Thursday, November 27, 2014

திருச்செந்தூர் சித்தர் சத்ரு சம்ஹாரமூர்த்தி ஜீவசமாதிதிருச்செந்தூர் கடல்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் ...

திருச்சி மண்டல தீயணைப்பு நிலையங்களில் மகிழ மரத்தடியில் கோயில் கொண்டு அருள்புரிகிறார் சித்தர் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி. சித்தராக வாழ்ந்த இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அன்புகோவில் கிராமத்தை சேர்ந்தவர்கள் நல்லமுத்து பிள்ளை, பொன்னம்மாள் தம்பதி. இவர்கள் திருச்சி மாவட்டம் வாதிரிப்பட்டியில் குடியிருந்தனர். இவர்களுக்கு மூன்றாவது குழந்தையாக 13.6.1880ல் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி பிறந்தார். அவருக்கு கனகசபாபதி என பெயரிடப்பட்டது. 1901ம் ஆண்டு இவருக்கும், மாமன் மகள் சொர்ணத்தம்மாளுக்கும் திருமணம் நடந்தது. பொன்னமராவதியில் அரசு ஆசிரியராக வேலை பார்த்தார். நல்ல நூல்களை படிக்கும் வழக்கத்தை குருநாதர் மேற்கொண்டார். 1915ம் ஆண்டு சிதம்பரம் கோயில் கும்பாபிஷேகததிற்கு சென்ற குருநாதர் ஆறுமாதம் வரை வீடு திரும்பவில்லை. ஓராண்டு கழித்து குருநாதர் கண்டுபிடிக்கப்பட்டார். 1917ம் ஆண்டு மீண்டும் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. 11 ஆண்டுகள் கடந்த பின்னர் 1928ம் ஆண்டு திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் தவக்கோலத்தில் அடிகளார் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.
திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மகிழ மரத்தடியில் குருநாதர் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். ஒரு சமயம் சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் பிள்ளை என்பவர், குருநாதரிடம் தனது வழக்கு தள்ளுபடியாக வேண்டும் என்று வேண்டினார். குருநாதரும் அவ்வாறே தள்ளுபடியாகும் என்று கூறி திருநீறு அளித்தார். அதன்படியே ஞானப்பிரகாசம் பிள்ளையின் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அது முதல் குருநாதரிடம் அவருக்கு நெருக்கம் அதிகமானது. இந்நிலையில் குருநாதர் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் படத்திற்கு கோர்ட் வளாகத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். இதைகண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் குருநாதரை தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். ஞானப்பிரகாசம் பிள்ளை ஓடிச்சென்று தடுத்து, குருநாதரை சோழமாதேவியில் தன் வீட்டில் தங்க வைத்தார். குருநாதரை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரிக்கு கை கால்கள் இழுத்துக் கொண்டது. உடன் சுவாமிகளை தேடி வந்தார். குருநாதரும் மன்னித்து ஆசி வழங்கினார். அதன் பின்னர் அந்த அதிகாரி சுவாமிகளை மீண்டும் கோர்ட் வளாகத்திற்கே அழைத்து வந்து பணிவிடை செய்தார்.

குருநாதர் 11.10.1938 செவ்வாய்கிழமை பரணி நட்சத்திரத்தில் காலை 6.15 மணிக்கு திருச்செந்தூர் திருமுன்பில் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி அடிகள் எனப்பெயர் பெற்று ஒளிவடிவாய் அமைதி ஆலயம் பெற்றார். பின்னர் திருச்சி கோர்ட் வளாகத்தில் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள மகிழ மரத்தடியில் சுவாமிகளுக்கு அழகிய கோயில் கட்டப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. குருநாதர் தியானம் செய்த மகிழ மரத்தை சுற்றி சுவர் எழுப்பி, ஞாபகச் சின்ன கல்வெட்டு வைக்கப்பட்டது. 1985ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தீயணைப்பு வீரர்களுக்கு இவர் மீது பக்தி அதிகம் என்பதால் திருச்சி ஸ்ரீரங்கம், துறையூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், இலுப்பூர், ஆலங்குடி, நாகப்பட்டினம், நன்னிலம், கரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய ஊர்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் குருநாதரின் ஆலயம் அமைந்துள்ளது. வியாழக்கிழமைகளில் பூஜையும், ஆண்டுதோறும் குருபூஜையும் நடந்து வருகிறது.

திருச்செந்தூர் கடல்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் ...மேலும் தகவல்கள்களுக்கு கிட்டு cell :97872 51116 செந்தில் குமார் cell :98420 78733

http://temple.dinamalar.com/news_detail.php?id=12981
http://senthillakshmi.blogspot.in/

Tuesday, November 25, 2014

வள்ளலார் மாணவர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா 90 குருபூஜை விழா


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அன்புடையீர்!
திருஅருட்பிரகாசரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்களின் 90-வது குருபூஜை விழா வருகின்ற 28-11-2014-ஆம் தேதி காரணப்பட்டில் அமைந்துள்ள "ச.மு.க. அருள் நிலையத்தில்" நடைபெற உள்ளது. அவ்வமயம் கொடி ஏற்றுதல், அகவல் பாராயணம், சன்மார்க்க சொற்பொழிவுகள், ஜோதி வழிபாடு, வள்ளலாரின் பாதக்குரடு ஆராதனை, அன்னதான நிகழ்ச்சிகள் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நல்லாசியுடன் நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு சன்மார்க்க அன்பர்களை கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

வள்ளலாரின் மாணவர் ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களது சமாதி நிலையம். கடலூரிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் பாண்டிச்சேரிக்கு முன்பே மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தொலைவில் தவளைக்குப்பம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது.

பேருந்து நேரம்:
கடலூர் TO காரணப்பட்டு - காரணப்பட்டு TO கடலூர்
பேருந்து எண்: 20
காலை 06.45 மணி காலை 05.30 மணி
மதியம் 01.45 மணி காலை 07.45 மணி
மாலை 06.45 மணி மதியம் 3.15 மணி
இரவு 09.45 மணி இரவு 08.15 மணி
கடலூர் TO தென்னம்பாக்கம் - தென்னம்பாக்கம் TO கடலூர்
(தென்னம்பாக்கம் TO காரணப்பட்டு 1/2 கி.மீ தூரம்)
பேருந்து எண்: 19
காலை 06.15 மணி காலை 05.30 மணி
காலை 03.10 மணி காலை 07.30 மணி
இரவு 09.30 மணி மாலை 04.15 மணி

மேலும் விவரங்களுக்கு 9445545475 என்கின்ற கைப்பேசி எண்ணை தொடர்புகொள்ளவும். நன்றி.

Arutperumjothi Arutperumjothi
Thaniperumkarunai Arutperumjothi

Dear All,
Saint Vallalar’s student Karanappattu Sa.Mu.Kandhasamy’s 90th Guru Pooja will be conduct on 28-11-2014 at Karanappattu village. (Sa.Mu.Ka. Arul Nilayam). Sanmarka Flag hoisting, Arutperumjothi Agaval reading, Sanmarka speaking, Light (Jothi) prayer, Vallalar’s wooden foot pad (Patha Rakshai)prayer, Free lunch distribution will be conducting with Arutperumjothi blessing on that date.
All Sutha Sanmarka people and public are all welcome to the function. Thank you.

Bus Time:
Cuddalore To Karanappattu
Bus No.: 20.
Morning 06.45 
Afternoon 01.45
Evening 06.45
Night 09.45
Karanappattu To Cuddalore
Morning 05.30
Morning 07.45
Afternoon 03.15
Night 08.15

If you want more details in this regards, please contact to 9445545475.

   திருநெல்வேலி நகரில், திரு சங்கரலிங்கம் என்ற சன்மார்க்க அன்பர் வசிக்கின்றார். சைவ சித்தாந்தத்திலும், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிகளிலும், தீவிர ஈடுபாடு கொண்டவர் அவர். 

     அவரிடம், காரணப்பட்டு திரு ச.மு.கந்தசாமி அவர்கள் எழுதி வெளியிட்ட நூல் உள்ளது.ச.மு.க. அவர்கள் இயற்றிய "பிரபந்தத்திரட்டு" என்னும் நூல் தற்போது மறுபதிப்பு செய்யப்பட்ட உள்ளது. தேவைப்படும் அன்பர்கள் முன்பதிவுச் செய்துக்கொள்ளலாம். தொடர்புக்கு http://www.vallalarr.blogspot.in/2014/01/blog-post_18.html  சொடுக்கவும்.

The great love holders, we wishing to you,

Karanappattu Sa.Mu.Kandhasamy Pillai (07.09.1838 to 02.12.1924) was one of the dearest / closer devotees of our saint VALLALAR. He was contemporary age of VALLALAR.   He wrote a book of ‘PirabanthaThirattu’ and published on 1923. It contains saint VALLALAR’s history and 3466 poems also. Those poems are spread out our saint VALLALAR’s fames.  And he was published the complete six part of ‘ThiruArutpa’ on 1924 and free issued a book to public. 
‘PirabanthaThirattu’ and published on 1923 and 90 years gone. At present that book is unavailable to public, Sanmarka people, Vallalar devotees and research students.
Many Sanmarka people have been like this book, accordingly as per likes of Sanmarka people requirements’ with saint VALLALAR’s blessings we have plan to republish the PirabanthaThirattu’ in the guidelines of Mr.A.Thirunavukkarasu, V.A.O. (Retired) .  He became a publisher of this book and one of the eldest living members of Karanappattu Sa.Mu.Kandhasamy Pillai’s families.  
We are planning to print this book has more than 700 pages and high quality paper and high quality binding. So, this book price will be come and fixed the rate of Rs.350/- .  And will publish of coming ‘Thai Poosam’ (03.02.2015).
But our trust have been declared two options for this book purchaser,

Option No.1:  Advance Booking Plan – Under this plan this book to be issue at cost price of Rs.200/- , who is paid in advance Rs.200/- within 31.05.2014 for this book. After publish this book we will send a book to you through post at free of cost. (Out of India also free for post)

Option No.2: Donation Plan – Under this plan, your good name and place are printed on this book, who is paid in advance Rs.500/- and above within 31.05.2014 for this book. After publish this book we will send a book to you through post.  (We will allot one book to each Rs.500/-)

PAYMENT OPTION
# Through cheque or Demand Draft:
                In favor of “KARANAPPATTU SA.MU. KANDHASAMY PILLAI 5S TRUST” (Payable at Cuddalore)
                                                                                Or
                In favor of “T.M.RAMALINGAM” (Payable at Chennai)
Please be send your Cheque or DD by post to this address: A.Thirunavukkarasu, No.73-B,  Sankaranaidu Street, Thirupathiripuliyur, Cuddalore, Tamilnadu, PIN 607 002.

# Through net banking or Direct Payment to Bank:
                Account holder name – T.M.RAMALINGAM
                Account No. 057401502097
                Bank and Branch: ICICI Bank, Chennai Armenian Street.
                IFSC Code: ICIC0000574
After paid up your amount, please intimate your good name and address to us through SMS to 9445545475 or vallalarlive@live.com mail ID. 

We expect your assistance /coordinate for this historical book publishing to our Tamil world.  Thank you to all.

A.THIRUNAVUKKARASU, V.A.O., (Retired), Founder Cum Managing Trustee,
M/s.KARANAPPATTU SA.MU.KANDHASAMY PILLAI 5S TRUST,
No.73-B, Sankaranaidu Stree, Thirupapuliyur, Cuddalore, Tamilnadu, India. PIN 607 002.
Mobile No.9445545475
http://www.vallalarspace.org/Ramanujam/c/V000012205B


http://vallalarr.blogspot.in/2012/11/guru-pooja.html
https://www.facebook.com/ramalingamweb

Monday, November 24, 2014

ரம்பா திரிதியை


 Temple images

ரம்பா திரிதியை: 25.11.2014  வழிபாட்டுப் பலன்கள்! 
முற்காலத்தில் பொன் வைத்துப் பெண் எடுக்க வேண்டும் என்றும் பொன்னைப் பூட்டிப் பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வேண்டும் என்றும் சொல் வழக்கைக் கொண்டு வந்தார்கள்.  பெண்களை மகிழ்விக்கும் பொன்னை அணிந்து கொண்டு தேவி அருளைப் பெறச் செய்யும். அந்தத் தங்கத் திருநாள் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமாவாசைக்குப் பிறகு மூன்றாம் நாள் வருகிறது. இந்த நாள் தாயை வணங்கி மகிழ்வித்து, ஆசி பெறும் நாளாகவும் அறிந்து அதனை முறைப்படி செய்ய வேண்டும். ரம்பா திருதியை எனப்படும் இந்தத் திருநாள் எப்படி வந்தது?

தேவசபையில் அழகியர் நடனம்:
 ஒரு சமயம் இந்திரனது அவையில் மனைவி இந்திராணியுடன் தேவேந்திரனும் அமர்ந்திருக்க, தேவலோக அழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர், சில மணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த இந்த ஆட்டத்தின்போது, மூன்று அழகிகளுக்கும் மனதில் போட்டி மனப்பான்மை ஏற்பட்டு சுழன்று ஆடிக் கொண்டிருக்க தேவேந்திரன் பலே பிரமாதம்... நன்றாக சுழன்று ஆடுங்கள் என்று கைதட்டினான். இந்திரன் தன்னுடைய ஆட்டத்தை மட்டுமே பாராட்டுகிறான் என்று தங்களுக்குள் நினைத்துக் கொண்ட அழகிகள் மூவரும் அசுரத்தனமாக சுழன்று ஆடத் தொடங்கினர். அடுத்த சில நிமிடங்களில், ரம்பையின் பிறைச்சந்திரனும், நெற்றிப் பொட்டும் கழன்று கீழே விழுந்தது. ஆட்டத்தை நிறுத்த ரம்பையைப் பார்த்து, மற்றவர்கள் க்ளுக் என்ற ஒரு கேலிச் சிரிப்பை உதிர்த்தனர். கிம்புருவும், நந்தியாரும் மத்தளத்தை நிறுத்தி விட, மகரிஷிகளும் தேவர்களும் கொல் லென்று சிரித்து விட தேவலோக முதல் அழகி பட்டம் பெற்ற ரம்பை அவமானத்தால் கூனிக் குறுகி கீழே விழுந்து தெறித்த தனது மணிகளை எடுத்துக் கொண்டு, தன் அறையை நோக்கி ஓடினாள். அன்று இரவு முழுவதும் வெளியில் வராமல் அறைக்குள் முடங்கிக் கிடந்தவள் காலையில் அரசவைக்குள் தனியாக உலவிக் கொண்டிருந்த இந்திரனைச் சந்தித்தாள்.

இந்திரனின் உபதேசம்: நேற்று அவையில் மூவரும் ஆடிக் கொண்டிருந்த சமயம் எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டது? என்று கண்ணீருடன் இந்திரனைப் பார்த்துக் கேட்டாள் ரம்பை. அதற்கு இந்திரன், பெண்கள் பொன்னகை அணிகிறார்களோ இல்லையோ பொறுமை என்னும் நகையை அணிந்து பெருமை கொள்ளுதல் வேண்டும், நீங்கள் மூவரும் பரத நாட்டியக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டியவர்கள். பரதத்தையும் - ஐம்பதங்களையும் தாண்டி, ஒரு கேலிக் கூத்தாகவே ஆடி விட்டீர்கள். பிரம்ம தேவனின் தர்மபத்தினி கலைவாணி பார்த்துக் கொண்டிருந்தாள். பொறுக்க முடியாமல் உனது அணிகலனைக் கழற்றி விட்டாள். உன் அழகிப் பட்டமும் கையை விட்டுப் போய் விட்டது. இன்னும் சில காலங்களுக்கு பொறுமையுடன் காத்திரு என்றான். அவன் வார்த்தையில் சமாதானம் அடையாத ரம்பை, இதற்குச் சரியான தீர்வைக் கூறும்படி கேட்டாள்.

தேவருலகத்தில் கலையைத் தெய்வக் குற்றம் போல் செய்து விட்ட உனக்கு அந்தப் பார்வதி தேவிதான் வழி காட்ட வேண்டும். பூவுலகில் அம்பிகை பார்வதி தேவி பரமனைக் குறித்துத் தவம் செய்வதற்காக கவுரி அன்னையாக அவதாரம் எடுத்து ஒரு மகிழமரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள். நீ அந்த தேவியைக் கண்டு வணங்கி, விரத வழிபாடு செய்து சரணடைந்தால், இழந்ததைப் பெறுவாய் என்று உபதேசித்து அனுப்பினான்.

இந்திரனின் உபதேச வார்த்தைகளில் மகிழ்ந்த ரம்பை உடனடியாக பூவுலகத்திற்குப் புறப்பட்டாள். இதென்ன ஆச்சர்யம். பூமி எங்கும் ஒளிமயமாய் இருக்கிறது என்று எண்ணியபோது பிறகுதான் நினைவுக்கு வந்தது அது கார்த்திகை மாதம். தீப வழிபாடு செய்கின்ற தினம் என்று. அதிலும் மிகுந்த ஒளியோடு காணப்பட்ட ஓரிடத்தைக் கண்டு அங்கே சென்றபோது, அன்னை பார்வதி தேவி கவுரி அன்னையாக சிவஜெபம் செய்து வருவதைக் கண்டு மகிழ்ந்தாள்.

ரம்பை செய்த கவுரி விரத பூஜை: 
அம்பிகை கவுரி தேவியை வணங்கி விட்டு, கலசத்தில் ஆவாகனம் செய்து மஞ்சளால் பிரதிமை செய்து, அலங்கரித்து முறையாக விரதமிருந்து பூஜை நடத்தினாள். மங்களகரமான பொருட்களோடு மஞ்சளால் சிலை செய்து வழிபட்டதால், இது கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் இரண்டாவது நாள், திந் திரிணீ கவுரி விரதம் எனப்படுகிறது. ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த கவுரி தேவி, மறுநாள் காலை உதயகாலத்தில் அழகன் முருகனைக் (கார்த்திகேயனை) மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாகக் காட்சி தந்தாள்.

ரம்பையே. நீ வேண்டும் வரத்தைக் கேட்பாயாக என்றதும், தன் அழகிப் பட்டம் திரும்ப வந்து சேர வேண்டும், அழகுடன் மிளிர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். ரம்பை கேட்டபடியே தேவலோக அழகிப் பட்டம் திரும்பப் பெற்றிட ஆசி வழங்கிய பின், பொன்னும், மணிகளும் அளித்து வசீகரமான முக அழகையும் கொடுத்து வாழ்த்தி விட்டு இன்றுமுதல் இந்தத் திருதியை தினம் ரம்பா திருதியை என்று உன் பெயரால் பெண்கள் கொண்டாடக்கூடிய தங்கத் திருநாளாக ஆகட்டும் என்று அறிவித்தாள். இதுவே ரம்பா திருதியை உருவான திருக்கதை.

வடதேசத்தில் ரம்பா திருதியா என்ற பெயரில் இனிப்பு வகைகளுடன் படையலிடப்பட்டு, பொன்னகை வாங்கி பூஜை செய்து அணிந்துகொள்ளும் தினமாக ஒருசாரர் கொண்டாடி வருகின்றனர்.  மேலும் ரம்பைக்கு, தெய்வத்தன்மையை கவுரி அன்னை அருள் செய்து உள்ளதால் பெண்கள் அம்பிகையுடன் ரம்பையையும் தேவிரூபமாகவே வழிபட்டு வருகின்றனர். ரம்பையை வழிபடும்போது, எட்டு அரம்பையர்களாகிய மன்மதா, புஷ்பதந்தா, சம்மோகனா, சித்ரலேகா, சவுந்தர்யா, ரமா நேகா, மஞ்சுளா ஆகியவர்களையும் வழிபட வேண்டும். இவர்களைச் சுற்றிலும்; நான்கு வாசல்கள், நான்கு வகை வாசனை மலர்களைக் கொடுக்கும் தோட்டங்கள் அமைந்திருக்க, கிழக்கில் முல்லை மலர்களைக் கொடுக்கும் தோட்டங்கள் அமைந்திருக்க, கிழக்கில் முல்லை மலர், மேற்கில் பத்மமலர், வடக்கில் அசோகம், தெற்கில் நீலோத்பல மலர்கள் பூத்துக் குலுங்கிட, பூஞ்சிற்பக் கூடம் போன்று காட்சி தருகின்றன.

பெண்களின் தங்கத்திருநாள்: 
முதல் நாள் திந்திரிணீ கவுரி விரதம் இருந்து அம்பிகையை கலசத்தில் எழுந்தருளச் செய்து வழிபட்டு, மறுநாள் காலையில் கவுரி தேவியை,

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே ருத்ர பத்னியைச தீமஹி
தந்நோ கவுரி பிரசோதயாத்

என்ற காயத்ரி மந்திரத்தை மூன்று முறை சொல்லி, பெண்கள் சேர்ந்து, மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.

கவுரியே உனக்கு நமஸ்காரம்
கந்தனின் தாயே நமஸ்காரம்
காளினி நீயே நமஸ்காரம்
பொன்னைத் தருவாய் நமஸ்காரம்
பொலிவையும் அருள்வாய் நமஸ்காரம்
பூஜைகள் ஏற்பாய் நமஸ்காரம்
ஜெய ஜெய தேவி ஜெயசக்தி ஜெயம்

- என பாடி மகிழ்ந்திடுவோம்.

கோயில் வழிபாடுகள்:
 நம் தேசத்தில் கவுரி தேவியின் கோயில்கள், பார்வதி, அம்பிகை, மகாலட்சுமி சன்னதிகளில் ரம்பா திருதியை அன்று விசேட தரிசனங்களைச் செய்து வழிபட்டு வரலாம். குறிப்பாக ரம்பா திருதியை தொடர்புடைய கோயில்களாக கேரளாவில் சேர்த்தலையில் ராஜ கோபுரத்துடன் கூடிய கார்த்தியாயினி கவுரி தேவி, திருவாரூர் மாவட்டத்தில் தில்லையாடி, காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் சன்னதி, தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை கார்த்தியாயனி கோயில், கர்நாடகாவில் மகாலட்சுமி கோயில், தேனி மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி கார்த்தியாயினி, கேரளத்து ஆலப்புழா சாலையில் விசேஷ சன்னதி மும்பை நெருன் 18 அடி உயர கார்த்திகாயினி ரூபம். தென்சென்னையில் குன்றத்தூர், சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி ஆகிய இடங்களில், விசேட அலங்கார தரிசன சேவை செய்யலாம்.

வழிபாட்டுப் பலன்கள்: 
பெண்களுக்கு அழகும் முகவசீகரமும், தங்க நகை சேரும் பாக்கியமும் கிடைக்கும். பரத நாட்டியம், மற்ற ஆடல் கலைகளில் மிளிர்ந்திட, இந்த நாளில் கவுரி பூஜையுடன் ரம்பாதேவி பூஜையும் செய்யவேண்டும். புதிதாக சிறிதளவு நகை வாங்கி பூஜை செய்து அணிபவர்கள், அருகில் உள்ள அம்மன் சன்னதிகளுக்குச் சென்று அம்மன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வீட்டுக்கு வந்து ஆரத்தி செய்த பிறகு அணிதல் வேண்டும். அன்னை கவுரிதேவி காட்சி தந்து ஆசீர்வாதம் செய்த படியால், தாயை வணங்கித் தெய்வமாக வழிபடுவதால் நமக்கு மகதைச்வர்யங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று இந்த பூஜா விதியில் சொல்லப்பட்டுள்ளது.  ஸ்வர்ணாம்பிகா பஞ்சகம் என்ற தங்கம் சேர்க்கும் துதியை படித்து சப்தமுகீ என்னும் ருத்ராட்சத்தை வழிபடுவோருக்கு பொன் பொருள் சேர்கின்ற அதிர்ஷ்டயோகமும் உண்டாகும்.நாளை குன்றத்தூர் காத்யாயனி கோயிலில் நடைபெறும் ரம்பா திரிதிய பூஜையில் உங்களின் ராசிக்கேற்ப சூஷ்ம மந்திரங்கள் இலவசமாக உபதேசம் செய்யப்படும். 


மேலும் விவரங்களுக்கு உடன் அணுகுவீர் :  
குமார சிவாச்சாரியார் : 9176539026

"Life without God 
is like an unsharpened pencil 
- it has no point."


Happy moments, praise God. 
Difficult moments, seek God. 
Quiet moments, worship God. 
Painful moments, trust God. 
Every moment, thank God

Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

"வேண்டாம் இந்தச் சூதாட்டம்" கிருஷ்ணன்..


தடுத்திருக்கலாம் அல்லவா ?  ஏன் அப்படிச் செய்யவில்லை கிருஷ்ணன் ..? உத்தவர் ... http://uddhavagitatamil.blogspot.com/
uddhava_gita_krishna_meerabai_mirabai

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து,தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கெனநன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த
அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.
ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு, சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார். "பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ
நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. 
அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?" என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள்
ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்பட, முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போக ட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத்
தண்டனையாக,

அதோடு அவனை விட்டிருக்கலாம்.தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான்
துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்த பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான்
ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, 

எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? 
எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? 
ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்?
 இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? 
நீ செய்தது தருமமா?';';  
என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்" என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.

"துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம்.தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,

'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும்
எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். 

ஆனால்,அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 'ஐயோ! விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த
விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்றுவேண்டிக் கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான ்.யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன்சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..
துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல்,

 'ஹரி... ஹரி...அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.

"அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை.
உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?" என்றார் உத்தவர். 

"கேள்" என்றான் கண்ணன். "அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?" புன்னகைத்தான் கண்ணன். "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.

"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?"
என்றார் உத்தவர்.

"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத்
தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், 

எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?" என்றான் ஸ்ரீகிருஷ்ணன். உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும்,

பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். 

அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை

Mahabharatham - மகாபாரதம்

பழனி ஸ்ரீ குருசுவாமி ஜீவசமாதி குருபூஜை விழா 25-11-2014

பழனி ஸ்ரீ குருசுவாமி ஜீவசமாதி கிரி வீதி 
(temple between winch station  ropecar )

பிராமதூத வருஷம் கார்த்திகை மாதம் 27 (12-12-1930) பூராட நட்சத்திரத்தில்  ஜீவசமாதி அடைந்தார் 


M .பாலன் பூஜாரி
95664 18985 90926 97133Saturday, November 22, 2014

மதுரை திருப்பரங்குன்றம் சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி திருப்பணி


சற்குருநாதர் துணை

அருள்மிகு சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி திருப்பணி


நாள்: 24.11.2014 திங்கள் கிழமை              நேரம்:  காலை 11.20க்கு மேல் 12.00 மணிக்குள் 

பேரன்புடையீர்,

மதுரை திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) அருள்மிகு சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியில் வருகிற 2015ம் ஆண்டு ஆனி மாதத்தில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.  திருப்பணிக்கான பூமிபூஜை நிகழும் ஜய ஆண்டு கார்த்திகை மாதம் 8ம் நாள் 24.11.2014 திங்கள் கிழமை சோமவாரத்தன்று காலை 11.20க்கு மேல் 12.00 மணிக்குள் அருள்மிகு சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியில் நடைபெற உள்ளது. 

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் திருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

என்றும் அன்புடன்,
இரா. தட்சணாமூர்த்தி 
பரம்பரை டிரஸ்டி - 5ம் தலைமுறை
சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம் 
செல்: 94422 72220, 98421 24841
-----------------------------------------------------------------------------------------------------------------
If you are willing to donate please find the below details
A/c Name   :  SOOTTUKKOLE RAMALINGA VILASAM  A/c No :  30019562321
Bank          :  State Bank of India, Pasumalai Branch  IFSC Code  :  SBIN0002254
------------------------------------------------------------------------------------------------------------------

R. Dhakshanamoorthy
Secretary - 5th Generation
Soottukkole Ramalinga Vilasam
Thirukoodalmalai (Pusundarmalai), Thiruparankundram
Madurai - 625 005. Tamil Nadu, INDIA ,Mobile: 94422 72220, 98421 24841
Email: soottukkole@gmail.com   Website: www.soottukkole.org

Wednesday, November 19, 2014

விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்


விபஸ்ஸனா என்றால் என்ன?
விபஸ்ஸனா, உண்மையான மன-அமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான ஒரு வழிமுறையாகும். தன்னைத்தானே ஆராய்வதன் மூலம் மனதைத் தூய்மையடையச் செய்யும் படிப்படியான செயல்முறை இது.

விபஸ்ஸனா இந்திய நாட்டின் தொன்றுதொட்ட தியான வழிமுறைகளில் ஒன்று ஆகும். விபஸ்ஸனா என்ற சொல்லுக்கு 'உள்ளதை உள்ளபடி பார்த்தல்' என்று பொருள். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தர் இந்த முறையை மீண்டும் கண்டறிந்து, இதை உலகத்தின் அனைத்து பிணிகளையும் நீக்கும் அருமருந்தெனவும், இதுவே வாழும் கலை எனவும் போதித்தார்.

இந்த தியான முறை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, பிரிவையோ சார்ந்திராதது. உள்ளத்தின் மாசுகளை அறவே நீக்கி, மோட்சப் பெருநிலை அடைவதே இந்த தியான முறையின் உயரிய குறிக்கோள். உடல் நோய்களை நீக்குவதோடு நில்லாமல் மனிதர்களின் துன்பங்களை அறவே நீக்கி பூரண சுகம் அளிப்பதே இதன் நோக்கம்.

இது உடம்பிற்கும் மனதிற்கும் உள்ள ஆழமான தொடர்பை மையமாகக்கொண்டு செயல்படுகிறது. உடலையும் மனதையும் தொடர்ந்து இணைக்கக்கூடியவை உடலில் தோன்றும் உணர்ச்சிகள். உடலை உயிருள்ளதாக அறியவைப்பதும் உடலில் தோன்றும் உணர்ச்சிகள்தான். அதனால் உடல் உணர்ச்சிகளை நெறிமுறையோடு கவனிப்பதன் மூலம் உடலிற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பை நேரடியாக அறியமுடிகிறது. தன்னைத்தானே கவனித்து, தன்னைத்தான் ஆராய்ந்து மனதிற்கும் உடலிற்கும் உள்ள பொதுவான வேரை நோக்கி இட்டுச் செல்லும் இந்தப் பயணம் மனதின் மாசுகளைக் கரைக்கிறது. அன்பும் கருணையும் நிறைந்த மனநிலையை ஏற்படுத்துகிறது.

ஒருவரின் எண்ணங்கள், மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் சீர்தூக்கி ஆராயும் குணம் எவ்வாறு அறிவியற்பூர்வமான விதிகளுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்பது இந்த தியான பயிற்சி மூலம் தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. ஒருவர் எவ்வாறு மேம்படுகிறார் அல்லது பின்நோக்கிச் செல்கிறார், எவ்வாறு ஒருவர் துன்பங்களை ஏற்படுத்துகிறார் அல்லது துன்பங்களிலிருந்து விடுபடுகிறார் ஆகியவற்றின் இயல்பு நேரடி அனுபவத்தின் மூலம் புலனாகிறது. இந்த தியான பயிற்சி மூலம் வாழ்க்கையில் கூடுதலான பிரக்ஞை, மாயையின்மை, சுய-கட்டுப்பாடு மற்றும் அமைதி ஆகியவை வாய்க்கின்றன.இவை அல்ல விபஸ்ஸனா

இது கண்மூடித்தனமான ஒரு சடங்கோ, வழக்கோ அல்ல
இது அறிவை வளர்க்கும் ஓர் ஆட்டமோ, தத்துவ விளையாட்டோ அல்ல
இது ஓய்வு எடுக்கவும், விடுமுறையைக் கழிக்கவும், பலரைச் சந்தித்து பழகவும் ஏற்பட்ட ஒரு வாய்ப்பு அல்ல.
இது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்து ஓட ஒரு வழியும் அல்ல


இதுதான் விபஸ்ஸனா

இது மனத்துயர்களை வேரோடு அழிக்கும் ஒரு வழிமுறை ஆகும்
இது சமுதாயத்திற்கு நற்பணிகள் ஆற்ற உதவும் வாழும் கலை ஆகும்
இது வாழ்வின் இன்னல்களை அமைதியுடனும் சமநோக்குடனும் எதிர்கொள்ளும் வண்ணம் மனதைத் தூய்மைப்படுத்தும் முறை ஆகும்


பாரம்பரியம்

விபஸ்ஸனா புத்தபெருமான் காலத்திலிருந்து தொடங்கி இடையீடின்றி வழிவழியாக ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு இன்று வரை நிலைத்துள்ளது.

இதன் தற்போதைய ஆசிரியர் திரு சத்திய நாராயண் கோயன்கா அவர்களின் மூதாதையர்கள் இந்தியர்களாக இருந்த போதிலும், இவர் மியன்மார் (பர்மா) நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அங்கு இருக்கையில் அவர், உயர் அரசாங்க அதிகாரியாக பதவி வகித்து வந்த சயாக்யி ஊ பா கின் அவரிடம் விபஸ்ஸனா பயிலும் நல்வாய்ப்பைப் பெற்றார். தம் ஆசிரியரிடம் பதினான்கு ஆண்டு காலம் பயின்ற பின், 1969 ஆண்டு முதல் அவர் இந்தியாவில் தங்கி விபஸ்ஸனா பயிற்றுவித்து வருகிறார். கீழை மற்றும் மேலை நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இன-மத பாகுபாடின்றி அவரிடம் பயின்று வந்துள்ளனர். விபஸ்ஸனா பயில பெருமளவில் மக்கள் ஆர்வம் காட்டுவதை அறிந்து அவர் 1982 முதல் தனக்கு உதவியாக துணை-ஆசிரியர்களையும் நியமித்து வந்துள்ளார்.குறிக்கோள்

விபஸ்ஸனா தன்னைத் தானே ஆராய்வதின் மூலம் மனத்தூய்மை அடைய ஒரு வழி. ஒருவர் முதலில் தம் மூச்சுக்காற்றின் மீது கவனம் செலுத்தி மனதை ஒருநிலைப்படுத்துகிறார். பின் கூர்மையடைந்த மனதுடன் தன் உடல் மற்றும் உள்ளத்தில் எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைக் கவனித்து, அதன் மூலம் நிலையாமை, துக்கநிலை மற்றும் சாரமின்மை ஆகிய உலகப்பொதுவான உண்மைகளை உணர்ந்தறிகிறார். இவ்வாறு பேருண்மையை நேரடியாக உணர்ந்தறிவதில் மனம் தூய்மை அடைகிறது.

மனமாசுகளிலிருந்து முழு விடுதலை அடைதலும், அகத்தெளிவு பெறுதலும் விபஸ்ஸனா தியான முறையின் உயரிய குறிக்கோள்கள் ஆகும். உடற்பிணிகளை நீக்குவது இதன் நோக்கமல்ல. ஆயினும் மனம் தூய்மை அடைவதன் பயனாக மனநிலை சம்பந்தப்பட்ட பல நோய்கள் குணமடைகின்றன. சொல்லப்போனால், விபஸ்ஸனா மனத்துயர் எழக் காரணமான விருப்பு, வெறுப்பு, அறியாமை என்ற மூன்றையுமே அழிக்கிறது. தொடர்ந்த பயிற்சியினால் இந்தத் தியான முறை அன்றாட வாழ்வில் ஏற்படும் மன-இறுக்கத்தைத் தளர்த்துகிறது. விரும்பத்தக்க அல்லது வெறுக்கத்தக்க சந்தர்ப்பங்களை சந்திக்க நேரும்போது சமநிலை இழக்கும் மனதின் பழைய பழக்கத்தினால் விளைந்த முடிச்சுகளை இது அவிழ்க்கிறது.யார் பயிலலாம்?

தன்னைத் தானே ஆராய்வதன் மூலம் நிலையாமை, துக்கநிலை மற்றும் சாரமின்மை ஆகிய உலகப்பொதுவான உண்மைகளை உணர்ந்தறிந்து மனத்தூய்மை அடைவதே 'விபஸ்ஸனா' முறையாகும். இந்த பாதை முழுக்க முழுக்க அனைவருக்கும் பொதுவானது. யாவருக்கும் பொதுவான நோய்களுக்கு யாவருக்கும் பொதுவான மருந்தாக அமைவது. இது எந்த ஒரு மதத்தையோ, இனப்பிரிவையோ சாராதது. எனவே, இன-குல-மத வித்தியாசங்கள் இன்றி யாவரும் எங்கும் எப்போதும் இதைப் பயிற்சி செய்யலாம். அனைவர்க்கும் இது சம அளவில் பயனளிக்க வல்லது.

இந்த தியான முறையை புத்தர் தோற்றுவித்திருந்தாலும், இதை புத்த மதத்தினர் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற விதி எதுவும் கிடையாது. மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக மக்கள் யாவரும் ஒரே வகையான பிரச்சினைகளை எதிர்கொள்வதால், அப்பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் முறையும் அனைவர்க்கும் பொதுவானதாகவே இருக்கவேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டே இந்த தியான முறை செயல்படுகிறது. பல மதங்களை சேர்ந்த பலதரப்பட்ட மக்கள் விபஸ்ஸனா முறையின் பயன்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரும் இந்த தியான முறைக்கும், தம் தொழில் அல்லது சமய நம்பிக்கைகளுக்கும் முரண்பாடு ஏதும் உள்ளதாக கண்டதே இல்லை.

அக-ஆராய்வின் மூலம் மனதை தூய்மைப்படுத்தும் இந்த முறை சுலபமானது அன்று. பயிற்சி பெறுபவர்கள் கடும் முயற்சி செய்ய வேண்டி இருக்கும். அவரவர் தம் சொந்த முயற்சியினால் தமக்கே உரிய இயல்புகளை புரிந்துகொள்ள வேண்டி இருக்கும். வேறு யாரும் அவர்களுக்காக இதை செய்ய முடியாது. ஒழுக்க நெறியைக் கடைபிடித்து, மிகுந்த ஈடுபாட்டுடன் முயற்சி செய்ய வல்லவர்களுக்கே இந்த முறை ஒவ்வும்.

விபஸ்ஸனா தியான முறை தம் மனம் சார்ந்த குறைபாடுகளை குணப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையுடன் சில தீவிர மன-நோயாளிகள் இந்தப் பயிற்சி பெற வந்துவிடுகின்றனர். நிலைப்பட்டு பிறருடன் பழக இயலாமை மற்றும் பல்வேறு குணப்படுத்தும் முறைகளை பின்பற்றியதாலான விளைவுகள் ஆகியவை இத்தகைய நோயாளிகள் பயனடைவதைக் கடினமாக்குகின்றன. சிலருக்கு பத்து நாட்கள் பயிற்சியை முடிப்பதுகூட கடினமாக உள்ளது. நாங்கள் தொழில் அடிப்படையில் இன்றி, தாங்களாகவே முன்வந்து சேவை புரிபவர்களைக் கொண்டே பயிற்சி முகாம்களை நடத்துவதால் இத்தகைய பின்னணி கொண்ட பிணியாளர்களை முறைப்படி கவனித்துக் கொள்வது இயலாததாகிறது. விபஸ்ஸனா தியான முறை பெரும்பாலானவர்களுக்கு நற்பயன் விளைவிக்கக் கூடியதே ஆயினும், அது மருத்துவ அல்லது மனச் சிகிச்சைக்கு மாற்றாக அமையாது. எனவே, நாங்கள் தீவிர மன-நோயாளிகளுக்கு இந்த முறையை அறிவுறுத்துவதில்லை.


பயிற்சி முறை

இந்த தியான முறை பத்து-நாள் பயிற்சி முகாம்கள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அது சமயம் பயிற்சி பெறுவோர் பயிற்சி பெறும் இடத்திலேயே தங்கியிருந்து, பரிந்துரைக்கப்பட்ட ஒழுக்க நெறியை தவறாது பின்பற்றி, தியான முறையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு, முறையாகவும், தேவையான அளவும் பயிற்சி செய்ய பத்து நாட்களுக்குள்ளேயே நற்பலன்களை அனுபவிக்க ஆரம்பிப்பர்.

பயிற்சி பெறுவோர் ஈடுபாட்டுடன் கடுமையாய் பயிற்சி செய்ய வேண்டி இருக்கும். மூன்று நிலைகளை கொண்டது இந்த பயிற்சி. 'சீல', அதாவது நன்னடத்தை, என்பதே இந்த முறையின் அடித்தளம் ஆகும். சீலத்தின் அடிப்படையில் எழும் மன-ஒருநிலைப்பாட்டிற்கு 'சமாதி' என்று பெயர். அக-ஆராய்வினால் விளையும் ஞானத்திற்கு 'பஞ்ஞ' என்று பெயர். இந்த ஞானத்தின் மூலமே ஒருவர் மனத்தூய்மை அடைகிறார்.

முதன்மையாக, பயிற்சி நடக்கும் பத்து நாட்களும் எந்த உயிரையும் கொல்லுவது, எந்த பொருளையும் திருடுவது, பாலியல் உறவுகள் கொள்வது, தவறாக பேசுவது மற்றும் போதை ஊட்டும் பொருட்களை உட்கொள்வது ஆகிய செயல்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இந்த எளிய அறநெறி, உள்ளத்தை அமைதிபடுத்தப் பெரிதும் உதவுகிறது. இல்லையேல், தெளிவாகத் தன்னைத் தான் கவனிக்க இயலாது மனம் அலைபாய்ந்துகொண்டு இருக்கும்.

ஒருவர் இடைவிடாது தன் மூச்சுக்காற்றின் போக்கின் மீது தன் முழு கவனத்தையும் நிலைநிறுத்தி, அதில் இயல்பாக நிகழும் பல மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் தன் மனதின் மேல் உள்ள கட்டுப்பாட்டை ஓரளவு வளர்த்து கொள்வது இரண்டாம் நிலை.

நான்காம் நாள் வருவதற்குள் மனம் பெரிதும் அமைதி பெற்று, கூர்மையுற்று விபஸ்ஸனா பயிற்சி தொடங்கத் தேவையான திறனை அடைகிறது. உடலெங்கும் புலனாகும் உணர்ச்சிகளை உணர்ந்தறிந்து, அதன் தன்மைகளைப் புரிந்துகொண்டு, எதிர்வினைகளை ஏற்படுத்தாது, சமநோக்கை வளர்த்துக்கொள்வதே இந்த பயிற்சி.

இறுதியாக, கடைசி நாள் அன்று, பத்து நாட்களில் பெருகிய மனத்தூய்மையை அனைத்து உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வண்ணம் அனைவரிடமும் நல்லுறவு வளர்க்கும் 'பேரன்பு தியான முறை' பயிற்சியுடன் முகாம்கள் நிறைவடையும்.

மூச்சு மற்றும் உடலோடு இணைந்த உணர்ச்சிகளை கவனிக்கும் செயல்முறை பற்றிய சிறு விடியோ படம் (5.7 மெகா பைட்டுகள்) 'க்விக்டைம் மூவி ப்ளேயர்' துணைகொண்டு காணலாம். இம்முழுபயிற்சியும் உண்மையிலேயே மனதிற்கு தரப்படும் பயிற்சியாகும். நாம் உடல் நலம் பெற உடற்பயிற்சி செய்வதைப்போன்றே, மனநலம் பெற செய்யும் பயிற்சியே விபஸ்ஸனா தியான முறை ஆகும்.


கால அட்டவணை
பயிற்சியின் தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு பின்வரும் கால அட்டவணை வரையப்பட்டுள்ளது. சிறந்த பயனை பெற மாணவர்கள் முடிந்தவரை இந்த அட்டவணைப்படி தவறாது காலத்தை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலை 04.00 மணிவிழித்தெழுதல்
காலை 04.30 முதல் 06.30 வரைதியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
காலை 06.30 முதல் 08.00 வரைகாலைச்சிற்றுண்டி இடைவேளை
காலை 08.00 முதல் 09.00 வரைதியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
காலை 09.00 முதல் 11.00 வரைதியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
காலை 11.00 முதல் நண்பகல் 12.00 வரைபகல் உணவு
நண்பகல் 12.00 முதல் மாலை 01.00 மணி வரைஓய்வு அல்லது ஆசிரியருடன் நேர்காணல்
மாலை 01.00 முதல் 02.30 வரைதியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
மாலை 02.30 முதல் 03.30 வரைதியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
மாலை 03.30 முதல் 05.00 வரைதியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
மாலை 05.00 முதல் 06.00 வரைதேநீர் இடைவேளை
மாலை 06.00 முதல் 07.00 வரைதியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
மாலை 07.00 முதல் இரவு 08.15 வரைதியானக்கூடத்தில் ஆசிரியரின் பேருரை
இரவு 08.15 முதல் 09.00 வரைதியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
இரவு 09.00 முதல் 09.30 வரைதியானக்கூடத்தில் கேள்வி நேரம்
இரவு 09.30 மணிதங்கும் அறைக்குச் செல்லுதல்; விளக்கணைப்பு

நிதியளித்தல்

விபஸ்ஸனா பயிற்சி பெற எந்த விதமான கட்டணமும் கிடையாது. உணவும், இருப்பிடமும் கூட இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. விபஸ்ஸனா முறையின் பாரம்பரியப்படி பயிற்சி முகாம்கள் நன்கொடைகளை மட்டும் கொண்டு நடத்தப்படுகின்றன. திரு சத்திய நாராயண் கோயன்கா அவரிடமோ அல்லது அவர்தம் உதவி ஆசிரியரிடமோ ஒரு முறையாவது பத்து-நாள் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து மட்டுமே நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முதன் முறையாக பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் ஒருவர், முகாமின் கடைசி நாள் அன்றோ, அதன் பின்னரோ நன்கொடை வழங்கலாம்.

இந்த முறையில், பயிற்சியின் பயனை தாமே சொந்தமாக உணர்ந்தவர்களே மேலும் பயிற்சி முகாம்கள் நடக்க வழிவகுக்கிறார்கள். தாம் பெற்ற பயனை பிறருக்கும் அளிக்கும் வகையில் மனமுவந்து தம்மால் இயன்றதைக் கொடுக்கலாம். முதல் முறையாக பயிற்சி பெறுபவர்கள், பயிற்சியின் முடிவிலோ அல்லது அதன்பிறகு எப்பொழுதுமோ நன்கொடை வழங்கலாம்.

இவ்வாறு வரும் நன்கொடைகள் மட்டுமே உலகம் முழுவதும் இந்த பாரம்பரியத்தின் கீழ் நடக்கும் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கான ஒரே வருவாய். செல்வந்தர்களான எந்த நிறுவனமோ தனிப்பட்டவரோ இந்த பயிற்சி முகாம்களுக்கு உபயம் செய்வதில்லை. மேலும், இதன் ஆசிரியரோ நிர்வாகிகளோ எந்தவிதமான சம்பளமும் பெற்றுக்கொள்வதில்லை. இவ்வாறாக, விபஸ்ஸனா நோக்கத் தூய்மையுடன் பொருள் ஈட்டும் குறிக்கோள் எதுவும் இன்றி பரவி வருகிறது.

நன்கொடை பெரியதாகினும், சிறியதாகினும், 'எனக்கு முன்னால் பயிற்சி பெற்றவர்களின் வள்ளன்மையினாலேயே நான் பயிற்சி பெறுவது சாத்தியமாயிற்று; எனக்குப் பின்னால் பலரும் இந்த தியான முறையின் பயன்களைத் அனுபவிக்க நானும் இனிவரும் பயிற்சி முகாம்கள் நடத்தும் பொருட்டு ஏதாவது வழங்குகிறேன்' என்கிற பிறருக்கு உதவும் நல்லெண்ணத்தோடே அளிக்கப்படவேண்டும்.

Monday, November 17, 2014

மூவர்களின் ஜீவசமாதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேமூன்று மகான்கள் சூட்சுமமாக அருள் பாலித்துவரும் 

அருள்நிறை ஸ்ரீ சங்கரானந்த சுவாமிகள்,
அருள்நிறை ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள்.
அருள்நிறை ஸ்ரீ மதுரை முனீஸ்வர சுவாமிகள்.இந்த மூவர்களின் ஜீவசமாதிகளும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சிவகாசி சாலையில் கோவிந்தன் நகர் காலனி அருகே இருக்கும் சுடுகாட்டை ஒட்டி அமைந்திருக்கிறது.


வெகு காலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப் பகுதியில் வாழ்ந்து வந்தவர் அருள்நிறை ஸ்ரீமாணிக்கம் சுவாமிகள் ஆவார்.இவர் குளித்ததை பார்த்தவர்கள் எவருமில்லை;நானும் இவரைப் பார்த்திருக்கிறேன்.எப்போதும் இவர் பீடி குடித்தபடி காட்சியளிப்பார்;உடலெங்கும் அழுக்குத்துணிகளை அணிந்திருப்பார்;ஆனால், எப்போதும் இவரை நெருங்கும்போது கெட்ட வாடை வந்ததில்லை;நெசவாளர்கள் வாழும் தெருக்களிலும்,பஜார்களிலும் திடீரென யாரிடமாவது காசு கேட்பார்;தெருவுக்குள் எனில் சாப்பாடு கேட்பார்;அப்படிக் கேட்டு யார் இந்த சுவாமிக்குத் தருகிறார்களோ,அவர்களுக்கு அன்றிலிருந்து கஷ்டங்கள் நீங்கியிருக்கின்றன;பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது.எனக்குத் தெரிந்து,ஒரு குடும்பத்தினரிடம் தினமும் குறிப்பிட்ட நேரம் வந்து சாப்பாடு கேட்டிருக்கிறார்;பல நாட்களுக்குப் பிறகு,அந்த குடும்பத்தினர் இவரை திட்டிவிட,இவர் அதன்பிறகு அந்த குடும்பத்தார் இருக்கும் வீட்டுப்பக்கமே வருவதில்லை;இவர் வருவது நின்றது முதல் அந்தக்குடும்பம் குடும்பமாக இல்லை;


இவருடன் ஒரு சிலர் எப்போதும் இருந்திருக்கின்றனர்;தான் சமாதியாவதை முன்பே அறிந்திருந்து,இவர் தன்னோடு இருக்கும் கண்பார்வை குறைபாடிருந்த ஒருவரிடம் சொன்னார்: இன்று முழுவதும் என்னோடு இரு;நான் சமாதியானதும் உனக்கு முழுப்பார்வை தருகிறேன்.


ஆனால்,அந்த கண்பார்வை குறைபாடு இருந்தவர்,பயந்துகொண்டு அடுத்த சில நிமிடங்களில் இவரை விட்டு ஓடியே போனார்.

 அருள்நிறை ஸ்ரீமாணிக்கம் சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா ஒவ்வொரு சித்திரை மாதமும் வரும் மகம் நட்சத்திரத்தன்றும்,இவரது பிறந்த நாள் விழா பங்குனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்றும் வரும்.


அருள்நிறை ஸ்ரீ சங்கரானந்த சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் பரணி நட்சத்தன்று கொண்டாடி வருகின்றனர்.


அருள்நிறை ஸ்ரீ மதுரை சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா ஆனிமாதம் பூசம் நட்சத்திரத்தன்றும் கொண்டாடிவருகின்றனர்.


இந்த மூன்று நாட்களுமே கோலாகலமாக அன்னதானம் நடைபெற்றுவருகிறது.தவிர,சிறப்பு அன்னதானம் ஒவ்வொரு அமாவாசையன்றும்,பவுர்ணமியன்றும் நிகழ்ந்து வருகிறது.தவிர, தினமும் மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த மூவரும் ஏராளமான அற்புதங்களை செய்து வருகின்றனர்.


இவர்களின் அருளாசி கிடைக்க ஒரு சுலபவழி:(நமக்கு எடுத்துரைத்தவர்
கறுப்பு திராட்சை குறைந்தது ஒரு கிலோ; பேரீட்சைம்பழம் மூன்று பாக்கெட்கள்; டையமண்டு கல்கண்டு ஒரு கிலோ;நான்கு வாழைப்பழங்கள்; அரை லிட்டர் நல்லெண்ணெய்;பத்தி பாக்கெட் ஒன்று,கற்பூரம்  இவைகளை வாங்கிக்கொண்டு இந்த மூவர்களின் ஜீவசமாதிகளுக்கு  சனிக்கிழமை தோறும் சென்று காலை 9 முதல் 10.30க்குள் அல்லது மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் வேண்டிக்கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு எட்டு சனிக்கிழமைகளுக்குச் செய்துவர,  நிரந்தர வேலை கிடைக்கும்;பணக்கஷ்டம் எவ்வளவு நெருக்கடியாக இருந்தாலும் அடியோடு விலகிவிடும்.பல அன்பர்கள் இம்முறையைப் பின்பற்றி இன்று நிம்மதியாகவும்,வசதியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.எட்டு சனிக்கிழமைகளுக்குப்  பிறகும் தொடர்ந்து இவ்வாறு வழிபட்டு வர, படிப்படியான பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் என்பது அனுபவ உண்மை!!!

.....
குறிப்பு: படத்தில் வசீகரிக்கும் காந்தக்கண்களோடு இருப்பவர் அருள்நிறை சங்கரானந்த சுவாமிகள்; அமர்ந்த நிலையில் கழுத்தில் துண்டு போட்டிருப்பவர் அருள்நிறை மாணிக்கம் சுவாமிகள்; வயதான தாத்தா ரூபத்தில் அரச மரத்தடி போட்டோவிலிருப்பவர் அருள்நிறை மதுரை சுவாமிகள்;


ஓம்சிவசிவஓம்

பாம்புக்கோவில் சந்தை ஜீவசமாதி

சக்திவாய்ந்த ஜீவசமாதி மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி பாம்புக்கோவில் சந்தை
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம்  சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது இந்த  பாம்புக்கோவில் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, காலை 11 மணி, மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது. சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது. மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,சங்கரன்கோவில், பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.


பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும். இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக (செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.

பயணித்ததும், ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும். அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும். இங்கே குறைந்தது ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்; அவ்வாறு ஜபிக்கத் தேவையான மஞ்சள் துண்டு.


இரு ருத்ராட்சங்களுடன் வருவோம் இந்த ஆசிரமத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே தங்கும் இடங்களும், அன்னதான வசதியும் இருக்கின்றன. யார் ஒவ்வொரு அமாவாசை அல்லது பவுர்ணமியன்றும் இங்கு இரவில் தங்கி இவரை தியானிக்கிறார்களோ, அவர்களுக்கு மாதவானந்த சுவாமிகளின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.இங்கு தங்குவோர் செய்ய வேண்டியது: இரவு ஒரு மணி நேரமும்,அதிகாலை ஒரு  மணி நேரமும் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதியில் மஞ்சள்துண்டு விரித்து .... ஜபிக்க வேண்டியது மட்டுமே!! தெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு மனிதனின் கஷ்டங்களையும் ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்!!!

Thank:
மேலும் தகவல்கள்களுக்கு :  98420 78733 


http://senthillakshmi.blogspot.in/2014/08/blog-post_615.html