Wednesday, June 25, 2014

சிவனமைய பாடல்




Everyone want to see this two youtube videos

Sivanamaya Video Song HD - "யாழ்" - சிவனமைய பாடல் - Yazh Movie 


வாள் கொண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..
வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..

மேல் அந்து போனாலும் தோல் வெந்து போனாலும்..
சூள் கொண்டு வருவோமே சிவசங்கரா...
நாள் வந்த பின் அந்த நாள் வந்த பின் - எங்கள் 
யாழ் கொண்டு வருவோமே சிவசங்கரா...



An Ode to Lord Shiva

 இப் பாடல் வரிகளை உணர்ந்து 
வாழ்பவர்கள் எத்தனைபேர்.?
இப் பாடல் வரிகளை உணர்ந்து வாழத்துடிப்பவர்கள் எத்தனைபேர்...?
இப் பாடல் வரிகளை உணர்ந்தும் அலட்சியம் செய்பவர்கள் எத்தனைபேர்.....?
சிந்திப்போம் !
செயல் படுவோம் !!
பயனடைவோம்...!!!




Thank: சிவன் சித்தர் (Facebook)

Monday, June 23, 2014

SRI AGASTHEESWARA SWAMI ALAYA MUNDRAM AANDU VIZHA





 Srimath Hanumathdasan Valaagam Megalasinnampatti Gramam, Krishnagiri

23.6.2014 Monday
4pm Vikneswara Puja etc
5pm Thirukovil Ganapathy Puja etc

24.6.2014 Tuesday
5am Maha Ganapathy Punar Puja followed by 1st Kaala Poornaheethi
10am 2nd Kaala Yaaga Saalai Puja etc
5pm 3rd Kaala Yaaga Saalai Puja etc

25.6.2014 Wednesday
5.20am _ 5.50am 4th Kaala Yaaga Saalai Puja followed by Vimana Kumbhabhisegam, Mulasthaana Kumbhabhisegam, Mahaa Abhisegam, Alangaaram, Archanai, Mahaa Deeparaathanai & Prasaatham




Thank: https://agathiyarvanam.blogspot.ru/

Saturday, June 21, 2014

மௌன வித்தை ( பேசா மந்திரம் )


மந்திரங்களில் பேசும் மந்திரம், பேசா மந்திரம் என்றநிலைகள் உண்டு. பேசா மந்திரம் என்னவென்றுதெரிந்தவர்கள் ஞானிகள் என்கின்றனர் சித்தர்கள்.
பேசா மந்திரத்தை மௌனம் என்று குறியீட்டின் மூலம்சித்தர்கள் தங்கள் பாடல்களில் குறிப்பிடுகின்றனர்.
1882 ல் வெளியிடப்பட்ட சட்டைமுனி நாயனார் முன்ஞானம், பின் ஞானம் என்ற புத்தகத்தில் சட்டைமுனிநாயனார் பின்ஞானம் என்ற பாகத்தில் பேசா மந்திரம்எனப்படும் இந்த மௌன வித்தை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மௌனவித்தை யாருக்கு யார் கொடுத்தார்கள் என்பதைகீழ்க்கண்ட பாடல்கள் விளக்குகின்றன.
“கிட்டினோங் கைலாய பரம்பரையினாலே கேளுமக்களாலாச்சாpயங் கொங்கணா; தான் சென்று,கிட்டினோ மென்று சொல்லியீசானத்தே கெடியானரசமுண்டு சட்டைபோக்கிக், கிட்டினோ மீசானந்துதித்தோ மென்று கெடியாக தவசிருந்து முத்தனாகி,கிட்டினோமென்று சொல்லி தசஷணாமூh;த்தி பதம்பிடித்து பணிந்திட்டாரே”
“தவம் பல செய்து கர்மவினைகளை கழித்து, ஒன்பதுவாசலை அடைத்து பத்தாவது வாசலைத் திறந்து,அமுதத்தை பருகி, கயிலாயம் சென்று தசஷணாமூ;த்திபாதம் பணிந்து, ஞானத்தை அடையக் கூடிய வழியைஎனக்;குக் காட்டுங்கள்” என்று கொங்கணர் வேண்டினார.;

“பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாயன் பாருலகிற்பிறந்தவனோவிப்படி தானானாய், மணிந்திட்டச் சடம்போக்கிக் கைலாயத் தேகமானதுதான் வெகுகடினமதிகமெத்த, கனிந்திட்ட கனிவாலே வீறத்தாலேகலங்காமற் சமாதியுற்று கயிலாயத்திற், றணிந்திட்ட புத்திகொண்டுயிங்கே வந்தாய் சாதகமாயொருவரைங்கண்டிலேனே”

கால்களில் வீழ்ந்த கொங்கணரைப் பார்த்து, தசஷணாமூர்த்திமனிதர்கள் வாழக்கூடிய பூவுலகில் பிறந்து தவங்கள் பலசெய்து சித்திகள் பல பெற்று எப்படி இந்த நிலையைஅடைந்தாய். மனிதர்கள் இறந்தால் அவர்கள் தங்கள்உடலை உதிர்த்து விட்டு செய்த தவப் பயனால்; உயிராகத்தான் இந்த கயிலாய மலையை அடைய முடியும்.அத்ததைகய நிலை பெற்றவர்கள் தான் இந்த கயிலாயமலைக்கு அதிகமாக வந்தவர்கள். ஆனால் நீ ஜீவசமாதிஅடைந்த பின்பு உடலை ஜீவசமாதியில் வைத்து விட்டுஉயிராக இந்த கயிலாய மலைக்கு எப்படி வந்தாய், இப்படிவந்த ஒருவரையும் நான் இதுவரை கண்டதில்லை என்றுதசஷணாமூர்த்தி கூறுகிறார்.

”கண்டிலேனாச்சாயங்கமா ரனேபாருங்கலந்தநற்சென்மமிவா; கைலாயமானா;, ஒண்டிபேநாலதுக்கு மகத்து வந்தானென்னவுற்ற சிவ விந்துவின்னிலப்படிதானாச்சு, கன்டிலேனிவரைப் போற்சித்தா;காணேன் காரணமாயிவனுக்கு தீசஷிப் பேனான்,பண்டிலேன் கொங்கணரை மயங்க வேண்டாம்பரம்பரமாய் வந்து தந்த மௌணந்தானே”
இது எவ்வளவு பெரிய ஆச்சரியம . இந்த ஜென்மத்திலேயேகர்மவினைகளை கழித்து கயிலாயம் வந்திருக்கிறார்.கயிலாயம் வர வேண்டுமென்றால், விந்து நாதம, இரண்டுஎட்டு, இடகலை பிங்கலை, ஆகியவற்றின் பொருள் தெரியவேண்டும். மேலும் சிவனின் விந்து என்று சொல்லப்படுவது எது என்ற ரகசியமும் தெரிந்திருக்க வேண்டும்.இவர் கயிலாயம் வர முக்கிய காரணம் சிவ விந்துவின்ரகசியம் தெரிந்து, அதன் வழி நடந்திருப்பதனால் தான்இவர் கயிலாயம் வர முடிந்தது. இவ்வளவு சிறப்புகள்வாய்ந்த கொங்கணரைப் போல ஒரு சித்தரை நான்கண்டதில்லை என்று அவருக்கு ஞானம் அடைவதற்கு உரியவழியை சொல்லி தீட்சை கொடுத்தார். அந்த ரகசியம் தான்பேசா மந்திரம் எனப்படும் மௌன வித்தை எனப்படுகிறது.இந்த மௌன வித்தை சித்தர் பரம்பரை என்றுசொல்லப்படும் குரு சீடன் பரம்பரையாக ஒருவர் மாறிஒருவராக வந்து கொண்டேயிருக்கிறது.

”மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன்மருவியவா காலாங்கிக்கதுவே சொன்னா், மௌனவித்தைகாலாங்கி போகருக்கு சொன்னா; மகத்தானபோகருந்தானுனக்குச் சொன்னா; மவுனவித்தையகண்டாதியறிந்து கொள்ளு மற்றொன்று மயக்க மற்றுமௌனத்தாh;க்கு, மௌனவித்தை யெய்தாக் கால்வனேஞானி வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே”

கொங்கணர் பேசா மந்திரம் எனப்படும் மௌனவித்தையைதிருமூலருக்கு சொன்னார. திருமூலர் காலங்கிநாதருக்குசொன்னார்; காலங்கி நாதர் போகருக்கு சொன்னார்; போகர்உனக்குச் சொன்னார் என்று சட்டைமுனி நாயனாரைக்குறிப்பிடுகிறார். மௌன வித்தை என்ன என்பதை கண்டுகொள்ள வேண்டும் மௌன வித்தையைக் கண்டுகொண்டால் மட்டுமே இவ்வுலக மாயையிலிருந்து தப்பிக்கமுடியும். ஞான வழியைக் காட்டுகிறேன் என்று சொல்லும்ஏமாற்று வித்தைக் காரர்களிடமிருந்து விலகி இருக்கமுடியும் மௌன வித்தை என்று சொல்லப் படுகிற பேசாமந்திரத்தை தெரிந்து கொண்டு, அதனை செயல்படுத்துபவனே ஞான நிலையை அடைய முடியும். அவனேஞானி என்று அழைக்கப்படுகிறான்; அகாரம்; உகாரம்; மகாரம்என்று அழைக்கப்படுகிற மூன்றில் பேசா மந்திரம் மகாரம் மஎன்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது என்று கொங்கணர்சொல்கிறார்.
மௌன வித்தையின் சிறப்புகள் பற்றி கீழ்க்கண்ட பாடல்கள்விளக்குகின்றன:

”சித்தாகுஞ் சித்தியுமாமெட்டெட்டு மாடுந் திறமாகநின்றவா;க்;கு மந்திரஞ்சித்தி பத்தாகும் வேதத்தில்மந்திரத்தைப் பாவி பல பலெனப் பேசியவா;சேவிப்பா; கோடி கத்தாதும் நாய் போலே கற்றியென்னகாசிக்கு மாகாது சித்தியில்லை, முத்தான மௌனம்விட்டால் மௌனம் பாழாச்சு மோசமிந்தவேதமெல்லாம் பொய்யென்பாரே”

மௌன வித்தை தெரிந்தவருக்கு மட்டும் தான் மந்திரங்கள்எல்லாம் சித்தியாகும் வேதங்களில் உள்ள மந்திரங்களைஉச்சாடணம் செய்து கோடி முறை உரு ஏற்றினாலும், நாய்போல உலகமெல்லாம் சுற்றினாலும், காசி போன்றபுனிதமான இடங்களுக்குச் சென்றாலும் மந்திரங்கள்சித்தியாகாது. கடவுள் நிலை உணர முடியாது. மௌனவித்தை தெரியாதவருக்கு, வேதங்களில் உள்ள ரகசியங்கள்தெரியாது. வேதங்களில் உள்ள ரகசியங்கள் தெரியாதகாரணத்தினால,; வேதங்களே பொய் என்பர்.

”பொய்யென்று யெண்ணியெண்ணி யுலகங்கெட்டுப்போச்சப்பாவதனாலேயுக பேதமாச்சு, கையென்றுயோகத்தில் மௌனமுட்ட கடுஞ்சித்தியறிவு மட்டுங்கலந்துதாக்கு, கையென்ற நி;த்தமப்பா ஆறிற்காணுஞ்சாதகமாய் மேல்மூலந்தாண்டிக்காணும், மெய்யென்றுபிடித்தாக்காலவனே யோகி விரைந்துயிதையறியாவிட்டால் விருதமாடே”
மௌன வித்தை தெரியாத காரணத்தினால், புராணங்கள்,உபநிஷத்துக்கள் ஆகியவைகளில் உள்ள கருத்துக்களைப்புரிந்து கொள்ள முடியவில்லை. கடவுள் என்றால் என்னஎன்றும,; கடவுளை அடையக் கூடிய வழி எது என்றும்கேட்பவர்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுக்கமுடியவில்லை. அதனால் கடவுள் உண்டா இல்லையா என்றநிலை உருவாகி, ஆத்திகர,; நாத்திகர் என்ற பிரிவுஉண்டாகி உலகம் இரண்டாகி பிளவு பட்டு நிற்கிறது. மௌனவித்தையை தெரிந்து ஆறு ஆதாரங்களைக் கடந்து சென்றுபிரம்மரந்திரத்தில் தன் ஜீவனை இணைப்பவனே யோகி.இதை அறியாவிட்டால் ஒன்றுக்கும் உதவாத மாட்டுக்குச்சமம் என்கிறார் சட்டைமுனி நாயனார்.

”நன்றான மௌனத்திற் கடிகை சேர நல்வினையுந்தீவினையும் நாசமாகும், நன்றான மௌன மென்றுநினைக்க முத்தி நல்லோ;கள் நினைப்பா;கள் மற்றோ;காணா;, நன்றான மௌனமல்லோ ஷிகள் சித்தா;நாலுதிக்குஞ் சொரூபத்தைக் கண்டா; கண்டா, நன்றானமௌனமல்லோ சாத்திரங்கள் தோறும் நலமாகக்கூப்பிடுது கண்டிலாரே”

மௌன வித்தை தெரிந்தவர்கள் மட்டுமே அதைசெயல்படுத்தி கர்ம வினை என்று சொல்லப் படுகிற பாவபுண்ணியங்களை கழிக்க முடியும்; பாவ புண்ணியங்களைக்கழித்தால் மட்டுமே முக்தி அடைய முடியும்; அதனால்மௌன வித்தை தெரிந்தவர்களால் மட்டும் தான் முக்திஅடைய முடியும் என்பதை உணர வேண்டும். மற்றவர்கள்எந்த வழிகளில் முயற்சி செய்தாலும் முக்தி அடையமுடியாது. மௌன வித்தை தெரிந்ததால் தான் சித்தர்கள்அனைத்திலும்; அதாவது துhணிலும், துரும்பிலும்,கடவுளைக் கண்டனர். வேதங்கள், உபநிஷத்துகள் மற்றும்அனைத்து சாத்திரங்களும் கூறுவது, மறை பொருளாகவிளக்குவது, குறியீடுகளாகக் குறிப்பிடுவது இந்த மௌனவித்தையைத் தான் என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றனர் என்கிறார் சட்டைமுனி நாயனார்.

”கண்டிலா; மௌனத்திலனேக சித்தி காணுமப்பாசொல்கிறே நன்றாய்க் கேளு, மண்டிலா்; மந்திரங்கள்செபிக்கும் போது அப்பனே மௌனமென்ற தீசைஷகேளு, ஒண்டிலாய் வாய் மூடி பேச்சு மற்று ஒருசேரை சமைத்துண்டு ஒரு போதப்பா, விண்டிலாதென்னேரஞ் செபித்தாயானால் விளங்கியதோரேழுலஷமந்திரமுஞ் சித்தே”

மௌனவித்தை தெரிந்து செய்தால் அஷ்டமா சித்தி உட்படபல்வேறு சித்திகளும் கிடைக்கும் என்பதை அறியாமல்இருக்கிறார்கள். மௌனவித்தையின் சிறப்புகளைசொல்லுகிறேன் கேள், நீ மந்திரங்களைச் செபிக்கும் போதுமௌன வித்தை தெரிந்தவர்களிடம,; மௌனவித்தைதீட்சை உனக்கு சொல்லித் தரும்படி கேள். தனியானஅமர்ந்து வார்ததை எதுவும் பேசாமல் வாயை மூடிஅமைதியாக மௌன வித்தையை தொடர்ந்து செய்துகொண்டே இரு. 

காலை, மதியம், மாலை, இரவு என்றுநேரம் பார்க்காமல் எந்த நேரமும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பாயேயானால் ஏழு லட்சம் மந்திரம்மட்டுமில்லை, அதற்கு மேலும் மந்திரங்கள் சித்தியாகும்.மந்திரங்கள் சித்தியாக வேண்டுமென்றால் மௌன வித்தைதெரிந்திருக்க வேண்டும் என்கிறார்.

மௌன வித்தை என்பது சித்தர்கள் கலை. அதுதகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்என்பதற்காகவே சித்தர்கள் தங்கள் பாடல்களில் மௌனவித்தையை மறைத்து வைத்திருக்கிறார்கள். மௌனவித்தையின் ரகசியம் தெரிந்து, அதை செய்து வருகிற ஒருசில பேர் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்.
முயற்சி, முன்வினை, ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலமேஒருவர் மௌனவித்தையின் ரகசியத்தை தெரிந்து கொள்ளமுடியும்

புழமொழிகளின் விளக்கத்தை சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே பின்வரும் ஒரு பாடலின்விளக்கத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

திருமூலர் ”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்” என்கிறார்.
நாயோட்டு மந்திரம் என்றால் நான் என்னும் அகந்தையைஓட்டும் மந்திரம். நான் என்ற அகந்தையை எந்த மந்திரமும்ஓட்டாது. மௌன வித்தை என்ற பேசா மந்திரம் மட்டும்தான் ஓட்டும். சாதாரண மந்திரங்களால் நமனை அதாவதுஇறப்பை வெல்ல முடியாது.

நான் என்னும் அகந்தையை ஓட்டும் மௌன வித்தைஎன்னும் பேசா மந்திரம் மட்டும் தான் இறப்பை வெல்லும்.மேளன வித்தை என்னும் பேசா மந்திரத்தைசொல்கிறவர்களுக்கு மரணம் இல்லை என்பது தான் இதன்பொருள்.



Friday, June 20, 2014

ஜீவ பீடம் மாங்காடு அருகே பட்டூர்

சகல தோஷங்களையும் போக்கும் சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம்!!!
சித்தம் என்றால் அறிவு. சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு. சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவம், யோகம், சோதிடம், மந்திரம், ரசவாதம் போன்ற அரிய அறிவியலையும், மக்கள் நல்வாழ்வுக்கான கருத்துக்களையும், இறைவனை உணரக்கூடிய வழிமுறைகளையும் தந்தவர்கள் சித்தர்கள். அத்தகைய சிறப்பு மிக்க சித்தர்களுள் ஒருவரான சர்ப சித்தர் ஜீவ சமாதியாகி இன்றுவரை மக்களுக்கு அருளி வரும் ஜீவ பீடம் மாங்காடு அருகே பட்டூர் கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ளது.

முன்பொரு காலத்தில் இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் இந்தப் பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. ஆனால் சர்ப சித்தர் சமாதியாகியிருந்த இந்த இடம் மட்டும் அமைதியாக இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியவர்கள் ஆராய்ந்த போது அங்கே மிகவும் பெரியதாக ஒரு லிங்க வடிவில் ஒரு கல் தென்பட்டுள்ளது. இங்கே தான் ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி அடைந்து உள்ளார். அந்த கல் பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும் பூதக்கல் என்றும் தெரியவந்துள்ளது. அந்த லிங்கத்தின் மீது இடது புறத்தில் பிறை வடிவமும், வலது புறத்தில் சூரியன் வடிவமும், லிங்கத்தின் மத்தியில் யோகச் சக்கரமும், பிரணவ மந்திரம் பொறிக்கப்பட்டு உள்ளது பஞ்ச புதங்களை குறிக்கும் விதமாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு அந்த லிங்கத்தின் மீது உள்ளது. இங்கே சமாதியாகியுள்ள சர்ப சித்தர் காலஹஸ்தியில் இருந்து வந்தவர் என்றும், வடக்கு நோக்கி சமாதி அடைந்து உள்ளார்என்றும் கூறப்படுகிறது. இவரது காலம் அறுதியிட்டு கூறமுடியாத அளவுக்கு மிகவும் பழமையானதாகும். சர்ப சித்தர் ஜீவசமாதியாகி, பூதக்கல் உருவாகி 1200 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆதிகாலத்தில் இந்த பூதக்கல்லைப் பார்த்து மக்கள் அச்சமுற்று அப்பகுதி வழியே செல்வதை தவிர்த்துள்ளனர். இதனால் அப்பகுதி புதர் மண்டி காடு போல மாறி, பூதக்கல்லைச் சுற்றி புற்று உருவாகியிருந்துள்ளது. அதன் அருகே செல்பவர்களுக்கு சர்ப்பங்கள்(பாம்புகள்) சீறும் ஓசை கேட்கவே பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்வதைத் தவிர்த்துள்ளனர். காலப்போக்கில் அப்பகுதியில் பூதக்கல் இருப்பதையே மக்கள் மறந்து விட்ட நிலையில் கடந்த 16 ஆண்டுகளுக்குமுன் சித்தர் அடிகளார் திரு. ஜி.டி.ரவிச்சந்திரன் அவர்களின் கனவில் வந்த சர்ப சித்தர், அசரரீயாக சில தகவல்களைக் கூறி, தான் ஜீவ சமாதி அடைந்துள்ள இடத்தையும், அடையாளத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சித்தர் அடிகளார் பல்வேறு கடுமையான சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் இடையே சித்தரின் அருளால் ஜீவசமாதி அமைந்திருக்கும் பகுதியை சுத்தம் செய்து, பூஜைகள் செய்து வழிபட்டு வரலானார். பின்னர் படிப்படியாக சர்ப சித்தருக்கு கோவிலும் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி தினத்தில் திருவிளக்கு பூஜையும், மகா சிவராத்திரி தினத்தன்று ஆறு கால பூஜையும், பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பரிகார பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இதில் மகாசிவராத்திரி அன்று நிறைவு பூஜையின் போது, பக்தர்களே நேரடியாக தங்களின் திருக்கரங்களால் சர்ப சித்தர் உறைந்திருக்கும் ஜீவ பீடமான பூதக்கல்லிற்கு அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசியைப் பெற்றுச் செல்கின்றனர். இது வேறெங்கும் இல்லாத, யாருக்கும் கிட்டாத கொடுப்பினை என்றால் அது மிகையில்லை.
இயற்கை சீற்றங்களைக் கட்டுப்படுத்தவும், சகல கிரக பீடை விலகவும், கல்வி, குழந்தைப் பேறு, திருமணம் கைகூட, சர்ப (நாக) தோஷம் விலக, நோய் குணமடைதல், திருஷ்டி, பித்ருக்கள் சாபம், சித்தர்கள், முனிவர்கள் சாபம் நீங்கவும், குடும்ப ஒற்றுமை, கணவன் மனைவி பிணக்கு நீங்கி நல்வாழ்வு வாழவும் இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலனளிப்பதாக இங்கு வந்து பயனடைந்த பக்தர்கள் கூறுவதை நாம் கேட்கலாம். பல்வேறு அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், முக்கிய அதிகாரிகள், திரை நட்சத்திரங்கள் இங்கு வந்து வேண்டி, அவர்களின் பிரார்த்தனை பலித்துள்ளதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். நேரில் சென்று தரிசிப்பவர்களுக்கு அது உண்மைதான் என உணரமுடிகிறது. நல்ல ஆன்மிக அதிர்வுகளை உணரலாம்.
சர்ப சித்தர் குடிகொண்டுள்ள பூதக்கல் பல்வேறு சூட்சும ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தொடர்ந்து இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அந்த ரகசிய சூட்சும அனுபவங்கள் கிடைத்துள்ளன. குரு கடாட்சம் பெற்றவர்களுக்கும், இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் சதா தவ நிலையில் இருக்கும் சர்ப சித்தரின் சகல அனுக்கிரகமும், தெய்வீக அனுபவங்களும் கிடைத்துள்ளன.
யாரிடமும் நன்கொடை, யாசகம் பெறாமல் சித்தரின் அருளாசியுடன் சர்ப சித்தர் ஜீவ பீடத்தை பராமரித்து, பூஜைகளும், நிகழ்ச்சிகளும், விழாக்களும், பவுர்ணமி அன்று அன்னதானமும் வழங்கி, இறைப்பணியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன்.
இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், மன அமைதி பெறவும், பிரச்சனைகள் தீரவும், நல்ல அதிர்வுகள் மூலம் நமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் சர்ப சித்தர். ஆன்ம பலத்தை அளிக்கவல்ல அதிர்வலைகள் நிரம்பிய சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தை தரிசனம் செய்து சித்தர்களின் அருளாசியை பெறுங்கள்.
தொடர்புக்கு: சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், கோவிந்தராஜ் நகர், மாங்காடு. கைப்பேசி எண்.9789826263.




Thank:
Facebook: Kumar Esan

Wednesday, June 18, 2014

Om siva siva Om

ஓம் சிவசிவ ஓம்” என்ற மந்திரத்தைப் பரப்புதல்    

 
 
 
 
 
 
 
 
 

Monday, June 16, 2014

Rare Old Photographs of Tirupati




Rare Old Photographs of Tirupati and Tirumala Before the Gold and Money
 
This is an article on "Rare Old Photographs of Tirupati and Tirumala Before the Gold and Money" 

The following rare old photographs show how Tirupati and Tirumala looked before the temple became rich and famous. You can see from the pictures that in those days it was a peaceful place without huge queues and crowds. Today over 40 million people visit the temple each year, and you can expect to wait up to 5 hours in the queue before having darshana of the main Balaji deity for a few moments.

In ancient literature, Tirupati is mentioned as Aadhi Varaha Kshetra. The Puranas associate the area with Lord Varaha, one of the Dashavataras of Lord Vishnu. Venkatadri is believed to be a part of Mount Meru, which was brought to the earth from Vishnu's abode of Vaikunta by his mount Garuda. The seven peaks represent the seven heads of Adisesha. Tirumala is also one of the 108 divya desams.
 
 
 
Posted Image
 
Posted Image
 
Posted Image
Posted Image
 
 
Posted Image
 
Posted Image
 
 
Posted Image
 
Posted Image
 
 
Posted Image
 
 
Posted Image
 
Posted Image
 
Posted Image
 
 
Posted Image
Add caption
 
Posted Image
 
Posted Image
 
 
Posted Image
 
 
Posted Image
 
 
Posted Image
 
 
Posted Image
 
 
 
Posted Image
 
Posted Image
 
 
Posted Image
 
 
Posted Image
 
Posted Image
 
 
Posted Image
 
 
Posted Image
 
 
Posted Image
 
Posted Image

Thank :

Posted by: Dhamu_MOH-Muscat <dhamu15@yahoo.co.uk>
Dhamu & Vijaya 
+968-92906291 
+968-24787080(R)