Friday, October 12, 2018

சபரிமலை காப்போம்


அனைத்து சபரிமலை யாத்திரை அன்பர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.இவண் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் மதுரை


Image may contain: text

behind-pathinettapadi-18-steps
https://sadhanandaswamigal.blogspot.com/2013/11/behind-pathinettapadi-18-steps.html

Tuesday, October 9, 2018

நவராத்திரி பற்றிய குறிப்புகள்

https://koshasrini.blogspot.com/2015/10/blog-post_63.html
.....

நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.

வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்தால் சகல செல்வங்களையும் பெறலாம்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது. கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும். முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

நவராத்திரி 5-ம் நாளான வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா, "ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம" என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.
Image result for நவராத்திரி
..... ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வலைப்பதிவருக்கு மிக்க நன்றி.

Monday, October 1, 2018

ஹைந்தவ திருவலம் | பாலாம்பிகையின் வழிபாடு முறை | Worship of Sri Balambika - Thiruvalamsivan ayya

Thank : https://blaufraustein.wordpress.com/ 

Image may contain: one or more people and beard



 late Thiruvalamsivan  [Blau Frau Stein.]


Iam just copy from Ayya site for next round ...



Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பாலாம்பிகையின் வழிபாடு முறை | Worship of Sri Balambika



ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||


|| ஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை ||


அபவித்ரபவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா:!

ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தரஸுசி: !!

 à®ªà®¾à®²à®¾à®®à¯à®ªà®¿à®•à¯ˆ

சாப விமோசனம் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பாலே சிவசாபம் விமோச்சய ஃபட் ஸ்வாஹ: (12)

பாலா சஞ்சீவினம் – சௌஐம் க்லீம் பாலாயை நம:

சம்புடீகரணம் – சௌஐம் க்லீம் சௌபாலாயை நம:




ஆசமனம் முதல் பூர்வாங்க பூஜைகளை முடித்து பின்னர் ஆரம்பிக்கவும்

***

ஓம் அஸ்யஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மஹாமந்த்ரஸ்ய,

தக்ஷிணாமூர்த்தி ரிஷியே நம: – சிரசே

பங்க்திச்சந்தசே நமோ – முகே

பாலா த்ரிபுரசுந்தரி தேவதாயை நமோ – ஹ்ருதயே

ஐம் பீஜாய நமோ – குஹ்யே

சௌசக்தியை நமோ – பாதயோ

க்லீம் கீலகாய நம: – சர்வாங்கே

சர்வதா சர்வசித்தயே ஜபே வினியோக


கர ந்யாஸம்.

ஐம் அங்குஷ்டாப்யாம் நம:

க்லீம் தர்ஜனீப்யாம் நம:

சௌமத்யமாப்யாம் நம:

ஐம் அனாமிகாப்யாம் நம:

க்லீம் கனிஷ்டிகாப்யாம் நம:

சௌகரதலகரப்ருஷ்டாப்யாம் நம:


ஹ்ருதயாதி ந்யாஸம்.

ஐம் ஹ்ருதயாய நம:

க்லீம் சிரசே ஸ்வாஹ:

சௌசிகாயை வஷட்

ஐம் கவச்சாய ஹூம்.

க்லீம் நேத்ரத்ரயாய வௌஷட்

சௌஅஸ்த்ராய ஃபட்

பூர்புவஸ்வரோம் இதி திக்பந்த:


த்யானம்.

அருண கிரண ஜாலை ரஞ்ஜிதா ஸாவகாஸா
வித்ருத ஜப ஸ்படீகா புஸ்தகா பீதிஹஸ்தா
இதர கரவராட்யா புல்லகல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாணரூபா (சீலா)


பன்சபூஜா:

லம் – ப்ரித்விதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நமசுத்த பரிமள கந்தம் பரிகல்பயாமி

ஹம் – ஆகாஷதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நமபரிமள புஷ்பாணி சமர்ப்பயாமி

யம் – வாயுதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நமதூபமாக்ரபயாமி

ரம் – வன்ஹிதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நமசுத்த க்ருத தீபம் சந்தர்ஷயாமி

வம் – அம்ருததத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நமநானாவித பக்வன்னாதி சமேத அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி

சம் – சர்வதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நமகர்பூரவீடிகாயுக்த தாம்பூல சமேத சர்வோபச்சார பூஜான் சமர்ப்பயாமி.

யதாசக்தி யதாசங்க்யா மூலமந்த்ர ஜபம் க்ருத்வா!




மூலமந்த்ரம்: “ஓம் சௌஐம் க்லீம் சௌபாலாயை நம:”            1008 உரு, காலையும் மாலையும்.


ஹ்ருதயாதி ந்யாஸம்.

ம் ஹ்ருதயாய நம:

க்லீம் சிரசே ஸ்வாஹ:

சௌசிகாயை வஷட்

ஐம் கவச்சாய ஹூம்.

க்லீம் நேத்ரத்ரயாய வௌஷட்

சௌஅஸ்த்ராய ஃபட்

பூர்புவஸ்வரோம் இதி திக்விமோக:

த்யானம்.

அருண கிரண ஜாலை ரஞ்ஜிதா ஸாவகாஸா
வித்ருத ஜபஸ்படீகா புஸ்தகா பீதிஹஸ்தா
இதர கரவராட்யா புல்லகல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்யகல்யாண ரூபா (சீலா)

 

பாலாம்பிகை

மானஸ பன்சபூஜை

ம் – ப்ரித்வி தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நமசுத்த பரிமள கந்தம் பரிகல்பயாமி

ஹம் – ஆகாஷ தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நமபரிமள புஷ்பாணி சமர்ப்பயாமி

யம் – வாயு தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நமதூபமாக்ரபயாமி

ரம் – வன்ஹி தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நமசுத்த க்ருத தீபம் சந்தர்ஷயாமி

வம் – அம்ருத தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நமநானாவித பக்வன்னாதி சமேத அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி

சம் – சர்வ தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நமகர்பூரவீடிகாயுக்த தாம்பூல சமேத சர்வோபச்சார பூஜான் சமர்ப்பயாமி.

 

ஸமர்ப்பணம்.

குஹ்யாதி குஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணாஸ்மாத் க்ருதம் ஜபம் |

ஸித்திர்பவது மே தேவி தவத் ப்ரசாதான் மயி ஸ்திரா||

யானி கானி பாபானி ஜன்மாந்தர க்ருதானி |

தானிதானி விநச்யந்தி ப்ரதக்ஷிணே பதேபதே ||

அபராத ஸஹஸ்ரானி க்ரியந்தே ஹர்னிஸம்

மயா தாஸோயமிதி மாம் மத்வ க்ஷமஸ்வ பரமேஷ்வரீ||

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் மஹேஷ்வரீ|

யத்பூஜிதம் மயாதேவி பரிபூர்ணம் ததஸ்துமே ||

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம: |

தஸ்மாத் காருண்ய பாவேன லோக க்ஷேமம் சதா குரு||

காமேஷ்வரீ ஜனனிகாமேஷ்வரோ ஜனக:, தவ சரணௌ மம சரணம் |

காமேஷ்வரீ ஜனனீ தவசரணௌ மம சரணம். ||

காமேஷ்வர ஜனக காமேஷ்வரீஜனனிகுருலோகே க்ஷேமம் |

காமேஷ்வரீ ஜனனீ குருலோகே ஸாந்திம் ||


சுபம்

குறிப்புஇந்த பாலாமந்திரத்தைஉகந்த சரியான த்யான ஸ்லோகத்தோடு முறையாக மூன்று லட்சம் உருவுடன் சரியான  புரஸ்சரணமும், உக்த சமித்துக்களோடு ஹொமமும், இதர அனுஷ்டானங்களையும் முடித்தால்வித்யையில் ப்ரஹஸ்பதி சமனாகவும்பார்புகழும் பலத்தோடும், புகழோடும்சம்பத்தில் குபேரனுக்கு நிகராகவும், – அவர் தம் வினைப்பயன்விதிப்பயன் எவ்வாறு இருப்பினும் – சாதகர் இருப்பர்! – சிவவாக்கியம்.


“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்