந்துவிடும். விலகி விடுவான் உடனே. தெய்வீகப்பாதையில் போகும் பலனை உடனே அவன் அறுவடை செய்வான். மகிழ்வான். இனி நமது சிந்திக்கும் முறை பற்றியும், தற்காலக்காலகட்டத்தில் இந்த விஞ்ஞான வசதிகள் எப்படி நம்மை நேர்-
பாதையிலிருந்து கவிழ்த்துவிடத் துடிக்கின்றன என்பது பற்றியும் அடுத்த வாரம் தீவிரமாக அலசுவோம்.(தொடரும்).

தேகமும் யோகமும்..பகுதி-2 வியோகி வேதம்

https://www.vallamai.com/?p=55784

bout the Author

கவியோகி வேதம்
 has written 13 stories on this site.
kaviyogi.vedham@gmail.com http;//kaviyogi-vedham.blogspot.com/
PART1 

yoga
மனித மனத்தின் உளவியல் (எண்ணங்கள்)_தத்துவத்தை முழுதும் ஆராய்ச்சி செய்த ‘ஹேன்ஸ் சைல்’ என்பார் என்ன சொல்கிறார் தெரியுமா?
முற்கால மனிதர்களைவிடவும் இப்போதைய மனிதர்கள்தாம் சுமைகளை வீணாக மனத்தில் ஏற்றிப் போட்டுக்கொண்டு மகா அவஸ்தைப்படுகின்றோம் என்பார்.அவர் சொல்கிறார்.
“ மனித வாழ்க்கை என்பது எல்லோர்க்கும் இறைவன் அளித்த ஒரு நன்கொடை.
எது இயற்கையோ, எது இயல்பாக நம்முள்ளே மனத்திற்குள் இன்பமாக விதைக்கப்பட்டிருக்கிறதோ, அதை நாம் அழகாக முழுதும் ‘உணர்ந்து’ பிறர்க்குத் தொந்தரவில்லாமல் அனுபவித்தால் அதைவிட நமக்குச் சிறந்த அனுபவம் இருக்க முடியாது.ஆனால் இன்றைய விஞ்ஞான வசதி நிறைந்த உலகில் அதை நாம் அழகாக உணர்ந்து அனுபவிக்கிறோமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எது எதற்கோ வீணாக ஆசைப்பட்டு, வாழ்க்கையைச் சுமையாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம்..இயற்கையை உணரத்தவறுகிறோம்,’ என்பார்..
இந்தப் புதிய கருவி அல்லது புதிய வசதி நமக்கு உண்மையான இன்பம் தருமா? அல்லது நாளடைவில் சுமையாக மாறிவிடுமா? என்று ஆராயாமலே அதை எவ்வளவு விலை கொடுத்தேனும், (பேராசை எண்ணங்களால்!)- வாங்கத் தவிக்கிறோம்.
முதல் டென்ஷன் நமக்கு அப்போதுதான் ஆரம்பிக்கிறது.. சரி, அதை மிக சிரமப்பட்டு, உழைத்து,வாங்கியபின் கொஞ்சநாள் நமக்கு இன்பமாக இருக்கிறது.அது மகிழ்ச்சி கொடுப்பதாக உணர்கிறோம்.
..கருவியா மகிழ்ச்சி கொடுக்கிறது? என்பதை நாம் ஆராய்வதில்லை.. கொஞ்சநாளுக்குப்பின் அக்கருவியே, அல்லது அந்தப் புது வசதியே பல ரிப்பேர்களுக்கு உட்பட்டு நம் நிம்மதியைக் குலைக்கிறது. மீண்டும் டென்ஷன்!
வேறு ஒரு புதிய கருவி, அல்லது வசதி உங்களுக்கு இன்னும் நிறைய இன்பம் தரும் என்று வியாபார தந்திரம் சொல்கிறது.. மனம் சபலப்படுகிறது.வாங்கத் துடிக்கிறது. மீண்டும் டென்ஷனுடன் உழைத்து, காசு சேர்த்து அதை வாங்கி அது புதிய இன்பம் தருவதாக மகிழ்ச்சியில் திளைக்கிறோம். அதுவும் ரிப்பேர் ஆகிறவரை. ஆக, இயற்கையான மகிழ்ச்சி மனத்துள்ளேதான் என்று அறியாமலே காசையும், நிம்மதியையும் தொலைத்து மனத்தில் ஒரு ‘ஒற்றைக்காளை ’
பெரிய வண்டியைச் சுமப்பதுபோல் (நம் கிராமங்களில் பார்த்துள்ளோமே!!) பாரத்தை அனாவசியமாக ஏற்றி, “ என் வாழ்க்கையே ஒரு பெரிய சுமைதாங்கி சார்!,” என்று வீட்டுக்கு வருபவர் எல்லோரிடமும் ‘பீற்றிக்’ கொள்வதில் பெருமையடைகிறோம்..இந்த ஒரு ‘வண்டிச்சுமையை’ இயற்கையினின்றும் விலகி ஏதோ ஒரு மாயையில் சிக்குகிற மாயாமனம் அறிகிறதா, உணர்கிறதா என்றால் இல்லை..
எனக்குத் தெரிந்த ஒரு அறிஞர், நல்ல பேச்சாள நண்பர் இதுவரை ஒரு டெலிபோன் வசதிகூடச் செய்து கொள்ளவில்லை.செல்- கூட வைத்துக்கொள்வதில்லை. ஆனாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலக்கியக்கூட்டங்களில் பேச அழைக்கப்படுகிறார்.நகைச்சுவையும், கிண்டலும், அற்புதமான புதிய புதிய கருத்துக்களும் அவர் பேச்சில் அருவிபோல வந்து கொட்டும்.. அதனால் அவருக்கு எங்கும், எந்த ஊரிலும் பலத்த வரவேற்பு.
எப்படி சார் ஒரு டெலிபோனோ, அல்லது காரோ இல்லாமல் இத்தனைக் கூட்டங்களுக்கும் போய் அனாயாசமாகப் பேசுகிறீர்கள் என்று அவரைக்கேட்டேன்.
இருக்கிற இத்தனூண்டு மீசையைத்திருகியபடி அவர் சொல்வார்;- வேதம் சார்! சொல்லுங்கள்! இந்த செல்.. அல்லது டெலிபோனா போய்ப் பேசுகிறது?. …
நான்..;- ‘இல்லை ஐயா!’..
.. அவர்..;– ‘இவற்றை நான் ஒரு சுமையாகக் கருதுகிறேன்..சார்! அதுகளை வைத்துக்கொண்டால் அனாவசியச் செலவு மாசாமாசம் எனக்கு…எவனாவது சும்மாவானாலும் தொடர்பு கொண்டு வீண் சந்தேகம் கேட்டுக்கொண்டிருப்பான்.என் நேரமும் வேஸ்ட்!.அந்த நேரத்தில் நான் ஒரு புதிய நூலைப் படிப்பேனே! ஏராளமான கருத்துள்ள நூலாக நான் தேர்ந்தெடுத்துப்படிப்பதால்தானே, சுவையுறத் தொகுத்துச் சொல்வதால்தானே சார்!என்னைக் கூப்பிடுகிறார்கள்..இல்லையா? ஆர்வமுள்ளவர்கள் அவசியம் நேரில் என்னிடம் வருவார்கள். ஒப்புதல் தருவேன்.காரில் என்னை அழைத்துப்போனால்தான் பேசுவேன் என்பேன்.பேசவோ குறைந்த கட்டணம் தான் வாங்குவேன்.
அதனால் மற்றவர்களைவிட என்னை அழைத்துப் பேசவைத்தால் அவர்களுக்கும் லாபம். தொலைபேசித்தொல்லைகட்கு நான் பணம் கட்டாததால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு நேரடித் தொடர்பு கிட்டுகிறது.. நெருக்கம் அதிகமாகி எனக்கு இப்போ தமிழ்நாடு முழுதும் ஏராளமான நண்பர்கள்.
ஆக நான் விஞ்ஞானக் கருவிகளைச் சுமையாகக் கருதுவதால் அவற்றிலிருந்து ஒதுங்கி, தேவையானது மட்டும் வைத்துக்கொண்டு(அதாவது டி.வி மட்டும் அவர் வீட்டில் உண்டு- அதுவும் மனைவிக்காக,) காசையும் மிச்சப்படுத்துகிறேன். நேரத்தையும் கூட….
என்னை அழைக்க வருபவர்கள் இயற்கையான உண்மையான இலக்கியத் தாகத்துடன் வருவார்கள். அவர்களை நான் ஏமாற்றுவதேயில்லை.. என்ன வேண்டுமோ கொடுப்பேன். இதனால் நான் எக்காலத்திலும் டென்ஷனை மனத்தில் ஏற்றிக் கொள்வதில்லை.. என்மனைவியும் அப்படித்தான். இப்போதும் அவள் மிக்ஸி என்றால், க்ரைண்டர் என்றால் எத்தனை கிலோ கனம்? எவ்வளோ செலவு? எவ்வளோ மின் ஆபத்து?என்பாள்.
நீங்களே பார்த்தீர்கள் அல்லவா? அவள் பக்கத்து வீட்டுக்காரிகளை விட கட்டு குண்டாய் இருக்கிறாள். ஆரோக்கியமாயும் உள்ளாள். ஒரு தலைவலி என்றுகூட அவள் படுத்ததில்லை. என்று சொல்லி கடகட எனச் சிரித்தார்… உண்மை !அவர் வீட்டில் இன்னும் கிராமத்திலிருந்து கொண்டுவந்த அயனான அம்மியும், ஆட்டுக்கல்லும்தான்.
….அவரது பதிலைக் கேட்டு ஆச்சர்யமும், பலத்த மகிழ்ச்சியும் அடைந்து என்னை அறியாமலே ‘சப்பாஷ்’ என்று கைதட்டினேன்… தெரிகிறதா இப்போது? அவர் உண்மையாக இயற்கையுடன் கைகோர்த்துக்கொண்டே வாழ்க்கையை மிக அழகாக, அமைதியாகக் கொண்டுபோகிற தூய தமிழ் அறிஞர் என்று..! அதனால் வீண் தொந்தரவுகளை அவர் விலை கொடுத்து வாங்குவதில்லை.. அவரை நெருங்கிய நண்பர்கள் ‘சுமை வேண்டா சுப்பன்’ என்று ரகசியமாக அழைப்பர்.
… இவ்வளவு ஏன்? அண்மையில் மறைந்த திரு. காஞ்சிமகான் கூட ஒரு காரையோ, செல் போனோ பயன்படுத்தியதே இல்லை.. அவரிடம் பேசணும் என்றால் பக்தர்கள் நேரில்தான் போய்ப் பேசுவர்.
எங்கு போக வேண்டும் என்றாலும் அவர் கால்நடையாகத்தான் செல்வார். அந்த அளவுக்கு அந்த மகான் இயற்கையோடு கலந்து வாழ்ந்திருந்தார்…இறுதிவரை.
.. உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? நம் எல்லோரது மனப்பான்மையையும் உற்றுக்கவனித்தீர்களானால், சுமைகளை மனத்தில் ஏற்று வீணாக டென்ஷன் படுகின்றோம். அதேசமயம் இந்த டென்ஷனை அனாவசியமாகப் பிறர்மேலும் திணிக்கின்றோம்.. சொகுசுக்கு ஆசைப்பட்டு என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிவந்து போகிறவர் வருபவர் எல்லோரிடமும் கொஞ்சநாள் காட்டிப்பெருமைப்பட்டுக்கொண்டிருந்தார்..வாங்கிய பிறகு அதை எப்படி முறையாகப்பயன்படுத்துவது என்று தெரியவில்லை.. ஓரமாய் வைத்துவிட்டார்!அவரது மனைவியும் வீண்செலவு செய்துவிட்டீர்களே!
சரியான புடவை இல்லாமல் பழசைக்கட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறேனே. எனக்கு இரண்டு நல்ல புடவையாவது நீங்க அநாவசியமாகச் செலவழித்த காசில் எடுத்துக்கொடுத்திருக்கலாம்.. மனசில ஒரு சந்தோஷமாவது இருந்திருக்கும் என்று அடிக்கடி குத்திக்காட்டினாள்.
அவ்வளவுதான்! அவருக்கு டென்ஷன் ஏறிவிட்டது. பலநாட்கள் அவரால் நிம்மதியாகவே இருக்கமுடியவில்லை. எப்படியாவது அந்த வேண்டாத ஆண்ட்ராய்டு செல்லை வேறு ஒருவர்க்கு கொஞ்சம் விலைதள்ளியாவது விற்கப் படாது பட்டார்.அது அடுத்த டென்ஷன்… கடைசியில் அவரது அண்ணன் மகனே{கல்லூரியில் படிப்பவன்} ஒரு விலை சொல்லி எடுத்துக்கொண்டபின் தான் அவர் மனம் அமைதியுற்றது. ஆக தான் பட்ட அவஸ்தையை இன்னொருவரிடம் தள்ளினால்தான் மனம் நிம்மதி அடைகிறது.… அதனால்தான் ‘ஸைல்’ சொல்கிறார்.
“உள் மனத்திலிருந்தோ, அல்லது பிறர் மனம் மூலமாகவோ வருகிற ஒரு வேண்டாத, கெட்ட தூண்டுதலே மன அமைதியை இழக்கச் செய்து டென்ஷன் என்னும் பரபரப்பு எண்ணம் உண்டாகிறது.அது தற்காலிகமாகவோ இல்லை நிரந்தரமாகவோ கூட இருக்கலாம்.ஒன்று ..ஜாக்கிரதையாக இருந்து ‘அது’ ஏற்படாமல் உங்கள் மனத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.. இல்லையாயின் வந்தபின் பிராணாயாமம், தியானம் மூலம் நிச்சயம் அதிலிருந்து விடுபடுங்கள்.
இறைவன் கொடுத்த அழகிய சுதந்திர மனம் என்னும் பாத்திரத்துள் நீங்களே வேண்டாத குப்பையைப் போட்டீர்களாயின், நீங்களே தான் இறைத்தியானம் மூலம் அதனை வெளியே எடுத்து எறியவேண்டும்’ என்கின்றார்.எவ்வளவு உண்மையான பாஸிடிவ் ஆன உபதேசம் பாருங்கள்!
… எனவே அவர் சொல்கிற பிரகாரம் வெளித்தூண்டுதல்கள் ஆன அதிக வெய்யில், அதிகக்குளிர், அதிக மழை அல்லது பிறர் மனம் மூலம் வருகிற ‘ஸ்ட்ரெஸ்’ (மன அழுத்தம்) போன்றவற்றை மனோபலம், தியானம், எப்போதும் சாந்தமான எண்ணங்கள் முதலியவற்றால் போக்கிக்கொள்வோம்.அதே சமயம் நாமே வீணாக சஞ்சல மனத்தால் உண்டாக்கிக்கொள்கின்ற கோபம், காமம், பேராசை,அதீத பாசம், ‘தான்’ எனும் அகந்தையின் மூலம் செய்யும் வேண்டாத செய்கைகள் இவற்றை மகான்களின் உபதேசம், அவர்தம் வரலாற்றை எப்போதும் படித்தல்,நல்ல நல்ல இலக்கியநூல்களை, கவிதைகளைப் படித்து அனுபவித்தல் போன்றவற்றால் மனம் என்னும் நல்ல தெய்வீகப்பாத்திரத்துள் பிரகாசத்தை(தெய்வ ஒளியை)ஏற்றிவைப்போமாக!. இவை நாம் யோகா மற்றும் தியானம் கற்கும் முன் நெஞ்சில் கொள்ளவேண்டிய பயிற்சி முறை.. சரியா?
..(தொடரும்)

Wednesday, July 31, 2019

Who is God? Siva? Yogi? Bhogi?

Q. Who is God?
A. It's not "Who" but "What" is God?
Q. Okay! Then "What" is God?
A. "That" is God!
Q. Who is That?
A. That is exactly "What" is God and not "Who".
Q. Now I am confused?
A. Good. That's what happens, when you try to understand "That", equating it with a "Who" and that too with your intellect.
Q. Why not?
A. Intellect is limited; how can it fully understand "That" which is limitless?
Q. Then how to understand?
A. By becoming one with it.
Q. How to become one with it?
A. By becoming aware of it.
Q. How's that possible?
A. By knowing that you are no different from it.
Q. When that happens, what happens?
A. What happens when salt or sugar is dropped in Water?
Q. It dissolves!
A. Indeed. You too shall dissolve and become a part of it.
Q. Which is?
A. Tat Twam Asi! (You are That!)
~ The Mirror simply reflects what's shown; it never changes with what's reflected.



Q. Who is Siva?
A. The indivisible and invisible whole.
Q. What is Jiva?
A. The divisible and visible parts of the whole.
Q. What's their connection?
A. The same that's there between a drop of Ocean and the Ocean.
Q. Is Siva an Ocean?
A. An ocean of all Jivas, which culminates in Siva.
Q. If Siva is the Ocean, then who is Shakti?
A. The power to make the Ocean churn out waves.
Q. With that what happens?
A. With each wave a new Universe is born.
Q. Where will it all go?
A. When the force is centrifugal, it's creation; When centripetal it's dissolution.
Q. What is the basis of all this?
A. Siva and Shakti!
Q. Where is the basis of all this?
A. Sri Chakra!
Q. What is this Sri Chakra?
A. A blue print of the Universe.
Q. Where to find it?
A. There where the deity resides.
Q. Where would it be?
A. In a temple of course.
Q. Which temple?
A. The Temple of Human Body.
Q. What?
A. The perfect Sri Yantra, is the body itself. In it, lies the gateway to another perfect world.




Q. Who is a Yogi?
A. The One who has controlled his Body, Mind and Breath.
Q. Who is a Bhogi?
A. The One who is controlled by Body, Mind and Breath.
Q. Who is a Drohi?
A. The One who has misused His Body, Mind and Breath.
Q. Who is a Devotee?
A. The One who is trying to control His Body, Mind and Breath.
Q. What is common between the above four?
A. The above four has all the above three, viz. Body, Mind and Breath in common. What they do with it, makes the difference.
Q. How is the Body of the four?
A. The Yogi's body is steady and light; the Bhogi's body is flabby and heavy; the Drohi's body is painfully famished by constant misuse.
Q. How is the Breath of the four?
A. For the Yogi, it's like steady candle flame in a windless night. For the Bhogi, sometimes it's steady, and at other times flickering. For the Drohi, it's constantly, in the fear of being extinguished.
Q. How is the Mind of the four?
A. The Yogi's mind is at peace; the Bhogi's mind is trying to find peace; the Drohi's mind is in pieces.
Q. You haven't told anything about the Devotee?
A. Yes. Because He has a choice between the three and can be whatever likes to be.

வாசியோகம் [ VAASI YOGAM ]

VAASI YOGAM
[ 3ed eye ]
வாசியோகம்என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்துமூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும்அவ்வாறு இடகலைபிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும்இவ்வாறு செய்தால் கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம்வாசியோகத்தினால் பிராணன் (காற்றுதங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும்வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்மறையும்இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும்இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும்மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும்மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதிஅமுதம் சுரந்துவிடும்மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும்இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலைபிங்கலைகளாகும்அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார்மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம் வழியாகச் செலுத்தினால் அதாவது சுழுமுனை வழியாகச் செலுத்தினால் மூச்சானது சிறிது சிறிதாக மேலேஏறி அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப் புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச் செல்லும்இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும் மூச்சுப் பயிற்சியே வாசியோகம் எனப்படும்.
சுழுமுனை வாசல் திறப்பதற்கான விபரம் :வாதம்பித்தம்சிலேத்துமம்(கபம்மூன்றும் ஆகாதுஎனினும் சிலேத்துமத்தின் சேர்க்கைதான் (சேத்துமம்உச்சிக்குழிக்குக் கீழே உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை விளக்கை பங்கப் படுத்துகிறதுஆகவே தான் சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற வேண்டும்இதற்குக் காலைப் பிடித்தல் ஒன்றே வழி. (கால்-காற்றுகாற்றில் உட்கலந்து ஊடாடி நிற்கும் நெருப்பை யோகிகள் உட்கொள்கிறார்கள்இந்தக் கனலால் கபம் அறுபடுகிறதுஇந்தக் கபம் வெறும் சளி மாத்திரம் அல்லஉடலெங்கும் ஒட்டிக் கிடக்கும் கசிறுஇதை புத்தவேதம், " உட்கவிழ்ந்த மேகம்என்று கூறுகிறதுஊத்தை சடலம்உட்குழிந்த பாண்டம் என்று உடல் அழைக்கப்பட்டதற்கு "கபமேமூலகாரணம்எனவே கபத்தை எமன் என்றே அழைக்கலாம்."ஊனினை உருக்கிஉள்ளொளி பெருக்கிஎன்கிற திருவாசக அடியால் இதைத் தெளிவு பெறலாம்ஊன் என்பது ஊத்தைக்கசிறுஉடல் என்பதாக நாம் கொள்கிற பொருள் தவறுஇந்த ஊன் உருகுவதற்கு உள்ளொளி பெருகவேண்டும்வாசியோக சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்நெருப்பைக் கொள்முதல் செய்கிறார்கள்இந்த நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப் பெருகுகிறதுபிறகு உவப்பிலா ஆநந்தமாய்த் தேன் அமிர்ததாரையாக வருகிறதுஇது வாசியோகத்தின் சிகர சாதனை என்று கருதலாம்.
கபம் என்பது உடல் துரியநிலை பெற (நிர்விகல்ப சாயுச்யநிலைஇடையூறாக இருக்கிறதுமாவுப்பொருட்கள் நிறைந்த உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற கால்வாய்கள் எனலாம். "கோழை கபம் தான் யமன்!" இதை நீக்க சித்தர்களால் ஆகாதுவாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும்.புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத் திறக்க :சுகாசனத்தில் அமர்ந்து தலைகழுத்து உடல் நேராக நிமிர்த்திபுருவமத்தியில் மனம்பதிந்து இரு இமைகளுக்கும் இடையில் நுண்ணறிவால் (உணர்வால்பார்த்தால் அந்த இடத்தில் அசைவு காணும்பிராணனை மேலே தூக்கி உடலைத் தளர்த்தி,மனதை அந்த இடத்தில் செலுத்திப் பார்அறிவு நிற்கும் இடமாகிய புருவ மத்தியில் மனதை நிறுத்திகாலைமாலை 2 வேளையும் 11/2 மணி நேரம் பார்த்து வர வேண்டும்இவ்வாறு பழகி வந்தால்தான் பலன் காண முடியும்புருவ மத்தியில் உள்ள வாசல் திறக்கும்போது நீலம்பச்சைவெள்ளை போன்ற நிறங்கள் தோன்றும்.புருவமத்தியில் நினைவை வைத்துத் தூண்டும்போது உண்டாகும் துன்பங்கள்:காதடைப்புகிறுகிறுப்பு உண்டாகிக் கண்கள் இருளும்உடல் வலி எடுத்து நடுக்கம் ஏற்படும்புலன்கள் வலிமை குன்றும்இந்நிலையை அநுபவித்துப் பார்த்தவர்களுக்கே தெரியும்மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே இதைத் தாண்டி மேலே வரமுடியும்மற்றவர்கள் தாண்ட மாட்டார்கள்.வாசி பார்க்கும் நெறி :வாசியானது மூக்குத் தண்டு நடுவில் (புருவமத்திவருவதே வல்லபம் ஆகும்யோகத் தண்டான முதுகுத் தண்டு நிமிரும்அப்போது கண்ணை இறுக்கி சிரமத்துடன் கிடந்து நெற்றியைப் பார்க்காதேமனதால் அந்த இடத்தைக் காணவேண்டும்நடு நெற்றி முதல் பிரம்மரந்திரம் என்ற நாமம் போன்று வாசி ஏறும். (அந்நிலையைக் குறிக்கவே நாமம் என்கின்றோம்அப்போது குமரியாகிய வாலை விளையாடுவதைக் காணலாம்.ஏமாந்து போகாமல் ஒரு நாமமார்க்கத்தில் தொட்டேறி உச்சி வழியாக பிரம்மரந்திரத்திற்குச் செல்லவேண்டும்அப்போது பேசாமல் சித்திரம் போல் அசையாமல் மோனத்தில் இருந்துகொண்டு புருவமத்தியை மனதால் காணும்போது உடல் லேசாகும்மேலே தூக்கும்மனமும்வாசியும் இடது புறம் போகாமல் வலது புறமாக சூரிய கலையில் ஓடும்இந்நிலையில் தன்னைத் தான் காணலாம்சாதாரண மனிதனுக்கும் தாது உயிர் நின்ற இடம் இதுதான்தன்னைத் தானே காணும் இடமும் (ஆன்ம தரிசனம்நெற்றியடி புருவமத்திஊசிமுனை துவாரம் உள்ள மூக்கின் அடிமத்தியாகும்எனவேபுருவ மத்தியில் நின்று உருளும் வாசியை அநுபவித்துப் பார்க்கவேண்டும்சாதனையில் முன்னேறினால் அந்தச் சித்தியை ஓராண்டுக்காலத்தில் பெறலாம்அதன் பின் நெற்றியில் நடு நாம வழியைப் பற்றிச் செல்வதே முத்திக்கு நேரான வழியாகும்இவ்வாறு செல்பவர்கள் முனிவர்களாக ஆகலாம்.இவ்வாறு கண் இரண்டையும்புருவ மத்தில் சுழிமுனையின் நடுவில் அசையாமல் பார்த்தால் அங்கு மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணைக் காணலாம்இதனால் ஞானரசத்தைப் பருகலாம்உடல் ஒளியுறும்புலன்கள் தோறும் தேவையற்ற கருவிகள் அடங்கிப் போகும்அப்போது உடல் கற்பூர வாசனை வீசும்உலக விவகாரம் அற்றுப் போகும்வயோதிகம் குறைந்து வாழ்நாள் நீடிக்கும்மூக்கு மத்தியில் வாசி கொண்டு ஏற்றினால் நாசி மத்தியில் வாசி நீண்டு விடும்இந்நிலையில் தானாகவே வேண்டும்போது திறக்கபூட்டச் செய்யலாம்அதாவது நினைத்த மாத்திரத்தில் புருவ மத்தியில் நின்று சமாதி நிலையை எய்தலாம் மேலும் அந்த வாயிலைத் தாண்டி உட்புகுந்து மேலே, (பிரமரந்திரம்ஏறினவர்களுக்கு யோகத்தின் புராதனமாகிய யோகதண்டம்கமண்டலம்குகை போன்றவைகள் வேண்டாம்.
இதனால் குருவருளும் திரிகால ஞானத்திலுள்ள எல்லா சித்திகளும் உண்டாகி கர்மவினை மாறி தர்மம் ஆகும்நரைமூப்புமரணம் இவை போகும்.மூலாதாரத்தில் இருந்து மூலக்கனல் எனும் வாசி முதுகுத் தண்டின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறிபிடரி வரை வரும்உடல் முழுதும் ஓடாது முதுகுத் தண்டின் உள்ள நடு நாடிவழியாக வரும்அப்போது வாய் மூடி மெளனமாக உடல் ஆடாமல் அசையாமல் இருந்தால் வாசி சீறி எழும் வேகத்தால் உடலைப் பின்னால் தள்ளும்மீண்டும் வாசி கீழ் நோக்கிச் செல்லாமல் உள் நாக்கின் வழியாக மேலே செல்லும்அதன் பின்பு பிரம்மரந்திரத்தை அடைந்து வாசியானது உச்சிவெளியான சிதாகாசத்தில் கலந்ததால் அனைத்தும் தோன்றும்பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு ஏவல் செய்யும்சூரியன்சந்திரன்நட்சத்திரம்ஆகியவை அவர்களுடன் பேசும்இவர்களே சித்தர் நிலையை அடைந்தவர்கள் ஆவார்.இவர்கள் உடல் பல மாறுதல்களை அடையும்நடந்து செல்லாமலேயே ஆகாய மார்க்கத்தில் செல்லமுடியும்தொலைதூரம் நடப்பதைக் காணவும்தொலைதூரம் பேசுவதைக் கேட்கவும் முடியும்இவை எல்லாம் ஒரு நொடியில் நடக்கும்சாதாரண மனிதன் தெருவில் நடப்பது போல் பல உலகங்களில் உலவிவர முடியும்இவை எல்லாம் வாலையாகிய குண்டலினி சக்தி உடலில் உள்ளதால் நடைபெறும்.
காயசுத்தி விபரம் :காலனுக்கு உயிரை உண்ணும் வேலைதான்அவன் ஏவலால் சூலாயுதம் கொண்டு உயிரை எமன் கொண்டு செல்கிறான்எமனுக்கு எமனாய் இருக்கவேண்டுமானால் சூலனுக்கு சூரனாய் இருக்கவேண்டும்அதற்குக் கால சித்தியே துணையாகும்காலசித்தி பெற்றால் எமன் அணுகமாட்டான்வேலாயுதமாகிய வாசியில் எல்லாக்குற்றங்களையும் இரையாக இட்டால் பிராணன் வெந்து காயாதுபசி நீங்கும்கபம் போகும்காம உணர்வு நீங்கும்இவ்வாறு இருந்தால் காலன் நம்மை அணுக மாட்டான்.காயகல்பநிலை பெற விரும்பு துறவியர்களுக்கான உணவுஇருப்பிடம் மற்றும் பல விபரங்கள் கல்ப சாதனை செய்யவிரும்புபவர்கள் கடுமையான சக்தியுடன் இருக்கவேண்டும்தனிக்குடிசை (வீடு-மாடிகட்டிக் கொள்ளவேண்டும்இந்நிலையில் நல்ல குருவும்சிஷ்யனும் தேவை.கருங்குறுவை அரிசிபாசிப்பயிறுமிளகுசீரகம் இவைகளை வேகவைக்கக் கூடிய அளவுக்குக் காராம்பசுவின் பாலைச் சேர்த்துப் பொங்கி ஒரு வேளை சாப்பிடவேண்டும்மற்ற நேரங்களில் காராம்பசுவின் பால் மட்டும்தான் சாப்பிட வேண்டும்வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாதுமழைவெயில்பனிகாற்று நான்கும் ஆகாதுபிரம்மசரிய விரதம்ஆகாரப் பத்தியம் கடுமையாக இருக்கவேண்டும்தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்இதனால்தான் இக்காயகல்ப சாதனை பற்றி சித்தர்கள் விவரமாகச் சொல்லாமல் மறைத்து விட்டுப் போய்விட்டார்கள்இந்தக் கடுமையான பத்தியம் இருந்து அஜபா காயத்திரி மந்திரம் செய்து வரும்போது மெளனமும் தொடர்ந்து இருந்து வந்தால்மாதாமாதம் செய்தால் 12 மாத பலனைப் பெறலாம்சிரத்தையுடன் தொடர்ந்து ஒவ்வொரு வருடமாகப் பனிரண்டு வருடங்கள் செய்து வந்தால் 12 வருட பலனையும் பார்க்கலாம்இதற்கு இடம்பொருள்ஏவல் மூன்றும் தேவை.
புருவ நடு திறந்து சஹஸ்ராரத்தில் நடனம் கண்டபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்சஹஸ்ராரத்தில் திருநடனம் காணும்போது கண்கள் சிவந்து காணப்படும்பாதம்ஆசனவாய் இவைகளில் எரிச்சலும்வலியும் இருக்கும்தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி செய்யவேண்டும்அப்போது வாசி செந்தீ போல் இருப்பதை நுண்ணறிவால் உணரலாம்இந்தச் செந்தீயாகிய வாசிய இடுப்பிற்குக் கீழே இருபிளவாக இருக்கும் கால்களுக்குச் செல்லுமாறு செலுத்தவேண்டும்ஒளி காணும்வரை செலுத்தவேண்டும்சாதனை காலத்தில் புருவமத்திஉச்சிபிடர் போன்ற இடங்களில் சுலபமாக ஒளி காணமுடியும்ஆனால் இடுப்பிற்குக் கீழே பாதம் வரை யோகக்கனல் வருவதற்கு நீண்ட காலப் பயிற்சி வேண்டும்.காலைமாலை இருவேளையும் மூக்கு முனையில் இருவிழிகளை நிறுத்திப் பார்த்தால் இரு விழிகளுக்கிடையில் நேர் மத்தி புருவ மத்தியில் வாசியாகிய உயிர் புருவம் தட்டும்இந்த இடத்தில் மனம் பதிவதையே குரு என்பர்இந்நிலை வந்தால் கருவிக்கூட்டங்கள் ஒடுங்கி ஓடிப் போய் விடும்அதாவது புலன்களும்கருவிகளும் செயலிழந்துவிடும்மனம் திறந்து ஒளி வீட்டைக்காணலாம்.கருவி கரணங்கள் என்னும் தத்துவங்களை வென்ரதால் மனதை விட்டுக் கவலைகள் ஒழிகின்றனபுலன்கள் சுத்தமாகும்முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லைபுருவமத்தி என்னும் குன்றின்மீது ஏறிபிரம்மரந்திரமாகிய மலை உச்சிக்குச் சென்று அம்பலதரிசனம் கண்டவரே மறையோகியும் குருவும் ஆவார்.
குரு வருளால் திருவாகும் யோக்கியதை உண்டாகும்சித்தர்களுக்கெல்லாம் அரசனாக வாழலாம்திரிகால தரிசனம் கிடைக்கும்.யோகிகள் தன் மரணத்தை மறந்துசரீரத்தை பேணிப்பாதுகாப்பதை மறந்து நேரங்களையும் துறந்து காலைமதியம்மாலை என்று மூன்று காலமும் வாசியை ஏற்றிச் சாதனை செய்தவர்கள்தூண்டாத ஜோதியுடன் வெளிச்சம் காண்பர்காயகற்பம் கண்டவர்கள் அமுதத்தை உண்டு கலை சித்தி பெறுவார்கள்ஒளியைப் புருவ மத்தியில் ஏற்றியவருக்குக் கூட சஹஸ்ரார தரிசனம் சிலசமயம் கிட்டுவதில்லைசஹஸ்ராரத்தில் சென்ற பிராணன் குளிகை போல் ஆகிவிடும்அவ்வாறு உச்சிக்குச் சென்று குளிகை ஆனால் ஆகாய மார்க்கத்தில் பறக்கும் ஆற்றல் உண்டாகும்பிராணன் பலப்பட பலப்பட ககனமார்க்கம் செல்லும் திறன் உண்டாகும்முக்திநிலை கூடும்இந்நிலையில் மனம் மெளனத்தில் இருந்து மோனத்தில் ஒடுங்கும்அஜபா காயத்ரியை (ஓம்தியானம் செய்யச் செய்ய உயிர் வலுக்கும் குளிகையாகும்சஹஸ்ர தளத்தின் நடுவில் உள்ள கேசரங்களில் உயிர் நிற்கும்இதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.நெஞ்சுப்பள்ளமாகிய அநாஹதத்தில் பிராணன்(வாசிவரும்போது நீண்ட காலத்திற்கு அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும்இந்நிலையில் யோகிகளுக்குத் திட சித்தம் ஏற்படாமல் சலனங்கள் உண்டாகும்உயிர் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும்அதற்கு மேல் விசுத்தி சக்கரத்திற்கு வரும்அதற்கு மேல் விரைவாக ஏறி புருவ மத்தியாகிய ஆக்ஞாசக்கரத்திற்கு வந்தால் சலனங்கள் மறைந்துவிடும்அதன் பிறகு நெற்றி வழி உச்சிக்குச் சென்று முட்டும்உச்சிக்குச் சென்று முட்டும் பிராணன் அங்கு சுற்றிச் சுழன்று வட்டமிடும்இதைப் பார்ப்பதே ஞானம் எனப்படும்.
இஞ்ஞானநிலையை விட்டு உயிர் கீழே இறங்கி பிடரிக்கு வந்தால் வாதபித்தசிலேத்துமம் அதிகரிக்கும்பித்தம் அதிகமாகும்மேன்மக்கள் இருவர் கூடினால் பலம் அதிகமாவது போல் பிராணனும் பித்தநீரும் ஒன்று கூடினால் உடல் தொல்லை அதிகமாகும்பிராணன் இன்னும் கீழே இறங்கி வந்தால் மும்மூர்த்தியானாலும் மரணம் அடைவார்கள்அதனால் எப்போதும் உச்சியிலே நிற்கவேணும்அப்படி இறங்கினாலும் மீண்டும் லகுவாக மேலே ஏற்ற வேண்டும்காலைமாலை இரண்டு வேளையும் அமைதியான இடத்தில் மனமும்உடலும் இணங்கிய (காலம்சுகாசனத்தில் இருந்து சாதனை செய்தால் வெட்டவெளியில் மனம் ஒடுங்கும்யோகசாதனையின் முடிவில் யோகத்திற்குத் தடையாக இருந்த நீர் கழிந்துவிடும்பிராணன் கபாலம் ஏறும்யோகம் 12 ஆண்டில் சித்தியாகும்அவரவர் புண்ணியத்திற்குத் தகுந்தபடி 3 ஆண்டு, 5 ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு, 2 ஆண்டு என யோகம் சித்திக்கும்மேலே செல்லச் செல்ல யோகம் எளிதாகும்இடைவிடாது பயின்றால் சிற்பரத்தைக் காணலாம்இதுவே நெற்றிக்கண் திறத்தலாகும்இதற்கு மேலெ ஞானநிலை கூட உச்சி ஏறுவர்தலை உச்சியில் கபால மத்தியில் அண்ணாக்கிற்கு நேர் தூண்போல் 1 சாண் நீளம் ஒளி உண்டாவதைக் காணலாம்இந்நிலை வந்தால் நாவால் உணவு உண்ணாமல் உள்நாவால் அமுதம் உண்ணலாம்.அண்ணாக்கில் உள்ள துவாரமே 10-ம் வாசல்இதை ஊடுருவி மூலத்துண்டின் மூலம் உள்நாக்கு வழியே பற்றி வாசிக்குதிரை ஏறி ஒளி இடமாகிய காசிக்குச் செல்அங்கு பரை ஆடுவதைக் காண்பாய்அண்ணாக்கில் இருந்து உச்சிவரை செல்லும் மூல மார்க்கத்தை நடுநாடிஉயிர்நாடிபிராணநாடி ஆகிய வழி சென்று உயிர் நடனத்துக்குக் கூத்தாடும்.
புருவ மத்தியை நோக்கி சாதனை செய்து கொண்டிருக்கும்போது நோய்கள் வந்தால் மருந்துகளால் குணமாகாதுயோகத்தால் அதை நிவர்த்தி செய்யமுடியும்சாதனையைப் பாதியில் நிறுத்தினால் நோயினையே அடைவார்கள்பொய் யோகியாகி விடும்ஞானபதம் கண்டவர்கள் பித்தர்கள் போல் தன்னை மறந்து காணப்படுவார்கள்சுழலில் அகப்பட்ட துரும்பு போல துடிப்பார்கள்இச்சமயத்தில் ஞானத்தால் ஊன்றி நின்று பித்தம் போக்கி எச்சரிக்கையுடன் இருந்து 1 வருடம் வரை சாதனை செய்யவேண்டும்.சாதனை செய்யும் ஒரு வருட காலத்தில் கிறுகிறுப்புமயக்கம் இவை தோன்றும்மயங்கி விழுந்த மண்டைக்குள் வாலை கூத்தாடும்இவ்விளையாட்டு ஒருவருடம் வரை நடக்கும்இதைக் குளிகை என்பர்இந்நிலை வரவிரும்பினவர்கள் யோகத்தில் மேல்நிலையில் உள்ளவர்கள்கபாலத்தில் உயிர் குளிகையாகி நிற்கும்போது ஏற்படும் உணர்வுகளாகும்முக்தி நிலையில் முழுமை பெற்று சித்தி பெற்ற ஞானிகளுக்கு நாடிநரம்புகள் இறுகிக் காணப்படும்உடல்உயிர் இவைகளில் உண்டான மும்மலக் கசடுகள் நீங்கும்குண்டலினி சக்தி உடலில் இருந்து ஆடிப்பாடும்மனம்உடல்உயிர் மூன்றும் ஒன்றாய் கூடி ஒடுங்கி நிற்கும்ஒளி பெருகும்இருள்விலகும்இந்நிலை வந்தால் நரைமூப்பு ஓடிப் போகும்.ஞானசித்தி பெற்ற பின்பு நாடிநரம்புகள் இறுகும்ககன மார்க்கத்தில் செல்ல முடியும்பூமியில் நடப்பது போன்று வானத்தில் நடக்கலாம்வல்லபங்கள் அநேகம் உண்டுமனதில் உற்சாகம் தோன்றும்கேட்டதெல்லாம் கிடைக்கும்வாலைத்தாய் குண்டலினி சக்தி முன்னே நின்று தொண்டு செய்வாள்இத்தகைய சக்தி பெற்ற உடல் உயிர் கேவலப் பிறவியாகாதுமனம் சித்தியும்உயிர் முத்தியும் பெறும். 2 வருடம் யோகம் செய்து சித்தி பெற்று அந்த சித்தியில் ஏமாந்துவிடாமல் அதன் பின் ஞானமார்க்கத்தில் இரட்னு வருடம் சித்துடன் சேர்ந்து விளையாடி முதிர்ச்சி அடைய வேண்டும்.பிரமரந்திர உற்பத்திபிரமரந்திரத்தில் ஊசி துவாரத்தில் உயிர் நிற்கும் நிலையே ஞானம் ஆகும்இந்நிலையில் உள்ளபோது திரிகால உணர்வும் தெரியும்ஆன்மா உச்சி மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று மூன்று காலத்தையும் உணரும்முதுகுத் தண்டின் எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச் செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப் பிராணன் செல்லும்இந்த எலும்பின் உள்ளே ஓடுகிற வாசியே ஆன்மாவாகும்இவ்வாறு எறிமுனை மூக்குக்கு வரும்வாயுவான ஆன்மா எலும்பில் உள்ள துளையின் வழியாகப் புருவ மத்தி ஏறும்இவ்வாறு ஆறு ஆதாரங்களைக் கடந்து புருவமத்தியின் வழியாக உச்சி மண்டைக்குச் செல்லும்.காயசித்தி பெற்ற பின்பு நரைத்த முடி கறுத்துவிடும்உடல் பலமடையும்சரீரம் வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும்ஆன்மா உச்சி ரோமம் வழியாகச் சேர்ந்து ஏறிரோமக்கால்களைத் தொடர்ந்து பற்றி 12 அங்குலம் மேலே ஏறும்உச்சிக்கு மேலே 12 அங்குலம் மேலே துவாதசாந்தப் பெருவெளியில் ஆன்மா செல்லும்அப்போது கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை உண்டாகும்பிராணன் முதுகுத் தண்டு வழிமேலே ஏறிப் பிடரிமூக்கு நுனி கடந்து சதா புருவ மத்தியிலோசஹஸ்ராரத்திலோ ஒடுங்கிவிட்டால் நிர்விகல்பசமாதி நிலையை அடையலாம்மெளன நிலை போல் மோனநிலை கிடைக்கும்மோன நிலையில் பிராணன் ஒடுங்கியபின் உயர்வுதாழ்வற்ற நிலை ஏற்பட்டுவிடும்இதுவே எல்லாம் பிரம்மமயம்இதை எல்லாரும் அடையலாம்இதற்கே மறு பிறவி கிடையாது.

 thank 
Deena Dayaalan sent Mail to me
from  https://sivasakthipandian.blogspot.in/