Wednesday, August 23, 2023

108 வெற்றிலை பாக்கு வைப்பர் அந்த வெற்றிலை பாக்கு யார் யாருக்கு என்றது பற்றிய பட்டியல்.

Thank🙏 to fb

செங்குந்த முதலியார் சமூக திருமண நிச்சயதார்த்த விழாவில் 108 வெற்றிலை பாக்கு வைப்பர் அந்த வெற்றிலை பாக்கு யார் யாருக்கு என்றது பற்றிய பட்டியல்.

1 ஸ்ரீ சித்திபுத்தி வியைகருக்கு 

2 சிவகுருநாதனுக்கு 

3 காஞ்சி காமாட்சி அம்மனுக்கு

4 ஏகாம்பரநாதருக்கு 
5 மதுரை மீனட்சிதேவிக்கு

6 சொக்கநாதருக்கு
 
7 காசி விசாலாட்சிக்கு

8.காசி விஸ்வநாதருக்கு

9 தவசத்தி தாய்மார்களுக்கு

10 அளிஞ்சியப்பருக்கு

11 பெருங்கருணை அம்மனுக்கு

12 வைத்தியநாத சுவாமிகளுக்கு

13 தையல் நாயகி அம்மனுக்கு

14 செல்வமுத்துக்குமார சுவாமிக்கு

15 பேரூர் பட்டீள்வரச் சுவாமிக்கு

16 பச்சைநாயகி அம்மலுக்கு

17 சப்தகிரி வேங்கடேச பெருமாளுக்கு 18 மங்காபுரம் அலமேலுமங்கை தாயாகுக்கு "P

10 சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு 20 பூரண புஷ்களாம்பிகைக்கு

21... விஜயமங்கலம் விஜயாபுரி அம்மனுக்கு மோகனூர் அங்காள பரமேஸ்வரிக்கு

22

23 மூலனூர் வஞ்சியம்மனுக்கு 24 ஈடுவுச்சேரி சிவளாபுரி அம்மனுக்கு

25 பெண் வீட்டார் குலதெய்வங்களுக்கு மாப்பிள்ளை விட்டார் குலதெய்வங்களுக்கு

குன்றுதோராடும் குமரனுக்கு தலை ஆறுபடைவீடு நக்கீரனுருக்கு

திருப்பரங்குன்றம் கார்த்திகேயனுக்கு 30 திருச்செந்தூர் ஆறுமுக சுவாமிக்கு 31 திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமிக்கு

20

32.. பழனி ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு 33 சுவாமிமலை சுவாமிநாத சுவாமிக்கு

34 திருத்தணிகை தண்டபாணி சுவாமிக்கு

35 பழமுதிர்சோலை அழகமுருகனுக்கு

36 வீரவாகுதேவர் செங்கந்தருக்கு

37 வீரகேசரிதேவர் செங்கந்தகுக்கு 38. வீரமகேந்திரதேவர் செங்குந்தருக்கு

39 வீரமதேசதேவர் செங்கந்தருக்கு M 40. வீரபுராந்திரதேவா செங்குந்தருக்ற

வீரராக்கத்தேவர் செங்குந்தருக்கு 42 வீரமார்த்தாண்டதேவர் செங்குந்தருக்கு

41

43 வீரசந்தகதேவர் செங்குந்தருக்கு 44 வீரதிரதேவர் செங்குந்தருக்கு 45 இலட்சம் வீரதேவர் செங்குந்தருக்கு

46 அகஸ்திய மாமுனிவருக்கு 47 காளங்கி முனிவருக்கு

48 மதங்கி முளிவருக்கு

49 போக முனிவருக்கு 50 புலிப்பாணிச் சித்தருக்கு

51 அருணகிரிநாதருக்கு

52 வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு 

53 வண்ணக்களஞ்சியம் காஞ்சி நாகலிங்க முனிவருக்கு

54.ஸ்ரீ பழனி பெரியநாயகி அம்மனுக்கு அரம்பை காமாட்சி தாயாருக்கு
65 64 சண்முகஞானியார் சுவாமிகளுக்கு
79 அமுதகளி சம்பந்த சாணுலயருக்கு மார்க்கசகாய தேவருக்கு

81

57 முத்துக்குமார சுவாமிக்கு பராசத்தி வேலாயுதத்திற்கு

59 செஞ்சேவல் கொடிக்கு

மரகதமயில் வாகளத்திற்கு

61 விண்ணுலகநாயகி தெய்வானை அம்மனுக்கு

மண்ணுலகநாயகி வள்ளி அம்மைக்கு

அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கு

பன்னிறு ஆழ்வார்களுக்கு 66 தென்னாடுடைய சிவஸ்தலங்களுக்கு

67 தென்னாடுடைய சிவடிையார்களுக்கு

குன்றுதோராடும் குகனடியார்களுக்கு

69 திருப்போரூர் சிதம்பர சுவாமிகளுக்கு 70 தில்லை நடராஜப் பெருமானுக்கு

71 தில்லை சிவகாமி அம்மனுக்கு

72 சிவசைலம் கல்யாணி அம்மனுக்கு 73 சிவசைலம் சிவசைல நாதருக்கு

74 திருவண்ணாமலை அருணசலீஸ்வரருக்கு 75 உண்ணமுலைத் தாயாருக்கு

76 கந்தவேட்கினிய முக குந்தனூர்க்கு. 77 கம்பைசூழ் காஞ்சி சுச்சியப்பருக்கு

குமரகுருபர சுவாமிகளுக்கு

நம் பிரான் திருமூல நாதருக்கு 82 ஆறுசமயம் ஆச்சாரியர்களுக்கு 33 கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தருக்க

84 பாம்பன் குமரசுருதாச சுவாமிகளுக்கு சிரவை சாமானந்த சுவாமிகளுக்கு

85 திருவிசைப்பாவிசைத்த சேந்தனுகுக்கு 86

87

திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு

89 திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு.

90 மாணிக்கவாசக சுவாமிகளுக்கு

01 பிரிங்கி முனிவருக்கு

92 மாணிக்கவல்லித் தாயாருத்த 93

தரளவல்லித் தாயாருக்கு

94 புட்பராசுவல்லித் தயாருக்கு கோமேதகவல்லித் தாயாருக்கு

95 96 வைடூரியவல்லித் தாயாருக்கு

97 வயிரவல்லித் தூயாருக்கு

98 மரகதவல்லித் தாயாருக்கு 222

99 பவளவல்லித் தாயாருக்கு 100 நிலவல்லித் தாயாருக்கு

101 சேக்கிழார் பெருமானுக்கு

நாரத மாமுனிவருக்கு 103 இடும்பா சூரனுக்கு

104 சிற்றம்பலவ நாடியருக்கு

கவிராஜ பண்டிதருக்கு

106 ஆறெழுத்து ஓதும் அடியார்களுக்கு

107 திருநீறு புளைவார்க எனைவருக்கும் 108 தெத்தும் தெரியாமலும் உள்ள தேவாதிதேவர், திருத்தொண்டர் அனைவருக்கும்

Tuesday, August 8, 2023

பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஏன் நடுகிறார்கள்? என்று தெரிந்து கொள்வோம்! வாங்க..

Thanks FB
🔱💥🤔இந்துக்களே! இந்துமதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்! இந்துமத வாழ்வியல் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்!

🔱💥🤔முகூர்த்தக் கால் நடுவது ஏன்? எதற்காக!?

🔱💥திருமண நிகழ்ச்சிகளில் முகூர்த்தக் கால் நடுவதற்கு இது தான் காரணமா?

🔱💥 திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள், கோவில்களில் திருவிழாக்கள் போன்றவை துவங்குவதற்கு முன் பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது மங்கள நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்யப்பட்டு விட்டதன் அடையாளமாக கருதப்படுகிறது. 

🔱💥 பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஏன் நடுகிறார்கள்? என்று தெரிந்து கொள்வோம்! வாங்க..

🔱💥ஈசானிய மூலை :

🔱💥 திருமணத்திற்கு முன் வீட்டின் முன்பு முகூர்த்தக் கால் அல்லது பந்தக்கால் நடுவது, மாவிலைத் தோரணம் கட்டுவது போன்றவை மரபு. பெரும்பாலும் பந்தக்கால் நடுவதற்கு மூங்கில் மரங்களையே பயன்படுத்துவார்கள். மூங்கிலை நன்கு சுத்தம் செய்து பின்பு மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்பு வெள்ளைத் துணியில் செப்புக்காசை வைத்து கட்டி, இதை அந்த மூங்கிலின் மேற்பகுதியில் கட்டுவார்கள். 

🔱💥 பந்தக்கால் நடும் குழியில் நவதானியங்கள் போட்டு, பால் ஊற்றி உறவினர்கள் ஒன்று சேர்ந்து இந்த பந்தக்காலை வடகிழக்கு மூலையில் நடுவார்கள். வடகிழக்கு மூலையை ஈசானிய திசை எனக் கூறுவர். ஈசானிய திசை சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசையாகும். 

🔱💥நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு, மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

,🔱💥 மணமகன் வீடு, மணமகள் வீடு, விசேசம் நடக்கும் இடம் ஆகியவற்றில் தனித்தனியாக, இந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சுபமுகூர்த்த நாளில், சுபமுகூர்த்த வேளையில் நடப்படும். இந்த பந்தக்காலே நடக்க போகும் விசேசத்திற்கு பந்தலை தாங்கி நிற்கும் தூண் போன்றதாக அமையும் என்பார்கள். 

🔱💥 மூங்கில் மரம் செழித்து உயரமாக வளர்வது போல, புதிதாக வாழ்க்கையை துவங்க போகும் மணமக்களின் வாழ்க்கையும் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த சடங்கு நடத்தப்படுகிறது.

🔱💥வரலாற்றில் பந்தக்கால் :

🔱💥 தற்போது திருமண விழாக்களின் போது குலதெய்வம் மற்றும் விருப்பமான தெய்வத்திற்கு அழைப்பிதழ் வைத்து வணங்குவது போல, முந்தைய காலத்தில் நாட்டில் நடக்கும் திருமணங்களுக்கு அந்நாட்டின் அரசருக்கும் மரியாதை நிமித்தமாக திருமண அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருந்தது. 

🔱💥 அப்படி அழைப்பு தந்த அனைவரது திருமணத்திற்கும் அரசனால் செல்ல முடியாது. எனவே, அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் என்பது பிற்காலத்தில் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அத்திருமணம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். 

🔱💥 அந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்பதை குறிப்பதற்காகவே பண்டைய காலம் தொட்டு திருமணத்திற்கு முன்பு பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஊன்றப்படும் வழக்கம் இருந்து வருகிறது.

🔱🔱 கண்திருச்டி விலகி நடக்க போகும் சுபகாரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும், மணமக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காகவும் முகூர்த்தக் கால் நடப்படும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்தே மற்ற திருமண சடங்குகளை தொடங்குவார்கள். 
🔱நன்றி! : கோடாங்கி பூசாரி🙏