Tuesday, July 24, 2018

முப்பெரும் தேவியர் தரிசனம் (பௌர்ணமி + வெள்ளிக்கிழமை - 27/7/2017)




சென்னை முப்பெரும் தேவியர் தரிசனம் 
No automatic alt text available.
(பௌர்ணமி + வெள்ளிக்கிழமை - 27/7/2017)

ஆதிபராசக்தியின் அற்புத அவதாரங்களில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ரூபிணிகளாக, காட்சி தரும் திருத்தலங்கள்தான் - மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில். வெள்ளிக்கிழமை பௌர்ணமி இரண்டும் சேர்ந்து வரும் நாளில் மேலூரிலுள்ள திருவுடை அம்மனைக் காலையிலும் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனை உச்சியிலும், வட திருமுல்லைவாயிலிலுள்ள கொடியிடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டால், காசி - இராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும்.

புராண செய்தி - பாண்டிய மன்னனின் உத்தரவுப்படி இச்சா சக்தியாகிய திருவுடை அம்மனை வடிவமைக்க தேர்ந்த கல் ஒன்றைச் சிற்பி, மலை உச்சியில் இருந்து எடுத்துக் கீழே கொண்டு வரும்பொழுது. பிடி நழுவி உருண்டு அந்த கல், மூன்று பாகங்கள் ஆனது. மனம் பதறிய சிற்பி தன் கைகளைத் துண்டித்துக் கொள்ளப் போனபொழுது, பராசக்தி தரிசனம் கொடுத்தருளினாள். “இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என மூவராக உருக் கொள்ளவே மூன்று பகுதிகளாக ஆனேன். மூவரின் உருவங்களையும் வடித்து, மூன்று கோயில்களிலும், நிறுவி விடுவாயாக’ என உத்தரவிட்டு மறைந்தாள். அப்படி காட்சி தந்த தினம் பௌர்ணமி ஆகும்.
சென்னையைச் சுற்றிலும் “ஃ’ வடிவத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில்களை இணைக்க அரசர் காலத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. இன்றைக்கும் மேலூரில் இந்தச் சுரங்கப் பாதையைக் காணலாம்.
Chennai Three Sakthi Amman Temples
திருவுடை அம்மன் (மேலூர்): ஸ்ரீ திருமணங்கீஸ்வரருக்கு உடனுறை தேவியாக மேலூரில் காட்சி தரும் திருவுடையம்மன் முப்பெரும் தேவியரில் மூத்தவராக மகாசக்தியாக விளங்குகிறார்.
தலவரலாறு: ஒரு காலகட்டத்தில் அடர்ந்த காடுகளுக்கும், முட்புதருக்கும் நடுவில், புற்று வடிவத்தில், சர்ப்பம் சூழ, சிவலிங்கம் சுயம்பு உருவாய் இருந்ததை, அந்த ஊர்ப் பெரியவர்கள் கண்டுபிடித்தனர். ஒரு பசு தினமும், இந்தப் புற்றின் மேல் பால் பொழிவதையும், நாகம் குடித்துச் செல்வதையும் பார்த்து, அந்தச் சுயம்பு லிங்கத்துக்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு வந்தார்கள்.
ஸ்ரீதிருமணங்கீஸ்வரர் சுயம்புலிங்க வடிவில் ஐம்பொன் கவசம் அணிந்து கண்கவர் தோற்றத்தில் காட்சி தருகிறார். ஈஸ்வர சன்னதிக்கு எதிர் வட திசையில் தெற்கு நோக்கி ஸ்ரீதிருவுடையம்மன் அழகே உருவாக அமைதியாகக் காட்சி அளிக்கிறார். இந்தப் பகுதியில் எங்கு நோக்கினாலும், வேம்பும், பாம்பும் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
ஆடிப்பூரத்தன்று நடக்கும் 108 பால் குடங்கள் அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சி. பங்குனி உத்திரம் திருக்கல்யாணம், சிவராத்திரி - நவராத்திரி சிறப்பு பூஜைகள், கார்த்திகை சொக்கப்பனை ஏற்றுதல் என எந்நாளும் வைபவம்தான். இந்த அம்மனுக்கு மஞ்சள் - குங்குமக் காப்பு, மலர் ஆடை அலங்காரம் செய்து வேண்டிக் கொண்டால் மங்களக் காரியங்கள் கைகூடுமாம்!

ஸ்ரீவடிவுடை அம்மன் (திருவொற்றியூர்): ஞானசக்தியாக, வடிவுடை நாயகியைத் தொழுவோருக்கு அற்புதமான மணவாழ்க்கை அமையும். பௌர்ணமிகளில், அதுவும் வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாட்களில் பக்தர் கூட்டம் அலை மோதுவதால் நாள் முழுதும் நடை திறந்திருக்கிறது.
அகத்தியருக்குக் கல்யாண சுந்தரராய் ஸ்ரீ ஆதிபுரீஸ்வரரும் வடிவுடையம்மனும் திருமணக் கோலத்தில் காட்சி தருவது பரவசமான நிகழ்வு.
இங்கு வடிவுடை அம்மனுக்கு தங்கரத பவனி நடைபெறுவது அற்புதமான கொடுப்பினை. தினமும் திருவிழா போல் அம்மனுக்குப் புஷ்பாஞ்சலியும், மஞ்சள் - குங்குமக் காப்பும் நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஸ்ரீ கொடியிடை அம்மன் (திருமுல்லைவாயல்): அம்பத்தூர் - ஆவடி இடையே வடதிரு முல்லைவாயல் என்னும் திருத்தலத்தில் இறைவன் மாசிலாமணீயீஸ்வரர் - இறைவி கொடியிடை நாயகி அருள்பாலிக்கின்றனர்.
தொண்டைமாமன்னன் பைரவர் துணையுடன், தன்னை எதிர்த்துப் போர் புரிந்த குறும்பர்களை ஒடுக்க திருமுல்லைவாயல் வந்தான். அவர்களை எதிர்க்க இயலாமல் திரும்பும்பொழுது, தான் வந்த யானையின் கால்கள் முல்லைக் கொடிகளால் சுற்றிக் கொள்ள, வாளால் கொடிகளை வெட்டும்பொழுது உள்ளே இருந்த சிவலிங்கத்தை சேர்த்து வெட்டிவிட, தன்னை மாய்த்துக் கொள்ளப் போன மன்னனைத் தடுத்தாட்கொண்டார் இறைவன்.
நந்தி தேவரை அரசனுக்குத் துணையாக அனுப்பி, குறும்பர்களை அழிக்க வைத்தான். அதற்கு வெற்றிக் காணிக்கையாகத் தெண்டைமான் கொண்டு வந்து வைத்த இரண்டு வெள்ளெருக்குத் தூண்களை இன்றும் கருவறையின் முன் காணலாம்.
பகைவர்களை விரட்டத் திரும்பிய நந்தி பகவான் இன்றும் திரும்பிய கோலத்தில்தான் இருக்கிறார். வெட்டுப் பட்ட காரணத்தால் சிரசில் அபிஷேகம் கிடையாது. இறைவன் திருமேனி சந்தனக் காப்பு இடப்பட்டு இருக்கும்.

அசுவினி முதலான் 27 நட்சத்திரங்களும் செய்த பாவம் நீங்க கொடியிடை நாயகியை வணங்கி சாபம் நீங்கிய இடம். இந்திராணி இத்தலத்து அம்மனை வழிபட்டு இந்திரனை மீளப்பெற்ற தலம்.
கேட்டாலே முக்தி தரும் இத்தலத்தில் சூரியன் முதலிய ஒன்பது கோள்களும் மக்களுக்கு இசைவாக வேண்டியதை அளிப்பதால், நவக்கிரகங்களுக்குத் தனி சன்னிதி கிடையாது. இறைவனும், இறைவியும் லிங்கத்தில் மறைந்து அருளிய நாள் வைகாசி மாதம், பௌர்ணமி, கடக ராசி, விசாக நன்னாள் ஆகும். ஆண்டுதோறும் இன்னாட்களில் பிரம்மோத்சவம் நடைபெறுகிறது...

தரிசனம் செய்ய வில்லிவாக்கம் விஜயகுமார் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்! தொடர்புக்கு - 8438588530 & 09087510542


The Sakthi to be visited first, early in the morning is Thiruvudai Amman - Ichchaa Sakthi (the devi who will fulfill devotees wishes).

The Sakthi to be visited second, in the afternoon is Vadivudai Amman - Gnaana Sakthi (the devi who will bless us with Gananam - facing south)

The Sakthi to be visited third, in the evening is Kodiyidai Amman - Kriyaa Sakthi (the Devi who assists us in all our actions).

Route : 

Melur: Around 3 km away from the Minjur railway station. Local trains from Chennai Central goes to Minjur in around an hours time.
Buses are also available from CMBT, Broadway etc to Minjur, but they are very infrequent. When going by bus to Minjur, there is a bus stop at Melur which comes before Minjur. From the bus stop, the temple is around 1 km away. From the Minjur railway station, there are shared autorickshaws to Melur bus stop.

The Thyagarajar - Vadivudai Amman Temple is located at Therady bus stop in Thiruvottiyur High Road (T. H. Road), Chennai. The Therady bus stop is around 2 km from Thiruvottiyur bus terminus. Frequent bus available from paris , CMBT to Tiruvotriyur.

The Masilamaneeswarar - Kodiyidai Amman Temple is located in Thirumullaivoyal, Chennai (Near Avadi), after passing the Pachiamman temple in Kulakkarai Steet (coming from the main road bus stop).





Friday, July 20, 2018

விபூதியும், பெருமையும்!




சிவபெருமானை வழிபடும் சைவர்களுக்கு சிவச்சின்னமானதாகவும்முக்கியமானதாகவும் அமைவது விபூதி.
பஸ்மம், ரக்ஷைதிருநீறு என்று பல்வேறு பெயர்களால்போற்றப்படுவது விபூதி.Image result for விபூதி தயாரிக்கும் முறை
விபூதி என்பதற்கு மொழியியல்படிபலவேறு அர்த்தங்கள்உண்டு.
இறையருள் பெற்றதுஉயர்விலும் உயர்வானது,முழுமையானதுஎங்கும் நிறைந்திருப்பதுஉள்ளத்தைதூய்மைப்படுத்துவதுவணங்கத்தக்கதுசெழுமை நிறைந்தது,வளங்களைத் தரக்கூடியதுசித்திகளைத் தருவதுவேண்டும் வரங்களைத்  தருவதுஅலங்கரிப்பது.
சிவபெருமானின் திருமேனி முழுவதும் அலங்கரிக்கக் கூடியஒரே பொருள் விபூதி மட்டுமேபொன்னார் மேனியனின்திருமேனியில் மேவியிருப்பதால்விபூதி பொன்னிறமாக,தங்கத் துகள்களாக மின்னுகின்றதாம் (பஸ்மோத்தூளிதவிக்ரஹாய நம: – ஸ்ரீ சிவாஷ்டோத்தரம்)
விபூதி காட்டும் தத்துவங்கள் எண்ணற்றவை.
இறந்தபின் அனைவரும் சாம்பலாகத் தான் வேண்டும்என்பதைக் காட்டுகின்றதுஆகையால்இறைவன் முன்அனைவரும் சமமே என்பதையும்  சுட்டுகின்றது.
உலகம் அக்னியால் தூய்மையடைவது போல விபூதியால்ஆன்மாக்கள் தூய்மையடைகின்றன.
வேதங்களும, உபநிஷதங்களும்புராணங்களும்தமிழ்த்திருமுறைகளும் விபூதியின் மகிமையைப் போற்றிப்பறைசாற்றுகின்றன.
ஒரு சமயம்வித்துன்மாலிதாரகாக்ஷன்கமலாக்ஷன் என்னும்மூன்று அரக்கர்கள் பறக்கும் தன்மை கொண்ட பொன்,வெள்ளிஇரும்புக் கோட்டைகளைக் கொண்டுதேவர்களைவருத்தினர்.
அரக்கர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் பிரம்மா,விஷ்ணுவிடம் முறையிடஇவர்களை அழித்து சாம்பலாக்க,சிவபெருமானால் மட்டுமே முடியும் என்று அறிந்துசிவனைநோக்கி பிரார்த்தனை செய்தனர்.
பிரம்மா தனது மனதிற்குப் பிடித்தமானதும்அவர்தோற்றுவித்தத்தும் ஆகிய மானச சரோவர் என்னுமிடத்திலும்,மஹா விஷ்ணு தான் பள்ளி கொண்டிருக்கும்பாற்கடலில்சேரும் நதியாகிய விரஜா எனும் நதியின் கரையிலும்ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்து யாகம் செய்தனர்யாகத்தின் பஸ்மம் (சாம்பல்போல அரக்கர்கள் அழியபிரார்த்தனை செய்தனர்.
மஹாவிஷ்ணு, சிறப்பான மந்திரங்களால் யாகம் செய்தார்.அது வேதங்களில்விபூதியைப் போற்றக் கூடிய,மஹாநாராயண உபநிஷத் எனும் மந்திரமாக அமைந்தது.பொதுவாக சிவாலயங்களில்விபூதியை அபிஷேகம்செய்யும்போது இந்த மந்திரங்களைத் தான் சொல்வது மரபு. (ஆத்மாமே சுத்யந்தாம் ஜ்யோதிரஹம் விரஜா விபாப்மாபூயாஸம் ஸ்வாஹா
இந்த மந்திரம் – உடல்மனதுவாக்குஆத்மாஅந்தராத்மா எனஅனைத்தையும் தியாகம் செய்தால்நமது ஜீவனைசிவபெருமான் தன் உடலில் சாம்பல் போல பூசிக்கொள்வார்என்கின்றது (மஹா நாராயண உபநிஷத்தின் முழுமையானஅர்த்தம் – மிகவும் அற்புதமானது.)
பிரம்மா, விஷ்ணு – இருவரின் தவத்திற்கு இணங்கி,சிவபெருமான் மூன்று அரக்கர்களையும்தன் மந்தகாசப்புன்னகையால் மட்டுமே எரித்து சாம்பலாக்கினார்தேவர்கள்மகிழ்ந்தனர்.
(ஒரு தகவல்முப்புரங்களை எரித்தபொழுது,அக்கோட்டைகளின் ஒரு பாகம் மட்டும் முழுதும் எரியாமல்(வேகாமல்பூமியில் விழுந்ததுஅந்த இடம் வேகாக்கொல்லைஎன்று அழைக்கப்படுகின்றதுஇவ்விடம்தமிழகம்கடலூர்மாவட்டம்நெய்வேலிக்கு அருகாமையில் உள்ளதுஇவ்வூரைச்சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்படும் மண் செங்கல் அமைக்கஉதவினாலும்இந்த ஊர் மண் மட்டும் செங்கல் சுடுவதற்குபயன்படாதுவேகாத மண் கொண்ட நிலம் என்பதால் வேகாக்கொல்லை என்று அழைக்கப்படுகின்றதுஇவ்வூரில்அருமையான சிவஸ்தலம் உள்ளது)
சிவபெருமான் உடல் முழுவதும் பரவியிருக்கும் விபூதியை,சிவச் சின்னமாகபுனிதமான பொருளாக சைவர்கள்மதிக்கின்றார்கள்.
விபூதி தயாரிக்கும் முறையை சாஸ்திரங்கள் அற்புதமாகவிளக்கியுள்ளன.
காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து,அதன் கோமயத்தால் ஈரமாக்கிஉருண்டைகள் பிடித்து காயவைக்க வேண்டும்.  அதைதிரிபுர ஸம்ஹார காலம் என்றுவர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும்,கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத்திருநாளில்எரியூட்ட வேண்டும். (சில ஆன்மீகர்கள் அன்றுஏற்றப்படும்சொக்கப்பனையில் தான் எரிக்கப்பட வேண்டும்என்பர்)
அது, திறந்த வெளியில், தானாகவே ஆறவேண்டும்மார்கழிமாதம் முழுவதும் – பனி பொழிந்துஅந்த சாணச் சாம்பல்சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும்தைமாதம் முழுவதும்அச்சாம்பலை கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்பனிபெய்ய பெய்ய, சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.
மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில்அச்சாம்பலை எடுத்துவஸ்திரகாயம் செய்ய வேண்டும். (வஸ்திரகாயம் – ஒரு பானையின் வாயில் தூய்மையானதுணியைக் கட்டிசாம்பலை எடுத்துதுணியின் மேல் கையால்தேய்க்க தேய்க்கமென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத்தகுந்த விபூதியாக பானையினுள் சேரும்).  அதை,சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகுசிவபக்தர்கள்தரிக்க வேண்டும்.
மேலே சொன்ன முறை மிக மேன்மையான முறைமற்றும் சிலமுறைகளும் உள்ளன. (சாந்திகபஸ்மம்காமதபஸ்மம்,பெளஷ்டிகபஸ்மம்)
பரமசிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம்நீர்,காற்றுஆகாயம்நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின்தன்மையை விபூதி கொண்டிருக்கின்றது.
விபூதியை அனைத்து நிலையிலிருப்பவரும்பூசிக்கொள்ளலாம் என்று ஸூதஸம்ஹிதைவலியுறுத்துகின்றது. (பிரம்மச்சரியம்கிரஹஸ்தம்,வானப்ரஸ்தம்சன்யாசம்)
சிவாலயங்களில்விபூதியை பிரஸாதமாக வலதுஉள்ளங்கையில் மட்டுமேதான் வாங்க வேண்டும். (உள்ளங்கைபிரம்ம, விஷ்ணு பாகமாகக் கருதப்படுகின்றதுபிரம்மா,விஷ்ணு தவமிருந்து பெற்றதால் – அவர்களின் பாகமாகியஉள்ளங்கையில்தான் பெற வேண்டும்)
ஆண்கள் விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத்தண்ணீரில் குழைத்து நெற்றியில் மூன்றுகிடைக்கோடுகளாகவும்), உத்தூளனமாகவும்(தண்ணீரில்லாமல் வெறும் விபூதியைஅணிந்துகொள்ளலாம் என்றும்,
பெண்கள் – தண்ணீர் குழைக்காமல் மட்டுமே இட்டுக்கொள்ளவேண்டும் (உத்தூளனமாகஎன்றும், சாஸ்திரங்கள்வலியுறுத்துகின்றன.
பெண்கள் – ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால்விபூதியை எடுத்துநெற்றியில் ஒற்றைக் கோடாக மட்டுமேஅணிந்து கொள்ள வேண்டும். (சிவதீட்சை பெற்ற பெண்கள்மூன்று கோடுகளாக அணியலாம்)
விபூதிப் பூசிக்கொள்ளும் போதுசிவ பஞ்சாக்ஷரமந்திரத்தையோ அல்லது ‘சிவசிவ’ என்றோசொல்லிக்கொண்டேதான் தரிக்க வேண்டும்.
ஆண்கள் – விபூதியை தண்ணீரில் குழைத்துஆட்காட்டி விரல்,நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்றுகிடைக்கோடுகளாகநெற்றியிலும்மார்பிலும்தொப்புளுக்குமேலும்முழங்கால்கள் இரண்டிலும்இரு தோள்களிலும்இருமுழங்கைகளிலும்மணிக்கட்டுகள் இரண்டிலும்இரு விலாப்புறங்களிலும்கழுத்திலும் தரிக்க வேண்டும். (சிலர் இருகாதுகளிலும்சிலர் மேல் முதுகிலும்பின்கழுத்திலும்தரிப்பார்கள்).  காலைமதியம்மாலை மூன்று நேரங்களிலும்,பூஜை காலங்களிலும் மிக நிச்சயம் விபூதி தரிக்க வேண்டும்.
பஸ்மாபிஷேகம் – பல்வேறு தீட்டுக்களை அகற்ற வல்லது.குளிக்கும் நீரில் விபூதியைத் தூவி விட்டுஅந்த விபூதி கலந்ததண்ணீரில் தலை முழுக எவ்விதமான தீட்டுக்களும்அகன்றுவிடும்.  பயம் நீங்கவும்ஜுரம் நீங்கவும்உடல்உபாதைகள் நீங்கவும் விபூதி பயன்பட்டிருக்கின்றது.
விபூதி இட்டுக்கொண்டிருப்பவரை சிவ அம்சமாகவேக் கருதிவழிபடும் வழக்கம் உண்டு.  விபூதியின் புனிதத்தையும் அதன்மேன்மையையும் பல்வேறு புராணங்களிலும்திருமுறைகளில்பல்வேறு இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  பன்னிருதிருமுறைகளில் குறிப்பிடப்படும் சில சம்பவங்களை மட்டும்இங்கே காண்போம்.
சூலை (தாங்காத வயிற்று வலிநோயால் துடிதுடித்த அப்பர்சுவாமிகள்தனது தமக்கையார் கையால் விபூதி பெற்றவுடன்,வலி நீங்கப் பெற்று சைவத்திற்கு பெரும் தொண்டாற்றினார்.
சமண சமயத்தைச் சார்ந்திருந்த கூன் பாண்டியன் எனும்மன்னன் மதுரையை அரசாண்டு கொண்டிருந்தான்அவனுக்குதீராத வெப்ப நோய் இருந்ததுஅதை நீக்க, அவன் மனைவிமங்கையர்க்கரசியார் சிவபெருமானை வேண்டினாள்அவள்கனவில், சிவன் வந்து திருஞான சம்பந்தரைக் கண்டு வந்தால்நோய் நீங்கும் என்றார்மங்கையர்க்கரசியாரும்அதன்படியே,திருஞான சம்பந்தரை தரிசித்துதன் குறையைச் சொல்ல,அவர் ‘மந்திரமாவது நீறுவானவர் மேலது நீறு‘ எனத்தொடங்கும் ‘திருநீற்றுப் பதிகம்‘ பாடி விபூதியைகூன்பாண்டியனின் உடலில் பூசியவுடன்பாண்டியனின் நோய்நீங்கியதுகூன் பாண்டியன் சைவத் தொண்டு ஆற்றினான்.
சிவச்சிந்தனையில் சிறந்து விளங்கிய சேரமான் பெருமான்,அரசு தாங்கி ஒரு சமயம்பட்டத்து யானை மீது அமர்ந்துநகர்வலம் வருகின்றார்அப்பொழுதுதுணிகளை வெளுக்கும்தொழிலாளர்உழமண் எனும் வெள்ளை நிற மண்ணைக்கூடையில் சுமந்து வரநீரில் நனைந்த அந்த மண் அவரின்மேனி முழுவதும் வழிந்துவிபூதி பூசியது போல தோற்றம் தரச்செய்தது.  பட்டத்து யானையிலிருந்துசலவைத்தொழிலாளியின் உடல் முழுவதும் திருநீறு பூசியிருப்பதைக்கண்ட சேரமான் பெருமான்யானையிலிருந்து உடன் இறங்கி,அவர் பெரும் சிவத்தொண்டர் போலும் என்று எண்ணி,சலவைத் தொழிலாளியை வணங்கினார்.  அரசன் தன்னைக்கண்டு வணங்கியதால்அச்சமுற்ற சலவைத் தொழிலாளி தன்நிலையை உணர்த்தவெள்ளை உழமண் விபூதியை நினைவுபடுத்திய காரணத்தினாலேயேஅவரை வணங்க முற்பட்டதைசேரன் விளக்கிபரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்.
 சிவபக்தியில் சிறந்த ஒரு புகழ்ச்சோழ மன்னர்தனக்குக்கப்பம் கட்டாத மன்னன் மீது படையெடுத்து வர ஆணையிட,படைகளும் எதிரி நாட்டை வென்றுதோல்வி கண்ட வீரர்களின்தலைகளைக் கொண்டு வந்துசோழனிடம் வெற்றிப் பரிசாகஅளிக்கஅதைக் கண்டு, கொண்டு வந்த அந்த வீரர்களின்தலைகளுள் – ஒரு தலை மட்டும் குடுமி கொண்டு,சிவச்சின்னமாகிய விபூதி அணிந்திருப்பது கண்டு அதிர்ந்து,ஒரு சிவனடியாரைக் கொல்லக் காரணமாகிவிட்டோமே என்றுமனம் நொந்துசோழன் அக்னியை மூட்டி அதனுள் விழுந்தான்.
சிவபெருமானிடம் அதீத பக்தி கொண்ட ஏனாதிநாதனார்என்பவர்படைகளுக்கு வாள் பயிற்சி அளிப்பவர்அவருடன்பல முறை போராடி தோல்வியுற்ற ஒருவன் அவரை வீழ்த்தஒருஉபாயம் செய்தான்.  அவன் ஏனாதிநாதரைத் தனிமையில்சமர் செய்ய அழைத்துஅச்சமயம் இவன் சிவச்சின்னமாகியவிபூதியைத் தரித்துக்கொண்டுஅதை கேடயத்தால் மறைத்துக்கொண்டுபோரிட வந்துஏனாதிநாதர் அருகில் வந்ததும்,கேடயத்தை நீக்கஏனாதிநாதர் எதிரியாயிருப்பவன்,தன்னைக் கொல்லவந்தவன் திருநீறு அணிந்திருப்பது கண்டு,அவனை சிவ அம்சமாகவேக் கண்டுசண்டை செய்யாமல்பணிந்து மடிந்து சிவலோகம் அடைந்தார்.
‘மெய்ப்பொருள்’ எனும் அரசன் சிவபக்தி நிரம்பிதனது அரசைநீதிமுறை தவறாது ஆட்சி செய்து வந்தார்சிவ தத்துவங்களின்மெய்யான உண்மைகளை, மக்களுக்கு அறிவிப்பதில்தேர்ந்தவராக இருந்ததால் ‘மெய்ப்பொருள்’ என்றுபோற்றப்பட்டார்.  இவரின் எதிரி தேசத்து அரசன்தமதுவலிமையால் இவரை வெல்லமுடியாது என எண்ணிசிவச்சின்னமாகிய விபூதி தரித்துஓலைச் சுவடிகளுடன்,சிவனடியார் வேடத்தில் வந்துஅரசனிடம் ஆகம உட்ப்பொருள்உணர்த்த வந்தேன் எனக் கூறினான்.  மெய்ப்பொருள், அதைக்கேட்க ஆவலாகக் கண் மூடி அமரஅச்சமயம்,ஓலைச்சுவடிகளுள் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து,மெய்ப்பொருளை வெட்டினான், எதிரி தேசத்து அரசன்.
சத்தம் கேட்டு வந்த மெய்க்காப்பாளன்எதிரியை வெட்டக்கையை ஓங்கரத்தம் சிந்திக் கொண்டுமரணத்தின்தறுவாயில் இருந்தபோதும்மெய்ப்பொருள்இவர் எதிரியாகஇருந்தாலும்சிவனடியார் கோலத்தில் இருப்பதால்இவரும்சிவாம்சமேஆகவேஇவருக்கு எவ்வித தொல்லையுல்இல்லாமல் எல்லை வரை பத்திரமாகக் கொண்டு விடக்கட்டளையிட்டான்.  அவ்வண்ணமே மெய்க்காப்பாளன்செய்ததைக் கூறமெய்ப்பொருள் அதன் பிறகு உயிரைவிட்டுசிவபதம் அடைந்தார்.
விபூதி, நோய்களை நீக்கும் அருமருந்தாகவும்,சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும்சிவசிந்தனைமேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும்,விளங்குகின்றது.  ‘விபூதீரைச்வர்யம்’ என்ற சொல் – விபூதி, ஐஸ்வர்யங்களைத் தரவல்லது – என்ற அர்த்தம் கொண்டது.

–ஹைந்தவ திருவலம்

சித்தர்கள் திருநீறு [ விபூதி ] தயாரிக்கும் முறை  https://sadhanandaswamigal.blogspot.in/2016/03/blog-post_37.html


எங்கே ஒரிஜினல் திருநீறு கிடைக்கும் ?  //sadhanandaswamigal.blogspot.in/2016/03/blog-post_25.html