Wednesday, September 14, 2022

மதுரை புதுமண்டபம்

Very thanks🙏🙏
Velumeenambal

மதுரை புதுமண்டபத்தை கட்டும் பணியை  சுமந்தரமூத்தி என்ற சிற்பியிடம் திருமலை நாயக்கர் கி. பி.1626ல் கொடுத்தார்.

ஒருசமையம் யானை கரும்பு தின்ற திருவிளையாடலை சுமந்தரமூத்தி சிற்பமாக செதுக்கிக் கொண்டிருந்தார்  அப்போது அங்குவந்த  திருமலைநாயக்கர் அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்தார், மன்னர்தான் மடித்துக்கொடுக்கிறார் என்பதை அறியாமல் சிற்பியும் வாங்கி  மென்றார்.  பின்னர் தவறை உணர்ந்த  சிற்பி சுமந்தரமூத்தி தனது கைவிரல்களை சுத்தியாளால் அடித்து நசுக்கிக் கொண்டார். அவர் வடிவமைத்த சிற்ப்பத்தை மண்டப மேடையின் பின்புறத்தில் இன்றும் காணலாம். பின்னர் 1645ல் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், பூமிக்கு அடியில் இருந்த எரிமலைகள், பாறைகளை உருக்கி, திரவ நிலையில் அவற்றை குழம்புகளாக மாற்றின. 

நாளடைவில் இந்த குழம்பு, குளிர்ந்து கடினத் தன்மையுடைய எரிமலை பாறைகளாக மாறின. இந்த பாறைகள் பல வகைப்படும். அதில் ஒன்று தான் “கிரானைட்’. 

படிகங்களாலும், களிமண் பாறைகளாலும் இந்த கிரானைட், தனித்தன்மை, வடிவம் பெற்றன. மைக்கா மற்றும் சில தாதுக்கள் இதில் உள்ளன. 

இந்த தாதுக்களைப் பொறுத்து, கிரானைட்டின் நிறங்கள் மாறுகின்றன. இவற்றைப் பொறுத்தே, வலிமையும், நீடித்து உழைக்கும் தன்மையும் பெற்று, மற்றவற்றிலிருந்து தனித்துவம் பெறுகின்றன.

கிரானைட்டின் மற்றொரு பண்பு, குழி விழுதல். கிரானைட்டில் உள்ள சிறிய தாதுப் பொருட்கள், “பாலிஷ்’ செய்யும் போதும், வேறு சில காரணங்களாலும் நீங்கி விடும்.

அப்போது, அந்த இடத்தில் சிறு குழி விழும். 
பாறைக் குழம்புகள், குளிர்ந்து தனி கல்லாக மாறும் போது, அதில் சில துவாரங்கள் இயற்கையாக உருவாகின்றன. 

இந்த துவாரங்கள், கிரானைட்டில் இருக்கும். ஆனால், நாளடைவில் இந்த துவாரங்கள், பெரிதாவதோ, சுருங்குவதோ கிடையாது.

உயர்தர “பாலிஷ்’ செய்த பின்னும், கிரானைட்டின் சில இடங்கள் “டல்’லாக இருக்கும். பார்ப்பதற்கு “வாட்டர் மார்க்’ போல் தெரியும். இதை மந்தமான புள்ளிகள் என்பர்.

இதையெல்லாம் சரி செய்ய தற்போது அதிக  தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

நிற்க!!

பல நூறு ஆண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட கல்லைத் தோண்டி,வெட்டி, பண்படுத்தி அதிலும் அதனை உயர் ரக "பாலீஷர்கள்" தோற்கின்ற வகையில் மெருகேற்றி....அதனைக்கொண்டே சிலைகளை நுணுக்கங்களோடு செதுக்க எவ்வளவு தொழில்நுட்ப திறன் இருந்திருக்க வேண்டும்?!

அதிலும் .....

கோவிலின் ஏதோ ஒரு மூலையில் தூணில் நிறுத்தி வைத்து அழகு பார்க்க இத்தனை உழைப்பையும் ஏன் நாம் செய்ய வேண்டும் என்கிற சிறு வெறுப்போ.. ஒதுக்கப்பட்டு விட்டதே என்கிற ஏமாற்றமோ இல்லாது ...

இது என் படைப்பு எனக்கான அங்கீகாரம் கிடைக்கப்போகிறது என்கிற எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ஏன்..தன் பெயரையோ தான் யார் என்கிற அடையாளங்கள் எதையுமோ பொறிக்காது....இறைவனை படைத்த அந்த "இறை சிற்பி!" எப்படிப்பட்டவராக இருந்திருப்பார்?!

இப்படிப்பட்ட சிற்பங்களை ஒரு கோவில் முழுக்க உருவாக்க எத்தனை சிற்பிகள், தொழிலாளர்கள்,வல்லுநர்கள் இருந்திருப்பார்கள்?!

இப்படிப்பட்ட அதி புத்திசாலிகளையும்,வல்லுநர்களையும் கொண்டு உலகின் அதி சிறந்த கற்கோவில்கள் படைத்த தமிழர்களையும், அவர்களின் திறமையையும் எத்தனைப்பேர் நினைவில் வைத்துள்ளார்கள்?!

அக்பரையும் பாபரையும் விரல் நுனியில் வைத்திருக்கும் இதே நாம் தான் சோழர்களையும் பாண்டியர்களையும் வெறும் "நம்பர்களாக!" மட்டுமே வைத்துள்ளது தான் இந்த காலக்கட்டத்தின் மிகப்பெரிய நகைமுரண்!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி எதிரிலிருக்கிறது புதுமண்டபம். மன்னர் திருமலை நாயக்கர் 1626ல் தொடங்கி 1645ல் இம்மண்டபத்தைக் கட்டி முடித்தார். நடுவில் "வசந்த மண்டபம்" உள்ளது. சுற்றிய பள்ளத்தில் கோடை காலங்களில் நீர் நிரப்பி வைக்க, பள்ளத்து நீரில் குளித்தெழுந்து உள்ளே வரும் காற்று வசந்த மண்டபத்தில் இருக்கும் அனைவரையும் குளிர வைத்து விடும். 333 அடி நீளம்,105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 124 தூண்கள் இருக்கின்றன. யாழிகள், குதிரை வீரர்கள், சூரிய சந்திரர் உருவங்கள். திருவிளையாடல் காட்சிகள், தடாதகை பிராட்டியார், கல் யானைக்கு கரும்பு அளித்தது உள்ளிட்ட சிற்பங்களுடன், ஏகபாத, கஜசம்கார மூர்த்திகளின் சிலைகளும், நடுமண்டபத்தில் கருங்கல் மேடையும் உள்ளன. மண்டப நடுவரிசை தூண்களில் நாயக்கமன்னர் திருமலை மன்னர் உள்ளிட்ட பத்துப்பேரின் உருவச்சிலைகள் வரிசையாக மிக அழகுபடச் செதுக்கப்பட்டிருக்கிறது. மதுரையின் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான இந்த பழைய மண்டபத்தை இன்றும் "புதுமண்டபம்" என்றே மக்கள் அழைக்கின்றனர்.
அதன் பின்னர் வேறுபல மண்டபங்கள் பலரால் மீனாட்சியம்மன் கோயிலிலும் மதுரையிலும் கட்டப்பட்டுவிட்டன.
ஆனாலும் இம்மண்டபத்திற்கு மட்டும்

காலங்கடந்தும் "புதுமண்டபம்" என்ற பெயர் நிலைத்துவிட்டது.