Friday, January 29, 2016

பஞ்சாட்சரம் - நமசிவாய

https://koshasrini.blogspot.com/2013/06/blog-post_4360.html

பஞ்சாட்சரம் இருவகைப்படும். அவை தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம்.

‘ந’ காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் ‘நம சிவாய’ என்பது ‘தூல பஞ்சாட்சரம்.’
அதைப் போன்று ‘சி’காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் ‘சிவாய நம’ என்பது ‘சூட்சும பஞ்சாட்சரம்’ எனப்படும்.

தூல பஞ்சாட்சரம்மான ‘நம சிவாய’ என்பது பொதுவாக இகபரஇன்பங்களை வேண்டி வழிபடுபவர்களுக்கு பொருத்தமானது. இது ‘சிவனுக்கு வணக்கம்’ எனப் பொருள்படும்.

சரியை நெறியில் நிற்போர் தூல பஞ்சாட்சரத்தையும்,
கிரியை யோக நெறியில் நிற்போர் சூட்சும பஞ்சாட்சரமான ‘சிவாய நம’ என்பதையும்,
ஞானநிலையில் நிற்போர் முத்தி பஞ்சாட்சரமான ‘ம’காரம் ‘ந’காரம் ஆகிய இரண்டும் நீக்கிய ‘சிவாய’ என்ற மூன்று அட்சரங்களைக் கொண்ட ‘முத்தி பஞ்சாட்சரம்’; உட்சரிப்பதற்கு உகந்தது.

அதாவது நிருவான திக்கை பெற்றவர்கள், பஞ்சாட்சரத்தை உச்சாடணம் செய்யும் போது மூன்று முறையாக பின்பற்றுவர் அவை மானதம், மந்தம், உரை என்பனவாகும்.
இதில் வெளியில் ஒலி எழுப்பாது மனத்தினுள் தியானித்தலைக் குறிக்கும் இது உத்தம மாகும் இதனை ‘மானதம்’ என்பர்.
தானது காதுகளுக்கு மட்டும் கேட்கக் கூடியதாக உச்சரித்தல் ‘மந்தம்’ எனப்படும்.
பிறர் கேட்க்கக் கூடியதாக சத்தமாக உச்சரித்தல் ‘உரை’ எனப்படும்.
‘மானதம’ கோடி மடங்கு பலனும், ‘மந்தம்’ பத்தாயிரம் மடங்கு பலனும். ‘உரை’ யில் நூறு மடங்கு பலனும் கிடைக்கும் என ஸ்மிருதிகள் கூறுகின்றன்.

திருவைந்தெழுத்தின் பொருமையை திருமந்திரம் குறிக்கையில்
‘அஞ்ந்தெழத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்ந்தெழத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்ந்தெழத் தாலிவ் வகலிடந் தாங்கினன்
அஞ்ந்தெழத் தாலே மெர்ந்துநின் றானே’
குறிப்பிடுகின்றார்.

திருவைந்தெழுத்தின் ‘ம’காரத்தினால் உலக படைக்கப்பட்டது. ‘ய’காரத்தால் உடலும் உயிரும் இணைந்து விளங்குகின்றது. யோனியான உயிர் நகர அடையாளத்தால் விரிந்த உலகத்தை இயைந்து யாக்கிக் காக்கும் நடுநிலைமை விளங்கும் ‘சி’காரம் ‘வ’கார அடையாளங்களால் எல்லாமாய் அமர்ந்தமை விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அஞ்தெழுத்து உலகத்தை ஆக்க வல்லது என்பது புலணாகும்.

அஞ்செழுத்து பந்தத்திலிருந்து விடுலையளிக்கும் என்பதை
‘வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவர்ற்குச்
சார்ந்த வினைத்துயார் போகத் தலைவனும்’
போந்திடும் என்னும் புரிசடை யோனே‘

திருவருட் துணையால் திருவைந்தெழுத்தை முறையாக ஒதுவதனால் உலகியல் நுகர்வுடன் அதன் கண் தொடக்கின்றி வாழ்தலுமாகும். புறவிப் பெருந்துயர் நீங்கத் தம் முதல் முருவுமாய் வந்தருலுவான். புரிகடையோன் என்னும் போது புரி சடையோன் என்பது திருவாதிரை நாளை விரும்புபவன் என்றும் ஒன்றாய் வேறாய் உடனாய் விரும்பி உறையும் பண்பினேன். என்பது பொருள்.

திருவைந்தெழுத்தால் எல்லாவுலகமும் ஒழுங்காக நடைபெறுகின்றது. என்பதை
‘ஐந்தின் பெருமையே அகலிட மாவது
ஐந்தின் பெருமையே ஆலய மாவது
ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனு மாமே’

திருவைந் தெழுத்தின் சிறந்த திருக்குறிப்பே திருக்கோயிலாகும். அதில் ‘சி’காரம்; சிவலிங்கமாகும். ‘வ’காரம் அடுத்த மண்டபமாகிய மனோன்மணி நிலை. ஆனேற்று நிலை ‘ய’காரம். அம்பலவாணர் நிலை ‘ந’காரம். பலிபீடம் ‘ம’காரம் அவ்வாறு பெருமை பெற்றது திருவைந் தெழுத்து.

ஓர்எழுத்தான ஓமிலிருந்து பஞ்சபூதங்களானான் ஐந்தெழுத்தில் என்பதை திருமந்திரம்
‘வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரேழுத் தாயநில ந்தங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாயுயி ராமெழுத்து
ஓரெழுத் தீசனும் ஒண்சுட ராமே’
விண் ‘வ’காரமாயும்
நீர் ‘ம’ காரமாயும்
நிலம் ‘ந’ காரமாயும்
தீ ‘சி’ காரமாயும்
காற்றாகி உயிரெழுந்து ‘ய’ காரமாயும் உள்ளவன் சிவன் ‘வமநசிய’ என்பதில் அடங்கும்.

திருவைந்தெழுத்தல் ‘ந’காரமே உலகை உருவாக்கும் என்கின்றது திருமந்திரம்
‘நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே’

உலகம் அடங்கி அதன் ஆணைப்படி நடக்கும் ‘நமசிவாய’ என ஓதுவார்க்கு நன்நெறி செல்லும் வெல்வர்களாவர்.
‘அகாரம் உயிரே உகாரம் பரமெ
முகாரம் மலமாய் வருமுப் பதத்திற்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென் றறையலு மாமே’
உயிரெனக் குறிக்கும் உடல் மெய் இருபத்திநான்கும் அகாரமாகும்.
புரமென குறித்து உணர்ந்து மெய் ஐந்தும் உகாரம் மாகும்.
முலமெனக் கூறிய உணர்வு மெய் ஏழும் மகாரமாகும்.
இம் முப்பத்தாறும் மெய்களுள் சிகாரம் கிவமாய் உயிருக்குயிராய் வகாரம் சிவனின் திருமேனியாய் யகாரம் திருவருளாகும். ஏனக் குறிப்பிட்டுள்ளார்.

‘நகார மகார சிகார நடுவாய்
வகாரம இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதற்கொண்டு டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்கத் தானே’
நமசிவாய என்பதில் சிகாரம் நடு இரண்டு வளி என்பது இடபால் வலபால் மூச்சு என உயிர் அடையாளமான யகாரத்தைக் குறிக்கின்றது.
ஓம் எனும் மந்திரத்துடன் சேர்த்து நமசிவாய மந்திரத்தை ஓம் நமசிவாய என ஓத சிவப்பரம் பொருள் நெஞ்சகத்தே கோயில் கொள்வான் என்கின்றது திருமந்திரம்.

சிவபெருமானின் மந்திரவுருவை கூறுகையில்
‘சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுமஞ்
சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே’
‘சிவய’ என்பதுடன் முதலாக ‘சிவ’ என்பதைச் சேர்த்து ‘சிவயசிவ’ என்பதே சிவபெருமானின் மந்திரவுருவாகும்.



சிவ மந்திரமும்-பலன்களும்

நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்
அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்
வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.
அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்.
ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்
ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.
நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.
நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.
சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும்.
சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.
ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.
லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.
ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.




சிவ தீட்சை

அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளைப் பற்றி காண்போம்.

தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான். இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்
ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக்
காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும்
கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு
ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு
ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும்
மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத
முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே."


"ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.

"ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர்.

"சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு
செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம்
பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும்
பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும்
துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு
துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று
முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி
 மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே."


"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.

"ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர்.

"பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு
பண்பாக யங் வங் றீங் றுந்தான்
துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி
தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும்
அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு
அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம்
குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும்
குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே."


"யங் வங் றீங்" என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.

"சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

"தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்
சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம்
மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார்
வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள்
நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு
நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம்
ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து
அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே."


"இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர்.

"மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.



சிவ மந்திரங்கள்

ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும். துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும். ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும். மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓம் எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-
அகத்திய மகரிஷி சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-

நந்தீசர் மகரிஷி ோதிடம்

சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
துங் நமசிவாய என்று உச்சரிக்க - வித்துவான் ஆகலாம்.
ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி அருள் உண்டாம்.
ஓம் சிங்சிவாய  நம என்று உச்சரிக்க - நினைப்பது நடக்கும்.
ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க - தடைகள் நீக்கும்.
ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க - துன்பங்கள் விலகும். ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க - செல்வம் செழித்தோங்கும்.
ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க- கவலைகள் வற்றும் கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்
ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க - விஷங்கள் இறங்கும். அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க - சாதனை படைக்கலாம். ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க - சப்த கன்னியர் தரிசனம்.
ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க - முக்குணத்தையும் வெல்லலாம்.
ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க- அரிய பேறுகள் கிடைக்கும்.
ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க - ஆறு சாஸ்திரம் அறியலாம்.
வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க - தேவர்கள் தரிசனம் காணலாம்.
சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ பாதிப்பு நீக்கும்.
ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க - முத்தொழிலும் சிறக்கும்.
ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரியபூமிகள் கொடுக்கும்.
சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை நனைக்காது.
சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை நிற்கும்.
கலியுங் சிவாய என்று உச்சரிக்க - வெள்ளம் பெருக்கெடுக்கும்.
 ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க - பெரியகாரியங்களில் வெற்றி.
சங்யவ் சி மந என்று உச்சரிக்க - தண்ணீரில் நடக்கலாம்.
மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க - பிசாசு, பேய் சரணம் செய்யும்.



சிவன்மந்திர உச்சாடணங்கள்

மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.
 அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள்.
 எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.
 இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்தமந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.

பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம்.

இனி மந்திரங்கள்....

தத்புருஷ மந்திரம் ... கருவூரார்

இதன் மூல மந்திரம் 'நமசிவாய'.
இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.

அகோர மந்திரம்

இதன் மூல மந்திரம் "நமசிவ",

"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்கஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவாய நம" என உச்சரிக்கவானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்

வாமதேவ மந்திரம்

"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.

சத்யோசாத மந்திரங்கள்

"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்

ஈசான மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.



இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி..
படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அருள்மிகு சிவவாக்கியர் / Siddha Sivavaakkiyar

https://18siddhar.blogspot.com/2016/01/siddha-sivavaakkiyar.html


சிவவாக்கியர் மருதேரி வர சித்தம் கொள்ளுதல்
 Bhrigu Maharishi 
 Location : Maruderi, Singaperumal Koil / மருதேரி, சிங்கபெருமாள் கோவில் 



கூடியதோர் கலியதிலே தர்ம மார்கம்
கலங்காது உபசேனை சகிதம் அமைய
நாடிவரும் சௌக்கியத்தை அளிக்க வல்ல
நித்தியமாய் ராமனை சிந்தை வைக்கும்

வைத்ததொரு சிவயோகி வாக்கியன் தான்
விசுவாசம் ஜெயம் கொள்ள உரியசித்தன்
மெத்தவே எங்களது குடிலம் வந்து
முறைமாட்சி செய்விக்க சித்தம் கொண்டான்

In the kaliyuga for Dharma Marga
without doubts, sena formations come together
thereby bringing wellness to visitors
the one who thinks of raman incessantly

is the Sivayogi the Vaakiyan himself
A siddha who helps to build and win faith
Notably comes to our kudilam(Maruderi)
Determined to increase the greatness of the place
.....................................................................................பிருகுமுனி சீவம்



சிவவாக்கியர் குடிலம் வந்தருளல்


சோதியே  சுட  ரொளியே  சூட்சுமத்தில்
சொல்லறியா  பரம்பொருளே வணங்கி உன்னை
ஒதிடுவேன் பிருகுயான் சீவ சாட்சி
ஒப்பிலா கலிரவியின் மகத்தில் நன்றாய்

Oh Jyothi the Shining light that's hidden(inner)
To the indescribable supreme I bow to you
As Jeeva's vision Bhrigu(me) I'm addressing
in this uncomparable day of Thai Magam star

நன்றான குடிலமதில் சோதி பூசை
நாளதனில் நந்தியவன் உடனாய ஆசி
என்றுமே எங்களது குடிலம் தன்னில்
எம்மக்கள் கொண்டாடி மகிழ்ந்த பூசை

The Aganda light puja @ Noble Maruderi Kudil
in this day was blessed with Nandidevar also
forever in this kudilam of ours will be the place
for my disciples to celebrate and enjoy Divinity


பூசையதில் பூரணங்கள் அந்தி தியானம்
பூரணமாய் நின்றதொரு  சீவ சித்து
மாசில்லா சிவவாக்கியன் அனுகிரகங்கள்
மறுமையதை போக்கவல்ல வழிதான் இப்போ

Poosai was perfect and andi dhyanam (Meditation)
was absolute and perfected by Seeva Sitthu
as the flawless SivaVaakiyar's divine blessings
helps reach unknown/undiscovered areas with faith now

வழிவழியாய் சுழிமுனையில் உள்ளிருந்து
வாசியதில் ஓர் முகமாய் ஆதாரத்தும்
சுழிதிறந்த நிலைகண்டீர் மகிழ்ச்சி கொண்டோம்
சூழ்ந்த வினைமாண்டது  இனி சுத்தசீவம்

For times/routes which was within Sulimunai Chakra
through Vaasi had focused towards Aadharas
I was happy to see when all your Sulimunai opened at that time
Surrounded karma got slained & then was pureness of Jeeva


சீவமதில்  ராமனவன் நாமம் கூறி
சிறந்ததொரு இயற்கை விதம் கண்டுகொண்டோம்
பாவநிலை சாபநிலை துர்வாட்டம் இல்லை
பக்தியதனில் உயர்ந்தநிலை ஆத்ம சுகம்

Thru Pure Seeva the Nama of Rama was told/chanted
of higher caliber and in natural manner - We saw that
No more sins, no more curses, No more illness/tiredness
Through Bakti the highest stage is Aatma Sugam(Happiness)

சுகம் கண்டு ஏகவடிவாக வந்து
சோதிமுதல் தசநாழி எங்கள் உள்ளே
ஐக்கியமாய் நின்று அருளாசி தந்தான்
ஆசிரம தர்மத்திற்கு உகந்த வண்ணம்

Seeing the happiness he came with wholesumness
and stood in Jothi for dasa naali (24 mints * 10= 4hrs) with us
in Union and gave his divine blessings
As per Ashrama dharma of Siddhas needs



வண்ணம் பெற இருநிலைக்கும்  தலைவனான
வாக்கியனின் சொரூபமதாய்  நாத அதிர்வாய்
பக்தியதை தாண்டி ஓர் சன்மார்கத்தில்
பூசித்த நிலை  இக்குடிலம் என்றே களித்து

"To flourish" thus blessed the leader of both margas (Saivam & Vaishnavism)
The formation of SivaVaakiyar's was by "Nada Vibration "(Sound energy waves)
Thus Beyond Bakthi using the ways of Sanmaarga
and the devoutness at Maruderi took him/all to Ecstacy

களித்து இனி எங்களுக்கு  சோதிநாளில்
குதுகூலமாய் வாக்கியனையும் வரவேற்று
சீலமாய் வழிபடுவீர் பேத மற்றே
சிவ ஹரியும் மும்மூர்த்தி ஆசிமுற்றே

With Ecstacy in the coming days of Jyothi
with delight/happiness welcome Vaakiyan along with us
and with piousness and non differentiation meditate
Siva Hari Brahma (TriMoorthi) blessings to all


Posted by Radhakrishnan R.A.V at 11:40 AM
https://sadhanandaswamigal.blogspot.com/2015/12/bhrigu-maharishi-guru-pooja-24th.html

Sunday, January 24, 2016

Kanda Sashti Kavasam 6 with audio & pdf கந்தர் சஷ்டி ஆறு கவசங்கள்



 கந்தர் சஷ்டி ஆறு கவசங்கள்  with audio and pdf
இப்பாடலின் ஒலிப்பதிவு   audio recording for this song  

click for all PDF & mp3

https://goo.gl/IvcXQd






audio by revathy sankaran Thank : https://www.kaumaram.com/
Ms Revathi Sankaran


குறள் வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

காப்பு

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

நூல்
1 திருப்பரங்குன்றம்        (பட்டியலுக்கு) 

 
 
 பதிவிறக்க    to download  2.10 mb 

https://www.mediafire.com/kandasashti_kavasam_1_Thirupparangkundram.mp3 
திருப்பருங்குன்றுரை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத்துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப்பொருளே        ... ... 4

வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே
ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ        ... ... 8

பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ
மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ
விராலிமலையுறை விமலா நமோ நமோ
மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ        ... ... 12

சூரசங் காரா துரையே நமோ நமோ
வீரவேலேந்தும் வேளே நமோ நமோ
பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ
கண்களீராறுடை கந்தா நமோ நமோ        ... ... 16

கோழிக்கொடியுடைக் கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சசச சசச ஓம் ரீம்
ரரர ரரர ரீம்ரீம்        ... ... 20

வவவ வவவ ஆம் ஹோம்
ணணண ணணண வாம்ஹோம்
பபப பபப சாம் சூம்
வவவ வவவ கெளம் ஓம்        ... ... 24

லல லிலி லுலு நாட்டிய அட்சரம்
கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக        ... ... 28

பக பக பக பரந்தாமா வருக
வருக வருகவென் வள்ளலே வருக
வருக வருக நிஷ்களங்கனே வருக
தாயென நின்னிருதாள் பணிந்தேன் எனைச்        ... ... 32

சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
அல்லும் பகலும் அனுதினமும் என்னை
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
வல்லவிடங்கள் வாராமல் தடுத்து        ... ... 36

நல்ல மனத்துடன் ஞானகுரு உனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்தி கேயா        ... ... 40

நந்தன் மருகா நாரணி சேயே
என்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை
தண்ணளி அளிக்கும் சாமிநாதா
சிவகிரி கயிலை திருப்பதி வேளூர்        ... ... 44

தவக்கதிர்காமம் சார்திரு வேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு        ... ... 48

சன்னதி யாய்வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக் (கு) அன்புடன் தமிழைச்
செகத்தொர் அறியச் செப்பிய கோவே
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்        ... ... 52

நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாய் நின்ற மெய்ப்பொருளோனே ...
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி        ... ... 56

பக்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
அத்தன் அரி அயன் அம்பிகை லட்சுமி
வாணி யுடனே வரைமாக் கலைகளும்        ... ... 60

தானே நானென்று சண்முகமாகத்
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்
பூரண கிருபை புரிபவா போற்றி
பூதலத்துள்ள புண்ய தீர்த்தங்கள்        ... ... 64

ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில்
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்
பண்ணும் நிஷ்டைகள் பலபல வெல்லாம்
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம்        ... ... 68

எள்ளினுள் எண்ணெய் போலெழிலுடை உன்னை
அல்லும் பகலும் ஆசாரத்துடன்
சல்லாப மாய் உனைத் தானுறச் செய்தால்
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி        ... ... 72

பல்லா யிரநூல் பகர்ந்தருள்வாயே
செந்தில்நகர் உறை தெய்வானை வள்ளி
சந்ததம் மகிழும் தயாபர குகனே ...
சரணம் சரணம் சரஹணபவ ஓம்        ... ... 76

அரன்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்
சரணம் சரணம் சரஹணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 79

2 திருச்செந்தூர்த் தேவசேனாபதி        (பட்டியலுக்கு) 

 
 
 பதிவிறக்க    to download  4.36 mb 
https://www.mediafire.com/kandasashti_kavasam_2_ThiruchchendhUr.mp3
நேரிசை வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

குறள் வெண்பா

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரஹணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட        ... ... 4

மைய நடஞ்செயும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக்காக்கவென்று வந்து
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக        ... ... 8

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திரவடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக ...        ... ... 12

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக ...        ... ... 16

ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹ வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென        ... ... 20

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் ...        ... ... 24

பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும், உயிரையுங் கிலியும்        ... ... 28

கிலியுங் செளவும் கிளரொளியையும்
நிலை பெற்றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக        ... ... 32

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பண்ணிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்        ... ... 36

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்        ... ... 40

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்ப ழகுடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நல் சீராவும்        ... ... 44

இருதொடை அழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென        ... ... 48

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி        ... ... 52

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து        ... ... 56

என்றனை யாளும் ஏரகச் செல்வ ...
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலாவிநோத னென்று        ... ... 60

உன்றிருவடியை உறுதியென் றெண்ணும்
என்றலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க        ... ... 64

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக்காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க        ... ... 68

நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவை செவ்வேல் காக்க        ... ... 72

கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க        ... ... 76

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க        ... ... 80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங்கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறியிரண்டும் அயில்வேல் காக்க        ... ... 84

பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க        ... ... 88

ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க        ... ... 92

நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க        ... ... 96

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க        ... ... 100

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க        ... ... 104

தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப்பேய்கள்        ... ... 108

அல்லல்படுத்தும் அடங்காமுனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடைமுனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராக் கருதரும்        ... ... 112

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்        ... ... 116

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டா ளர்களும்
என் பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை அடியினில் அரும்பா வைகளும்        ... ... 120

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்        ... ... 124

ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும்அஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட        ... ... 128

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட        ... ... 132

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு        ... ... 136

முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்குசெக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்        ... ... 140

பற்றுபற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்        ... ... 144

எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க        ... ... 148

ஒளுப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலையங் சயங்குன்மம் சொக்குச் சிறங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி        ... ... 152

பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பல்குத்து அரணை பருஅரை ஆப்பும்
எல்லாப்பிணியும் என்றனைக் கண்டால்        ... ... 156

நில்லாதோட நீயெனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாளரசரும் மகிழ்ந்துற வாகவும்        ... ... 160

உன்னைத் துதிக்க உன்திரு நாமம்
சரஹணபவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே        ... ... 164

அரிதிரு மருகா அமாராபதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை        ... ... 168

இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா        ... ... 172

ஆவினன்குடிவாழ் அழகிய வேலா
செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா
சமராபுரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்        ... ... 176

என் நாஇருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை        ... ... 180

நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாசவினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்        ... ... 184

மெத்தமெத்தாக வேலா யுதனார்
சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்கவாழ்க மயிலோன் வாழ்க
வாழ்கவாழ்க வடிவேல் வாழ்க        ... ... 188

வாழ்கவாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்கவாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்கவாழ்க வாரணத் துவஜம்
வாழ்கவாழ்க என் வறுமைகள் நீங்க        ... ... 192

எத்தனைகுறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே        ... ... 196

பிள்ளையென்றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென்மீதுன் மனமகிழ்ந் தருளி
தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டிகவசம் விரும்பிய        ... ... 200

பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடனொரு நினைவதுமாகிக்        ... ... 204

கந்தர் சஷ்டிக்கவசமிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுருக்கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய        ... ... 208

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர்
மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்        ... ... 212

நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர் கைவேலாம் கவசத் தடியை
வழியாய்க்காண மெய்யாய் விளங்கும்        ... ... 216

விழியால்காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி        ... ... 220

அறிந்தெனதுள்ளம் அட்டலட்சு மிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துணவாகச்
சூரபத்மாவைத் துணித்தகை அதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த        ... ... 224

குருபரன் பழநிக் குன்றிலி ருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி        ... ... 228

தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ்கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி        ... ... 232

கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோ ரரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்        ... ... 236

சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 238

3 திருவாவினன்குடி தெண்டபாணி        (பட்டியலுக்கு) 

 
 
 பதிவிறக்க    to download  3.84 mb 
https://www.mediafire.com/kandasashti_kavasam_3_Thiru_Aavinankudi.mp3
திருவாவினன்குடி சிறக்கும் முருகா
குருபரா குமரா குழந்தைவே லாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா
இரவலர் தயாபரா ஏழைபங் காளா        ... ... 4

பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா
இரண்டா யிரம் வெள்ளம் யோகம் படைத்தவா
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா        ... ... 8

இலட்சத்திருநான்கு நற்றம்பி மாருடன்
பட்சத்துடனே பராசக்தி வேலதாய்
வீர வாகு மிகுதள கர்த்தனாய்
சூர சங்காரா துஷ்ட நிஷ்டூரா        ... ... 12

கயிலாய மேவும் கனக சிம்மாசனா
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா
அகத்திய மாமுனிக் (கு) அருந்தமிழ் உரைத்தவா
சுகத்திரு முறுகாற் றுப்படை சொல்லிய        ... ... 16

நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்
கைக்கீழ் வைக்கும் கனமிசைக் குதவா
திருவருணகிரி திருப்புகழ் பாட
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா        ... ... 20

ஆயிரத்தெட்டாம் அருள்சிவ தலத்தில்
பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா
எண்ணா யிரம் சமண் எதிர்கழு வேற்றி
விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா        ... ... 24

குருவாம் பிரமனைக் கொடும்சிறை வைத்தே
உருபொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்
கருதிமெய் யோகம்சொல்லியது ஒருமுகம்
அருள்பெறு மயில்மீ (து) அமர்ந்த (து) ஒருமுகம்        ... ... 28

வள்ளிதெய் வானையை மருவிய (து) ஒருமுகம்
தெள்ளுநான்முகன் போல் சிருட்டிப்ப (து) ஒருமுகம்
சூரனை வேலால் துணித்த (து) ஒருமுகம்
ஆரணம் ஓதும் அருமறை யடியார்        ... ... 32

தானவர் வேண்டுவ தருவ (து) ஒருமுகம்
ஞானமுதல்வருக்கு நற்பிள்ளை பழநி
திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம
பொருட் செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம        ... ... 36

ஏரகம் தனில்வாழ் இறைவா நமோநம
கூரகம் ஆவினன்குடியாய் நமோநம
சர்வ சங்கரிக்குத் தனயா நமோநம
உறுசோலைமலைமேல் உகந்தாய் நமோநம        ... ... 40

எல்லாக்கிரிக்கும் இறைவா நமோ நம
சல்லாப மாக சண்முகத்துடனே
எல்லாத் தலமும் இனிதெழுந்தருளி
உல்லாசத்துறும் ஓங்கார வடிவே        ... ... 44

மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை
சாலமுக்கோணத் தந்தமுச் சக்தியை
வேலாயுதமுடன் விளங்கும் குகனைச்
சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை        ... ... 48

கைலாச மேருவாகாசத்தில் கண்டு
பைலாம் பூமியும் பங்கய பார்வதி
மேலும் பகலும் விண்ணுரு வேத்தி
நாற்கோணத்தில் நளினமாய் அர்ச்சனை        ... ... 52

கங்கையீசன் கருதிய நீர்புரை
செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி        ... ... 56

வாய் அறுகோணம் மகேசுவரன் மகேசுவரி
ஐயும் கருநெல்லி வெண்சாரைதன்மேல்
ஆகாச வட்டத் (து) அமர்ந்த சதாசிவன்
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை        ... ... 60

தந்திர அர்ச்சனை தலைமேல்கொண்டு
மந்திர மூலத்தில் வாசியைக்கட்டி
அக்கினி குதிரை ஆகாசத்தேவி
மிக்கமாய்க் கருநெல்லிவெண்சாரை உண்பவர்        ... ... 64

பாகமாய் ரதமும் பகல்வழியாவர்
சாகாவகையும் தன்னை அறிந்து
ஐந்து ஜீவனுடன் ஐயஞ்சு கற்பமும்
விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி        ... ... 68

சந்திர சூரியர் தம்முடன் அக்கினி
அந்திரனைக்கண் (டு) அறிந்தே யிடமாய்ச்
சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை
மந்திர அர்ச்சனை வாசிவ என்று        ... ... 72

தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்
ஆறுமுகமாய் அகத்துளே நின்று
வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து
யோசனை ஐங்கரன் உடன் விளையாடி        ... ... 76

மேலைக்கருநெல்லி வெண்சாரை உண்டு
வாலைக்குழந்தை வடிவையும் காட்டி
நரைதிரை மாற்றி நாலையும் காட்டி
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி        ... ... 80

மனத்தில்பிரியா வங்கண மாக
நினைத்தபடிஎன் நெஞ்சத்திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க் (கு) இரங்கி
மதியருள் வேலும் மயிலுடன் வந்து        ... ... 84

நானே நீயெனும் லட்சணத் துடனே
தேனே என்னுளம் சிவகிரி எனவே
ஆறா தாரத்து ஆறு முகமும்
மாறாதிருக்கும் வடிவையும் காட்டி        ... ... 88

கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்கத்
தனதென வந்து தயவுடன் இரங்கிச்
சங்கொடு சக்கரம் சண்முக தரிசனம்
எங்கு நினைத்தாலும் என்முன் னே வந்து        ... ... 92

அஷ்டாவ தானம் அறிந்துடன் சொல்லத்
தட்டாத வாக்கும் சர்வா பரணமும்
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்
துலக்கிய காவியம் சொற்பிரபந்தம்        ... ... 96

எழுத்துச் சொற்பொருள் யாப்பலங்காரம்
வாழ்த்தும் என் நாவில்வந்தினி திருந்தே
அமுத வாக்குடன் அடியார்க்கு வாக்கும்
சமுசார சாரமும் தானே நிசமென        ... ... 100

வச்சிர சரீரம் மந்திர வசீகரம்
அட்சரம் யாவும் அடியேனுக்குதவி
வல்லமை யோகம் வசீகர சக்தி
நல்ல உன் பாதமும் நாடியபொருளும்        ... ... 104

சகலகலை ஞானமும் தானெனக் கருளிச்
செகதல வசீகரம் திருவருள் செய்து
வந்த கலிபிணி வல்வினை மாற்றி
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்        ... ... 108

கிட்டவேவந்து கிருபை பாலிக்க
அட்டதுட் டமுடன் அனேக மூர்க்கமாய்
துட்டதே வதையும் துட்டப் பிசாசும்
வெட்டுண்ட பேயும் விரிசடை பூதமும்        ... ... 112

வேதாளம் கூளிவிடும்பில்லி வஞ்சனை
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுங்க
பதைபதைத்தஞ்சிடப் பாசத்தால் கட்டி
உதைத்து மிதித் (து) அங்கு உருட்டி நொறுக்கிச்        ... ... 116

சூலத்தால் குத்தித் தூளுதூ ளுருவி
வேலா யுதத்தால் வீசிப்பருகி
மழுவிட்டேவி வடவாக்கினி போல்
தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்        ... ... 120

சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்
மதம்பெறும் காளி வல்ல சக்கரம்
மதியணி சம்பு சதாசிவ சக்கரம்
பதிகர்ம வீரபத்திரன் சக்கரம்        ... ... 124

திருவைகுண்டம் திருமால் சக்கரம்
அருள்பெருந் திகிரி அக்கினி சக்கரம்
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்        ... ... 128

ஏக ரூபமாய் என்முன்னே நின்று
வாகனத் துடன் என் மனத்தில் இருந்து
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்
இம்பமா கருடணம் மேவும் உச் சாடனம்        ... ... 132

வம்பதாம் பேதானம் வலிதரு (ம்) மாரணம்
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடனம்
தந்திர மந்திரம் தருமணி அட்சரம்
உந்தன் விபூதி உடனே செபித்துக்        ... ... 136

கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க
எந்தன் மனத்துள் ஏதுவேண் டியதும்
தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்        ... ... 140

சரணம் சரணம் சட்கோண இறைவா
சரணம் சரணம் சத்துரு சங்காரா
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 144

4 திருவேரகம் ... சுவாமிமலைக் குருநாதன்        (பட்டியலுக்கு) 

 
 
 பதிவிறக்க    to download  2.08 mb 
https://www.mediafire.com/kandasashti_kavasam_4_ThiruvEragam.mp3
ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓங்கா ரமாக உதயத் தெழுந்தே
ஆங்கா ரமான அரக்கர் குலத்தை        ... ... 4

வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா போற்றி பழநியின் கோவே        ... ... 8

நான்கு மறைகள் நாடியே தேடும்
மான் மருகோனே வள்ளி மணாளனே
நானெனும் ஆணவம் நண்ணிடா (து) என்னை
காணநீ வந்து காப்பதுன் கடனே        ... ... 12

காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் புதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி        ... ... 16

... ஏகாட்சரமாய் ... எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதல் பொருளே
... துவியட் சரத்தால் ... தொல்லுல (கு) எல்லாம்
அதிசயமாக அமைத்தவா போற்றி        ... ... 20

... திரியட் சரத்தால் ... சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மையுற் றவனே
... சதுரட் சரத்தால் ... சாற்றுநல் யோகம்
மதுரமாய் அளிக்கும் மயில்வா கனனே        ... ... 24

... பஞ்சாட் சரத்தால் ... பரமன் உருவதாய்த்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத் (து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்        ... ... 28

ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறு சிரமும் அழகிய முகமும்
ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்        ... ... 32

சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள்பன் னிரண்டில் கதிரும்ஆ யுதத்தால்
தரங்குலைந் (து) ஓடத் தாரகா சுரன்முதல்        ... ... 36

வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தாய்
சீர்த் திருச் செந்தூர்த் தேவசே னாபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
இஷ்டசித் திகளருள் ஈசன் புதல்வா        ... ... 40

துட்டசங் காரா சுப்பிர மண்யா
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொளாக் காட்சி காட்டிய சடாட்சர        ... ... 44

சைவம் வைணவம் சமரச மாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க் (கு) அருளும் ஈசா போற்றி        ... ... 48

ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்
தரிசனம் கண்ட சாதுவோ (டு) உடன்யான்
அருச்சனை செய்ய அனுக்ரகம் செய்வாய்        ... ... 52

பில்லிவல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரொ (டு) என்னைச்
சல்லாப மாகச் சகலரும் போற்ற        ... ... 56

கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்        ... ... 60

சண்டமா முனியும் தக்கராக் கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு        ... ... 64

திட்டு முறைகள் தெய்வத சாபம்
குட்டம் சோம்பல் கொடிய வாந்தியும்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்        ... ... 68

உன்னுடை நாமம் ஓதியே நீறிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை
செய்வதுடன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரனே சரணம்        ... ... 72

சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 74

5 குன்றுதோறாடும் குமரன்        (பட்டியலுக்கு) 

 
 
 பதிவிறக்க    to download  4.27 mb 
https://www.mediafire.com/kandasashti_kavasam_5_KundruthORadal.mp3
கணபதி துணைவா கங்காதரன் புதல்வா
குணவதி உமையாள் குமர குருபரா
வள்ளிதெய் வானை மருவிய நாயகா
துள்ளிமயி லேறும் சுப்பிர மணியா        ... ... 4

அழகொளிப் பிரபை அருள்வடி வேலா
பழநி நகரில் பதியனு கூலா
திருவா வினன்குடி சிறக்கும் முருகா
அருள்சேர் சிவகிரி ஆறு முகவா        ... ... 8

சண்முகநதியும் சராபன்றி மலையும்
பன்முகம் நிறைந்த பழனிக்கு இறைவா
ஆறாறு நூற்று அட்டமங் களமும்
வீரவை யாபுரி விளங்கும் தயாபரா        ... ... 12

ஈராறு பழநி எங்கும் தழைக்கப்
பாராறு சண்முகம் பகரும் முதல்வா
ஆறு சிரமும் ஆறு முகமும்
ஆறிரு புயமும் ஆறிரு காதும்        ... ... 16

வடிவம் சிறந்த மகரகுண் டலமும்
தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்தூரமும்
திருவெண் ணதீறணி திருநுதல் அழகும்
கருணைபொழியும் கண்ணான்கு மூன்றும்        ... ... 20

குனித்த புருவமும் கூரிய மூக்கும்
கனித்த மதுரித்த கனிவாய் இதழும்
வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்
எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும்        ... ... 24

காரிகை உமையாள் களித்தே இனிதெனச்
சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள்
பார்த்தழ கென்னப் பரிந்த கபோலமும்
வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும்        ... ... 28

முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க
மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட
ஈஸ்வரன் பார்வதி எடுத்து முத்தாடி
ஈஸ்வரன் வடிவை மிகக்கண் டனுதினம்        ... ... 32

கையால் எடுத்து கனமார் (பு) அணைத்தே
ஐயா ... குமரா ... அப்பனே ... என்று
மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக்
கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சி        ... ... 36

முன்னே கொட்டி முருகா ... வருகவென் (று)
அந்நேரம் வட்டமிட்டாடி விளையாடித்
தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக்
கூவிய மயிலேறும் குருபரா வருக        ... ... 40

தாவிய தகரேறும் சண்முகா வருக
ஏவியவே லேந்தும் இறைவா வருக
கூவிய சேவல் கொடியோய் வருக
பாவலர்க் கருள்சிவ பாலனே வருக        ... ... 44

அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக
பொன்போல் சரவணைப் புண்ணியா வருக
அழகில் சிவனொளி அய்யனே வருக
கலபம் அணியுமென் கந்தனே வருக        ... ... 48

மருமலர்க் கடம்பணி மார்பா வருக
மருவுவோர் மலரணி மணியே வருக
திரிபுர பவனெனும் தேவே வருக
பரிபுர பவனெனும் பவனே வருக        ... ... 52

சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருக
காலில் தண்டை கலீர் கலீரென
சேலில்சதங்கை சிலம்பு கலீரென
இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும்        ... ... 56

அடும்பல வினைகளை அகற்றிய பாதமும்
சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும்
நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும்
தங்கரை ஞாணும் சாதிரை மாமணி        ... ... 60

பொங்குமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும்
சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும்
மந்திரவாளும் வங்கிச் சரிகையும்
அருணோ தயம்போல் அவிர்வன் கச்சையும்        ... ... 64

ஒருகோடி சூரியன் உதித்த பிரபை போல்
கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும்
இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும்
ஆயிரம் பணாமுடி அணியுமா பரணமும்        ... ... 68

வாயில்நன் மொழியாய் வழங்கிய சொல்லும்
நாபிக் கமலமும் நவரோம பந்தியும்
மார்பில் சவ்வாது வாடை குபீரென
புனுகு பரிமளம் பொருந்திய புயமும்        ... ... 72

ஒழுகிய சந்தனம் உயர்கஸ்தூரியும்
வலம்புரி சங்கொலி மணியணி மிடறும்
நலம்சேர் உருத்திர அக்க மாலையும்
மாணிக்கம் முத்து மரகதம் நீலம்        ... ... 76

ஆணிவை டூரியம் அணிவைரம் பச்சை
பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும்
நவமணி பிரபைபோல் நாற்கோடி சூரியன்
அருணோ தயமெனச் சிவந்த மேனியும்        ... ... 80

கருணைபொழியும் கடாட்சவீட் சணமும்
கவசம் தரித்தருள் காரண வடிவும்
நவவீரர் தம்முடன் நற்காட்சி யான
ஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம்        ... ... 84

ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம்
ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு
ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு
ஒருகை மேல்குடை ஒருகை தண்டாயுதம்        ... ... 88

ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம்
அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப்
பங்கயக் கமலப் பன்னிரு தோளும்
முருக்கம் சிறக்கும் முருகா சரவணை        ... ... 92

இருக்கும் குருபரா ஏழைபங் காளா
வானவர் முனிவர் மகிழ்ந்துகொண் டாடத்
தானவர் அடியர் சகலரும் பணியப்
பத்திர காளி பரிவது செய்ய        ... ... 96

சக்திகள் எல்லாம் தாண்டவ மாட
அஷ்ட பைரவர் ஆனந்தமாட
துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க
சத்த ரிஷிகள் சாந்தக மென்னச்        ... ... 100

சித்தர்கள் நின்று சிவசிவா என்னத்
தும்புரு நாரதர் சூரிய சந்திரர்
கும்பமா முனியும் குளிர்ந்ததா ரகையும்
அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள்        ... ... 104

நயமுடன் நின்று நாவால் துதிக்க
அஷ்ட லஷ்மி அம்பிகை பார்வதி
கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த
இடும்பா யுதன்நின் இணையடி பணிய        ... ... 108

ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க
தேவ கணங்கள் ஜெயஜெய என்ன
ஏவல் கணங்கள் இந்திரர் போற்ற
கந்தர்வர் பாடிக் கவரிகள் வீசிச்        ... ... 112

சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக
பூதம் அடிபணிந் தேத்தவே தாளம்
பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட
அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க        ... ... 116

குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க
குடையும் சேவலின் கொடியும் சூழ
இடை விடாமல் உன் ஏவலர் போற்றச்
சிவனடி யார்கள் திருப்பாத மேந்த        ... ... 120

நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம்
உருத்திர வீணை நாதசுர மேளம்
தித்திமி என்று தேவர்கள் ஆடச்
சங்கீத மேளம் தாளம் துலங்க        ... ... 124

மங்கள மாக வைபவம் இலங்க
தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம்
சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க
நந்திகே சுவரன்மீது ஏறிய நயமும்        ... ... 128

வந்தனம் செய்ய வானவர் முனிவர்
எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர
ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன்
வீரமயி லேறி வெற்றிவேல் எடுத்துச்        ... ... 132

சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச்
சிங்கமுகா சுரன் சிரமது உருளத்
துங்கக் கயமுகன் சூரனும் மாள
அடலறக் குலத்தை அறுத்துச் சயித்து        ... ... 136

விடுத்தவே லாயுதம் வீசிக்கொக் கரித்துத்
தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டி
அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத்
திருப்பரங் குன்றம் சீர்பதி செந்தூர்        ... ... 140

திருவாவி நன்குடி திருவே ரகமும்
துய்ய பழநி சுப்பிர மணியன்
மெய்யாய் விளங்கும் விராலிமலைமுதல்
அண்ணா மலையும் அருள்மேவும் கயிலை        ... ... 144

கண்ணிய மாவூற்றுக் கழுகுமா மலையும்
முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும்
நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும்
கதிர்காமம் செங்கோடு கதிர்வேங் கடமும்        ... ... 148

பதினா லுகத்திலும் பக்தர் மனத்திலும்
எங்கும் தானவ னாயிருந் (து) அடியர்தம்
பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க ...
கேட்ட வரமும் கிருபைப் படியே        ... ... 152

தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா
நாட்டு சிவயோகம் நாடிய பொருளும்
தாட்டிக மாய்எனக் (கு) அருள்சண் முகனே        ... ... 155

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 157

6 பழமுதிர்சோலை பரமகுரு        (பட்டியலுக்கு) 

 
 
 பதிவிறக்க    to download  2.38 mb 
https://www.mediafire.com/kandasashti_kavasam_6_PazhamudhirchOlai.mp3
சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே        ... ... 4

பழநி மாமலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
சரவணபவனே சட்கோணத் துள்ளுறை
அரனருள் சுதனே அய்யனே சரணம்        ... ... 8

சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
மயில்வா கனனே வள்ளலே சரணம்
திரிபுர பவனே தேவசே னாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம்        ... ... 12

திகழொளி பவனே சேவல்கொடியாய்
நகமா யுதமுடை நாதனே சரணம்
பரிபுர பவனே பன்னிரு கையனே
தருணமிவ் வேளை தற்காத் தருளே        ... ... 16

சவ்வும் ரவ்வுமாய்த் தானே யாகி
வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
தவ்வியே ஆடும் சரவணபவனே        ... ... 20

குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்ச மென்றுன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங் (கு)
அஞ்சலி செய்தவள் அமுதமும் உண்டு        ... ... 24

கார்த்திகை மாதர் கனமார் (பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
தவமுடை வீரவாகுவோ (டு) ஒன்பான்        ... ... 28

தம்பிமா ராகத் தானையைக் கொண்ட
சம்பிர தாயா சண்முகா வேலா
நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்        ... ... 32

பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்க
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை        ... ... 36

அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
விமலனும் கேட்டு வேக மதாக
உமையுடன் வந்தினி துவந்து பரிந்து        ... ... 40

அயனைச் சிறைவிடென் (று) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே ...
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
கெளரி லட்சுமி கலைம களுடனே        ... ... 44

அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல
ஆறு முகத்துடன் அவதரித் தோனே
சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்
பங்கமே செய்யும் பானு கோபனும்        ... ... 48

சூரனோ டொத்த துட்டர்க ளோடு
கோரமே செய்யும் கொடியராக் கதரை
வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
ஆறிடச் செய்தவ் வமரர்கள் தமக்குச்        ... ... 52

சேனா பதியாய்த் தெய்வீக பட்டமும்
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெரும ...
திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருவேரக முதல்        ... ... 56

எண்ணிலாத் தலங்களில் இருந்தாடும் குகனே
விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே
தஞ்சமென் (று) ஓதினார் சமயம் அறிந்தங் (கு)        ... ... 60

இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா
கும்பமா முனிக்குக் குருதே சிகனே
தேன்பொழில் பழனி தேவ குமாரா
கண்பார்த் (து) எனையாள் கார்த்திகே யாஎன்        ... ... 64

கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி
அஷ்டலட் சுமிவாழ் அருளெனக் குதவி
இட்டமாய் என்முன் இருந்து விளையாடத்
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே        ... ... 68

அருணகிரி தனக் (கு) அருளிய தமிழ்போல்
கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்
தேவ ராயன் செப்பிய கவசம்
பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட        ... ... 72

சஷ்டி கவசம் தான்செபிப் போரைச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த் திறம் தந்தருள் வோனே        ... ... 76

சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் தமிழ் தரும் அரசே
சரணம் சரணம் சங்கரன் சுதனே
சரணம் சரணம் சண்முகா சரணம்.        ... ... 80

        ஸ்ரீ கந்தர் கவசங்கள் ஆறு முற்றிற்று.
KaumAra VEl

 காப்பு 
 1 திருப்பரங்குன்றம் 
 2 திருச்செந்தூர்த் தேவசேனாபதி 
 3 திருவாவினன்குடி தெண்டபாணி 
 4 திருவேரகம் சுவாமிமலைக் குருநாதன் 
 5 குன்றுதோறாடும் குமரன் 
 6 பழமுதிர்சோலை பரமகுரு