Saturday, September 22, 2012

துவாதசி திதி அண்ணாமலை அன்னதானம் !!!



துவாதசி திதி அண்ணாமலை அன்னதானம் 


1. ஆதிசங்கரர் "கனகதாரா ஸ்தோத்திர"

ஒரு துவாதசி நாளைக்கு ஒரு வீட்டின் முன் போய் நின்று ஆதிசங்கரர், "பவதி பிக்ஷ¡ந்தேஹி" என்று சொல்லவேண்டும். ஏதாவது பி¨க்ஷ போட்டால் அதைமட்டுமே உண்ணவேண்டும். வேறெதையும் கேட்கக்கூடாது. ஒருவேளை மட்டும்தான். அந்த ஒருவேளையிலும்கூட மும்முறை மட்டுமே குரல் கொடுக்கவேண்டும். பிக்க்ஷை போடவில்லை யென்றால் அன்று பசியுடன் இருக்கவேண்டியதுதான். அவ்வாறு வீட்டின்முன்னால் சென்று குரல் கொடுத்தார். அந்த வீட்டுக்காரர்கள் பரம ஏழைகள். அன்று ஏகாதசி விரதம் முடித்து துவாதசி விரதத்தை நெல்லிக்கனியை உண்டு, பூர்த்தி செய்யவேண்டும். அதற்கான நெல்லிக்கனி மட்டுமே அந்த வீட்டில் அன்று இருந்தது. நெல்லிக்கனியை உண்ணவில்லையானால் விரதபங்கம் ஏற்படும்.

ஆதிசங்கரர் குரல் கொடுத்தபோது அந்த வீட்டு அம்மாள் எதை பி¨க்ஷயாகப் போடுவது என்று தெரியாமல் திகைத்தாள். இரண்டு முறை குரல் கொடுத்தாகிவிட்டது. மூன்றாவது குரலுடன் போய்விடுவார். அப்படியாகினால் ஓர் இளம் சன்னியாசியைப் பசியுடன் திருப்பியனுப்பிய பாவம் நேரிடும். ஆகவே நெல்லிக்கனியை ஆதிசங்கரருக்குப் போட்டுவிட்டாள். இதனைக் கண்ட ஆதிசங்கரர், 

அந்தப் பெண்மணியின் நிலைமை குறித்து மனம் கசிந்துருகி ஸ்ரீலட்சுமியிடம் வேண்டி 'கனகதாரா' என்னும் துதியைச் செய்தார். உடனே தேவி, சங்கரர் முன் எழுந்தருளி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேரசம்பந்தைப் பெற்றனர். வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை, ஆசார அநுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப்பிடியில் சிக்கித்தவிக் கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலட்சுமி தேவி புலப்படுத்தினார்.இருப்பினும் வறுமையிலும் திட மனதுடன் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலட்சுமி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோலப் பொழிந்தார்.அது மட்டுமில்லாமல், 

இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உறுதி மொழிகிறார் முற்றும் துறந்த மஹான் ஆதி சங்கரர். தன் பக்தர்களுக்காக லக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார்.



2 . மிஸ்டிக் செல்வம் ஐயா "சிவமஹாபுராணம்(சிவபுராணம்)"


முன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் 

நமது கர்மவினையை மாற்றும் சக்தி (கலியுகத்தில்) அன்னதானத்துக்கு மட்டுமே உண்டு என்ற ஆன்மீகப் பேருண்மையை ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கண்டறிந்துள்ளார்.ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகளாகிய நீங்கள், உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் வெகு விரைவாக தீரவே அன்னதானத்திலேயே மிக உன்னதமான அன்னதானத்தை தங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் நாம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்? அவ்வளவு புண்ணியம் நம்ம அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்; துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒரு வேளைக்கு ஒருவர் வீதம்,மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் ஒவ்வொரு நாளும் 1,00,00,000 (ஒரு கோடி)பேர்களுக்கு காசியில் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் நமக்குக் கிடைக்கும்.அது மட்டுமா? ,மேலும் மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்.ஆதாரம்:சிவமஹாபுராணம்(சிவபுராணம்)


திரு அண்ணாமலையில் துவாதசி திதியன்று மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்பதை ஒரு துறவி எனக்கு உபதேசித்தார்.இதை ஒரே ஒரு முறை அண்ணாமலையில் பரிசோதித்துப் பார்த்ததில் உண்மை என்பது மட்டுமல்ல;பூர்வபுண்ணியம் உள்ளவர்களே இவ்வாறு அன்னதானம் செய்ய முடியும் என்பதையும்,அந்த துவாதசி அன்னதானத்தை நமது முன்னோர்கள் சூட்சுமமாக வந்து ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் உணர்வுபூர்வமாக உணர முடிந்தது.எனவே எனது சகோதர,சகோதரிகளுக்காக இந்த ஜோதிடக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம்.அதே போல,நமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் தொகுப்பில் எட்டில் ஒரு பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் விதமாக நமது பிறப்பும்,நமது ஜனன ஜாதகமும் அமைந்திருக்கிறது.இந்த உண்மையை உணர 12 வருடங்களாக பலதரப்பட்ட மக்களின் ஜாதகங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்க முடிந்தது.மீதி ஏழு பங்குகள் பிற நமது தாத்தா பாட்டியின் பேரன் பேத்திகளுக்கு பிரிந்துவிடும்.

நமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது;மாற்ற முடியாது;பூஜைகள்,பரிகாரங்கள் மூலமாக நமது தீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும்,அந்த பூஜைகள்,பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக்கர்மவினைகள் குறையத்துவங்கும்;அதே சமயம் அந்த பூஜைகள்,பரிகாரங்களை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும். 

சனியும்,செவ்வாயும் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் விதமாக ஏழாம் ராசியில் இருந்தாலோ அல்லது நான்காம் ராசி மற்றும் பத்தாம் ராசியில் இருந்தாலே அது கடுமையான கர்மவினைகளைக் காட்டுகிறது.நாம் முற்பிறவிகளில் செல்வச் செருக்கோடு நமது ரத்த உறவுகளின் பலவீனத்தைக் கொண்டு அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் செய்திருக்கிறோம் என்பதும்;இந்த ஜன்மத்தில் அதே மாதிரியான வேதனைகளை நாம் அனுபவிக்கப்பிறந்திருக்கிறோம் என்பதும் உண்மை.

மேலும் நாம் எந்த வழிவம்சத்தில் பிறந்திருக்கிறோமோ அந்த வழி வம்சத்தில் நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் சொத்துக்காகவோ வேறு சிலபல காரணங்களுக்காகவே பல ஆண்டுகள் சண்டையிட்டுருக்கிறார்கள்.அப்போது பலவீனமான நமது முன்னோர்களின் பெண் உறவுகள் கடுமையாக சாபமிட்டிருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகும்.அந்த சாபத்தை நமது குடும்பத்தில் நாம் மட்டுமே அனுபவிக்கப் பிறந்திருக்கிறோம் என்று பொருள்.ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால்,அதில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டுமே இவ்வாறு அதன் பிறந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருக்கும்;அல்லது ஒருவரையொருவர் பார்க்கும் விதமாக அமைந்திருக்கும்.



With my Guru Srimat Sadhananda Swamigal wish , our Group are planing to do this event in Thiruvannamalai from this month https://sadhanandaswamigal.blogspot.com/2012/09/thiruvannamalai-dwadashi-annadanam.html..

Thank and regards


Drop me : chamundihari@gmail.com


வளர்பிறை துவாதசி திதி Shukla Dwadasi - வளர்பிறை துவாதசி 

1.03.2015 14:03  to  2.03.2015 16:06  Monday - திங்கட்கிழமை
31.03.2015 07:34  to  1.04.2015 10:10 Tuesday - செவ்வாய்க்கிழமை
30.04.2015 01:43  to  1.05.2015 04:10 Thursday - வியாழக்கிழமை
29.05.2015 19:08  to 30.05.2015 20:44 Saturday - சனிக்கிழமை
28.06.2015 10:46  to 29.06.2015 11:04 Sunday - ஞாயிற்றுக்கிழமை
28.07.2015 00:12  to 28.07.2015 23:08 Tuesday - செவ்வாய்க்கிழமை
26.08.2015 11:41  to 27.08.2015 09:33 Wednesday - புதன்கிழமை
24.09.2015 21:51  to 25.09.2015 19:01 Friday - வெள்ளிக்கிழமை
24.10.2015 07:14  to 25.10.2015 04:09 Saturday - சனிக்கிழமை
22.11.2015 16:14  to 23.11.2015 13:18 Monday - திங்கட்கிழமை
21.12.2015 03:32  to 22.12.2015 01:13 Monday - திங்கட்கிழமை
20.01.2016 10:44  to 21.01.2016 09:21 Thursday - வியாழக்கிழமை
18.02.2016 21:34  to 19.02.2016 21:27 Friday - வெள்ளிக்கிழமை

19.03.2016 10:21  to 20.03.2016 11:33 Saturday - சனிக்கிழமை



Harimanikandan.V
Sadhanandaswamigal Blogspot

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் சிவயநம‌யநமசிவ‌வயநமசி , நமசிவய‌,சிவயசிவ‌ ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

No comments:

Post a Comment