Sunday, December 26, 2021

சித்தரின் ஜீவசமாதி

 சித்தரின் ஜீவசமாதி

ஓதச்சாமி(சுப்பையாசாமி)

திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேற்குப்புறம் முத்தழகுப்பட்டிக்குச் செல்லும் வழியில் இந்த ஜீவசமாதி இருக்கிறது.


பல்வேறு அதிசயங்களை புதைத்து வைத்திருக்கிறது இந்த ஓதசுவாமி திருக்கோவில்.


கருணாம்பிகை அம்மையார்

திண்டுக்கல் காமராஜர் தெருவில் சாது கருணாம்பிகை அம்மையார் ஆஸ்ரமத்தில் அதிஷ்டானம் இருக்கிறது.


சமாதியின்மேல் ஸ்ரீகருணானந்தேஸ்வரர் என்னும் பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை

கள்ளியடி பிரம்மம்

திண்டுக்கல் டூ திருச்சி சாலையில் 20 கி.மீ.தூரத்தில் வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் சமாதி இருக்கிறது.


கசவனம்பட்டி

நிர்வாண மவுனகுரு சாமி

திண்டுக்கல் டூ கன்னிவாடி அருகே கசவனம்பட்டி கிராமம் இருக்கிறது.இங்கே ஆஸ்ரமமும்,சமாதிக்கோவிலும் இருக்கிறது.


திருமலைக்கேணி

மாட்சி மவுனகுரு சுவாமிகள்

திண்டுக்கல் டூ செங்குறிச்சி சாலையில் 23 கி.மீ.தூரத்தில் திருமலைக்கேணி இருக்கிறது.


இங்கு சிறிய குன்றின் மேல் முருகன் கோவில் அமைந்திருக்கிறது.


ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சாமிகள் மடாலயம் அமைந்திருக்கிறது.


 மடத்துள் சமாதிக்கோவில் இருக்கிறது.


பிரதி வருடம் ஆடிமாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளில் குருபூஜை விழாநடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


பெரியகுளம்

மவுனகுரு சாமி

பெரியகுளம் வராகநதி பாலத்தில் இருந்து அருள் தியேட்டர் செல்லும் வழியில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.


ஒட்டன் சத்திரம்

ராமசாமி சித்தர்

ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையம் அருகில் இருக்கிறது.


கொடுவிலார்ப்பட்டி

ஸ்ரீசச்சிதானந்த சாமி

தேனியிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் கொடுவிலார்பட்டி சச்சிதானந்த ஆஸ்ரமம் வளாகத்துக்குள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.


உசிலம்பட்டி கோட்டைப்பட்டி

நமோ நாராயண தேசிக ஆனந்த சாமிகள்

மதுரை உசிலம்பட்டியிலிருந்து எழுமலை சாலையில் கோட்டைப்பட்டி என்னுமிடத்தில் ஜீவசமாதி இருக்கிறது.


 இங்கிருக்கும் நந்திக்கு கீழே சுவாமியின் சீடர் குருநாத சாமி அடக்கமாகியிருக்கிறார்.


வருடாந்திர குருபூஜை விழா ஆடிமாதம் 12 ஆம் நாள்!!!


சாப்டூர் விட்டல்பட்டி

சடையானந்த ரெட்டியார் சாமி

உசிலம்பட்டியிலிருந்து 36 கி.மீ.தூரத்தில் இருப்பது சாப்டூர். அங்கிருந்து 4 கி.மீ.தூரத்தில் இருப்பது வண்டப்புலி விட்டல்பட்டி.இங்கிருக்கும் தெப்ப ஊரணி அருகில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.


செட்டியப்பட்டி

நிலைமாறானந்தா சாமி

செட்டியப்பட்டியில் இருக்கிறது.


கரூர்

கருவூரார்

கரூர் பசுபதீஸ்வரர் கோவில் கருவூராரின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது. 


சித்திரை மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.


ஒத்தை வேட்டி சாமி

அமராவதி ஆற்றின் வடகரை நஞ்சப்பன் படிக்கட்டுத் துறையில் அதிஷ்டானக் கோவில் அமைந்திருக்கிறது.


ஆனி மாதம் வரும் அனுஷம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா!!!


நெரூர்

சதாசிவ பிரமேந்திரர்

கரூரிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் காவேரிக் கரையில் கைலாச ஆஸ்ரம வளாகத்தில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.


சதாசிவானந்தா

சதாசிவானந்தா ஆஸ்ரமத்தில் சமாதியில் மேருபீடம் அமைக்கப்பட்டுள்ளது.


திருச்சி

மவுனகுரு சாமி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஓயாமரி எனப்படும் இடுகாட்டுப்பகுதியில் தேவஸ்தானம் என்ற பெயரில் நினைவிடம் அமைந்திருக்கிறது.


மாக்கான் சாமி

ஓயாமரி சாலையில் இடதுபக்கம் காவேரிக்கரையில் மடமும் சமாதிக்கோவிலும் உள்ளன.


ஸ்ரீரங்கம்

ராமானுஜர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுனுள் உடையவர் சன்னதியில் ராமானுஜர் ஸ்தூல திருமேனி புனுகு சாத்தப்பட்டு அமர்ந்த கோலத்தில் உள்ளது.


இங்கு அமர்ந்து ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க விரைவான பலன்கள் கிடைக்கும்.


வரகனேரி

ஸ்ரீகுழுமியானந்த சுவாமி

திருச்சி வரகனேரி பஜார் தெருவின் தென்பகுதியில் ஸ்ரீசற்குரு குழுமியானந்த சுவாமிகள் மடாலயம் உள்ளே அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.


வருடாந்திர குருபூஜை விழா வைகாசி மாதம் வரும் திருவோணம்!


திருப்பட்டூர்

பதஞ்சலி

திருச்சி டூ சமயபுரம் டூ சிறுகனூர் பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பதஞ்சலி முனிவர் பிருந்தாவனம் இருக்கிறது.


இங்கும் ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவர,விரைவான பலன்கள் கிடைக்கும்.


புலிப்பாணி

திருப்பட்டூரிலிருந்து அரை கி.மீ.தூரத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் வியாக்ரபாதர் என்ற புலிப்பாணி ஜீவ பிருந்தாவனம் அமைந்துள்ளது.


திருவெள்ளறை

சிவப்பிரகாச சுவாமி

திருச்சி டூ துறையூர் சாலையில் திருவெள்ளறை இருக்கிறது.


இங்கிருக்கும் சிவாலயத்தின் அருகில் சுவாமிகளின் சமாதி அமைந்திருக்கிறது. கார்த்திகை மாதம் வரும் கடைசி திங்கட்கிழமையன்று வருடாந்திர குருபூஜை!


லால்குடி பின்னவாசல்

யோகீஸ்வரர்(எ)ராமகிருஷ்ணசாமி

லால்குடி அருகே பின்னவாசல் கிராமம் இருக்கிறது.


இங்கே பல்குனி ஆற்றங்கரையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.


தொட்டியம்

நாராயண பிரமேந்திரர்

திருச்சி டூ சேலம் சாலையில் அமைந்துள்ளது தொட்டியம் கிராமம்.இங்கிருந்து 14 கி.மீ.தூரத்தில் காட்டுப்புத்தூர் காவிரி வடகரையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.


பெரம்பலூர்

தலையாட்டி சித்தர்

புதிய பஸ்நிலையத்திலிருந்து 2 கி.மீ.தூரத்தில் பிரம்மரிஷி மலைச்சாரலில் மூசாக்கோட்டை ஆசிரமம் அமைந்திருக்கிறது.இந்த ஆசிரமத்தில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.


செந்துறை

மெய்வரத்தம்பிரான்

செந்துறை மடத்துக் கொவிலில்(பழனியாண்டவர் கோவில்) சமாதி இருக்கிறது.

தஞ்சை/திருவாரூர்/நாகை

தஞ்சை கரந்தை

பால்சாமி

கரந்தை பழைய திருவாறு சாலை ராஜாகோரி தாண்டி பால்சுவாமி மடம் வளாகத்தினுள் சமாதி கோவில் இருக்கிறது.


சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தனுத்தாரி பாபா

கரந்தை தமிழ்ச்சங்கக் கட்டிடத்திற்குத் தென்புறம் தனுத்தாரி பாபா மடம் இருக்கிறது.


இந்த மடத்தில் தென்மேற்கு மூலையில் பாபாவின் சமாதி இருக்கிறது.

தென்பழனி சத்தியநாராயண சித்தர்

கரந்தை அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனை தென்புறச் சாலை ‘சித்தர் மண்டபம்’ இருக்கிறது.இதுவே பழைய சித்தர் ஆஸ்ரமம்.இந்த ஆஸ்ரமத்தின் உட்பகுதியில் சித்தர் சமாதி அடங்கிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


ஆதித்த குரு

கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு அருகில் சேர்வைக்காரன் தெரு இருக்கிறது.ஆற்றங்கரை சந்தின் நடுவில் ஆதித்தகுரு மடமும் சமாதிக்கோவிலும் உள்ளன.


மன்னார்குடி & விடயபுரம்

சட்டாம்பிள்ளை சுவாமிகள் (எ) இராமசாமி சாமிகள்

கொரடச்சேரி ரயில் நிலையத்திற்குத் தெற்கே வெண்ணவாசல் இருக்கிறது.அங்கிருந்து 3 கி.மீ.தூரத்தில் முசிறியம் என்னும் சிற்றூர் அமைந்திருக்கிறது.


அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் விசயபுரம் என்னும் ஊரில்,பிடாரியம்மன் கோவில் இருக்கிறது.


இந்தக் கோவிலின் அருகே முத்துச்சாமி பிள்ளை தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் சட்டாம்பிள்ளை சமாதி மேடை அமைக்கப்பட்டுள்ளது.


வெண்ணவாசல் கொரடாச்சேரி

பாண்டவையாற்றின் அருகே ஸ்ரீவாலையானந்தா ஆஸ்ரமம் இருக்கிறது.இங்கு மகாமேரு கோவிலுக்கு மேற்கே சமாதிபீடம் இருக்கிறது.


திருப்பூந்துருத்தி

தீர்த்த நாராயண சாமி

தஞ்சை டூ திருவையாறு டூ கண்டியூர் சாலையில் 6 கி.மீ.தூரத்தில் மேலைத் திருப்பூந்துருத்தி ஆற்றங்கரையில் சமாதிக்கோவில் இருக்கிறது.


இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


திருவையாறு

அகப்பேய் சித்தர்

ஐயாரப்பர் கோவிலில் சண்டேசுவரர் சன்னதி பக்கம் மேற்கு நோக்கிய சன்னதியில் சிவலிங்கப் பிரதிஷ்டையுடன் கூடிய சமாதி இருக்கிறது.


தியாகராஜ சுவாமிகள்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவரது சமாதி காவிரிக்கரையில் இருக்கிறது.


சங்கீதத்துறையில் சாதிக்க விரும்புவோர்,இவரது ஜீவ சமாதியை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளுக்கு சுக்கிர ஓரையில்(காலை 6 முதல் 7 வரை;மதியம் 1 முதல் 2 வரை;இரவு 8 முதல் 9 வரை;) வழிபட்டுவரலாம்.

ஆட்கொண்டார் சாமி

திருவையாறு திருநெய்த்தானம் சாலை கல்கி அக்ரஹாரம் என வழங்கப்படுகிறது.


சாலையின் வடபுறம் வரிசையில் ஆட்கொண்டார்சாமி கபால மோட்சம் எய்திய சமாதிக்கோவில் இருக்கிறது.


சுடுகாட்டுச்சாமி (எ) சதானந்த சாமிகள்

கல்கி அக்ரஹாரம் 41 ஆம் எண்ணில் சுடுகாட்டு சாமிகளின் திரு மடம் இருக்கிறது.இந்த மடத்தின் முன்பகுதியில் அதிஷ்டானம் இருக்கிறது.

ஸ்ரீதம்பலசாமி

சுடுகாட்டுச்சாமி மடத்தை அடுத்து 42 ஆம் எண் உட்புறமுள்ள கொல்லையில் சமாதி மேடை இருக்கிறது.


ஸ்ரீசிவப்பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள்

காவிரியின் வடகரையில் தியாகராஜ சுவாமிகள் சமாதிக்குப் பின்புறம் சிறிய சமாதிக்கோவில் இருக்கிறது.


இந்த ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


பரமானந்த குரு (எ) அருள்சாமிகள்

திருவையாறு டூ கும்பகோணம் சாலையில் சப்த கன்னியர் கோவில் உள்ளது.அடுத்த கட்டடத்தின் மேற்புறம் சிறிய சந்தில் அருள்குரு பரமானந்த நிலையம் என்னும் சமாதிக்கோவில் இருக்கிறது.


வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் சுவாதி நட்சத்திர நாளில் நடைபெற்றுவருகிறது.


சித்தேசர்

ஐயாரப்பர் கோவிலில் ஐயாரப்பர் சன்னதி எதிரில் சித்தேசர் ஆக லிங்கவடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


சிங்கப்பூர் சாமி(முருகேசன் சாமி)

புஷ்ய மண்டபக்கரை ஓரமாக அறுபத்துமூவர் மடம் இருக்கிறது.இந்த மடத்தினுள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.


ஆண்டார் சமாதி

மேலமடவிளாகம் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்றம் இருக்குமிடத்தில் சிறிய கோவிலில் லிங்க வடிவில் சமாதி இருக்கிறது.


தாராசுரம்

ஒட்டக்கூத்தர்

தாராசுரம் வீரபத்ரன் கோவில் பின்புறம் சமாதி இருக்கிறது.

சுவாமிமலை

சச்சிதானந்த சாமி

சுவாமிமலை வடகரையில் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் சமாதிக்கோவில் இருக்கிறது.


சமாதி மீது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


கீழக்கோட்டையூர்

ஸ்ரீராமா சாது

கும்பகோணம் சுவாமி மலையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் இருப்பது கீழக்கோட்டையூர் கிராமம் ஆகும்.


இங்கிருக்கும் வள்ளலார் கல்வி நிலைய வளாகத்துக்குள் சமாதி இருக்கிறது.


வருடாந்திர குருபூஜை விழா பிப்ரவர் 14 !


நரசிம்மபுரம்

ஸ்ரீவண்சடகோப ஸ்ரீநிவாச யதீந்திர மஹா சாமிகள்

சுவாமிமலை அருகில் ஆதனூர் டூ புள்ளபூதங்குடி இடையில் நரசிம்மபுரம் சிற்றூர் இருக்கிறது.


இங்கிருக்கும் திருக்குளம் பிருந்தாவன வளாகத்தில் முதலில் இருப்பது சுவாமிகளின் பிருந்தாவனம் ஆகும்.


 இந்த சுற்றுப்புறத்தில் இவருக்குப் பின் பீடமேறிய நான்கு பீடாதிபதிகளின் பிருந்தாவனங்களும் இங்கு இருக்கின்றன.


கும்பகோணம்

திருமழிசை ஆழ்வார்

ஆதி கும்பேஸ்வரர் கோவில் வடக்கில் சாத்தாரத் தெருவின் தென் கடைசியில் திருமழிசைபிரான் திருக்கோவில் இருக்கிறது.


இங்கு யோகநிட்டையில் அடங்கிய இடத்தில் மேடையில் திரு உருவபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


ஓம்ஹரிஹரிஓம் செய்ய மிகவும் உகந்த இடமாகும்.


கும்பமுனி எனப்படும் அகத்தியர்

ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்குள்ளே வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் இருக்கும் விநாயகர் சன்னதியின் கீழே அகத்தியர் தவம் செய்து கொண்டிருக்கிறார்.


ஸ்ரீவிஜியீந்திர தீர்த்தர்

159,சோலையப்பன் தெரு அருகில் ஸ்ரீவிஜியீந்திர சுவாமிகள் படித்துறையை ஒட்டி கிழக்குப் பக்கத்தில் சுவாமிகளின் அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.

மவுனசாமி

ஆதி கும்பேஸ்வரர் கோவில் சற்றுத்தொலைவில் மவுனசாமி மடத்துத் தெருவில் சுவாமிகளின் மடமும் சமாதிக்கோவிலும் இருக்கின்றன.


அருணாச்சல சாமிகள்

மவுனசாமிகள் சமாதிக்கு தெற்குப் பக்கம் சமாதி இருக்கிறது.


ஸ்ரீஅண்ணாசாமிகள்

மடத்துத் தெரு வடகோடியில் காசிவிஸ்வநாதர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் துர்க்கைக்கு எதிரில் துளசி மாடமாக சுவாமிகளின் அஸ்தி பீடம் இருக்கிறது.


கருப்பணசாமி, மூட்டைச்சாமி,ராமலிங்கசாமி

ரயில் நிலையம் செல்லும் சாலையின் அருகே திருநாராயணபுரம் வடக்கு வீதி இருக்கிறது.இந்ததெருவின் கடைசியில் திரும்புமிடத்தில் பழைய கருப்பணசாமி மடம் இருக்கிறது. 


புதிய கதவு எண்:5 இன் பக்கமாக உள்ள சிறிய சந்தின் வழியாக சென்றால் வீட்டின் பின்புறம் சுவாமிகள் மூவரும் சமாதியான இடத்தில் முளைத்த அரசமரமும் மூன்று சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதையும் காணலாம்.


ராமச்சந்திர தீர்த்தர்

கும்பகோணம் மேலக்காவிரியில் அமரேந்திரபுர அக்ரஹாரம் இருக்கிறது.தற்போது அமரேந்திரபுரத் தெரு என்று பெயரால் அழைக்கப்படுகிறது.


 அதன் கடைசியில் காவிரிக்கரையில் மூல பிருந்தாவனம் இருக்கிறது.

திருவிசைநல்லூர்

ஸ்ரீதர ஐயாவாள்

கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ.தூரத்தில் திருவிசை நல்லூர் இருக்கிறது.இங்கு திருமடமும் உற்சவ விக்கிரகமும் உள்ளன.


திருவீழிமலை

ஸ்ரீவீழி சிவவாக்கிய யோகிகள்

கும்பகோணத்திலிருந்து கிழக்கே 20 கி.மீ.தூரத்தில் திருவீழிமலை இருக்கிறது.இங்கிருக்கும் சிவாலயத்தில் கீழவீதியில் திருமடத்தில் யோகிகளின் சமாதிக்கோவில் இருக்கிறது.


திருபுவனம்

விராலிமலை சதாசிவ சாமி

கும்பகோணம் டூ மயிலாடுதுறை சாலையில் 8 கி.மீ.தூரத்தில் திருபுவனம் இருக்கிறது.இங்கு கம்பரேஸ்வரசாமி சிவாலயத்திற்கு அருகே மடமும் சமாதிக்கோவிலும் இருக்கிறது.


ஆடுதுறை

சைதன்ய சிவம்

ஆடுதுறை சூரியனார் கோவில் சாலையில் காவிரியாற்றின் மேம்பாலத்தின் மேற்கே அம்மன் கோவிலுக்கு பின்புறமுள்ள தோப்பில் சைதன்ய விநாயகர் கோவிலில் விநாயகருக்குக் கீழ் இவரது ஜீவசமாதி உயிர்த்துடிப்புடன் இயங்கிவருகிறது.


சாத்தனூர்

திருமூலர்

ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் சாத்தனூர் இருக்கிறது.இந்த ஊருக்கு வெளியே ஐயனார் கோவில் இருக்கிறது.இந்த அய்யனார் கோவிலின் பின்புறம் திருமூலரின் ஜீவசமாதி இருக்கிறது.ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற இடமாகும்.


சூரியனார் கோவில்

சிவாக்கிர யோகிகள்

ஆடுதுறை அருகே சூரியனார் கோவில் இருக்கிறது.இங்கிருக்கும் தெற்குவீதியில் திருமடத்தில் சுவாமிகளின் அதிஷ்டானக்கோவில் இருக்கிறது.


கஞ்சனூர்

ஸ்ரீஹரதத்தர்

ஆடுதுறைக்கு வடக்கே 2 கி.மீ.தூரத்தில் கஞ்சனூர் இருக்கிறது.இதன் மேற்கு எல்லையில் மணியாக்குளம் வடகரையில் வடமேற்கு பாகத்தில் அதிஷ்டானக்கோவில் அமைந்திருக்கிறது.


சுயம்பிரகாசர்

கஞ்சனூர் மணியாக்குளம் தென்புறம் காசிவிஸ்வநாதர் கோவில் இருக்கிறது.இங்கு தட்சிணாமூர்த்திக்கு அருகில் உள்ள சந்நிதியில் சிவலிங்கபிரதிஷ்டையுடன் சமாதி இருக்கிறது.அருகில் இரு சீடர்கள் சிவானந்தர் மற்றும் பரமானந்தர் ஆகியோரின் அதிஷ்டானங்களும் இருக்கின்றன.ஆலயத்திற்கு வெளியே தெற்கே தள்ளி ஸ்ரீவைத்தியலிங்க சாமி அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.


திருநாகேஸ்வரம்

ஸ்ரீநாராயணசாமி சித்தர்

உப்பிலியப்பன் கோவிலுக்கு வடக்கே கீழநடுப்பட்டறை தெருவின் கடைசியில் சமாதி பீடம் இருக்கிறது.


மாசி மாதம் வரும் புனர்பூசம் நட்சத்திர் நாளில் வருடாந்திர குருபூஜை!!

கீழக் கபிஸ்தலம்

ஸ்ரீதத்துவராய சுவாமிகள்

கும்பகோணம் டூ திருவையாறு இடையே 15 கி.மீ.தூரத்தில் கீழக்கபிஸ்தலம் இருக்கிறது.


இதன் வடக்கே வாழ்க்கை கிராமம் இருக்கிறது.இங்கே சாமியார்தோப்பு என்னும் இடத்தில் அதிஷ்டானம் இருக்கிறது.


குடவாசல்

சுப்பிரமணிய சித்தர்

கும்பகோணம் டூ திருவாரூர் சாலையில் 20 கி.மீ.தூரத்தில் குடவாசல் இருக்கிறது.


இங்கே இருக்கும் குருசாமி கோவிலே அதிஷ்டானம் ஆகும்.

திருவிடைமருதூர்

பத்திரகிரியார்

பட்டினத்தாரின் சீடரான இவரது ஜீவசமாதி மகாலிங்கசுவாமி கோவில் கிழக்கு கோபுர வாசலில் சிலை வடிவில் அமைந்திருக்கிறது.


வலங்கைமான்

காரை சித்தர்

வலங்கைமானுக்குக் கிழக்கே குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் ஆண்டாங்கோவில் என்னும் சிற்றூர் இருக்கிறது.இந்த ஆற்றைக் கடந்தால் காந்தவெளி ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.


இந்த கொவிலின் பின்புறம் 250 அடி தூரத்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.இந்த பீடத்தில் காரை சித்தரின் சுதையாலான உருவம் அமைக்கப்பட்டுள்ளது.


ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற இடம்;ஜபிக்க உகந்த நேரம் அமாவாசை நள்ளிரவு மணி 11.50 முதல் 12.10 வரை!!!

பூனைக்கண் சித்தர்

வலங்கைமான் பாய்க்காரத் தெரு பட்டகுளம் சந்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.


வைகாசி மாதம் வரும் தசமி திதி அன்று வருடாந்திர குருபூஜை வழிபாடு!!!

சின்னகரம்

வலங்கைமானுக்குத் தெற்கே சின்னகரம் என்னும் சிற்றூர் உள்ளது.


இதன் தொடக்கத்தில் துரவுபதி அம்மன் கோவில் இருக்கிறது.


இந்தக் கோவிலின் பின்புறமுள்ள குளத்த்தின் கரையில் வடமேற்கு மூலையில் சமாதிக்கோவில் இருக்கிறது.


கூந்தலூர்

ரோமரிஷி ஜீவசமாதி இங்கே தான் இருக்கிறது.


பஞ்சபட்சி சாஸ்திரம் கற்க விரும்புவோர்,கற்றதை சிறப்பாக செயல்படுத்திட விரும்புவோர்,8 அமாவாசைகளுக்கு இங்கு வந்து இரவு11 முதல் 1 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவும்.

திருவாலங்காடு

முதல்வர் நமச்சிவாய மூர்த்தி & திருமாளிகைத் தேவர்

ஆடுதுறை டூ குத்தாலம் இடையே திருவாலங்காடு இருக்கிறது.


இங்கு திருவாடுதுறை ஆதினத்திருமடத்தில் ஆதீனகுரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சமாதிக்கோவில் இருக்கிறது.இந்த வளாகத்துக்குள் சற்று வடபுறம் திருமாளிகைத் தேவர் சன்னதி இருக்கிறது.இவருக்கு தைமாதம் வரும் அசுபதி நட்சத்திரநாளில் வருடாந்திர வழிபாட்டு நாள்!!!


முழையூர்

ஆதிசிவப்பிரகாசர்

தாராசுரத்தை அடுத்து முழையூர் முக்கூட்டிற்கு மேற்கே ஆதிசிவப்பிரகாசர் சிவாலயம் இருக்கிறது.இதன் கருவறையே சமாதிக்கோவில் ஆகும்.


கொத்தம்பட்டி

பாலானந்த ஜோதி சுவாமிகள்

தஞ்சாவூர் டூ புதுக்கோட்டை இடையே 13 கி.மீ.தூரத்தில் புனல்குளம் இருக்கிறது.இதன் வடக்கே 4 கி.மீ.தூரத்தில் இருப்பது கொத்தம்பட்டி.சாலையின் முடிவில் பிள்ளையார் கோவில் இருக்கிறது.இதன் வடபுறம் காமாட்சியம்மன் கோவில் இருக்கிறது.


இந்த கோவில் வளாகத்துக்குள் அம்மன் சன்னதியின் தெற்கே சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


பட்டுக்கோட்டை

ஸ்ரீவெங்கிடு சாமிகள்

பட்டுக்கோட்டை பெரியகடை தெரு மேல்கோடியில் சாமியார் மடம் என்னும் ஸ்ரீவெங்கிடு சுப்பையா சாமிகளின் அழகிய சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே சிவலிங்கம

் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


வடகாடு

ஸ்ரீஅம்பலவாண சுவாமிகள்

முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை ஊரிலிருந்து தில்லை வளாகம் செல்லும் சாலையில் வடகாடு என்னும் ஊரில் சுவாமிகளின் சமாதிக்கோவில் இருக்கிறது


.மாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்தன்று வருடாந்திர வழிபாடு!!!

முத்துப்பேட்டை

ஷைகு தாவுத் வலி

ஜாம்பவான் ஓடை பகுதியில் ஷைகு தாவுத்வலி தர்கா இருக்கிறது.


மன்னார்குடி

சூட்டுக்கோல் ராமலிங்கசாமி

மன்னார்குடி கிழக்கு எல்லையில் திருவாரூர் செல்லும் சாலையில் மேல்புறம் பைபாஸ் ரோடு ஐயர் சமாதி என்றழைக்கப்படும் சூட்டுக்கோல் ராமலிங்க சாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


வருடாந்திர தைப்பூசம் தோறும் குருபூஜை!

மாயாண்டி சாமி

சூட்டுக்கோல் ராமலிங்க சாமியின் சமாதி பின்புறம் மாயாண்டி சாமியின் சமாதி இருக்கிறது.


ஸ்ரீவாட்டார் மவுனகுரு சாமி

மன்னார்குடி தென்வடல் 6 ஆம் தெருவில் கோபிநாதப்பெருமாள் கோவில் அருகில் சமாதிக்கோவில் இருக்கிறது.

ஸ்ரீமேரு சாமி

மன்னார்குடி ஹரித்ரா நதி தெப்பக்குளம் டூ ஈசானியேஸ்வரர் என்னும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கிழக்கு வாசலை அடுத்து,வாசலுக்கு வடபுறம் பாமினி ஆற்றுக்குத் தென்புறம் மேருசாமி சமாதிக்கோவில் இருக்கிறது.


பூந்தி சுவாமிகள்

மேலே குறிப்பிட்டுள்ள சிவன்கோவில் அருகில் சுவாமிகளின் சமாதி இருக்கிறது.


வடகரவாயில்

சாமிநாத சித்தன்

மன்னார்குடிக்கு 10 கி.மீ.தூரத்தில் ராஜப்பையன் சாவடி என்னும் சிற்றூர் இருக்கிறது.அதன் அருகில் வடகரவாயில் என்னும் கிராமம் இருக்கிறது.இங்கே இருக்கும் நாகமாரியம்மன் கோவிலுக்கு எதிர்ப்புறம் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.


மாசிமாதம் வரும் உத்ராடம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா !!!

அருகிலேயே குருநாதர் ஆறுமுக சித்தரின் சமாதி இருக்கிறது.இங்கே பங்குனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை!!!


முத்தையா சித்தர்

ராஜப்பையன் சாவடி அருகில் வடகரைவாயில் நாகமாரியம்மன் கோவில் வடக்குப் பக்கத்தில் சமாதி இருக்கிறது.மாசி மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.


செருவாமணி

ஆனந்தசாமி

சூட்டுக்கோல் ராமலிங்கசாமியின் சீடர் இவர்.மன்னார்குடியிலிருந்து 15 கி.மீ.தூரத்திலுள்ள சேந்தமங்கலத்தில் இறங்கி செருவாமணியை அடையலாம்.இங்கே இவரது ஜீவசமாதி இருக்கிறது.


திருக்களர்

வீரசேகர ஞான தேசிகர்

மன்னார்குடி அருகில் திருப்பத்தூர் என்னும் சிற்றூர் இருக்கிறது.


இதன் அருகில் திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோவில் வடக்கு வீதியில் வடகிழக்கு மூலையில் சமாதிக்கோவில் இருக்கிறது.


வைகாசி மாதம் வரும் பவுர்ணமியன்று குருபூஜை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


மருதூர்

சிவப்பிரகாச சாமிகள்

மன்னார்குடி டூ திருத்துறைப்பூண்டி சாலையில் 7 கி.மீ.தூரத்தில் தட்டாங்கோவில் இருக்கிறது.இதன் தெற்கே 3 கி.மீ.தூரத்தில் மருதூர் இருக்கிறது.இங்கே ஸ்ரீசிவப்பிரகாச சாமிகள் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.


இங்கே வருடாந்திர குருபூஜை கார்த்திகை மாதம் வரும் திருஓணம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.


திருநெல்லிகாவல்புதூர்

ஸ்ரீஅண்ணன் சாமிகள்(எ)அருணாச்சல சாமிகள்

திருத்துறைப்பூண்டி டூ திருவாரூர் சாலை நான்கு ரோடு சந்திப்புக்கு மேற்கே 3 கி.மீ.தூரத்தில் புதூர் ரைஸ் மில்லுக்கு எதிரில் உள்ள தோப்பில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.


நன்னிலம்

தாண்டவராய சுவாமி & நாராயணசுவாமி

நன்னிலம் கடைத்தெரு அருகே பிள்ளையார் கோவில் தெற்கு தெரு இலுப்பைத் தோப்பு இருக்கிறது.இங்கே ஸ்ரீநாராயண தாண்டீஸ்வரர் ஜீவசமாதி இருக்கிறது.அருகருகே தென்புறத்தில் ஸ்ரீநாராயணகுரு அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.வடபுறம் ஸ்ரீதாண்டவராய சுவாமிகளின் அதிஷ்டானம் இருக்கிறது.


வைகாசி மாதம் வரும் விசாகத்தன்று குருபூஜை வருடம் தோறும் நடைபெற்றுவருகிறது.

சன்னாநல்லூர்

சின்னான் சுவாமி

திருவாரூர் டூ மயிலாடுதுறை சாலையில் சன்னாநல்லூரில் சமாதிக்கோவில் இருக்கிறது.வருடம் தோறும் வரும் ஆடிமாதம் ஆயில்யம் நட்சத்திரநாளில் குருபூஜைவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


திருவாஞ்சியம்

ராமையா சாமி

நன்னிலத்திலிருந்து 7 கி.மீ.தூரத்தில் திருவாஞ்சியம் அருகில் பால்பண்ணைச்சேரி கிராமம் இருக்கிறது.


இங்கு பாலதண்டாயுதபாணிகோவில் வளாகத்தில் இவரது ஜீவசமாதி இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும.

No comments:

Post a Comment