Tuesday, May 14, 2013

அஞ்சனம் கண்களுக்கு தீட்டும் மையே


அஞ்சனம்

கண்களுக்கு தீட்டும் மையே 


 திரு. மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அஞ்சனப்பிரயோகம் அனுபவங்களை 

 அஞ்சனம் என்பது கண்களுக்கு தீட்டும் மையே 
பார்வதி தேவியை,அஞ்சன மையிடும் அம்பிகே என்றழைப் பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.பெண்கள் மட்டுமே கண்ணில் மையிடுவார்கள் என்பது தவறு.பெண்களும்,ஆண்களும் கண்ணுக்கு தவறாமல் மையிட்டு வரலாம்.அதன் மூலம் பல நோய்கள் நம் உடலை அணுகா வண்ணம் காத்துக் கொள்ளலாம். 

அஞ்சனக்கல் என்ற சுறுமாக்கல்லை பன்னீர் விட்டு இழைத்து கண்புருவங்கள்,கண் பட்டை,லலாட மத்தி என்று அழைக்கப்படும் நடு நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள நெற்றிக்கண் எனப்படும் புருவப்பூட்டு 90 நாட்களில் திறக்கும். 





எனது உறவினரும் பலருக்கு ஆன்மீக குருவாகத் திகழும் ஆன்மீகச் செம்மல் அமரர் திரு மிஸ்டிக் செல்வம் அவர்களும் இதைப் பற்றி தமது நூலில் விவரித்துள்ளார்.


முஸ்லீம் அன்பர்கள் ஒவ்வொரு தொழுகையின்போதும் இந்த சுருமாவை கண் பட்டைகளில் போட்டுப் பின் தொழுகை செய்வதை கடமையாகச் சொல்லி இருக்கிறார்கள்.


கண்மை தயாரிக்கும் முறை:-
 வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளைத் தண்ணீர் சேர்க்காமல் இடித்துச் சாறு எடுக்கவும்.25 செமீ நீள அகலமுள்ள வெள்ளைத் துணியை எடுத்து அந்தச் சாற்றில் ஓரிரு முறைகள் சாறு காலியாகும் வரை உலர்த்தி,மீண்டும் தோய்த்து மீண்டும் உலர்த்தி,பின் அந்தத் துணியை உருட்டி திரியாகச் செய்து கொள்ள வேண்டும்.பின் விளக்கெண்ணெயை ஊற்றிய விளக்கில்,மேற்படி கரிசலாங்கண்ணிச் சாறு ஊட்டிய திரியைப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

 ஒரு புது மண் சட்டியில் தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழைச் சாற்றை ஐந்து தடவை,தடவி காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்தச் சட்டியை அந்த விளக்கின்மீது மூன்று புறமும் செங்கலிட்டு காற்று உள்ளே புகுந்து விளக்கு எரியுமாறு கவிழ்த்து வைத்துவிடவும்.அந்த விளக்கு தொடர்ந்து எரியுமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

மறுநாள் அந்த கற்றாழை தடவிய புதுச் சட்டியில் படிந்திருக்கும் கரியை வழித்தெடுத்து போதுமான அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டுக் குழைத்து வெள்ளிச் சிமிழில் பத்திரப்படுத்தி கண்ணுக்கு தீட்டி வர கண் ரோகங்கள் அனைத்தும் குணமாகும்.கண்ணொளி ஒரு காதந் தூரம் காணும்.அதாவது ஒரு காத தூரம் இருக்கும் பொருள்களும் கண்ணுக்குத் தெரியும்.

இப்படிப்பட்ட வெள்ளைக் கரிசலாங் கண்ணி,மஞ்சள் கரிசலாங் கண்ணி,மற்றும் பொன்னாங் கண்ணி, ஆகியவற்றுக்கு சோழர்கள் காலத்தில் வரி விதிக்கப்பட்டது.அதற்கு கண்ணிக் காணம் என்று பெயர்.வரி செலுத்தினாலும் இதன் அருமை மற்றும் பெருமை எண்ணி அக்காலத்தில் உபயோகித்தார்கள். இன்றோ நாம் இலவசமாய்க் கிடைத்தாலும் உபயோகம் அறியாது,இதன் அருமை மற்றும் பெருமை தெரியாது வெளிநாட்டு விஷங்களை மருந்தென்று பெருமை பேசித் திரியும் அவலம் நேராது.


வீட்டில் உள்ள பேரில் பாதிப் பேராவது கண்ணாடி போடாமல் இருப்பதில்லை.காரணம் இது போன்ற மிக நல்ல வழக்கங்கள் வழக் கொழிந்து போனதே!!!கண்மைக்கு போய் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று கேட்பது புரிகிறது????

கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல், மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும்,குற்றங்களும்,நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.



Thank to https://machamuni.blogspot.com/2011_12_01_archive.html 

       https://en.netlog.com/thillairaj/blog/blogid=5223413

2 comments:

  1. aiya அஞ்சனக்கல் என்ற சுறுமாக்கல் kidaikuma pls

    ReplyDelete
  2. அருமை மேலும் பல விடயங்களை அறியத்தாருங்கள்!

    ReplyDelete