Monday, June 27, 2016

ஸ்ரீ ரோமரிஷி ஜோதிவிழா -ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரம் (01-07-2016) 9-30 AM TO 6PM வரை


                                     ஸ்ரீபிருகு அருள் நிலையம் -மருதேரி

Sri birugu arul nilayam –maruderi village ,last stop and opposite of bus stand,changalpattu taluk ,kanipuram distrik-bus number no 60m;every 45 mins to maruderi from siga perumaal koil.(2kms from dargason singaperumaal koil to Hanumanthapuram road) போன்8754416605,8754416601,9976048004,9841872362, 9840714



ஸ்ரீரோமரிஷி ஜோதி பூசை ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரம் 



                     
 அனைத்து சித்த அடியார்களுக்கும் வணக்கம் . ஸ்ரீ பிருகு அருள் நிலையம் -மருதேரியில்  நிகழும்  துர்முகி வருஷம் ஆனி மாதம் 17-ம் திகதி (01-07-2016) 9-30 AM TO 6PM வரை  அகண்டஜோதியில் ஸ்ரீ ரோமரிஷி எழுந்தருளி அருளாசி தர  சித்தம் கொண்டுள்ளதை நந்திபெருமான் வாக்கருளி யதை முன்னிட்டு  ரோமரிஷி பூஜையும்  ஜோதிதரிசனமும்  தியானமும் அத்துடன் அடியார்களுக்கு ஸ்ரீஅகத்தியபெருமான்அருளியமுறைகள்தயாரிக்கப்பட்ட திரிகடுகம் மருந்தும்அன்னம்பாலிப்பும்  நடைபெரும் என்பதை  மகிழ்வோடு பகிர்ந்து  கொள்கிறோம் அனைத்து சித்த அடியார்களும் கலந்துகொண்டு  ஸ்ரீசித்தர்களின்ஆசிஅடையவேண்டுகிறோம் -------இன்பமேசூழ்க
ஓம் அகத்திசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக --ஓம் நந்தி தேவாய நமக -

                   கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி

                          குருவின்ஆசியால்வரவேற்கும்  
                ஸ்ரீ பிருகு அருள் நிலைய சன்மார்க்க அன்பர்கள்



ஓம் பிருகு தேவாய நமக உலக நலம் வேண்டி விண்ணப்பம் 
பதிவு :பிருகு மகரிஷி அருள் நிலையம் , மருதேரி | விண்ணப்பம்


1) ஈசன் கிருபையால் எல்லையில்லா அருள் இப்புவியெங்கும் நிறையட்டும்

எம்மான் விஷ்ணுவின் ஆற்றல் இவ்வுலோகரை நித்தியமாய் காக்கட்டும்

வேதகுரு பிரம்மர் அருளால் நல்லவைகளே இவ்வுலகில் தோன்றட்டும்
வேலவன் ஆற்றல் அரகர அரகர என்று தீமைகளை அடியோடு போக்கட்டும்
2) பஞ்சபூதங்களும் கோள்களும் அடியார்களுக்கு நல்லதே நல்கட்டும்
சப்தரிஷிகளின் பூரண ஆசி இந்த அண்டம் முழுதும் பரவட்டும்
என்குருநாதன் சோம-ஒளி திடமான மனதை உலகோருக்கு அருளட்டும்
ஆதித்திய பேரொளி அடியார்களின் ஆத்ம பலமாய் நிற்கட்டும் 
3) அன்பே இத்தரணியில் குருவே நின்னாசியால் உயரவேண்டும்
ஆசானே அகிலமெல்லாம் சித்தர்நெறி இனிதே பரவவேண்டும்
ஒற்றுமையுடன் தர்மத்தின் வழி எல்லோரும் உய்யவேண்டும்
உள்ளத்தில் உன்னத சிந்தைகொண்டு உலகோர் வாழவேண்டும் 
4) பதினென்மெர் ஆசி பரணியில் உள்ளோருக்கு பாங்காய் பரிமளிகட்டும்
மாறா நோய் பிணி பீடை மனோ அழுத்தங்களும் அடியோடு விலகட்டும் 
பிரம்மன் ஊழ்வினை எழுத்தும், உள்ளம் உருகி வேண்டிட இக்கணமே மாறட்டும் 
கடும் இன்னல்கள் சித்தர்கலாசியால் முழுமையாய் மருதேரியில் தீரட்டும் 
5) செல்வமும் ஞானமும் மடை திறந்த வெள்ளம் போல பெருகட்டும் 
கங்கை யமுனை சிந்து காவிரி கோதாவரி புனிய தீர்த்த ஆசி நிரம்பட்டும் 
கற்பக விருக்க்ஷமாகி அழியா அமுதினை அடியார்கள் வேண்ட சுரக்கட்டும் 
அகண்ட சோதியாய் நின்று அகிலமுழுதும் ஞானிகள் ஆசி சிறக்கட்டும் 
6) தடைகள் தகர்த்தி புவனத்தில் மானிடரை நந்திதேவர் காக்கட்டும்
அறிய ஆற்றல்களை அன்னை காமதேனு அன்புடன் சுரக்கட்டும் 
நதிகள் சங்கமான மருதேரி புனித தீர்த்தம் பல்லோர் நோயும் போக்கட்டும்
அன்னமும் அகசுத்தியும் அகிலத்தார் உனதுஅருள் கொண்டு பெறட்டும்
7) எம்மான் குருநாதா - வாலைத்தாய் ஆசி தனை நாங்கள் பெறவேண்டும்
அப்பனே குருநாதா - சர்வதெய்வ ஆசி தனை அனைவரும் பெறவேண்டும்
வேதகுருவே - சர்வஆச்சார்யர் ஆசி அகில மாந்தர் பெறவேண்டும்
கலியுக குருநாதா - உந்தன் பூரணஆசி அண்டத்தில் அனைவரும் பெறவேண்டும்
8) குருநாதனே உயர் மெய்ஞானம் உலகோர் உள்ளத்தில் வளரட்டும்
கமலமாய் அறிவும் தெளிவும் பெற்று அகத்தே பதில்கள் விளங்கட்டும்
குருநாதனே சோதியாய் இருளும் மருளும் நீக்கி வழிநடத்தவேண்டும்
இப்பிறவிகடல் தாண்ட மனம் சன்மார்கதில் லயிக்க வேண்டும் 
9) அன்பும் அறிவும் அருளும் தருகின்ற என் அப்பனும் ஆகி
தந்தையாகி வேண்டுவோர் மனதில் ஞான சிந்தையாகி
அத்தனாகி பித்தினை போக்கும் மருதேரி சித்தனும் ஆகி
விண்ணோரும் மண்ணோரும் ஏற்றும் பெரும் தவயோகி
உயர் திருடிகள் போற்றி போற்றி | கலியுக வரதன் மலரடிகள் போற்றி போற்றி

                                







ரோமரிஷி பற்றி நந்திதேவர் 







மாட்சிமையாய் அமைந்த தளம் வடிவுடையாதாய்
மதிப்பான ஞானகோட்டம் என்றும்

The place of pride with its beautiful shape (Vadivudai)- Thiruvotriyur
The Gnanacentre with Poise


என்றுமே சீவகலை அளிக்க வல்ல
இருடியரும் அத்தலத்தில் அரூப லிங்கம்
உன்னத சித்தனுமே உறைவிடம் தான்
உரைந்ததொரு ரோமரிஷி காலம் தன்னில்

With the ability to provide the secret of Seevan
The great siddhas(Irudi) are in Arroopam form (Formless)
is he place where this great Siddha dwells
The great Roma rishi during his period


தன்னிலே ரோமமகன் ஆரிய தேசத்தான்
தவம்கொண்டு ககன வழி லங்காபுரி
மேன்மையுள்ள கயிலை பருவதமும்
மேனி யதை மாற்றியோர் ஆத்மமாக

Is the one was a foreigner to this country
with his power of penance travelled above Srilanka (through air)
to see the great Kailash and Himalayas 
Who turned his body and rests as Aathmam





ஆகவே நின்றதொரு கருவின் மூலம்
***************************************
ஜெகதொர்கள் அறியாது காத்து வந்தார்
சீர்பெற்ற கணிதமும் வான நியதியும்



Is the one who's Karu stood here

*************************
**************************
Is an expert on Maths and Astronomy





நியதியும் நுணுக்கமுடன் ஈந்தார் அப்போ
நிருவிகல்பம் பெற்ற தலம் ஒருயோசனை தூரம்
ஐயமில்லா சித்தர்பலர் நாடி வந்து
அடங்குமொரு எல்லையது சித்தன் காப்பு





Created even minute details and presented it to the world
From the place he took Nirvikalpam for a distance of an Yochana
attracts other siddhas to come to this place
and stake Samadhi which has its borders controlled by the great Siddha








ரோமரிஷி உறை  திருவொற்றியூர் அருகில் உள்ள  சீவ சித்தர் உறைவிடங்கள்




  1. பட்டினத்தார் 
  2. மயிலண்டவர் - அகத்தியர் சீடன் 
  3. பைரவ சித்தர் - பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் 
  4. அப்புடு சுவாமிகள் 
  5. சங்கரர் வம்சம் - கோவில் மாட வீதி 
  6. வீர ராகவர் 
  7. வாலை மஸ்தான் 
  8. பரஞ்சோதி மகான் (வண்ணாரப் பேட்டை)
  9. குணங்குடி மஸ்தான் சாகிப் ( தொண்டையார் பேட்டை)

Sunday, June 26, 2016

திருமுருகன் திருப்படி திருவிழா

திருமுருகன் திருப்படி திருவிழா

Thank : Jaybee ayya (late )
https://jaybeestrishul11.blogspot.com/2011/12/tiruppadi-tiruvilza.html

ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா தேவியர் சமேத  திருத்தணி ஸ்ரீமுருகன் -

 சில ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் டிஸெம்பர் மாதம் 31-ஆம் தேதியன்று மாலையில் சுங்கைப் பட்டாணியிலுள்ள ஸ்ரீசுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் திருப்புகழ் திருப்படி திருவிழா கொண்டாடுவோம்.
 இது முதன்முதலில் 1917-ஆம் ஆண்டில் வள்ளிமலை சுவாமிகள் என்னும் திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் திருத்தணியில் தோற்றுவித்த விழா.
 அக்காலத்தில் ஆங்காங்கு இருந்த வெள்ளைக்கார துரைத்தனத்தாரை டிஸெம்பர் மாதம் 31-ஆம் தேதி சென்று கண்டு மரியாதையும் விசுவாசமும் தெரிவித்துவருவது வழக்கம்.
 அன்னியர்களைப் போய் இவ்விதம் பார்ப்பதை வள்ளிமலை சுவாமிகள் விரும்பவில்லை.
 ஆகவே டிஸெம்பர் மாதம் 31-ஆம் தேதி மாலையில் திருத்தணி மலையில் ஏறிச்சென்று அங்கு இருக்கும் திருமுருகனை  நள்ளிரவில் விசேஷ ஆராதனைகளுடன் தரிசித்துவிட்டு வரும் வழக்கத்தை ஏற்படுத்தினார். திருத்தணி மலையின் மீது ஏறும்போது அங்குள்ள ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு திருப்புகழ்ப் பாடலாகப் பாடி ஒவ்வொரு படிக்கும் தீபாராதனை காட்டியவாறு மெதுவாக ஏறிச்செல்வார்கள்.

 அதனால்தான் இந்த விழாவுக்கு திருத்தணி திருப்புகழ் திருப்படித் திருவிழா என்று பெயர்.
 சுங்கைப் பட்டாணியிலுள்ள கோயிலில் பதினோரு படிகள் உண்டு. படிக்கொரு திருப்புகழாக பதினோரு பேர் பாடி, தேங்காய் உடைத்து, தீபாராதனை காட்டி வழிபடுவது வழக்கம். அதன் பின்னர் அன்னதானம் நடைபெறும்.
 அடுத்த நாள் ஜனவரி 1-ஆம் தேதி சுங்கைப் பட்டாணி சித்தி விநாயகர் கோயிலில் விக்னநாசன விக்னேஸ்வரப் பூஜையை நிகழ்த்துவோம். அன்று மாலையும் அன்னதானம் இருக்கும்.
 இதைச் சில ஆண்டுகள் நடத்திவந்தோம்.


திருத்தணித் திருப்புகழ்.


நினைத்த தெத்தனையிற் தவறாமல்
நிலைத்த புத்திதனைப் பிரியாமற்
கனத்த தத்துவமுற் றழியாமல்
கதித்த நித்திய சித் தருள்வாயே


மனித்தர் பத்தர்தமக் கெளியோனே
மதித்த முத்தமிழிற் பெரியோனே
செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத்தணிப் பதியிற் பெருமாளே


நினைத்தது எத்தனையில் தவறாமல்
நிலைத்த புத்திதனைப் பிரியாமல்
கனத்த தத்துவம் முற்று அழியாமல்
கதித்த நித்திய சித்து அருள்வாயே


மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே
மதித்த முத்தமிழில் பெரியோனே
செனித்த புத்திரரில் சிறியோனே
திருத்தணிப் பதியில் பெருமாளே


 அந்தப் பாடலில் 'மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே' என்று குறிப்பிட்டிருப்பதுபோல் பாடலும் மிக எளிமையான எளிதான பாடல். காரியசித்திக்காக முருகனை வேண்டி பக்தர்கள் நம்பிக்கையோடு பாடும் பாடல் இது.

Friday, June 24, 2016

பள்ளத்தும்பூர் கிராம உமா மகேஸ்வர ஸ்வாமி கும்பாபிஷேகம் 26-6-2016


சென்னை திருநின்றவூரில் இருந்து பெரியபாளையம் செல்லும் வழியில் 4.5 கிலோமீட்டர் பயண தூரத்தில் உள்ள பாக்கம் என்ற ஊரில் இறங்கி...

அங்கிருந்து 2.5கிலோமீட்டர் கிழக்கில் பயணித்தால் பள்ளத்தும்பூர் கிராமத்தை அடையலாம்....அங்கு உள்ள கிருஷ்ணா நதி வாய்க்காலின்...

தென் கறையில் அமைந்த தலம் அருள்மிகு உமா மகேஸ்வர ஸ்வாமி...மற்றும் ஸ்ரீ புஷ்கலா. பூர்ணா சமேத ஞான சாஸ்தா திருக்கோவில் தொடர்புக்கு...

சிவ. இராச. அரவிந்தன்... 09444498301/09444359323......

80% திருப்பணிகள் முடிந்த நிலையில் பொருளற்று பணிகளை தொடர முடியாமல் நிற்கின்றோம்....

வரும் 26-6-2016 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது....

அன்பர்களின் அன்பு உதவிகளை நாடி நிற்க்கின்றோம்......












Tuesday, June 21, 2016

பிரச்னைகளுக்கும் நிவாரணி - திரு.மிஸ்டிக் செல்வம்

 ஓம் சிவசிவ ஓம் - திரு.மிஸ்டிக் செல்வம் 
re blog : om-siva-siva-om.html ]


ஓம் சிவசிவ ஒம்

About 'Om siva siva Om' Manthira Speech (1hr mp3) 
om siva siva om 108 time Chat  

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் “சிவசிவ” என்று போட்டிருப்பார்கள்.இதில் அனேக உட்பிரிவுகள் உண்டு.அவைகள் சிவ தீட்சை பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.மந்திரங்களில் ஜெபிக்க எளிதானது சிவமந்திரம்தான். நமசிவாய, சிவாயநம,சிவாயசிவ,சிவசிவ :இவைகளை ஒரு பக்குவம் அடைந்தவர்கள் தான்,தகுதி பெற்றவர்கள் தான் ஜெபிக்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.மந்திர சக்தியும் வேண்டும்; குடும்பத்திலும் இருக்க வேண்டும்;அனுஷ்டானங்களும் செய்யமுடியாத நிலை இக்கால வேகமான வாழ்க்கை நிலை என்பது அனைவரும் அறிந்ததே!!!

இது சம்பந்தமாக,பல சிவனடியார்களை அணுகி,அடிபணிந்து வேண்டிக் கொண்டதில் ஒரு எளிமையான மந்திரம் கிடைத்தது. அம்மந்திரம் தான் “ஓம் சிவசிவ ஓம்”

இதை ஜாதி மத இனப் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்.ஒரே தகுதி சைவ உணவு பழக்கமும், எந்த உயிரையும் துன்புறுத்தாத ஜீவகாருண்ய உணர்வும் மட்டுமே இருந்தால் போதும்.

இதற்கு தீட்சை பெற வேண்டியதில்லை; ஓம் என்னும் அட்சரத்தில் ஆரம்பித்து ஓம் என்னும் அட்சரத்தில் முடிவதால், குடும்பஸ்தர்களுக்கு ஏற்றது. அவர்களுக்கு அருளும் பொருளும் ஒருங்கே கிடைக்கும்.எல்லா மந்திரங்களும் இதில் அடக்கம் என்பதால்,வேறு எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை.

முதலில் குலதெய்வத்தை வணங்கிக் கொள்ள வேண்டும்.(அது தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடவேண்டும்) பிறகு விநாயகரை வழிபட வேண்டும். பிறகு தினமும் காலை 108 முறையும்,மாலை 108 முறையும் ஓம் சிவசிவ ஓம் என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே வரவேண்டும். ஒரு சில நாட்களிலேயே நமது நீண்ட காலப் பிரச்னைகள்,நோய்கள் தீர ஆரம்பிக்கும். உடனே விட்டுவிடக்கூடாது.

அமைதியான மனநிலையில் தான் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும். நம்பிக்கைதான் முதலீடு.ஒரு அமாவாசையன்று இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்.

21 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரலாம்; பவுர்ணமி, அமாவாசை,சிவராத்திரி, தமிழ் மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் இந்த மந்திரத்தை ஜபிக்க பலகோடி மடங்கு பலன்கள் கிடைக்கும்.

எந்த மலையில் இருந்தாலும்,எந்த கடலில் இருந்தாலும்,எந்த வனத்தில் இருந்தாலும் இந்த மந்திரம் உங்களைக் காப்பாற்றும்.சூட்சுமமாக இயங்கும் சிவ கணங்கள் வந்து உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும். அதுவும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபித்துக்கொண்டு சென்றால்,அடுத்த சில நாட்களில் கர்மப்பிரச்னைகள் திடீரெனத் தீரும் என்பதை அனுபவத்தில் உணரலாம்.

பொதுவாக நடக்கும்போது எந்த மந்திரத்தையும் ஜபிக்கக்கூடாது என்பது விதி;மீறி மந்திர ஜபம் செய்தால், விபத்து ஏற்படும்;வாகனங்கள் ஓட்டும்போதும் இதேபோல் மந்திரஜபம் ஜபிப்பது கூடாது. ஆனால், திருவண்ணாமலை கிரிவலத்தின் போது நமது வழிபாடே கிரிவலமாக இருப்பதால், அப்போது மட்டும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கலாம்.

பதவி உயர்வு,பதவி வேண்டுவோர் ஞாயிறு இதை நோன்புடன் ஜெபிக்க வேண்டும்.நல்ல வாழ்க்கைத்துணை வேண்டுவோர் திங்கள் கிழமை நோன்புடன் இதை ஜபிக்க வேண்டு.தீராத நோய்கள் தீர செவ்வாய்க்கிழமையன்று நோன்பு இருந்து ஜபிக்கவேண்டும். கல்வி, வித்தைகளில் நல்ல தேர்ச்சியடைய புதன் கிழமைகளில் நோன்புடன் ஜபித்துவரவேண்டும்.

ஆத்மஞானம் பெற வேண்டின் வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்று ஜபிக்க வேண்டும்.

பண நெருக்கடி நீங்கவும்,செல்வ வளம் பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
கண்திருஷ்டி ,செய்வினைக் கோளாறு,மனக்கோளாறு நீங்கிட சனிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

விபூதி,ருத்திராட்சம் போன்ற அருட்சாதனங்களை அணிந்து எந்த மந்திரம் ஜபித்தாலும் உடலில் மின் அருட்சக்தி கூடிவிடும்.

சிவபெருமானின் திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் அல்லது மாத சிவராத்திரியன்று அல்லது மாதப் பிரதோஷம் அல்லது சனிப்பிரதோஷம் அன்று திருவண்ணாமலைக்கு வந்து,உடலெங்கும் விபூதி பூசி,கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து,வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு, விரதமிருந்து (சாப்பிடாமல்) கிரிவலம் செல்ல வேண்டும்.அப்படி கிரிவலம் செல்லும் 14 கி.மீ.தூரம் முழுக்க (சுமார் 6 மணி நேரம்) ஓம் சிவசிவஓம் என ஜபித்து வந்தாலே,ஒரு முறை இப்படிச் செய்தாலே, நமது ஊழ்வினை தீர்ந்துவிடும். நாத்திகர்கள் கூட இதை ஆராய்ச்சிக்காக செய்து பார்க்கட்டும்; மேல்நாட்டு இண்டாலஜிஸ்டுகளும் இதை பரீட்சித்துப் பார்க்கலாம்;ஆன்மீக அன்பர்களும் இதை சக்திவாய்ந்த வழிபாடாக,ஒரு தவமாக செய்து மனநிம்மதியும் செல்வச் செழிப்பும் நிறைந்த வாழ்க்கையைப் பெறமுடியும்.


இந்தத் தகவல்களை வழங்கியவர்: அருட் திரு:டாக்டர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள். : https://sadhanandaswamigal.blogspot.com/2011/08/mystic-selvam.html

About 'Om siva siva Om' Manthira Speech (1hr mp3) 
om siva siva om 108 time Chat  

Saturday, June 18, 2016

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் "ஓம் சிவா சிவா ஓம் " - மிஸ்டிக்செல்வம்

சோடசக்கலை யைப் பின்பற்றுங்கள்

 "ஓம் சிவா சிவா ஓம் "
from my old arch ..

எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே  இருக்கின்றனர் ?

எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?

இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?

அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,


அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!

இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள்  என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.

தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

https://en.wikipedia.org/wiki/Trinity
பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம்

முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.
இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த  ஒன்றையும் பெற முடிகிறது.

 அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும் ( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு, நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும்  சூட்சுமமாக அதிரும்.

அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.

ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

 தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.

தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

ஆதாரம்: ஆன்மீகத்திறவுகோல்,பக்கம் 293 முதல் 295 வரை,ஆசிரியர்:ஜோதிடக்கலங்கரை விளக்கு மிஸ்டிக்செல்வம் அவர்கள்.


திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில் 
மந்திரப்பிரயோகம் https://www.mediafire.com/?pr99ss5y5vo0g6o 

about ayya:https://sadhanandaswamigal.blogspot.com/2011/08/mystic-selvam.html

Thursday, June 16, 2016

தவ ஜநநி தாடங்க மஹிமா [ ஸ்ரீ வராஹி ]

“தவ ஜநநி தாடங்க மஹிமா”
 [ ஸ்ரீ வராஹி ]
அம்ருத மதன காலத்தில் அம்ருதம் திரண்டு வருவதற்கு முந்தி தேவாஸுரர்களை ஜ்வாலையால் பொசுக்கி விடுகிற மாதிரி காலகூடவிஷம் வந்தது. அம்ருதம் எடுத்து சாப்பிடுவதற்கு ஈச்வரனைக் கூப்பிடாத தேவர்கள் ப்ராணாபத்து வந்த போது அபயம் என்று ஓடினார்கள். அவனும் “இப்பத் தான் வழி தெரிஞ்சதோ?” என்று கேட்காமல் பரம காருண்யமாக அந்த கால கூடத்தை அப்படியே உருட்டி சாப்பிட்டு விட்டான்.


“தாலி பாக்யம், தாலி பாக்யம்” என்கிறோமே – பெரிய ஆக்ஸிடண்ட், வைத்யமே கிடையாது என்று இருக்கிற ஒரு மஹாரோகம் ஆகியவற்றிலும் ஒருத்தன் தப்பிப் பிழைத்தால், அது அவன் பெண்டாட்டியுடைய தாலிபாக்யத்தால் தான் என்கிறோமே – அப்படி அம்பாளுடைய தாலி பாக்யத்தால் தான் ஸ்வாமி மகாப்ரளயத்திலாகட்டும், கால கூட பானத்தின் போதாகட்டும் தப்பித்தது. அந்த தாலி பாக்யத்தைத் தான் அம்பாளுடைய “தாடங்க மஹிமா” என்று ஆதி சங்கரர் சொல்லியிருக்கிறார்.


வேதம் ச்ருதி என்றால், ரிஷிகள் பண்ணிய தர்ம சாஸ்த்ரங்களும், கிருஷ்ண பரமாத்மா உபதேசித்த கீதையும் ஸ்ம்ருதி என்பார்கள்.ஆசார்யாள் வாக்கையும் ஸ்ம்ருதியோடு சேர்க்கலாம். ஸ்வாமிக்கு ‘அம்பாள் மருந்து’ என்ற ச்ருதி வாக்கைத்தான் ஆசார்யாள் இங்கே ஸ்ம்ருதி வாக்காகக் கொடுத்திருக்கிறார். அப்படியே காப்பியடித்தால் அழகில்லை என்பதால், ஸ்வாமியின் உயிரை ரஷிப்பது அம்பாள் என்றே திருப்பிச் சொல்லாமல், (அவ்வாறு ரஷிப்பது) அவளுடைய ஸெளமாங்கல்யச் சின்னமான தாடங்கம் என்று நூதன நயம் சேர்த்து சொல்லியிருக்கிறார் ‘தாலி பாக்யம்’ என்று பொதுவில் சொல்வதைத் ‘தாடங்க மஹிமை’ என்கிறார்.வேடிக்கையாக, அந்தத் தாடங்கமும் தாலி தான். இதிலென்ன புதிர் போடுகிறேனே என்றால் நான் ஒன்றும் புதுசாகச் சொல்லவில்லை. காளிதாசன் சொன்னதைத் தான் ஒப்பிக்கிறேன். “தாலீ பலாச தாடங்காம்” (ச்யாமளா, நவரத்ன மாலிகை – ச்லோகம் 6) என்பது காளிதாசன் வாக்கு, தாலம், தாலீ என்றால் பனை. பலாசம் என்றால் புரசு என்ற ஒரு அர்த்தம். ‘பலாச’ ம்தான் திரிந்து ‘புரசு’ ஆயிற்று என்று தோன்றுகிறது. இன்னொரு அர்த்தம், எந்த இலைக்குமே ‘பலாசம்’ என்று பெயர். ‘தாலீ பலாசம்’ என்றால், பனையோலை என்று அர்த்தம். ஆதி காலத்தில் ஜனங்கள் படாடோபமில்லாமல் எளிமையாயிருந்தபோது ஸ்த்ரீகளுடைய பரம ஸெளமாங்கல்ய ஆபரணங்களான மங்கள ஸுத்ரப் பதக்கம், காதுத் தோடு இரண்டுமே பனையோலையால் ஆனதாகத்தான் இருந்திருக்கின்றன. அதனால் மங்கள ஸுத்ரப் பதக்கமாயிருந்த ஓலை நறுக்குக்கே தாலி என்று பேர் வந்துவிட்டது. காதிலும் அந்த ஓலையைச் சுருட்டித்தான் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். நானே பார்த்திருக்கிறேன் அநேக குடியான ஸ்திரீகள் அப்படிப் போட்டுக்கொண்டு பிற்கால ஜம்ப வழக்கங்கள் வராத ஆதி நாளில் ப்ராஹ்மண ஸ்த்ரீகள் உள்பட காளிதாஸன் வாக்குப்படி ஸாஷாத் பராசக்தி உள்பட – எல்லோரும் ஓலைத் தோடுதான் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதனால்தான் பிற்காலத்தில் ஏகச் செலவில் வைரத்தோடு போட்டுக் கொண்டபோதுகூட அதை ‘வைர ஓலை’ என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.


‘கம்மல்’ என்றும் தோட்டைச் சொல்வது. ‘கமலம்’  ‘கமல்’ என்பதுதான் அப்படி ஆனது. நடுவே ஒரு கல், சுற்றிலும் ஆறு என்று, நடுவே கர்ணிகையும் சுற்றி இதழுமாக ஒரு தாமரை இருக்கின்றாற்போலத் தோடு கட்டியதால் ‘கமலம்’ என்று பேர் வைத்துக் ‘கம்மல்’ ஆயிற்று. அப்படிக் கட்டடப்படுகிற வைரக் கல்லுக்கும் அதனாலேயே ‘கமலம்’ என்ற பெயர் வந்தது. “நல்ல உடானி கமலம்” என்று உசந்த வைரத்தைச் சொல்வார்கள்…இத்தனை ஜம்பம், டம்பம், டாம்பீகம் வந்துவிட்ட இன்றைக்கும் அம்பாள் பூஜையில் அவள் போட்டுக்கொள்கிற பரம எளிமையான கருகுமணியும் பச்சோலையுமே ஸுமங்கலிகளுக்குக் கொடுக்கிறோம்.


‘தாலியில் தாலம் (பனை) என்று தெளிவாகவே தெரிகிற தென்றால், ‘ தாடகம் ‘ என்ற ச்ரோத்ராபரணமும் (காதணியும்) ‘தார’த்தின் அடியாகப்பிறந்ததுதான். ‘தாரம்’ என்பது ‘தாடம்’ என்றும் ஆகும், ‘அங்கம்’ என்றால் சின்னம். தாடத்தாலான மங்களச்சின்னம் ‘தாடங்கம்’, ‘தாட பத்ரம்’ என்று கூட அந்த ஆபரணத்தைச் சொல்வதுண்டு. ‘தாலீ பலாசம்’ என்ற பனையோலையே ‘தாட பத்ரம்’ என்பதும். ‘தாடகம்’ என்பதே அப்பறம் ‘தாடங்கம்’ என்று வந்திருக்கிறது. தோடு, அதற்கு வேறாகக் குண்டலம் (இந்த நாள் லோலாக்கு, ஜிமிக்கி) என்று இல்லாமல், தோடு குண்டலம் இரண்டும் சேர்த்துப் பண்ணிய நகை தாடங்கம் என்று தோன்றுகிறது.


தாலி, தோடு இரண்டும் விசேஷமான ஸெளமாங்கல்யா ஆபரணங்களாகும். ஸுமங்கலித்வம் போனால் கழுத்தை விட்டுத் தாலி இறங்குவது போலவே காதை விட்டுத் தோடோ, தாடங்கமோ இறங்கிவிட வேண்டும். அதனால் ஒரு புருஷனின் நல்ல ஆயுர்பாவத்தை, பெரிய கண்டத்தில் கூட அவன் பிழைப்பதைத் ‘தாலி பாக்யம்’ என்று சொல்கிற மாதிரி ‘தாடங்க பாக்யம்’ என்றும் சொல்ல ந்யாயமுண்டு. அதைத்தான் ஆசார்யாள் ‘தாடங்க மஹிமை’ என்கிறார். “பங்கு போட்டுக் கொண்டு அம்ருதம் சாப்பிட்ட அத்தனை தேவர்களும் அழிந்து போனார்கள். யாருக்கும் பங்கில்லாமல், தானே மிச்சம் மீதியில்லாமல் விஷத்தைச் சாப்பிட்ட உன் பதி அழிவே இல்லாமலிருக்கிறதானென்றால் அது உன் தாடக் மஹிமைதானம்மா. “தவ ஜநநி தாடங்க மஹிமா” என்கிறார்.


ச்ரோத்ரத்திற்கு விசேஷம் ஜாஸ்தி. பஞ்ச பூதங்களில் உசந்ததான ஆகாச தத்வத்தில் எழுகிற சப்தத்தை க்ரஹிப்பதாகப் பஞ்சேந்திரியங்களில் இருப்பது அதுவே. வேதம் பூராவுமே இப்படி ச்ரோத்ரத்தால் க்ரஹிக்கப்பட்டதால் தானே ச்ருதி எனறே பேர் பெற்றிருப்பது? உபதேசங்களையெல்லாம் கேட்டுக் கொள்வது ச்ரோத்ரந்தான். அம்பாள் தான் குரு ஸ்வரூபிணியானாலும் அத்தனை ஆகமங்களையும் மந்திரங்களையும் அவள்தான் சிஷ்யையாயிருந்து பதியும் குருவுமான ஈச்வரனிடமிருந்து தன்னுடைய ச்ரோத்ரத்தினால் கேட்டுக்கொண்டாள்.  எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய ப்ரார்த்தனை, ஸ்தோத்ர கீர்த்தனை எல்லாவற்றையும் அவள் கேட்டுக் கொள்வது ச்ரோத்ரத்தினால் தானே?


இதனாலெல்லாந்தானோ என்னவோ, அம்பாளுடைய தாடங்கத்தில் நம்முடைய ஆசார்யாளுக்கு ரொம்ப பக்தி, பற்றுதல். ‘ஸர்வ மங்களா’ எனப்படும் அம்பாளுக்கு மங்களச் சின்னம் அது. ஸுர்ய சந்திரர்களே அவளுடைய இரண்டு காடகம் என்று ஸஹஸ்ரநாமத்தில் வரும்: ‘தாடங்க யுகளீ – பூத தபனோடுப மண்டலா’ என்று அதே ஸுர்ய நமக்குப் பால் கொடுக்கிற அம்மாவின் இரண்டு வக்ஷோருஹங்கள் என்று ஆச்சார்யாள் இந்த ஸெளந்தர்யலஹரியிலேயே சொல்லியருக்கிறார். (ச்லோகம் 34) ஆகையால் அந்தத் தாடங்கங்களும் ஒரு பக்கம் பரமேச்வர பத்னியின் ஸெளமாங்கல்யச் சின்னம், இன்னொரு பக்கம் குழந்தைகளான நமக்கெல்லாம் பாலூட்டுகிற மாத்ருவாத்ஸல்யத்தின் சின்னம் என்றும் ஆகிறது. ஆகையாலே தான் ஜம்புகேச்வரத்திலே அகிலாண்டேச்வரியின் சக்தி ஜனங்கள் தாங்க முடியாத அளவுக்கு ஆனபோது அவர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணி அதில் அதிகப்படி சக்தியை ஆகர்ஷணம் பண்ணி அம்பாளை சமனப்படுத்த நினைத்தபோது அந்த ஸ்ரீ சக்ரத்தை தாடங்க ரூபத்தில் பண்ணி அவளுடைய ச்ரோத்திரத்திலேயே ப்ரதிஷ்டித்து விட்டார் ப்ருத்வி க்ஷேத்ரமும், ப்ருத்வியின் மத்ய ஸ்தானமுமான காஞ்சீபுரத்தில் அம்பாள் காமாக்ஷியின் சக்தி இதே மாதிரி அபரிமிதமாயிருந்தபோது அவளுக்கு எதிரே ப்ருத்வியிலேயே – பூமியிலேயே – ஸ்ரீ சக்ர – ஸதாபனம் பண்ணினார். அது அவருடைய ஜீவிதத்தின் கடைசியில். ஜம்புகேச்வரம் அப்பு க்ஷேத்ரம். அதற்காகக் காவேரியில் யந்த்ரம் ஸ்தாபிக்க முடியுமா? அப்பு மட்டுமில்லை: தேயு, வாயு, ஆகாசம் எதிலுந்தான் (யந்த்ரம் ஸ்தாபிக்க) முடியாது. ப்ருத்வியில் மட்டுமே முடியுமாதலால் அப்படிக் காஞ்சியில் பண்ணினார் ஜம்புகேச்வரத்தில் என்ன பண்ணினாரென்றால் காவேரிக்கும் மேலே ப்ரவாஹமாக அம்பாளுடைய மங்களமான சிவ சித்தம் பெருக வேண்டும், பால் கொடுக்கிற வாத்ஸல்ய சித்தமும் பெருகவேண்டும் என்று நினைத்து இரண்டுக்கும் பொதுச் சின்னமாக இருக்கிற தாடக்த்திலேயே ஸ்ரீசக்ரத்தை அடக்கி யந்த்ரத்திற்கு யந்த்ரம், ஆபரணத்திற்கு ஆபரணம் என்பதாக அதை அவளுக்குச் சார்த்திவிட்டார். எப்படி இந்த ஸெளந்தர்யலஹரி தந்த்ர சாஸ்த்ரமாயும் தத்வத்தைத் தெரிவித்துக்கொண்டு, காவ்ய ஸ்தோத்ரமாகவும் அழகைத் தெரிவிக்கிறதோ, அப்படியே அந்தத் தாடங்கங்களும் சாஸ்த்ர ரீதியில் ஜனங்களுக்கு ரக்ஷணை கொடுத்துக்கொண்டு, அதே ஸமயம் அம்பாளுக்கும் அழகு செய்கிற – அழகுக்கு அழகு ஸமயம் அம்பாளுக்கும் அழகு செய்கிற – ஆழகுக்கு அழகு செய்கிற – ஆபரணமாகுவும் இருக்கும்படியாகப் பணிணிவிட்டார்.ஸ்ரீ சக்ர, சிவசக்ர ரூபமான தாடங்கங்கள் என்று அவற்றைச் சொல்வது. ‘ஸ்ரீ சக்ரத்திலேயே ஒன்பது ஆவரண சக்ரங்கள் இருப்பதில் நாலு சிவ சக்ரங்கள்தான். ஐந்து அம்பாளுடையது. தம்முடைய ஸ்தோத்ரத்திலேயே முன் ச்லோகமொன்றில் (ச்லோக.11) “சதுர்பி: ஸ்ரீகண்டை: சிவயுவதி: பஞ்சபிரபி” என்று இதையும் சொல்லியிருக்கிறார். இங்கே ஸ்வாமியை ‘ஸ்ரீ கண்டன்’ என்றும் அம்பாளை ‘சிவயுவதி’ என்றும் சொல்லியிருப்பது ‘தாடங்கமஹிமா’ ச்லோகத்தோடு பொருத்தமாக அன்வயிக்கிறது. ‘ஸ்ரீ கண்டன்’ என்றால் நீலகண்டன்தான். விஷத்திற்கும் ‘ஸ்ரீ’ என்று பெயர் இருப்பதை வைத்துத்தான் ‘ஸ்ரீகண்டன்’ என்பது. தாடங்க மஹிமை ச்லோகத்தில் விஷம் சாப்பிட்டவன் அழிவில்லாமலிருக்கும் அதிசயத்தைத்தான் சொல்கிறார். ‘சிவயுவதி’ என்று அவளை அவனுடைய பத்னியென்று பேர் கொடுத்துச் சொல்லியிருப்பது அவளுடைய ஸெளமாங்கல்யத்தையும் உக்ரமில்லாத, ரௌத்ரமில்லாத சிவமான அநுக்ரஹ சித்தத்தை தெரிவிப்பதாகவும் இருக்கிறது.


இவளை ‘ருத்ரஸ்ய பேஷஜீ’ என்று வேதம் சொல்லிற்று. ஆசார்யாள் நாளில் இவளுடைய சத்தியே ஜனங்களுக்கு ரௌத்ரமாகத் தாங்க முடியாமல் ஆயிற்று. வாஸ்தவத்தில் அது ரௌத்ரமாகவில்லை. கலி கால ஜனங்களின் சக்தி குறைந்து போனதால் தான் அம்பாள் மூர்த்தத்தில் ஆதியில் பிரதிஷ்டையாயிருந்த நிறைவான ஜீவ கலா சத்தியை அவர்களால் தாங்க முடிய வில்லை. நமக்கு உடம்புக்கு வந்து பலஹீனமாகிறபோது புஷ்டியும் ஆரோக்யமும் தரும் நல்ல ஆஹார வஸ்துக்களே ஜெரிக்க முடியாமலாகிக் கஞ்சிதான் நல்லது என்று ஆகிறதல்லவா. அப்படி அம்பாளடைய அநுக்ரஹ சக்தியையே அப்போது ‘டைல்யூட்’ பண்ணினால் தான் தாங்கிக்கொள்ள லோகத்திற்குச் சத்தி இருந்தது. அப்போது தான் ஆசார்யாள் எக்ஸ்ட்ரா சக்தியை ஸ்ரீசக்ர தாடங்கங்களில் அடக்கி, அதையும் அவளுக்கே ஆபரணமாகப் போட்டார்.


ச்லோகத்தில் அவர் சொல்கிற விஷ பானக் கதையில் அவருக்கு மூலவரான ஈச்வரனுக்கு அவள் உக்ரமான விஷத்தைக் கண்ட பூஷணமாக்கினாளென்றால், அவரோ அம்பாளுடைய உக்ரத்தையே – அதாவது ஜனங்களின் அபல ஸ்திதியில் உக்ரமாகத் தோன்றிய ஜீவகலையையே – அவளுக்குக் கர்ண பூஷணமாக்கினார்.


ஒரு விஷயத்திற்குச் சின்னமாக ஏதோ ‘ஸிம்பல்’ என்று வைக்காமல், மனஸிலே ஆழமாகப்பட்டு – முக்யமாக மஹான்கள், ரிஷிகள் மனஸில் ஆழமாகப் பட்டு – அந்த ஸிம்பலை வைக்கும்போது அந்த மூலமான விஷயத்துக்கே சின்னம் புஷ்டி சேர்ப்பதாக ஆகிவிடுகிறது. இந்தச் சின்னத்துக்கு ஹானி ஏற்பட்டால், இது போய்விட்டால் அது மூலமான விஷயத்திற்கே ஹானி உண்டாக்குகிறது. சின்னத்திற்கே ஒரு ஜீவசக்தி உண்டாகிவிடுவதால் இப்படி நடக்கிறது. ப்ரஹ்மண்யத்திற்குச் சின்னமான உபவீதம் (பூணூல்) போட்டுக் கொண்டால் ப்ரஹ்மண்யமே விருத்தியாகிறது. அது அறுந்து போனால், காணாமல் போனால் ஏதோ தீட்டு வந்துவிட்ட மாதிரி காயத்ரிகூட மங்கிப் போகிறது. மஹான்கள், ரிஷிகள் என்றில்லாமல் பஹுஜனங்கள் மனஸாழத்தில் மதிப்பாக வைக்கிற சின்னங்களைப் பார்த்தாலுங்கூட இப்படியே இருக்கிறது. தேசியக்கொடி என்பது ஒரு சின்னந்தான், அதற்கு அவமதிப்பு நடக்கிறது என்றால் தன்னால் மனஸ் பதறுகிறது. அது அறுந்து விழுந்தால் நிஜமாகவே தேசத்திற்கு ஆபத்து வருகிறது. இந்தப் பகுத்தறிவு யுகத்திலும் கொடி, கான்ஸ்டிட்யூஷன் புஸ்தகம் முதலியவற்றை அவமதித்தால் கடுமையாக சிக்ஷிக்க வேண்டுமென்று சட்டம் பண்ணியிருக்கிறார்கள். பைபிள் புஸ்தகம் ஒரு சின்னந்தான். ஆனாலும் நல்லவழியிலே போவதற்கான புஷ்டியைக் கொடுக்கும் ஜீவ சத்தி அதற்கே இருக்கிறது என்று அபிப்ராயத்தில்தான் அமெரிக்கா ப்ரெஸிடன்ட் கூட அதைக் கையில் வைத்துக் கொண்டு விச்வாஸ ப்ராமாணம் எடுத்துக் கொள்கிறான்.சின்னத்தால் அது ஸிம்பலைஸ் செய்யும் விஷயத்திற்கே ஹானி – விருத்திகள் ஏற்படுகிறது என்பதற்காகச் சொல்ல வந்தேன். தாடங்க விஷயம் அப்படித்தான். அதாவது பதிக்கு ஹானி என்றால் தாடங்கம் இறங்கவேண்டும் என்பது மட்டுமில்லை, அந்தத் தாடங்கம் இறங்காதிருந்தால் பதிக்கு ஹாணியே ஏற்படமுடியாது. அம்பாளுக்குக் கல்யாணத்தின் போது ஸுமங்கலி என்று சின்னம் பூட்டுகிறபோது தாடங்கம் போட்டிருப்பார்கள். ஸாஷாத் அம்பாளும் ஸ்வாமியுமே அதை அப்படி (ஸெளமாங்கல்ய சின்னமாக) நினைத்திருப்பார்கள். அப்போது அதற்கு வாஸ்தவமாகவே எப்படிப்பட்ட ‘வால்யூ’வும் ‘பவ’ரும் ஏற்பட்டிருக்கும்? ஈச்வரனுக்கு அம்பாள் ஜீவ ரஷை என்றால் அவளுக்கு அந்தத் தாடங்கம் ஸெளமாங்கல்யரக்ஷையாக ஆகியிருக்கும். அதற்கே ஒரு ஜீவ சக்தி உண்டாகி அப்படி ரக்ஷித்திருக்கும். அந்த ரஷை அவளைவிட்டு எங்கேயாவது சுழலுமா, இறங்குமா? இறங்கவே இறங்காது. ஸாக்ஷாத் அம்பாளுக்கு ரக்ஷையாக இருக்கும் ஸ்தானத்தை அது கொஞ்சங்கூட விட்டுக் கொடுக்காது தானே? அது அப்படிப் பிடிவாதமாக “இறங்க மாட்டேன்” என்று உட்கார்ந்திருக்கும்போது ஸ்வாமிக்கு விஷத்தாலோ, ப்ரளயத்தாலோ ஒரு ஹானியும் வரமுடியாது அது தான் ஆசார்யாள் சொல்லும் தாடங்க மஹிமா.ஆனால் ‘அல்டிமேட்’ டாக எல்லா மஹிமையும் ஸகல சக்தி மூலமான அவளைச் சேர்ந்தது தான். அவள் கொடுத்தே ஒவ்வொரு வஸ்து ஒவ்வொரு மஹிமையைப் பெறுகிறது. மஹிமை வாய்ந்த எது இருந்தாலும் அது “மம தேஜோம்ச ஸம்பவம்” (“என் சக்தியின் அம்சமாகத் தோன்றியதே”) என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்கிறார். அதனால் தான் ஆசார்யாளும் “தவ ஜநநி தாடங்க மஹிமா”, “அம்மா, உன்னுடைய தாடங்க மஹிமை” என்று குறிப்பாலுணர்த்திச் சொல்லியிருக்கிறார்.


——ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகசேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்மாதா ச பார்வதீ தேவீ, பிதா தேவோ மஹேஸ்வர:, பாந்தவா: சிவபக்தாஸ்ச, ஸ்வதேசோ புவனத்ரயம் ||***“தேவி வராஹி”MAHA VARAHI PHOTOஸ்ரீ வராஹி மூல மந்திரம்:  “ஓம் க்லீம் வராஹமுகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹ:”
பூஜை முறைகள்: வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை  செய்ய வேண்டும்.
இதன் பலன்: தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

Monday, June 13, 2016

பாலாம்பிகையின் வழிபாடு முறை | Worship of Sri Balambika

பாலாம்பிகையின் வழிபாடு முறை | Worship of Sri Balambika


ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

Image may contain: 1 person, standing

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

பாலாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

|| ஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை ||

அபவித்ரபவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா:!

ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர:ஸுசி: !!

சாப விமோசனம் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பாலே சிவசாபம்விமோச்சய ஃபட் ஸ்வாஹ: (12)

பாலா சஞ்சீவினம் – சௌஐம் க்லீம் பாலாயை நம:

சம்புடீகரணம் – சௌஐம் க்லீம் சௌபாலாயை நம:

 ***
பாலாம்பிகை
பாலாம்பிகை

ஆசமனம் முதல் பூர்வாங்க பூஜைகளை முடித்து பின்னர் ஆரம்பிக்கவும்

***

ஓம் அஸ்யஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மஹாமந்த்ரஸ்ய,

தக்ஷிணாமூர்த்தி ரிஷியே நம: – சிரசே

பங்க்திச்சந்தசே நமோ – முகே

பாலா த்ரிபுரசுந்தரி தேவதாயை நமோ – ஹ்ருதயே

ஐம் பீஜாய நமோ – குஹ்யே

சௌசக்தியை நமோ – பாதயோ

க்லீம் கீலகாய நம: – சர்வாங்கே

சர்வதா சர்வசித்தயே ஜபே வினியோக

கர ந்யாஸம்.

ஐம் அங்குஷ்டாப்யாம் நம:

க்லீம் தர்ஜனீப்யாம் நம:

சௌமத்யமாப்யாம் நம:

ஐம் அனாமிகாப்யாம் நம:

க்லீம் கனிஷ்டிகாப்யாம் நம:

சௌகரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

ஹ்ருதயாதி ந்யாஸம்.

ஐம் ஹ்ருதயாய நம:

க்லீம் சிரசே ஸ்வாஹ:

சௌசிகாயை வஷட்

ஐம் கவச்சாய ஹூம்.

க்லீம் நேத்ரத்ரயாய வௌஷட்

சௌஅஸ்த்ராய ஃபட்

பூர்புவஸ்வரோம் இதி திக்பந்த:

த்யானம்.

அருண கிரண ஜாலை ரஞ்ஜிதா ஸாவகாஸா
வித்ருத ஜப ஸ்படீகா புஸ்தகா பீதிஹஸ்தா
இதர கரவராட்யா புல்லகல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாணரூபா (சீலா)

பன்சபூஜா:

லம்  – ப்ரித்விதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயைநமசுத்த பரிமள கந்தம் பரிகல்பயாமி

ஹம் – ஆகாஷதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயைநமபரிமள புஷ்பாணி சமர்ப்பயாமி

யம் – வாயுதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நம:தூபமாக்ரபயாமி

ரம் – வன்ஹிதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயைநமசுத்த க்ருத தீபம் சந்தர்ஷயாமி

வம் – அம்ருததத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயைநமநானாவித பக்வன்னாதி சமேத அம்ருதம்மஹாநைவேத்யம் நிவேதயாமி

சம் – சர்வதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நம:கர்பூரவீடிகாயுக்த தாம்பூல சமேத சர்வோபச்சாரபூஜான் சமர்ப்பயாமி.

யதாசக்தி யதாசங்க்யா மூலமந்த்ர ஜபம் க்ருத்வா!

குரு
குரு

மூலமந்த்ரம்: “ஓம் சௌஐம் க்லீம் சௌபாலாயைநம:”            1008 உரு, காலையும் மாலையும்.

ஹ்ருதயாதி ந்யாஸம்.

ம் ஹ்ருதயாய நம:

க்லீம் சிரசே ஸ்வாஹ:

சௌசிகாயை வஷட்

ஐம் கவச்சாய ஹூம்.

க்லீம் நேத்ரத்ரயாய வௌஷட்

சௌஅஸ்த்ராய ஃபட்

பூர்புவஸ்வரோம் இதி திக்விமோக:

த்யானம்.

அருண கிரண ஜாலை ரஞ்ஜிதா ஸாவகாஸா
வித்ருத ஜபஸ்படீகா புஸ்தகா பீதிஹஸ்தா
இதர கரவராட்யா புல்லகல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்யகல்யாண ரூபா (சீலா)
 

மானஸ பன்சபூஜை

ம் – ப்ரித்வி தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயைநமசுத்த பரிமள கந்தம் பரிகல்பயாமி

ஹம் – ஆகாஷ தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயைநமபரிமள புஷ்பாணி சமர்ப்பயாமி

யம் – வாயு தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நம:தூபமாக்ரபயாமி

ரம் – வன்ஹி தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயைநமசுத்த க்ருத தீபம் சந்தர்ஷயாமி

வம் – அம்ருத தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயைநமநானாவித பக்வன்னாதி சமேத அம்ருதம்மஹாநைவேத்யம் நிவேதயாமி

சம் – சர்வ தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நம:கர்பூரவீடிகாயுக்த தாம்பூல சமேத சர்வோபச்சாரபூஜான் சமர்ப்பயாமி. 

ஸமர்ப்பணம்.

குஹ்யாதி குஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணாஸ்மாத் க்ருதம் ஜபம் |

ஸித்திர்பவது மே தேவி தவத் ப்ரசாதான் மயி ஸ்திரா||

யானி கானி பாபானி ஜன்மாந்தர க்ருதானி |

தானிதானி விநச்யந்தி ப்ரதக்ஷிணே பதேபதே ||

அபராத ஸஹஸ்ரானி க்ரியந்தே ஹர்னிஸம்

மயா தாஸோயமிதி மாம் மத்வ க்ஷமஸ்வ பரமேஷ்வரீ||

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் மஹேஷ்வரீ|

யத்பூஜிதம் மயாதேவி பரிபூர்ணம் ததஸ்துமே ||

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம: |

தஸ்மாத் காருண்ய பாவேன லோக க்ஷேமம் சதா குரு||

காமேஷ்வரீ ஜனனிகாமேஷ்வரோ ஜனக:, தவ சரணௌ மம சரணம் |

காமேஷ்வரீ ஜனனீ தவசரணௌ மம சரணம். ||

காமேஷ்வர ஜனக காமேஷ்வரீஜனனிகுருலோகேக்ஷேமம் |

காமேஷ்வரீ ஜனனீ குருலோகே ஸாந்திம் ||

சுபம்

குறிப்புஇந்த பாலாமந்திரத்தைஉகந்த   சரியானத்யான ஸ்லோகத்தோடு முறையாக மூன்று லட்சம்உருவுடன் சரியான  புரஸ்சரணமும், உக்த சமித்துக்களோடு ஹொமமும், இதர அனுஷ்டானங்களையும் முடித்தால்வித்யையில்ப்ரஹஸ்பதி சமனாகவும்பார்புகழும் பலத்தோடும், புகழோடும்சம்பத்தில் குபேரனுக்கு நிகராகவும், –அவர் தம் வினைப்பயன்விதிப்பயன் எவ்வாறுஇருப்பினும் – சாதகர் இருப்பர்! – சிவவாக்கியம்.