Tuesday, April 10, 2018

உபநிடதங்களின் வகைகள்

Thank  : 🌺அகாரப்பள்ளி அறக்கட்டளை🌺 Whatapp group
Image result for ஈசா வாஸ்ய உபநிடதம்

உபநிடதங்களின் வகைகள்
☘☘☘☘☘☘☘☘☘☘

📚இந்த உபநிடதங்கள் 112 வரையும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றன.

📚ஆனால் இவைகளில் அதிகமானவை பிற்காலங்களில் உபநிடதங்களாக உருவாக்கிக் கொள்ளப்பட்டவையாகவே இருக்கின்றன.

📚இருப்பினும் இவற்றில் கீழ்காணும் பதின்மூன்று உபநிடதங்கள் உண்மையானவை என்று கொள்ளலாம்.

📚 அதிலும் ... அதி அற்புதமானது பத்து உபநிடதங்கள்....

📚அவற்றின் காலங்களைக் கொண்டு அவைகளை வகைப்படுத்தலாம்.

✍ 1. பழங்கால உபநிடதங்கள்

✍ 2. இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள்

✍3. மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள்

✍4. நான்காம் காலகட்ட உபநிடதங்கள்


📚1. பழங்கால உபநிடதங்கள்

🌹கி.மு. 700 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் பழங்கால உபநிடதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

📚 பழங்கால உபநிடதங்கள்

1.ஈசா

2. சாந்தோக்யம்

3. பிரகதாரண்யகம்

📚. இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள்

கி.மு. 600 -500 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த இரண்டு உபநிடதங்கள் இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை

4.ஐதரேயம்

5.தைத்திரீயம்

📚மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள்

கி.மு. 500 -400 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த ஐந்து உபநிடதங்கள் மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை

6.பிரச்னம்

7.கேனம்

8. கடம்

9.முண்டகம்மா

10.மாண்டூக்யம்

📚நான்காம் காலகட்ட உபநிடதங்கள்

கி.மு. 200 -100 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் நான்காம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை

11. கவுஷீதகி

12. மைத்ரீ

13. சுவேதாசுவதரம்
✍✍✍✍✍✍✍✍✍✍

அன்பிற்கினிய அகாரப்பள்ளி அறக்கட்டளை அடியார்களே... தங்களுக்கு.... ஏற்கனவே நான் பகிர்வு செய்த தைத்திரேயம் தவிர்த்து மீதமுள்ள பனிரெண்டு உபநிடதங்களை உங்கள் அருளாலும்... அந்த பரமாத்மா அருளாலும் விளக்கங்களை அளிக்கிறேன்...

ஓம் நமச்சிவாய....

☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘

🌹 அன்புடன் பகிர்வது
🌹சி. மதியழகன்
🌹 பட்டதாரி ஆசிரியர்
🌹 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
🌹 வாழப்பாடி
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘



No comments:

Post a Comment