Monday, January 4, 2016

மிஸ்டிக் செல்வம் அவர்களின் சமாதி திருக்கோவில் கும்பாபிசேகம் 20-1-2016

Thank to https://www.aanmigakkadal.com/

அன்பர்களே !!! 

17-1-2016 ஞாயிறு கிழமை ஶ்ரீ மகாகணபதி ஹோமம் முதல் தொடங்கி 20-1-2016 புதன் கிழமை அய்யா மிஸ்டிக் செல்வம் அவர்களின் திருக்கோவில் கும்பாபிசேகம் வரை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

இதோ அய்யா அவர்களின் திருக்கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் : 


தவபீடம் அமைந்துள்ள இடம் : 

ஶ்ரீலஶ்ரீம்.மிஸ்டிக் செல்வம் தவபீடம் 
கிழக்குத் தெரு, 
வாகை குளம் அருகில் , 
முடிவைத்தானேந்தல் அஞ்சல், 
தூத்துக்குடி மாவட்டம் 

ஸ்ரீலஸ்ரீம்.டாக்டர்.மிஸ்டிக் செல்வம் அய்யா - வரலாறும் ஆன்மீக சேவையும் :  


       தமிழ்நாட்டின் ஆன்மீக வழிகாட்டி மிஸ்டிக் செல்வம் ஐயாஅவர்கள் கி.பி.1937 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு.பொ.செல்லப்பா அவர்கள்.பள்ளிப்படப்பிற்குப்பின் 19 ஆம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்த அவர்,திருச்செந்தூரில் பணிநிமித்தமாக சில காலம் தங்கியிருந்தார்;அப்போது அவருக்கு சில தெய்வீக அனுபவங்கள்ஏற்பட்டன. இதனால், அவருக்கு அசாதாரண தெய்வீக சக்திகள் உண்டாகின. இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உண்டு.        

       
கி.பி.1960 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமியன்று ஐந்தருவி தவத்திரு.சங்கரானந்தாவிடம் அஜபா காயத்ரி உபதேசம் பெற்றார். பின்னர் ஆன்மீக அன்பர்கள்,யோகிகள்,சாத்திர வல்லுநர்கள், சித்தர்கள் ஆகியோரின் நட்பையும், ஆசியையும் பெற்றதுடன், பயிற்சிகளையும் மேற்கொண்டார். மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள்,நூல்களை முழுமையாகக்கற்று ஆய்வு செய்தார். குருவின் ஆணைப்படியும்,தாம் பெற்ற பயிற்சிகளாலும் திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் சித்த மார்க்கம், அஷ்டகர்மம், அஷ்டாங்க யோகம், மானசயோகம் , மூலிகை மர்மங்கள், சூட்சும உலகம், மந்திர ரகசியம், கிரக இயக்கங்கள், பிரபஞ்ச கதிர்வீச்சுக்கள், ஜோதி வழிபாடு, சூரிய வழிபாடு, மதங்களின் வணக்கமுறை, விஞ்ஞான சைவம் ஆகியவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்துள்ளார்.


 40 ஆண்டுகளாக தாம் கண்டறிந்த ஆய்வுகளை கோவை மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் ஆசியுடனும், வழிகாடடுதல்படியும் ஞான சிந்தாமணி, ஜோதிட பூமி,ஜோதிட அரசு, ஸ்ரீவராஹி விஜயம், பேசும் தெய்வம் போன்ற பத்திரிகைகள் மூலமும் மற்றும் ஆன்மீகக்கருத்தரஙகுகள் மூலமாகவும் வெளியிட்டு ஆன்மீக விழிப்புணர்வை உண்டாக்கினார்.

திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டததில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது. உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது.மும்பை மருத்துவ கல்லுரி திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்தது . அய்யா அவர்கள் ஆன்மிகம் தொடர்பான சில நூல்களை எழுதியுள்ளார்கள். 

 " ஓம் சிவசிவ ஓம் " என்னும் ஒப்பில்லாத லோக வசிய மந்திரத்தினை நமக்கு தந்து சென்றவர் நம் குருவின் குருவாம் ' ஸ்ரீலஸ்ரீம் .டாக்டர்.மிஸ்டிக் செல்வம் அய்யா என்பதில் ஐயம் இல்லை. 


இப்படி நமது குருவினை நமக்கு தந்து சென்ற, இன்றும் சூட்சுமவடிவில் உலா வரும் அய்யா மிஸ்டிக் செல்வம் அவர்களின் - சமாதி கோவிலின் குடமுழுக்கு ( கும்பாபிஷேகம் ) விழா..

No comments:

Post a Comment