Thursday, March 31, 2016

சுடுகாட்டில் சிவன் ஏன் ???

Thank :https://anmegasiruthuli.blogspot.com/2016/03/blog-post_33.html

 மாபெரும் கருணையை உணரவேண்டி !!!!

நமசிவாய

சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி !!! ?? என்று இன்று பலர் குழம்பி !!! மற்றவர்களையும் குழப்பி ??? மெய் உணராமல் இருப்பவர்கள், மெய் உணரவேண்டி ஈசன்  திருவருளால் இப்பதிவு.

மெய் உணர்ந்து, மெய்யை பற்றி இன்புறும் அடியார்கள் பாதம் பணிகிறேன்,

சுடுகாடு :

உயிராகிய மெய், இருந்த கூடுஆகிய உடலை விட்டு பிரிந்த பின், கூடுஆகிய உடலை ( பயனற்ற கூட்டை ) நெருப்பு கொண்டு எரிக்கும் இடம்.


சுடுகாட்டில் உயிரின் நிலை :

உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம், உயிர்யற்ற உடல் பிணம் ( சவம் ),
50 – 60 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும்போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் பரிதவிக்கும், ( 1 ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு பிரியும்போது ஏற்படும் உணர்வு போல -  50 – 60 ஆண்டு காலம் இருந்த கூடு )

தமக்கு என்றும் நிரந்தரம் நினைத்து பேணி காத்த உறவுகள் அனைத்தும் உடலை எரித்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டனர், இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமது இல்லை என்று மெய்யை உணர்ந்து  பரிதவிக்கும் போது.


சுடுகாட்டில் சிவம் :

உயிர் பரிதவிக்கும் போது மாபெரும் கருணையாளன் நம்பெரும் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அபயம் அளிக்கிறார்,

இதை உணர்த்தவே அப்பர் பெருமான் “ திருஅங்கமாலை “ தேவாரத்தில்

“”உற்றார் ஆருளரோ - உயிர் கொண்டு போகும்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ. “”

மிக தெளிவாக கூறியுள்ளார்.

யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்ப்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் கருணையுடன் அடைக்கலம் தந்து அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று கூறுவது எவ்வளவு சிறுமை !!! என்று உணருங்கள் .


சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை, அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன், நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெருமும் கருணையோடு காக்கிறான் என்று உணர்த்தவே, ஈசன் திருவருளால் இப்பதிவு.

உய்வு பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு

திருச்சிற்றம்பலம்

click more ;

பிணம் தின்னும் சாமி : https://pokkishapetti.blogspot.com/2012/10/blog-post_26.html 

மயான தெய்வம் - நடுஜாமத்தில் படிங்க..  https://groups.google.com/forum/#!topic/mintamil/fUf8IDaoZBk

Monday, March 28, 2016

Thank to all Visitors

With my Guru Sadhananda swamigal Bless..  yesterday my Blog crossing 500086 pages view ...

Thank to all Visitors  liking my  https://sadhanandaswamigal.blogspot.com/ ... 











Saturday, March 26, 2016

தீட்சை (  தீஷை )

 `தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை. மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன. மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும். நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர். முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர். இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள். தீட்சைகள் ஆறு வகைப்படும். அவையாவன : பரிச தீட்சை, நயன தீட்சை, பாவனா தீட்சை, வாக்கு தீட்சை, யோக தீட்சை, நூல் தீட்சை 

#பரிச #தீட்சை : ஒரு பறவை முட்டையிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சையாகும். ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் – நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும். 
#நயன #தீட்சை : ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து, மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும். 
#பாவானா #தீட்சை : ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும். ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை. #யோக #தீட்சை : ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து 12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து, சும்மா இருப்பதுவே வகார திருநிலை. இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும்.
 #வாக்கு #தீட்சை : ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும்.
 #நூல் #தீட்சை : சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும். உண்மையில், யோக தீட்சை என்பது மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல. எண்ணமற்று, சகஜத்திலேயே, மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே வாசி யோகம் என்பதைப் புரிந்து கொள்க. எடுத்த இப்பிறப்பில் தானே மெய்யான ஞானகுருவினைத் தேடிக் கண்டடைந்து, பணிந்து, அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும், உயிர் மற்றும் ஆன்ம அழுக்குகளையும் நீக்கப் பெற்று, மாசற்று தன்னை உணர்ந்து, தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைத்தன்மையில் இரண்டறக் கலந்து, அதில் கரைந்து என்றும் நித்தியராக வாழ்தலே சிறப்புடையது. தீட்சையின் வகைகள்: 

தீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இருவகைப்படும். இறைவன் ஞானாசிரியர் ஒருவர் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உடைய நம்போன்ற சகலருக்கும் அளிக்கும் தீட்சை ஆதார தீட்சை எனப்படும்.இறைவன் வேறோர் ஆதாரத்தையும் வேண்டாது தானே குருவாய் நின்று ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மட்டும் உடைய பிரளயாகலருக்கு முத்தியளிக்கும் தீட்சை நிராதார தீட்சை ஆகும். தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும். #நயன #தீட்சை குரு தன்னை சிவமாகப் பாவித்து அப்பாவனையுடன் மாணாக்கனைக் கண்ணால் நோக்கி அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பது நயன தீட்சை ஆகும். சிவபெருமானிடம் திருத்தோணிபுரத்திலே திருஞானசம்பந்தர் பெற்றது நயன தீட்சையாகும்.
 #பரிச #தீட்சை குரு தன் வலது கையை சிவனுடைய கையாகப் பாவித்து மாணக்கனது தலையில் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல் பரிச தீட்சையாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்சை பரிச தீட்சை அகும். #வாசக #தீட்சை குரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற் கேற்றவாறும், பொருந்துமாறும், மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும். மாணிக்கவாசகருக்கு சிவபொருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும். 
#மானச #தீட்சை குரு தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையில் கொண்டு வந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து மீள அவ்வான்மாவை அவனது உடலிற் சேர்த்தல் மானச தீட்சை ஆகும்.
 #சாத்திர #தீட்சை குரு மாணவனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஓதுவித்தல் சாத்திர தீட்சையாகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி, பசு, பாச விளக்கம் வழங்கியமை இதற்கு உதாரணமாகும். #யோக #தீட்சை குரு மாணக்களை சிவயோகம் பயிலச் செய்தல் யோக தீட்சையாகும். தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாராகிய நான்கு பேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோக தீட்சையாகும்.
 #ஒளத்திரி #தீட்சை பொதுவாகச் சைவ மக்களுக்குச் செய்யப்படுவது ஒளத்திரி தீட்சையாகும். ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அமையும் பொருட்டு ஆசாரியரால் அக்கினி காரியத்துடன் செய்யும் அங்கி தீட்சையே ஒளத்திரி தீட்சை ஆகும். இது ஞானவதி, கிரியாவதி எனும் இருவகைகளில் ஒருவகையாற் செய்யப்படல் வேண்டும் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன. 
#சமய #தீட்ஷை:  யாகத்தின் மேற்கு வாசலை நோக்கி சீடனை அழைத்து வந்து குருவானவர் சிவபெருமானை பிரார்த்தனை செய்து, பிரணவாசனத்தில் சீடனை நிற்கச் செய்து, சுத்தி செய்து, நிரீட்சணம், புரோட்சணம் முதலிய சம்ஸ்காரங்களால் அவனை தூய்மையாக்கி, அவனை சிவமாக்குவார். அதன் பின் அவனது கண்களை வெண்பட்டால் கட்டி, யாகத்துக்குள் அழைத்து வந்து கையில் பூவை கொடுத்து தீக்ஷா மண்டலத்தில் இடச் செய்வார். அவன் கண்களை மூடிக் கொண்டு பூ இட்ட லிங்கத்தின் பெயரே அவனது தீக்ஷா நாமமாகும். (ஈசான சிவ, தத்புருஷ சிவ, அகோர சிவ, வாமதேவ சிவ, சத்யோஜாத சிவ) இதன் பின் சில ரஹஸ்ய மந்திரபூர்வமான கிரியைகள் இடம்பெறும். இதன் பின், குருவானவர் சீடனுக்கு மந்த்ரோபதேசம் செய்வார். அதன் பின், பூர்ணாகுதி வழங்கப்பெறும். சீடன் குருவையும், மண்டலேஸ்வரரான சிவனையும், அக்னியையும் வழிபாடாற்றுவான். ஆசீர்வாதத்துடன் இத் தீக்ஷை நிறைவு பெறும். இது சமய தீக்ஷையாகும். 
#விசேச #தீட்க்ஷை:  சமயதீக்ஷை பெற்று, சமய ஒழுக்கங்களுடன் வாழும் சீடனுக்கு வழங்கப்பெறுவதே விசேடதீக்ஷை. முன்போலவே, செய்யப்படும் யாகபூஜை, ஸ்தாலீபாகம் என்பவற்றுடன், மந்திரபூர்வமான கிரியைகள் இடம்பெற்று, தீக்ஷா விதிகளில் சொல்லப்பட்டவாறான ஹோமங்கள் இடம்பெறும். குரு தன்னை சீடனுடன் ஐக்கியப்படுத்தி, ஹோமவழிபாடுகள் செய்வார். சீடனால் வழிபாடு செய்யப்பட்டதும் ஆசீர்வாதம் செய்யப்படும். இதன் போது குல மரபுக்கு ஏற்ப யக்ஞோபவீதம்(பூணூல்) வழங்குவதும் சம்பிரதாயம். இதன் பின், சீடன் ஆத்மார்த்த சிவபூஜை செய்ய தகுதியானவன் ஆகிறான்.
 #சாம்பவி #தீட்சை:  சில மந்திரங்களை உச்சரிக்க வேண்டுமானால் "நீங்கள் சிவதீட்சை பெற்றுவிட்டீர்களா' என கேட்பது வழக்கம். தீட்சை பெற வேண்டுமானால், சில விதிமுறைகள் உண்டு. அந்த முறைகளைப் பின்பற்றி பன்னிரு திருமுறைகளிலும் (தேவாரம், பெரியபுராணம் உள்ளிட்ட நூல்கள்) தெளிந்த நல்லறிவு பெற்றவர்கள் தீட்சை பெறுவர். ஆனால், எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு இறைவன் தானாகவே முன்வந்து தீட்சை அளிக்கிறான். அதற்காக, அவன் வாகனமேறி பவனி வருகிறான். தன்னைக் காண வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவன் தீட்சை தருகிறான். இதற்கு "சாம்பவி தீட்சை' என்று பெயர். "சாம்பவி தீட்சை ' என்றால் இறைவன் தன் ஞானக்கண்ணால் மனிதனையும் பிற உயிர்களையும் சுத்தப்படுத்துவதாகும். இது உடல் சுத்தமல்ல. உள்ளச்சுத்தம். ஒவ்வொருவர் உள்ளமும் சுத்தமானால் உலகமே சுத்தமாகிறது. அப்படியானால், நம் உள்ளத்தில் ஏதோ அழுக்கு படிந்திருந்திரு க்கிறது என்று அர்த்தமாகிறது. நம் உள்ளத்தில் காமம் (விருப்பம்), குரோதம் (பழிவாங்கும் உணர்வு), உலோபம் (கஞ்சத்தனம் அல்லது சுயநலம்), மோகம் ( மண், பெண், பொன் உள்ளிட்ட பேராசை), மதம் (ஆணவம்), மாச்சரியம் (பொறாமை) என ஆறுவகையான அழுக்குகள் படிந்துள்ளன. ஆறாம் திருநாளன்று ரிஷபத்தில் பவனி வரும் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் இந்த ஆறுவகை குணங்களையும் நம் உள்ளத்தில் இருந்து விரட்டி நம்மை நல்வழிப்படுத்து வார்கள். இந்த கொடிய அழுக்குகள் நம் உள்ளத்தில் இருந்து நிரந்தரமாக விலக அவர்களை இன்று வேண்டுவோம 
#சிவ #தீட்சை ----------- அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளைப் பற்றி காண்போம். தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான். இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். "தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான் ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக் காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும் கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும் மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே." "ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர். "ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர். "சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம் பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும் பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும் துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே." "குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார். "ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர். "பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு பண்பாக யங் வங் றீங் றுந்தான் துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும் அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம் குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும் குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே." "யங் வங் றீங்" என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார். "சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். "தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும் சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம் மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார் வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள் நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம் ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே." "இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர். "மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.

Thank: whattapp message ...

Tuesday, March 22, 2016

இரட்டைப் பிள்ளையார் [ Dual_Ganesa ] எஸ்.ஜெயபாரதி

இரட்டைப் பிள்ளையார்
சாக்தஸ்ரீ  டாக்டர் எஸ்.ஜெயபாரதி 


விக்னகரன்
          மீனாட்சியம்மனின் சன்னிதானத்தில் அர்த்தமண்டபம்/கருவறைக்கும் முன்னால், வாயிலுக்குத் தெற்குப்புறமாக ஒரு சிறியமேடை. அங்கு இரண்டு பிள்ளையார்கள் இருப்பார்கள். இருவரையும் சேர்த்து 'இரட்டைப்பிள்ளையார்' என்று அழைப்பார்கள். இங்கு பூஜையாகித்தான் கருவறைக்குள் செல்வார்கள்.

          பிள்ளையாருக்கு இரண்டுதன்மைகள் உண்டு. ஆகமங்களில் அது சொல்லப்பட்டிருக்கும். விநாயகர் வழிபாட்டு நூல்களில் 'காரியசித்தி மாலை' என்று ஒன்று உண்டு. இதனைச் சங்கடஹர சதுர்த்தியன்று படிப்பார்கள். மற்றபடிக்கு,  காரியசித்திக்காகவும் படிப்பார்கள். 

          இதற்குத் துணைநூல் ஒன்று உண்டு. காரியசித்தி மாலையைப் படித்து, அதனால் காரியவெற்றி பெற்றவர்கள், இந்த துணைநூலைப் படித்து விநாயகருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதற்காக
இந்த நூல்.

          காரியசித்தி மாலை 'அட்டகம்' என்னும் பிரபந்தவகையைச் சேர்ந்தது. இந்த நூல் 'பஞ்சகம்' அல்லது 'பஞ்சரத்தினம்'  என்ற வகையைச் சேர்ந்தது
          அந்நூலின் கடைசிப் பாடலில்,

      வேண்டிய அடியார்க்கெல்லாம்
            விக்கினம் கெடுப்பாய் போற்றி
      வேண்டி வந்தனை செய்யார்க்கு
            விக்கினம் கொடுப்பாய் போற்றி
      வேண்டுவார் வேண்டிற்றெல்லாம் 
            விளைத்தருள் விமல போற்றி
      மாண்ட துட்டர்க¨ளைக்கொல்லும்
            மறமிகு மள்ள போற்றி.

          இந்தப்படலின் முதலிரு அடிகளைக் கவனியுங்கள். முதல் அடியில் 'விக்கினம் கெடுப்பாய்' என்றும் அடுத்த அடியில் 'விக்கினம் கொடுப்பாய்' என்றும் வருகிறதல்லவா?
          அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.
          இரண்டையுமே செய்பவராகத்தான் பழஞ்சைவர்கள் விநாயகரை வணங்கியிருக்கிறார்கள்.
          இப்போது, ஒரு காரியத்தைத் தொடங்குமுன்னர், அக்காரியத்தைத் ொடங்குவதற்குத்  தடங்கல் இல்லாமலும், தொடங்கிய காரியம் தொடர்ந்து நடக்கவும், அக்காரியத்தில் விரவியிருக்கும் இயற்கையான தடைகள் ஏற்பட்டுவிடாமலிருப்பதற்கும், அக்காரியம் வெற்றி பெறுவதற்காகவும் விநாயகரைவணங்குகிறோம்.

          இதில் மூன்று வெவ்வேறு குறிக்கோள்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றில் பாசிட்டிவ் நெகட்டிவ் ஆகிய இரண்டுமே அடங்கியுள்ளன. 
         காரியத்தடையை நீக்குவதும் காரியசித்தி கொடுப்பதும் பாசிட்டிவான தன்மைகள்.
          வணங்கப்படவில்லையென்றால் காரியத்தடையையோ தோல்வியையோ ஏற்படுத்துவது நெகட்டிவான அம்சம்.
          இரண்டையுமே விநாயகர்தான் செய்கிறார்.
          இடையூறுகள் தடங்கல்கள், தடைகள் போன்றவற்றை விக்கினம் என்று சொல்கிறோம் அல்லவா? 
          விக்கினத்தை அகற்றுபவன் அல்லது அழிப்பவன் 'விக்கினஹரன்'. 
          விக்கினங்களைச் செய்பவன் அல்லது ஏற்படுத்துபவன், 'விக்கின கரன்' அல்லது 'விக்கின கிருது'.
          விநாயகர் கவசத்தில் பார்க்கிறோமல்லவா -- அந்த ஏழாவது பாடலில்....

          ஏகதந்தர் பகல்முழுதும் காக்க; இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
          ஓகையின் *விக்கினகிருது* காக்க; இராக்கதர்,பூதம், உறுவேதாளம்,
          மொகினி,பேய், இவையாதி உயிர்த்திறத்தால் வரும்துயரும், முடிவிலாத
         வேகமுறு பிணிபலவும் விலக்குபு பாசாங்குசர்தாம் விரைந்து காக்க.

          இதே பொருளில் உள்ளதுதான் 'விக்கினவர்த்தனன்' என்னும் பெயரும்.

          அக்கினியில் சித்தீசர் காக்க; உமாபுத்திரர் தென்னாசை காக்க;
          மிக்க நிருதியில் கணேசுரர் காக்க; *விக்கினவர்த்தனர்* மேற்கென்னும்
          திக்கதினில் காக்க; வாயுவில் கசகன்னன் காக்க; திகழ் உதீசி 
          தக்க நிதிபன் காக்க; வட கிழக்கில் ஈசநந்தனரே காக்க.

          இதற்கு விநாயக புராணத்தில் ஒரு கதை இருக்கிறது.

         'காலரூபி' என்னும் ஒரு கொடிய சிருஷ்டி ஏதோ ஒரு காரணத்தால் ஏற்பட்டுவிட்டது. அதை அசுரன் என்பதா, அல்லது அரக்கன் என்பதா? அதெல்லாம் அவன் இல்லை. அவன் அவனேதான். 

          இயற்கையின் அமைப்பில் என்னென்ன வகையான இடையூறுகள், தடங்கல்கள், தடைகள், இடைஞ்சல்கள், கெடுதல்கள், விக்கினங்கள் எல்லாம் இருக்கின்றவோ அத்தனை வடிவிலும் அந்த காலரூபி தோன்றி அவற்றைச் செய்தான். ஆகையினால் அவனுக்கு 'விக்கினன்' என்ற பெயரும் ஏற்பட்டது. 

          வசிஷ்டர் முதலிய ரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகப்பெருமான் அவனை அடக்குவதாக வாக்களித்தார்.

          முதலில் தன்னுடைய அங்குசத்தை ஏவி, காலரூபியைப் பிடித்துவரச் செய்தார். ஆனால் அவனோ யுகப்பிரளயமாக மாறிச் சுழன்று எல்லாவற்றையும் மூழ்கடித்தான். அதெல்லாம் விநாயகர் முன்னிலையில் எடுபடவில்லை. அதன்பின்னர் அவனால் முடிந்தமட்டும் விதம் விதமாகப் போரிட்டுப்பார்த்தான். 
    
          முடிவில் விநாயகர், ஒரு வேலாயுதத்தை அவன்மீது ஏவினார். அதனுடைய ஆற்றல்
தாங்காது காலரூபி, விநாயகரிடமே சரணடைந்தான்.



விக்னராஜன்

விக்னவிநாயகர்

          அப்போது அவன், "கருணாமுர்த்தியே! என்னுடைய அபசாரங்களையெல்லாம் மன்னித்து என்னையும் உங்களின் அடியானாக ஏற்றுக்கொள்ளுங்கள்," என்று கெஞ்சினான். 
          விநாயகர், "இனி நீ என் பக்தர்களுக்குத் துன்பம் கொடுக்கக்கூடாது. என்னை வணங்காதவர்களையும் நினைக்காதவர்களையும், எனக்கு அபசாரம் செய்பவர்களையும் நீ உன்னுடைய இயல்பின்படி பல விக்கினங்களின் வடிவெடுத்து நீ பீடித்துக்கொள்ளலாம். இதற்கு மாறாக நீ நடக்கக்கூடாது," என்று ஆணையிட்டார். 
          விக்கினன் இன்னுமொரு வரத்தையும் கேட்டுப் பெற்றுக ்கொண்டான்.                   "தங்களுடைய  திருப்பெயருடன் என்னுடைய பெயரையும் சேர்த்து வழங்கி யருள வேண்டும்".
          விநாயகர் அவ்வாறே தனக்கு 'விக்கினராஜன்' என்றும் 'விக்கினேஸ்வரன்' என்றும் பெயரைச் சூட்டிக ்கொண்டார். விக்கினஹரன், விக்கினநாசனன், விக்கினகரன், விக்கினகிருது, விக்கினவர்த்தனன் என்பவை யெல்லாம் காரணப்பெயர்களாக ஏற்பட்டன.

          இன்னும் கொஞ்சம் விசித்திரமான தகவல்கள் உள்ளன..... 

    இரட்டைப்பிள்ளையார்

          விநாயகரின் இரண்டுதன்மைகளையும் பிரதிபலிக்கும்வகையில் மூர்த்தங்களை நிறுவி அந்தப்பண்டைய சைவர்கள் வணங்கினார்கள். இந்த வழக்கம், காணாபத்தியம்(கணபதி வழிபாடு) என்பது தனியரு சமயமாகத் திகழ்ந்த காலத்திலிருந்து வந்திருக்கலாம். 
         மேலும் பழஞ்சைவத்தில் ஆகமத்தாந்திரீகக்கூறுகள் மிக அதிகமாக இருந்தன. அவற்றிற்கும் முற்பட்ட சில கூறுகளும் இருந்தன. அவற்றில் பெரும்பகுதி இப்போது கிடையாது. 
          காணாபத்தியம் சைவத்தில் கலந்தபோது அந்தக்கூறுகளில் சில சைவத்துள்ளும் வந்துசேர்ந்தன. 
          விநாயகரை விக்கினகரனாகவும் விக்கினஹரனாகவும் வழிபடும் வழக்கம் பழமையானதுதான். இருவகைப்பிள்ளையார்களையும் தனித்தனியாக வணக்குவதோடு சிற்சில இடங்களில் சேர்த்தும் வணங்கியுள்ளனர்.
          அப்படிபட்ட சிற்சில இடங்களில் ஒன்றுதான் மீனாட்சியம்மன் சன்னிதியின் வாயிலின் தென்புற மேடை.
         அந்த இரட்டைப் பிள்ளையார்களில் ஒன்று விக்கினஹரன்; இன்னொன்று விக்கினகரன்.
          சிவாலயங்களில் விநாயகர் சன்னிதி தென்மேற்கு மூலையில் நிறுவப்படும்.அங்கு கிழக்குப்பார்த்தாற்போல விநாயகர் அமர்ந்திருப்பார். அவர் விகேஸ்வரன், விக்னஹரன்.
          அதே தென்மேற்கு மூலையில் வடக்குப்பார்த்தாற்போல சில மூர்த்தங்கள் இருக்கும். அவை சப்தமாத்ரிகா என்னும் பிராஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி,  வாரஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர். அவர்களுடன் லட்சுமிக்கு மூத்தவளாகிய ஜ்யேஷ்டா தேவி தன்னுடைய புதல்வி, புதல்வனுடன் அமர்ந்திருப்பாள். அந்த இடத்திலும் ஒரு விநாயகர் மூர்த்தம் இருக்கும். அவர் விக்கினகரன். 
          இந்த அமைப்பை மிகவும் பழமையான சிவாலங்களில் மட்டுமே காணலாம்.மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் சன்னிதியைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் இருக்கின்றது. மிகச்சுத்தமாகப் பார்க்கவேண்டுமானால் சிவகங்கை மாவட்டத்து திருப்புத்தூரில் உள்ள திருத்தளீசுவரர் ஆலயத்துக்குச் செல்லவேண்டும். பிரான்மலை திருக்கொடுங்குன்றீசர் கோயிலிலும் உண்டு.
          நன்மை நடக்கவேண்டும் என்று நினக்கும் அதே வேளையில் கெடுதல் நடக்காமல் இருக்கவும் வேண்டினர். கெடுதலைத் தடுப்பதற்கும் தெய்வங்களை வழிபட்டனர். கெடுதலைக்கொடுக்காமல் இருப்பதற்காகவும் தெய்வங்களை வழிபட்டனர். 
          நாட்டுக்காவலர்கள் தம்மைக் காக்கவேண்டும் என்று எண்ணி 'பாடிகாவல்' என்னும் வரியை அந்த பாடிகாவலர்களுக்குச் செலுத்தியிருக்கிறார்கள். 'பாடிகாவல்' என்றதும் 'body-guard' என்னும் சொல்லுடன் முடிச்சுப்போட்டுவிடவேண்டாம். இந்த 'பாடி, குடியிருப்பைக் குறிக்கும். அதே சமயம், கொள்ளைக்காரர்கள், தக்கியர் போன்றவர்கள் தங்களுக்குக் கெடுதல்கள் ஏதும் விளைவிக்காமல் இருப்பதற்கென்று 'தெண்டு'  எனப்படும் கப்பத்தையும் கொடுத்திருக்கிறார்கள். 

          மலேசியாவில் இந்த வழக்கம் இப்போது அதிகம் இருகிறது.  குண்டர் ஜமா நம்மை ஒன்றும் செய்யாமலிருப்பதற்காக குண்டர் ஜமாவுக்கு 'protection money' என்னும் 'மாமூல்' கொடுக்கிறோம். அந்தந்த வட்டாரம் ஒவ்வொரு குறிப்பிட்ட ஜமாவின் வசம் இருக்கும். 

         


விக்னஹரன்

விக்னராஜன்

          திபெத்தில் ஒரு சிலாவடிவம் இருக்கிறது. விக்னராஜ விக்னேஸ்வரன் என்னும் மூர்த்தம் அது. மிகவும் விந்தையான விசித்திரமான ஆச்சரியமான வடிவம் அது. அதை ஸ்கான் செய்துபோட்டால் பொருத்தமாக இருக்கும். அதுபோலவே ஜ்யேஷ்டா தேவி முதலிய தெய்வங்களின் மூர்த்தங்களையும் போடலாம். நம்மில் அனேகர் அவற்றைப் பார்த்திருக்கமாட்டார்கள்.    

           மாங்கோலியா, திபெத், சைனா, ஜப்பான் கிய இடங்களிலும் விநாயகர் சிலைகள் இருக்கின்றன.
           இதில் ஒரு விந்தை என்னவென்றால், விநாயாகரின் மிக மிக அரிதான வடிவங்கள் அங்கு கிடைக்கின்றன.
           பெண் வடிவில் 'கணேசினி' என்ற வடிவு ஒன்று இருக்கும். அது சைனாவில் இருக்கிறது.
            மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சங்கத்தார் மண்டபம் என்றொரு இடம் இருக்கிறது. இது சுவாமி சன்னிதியைச் சுற்றியிருக்கும் இரண்டாவது பிரகாரத்தில் இருக்கிறது. முக்குறுணி பிள்ளையார் சன்னிதியிலிருந்து இடப்பக்கம் திரும்பி பிரகாரத்திலேயே நடந்து சென்றால் வடமேற்கு மூலையில் அந்த மண்டபம் இருக்கும். அதற்கு எதிர்ப்புறத்தில் சில விநோத சிற்பங்கள் இருக்கும் பெரும்தூண்களைக் கொண்ட மண்டபம் இருக்கும். அந்தத் தூண்களின் ஒன்றில் கணேசினியின் சிலையைக் காணலாம். 
            சில கணேசினியின் சிலைகள் புலிக்கால்களுடன் இருப்பதைக் காணலாம். அந்த மாதிரி கணேசினியை 'வியாக்ரபாத கணேசினி என்று குறிப்பிடுவார்கள்.
           '   இரட்டை விநாயகர்' என்ற இன்னொரு அமைப்பும்  ் ஜப்பானில் காணப்படும். இரண்டு விநாயகர்கள் ஒருவரை ஒருவர் கட்டி த் தழுவிக்கொண்டு நிற்பதைப ்போன்ற வடிவம் அது.  

 அன்புடன்

 ஜெயபாரதி


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Wednesday, March 16, 2016

நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை


Thank to Kiruba Haran [ FB friend] and one of my friend from madurai also send Pic few days before


Narai @ Madurai Meenakshi Temple

A Bird found in Madurai Meenakshi Temple : for the past 4 days it is been sitting and watching the Golden Lotus as if it is asking for Mukthi and this makes us remember about Thiru Sundharar gave Mukthi to a Bird

முன்பொரு காலத்தில் பாண்டியன் நாட்டின் தென் பகுதியில் இருந்த பெரிய குளத்தில் வாழ்ந்த மீன்களை உண்டு, நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகளில் வறட்சியின் காரணமாக குளம் வற்றி போக நாரை உணவு கிடைக்காமல் ஒரு வனத்தில் உள்ள குளத்திற்கு சென்றது. அங்கு முனிவர்கள் தவம் செய்து, குளத்தில் நீராடினார்கள்.
அவர்கள் மீது, மீன்கள் தவழ்ந்து சென்றதனால், அந்த மீன்களை உண்ணபது பாவம் என்று கருதி நாரை நின்றது. அந்த சமயத்தில் அங்குள்ள ஒரு முனிவர்களில் சத்தியன் என்ற முனிவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுந்தரேசுவரர் புகழ் பற்றி சக முனிவர்களிடம் பேசினார். இதை கேட்ட நாரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்திற்கு வந்தது.

அங்கிருந்த மீன்களையும் உண்ணாமல் சுந்தர விமானத்தை சுற்றி சுற்றி பரந்தது. இதேபோல் மீன்களை உண்ணாமல் 15 நாட்கள் அந்த குளத்திலேயே தங்கியது. அப்போது, சுந்தேசுவரர் நாரை முன் தோற்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். ஐயனே எங்கள் இனத்தவர்கள் மீன்களை உண்டு வாழும் சுவாபம் உள்ளவர்கள் இந்த புன்னிய குளத்தில் அதை செய்யாமல் இருக்க இங்கு மீன்களே இல்லாத நிலையும், எனக்கு சிவலோகம் தங்கும் பாக்கியத்தை தந்தருளம் படி வேண்டியது.
அவ்வாறே சுந்தரேசுவரரும் நாரைக்கு முக்தி அளித்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இதேபோன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்திற்கு வந்து ஒரு நாரை தங்கி உள்ளது. அதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு கழித்தனர். அந்த நாரையும், ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேசுவரர் நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை அலங்காரத்தில் நாரையும் இருப்பதை படத்தில் காணலாம். 

சித்தர்கள் திருநீறு [ விபூதி ] தயாரிக்கும் முறை

Thank to 
சித்தர்கள் ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை ..1

திரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் தெய்வ ஆகர்ஷண சக்திக்காக அருளிச் செய்த ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை.
அவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில்  விபூதிப்பிரயோகம்  என்று பயிற்சி வகுப்புகள் மூலம் தம்மை நாடி வந்த தென்னாட்டு ஆன்மீக அன்பர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளார்.அதன்மூலம் பயிற்சி பெற்றவர்கள் ஏராளம்.. 

 Click: Mystic Selvam Speech Vibhoothi Prayogam Mp3 run 1 hour speech, 

1. சுத்தமான பசுஞ் சாண விபூதி - 2 கிலோ 
2. படிகார பஸ்பம் - 10 கிராம் 
3. கல் நார் பஸ்பம் - 10 கிராம் - Rs.18/-
4. குங்கிலிய பஸ்பம் - 10 கிராம் - Rs. 26/-
5. நண்டுக்கல் பஸ்பம் - 10 கிராம் - Rs.35/-
6. ஆமை ஓடு பஸ்பம் - 10 கிராம் - Rs. 46/-
7. பவள பஸ்பம் - 10 கிராம் - Rs.95/-
8. சங்கு பஸ்பம் - 10 கிராம் - Rs. 28/-
9. சிலா சத்து பஸ்பம் - 10 கிராம் - Rs.16/-
10. சிருங்கி பஸ்பம் - 10 கிராம் - Rs.63/-
11. முத்துச் சிப்பி பஸ்பம் - 10 கிராம் - Rs 20/-
12. நத்தை ஓடு பஸ்பம் - 10 கிராம் - Rs.35/-
இவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும் . இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.
இது பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர். இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தி யாகும்.
இதனை தாம்பளத்தில் பரப்பி எந்த காரியம் சாதிக்க வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும். மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும். 
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதனை பயன்படுதத
வேண்டும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எல்லாம் சரி ... கோ சாலைகளில் பசுஞ்சாண விபூதி வாங்கி விடலாம் . அனால் இந்த பஸ்பம் எல்லாம் எங்கே தேடுவது என்ன விலை இருக்குமோ என நினைக்கலாம் !
அனால் இந்த பஸ்பம் எல்லாம் ஒரே இடத்தில மிக சுலபமாக கிடைக்கிறது . விலையும் குறைவு தான். எல்லா பஸ்பங்களும் சேர்த்து 400 ரூபாய் தான் வருகிறது.
இவை சென்னை அரும்பாக்கம் அரசாங்க சித்தா ஆஸ்பத்திரி அருகில் அண்ணா ஆர்ச் எதிரில் உள்ள சித்த மருந்து கடையில் கிடைக்கிறது.
சித்த பார்முலா படி இந்த பஸ்பங்களை தயாரிப்பவர்கள்:
Laurel Siddha Pharma , # 524, Sivaraman street, 
Madippakkam, Chennai - 600 091
Laurel Herbal products , # 3, Bajanai koil street, 
Velacheri, Chennai - 600 042 
Phone 044 - 22450046
அல்லது உங்கள் ஊரில் உள்ள சித்த மருந்து விற்பனையாளர்களிடம் கேளுங்கள் 
..
நன்றி மிஸ்டிக் மிஷன்



சித்தர்கள் திருநீறு தயாரிக்கும் முறை ..2
திருநீறு என்பது ஆன்மிக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; இது மிகச்சிறந்த மருந்து. நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்கள் அவர்கள் முறையில் உருவாக்குகிறார்கள் இந்த திருநீறை.
மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.
திருநீறு தயாரிக்கும் முறை
1. பசுமாட்டுச் சாணம்
2. திருநீற்றுப் பச்சிலைகள். (திணுத்திப் பச்சை இலை) 
3. வில்வப்பழ ஓடுகள்
மேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும்.
நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.
இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும்.
எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும்.
நமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும்.
இந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள்.
பூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் “தந்திரமாவது நீறு’ என்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.
மூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்ப தாலும், திருநீற்றுப் பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை...
புத்தியால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்
மூலமதையறிந்தக்கால் யோகமாச்சு
என்று குரு அகத்தியர் கூறுகிறார்.
இந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்தி வந்த மூலிகை மருத்துவப் பொருளாகும் . எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி சித்தர்தாசன் சுந்தர்ஜி

Tuesday, March 15, 2016

வினாயகர் அகவல்



சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இப்பூவுலகிற்கு வந்த நோக்கம் முடிந்து கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானையில் ஏறி கயிலாயம்  செல்லலானார். இதனையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் என்ற சுந்தரரின் உற்ற தோழர் தானும் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பி தனது குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி சுந்தரரை பின்பற்றி அவருடன் கயிலாயம் செல்லலானார்.
           இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கயிலாயம் செல்ல விரும்பினார். இதற்காக தான் செய்து கொண்டிருந்த வினாயகர் பூசையை அவசர அவசரமாக செய்யலானார். அப்பொழுது வினாயகர் பெருமான் நேரில் தோன்றி அவ்வையே ! நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூசைகளைச் செய். அவர்களிற்கு முன்னே உன்னை நான் கயிலாயத்திற்கு கொண்டு சென்று சேர்க்கிறன் ” என்று கூறினார். அவ்வையாரும் நிதானமாக பூசைகளைச் செய்து வினாயகர் அகவலையும் பாடினார். வினாயகரும் தான் கூறியபடி அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரரிற்கும்,சேரமானிற்கும் முன்பாக கயிலாயத்தில் சேர்ப்பித்தார்.
           

      வினாயகர் அகவல் வினாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன், யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது. அகவுதல் என்றால் மனம் ஒடுங்கிய நிலையில் ஓதுதல் ஆகும். வினாயகர் அகவலின் மொழி எளிமையும்இசைப் பண்பும், மந்திர ஆற்றலும் மிகவும் சிறப்பானதாகும். மொழி எளிமைக்கு எடுத்துக்காட்டாக அகவலின் முதல்வர் வினாயகரை மனம் ஒன்றி இந்த அகவலை ஓதினால் அவரின் தோற்றத்தை நம் கண் முன்னே கொண்டு வரக் கூடிய அளவிற்கு தற்காலத்தில் வழக்கத்தில் உள்ள சொற்கள் கையாளப்பட்டிருக்கிறது. தனக்கு தெரிந்த மொழியில் ஓதுகின்ற பக்தனின் உள்ளத்துடன் ஒன்றி சொற்கள் சொல்லப் பட வாய்ப்புகள் அதிகம். இதனால் மன ஒருமுகப்பாடு சுலபமாக கிடைக்கிறது. இதனையே மாணிக்கவாசகர் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
                       

            இப்பாடலின் இசைப்பண்பானது அகவலை இசையுடன் ஓதும் போது உள்ளத்தின் உணர்ச்சி அலைகளை தட்டி அலை அலையாக எழுந்து பெருகச் செய்கிறது. இந்த அலைகள் நம்மைச் சுற்றியுள்ள வான் மண்டலத்திலுள்ள அதே அதிர்வினையுடைய அலைகளை அசைக்கத் தொடங்குகிறது. இதனால் அகமும் புறமும் இசைந்து ஒலிக்கத் தொடங்குகிறது. இப்படி அகமும் புறமும் இசைந்து ஒலிப்பதே சித்தர்கள் காட்டிய ஞான வழியாகும். ஒரே அதிர்வெண்ணைக் கொண்ட இரண்டு பொருட்களில் ஒன்று அதிரும் போது மற்றது தானகவே அதிரும் என தற்கால விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது.

வினாயகர் அகவல் :-
      

      சீதக்களபச் செந்தாமரைப் பூம்
      பாதச் சிலம்பு பலஇசை பாட
      பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
      வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
      பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
      வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
      அஞ்சு கரமும் அங்குச பாசமும்
      நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்
      நான்ற வாயும் நாலிறு புயமும்
      மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
      இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
      திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
           

    குளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின்நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமானஇசை ஒலிகளை எழுப்பஇடுப்பினிலே பொன்னாலான அரைஞாண்கயிறும்அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும்அழகேற்றபெரிய பேழை போன்ற வயிறும்பெரிய உறுதியானதந்தமும்யானை முகமும்நெற்றியில் ஒளிவீசும் குங்குமப்பொட்டும்ஐந்து கைகளும்அவற்றில் இரண்டில் அங்குசம்பாசம் ஆகிய ஆயுதங்களும்மிகப் பெரிய வாயும்நான்கு பருத்தபுயங்களும்,  மூன்று கண்களும்மூன்று மதங்களின் கசிவினால்உண்டாண சுவடு   போன்ற அடையாளங்களும்இரண்டு காதுகளும்ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும்மூன்று நூல்கள் சேர்த்து திரித்துசெய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய ஒளிவீசுகின்றமார்பும்

      சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான
      அற்புதம் நின்ற கற்பகக் களிறே
      முப்பழம் நுகரும் மூசிக வாகன
      இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்
      தாயாய் எனக்குத் தானெழுந்தருளி
      மாயப்பிறவி மயக்கம் அறுத்தே
      திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
      பொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து
      குருவடிவாகிக் குவலயந்தன்னில்
      திருவடி வைத்து திறமிது பொருளென
      வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி
      கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே
              
சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும்நிலையில் உண்மையான ஞானமானவனேமா,பலா,வாழை ஆகியமூன்று பழங்களையும் விரும்பி உண்பவரேமூஞ்சூறினைவாகனமாக கொண்டவரேஇந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ளவேண்டிதாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே,மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்துஎறிபவரேதிருத்தமானதும் முதன்மையானதும் ஐந்துஎழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சரமந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடையஉள்ளத்தில் புகுந்துகுரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சைமுறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையானநிலையான பொருள் எது என்று உணர்த்திதுன்பமில்லாமல்என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்குஅருள் செய்துகோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளைஅகற்றி

      உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
      தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
      ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
      இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்
      கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து
      இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
      தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி
      மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே
      ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
      ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
      ஆறு ஆதாரத்து அங்குச நிலையும்
      பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே
           

வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனதுகாதுகளில் உபதேசித்துஎவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாதஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டிதங்கள் இனியகருணையினால் மெய்வாய்கண்மூக்கு செவி ஆகிய ஐந்துபொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினைஇனிதாக எனக்கு அருளிமேலே சொன்ன ஐந்து பொறிகளும்ஒடுங்கும் கருத்தினை அறிவித்துநல்வினை தீவினை என்றஇரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளைநீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்குதலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்றமூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து,உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும்ஐந்து புலன்களையும்ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2)சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞைஎன்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாகபேச்சில்லா மோன நிலையை அளித்து,

       இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
      கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி
      மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
      நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
      குண்டலணி அதனிற் கூடிய அசபை
      விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
      மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
      காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
      அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
      குமுத சகாயன் குணத்தையும் கூறி
      இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
      உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி 
           

இடகலைபிங்கலை எனப்படும் இடதுவலது பக்கநாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியானசுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக்காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்றுமண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழுபாம்பான குண்டலனி சக்தியை எழுப்பிஅதனில் ஒலிக்கும் பேசாமந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி,மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால்எழுப்பும் முறையை தெரிவித்துகுண்டலினி சக்தி உச்சியிலுள்ளசகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின்நிலையையும் சூரிய நாடிசந்திர நாடி ஆகியவற்றின்இயக்கத்தையும்குணத்தையும் கூறிஇடையிலிருக்கும் சக்கரமானவிசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும்உடலில்உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி,

      சண்முக தூலமும் சதுர்முக சூக்குமமும்
      எண்முகமாக இனிதெனக்கு அருளி
      புரியட்ட காயம் புலப்பட எனக்கு
      தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
      கருத்தினில் கபால வாயில் காட்டி
      இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
      என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
      முன்னை வினையின் முதலைக் களைந்து
      வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
      தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
      இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன
      அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி யென் செவியில்              
                       

உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்குஎளிதில் புரியும்படி அருளிமூலாதாரம் முதல் சகஸ்ரதளம்வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன்மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபாலவாயிலை எனக்கு காட்டித் தந்துசித்தி முத்திகளை இனிதாகஎனக்க அருளிநான் யார் என்பதை எனக்கு அறிவித்துபூர்வஜென்ம கன்ம வினையை அகற்றிசொல்லும் மனமும் இல்லாதபக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களைதெளிவாக்கிஇருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றேஅடிப்படையானது என்பதை உணர்த்திஅருள் நிறைந்தஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி

      எல்லையில்லா ஆனந்தம் அளித்து
      அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி
      சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
      சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
      அணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய்
      கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
      வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
      கூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி
      அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
      நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
      தத்துவ நிலையை தந்து எனை ஆண்ட
      வித்தக வினாயக விரை கழல் சரணே!
                       

அளவில்லாத ஆனந்தத்தை தந்துதுன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி அருள்வழி எது எனக்காட்டிசத்-சித் அதாவது உள்ளும்புறமும் சிவனைக் காட்டி,சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம்பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என்உள்ளேயே காட்டிசிவவேடமும் திருநீறும் விளங்கும்நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன்என்னையும் சேர்த்துஅஞ்சக் கரத்தினுடைய உண்மையானபொருளை எனது நெஞ்சிலே அறிவித்துஉண்மை நிலையைஎனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப்பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.


       
எல்லாம் வல்ல வினாயகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் சகல வளமும் சகல நலமும் பெறுவோமாக!