Wednesday, February 19, 2025

7 chakra details in சிவபுராணம் book






நோய் மருத்துவரிடம்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். #tamilfoods

Saturday, February 8, 2025

அர்த்தநாரி

சிவசக்தி சம்மேளனம்.

கும்பகோணம் சௌராஷ்டிரா பெரிய கோயில் தெருவில்  உள்ள  ஸ்ரீ சாமுண்டேஸ்வரி ஆலய விமானத்தில் காணும் சிவசக்தி சம்மேளனம் [ அர்த்தநாரி நடராஜர்] சுதைச்சிற்பம்.இது போன்று காண்பது அரிது.எட்டுத்  திருக்கரங்கள்;வலப்பக்கம் விரிசடை;வியாக்ரபாதர், பதஞ்சலி வணங்குகின்றனர். 

இந்த செய்தியைப் படத்துடன் திருவாவடுதுறை ஆதீனம் சரஸ்வதிமகால் நூல்நிலையம் மற்றும் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள '' மகா அர்த்தநாரீசுவரர் '' என்னும் நூலுள் அடியேன் கண்டேன்.

   சிவசக்தி சம்மேளனம் என்னும் பதத்துடன் சம்பந்தப்பட்ட இடுகை ஒன்றினை   '' பக்தி '' இணையப்பக்கத்தில் கண்டேன்.சிவசக்தி ஐக்கிய தத்துவம் என்னும் தலைப்பில் அவ்விடுகை வந்துள்ளது.இடுகையின் ஆசிரியர் அன்பர்  பஞ்சாங்கம் ஆவார்.

அதனை அவ்வாறே அடியேன் கீழே தருகிறேன்.

சிவசக்தி ஐக்கிய தத்துவம்.

இன்றுள்ள சகல சாஸ்திரங்களும் நடராஜப் பெருமான் தன் டமருகம் என்ற உடுக்கையில் தட்டி எழுப்பிய ஒலியிருந்தே எழுந்தவை. இவை சிவ சூத்திரங்கள் எனப்படும், சமஸ்க்ருத எழுத்துக்களில் 51 அக்ஷரங்களில் 43 அக்ஷரங்கள் தான் பூரண உருவத்துடன் இருக்கின்றன. இந்த 43 அக்ஷரங்களும் ஸ்ரீசக்ரத்தைக் குறிப்பிடுகின்றன.

சிவ சூத்திரங்கள் அ,இ,உண் என்று ஆரம்பித்து ஹல் என்று முடிவடைகிறது. முதல் அக்ஷரத்தையும் கடைசி அக்ஷரத்தையும் சேர்த்தால் அஹ என்று வரும். அதாவது "அஹம்" ஆகவே சிவ சூத்திரங்கள் ஸ்ரீ சக்ரத்தைத்தான் குறிப்பிடுகின்றன. {அஹம் என்ற இந்த உடம்பே ஸ்ரீ சக்ரம் என்ற விளக்கம் பின்னர் வரும்.}

நடராஜர் ஒன்பது தடவை முதலிலும், பின்னர் ஐந்து தடவையும் ஆக பதினான்கு தடவை டமருகத்தை அடித்ததாக கூறப்படுகிறது. முதலில் ஒன்பது தடவை அடித்தது. ஒன்பது அக்ஷர நவாக்ஷரி,பின்னர் ஐந்து தடவை அடித்தது பஞ்சாக்ஷரம். தெய்வங்களுக்கான புருஷ மந்திரங்களுக்கு மந்திரம் என்றும் ஸ்திரீ தெய்வங்களுக்கான மந்திரத்தை வித்யை என்றும் சொல்கிறார்கள். ஒன்பது முறை அடித்ததால் மேரு மந்திரமான ஸ்ரீவித்யையும், ஐந்து முறை அடித்ததால் பஞ்சாக்ஷர மந்திரத்தையும் வெளிபடுத்துகிறார். பஞ்ச தசாக்ஷரி வித்தையில் வரும் அக்ஷரங்களை புனருக்தி இல்லாமல் கணக்கு பன்னினால் ஒன்பதுதான் வரும் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சிதம்பரம் நடராஜாவை பூஜை செய்யும் தீக்ஷிதர்களுக்கு பஞ்சதசீ, பஞ்சாக்ஷரம் என்ற இரு மந்திரங்களும் உபதேசமாயிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இன்றும் இருந்து வருகிறது. இந்த 14 ஒலியும் 14 வித்தைகளைக் குறிப்பிடுகின்றன. இப்பிரபஞ்சமும் பஸ்யந்தி, மத்யமா, வைகரீ, கிரியா, இச்சா. ஞானம், சத்துவம், ரஜஸ், தமஸ், என்கிற ஒன்பது சக்திகளால்தான் உருவாகியிருக்கிறது. சிதம்பர நடராஜர் ஆலயத்தில் ஸ்தூபி 9, படி 5, உத்ஸவ தினங்கள் 9,17,26 ஆகும்.

நடராஜர் இடதுகாலைத் தூக்கிக் காட்டுகிறார். அது அம்பிகையின் கால், இந்த காலை " குஞ்சிதாங்க்ரி " என்று பெரியோர்கள் கூறுகின்றனர். "குஞ்சிதாங்க்ரி" என்ற எழுத்துக்களுக்கு கடபயாதி சங்கியை ரீதியாகக் கணக்கு செய்தால் 15 வரும். இது பஞ்சதசாக்ஷிரிஎ வித்யைக் குறிக்கிறது. ஆகவே இக்காலைத் தூக்கிக் காட்டுவதன் மூலம் : தேவியை வழிபடு " என்கிறார் நடராஜர் அப்படி காட்டும் கையையும் உடௌரமாகக் காட்டுகிறார். குஞ்சிதாங்க்ரி குறிப்பிடும் "பஞ்சதசீ" வித்யை மானஸீகமாக ஜபம் செய் என்று அதற்கு அர்த்தம். அம்பிகைக்கு :அந்தர்முக ஸமாராத்யா" என்ற பெயர் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் ஸ்ரீவித்யைக்கு மிக முக்கியமான ஸ்தலம் என்பதற்கு மற்றொறு ஆதாரமாவது: சிதம்பரம் தில்லைவாழ் அந்தனர்களில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு உமாபதிசிவம் என்ற மகான் இருந்தார். இவர் சிவகாமி அம்மை ஆலயத்தின் வடக்கு பிரகாரச் சுவரில் ஸ்ரீசக்ரம் வரைந்து அதற்குமுன் ஸ்ரீ பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தை அந்தர்முகமாகத் தியானித்து அம்பிகை அனுக்ரஹத்திற்குப் பாத்திரமானவர். இவர் "குஞ்சிதாங்க்ரி ஸ்தவம் " என்ற 300 ஸ்லோகங்கள் கொண்ட நூலை இயற்ற்யிருக்கிறார். அதில் ஒவ்வொரு ஸ்லோகத்தைன் முடிவிலும் "குஞ்சிதாங்க்ரி பஜேஹம் " என்று வருகிறது. ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரும் தான் இயற்றிய "சிவகர்ணாம்ருத"த்தில் நடராஜரின் இடது காலுக்குத்தான் விசேஷம் என்று கூறியிருக்கிறார்.

சிதம்பரத்தில் ஸ்ரீசக்ர சம்மேளன யந்திரத்தில் 43 சக்ரங்களுக்குத்தான் பிரதான பூஜை செய்யப்படுகிறது. அந்த பூஜையும் 43 முக்கோணத்திலுள்ள ஆவரண தேவதைகளுக்குத்தான் நடைபெருகிறது.

மதுரையில் நடராஜர் காலைமாற்றி ஆடுகிறாரே என்கிறீர்களா? ஆமாம்! இங்கு அம்பிகையை வழிபடு என்று நான் சொல்லாமலேயே தேவி இங்கு பிரசித்தி பெற்றுவிட்டாள்" என்பதை சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம்.

நன்றி:
௧. திருவாவடுதுறை ஆதீனம் சரஸ்வதிமகால் நூல்நிலையம் மற்றும் ஆய்வு மையம்
 ௨.'' பக்தி '' இணையப்பக்கம் அன்பர்  பஞ்சாங்கம்.

விபூதியை கொண்டு அனைத்து வித நோய்களையும் குணமாக்கும்

நீண்ட நாட்களுக்கு பிறகு முறையாக சுரகுடுவையில் புடமிட்டு எங்கள் வீட்டில் சகல நோய்களையும் தீர்க்கும் ஜீவ பஸ்ப திருநீறு தயாரித்து வெற்றியும் கண்டேன். அந்த முறையை இன்று சித்தர்களின் குரலில் உங்களுடன் பகிர்கிறேன்... 
           நீங்களும் தயாரித்து பயன் பெறுங்கள். தேவைப்படுபவர்கள் சித்தர்களின் குரல் ஆலோசகர் ராம்குமார்  whatsaap மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள்..

(சிறு வயதில் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகளிடம் மூலிகை ரகசியங்களை பற்றி படிக்கும் போது "போகர் நிகண்டு" என்ற நூலில் இருந்து மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் அவருக்கு சொன்ன அபூர்வ ரகசியம் இது.)

விபூதியை கொண்டு அனைத்து வித நோய்களையும் குணமாக்கும் மற்றும் அனைத்து வித யோக ஆற்றல்களையும் பெருக்கும் சித்தி முறை இது!!!

நமது நாட்டில் பெரும்பாலும் சாமியார்கள் அவர்களை பார்க்க சென்றால் விபூதி வழங்குவது வழக்கம். சிறிது வாயில் போட்டு விட்டு சிறிது நெற்றியில் இட்டு விடுவார்கள். அது பல விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையதாக இருக்கும். சரி வெறும் விபூதி மட்டும் எப்படி இவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்று சந்தேங்கம் தோன்றுவது இயல்பு தான்.

இவை வெறும் சித்து மட்டும் இல்லை இவை மருத்துவ குணம் வாய்ந்தது !!!

சிலர் சிறுநீரகத்தில் கல் இருந்தது அவர் கொடுத்த விபூதி மூன்று நாள் சாப்பிட சொன்னார் ஸ்கேன் செய்து பார்த்தும் கல் இல்லை என்று சொல்லி வியப்படைவதை பார்த்து இருக்கிறோம். இன்னும் சிலர் கை கால் தீராத வலி இருந்தது அந்த மகான் மந்திரித்து கொடுத்த விபூதி ஒருவாரத்தில் சரி செய்தது என்று சொல்ல கேட்டு இருக்கோம். 
இன்னும் சிலர் மூட்டுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, குதிங்கால்வலி, கெண்டைக்கால் சதை வலி போன்று அவதியில் இருந்தேன் தினமும் அந்த சாமியார் கொடுத்த விபூதி சாப்பிட்டேன் முழுமையாக குணமாகி விட்டது என்று கேள்விப் பட்டு இருக்கிறோம்.
சிலர் சொறி, சிறங்கு போன்றவற்றால் அவதி பட்டு இந்த விபூதியை அதன் மீது போட்டும் விபூதியை உண்டும் குணமானதை கண்டு இருக்கின்றோம்.

இவை வெறும் கதைகளா அல்லது அவர்கள் சொல்வது உண்மையா ?
          இவை அனைத்தும் நிதர்சனமான உண்மை தான். சரி அந்த விபூதி தயாரிப்பது எப்படி...!!!
இரண்டு கிலோ சுத்தமான பசுஞ்சாண விபூதி வாங்க வேண்டும். அதில் கீழ் கண்ட 11 பற்பங்களையும் 10gr வீதம்  சேர்க்க வேண்டும்.

(1)படிகார பஸ்பம் - 10 கிராம்
(2)கல் நார் பஸ்பம் - 10 கிராம் 
(3)குங்கிலிய பஸ்பம் - 10 கிராம் 
(4)நண்டுக்கல் பஸ்பம் - 10 கிராம் 
(5)ஆமை ஓடு பஸ்பம் - 10 கிராம் 
(6)பவள பஸ்பம் - 10 கிராம் 
(7)சங்கு பஸ்பம் - 10 கிராம் 
(8)சிலா சத்து பஸ்பம் - 10 கிராம் 
(9)சிருங்கி பஸ்பம் - 10 கிராம் 
(10)முத்துச் சிப்பி பஸ்பம் - 10 கிராம் 
(11)நத்தை ஓடு பஸ்பம் - 10 கிராம் -

                  இது அனைத்தும் நீர் சத்து அதனால் மேலே சொன்ன அனைத்தும் நடக்கும்.

மேலும்;
(1) கல்நார் பற்பம் (சிறுநீரகம், பிறப்புறுப்பு மண்டலம்),
(2) படிகார பற்பம் (குடல்புண், சிறுநீரகம்),
(3) சிலா சத்து பற்பம் (எலும்பு மண்டலம், உடலின் அத்தனை உறுப்புக்கள், சிறுநீரகம், பிறப்புறுப்பு மண்டலம்),
(4) ஆமையோட்டு பற்பம் (எலும்பு மண்டலம், வயிறு, கல்லீரல், மண்ணீரல்),
(5) சிருங்கி பற்பம் (எலும்பு மண்டலம், இதயம், இரத்தக் குழாய்கள்).
(சிருங்கி பற்பம் என்பது மான் கொம்பு பற்பம் ஆகும்)

இந்த பற்பங்கள் ஒவ்வொன்றும் 10 கிராம் போதுமானது. இது தான் மருந்து. இவை தான் நோய்களையும் குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.

மேலுள்ள 11  பற்பங்களையும் கலந்து அதை 1kg தூய நாட்டுப்பாசு விபூதியுடம் கலந்து வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டியது தான். சிலர் கோயிலில் சாமியார் போல் உட்கார்ந்து வரும் நபருக்கு வெறும் விபூதியை இட்டுவிட்டு, கலந்து வைத்திருக்கும் பற்பக் கலவையை ஒரு சிட்டிகை எடுத்து விபூதியை வாயில் போடுவது போல போட்டுவிட்டால், அந்த நபருக்கு எந்த வியாதி இருந்தாலும் போய்விடும். இதை சித்து என்றும் சொல்லலாம் மருந்து என்றும் சொல்லலாம். இந்த திருநீறு பிரயோகம் மூலம் அதன்மூலம் பயன் பெற்றவர்கள் ஏராளம்.

இவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும். இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.

இது தூய நாட்டுப்பசு பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர். இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தியாகும்.

இதனை தாம்பளத்தில் பரப்பி எந்த காரியம் சாதிக்க வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும். மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும்.

சரி "தூய திருநீறு தயாரிப்பது எப்படி?" என்று பல அன்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பார்கள். அவர்களிக்கும் சேர்த்து இந்த பதிவை பகிர்கிறேன்

[திருநீறு என்பது ஆன்மிக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; இது மிகச்சிறந்த மருந்து. நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்கள் அவர்கள் முறையில் உருவாக்குகிறார்கள் இந்த திருநீறை. மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது.

பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.

திருநீறு தயாரிக்கும் முறை:-
(1) தூய நாட்டு பசுமாட்டுச் சாணம்
(2) திருநீற்றுப் பச்சிலைகள். (திணுத்திப் பச்சை இலை)
(3) வில்வப்பழ ஓடுகள்

மேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும். நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.

இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும். எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும். நமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும்.

இந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள்.

பூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் “தந்திரமாவது நீறு’ என்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.
மூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்பதாலும், திருநீற்றுப் பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை...
புத்தியால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்
மூலமதையறிந்தக்கால் யோகமாச்சு
என்று என் குரு அகத்தியர் அடிக்கடி என் கனவில் கூறுவார்.

இந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்தி வந்த மூலிகை மருத்துவப் பொருளாகும். எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு:-
---------------
                 தயாரிக்கும் முறையை ஒளிவு மறைவு இல்லாமல் முழுமையாக பகிர்ந்துளேன். அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேடி வாங்கி நீங்களே வாங்கி தயாரித்து பயன்படுத்துங்கள். முடியாதவர்கள் நம்முடைய கொல்லிமலை ராஜவைத்தியர் தர்மலிங்க சுவாமிகளின் சீடர் நாதாந்த சுவாமிகளால் தயாரிக்கப்படு கொடுக்கப்படுகிறது. 
....

           - சித்தர்களின் குரல்.  shiva shangar

Wednesday, February 5, 2025

விவாஹ முகூர்த்தம்

பிரஸ்ன ஜோதிடம்:

விவாஹ முகூர்த்தம்.

1.உல்கா;
சூரியன்  நின்ற நட்சத்திரத்திலிருந்து பத்தொன்பதாது நட்சத்திரம்  உல்கா அதில் முகூர்த்தம்  கூடாது,

2.பூகம்பம் :கோச்சாரத்திலிருந்து சூரியன்  நின்ற நட்சத்திரத்திலிருந்து ஒன்பாதவது  நட்சத்திரம்  பூகம்பம் . முகூர்த்தம்  கூடாது,

3.உபாகம்;

சூரிய சந்திரன்  கிரகணத்திற்கு முன்பு மூன்று நாளும் கிரகணம் முடிந்து  மூன்று நாளும்  முகூர்த்தம்  கூடாது,

4.குளிகதோயம்.
குளிகன் உதயம் ஆகும் நேரம் முகூர்த்தம்  கூடாது.

5.சஷ்டாஷ்டகம்.
முகூர்த்தம்  லக்கினத்திற்கு  சந்திரன், குரு 6.8.12 கூடாது

6.அஸத் திருஷ்டி.

முகூர்த்தம்  லக்னம் பாவத்தை பாபர்கள்  பார்க்க கூடாது

7.அஸத் ஆருடம்.

முகூர்த்த லக்கினத்தில் பாபர்கள்  கூடாது

8.சித த்ருக்.
சுக்கிரன் முகூர்த்த லக்கினத்தை பார்ப்பது கெடுதி  என சில க்ரந்தங்களில் சொல்லப்படுகிறது, .
ஆனால் பராசார ஹோரையில் முகூர்த்த லக்கினத்தை களத்திர காரகனாகிய சுக்ரன்  பார்ப்பது  மிக நன்று  என சொல்லப்படுகிறது,

9.ஸந்தியா தோஷம்,

சூரியன்  அஸ்தமனம் ஆவதற்கு  முன்னும், பின்னும் இரண்டு  நாழிகை காலம் தோஷம்,  அதில் முகூர்த்தம் கூடாது

10. கண்டாந்தம்.

அஸ்வினி, மகம், மூலம்  கேது நட்சத்திரங்களின் முதல் பாதமும் 

திருவாதிரை. சுவாதீ. சதயம், இராகு நட்சத்திரங்களின் கடைசி  பாதங்களும் முகூர்த்தம்  கூடாது

11.உஷ்ண கடிகை.
உஷ்ண கடிகை நட்சத்திர நாழிகையில் முகூர்த்தம்  கூடாது.

12.தியாஜ்யம்  நேரம்  முகூர்த்தம்  கூடாது

13.ஸ்திர கரணம்.
சகுனி. சதுஷ்பாதம், நாகவம், கிம்துஸ்க்னம்  போன்ற கரணங்களில்  முகூர்த்தம்  கூடாது

15.ரிக்தை.

சதுர்த்தசி சதுர்த்தி, ந.அஷ்டமி, நவமி  போன்ற திதிகளில் முகூர்த்தம் கூடாது

17.லாடம்.

சூரியன் நின்ற நட்சத்திரம்  முதல்  மூலம்  நட்சத்திரம்  வரை எண்ணி வரும்  எண்ணை  அந்த எண் பூராடம்  நட்சத்திரம் முதல் எண்ணி வரும்  நட்சத்திரம்  லடாம் நட்சத்திரம்  அன்று முகூர்த்தம்  கூடாது

18.ஏகார்க்களம்.

மொத்தம்  360 பாகையிலிரூந்து  சூரியன்  நிற்கும்  பாகையை கழித்து வரும்   ஸ்புடத்திற்கு 
உதய நட்சத்திரம்  1,2,7,10,11,14,16,18,20

ஆகிய. நட்சத்திரங்கள் முகூர்த்தம்  கூடாது.

19.வைதிருதம்.

சூரியன்  நின்ற நட்சத்திரம் முதல்  14,வது நட்சத்திரம்  முகூர்த்தம்  கூடாது

20.அஹிசிரசு.

வியதிபாதத்தின் பிற்பகுதி  முகூர்த்தம் கூடாது.

21. விஷ்டி.
வளர்பிறை  அஷ்டமி, ஏகாதசி,  6.முதல்  12 நாழிகை.பௌர்ணமி  12 நாழிகை கூடாது

22.அம்ஹஸ்பதி.
ஒரு மாதத்தில்   இரண்டு  அமாவாசைகள் வந்த மாதம் கூடாது
சித்திரை. வைகாசி  செய்யலாம்

23.ஸமஸர்ப்பம்.
அமாவாசை  வராத மாதம் கூடாது

இவைகள்  எல்லாம்  இப்போது  பார்த்து  திருமணம்  செய்ய முடியாது 
ஆனால் இவை இலக்கணங்கள்

Monday, February 3, 2025

அமாவாசை கோயில்கள்


🙇 அமாவாசை கோயில்கள் 

இராமேஸ்வரம்

இராமேஸ்வரத்தில் தை அமாவாசை அன்று இராமநாதசுவாமியும், அம்பாளும் அக்னி தீர்த்தத்திற்கு வருவார்கள். அங்கு அவர்களுக்கு புனித நீராடல் நடைபெறும்.

குறிப்பாக தை அமாவாசை தினத்தில் இராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலில் அக்னி தீர்த்தமாடி, பின் கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கட்டங்களில் தீர்த்தமாடிய பின இராமநாதர் திருக்கோயிலில் வழிபடுவது சிறப்பு. 

இன்று இங்குள்ள தீர்த்தக்கட்டத்தில் ஒரு முறை நீராடினால் ஆயிரம் தீர்த்தக்கட்டத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.

சதுரகிரி

பூலோக கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் தை அமாவாசை விழா சிறப்பாக நடக்கும். 

முதல்நாள் பரிசுத்த பூஜைகளும், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கும். தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும் நடக்கும். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கான சிறப்பு வழிபாடும், சங்கொலி பூஜைகளும் நடக்கும். 

சிதம்பரம் 

தை அமாவாசையை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் ஏராளமானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர். 

தை அமாவாசை நாளில் தில்லைக் காளியை வழிபட்டால் நம் முன் ஜென்ம வினைகள் யாவும் விலகிவிடும் என்பது ஐதீகம். 

அமாவாசை நாளில் தில்லைக் காளிக்கு 108 திரவியங்களால் அபிஷேகமும் விசேஷ யாகமும் நடைபெறும். 

யாகத்தில், அபூர்வ மூலிகைகளுடன் மிளகாய்வற்றலும் போடப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வேண்டிக்கொண்டால், எதிரிகள் தொல்லை  ஒழியும் குடும்பத்தில் தம்பதிக்குள் ஒற்றுமை மேலோங்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சகோதரச் சண்டைகள் யாவும் தீர்ந்துவிடும்; தீய சக்திகள் விலகி ஓடும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமூர்த்தி மலை 

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. 

ஆண்டு தோறும்  தை அமாவாசை தினம் சிறப்பு நாளாகும்.  தை பட்ட சாகுபடியை துவக்குவதற்கு முன்பு விவசாயிகளை அமாவாசை தினத்தில் மாட்டு வண்டிகளுடன் வந்து மும்மூர்த்திகளை தரிசித்து விட்டு, சாகுபடி பணிகளை துவக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

அய்யாவாடி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்யங்கிரா கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் யாகம் நடைபெறுகிறது. இதில் தைஅமாவாசையன்று இந்த யாக்த்தில் கலந்து கொள்பவர்களுக்கு எதிரி தொந்தரவுகள் இருக்காது. 

திருச்சி உறையூர்

குங்குமவல்லி அம்மன் திருக்கோயிலில், அமாவாசை யாகம் சிறப்பாக நடக்கும். இங்குள்ள இறைவன் சுயம்புவாக லிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதராய் வாகனங்களில் எழுந்தருளியிருப்பது கோயிலின் தனி சிறப்பு.

இராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்ட தானம்

இராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 62 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது  சகல தீர்த்தமுடையவர் கோயில் இங்கு அம்மன்  பெரியநாயகி. 

இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தை மாதங்களில் வரும் அமாவாசைப் புனித நாளில், இந்தத் தலத்தில் திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும் என்பர். 

இந்தத் தலத்தில் திதி கொடுத்தால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம். அவர்களின் ஆத்மாவும் அமைதிபெறும். பிறகு சர்வதீர்த்தேஸ்வரரை வழிபட்டால். சகல ஞானமும் யோகமும் பெற்று இனிதே வாழலாம் 

வேதரண்யம் 

ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும். 

திலதர்ப்பணபுரி

இத்தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக் காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த தலங்களில் ஒன்று. 

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய வந்த இராமபிரான், இங்கே எள்ளும், நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால் இத்தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்ற பெயர் ஏற்பட்டது.

இங்கு சூரியனும், சந்திரனும் அருகருகில் இருப்பதால் இதற்கு நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் உண்டு.

ஈரோடு மாவட்டம் பவானி 

கூடுதுறையில் கோயில் கொண்டிருப்பவர் சங்கமேஸ்வரர். இத்தலம் பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகவும், இங்கு நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம். 

இங்கு அம்மன், நதி, தலம் மூன்றும் பார்வதியின் திருநாமங்கள் பெற்றும் அமைந்துள்ளதால் மிகச் சிறப்பு வாய்ந்தது.

திருச்செந்தூர்

முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும் திருத்தலம் திருச்செந்தூர். இங்கும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணற்றிலும், கடலிலும் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விளமல்

திருவாரூரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தலம் விளமல் என்ற ஸ்தலம். பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம். 

அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி பின் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.

குற்றாலம், பாபநாசம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது

திருநெல்வேலி

நெல்லையப்பர் ஆலயத்தில், ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று பத்ர தீபம்/ இலட்ச தீபம் ஏற்றுவார்கள். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களால் ஏற்றப்படும் 

திருவள்ளூர்

வீரராகவப் பெருமாள், சாலிஹோத்திர மகரிஷி என்பவருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வு அந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தை `அமாவாசை தலம்' என்றும் அழைப்பார்கள். 

தை அமாவாசை அன்று, பக்தர்களுக்கு தேனும், தினை மாவும் பிரசாதமாக வழங்கப்படும்.

ஆனைமலை 

இங்கு மாசாணியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் அம்மன், சயன கோலத்தில் இருப்பதை தரிசிக்கலாம். 

இங்கு தை அமாவாசை அன்று, பச்சிலை பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த பிரசாதம் வயிற்றுப் பிரச்சினைக்கு அருமருந்தாகும்.

திருஇந்தளூர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதர் கோவில் இருக்கிறது. 

தை அமாவாசை அன்று, இத்தல இறைவனான பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.

திருக்கடையூர்

அபிராமி பட்டருக்காக, தை அமாவாசை அன்று, வானில் பவுர்ணமி நிலவை தெரியச் செய்து அருளியவர், அபிராமி அன்னை. அந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று திருக்கடையூர் திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடத்திக் காண்பிக்கப்படும்.

தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டு ஆசீர்வாதம் பெறுவோம்.

அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார் மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿

**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என்‌ வரமே

இனிய ஈசன்  அகிலம் காக்கும் அண்ணாமலையார் அருளால் எல்லா நாளும் இனிய நாளே 🌹

Saturday, January 18, 2025

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரதான அர்ச்சகர் என்று சொல்லக்கூடியவர் ( Head Priest )

ஸ்ரீ பாஞ்சராத்ர  ஆகமத்தில் ப்ரதான அர்ச்சகர் என்று சொல்லக்கூடியவர் ( Head Priest )  கீழ்கண்ட நபர்களை தீக்சை செய்யவேண்டும் (இவர்கள் அனைவரும் நிரந்தரமாக கோயிலில் பெருமாள்  கைங்கரியம் செய்யவேண்டும் )


1) ஆசார்யன் - கர்சனதிப் பிரதிஷ்டைவரை  செய்பவர் 

2) அர்ச்சகர்  - உதவி அர்ச்சகர் ( Helper )

3)சன்னதிபரிசாரகர்  - பெருமாள் பாத்திரத்தை சுத்தம் செய்பவர்  மற்றும் திருமணி கைங்கரியம் செய்பவர்   மற்றும் பெருமாளுக்கு தேவையான சந்தனாதி திரவியங்களை தயார் செய்து வைப்பவர் மற்றும் அர்ச்சகருக்கு தேவையான உதவி செய்பவர்.

4) பரிசாரகர் (மடப்பள்ளி)  -  பெருமாளுக்கு தேவையான நித்யபடி மற்றும் அதிகப்படி உத்ஸவ காலங்களில்        பொறுப்புடன் பெருமாள் தளிகை செய்பவர். 

5) பிசக் (Dr)  - கோயில் அர்ச்சகருக்கு மருத்துவம் பார்ப்பவர் 

6) தைவக்ஞ்யன் ( Astrologer ) - கோயிலுக்கு ஜோதிடம் பார்ப்பவர் , உத்ஸவத்திற்கு  மற்றும் பிரதிஷ்டைக்கு ( கும்பாபிஷத்துக்கு  லக்கனம் மற்றும் முகூர்தம் வைத்து தருபவன் 

7) கர்மஹ:   நாவிதன்  ( சவரர் செய்பவன் )

8)குலால: கோயிலுக்கு தேவையான மண்பாண்டம் செய்பவன் (கலசம்)

9) பார்சவ: டவன்டை அடிப்பவன்.

10) வ்யாத:  வாத்தியம் தயார் செய்பவன்.

11) தந்துவாய:  நாதஸ்வரம் வாசிப்பவன்.

12) கோப: மாட்டை மேய்ப்பவன் ( பசுவை ரட்சிப்பவன் )

13) மாஹீச: எருமை மேய்ப்பவன் (  எருமை பால் கறப்பவன் )

14) கரிபந்தந:  யானைக்காரன் ( யானையை பார்த்துக்கொள்பவன் )

15)சூளிக: ஆயுதம் இரும்பு வேலை செய்பவன்.

16) மணிவித்ரய: பத்தன் ( தங்கம் வேலை செய்பவன் ஆசாரி )

17) புஷ்பகார :  மாலை கட்டுபவர்.

18) மாளவக:  குதிரையை ரட்சிப்பவன் 

19) சூத: வஸ்திரம்  பார்த்துக்கொள்பவன் ( சலவை ரூம் )

20) சண்டாள:  உத்ஸவம் மற்றும் மற்ற கோயில் வைபவங்களை மக்களுக்கு கூறுபவன்.

21) நத்தக: நாட்டியம் ஆடுபவன் .

22) பெளராணிக: புராணம் சொல்பவன் 

23) தக்ஷ:  ஸ்தபதி 

24) ரதகார: வாகனம் செய்பவன் 

25) தைலிக: எண்னை காப்பு தயார் செய்பவன் 

இவர்கள்  25 பேர்களும் பாஞ்சராத்திர ஆகம கோயில்களில் மிக முக்கியமானவர்கள் இவர்கள் அனைவருக்கும் ப்ரதான அர்ச்சகர் தீக்சை செய்யவேண்டும்.

இப்படிக்கு,
R. சக்கரபாணி பட்டாச்சியர்,
திருக்குடந்தை,
9566206189.