நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) நோன்பாகும். இது தட்சணாயண் காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதிமாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம்கூறுகின்றது[மேற்கோள் தேவை]. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.
மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம்,ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமானதுர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்கவிரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின்ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்[மேற்கோள் தேவை].
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம்.
நவராத்திரி வழிபாட்டு முறை.
1. மதுரை மீனாட்சி அம்மனை முதலாம் நாள் :-
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக் காரி. நீதி யைக்காக் கவே இவள் கோபமாக உள்ளா ள். மற்றும் இவளது கோபம் தவறு செ ய்தவர்களை திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
2. மதுரை மீனாட்சி அம்மனை இரண்டாம் நாள் :-
இரண்டாம் நாளில் அன்னையை வரா ஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வரா ஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுத ங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியி ருப்பவள். தனது தெத்து பற்களால் பூமி யை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி,தண்டினி, பகளாமுகி போ ன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன் னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில் லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
3. மதுரை மீனாட்சி அம்மனை மூன்றாம் நாள் :-
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திரா ணியாக வழிபட வேண் டும். இவளை மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந் தியவள். ஆயிரம் கண்ணுடைய வள். யானை வாகனம் கொண் டவள். விருத் திராசுரனை அழித்த வள். தேவலோக த்தை பரிபா லனம் செயபவளும் இவளே யாகும். பெரிய பெரிய பதவிகளை அடை யவிரும்புபவர்களிற்கு இவ ளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வே லை கிடைக்க, பதவியில் உள் ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள உய ர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளே யாகும்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண் பொ ங்கல்.
4. மதுரை மீனாட்சி அம்மனை நான்காம் நாள் :-
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவி யாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம்,கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப் பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.
5. மதுரை மீனாட்சி அம்மனை ஐந்தாம் நாள் :-
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ் வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வ ரனின் சக்தியா வாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பா ம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்த ருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண் டும்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
6. மதுரை மீனாட்சி அம்மனை ஆறாம் நாள் :-
இன்று அன்னையை கவுமாரி தேவி யாக வழிபடவேண்டும். மயில் வா கனமும் சேவல் கொடியும் உடைய வள். தேவசேனா திபதியான முருக னின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவ ங்களையும் விலக்கிடுபவள். வீரத் தை தருபவள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.
7. ஏழாம் நாள் :-
ஏழாம்நாள் அன்னையை மகா லட் சுமியாக வழிபட வேண்டு ம். கையில் ஜெபமாலை, கோட ரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம்,தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ரா யுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கல யம்,தாமரை, கமண்டலம் ஆகிய வற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவ ந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னை யாகும்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க் கண்டுச் சாதம்.
8. மதுரை மீனாட்சி அம்மனை எட்டாம் நாள் :-
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உட லும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தரு பவள். சத்ருக்கள் தொல்லை யில் இருந்து விடு பட அன்னையின் அருள் வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷா சுர மர்த்தினி அலங்கார த்தில் காட்சியளிப்பார் கள்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க் கரைப் பொங்கல்.
9. ஒன்பதாம் நாள் :-
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன் னையின் அருள் அவசியமாகும்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.
For daily Navarathri songs , click : https://tamil.webdunia.com/
For daily Neivedhyams, flowers etc. click
https://shivsaitours.blogspot.
Also click the following link to know more about navarathri :
https://temple.dinamalar.com/
Thank :lakshmikanthan shankar
மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDelete_/\_Om SivaSiva Om_/\_
ReplyDeleteMiga arumaiyana vilakkam .......nandri
ReplyDelete