Friday, December 28, 2018

உலோகச் சிலைகள் செய்யும் முறை -- Veeramani Veeraswami FB


உலோகச் சிலைகள் செய்யும் முறை --புகைப்படக் கண்ணோட்டத்துடன்.
மெழுகு, அரக்கு, சுதை, மரம், தந்தம், கல், பஞ்சலோகம் முதலியவைகளினால் சிற்ப உருவங்கள் அமைக்கப்படுகின்றன.
"கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன’’

என்பது திவாகர நிகண்டு.
உலோகத் திருமேனிகள் இருவகைப்படும். முழுவதும் கனமாகச் செய்யப்பட்ட உலோகத் திருமேனிகள் என்றும் உள்ளே பொள்ளலாகச் செய்யப்பட்ட திருமேனிகள் என்றும் இருவகைப்படும். தமிழகத்தில் செய்யப்பட்ட திருமேனிகள் அனைத்தும் முழுதும் கனமாகச் செய்யப்பட்ட உலோகத்திருமேனிகளாகும். பல வாகனங்கள் கனப்பொள்ளலாகச் செய்யப்பட்டவை.
உலோகத் திருமேனிகள், பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், பஞ்சலோகம் போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன. பொன் விலையுயர்ந்த உலோகமாகையால் அதனால் செய்யப்பட்ட சிலைகளும் மிகவும் குறைவு. அவ்வாறு இருந்தவையும், அவ்வப்போது நிகழ்ந்த படையெடுப்புக்களின்போது கொள்ளையிடப்பட்டன.
தற்காலம் வரை தப்பியிருக்கும் பெரும்பாலான தெய்வச் சிலைகள் செம்பு, வெண்கலம், பஞ்சலோகம் ஆகிய உலோகங்களில் செய்யப்பட்டவையே. பஞ்சலோகமே தெய்வச்சிலைகள் செய்வதற்குப் பெரிதும் விரும்பப்படுகிறது. பஞ்சலோகம் என்பது, தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தம் ஆகிய ஐந்து உலோகங்களைக் குறிப்பிட்ட அளவுவிகிதங்களில் கலந்து உருவாக்கப்படுகின்றது.
உலோகச் சிலைகள் பெரும்பாலும் 'செர்-பெர்டியூ' (Cire-Perdue) எனும் முறையில் தான் வார்க்கப்படுகின்றன. 'செர்-பர்டியூ' என்பது பிரெஞ்சு வார்த்தை, செர் என்றால் மெழுகு, பெர்டியூ என்றால் தொலைந்த (lost) என்று அர்த்தம் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில் 'மதுசிஷ்டவிதானா' என்று பெயர்.
செய்யப் போகும் சிலையின் வடிவத்தை முதலில் மெழுகில் தயாரித்து பின் அதைச் சுற்றி கவனமாக அச்சு தயாரிக்கப்படுகிறது. அச்சு காய்ந்த பின் உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி வெளியேற்றி விட்டு உலோகத்தை உருக்கி உள்ளே ஊற்றி சிலை தயாராகிறது.
அழகு காட்டும் ஒரு சிலைக்குப் பின்னால் கடும் உழைப்பு இருக்கிறது. முதற்கட்டமாக மெழுகில் கரு உருவாக்கப்படும். இது சாதாரண மெழுகல்ல. ஒருவகை மரத்தில் உருகி வழியும் பாலக்காட்டு மெழுகு. அதோடு சம அளவுக்குக் குங்கிலியம் கலந்து உருக்கி வைத்துக்கொள்கிறார்கள். கைக்கு வாகாக வரும் இந்த மெழுகை வைத்துத் தேவையான அளவுக்கு ஒரு சிலை உருவாக்கப்படும்.
சிலை செய்யும் 'ஸ்தபதிகள்' உருவத்தின் நீளம், பருமன் ஆகியவை சரியாக இருக்குமாறும், வளைவுகள், ஆடை மடிப்புக்கள் தத்ரூபமாக தோன்றுமாறும் கலைநயத்துடன் மெழுகுச்சிலை 
வடிக்கப்படுகிறது.

ஒரு வகையில் பார்த்தால் இந்த மெழுகுச்சிலை தான் அசல், உலோகச் சிலை நகல் தான்.
மெழுகுச்சிலையின் சிறிய பகுதிகளுக்குப் பலத்திற்காகவும், பின்னர் அச்சு தயார் செய்த பின் உலோகக் கலவை இந்தப் பகுதிகளுக்கு எளிதாக ஓடிச் சேரவும் கீழிருந்து இணைப்புக்கள் கொடுக்கப்படுகிறது.
மிக நுண்ணிய களிமண் (எறும்புப் புற்றிலிருந்து எடுப்பது), பசுஞ்சாணம், தவிடு ஆகியவற்றைக் கொண்டு அச்சுக் கலவை தயாரிக்கப்படுகிறது. அச்சுக் கலவை முதலில் குழம்பாக்கப்பட்டு மெழுகுச் சிலையின் மேல் பூசப்படுகிறது. நுணுக்கமான பகுதிகளும் விடுபட்டுப் போகாமல், காற்றுக் குமிழ்கள் உருவாகாமல் கவனத்துடன் மேலும் மேலும் பூசப்பட்டு தடிமனான அச்சு தயாராகிறது.
அச்சு நிழலில், வெடிப்புகள் ஏற்படாவண்ணம் உலர வைக்கப்படுகிறது.
இதன் பின்புறத்தே தலையிலும், இடையிலும், அடியிலும் துளைகள் இருக்கும். இது நன்கு உலர்ந்த பின்னர் தீயிலே இடுவர். மண்ணின் உள்ளே மெழுகிருந்த பகுதி அச்சாக நிற்கும். பெரும்பகுதி செம்பும், சிறிய அளவில் துத்தம், தங்கம், வெள்ளி, ஈயம் ஆகியவற்றையும் கலந்து உருக்கி அச்சின் பின் நடுவிலுள்ள துளையின் வழியாக ஊற்றுவர். தலையிலும் அடியிலும் உள்ள துளையின் வழியாக உலோகக் குழம்பு வெளிப்படும். அப்பொழுது அச்சு முழுவதும் உலோகம் பரவி இருக்கிறது என்று அறிவர்.
இதைக் குளிர வைப்பர். ஊற்றிய உலோகம் கெட்டியாகும். பின்னர் அச்சை உடைத்து வார்ப்பை வெளியில் எடுப்பர். பின்னர் சிற்றுளி கொண்டு திறனுக்கு ஏற்பச் செதுக்கி எழிலுற அமைப்பர். இம்முறையை '' தேன் மெழுகு முறை '' என்பர். இவ்வாறு செய்யப்பட்ட உருவம் முழுவதும் கனமாக இருக்கும். ஐந்து உலோகக் கலவை ஆனதால் பஞ்சலோகம்’ என்பர்.
ஐம்பொன் என்றால் பெயருக்குத்தான் பொன். ௭௦ சதவிகிதம் செம்பு, ௨௦ சதவிகிதம் துத்தம், , ௧௦ சதவிகிதம் ஈயம் என்பதுதான் கணக்கு. வெள்ளியும் தங்கமும் வசதியைப் பொறுத்தது.[ இந்த விகிதத் தன்மை மாறுபடலாம் ]
சில்ப சாஸ்திரம், மானசாரா, அபிலாசித்தார்த்தா சிந்தாமணி ஆகிய நூல்களில் பஞ்சலோகம் பற்றியும் சிலை செய்யும் விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய ஐந்து உலோகங்கள் மிக உயர்ந்தவை என்றும், இவை ஐந்தும் கலந்தது பஞ்சலோகம் என்றும் இந்நூல்கள் கூறுகின்றன.
ஆனால் அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு காலத்திய பஞ்சலோக சிலைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆய்வுகளிலிருந்து தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் கலந்திருப்பதாக கண்டறியப்படவில்லை.
ஐம்பொன்னை உருக்குவதற்கு மூசை என்னும் ஒரு அடுப்பு இருக்கிறது . அதில் கரியைப் போட்டு அதிகபட்ச வெப்பத்தில் உருக்கவேண்டும் . அதே நேரம் அந்த அச்சுக் கூட்டையும் செக்கச் சிவக்க சூட்டிலேயே வைத்திருக்கவேண்டும் . ஐம்பொன் உருகி தண்ணீர் போல நிற்கும் நேரத்தில் கவனமாக எடுத்து அச்சில் உள்ள இருக்கிற சிறு துளைகள் வழியாக உள்ளே கவனமாக ஊற்றவேண்டும்.
தமிழகத்து நூல்களில் சிறந்த குறிப்பு ஒன்று காணப்படுகிறது. ஓர் ஊரில் தெய்வ உருவை உலோகத்தில் செய்ய விழையும்போது, மெழுகினால் செய்த உருவை அலங்கரித்து ஊர் முழுவதும் வலமாக எடுத்துச் செல்வர். பின்னரே மண்ணிட்டு அச்சு செய்வர். இவ்வாறு ஊர்வலமாக எடுத்துச் செல்வதால் ஊரார்களின் ஒப்புதலையும், அவர்கள் விரும்பினால் வேண்டிய மாற்றங்களையும் செய்ய வாய்ப்புண்டு.
உருவம் முழுவதும் வார்த்து செதுக்கியமைத்து அதன் பின்னர் அவற்றை உரிய பீடங்களிலே அமைக்கும்போது பல இரத்தினக் கற்களைப் பீடத்திலிட்டு பின்னர் தெய்வ உருவை அப்பீடத்தில் பொருத்துவர். இதற்கு '' இரத்தின நியாசம் செய்தல்" என்று பெயர். எவ்வாறு கருவறையில் தெய்வச் சிலைகளை பிரதிஷ்டை செய்கிறோமோ, அதுபோல செப்பு உருவங்களுக்கும் பிரதிஷ்டை செய்வதாய் இச்செயல் அமையும்.
உருவைத் தெய்வமாக மாற்றும் கடைசிச் செயல் கண் திறப்பது ஆகும். கலை நிறைந்த ஸ்தபதி உளியால் கணிணைச் செதுக்கியவுடன் அச்சிலை தெய்வமாகக் கொள்ளப்படும். கண் திறப்பது சிறந்த விழாவாகக் கொண்டாடப்படும். அப்பொழுது அவ்வழகிய செப்புத் திருமேனியை வடித்த ஸ்தபதிக்கு பட்டாடைகள் அளித்து மலர்மாலைகள் அணிவித்து பொன்னும் பொருளும் கொடுத்து கெளரவிப்பர்,
நன்றி=
௧.கலிபோர்னியா லோட்டஸ் அருங்காட்சியக இணையதளம்.௨. தமிழ் இணையக்கல்விக் கழகம்.௩.தி ஹிந்து தமிழ் நாளிதழ்.௪.கட்டுரைப்பூங்கா -கரந்தைத் தமிழ்ச் சங்கம்.௫.தமிழர் நாகரிகமும் பண்பாடும் -அ. தட்சிணாமூர்த்தி.
புகைப்படங்கள்==
௧.மெழுகுச் சிலை தயாரிக்க ,தயாராகும் மெழுகுக் குழம்பு.
Image may contain: food
௨.இலட்சுமி -மெழுகுச்சிலை .
No automatic alt text available.
௩. கோபாலகிருஷ்ணன் மெழுகுச்சிலை ,ஓவியத்துடன் ஒப்பிடப்படுகிறது.
Image may contain: one or more people and people standing
௪.பசுவின் மெழுகுச்சிலை.[கோபாலகிருஷ்ணனுக்கு ]

௫.Cleveland Museum of Art.உள்ள கணபதியின் மாதிரி தயாரிக்க ,மெழுகுச்சிலை.
Image may contain: one or more people and people standing
௬, ௭, ௮..மெழுகுச்சிலைகளில் நகாசு வேலை.
Image may contain: 2 people, people sitting, table and food
Image may contain: 1 person, indoor
௯, .அச்சுக் கலவை மூலம் அச்சு தயாரித்தல்.[ மெழுகுச் சிலை உள்ளே]
No automatic alt text available.௧௦, ௧௧ .வெப்பப்படுத்தலின் மூலம் அச்சிலிருந்து மெழுகு உருகி வருதல்.
Image may contain: one or more people and outdoor௧௨.உலோகவார்ப்புக்குத் தயாராகவுள்ள அச்சுக் கூடுகள்.
No automatic alt text available.௧௩.தயாராகும் உலோகக்குழம்பு.[மூசை என்னும் அடுப்பு]Image may contain: fire, night and food
௧௪,௧௫.உலோகக்குழம்பினை அச்சுக்குள் வார்த்தல்.
Image may contain: one or more people
௧௬.அச்சு உலோகக்குழம்பால் நிறைந்ததை உறுதிச்செய்தல்.[இரண்டு சிவப்பு வட்டங்கள்]
Image may contain: fire
௧௭.ஆறின அச்சை உடைத்தல்.
Image may contain: 1 person, sitting and outdoor
௧௮,௧௯,௨௦ அச்சிலிருந்து வெளிப்பட்ட திருமேனிகள்.
No automatic alt text available.
Image may contain: outdoor and water௨௧, ௨௨, ௨௩..தூய்மை செய்து நகாசு வேலைகள் செய்தல்.
௨௪, ௨௫.. சிற்பி வரதராஜ் அவர்கள் பணியினை நிறைவு செய்த மகிழ்வில்.
Image may contain: 1 person, smiling, sitting and indoor
Image may contain: 4 people, people standing

Monday, December 24, 2018

Veena Rahasya! - Thiruvalamsivan ayya

Thank : https://blaufraustein.wordpress.com/ 




 late Thiruvalamsivan  [Blau Frau Stein.]


Iam just copy from Ayya site for next round ...


”Veena Rahasya!”

“Playing veena is considered one of the highest forms of yoga as it connects the jeevatma to the paramatma, especially when the player handles the veena through the sheer power and force of his ‘Prana’ ( life-force energy) or ‘kundalini shakti’ that arises from the mooladhara chakra at the base of the spine. The veena yogi handles the instrument in perfect breath control and goes through the process of ‘poorakam’ (inhalation), ‘kumbhakam’ (retention of breath), ‘rechakam’ (exhalation) and gradually into long stages of ‘antara kumbhakam’ (retention of breath after inhalation) and ‘bahya kumbhakam’ (retention of breath after exhalation). It is therefore possible to attain the state of samadhi through veena nada yoga.

Aithreya Brahmana states in the fifth chapter of the second part of the “AITHREYAARANYAKA”

ATHAH KHALVIYAM DEIVEE VEENAA BHAVATHI

THADANUKRUTHI MAANUSHI VEENA BHAVATHI!



The spinal chord extends from down the pelvis right upto the brain, sustaining the backbones. This is like the trunk of the veena. Just as there are 24 divisions in the veena, there exists similar assortment of 24 vertebrae in the spinal chord. The 24 vertebrae of the column are grouped as under by the scientists of the west in their treatises on anatomy.

p01veena_psd


DESCENDING ORDER ON VEENA:-

CERVICAL:-(7 NOTES AND VERTEBRAE)-S,N2,N1,D2,D1,P,M2

DORSAL:-(12 NOTES AND VERTEBRAE)-M1,G2,G1,R2,R1,S,N2,N1,D2,D1,P,M2

LUMBAR:-(5 NOTES AND VERTEBRAE)-M1,G2,G1,R2,R1

Thus totalling 7 joints (cervical belonging to the neck, dorsal belonging to the back and lumbar belonging to the loins). In the veena we see the mansions are large and roomy as they begin from the lower pitch. But as we proceed to the top pitch the frets shrink in size till towards the very end where they are rather minute. The division found near the lion-face (foot) are larger than those near the brain. Similarly, the vertebrae in the column are large and thick near the region of the waist, dwindling more and more in size and thickness as they approach the head. In vedas, the spinal chord is described as veenadanda. As already stated the lower end of the veena is termed as simha-mukha or lion-face. Even the lower end or basal stand of the vertebrae is shaped like veena’s simha-mukha.

Physiology tells that the cerebral chord or naadi runs inside the thin hollow tube embedded in the centre of the vertebral column. This cerebral chord is gross. This is not the ‘Brahmarandra naadi’ or the subtle super physical nerve. The mystic nerve exists as pure ethereal power in this gross cerebral chord. The sukshma nerve is beyond our ken. No x-ray or any other mechanical device can ever hope to discover this ethereal chord in the gross cerebral tendril. Man can only perceive the movements or excitation of the body, but never the forces which cause the movement or excitation.

If inside the gross body we did not possess an ethereal non-physical double, our bodies are but dead. Therefore, inside our corporeal frames there do exist nerves embodying psychic power such as the ‘sushumna’ or the ‘brahmarandra naadi’, surya-chandra naadis known as the ida-pingala naadis or the right and left sympathetic chords, the six psychic lotuses known as ‘shat chakras’ all these enshrining deep occult currents.

In the mysteries concerning the presence of Omkara in the sushumna naadi, one can perceive the deep esoteric varieties that vitalize the veena held in the hands of Goddess Sharada Devi. The power of the manifest (aahatha) sound, issuing as sweet music from the strings of the veena on which we play, reside in the gross nerve fabrics enveloping the mystic sushumna chord. This means that the power of psychic music which brings out the earthly music, resides in the unseen sushumna veena, while the power of the earthly veena resides in and vitalizes the peripheral nervous fibres around the sushumna. Between these two veenas rises the wall of the cerebral spinal chord of utmost fineness which envelops the sushumna naadi even as a glass chimney divides the light of a wick from its atmospheric surroundings.

The timbre of the veena strings has for their prototype the sound of the vedas interfused in the undefined, unmanifest anaahatha or omkara vibration. The seven swaras are rooted in the Cardinal psychic centres of the sushumna naadi viz Mooladhara, Swadhishtana, Manipura, Anaahatha, Vishuddha, Aagna, Sahasraara. Even though the seven swaras have each of their particular habitats yet in manifestation they interact with one another and reign collectively over the whole sushumna region as the power of the Primal Omkara.”

Friday, December 21, 2018

சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகளின் 118வது ஆண்டு குருபூஜை


Thank Madurai Dhakshanamoorthy & 
உ 
சற்குருநாதர் துணை 

அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குருநாதர்தஞ்சாக்கூர் அருள்மிகு சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகளின்  118வது ஆண்டு குருபூஜை விழா



நாள்: 03.01.2019 வியாழக்கிழமை     நேரம்: காலை 9.00 மணி 
இடம்: அருள்மிகு  சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள் ஜீவசமாதி 
எக்கக்குடி, நல்லான்குடி விலக்கு, உத்தரகோசமங்கை வழி, இராமநாதபுரம் மாவட்டம்.





அனைவரும் வருக!  இறையருள் பெறுக!

சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகளின்  118வது ஆண்டு குருபூஜை

சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள்,எக்கக்குடி, இராமநாதபுரம்.(திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை மிக அருகில்)

 ஸ்ரீ செல்லப்ப சுவாமிகள்  , சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரும், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குருநாதருமாவார். செல்லப்ப சுவாமிகள், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூர் என்ற ஊரில் அவதரித்தார். தன் குருநாதர் போன்று, பல சித்துகள் செய்தவர்.

சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் மன்னார்குடியில் தோன்றி, கட்டிக்குளம் குவளைவேலி, புதுக்குளம் கிராமங்களில் கோயில்கள் எழுப்பி சித்துகள் பல செய்து, பக்தர்களுக்கு அருள்புரிந்தவர். அவர் வழிவந்த தஞ்சாக்கூர் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள், தங்கள் குரு ராமலிங்க சுவாமிகள் பெயரில் பல இடங்களில் மடங்களை நிறுவினார்.

ராமநாதபுரம் திருச்சுழி என்று வெவ்வேறு இடங்களில் ஆரிய சித்துகளைச் செய்து சஞ்சரித்து வந்த செல்லப்ப சுவாமிகள் ஒருநாள், ராமநாதபுரம் கண்மாய் மடக் குழியில் இறங்கினார். வெகுநேரம் அவரைக் காணாமல் அன்பர்கள் தவித்தனர். ஆனால் சுவாமிகள் அப்போது ராமநாதபுரம் அரண்மனை வாசலில் இருந்து கொண்டு ராஜாவுக்கு அவரது நோய்க்கான பச்சிலை மருந்துக்ளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.அன்பர்கள் இதைக் கண்டு அதிசயித்துப் போயினர். அன்று முதல் ராமநாதபுரம் ராஜா முத்துராமலிங்க சேதுபதி அவரைப் பெரிதும் போற்றி வந்தார். இத்தகைய சிறப்புகளுடன் திகழ்ந்த செல்லப்ப சுவாமிகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மாயாண்டி சுவாமிகள், அவரையே குருவாகக் கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து உபதேசம் செய்து வைத்தார்.

கட்டிக்குளத்தில் இருந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள், கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும், தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பின்னர் இந்த சூட்டுக்கோல் அவரது சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும், அதன் பின் அவரது சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்த சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.


சுவாமிகள் சமாதி, பிரபல திருக்கோயில்கள் உடைய திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை ஆகிய இடங்களுக்கு, மிக அருகில் உள்ளது. அடியார்கள் பார்த்து வழிபட வேண்டிய ஒரு மகான். தொடர்புக்கு - 09843287501




Dear All,

Arulmiku Kattikulam Soottukkole Mayandi Swamigalin Gurunathar
Thanjakkoor Arulmiku Soottukkole Chellappa Swamigal's 118th Gurupoojai Vizha

Date: 03.01.2019 Thursday Time: 9.00 am
Venue: Arulmiku Soottukkole Chellappa Swamigal Jeevasamathi
Ekkakudi, Nallankudi Vilakku, Utharakosamangai via, Ramanathapuram District.

All are welcome!









இணைப்பு:  குருபூஜை பத்திரிக்கை.


என்றும் அன்புடன்,
இரா. தட்சணாமூர்த்தி 
பரம்பரை டிரஸ்டி - 5ம் தலைமுறை
சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம் 
மின்னஞ்சல்: soottukkole@gmail.com
இணையதளம்: www.soottukkole.org
முகநூல்: Soottukkole

-----------------------------------------------------------------------------------------------------------------

Thursday, December 20, 2018

Sri Eswarapattar Swamigal Maha Guru Pooja 2019

 Sri Eswarapattar Swamigal  Maha Guru Pooja 2019

 Satguru Sri Eswarapattar Swamigal Whose odukum at Palani was a saint born in a Kannada speaking family. His young age was in Andhra and has his odukkam at Tamilnadu. His Jeeva samadhi Palani.

Sri Eswarapattar Swamigal  is one of Guru to Dr. Mystic Selvam ayya , in his “ Kaala dosha nivaaranam Prayoganm ” speech. Just hear Mystic Selvam ayya speech for 2 minutes “ https://www.mediafire.com/download.php?4f4jdf7u7ox94pn ” (2mb) .


Mystic ayya said when we keep photo Sri Eswarapattar Swamigal (above pic) and just say “ Om Eswarapattar Namaha “ 11 times in morning & evening , Swamigal will take away our 'Cast the evil eye',  solve court-cases crisis and all our problem. 

Satguru Sri Eswarapattar Swamigal   Maha Guru Pooja Invitation at Thiruchendur & Palani  04-01-2019 .  ph: 04545251249





At.Thiruchendur Invitation   
Get in touch with Sivayoga Guruji R.Santhanakrishnan +91 9159532526 Thoothukudi for this Guru Pooja.




Wednesday, December 19, 2018

"ஆரியன்காவில் அன்னதானம்"




"ஆரியன்காவில் அன்னதானம்"

Image may contain: 2 peopleThank Ariyankavu FB

கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் மண்டல காலம் முழுவதும் ஆரியன்காவில் 
அன்னதானம் நடைபெறுகிறது.

உற்ஸவகாலங்களில் நமது சங்கத்தின் சார்பில் அனைத்து ஐயப்ப பக்தர்களுக்கும் "ஏழு வேளை அன்னதானம்"  டிசம்பர் 24,25 மற்றும் 26  ஆகிய தேதிகளில் மதியம்  அலங்கார சாப்பாட்டுடன் "பாலக்கல் ஆடிட்டோரியத்தில்" வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ...

பசி இருப்பவனிடம்  கேட்டு உணவளித்தால் அது தானம்....!

பசித்திருப்பவனிடம் அவன் கேட்காமலேயே உணவளித்தால் அது தர்மம்....!

தானமும், தர்மமும் செய்யுங்கள்... அதுவே அன்பு... அதுவே கருணை... அந்த உணர்வு உங்களிடம் இயல்பாகவே இருக்கிறது....!  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, அந்த தெய்வீக உணர்வை வெளிப்படுத்தும் அற்புதமான தருணங்கள் இவைதான்....!

அன்னதானத்திற்கு தாராளமாக நன்கொடை  வழங்குங்கள்..பொருட்களாகவும் வழங்கலாம், நன்கொடைகளை எங்கள் சங்க வங்கிக் கணக்கிலும் செலுத்தலாம்...

மேலும் விபரங்களுக்கு
S.J.Rajan
98421 52328

வங்கி விபரம்:
Ariyankavu Devasthana
Sourashtra Mahajana Sangam,
State Bank of India
South Masi Street Branch.
Madurai
A/c. No. 00 00 00 67188780044
IFSC Code: SBIN 0070866

"என் ஐயனை  ஒரு முறை வணங்கினால் தலைமுறை வாழும்".....

"என் ஐயனை தேடி வந்து வணங்கினால்  ஓடி வந்து உதவுவான்"....

"என் ஐயன் மணக்கோலம் காட்டி திருமண வரம் அளிப்பவன்"....

உங்கள் விருப்பம் என்ன  என்பதை இறைவனிடம்  சொல்வதை விட , இறைவனின் விருப்பம் என்ன  என்பதை அறிந்து , அவன் அடியார்களுக்கு அன்னம் அளித்தால் ,நீங்கள் கேட்காமலேயே  உங்கள் விருப்பத்தை அவன் நிறைவேற்றி வைப்பான்...

ஒரு முறை செய்து தான்  பாருங்களேன்....!

சுவாமியே சரணம் ஐயப்பா....

அன்னதானப்பிரபுவே
சரணம் ஐயப்பா...




Image may contain: 1 person

Tuesday, December 18, 2018

மார்கழி மாத முதல் புதன்கிழமை "குசேலர் தினம்" கதை.

Om Namo Narayan
   "குசேலர் தினம்" கதை

Thank Shanthi https://andavantiruvadi.blogspot.com/2014/12/5.html?m=1

குசேலோபாக்யானம்
இன்று மார்கழி மாதம் முதல் புதன்கிழமை. மார்கழி மாத முதல் புதன்கிழமை "குசேலர் தினம்" என்று கொண்டாடப்படுகிறது. 
ஸாந்தீபனி முனிவரிடம் கண்ணனும், சுதாமா (குசேலர்) என்ற பிராமணரும் ஒன்றாக குருகுலம் பயின்றார்கள். கிருஹஸ்தனான அவர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய்ப் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார். அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய் இருந்தாள். வறுமையில் குழந்தைகளைப் பேண முடியாததால், ஒரு நாள் அவள் தன் கணவரிடம், லக்ஷ்மீபதியான கிருஷ்ணர் உங்கள் நண்பரல்லவா? வாழ்வதற்குப் பொருளைப் பெற ஏன் அவரை அணுகக்கூடாது? என்று கேட்டாள். பசியின் துன்பத்தாலேயே அவள் அவ்வாறு கூறினாள். செல்வம் கர்வத்தை உண்டாக்கி வாழ்க்கையைக் குலைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தாலும், கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், தனது வஸ்திரத்தின் நுனியில் மூன்று பிடி அவலை முடிந்துகொண்டு, காணிக்கையாய் எடுத்துச் சென்றார்.
கிருஷ்ணர் இருக்கும் துவாரகா நகரத்தை அடைந்தார். கிருஷ்ணனுடைய மாளிகைக்குள் நுழைந்ததும் வைகுண்டத்தில் இருப்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். பகவான் கிருஷ்ணர், அவரை வரவேற்று உபசரித்ததும் விளக்கமுடியாத ஆனந்தமடைந்தார். கிருஷ்ணர், அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு குருகுலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். குருபத்தினிக்கு விறகு கொண்டு வர காட்டுக்குச் சென்றபோது மழையில் நனைந்ததைப் பற்றிப் பேசினார்..
கொண்டு வந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டுத் தயங்கிய குசேலரிடமிருந்து கட்டாயப்படுத்தி அவலை வாங்கி ஒரு பிடியை உண்டார். இரண்டாவது பிடியை எடுத்ததும், “போதும், போதும்” என்று மகாலக்ஷ்மியான ருக்மிணி கிருஷ்ணருடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். (இதற்குமேல் உண்டால் கொடுப்பதற்குப் பொருள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்). பக்தர்களுக்கு அடியவனான கிருஷ்ணர், குசேலரை மிகவும் உபசரித்தார். குசேலர், மிகவும் மகிழ்ச்சியுடன் அன்று இரவு கிருஷ்ணருடன் தங்கினார். மறுநாள் பொருள் எதுவும் பெறாமல் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார். 
" பொருள் வேண்டும் என்று கேட்டிருந்தால் கிருஷ்ணன்  கொடுத்திருப்பார். மனைவியிடம் எவ்வாறு சொல்வது?" என்று வழிநெடுக யோசித்துக் கொண்டே சென்றார். அவரது மனம் முழுக்க பகவான் கிருஷ்ணருடைய புன்னகையும், பேச்சுக்களும் நிறைந்திருந்தது. 
அப்போது அவர் பிரகாசம் மிக்க ரத்தினங்களால் விளங்கும் ஒரு மாளிகையை அடைந்தார். க்ஷணநேரம் வழி தவறி வந்து விட்டோமோ என்று திகைத்து, பின்னர் வீட்டினுள் நுழைந்தார். உள்ளே தோழிகள் சூழ, ரத்தினங்களாலும், தங்கத்தினாலும் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கும் தன் மனைவியைக் கண்டார். கிருஷ்ணனுடைய கருணை மிக அற்புதமானது, ஆச்சர்யமானது என்று அறிந்தார். 
ரத்னமயமான மாளிகையில் வசித்துக் கொண்டு இருந்தாலும் அவர் கண்ணனிடமே மனதைச் செலுத்தி மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தார். 
பகவான் கிருஷ்ணரை சந்திக்க குசேலர் அவலை எடுத்துச் சென்றது ஒரு மார்கழி மாத முதல் புதன்கிழமை. அதனால், மார்கழி மாத முதல் புதன்கிழமை "குசேலர் தினம்" என்று கொண்டாடப்படுகிறது. குருவாயூர் கோவிலில் பக்தர்கள் அன்றைய தினம் குருவாயூரப்பனான உன்னிக்கண்ணனுக்கு அவல் ஸமர்ப்பித்து வழிபடுவர். மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று கண்ணனுக்கு அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. வீடுகளில் அன்றைய தினம் "குசேலோபாக்யானம்" (குசேலரின் கதை) பாராயணம் செய்வார்கள். கையகலத்திற்கு ஒரு சிறிய சிவப்பு வஸ்திரம் (கண்ணனின் கௌபீனம் என்று ஐதீகம்) மடித்து வைத்து , அவல், வெல்லம் வைத்து வழிபடுவார்கள். பிறகு அந்த அவலை சிறு சிறு  கிழியாகக் (சிறிய மூட்டையைப் போல்) கட்டி அனைவருக்கும் விநியோகம் செய்வார்கள்.
இந்த கதையைப்  படித்து, அவலும் வெல்லமும் நைவேத்யம் செய்து கண்ணனை வழிபடலாம். பக்தர்களுடைய விருப்பத்தை குருவாயூரப்பன் நிச்சயம் நிறைவேற்றுவான். அது சரி, அதென்ன  சிவப்பு வஸ்திரம்? அதுவும் கண்ணனின்  கௌபீனமா? அடுத்த  கதைக்குப் பொறுத்திருங்கள். 





வலம்புரி

https://jaybeeskadaram.blogspot.com/2013/12/blog-post.html
வலம்புரி


வலம்புரிச் சங்கு


 இடம்புரிச் சங்கு

முக்குருணி விநாயகர்



வலம்புரி-பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்


பிரான்மலை வலம்புரி விநாயகர்


சங்கநிதி


பதுமநிதி




அருவியூர் வலமபுரி விநாயகர்


வலம்புரி நந்தியாவட்டை மலர்


வலம்புரி ஸ்வஸ்திகம்


ஹிட்லரின் இடம்புரி ஸ்வஸ்திகா

Friday, December 7, 2018

”அதிகாலையின் ஏன் எழவேண்டும்? | Why getup early?” - Thiruvalamsivan ayya

Thank : https://blaufraustein.wordpress.com/

 late Thiruvalamsivan  [Blau Frau Stein.]


Iam just copy from Ayya site for next round ...


”அதிகாலையின் ஏன் எழவேண்டும்? | Why getup early?”



நமது அஞ்ஞானிகள் அதிகாலையில், எழுந்திரித்து காலைக்கடன்களையெல்லாம் முடித்துக்கொண்டு, இறைவனை வழிபடவேண்டும், சூரியோதயத்திற்கு முன் செய்யவும் வலியுறித்தி இருக்கிறார்கள்.

இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்தது கீழே –

cycle copy

காலை 6 மணி என ஆரம்பிப்போமா!

காலை 0600 மணி முதல் 0645 மணிக்குள், மனிதனுடய இரத்த அழுத்தம் உச்ச நிலையை அடைகிறது.

காலை 0730 அளவில் பினியல் உறுப்பினால் சுரக்கும் மெலடோனின் உற்பத்தி, நிற்கிறது.

காலை 0830 மணி அளவில் மல வெளியேற்றம் இருக்கும்

காலை 0900 மணி அளவில் டெஸ்டோஸ்டெரோன் அளவு அதிகமாக இருக்கும்.

காலை 1000 மணி அளவில் சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும்.

மதியம் 1430 மணி அளவு வரை உன்னதமான சிந்தையும் செயலும் இருக்கும்.

பிற்பகல் 1530 மணி அளவு வரை உன்னதமான செயல்பாடு இருக்கும்

சாயங்காலம் 1700 அளவில், மனித இதயமும், தசைகளும் மிக அதிக வலிமை கொண்டிருக்கும்

பிற்பகல் 1830 அளவில் இரத்த அழுத்தம் மறுபடியும் உச்சனிலையை அடையும்

இரவு 1900 அளவில், உடல் சூடு உச்சனிலை அடையும்

இரவு 2100 அளவில் மெலடோனின் உற்பத்தி ஆரம்பிக்கும்.

இரவு 2230 அளவில் மலஜல வெளியேற்றம் நிறுத்தப்படும்.

இரவு 0200 அளவில் மிக ஆழமான உறக்கம் நீடிக்கும்

விடிகாலை 0430 அளவில் உடலில் சூடு மிக குறைவாக இருக்கும். அது சுமார் 0600 வரை நீடிக்கும்.

இந்த செயல்கள் இயற்கையாகவே, இரவு பகலை அனுசரித்து அமைந்துள்ளது எனில் தவறாகாது. இந்த வளையத்தை நாம் மாற்றியமைக்க முற்படும்போது, வேண்டாத அழுத்தங்கள் உண்டாகி, உடல் சீர்கெடுகிறது நமது உடலின் புதுப்பித்துக்கொள்ளும் தன்மைக்கு / செயலுக்கு பாதகம் நேற்கிறது. இதன் காண் உருப்புகள் செயலிழத்தல், நோய்வாய்ப்படுதல், விரைவில் முப்பெய்தல் என பல சிக்கல்கள் நேர்கிறது.

நமது முன்னோர்கள், இரவு சீக்கிரமாக உறங்க சொல்வது சுமார் 2100 hrs ஆகும். அச்சமயம் பினியல் சுரப்பி தனது சுரத்தலை ஆரம்பிக்கிறது. இரவு முழுவனும் உடல் புதிப்பிக்கும் பணியை செவ்வெனெ இயற்ற (BODY REJUVENATION PROCESS) உடல் பணியெடுக்காமல் இருக்க வேண்டியுள்ளது. அது உறங்கும் சமயம். விடிகாலை சுமார் 0430 மணி அளவில், உடல் சூடு தணியும்பொழுது, தவிற்க்கப்பட்ட மலஜலத்தினால், மூத்திர பிண்டம், மூத்திரப்பை முத்லியவற்றில் படிமங்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம், ஏனெனில், உடல் சூடு குறையும்பொழுது, நீரில் கரைந்திருக்கும் பல கனிம உப்புக்கள், நீரில் நின்றும் வெளியேரும். அவை, மறுபடியும் நீரில் கரைய உடல் சூடு அதிகரிக்கவேண்டும். அப்படியாயின், நாம் சீக்கிரமாக கண்விழித்து உடல் பணியெடுக்கவேண்டும்.

காலைக்கடன் முடிக்கும் பொழுது, உடல் சோர்வு குறைந்து மிக சுறுசுறுப்பாக இருக்கும். அதுபோலவே உடல் சூடும் அதிகரிக்கும். அச்சமயம், மூத்திரப்பை அல்லது பிண்டத்தில் உப்பு படியாமல், நீரோடு வெளியேரும். இதே போன்று மலம் இருகுதல், குடலுக்குள்ளே அழுத்தம், அழுகுதல், அபான வாயு உருவாதல் முதலியனவும் தடுக்கப்படுகின்றன.

காலை 0900 மணியளவில், ப்ரம்மா தனது தொழிலை ஆரம்பிக்கிறார். விந்து அல்லது நாத உற்பத்திக்காக டெஸ்டிக்கில் (TESTICLE HORMONE – TESTOSTRONE) சுரப்பிகள் பணியெடுப்பதால், ரத்தத்தில் விந்து அல்லது நாத உற்பாத்திக்காக வேண்டிய புரதம் அதிகமாகிறது.

பினியல் சுரப்பியினின்றும் சுரக்கும் திரவம், உடலின் புதுப்பித்துக்கொள்ளும் செயலை சீர்படுத்துகிறது. பினியல் சுரப்பி நமது மூளைப்பகுதியின் நடுவே நரம்பு மண்டலத்தின் இணைப்பின் மேலே, நெற்றிக்கண் என்று அறியப்படுகின்ற புருவ மத்தியில் சிறிது பின் புரத்தே உள்ளது. நமது “எல்லா வேதமுமே / யோகமுமே / மார்கமுமே இந்த புருவ மத்தியில் உள்ள பினியல் சுரப்பியின் செயல் ஆற்றலை விரிவாக்குவதே” என்றால் மிகையாகாது.

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்