Saturday, December 31, 2022

காந்தாரா

Thank to Fb
#காந்தாரா இந்த படத்தின் அடிநாதத்தை அரசு மருத்துவரான அருண் பிள்ளை இன்னும் டீட்டெயிலாக தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், காந்தாரா திரைப்படத்தில் காட்டப்படும், பஞ்சுருளி மற்றும் குலிகா தெய்வங்களின் மூலமும், கதாப்பாத்திரங்கள் வழியாக தெய்வங்கள் ஊடுருவி சென்றது எப்படி என்பதை பற்றியும் கூறியுள்ளார்.

இதோ அவரது வார்த்தைகளில் இருந்து.. இதற்கு மேல் உலகமே பாராட்டிய படத்தை புகழ்ந்து எழுதுவது ஏற்புடையதல்ல.‌ ஆகவே படத்தில் நீங்கள் புரிந்துக்கொள்ள தவறிய சிலவற்றைப் பற்றி எழுதுகிறேன். வேண்டுமானால் இந்த கட்டுரையை படித்து விட்டு மீண்டும் ஒருமுறை படத்தை OTTல் பாருங்களேன். 'காந்தாரா' என்றால் சமஸ்கிருதத்தில் 'அடர் காடு' என்று பொருள்படும். அது வெறும் மேம்போக்கான பொருள் மட்டுமே என்றாலும், உட்பொருள் 'பிறப்புகளின் அடர்வு' என்பதே ஆகும். ஒரு மனிதனின் ஜனன-மரண பிறவி என்பது காடு போன்றது. அதில் சிக்கி தவிக்காமல் இருக்க, சரணாகதி எனும் மோக்‌ஷமே வழி என்பது சூசகம்.

படத்தில் விலங்குகள் வாழும் காடு, மனிதர்கள் வாழும் கிராமம் இரண்டிற்குமான எல்லை வரையறை தான் முக்கிய பொருளாக பேசப்பட்டுள்ளது. இரண்டில் வாழும் உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று ஒன்றி வாழ வேண்டும் என்பதே வேட்கை. அதற்கு தெய்வம் எப்படி உதவியது என்பதே கதை. இதனைப் படத்தின் உட்பொருளாக எப்படி எடுத்து சென்றார்கள் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் முதலில் கர்நாடக மாநிலம் துளு நாட்டின் 
சில பாரம்பரியங்களையும், கலாச்சாரங்களையும், அவர்களது மண்ணின் தெய்வங்களையும் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.

காந்தாரா காரணம்.. உருவான பிணைப்பு.. குலதெய்வம் கோவில்களுக்கு குடும்பத்தோடு கிளம்பி செல்லும் மக்கள்!

#பஞ்சுருளி ;
நான் முன்பு வராஹத்தைப் பற்றிய ஒரு பெரிய நீண்ட கட்டுரையை எழுதியிருந்தேன். அதில் வராஹம் எப்படி இந்திய நாட்டின் கலாச்சார தெய்வமானது என்பதனையும், பிறகு அது எப்படி விஷ்ணுவின் அவதாரமாக கொள்ளப்பட்டது என்பதனையும் விரிவாக எழுதியிருந்தேன்‌. வராஹம் விஷ்ணுவின் அம்சமாக ஏற்றுக்கொள்ளப்படாத காலத்தில், துளு நாட்டினர் அத்தெய்வத்தை 'பஞ்சுருளி' என்று போற்றி வந்தனர். காடுகளின் முடிசூடா மன்னனான வராஹம், காட்டின் தெய்வமாக கருதப்பட்டது. இந்த பஞ்சுருளி தெய்வத்திற்கு உருவம் கிடையாது. செங்குத்தாக‌ நிறுத்தப்படும் கல் ரூபமாக வணங்கப்பட்டு, வருடத்தின் ஒரு நாள் பூத கொலா என்ற பாரம்பரிய ஆட்டம் நிகழ்த்தப்பட்டு(படத்தில் காட்டப்பட்ட ஆட்டம்) வாக்கு கேட்கப்படும். அப்போது வராஹத்தைப் போன்ற உருவ கவசம் சாத்தப்படும். பஞ்சுருளி தெய்வத்திற்கென்று தனிக் கதை கிடையாது. மனிதன் காட்டில் பெரும்பாலும் சிங்கம் புலி போன்ற கொடிய விலங்குகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வதில்லை. ஆனால் சாதுவான வராஹத்தினை அடிக்கடி பார்க்க நேரிடும். வராஹம் மனிதனை சீண்டுவதில்லை, எனினும் அது மனிதனையே வீழ்த்தும் வல்லமைக் கொண்டது. ஆனால் முறையற்ற மனிதன், அதனை வேட்டையாடுவதை வாடிக்கையாக்கவும் தவறவில்லை. அச்செயல்களைத் தவிர்க்கவே வராஹம், மனிதன் எனும் விலங்குக்கும் வனத்தில் வாழும் கொடிய விலங்குகளுக்குமான ஒரு வரையறை விலங்கு போல் வைக்கப்பட்டது. அதனால் அக்காலத்தில் காட்டில் ஏராளமாக காணப்பட்டதும், வனப்பான தோற்றம் கொண்டதுமான வராஹம் தெய்வமாக கொள்ளப்பட்டிருக்கலாம்.

#குலிகா ;
படத்தில் வரும் அடுத்த தெய்வம் குளிகா. இது நாம் அனைவரும் படத்தில் கிரகிக்க மறந்த ஒரு தெய்வம். ஆனால் கதையே இந்த குளிகா தெய்வத்தை சுற்றி தான் நகர்கிறது. முதலில் யார் இந்த குளிகா என்று கூறிவிடுகிறேன். கைலாயத்தில் பார்வதி தேவி ஒரு நாள் சிவபெருமான் பூசிக் கொள்ள திருநீறு எடுத்து வந்தார், அதில் ஒரு கல் இருந்தது. அதனை சிவன் தூக்கி எறிய, அது சிவன் ஸ்பரிசம் பட்டு குளிகா எனும் பூத கணமாக மாறியது. அந்த கணத்தின் விசித்திரமான செய்கைகளால் சிவன் வேதனையுற்று குளிகாவை வைகுண்டத்தில் விஷ்ணுவிற்கு பணிவிடை செய்ய அனுப்பி வைத்தார்‌. அங்கும் குளிகாவின் செய்கைகள் மாறாததால் ஆத்திரமடைந்த விஷ்ணு, குளிகாவை உலகில் பிறக்க சபித்தார். 

பூவுலகில் தாயின் நிறைமாத கர்ப்பத்தில் இருந்த குளிகா தன் தாயிடம் கேட்டது 'நான் உன் வயிற்றிலிருந்து எப்படி வெளி வர வேண்டும்?' அதற்கு தாய் 'மற்ற குழந்தைகள் போல் சுகப்பிரசவம் செய்' என்றாள். முன்பு சிவனையும் விஷ்ணுவையும் ஆத்திரமடைய செய்த விலங்கு குணமும் விதண்டாவாத செய்கைகளும் குளிகாவை நீங்கவில்லை. உடனே தாயின் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியே வந்தது. வந்த நேரத்தில் பசி பசி என்று கண்ணில் பட்ட அனைத்தையும் சாப்பிட்டது. விஷ்ணு துயின்ற கடலையும் குடித்து வற்றச்செய்து, அதிலிருந்த மீன்களையும் தின்று தீர்த்தது. பிறகு வனத்தில் புகுந்து யானை குதிரைகள் இரத்தம் குடித்தது. எவ்வளவு தின்றும் தீரா பசியும் தாகமும் கொண்ட குளிகாவிற்கு தன் சுண்டு விரல் இரத்தம் தந்து பசி அடக்கினார் விஷ்ணு.

#பஞ்சுருளியும்_குளிகாவும் ;
எனினும் நிலப்பிரதேசத்தின் குளிகாவை கானகத்தில் அடக்கி ஆளவே விஷ்ணு காட்டுப்பன்றி அவதாரம் எடுத்து பஞ்சுருளி ஆனார் எனலாம். அப்போது பஞ்சுருளிக்கும் குளிகாவுக்குமான சண்டை ஓயாது. விலங்கு குணம் கொண்ட குளிகாவை விலங்கு ரூபம் கொண்டு எதிர்த்தார் விஷ்ணு. இதற்கிடையே பார்வதி தேவியின் அம்சமான ஏழு ஜல துர்க்கைகள் (சப்தகன்னியர்) ஒருமுறை கானகத்திற்கு வந்திருந்த போது, குளிகாவிற்கு அடைக்கலம் கொடுத்து உணவளித்து சாந்தப்படுத்தினர்‌. அப்போது பஞ்சுருளிக்கும் குளிகாவிற்குமான சச்சரவுகளைத் தீர்த்து வைத்து இருவரையும் அண்ணன்-தம்பி போல் வாழ கேட்டுக்கொண்டனர். குளிகாவை தங்கள் காவல் தெய்வமாக ஆக்கிக் கொண்டனர். இதனால் குளிகாவிற்கு 'ஷேத்திரபாலன்' என்ற பெயரும் உண்டு. இதனால் காடு-கிராமம் ஆகியவற்றின் எல்லை தெய்வங்களாக முறையே பஞ்சுருளி-குளிகா போற்றப்பட்டனர். இருநிலங்களுக்குமான எல்லை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகவே வழிபடப்பட்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் இணைபிரியாதவர்களாக மாறினர். காலப்போக்கில் குளிகா, பஞ்சுருளியின் காவல் தெய்வமாக ஆக்கப்பட்டார்! காரணம் காடு அழிவை சந்தித்தது, கிராமம் காட்டை காக்க வேண்டியதாயிற்று. குளிகாவிற்கு தனி உருவம் கிடையாது. வானத்தை பார்த்த கல் ஒன்றே குளிகாவாக ஏற்கப்பட்டது. இதற்கும் தனியே குளிகா கொலா என்ற ஆட்டம் உண்டு (படத்தில் காட்டப்படவில்லை).

#வராஹ_ரூபம்_பாடல் ;
படத்தின் அடிநாதமாக விளங்கியது 'வராஹ ரூபம்' பாடல். இந்த பாடல் தோடி, மோஹனம் ஆகிய இராகங்களால் தந்த கிரக்கத்தையும், அத்தோடு கூடிய பயபக்தியையும் ஒருவர் வாய்விட்டு கூறிவிட முடியாது. காரணம் அது ஒவ்வொரு ஆன்மாவின் பக்தியினையும் அதன் ஆழ்மனதில் சென்று கிளறியுள்ளது. அத்தனை மொழிகளும், இப்பாடலை மொழிபெயர்க்காமல் அப்படியே ஒரு ஸ்லோகம் போல் ஏற்றுக்கொண்டு விட்டது தான் இந்த பாடலின் தனித்துவம். மேலும் பாடல், மேலே சொன்ன கதையினை மிக அழகாக ஊர்ஜிதம் செய்கிறது. பாடலில் வரும் முதல் பத்தி வராஹத்தை போற்றுவது ஆகும்.
'வராஹ ரூபம் தெய்வ வரிஷ்டம்
வரஸ்மித வதனம்
வஜ்ர தந்த தர ரக்ஷா கவசம்'
வராஹம் என்னும் காட்டுப்பன்றியின் இந்த ஒப்பற்ற கடவுளின் ரூபம், வரங்கள் பல தரும் அவரின் மகிழ்ந்த கோலம் ஆகும். வைரம் போல் அங்கே ஒளிரும் அவரின் தந்தம்(கொம்பு) நம் அனைவரையும் காக்க வந்த கவச ஆயுதம் ஆகும்! பாடலின் இரண்டாவது பத்தி குளிகாவைப் பற்றியது என்று சொன்னாலும், இது வராஹத்திற்கும் பொருந்தும்.

'ஷிவ ஸம்பூத புவி ஸம்ஜாத
நம்பீ தவ கிம்பு கொடுவவ நீத
ஸாவிர தைவத மந ஸம்ப்ரீத்த
பேடுத நிந்தெவு ஆராதிஸுத!'
சிவ பெருமானின் சாராம்சம் கொண்டவரும், பூமித்தாயுடன் ஒன்றி வாழ்பவரும், நம்பியவர்களுக்கு அபயம் தருபவரும், ஆயிரமாயிரம் தேவர்களின் மனதை கவர்ந்தவருமான தேவரே! {எழுத்துரு - அருண் பிள்ளை} உங்கள் முன்பு பணிவோடு நாங்கள் கைக்கூப்பி நிற்கிறோம்! இதனால் தான் 'பூத கோலா' ஆடுபவர் சிவனைக் குறிக்கும் முக்கண் குறியீட்டினை நெற்றியில் இட்டும், மங்களத்தைக் குறிக்கும் மஞ்சள் நிறம் இட்டும், வராஹ படிமத்தை தலையில் தாங்கியும் ஆடுகிறார். 'குளிகா கொலா' என்ற ஆட்டத்தில் நடனமாடுபவர், குளிகாவாக மனித முக ரூபம் கொண்டு கருப்பு சிவப்பு வர்ணங்கள் இட்டு ஆடுவார். படத்தில் பார்க்கவேண்டுவன நிதர்சனத்தில் உள்ளது போன்றே பஞ்சுருளி-குளிகா என்கிற ying-yang characterisationஐ படத்திலும் காண்பித்திருக்கின்றனர். படத்தில் பஞ்சுருளி, வராஹமாகவே காட்டப்பட்டிருக்கும். குளிகா தான் நம்ம ஹீரோ!
மறைந்து போதல் - பூத கொலா ஆடுபவர் மறைந்து போவது என்பது அந்த ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களில் ஒன்று. நிஜ ஆட்டத்தில் தெய்வம் நீங்கி (மறைவதாக) காட்டப்பட்டாலும், படத்தில் அமானுஷ்ய முறையில் ஆடுபவரே மறைவதாக காட்டப்படுவது மிக அருமை.‌ அடர் காட்டினுள் (பிறப்பு அடர்வு) சிக்கிக்கொள்ளாமல் இருக்க மறைவதே (மோக்ஷம்) சிறந்தது என்பது தான் சூசகம். சிவாவின் அப்பாவும் மோக்ஷம் அடைகிறார்.

#ஆட்கொள்ளுதல்
சிவா சிறுவயது வரை நல்லவனாகவே இருந்து வருகிறான். அவனது அப்பா மறைகின்ற போது, அங்கே அவரை நோக்கி ஓடுகிறான். அப்போது அனைவரும் பின் தொடர்ந்த போதும், அவர் மறைந்த மாய தீ வளையம் அவனை மட்டுமே உள் வாங்குகிறது‌. அந்த நொடியிலேயே குளிகா தெய்வம் அவனை ஆட்கொண்டுவிடுகிறது. குளிகா தான் - அது முதல், தன் தந்தையின் பிரிவு என்ற பெயரில் சிவா விலங்கு குணமும் விதண்டாவாத செய்கைகளும் கொண்ட அடங்காபிடாரியாகவும் குளிகாவின் குணத்துடன் திரிகிறான்.
மது மாமிசம் - குளிகாவின் செய்யற்கரிய செயல்கள் என்று தெய்வங்களை ஆத்திரமடைய செய்தது இவைகளே. மது அருந்துவதும், மாமிசங்கள் உண்பதும் என சிவா திரிந்தது குளிகாவின் செய்கைகளால் தான். சிவா காட்டுப்பன்றியை (வராஹம்) வேட்டையாடி உண்டதும் இவ்வகையையே சாரும். மீன் உணவு - குளிகா விஷ்ணுவின் கடலை உறிந்து மீன்களை உண்டது போல, படம் முழுவதும் சிவா மீன்களை விரும்பி சாப்பிடும் வழக்கத்தை கொண்டதும் ஒரு சூசகம். குளிகாவிற்கு மீன் மிகவும் பிடித்த உணவு.
பெயர் - முதலில் கதாநாயகனுக்கு சிவா என்ற பெயரே குளிகாவின் சிவ பூத கணம் என்ற குறியீடு தான்.

#மர_வீடு ;
சிவா எப்போதும் மரத்தின் உச்சியில் உள்ள வீட்டில் (வீட்டின் பெயர் கைலாயம், அது புராணப்படி, குலிகா பிறந்த இடம் என்பது மற்றொரு உவமை) வாழ்வதும் குளிகாவின் செய்கை எனலாம். சொர்க்கத்தில் இருந்து துரத்தப்பட்ட குளிகா, வானுக்குமில்லாமல் பூமிக்குமில்லாமல் வாழ்வதையே இது குறிக்கும். கெட்ட கனவுகள் - தன் காவல் தெய்வமான குளிகாவை பஞ்சுருளி அழைப்பதே சிவாவிற்கு வரும் கெட்ட கனவுகள். சாமியாடி தம்பியான குருவா கொல்லப்பட்ட போது, பஞ்சுருளி பூத கொலா வேடத்தில் சிறைக்கு வந்து அழுது புலம்பி அழைத்தது குளிகாவை தான். தன் கானகத்தினைக்/கிராமத்தினைக் காப்பாற்ற வேண்டுகிறது. படத்தில் பல முறை பஞ்சுருளி தெய்வம், வராஹமாக சிவாவை நேரடியாக தொடர்பு கொள்ளும். ஆனால் அவன் பயந்து ஓடி விடுவான். உண்மையில் அவன் வராஹத்தை எதிர்கொண்டு அதனை பயமுறுத்திய பிறகே (இருவரும் போட்டி போடும் பாவனை - பஞ்சுருளிக்கும் குளிகாவிற்குமான அடிப்படை பந்தம்) சிவா தன்னை குளிகாவாக உணர்கிறான். குளிகாவிற்கு இன்றளவும் பொரி மற்றும் இளநீர் படைப்பது வழக்கம், அதுவே குளிகா பொரி இறைக்கும் காட்சி. மேலும் சிவா மேலாடை இல்லாமல் வேட்டியுடன் ஆடும் அந்த ஆட்டம் தான் குளிகா கொலா.

#குளிகா_வெளிப்படுதல் ;
ஆதியில் மன்னனிடம் பேசும் போது பஞ்சுருளி தெய்வம் ஒரு கர்ஜனை விடுகிறது. நான் மறந்தாலும், என் காவல் தெய்வமான குளிகா சும்மா இருக்க மாட்டான் என்கிறது. அது போலவே படத்தின் இறுதியில் சிவா (மயங்கிய) பிறகு, பஞ்சுருளியின் அழைப்பின் பேரில் குளிகா முற்றிலுமாக வெளிப்படுகிறது. வானம் பார்த்த கல், அதன் அருகில் ஆயுதம் என்று climaxஇல் குளிகா முழுமையாக வெளிப்பட்டு அதகளம் செய்கிறது. மேலும் வில்லனைக் கொலை செய்யும் போது தன்னை க்ஷேத்திரபாலன் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறது. வந்த வேலை முடிந்ததாக, வனத்துறை அதிகாரியிடம் கிராமத்தினைத் தத்துக் கொடுக்கும் பாவனையில் ஆடுவது, காட்டை நோக்கி ஓடி மறைவது என அனைத்தும்‌ மோக்ஷம் குறிக்கும். குளிகா (சிவா) ஓசையெழுப்ப, கானகத்தில் மறுஒலியை பஞ்சுருளி தெய்வம்(சிவாவின் அப்பா) எழுப்புகிறது. சிவா தனக்கான வேலை வந்தது என ஓடுகிறான்‌. அங்கே அண்ணன் தம்பியாக பழக ஜல துர்க்கைகள் அணையிட்டவாறு இருவரும் சிலாகித்து மறைந்துவிடுகின்றனர். இதுவே பஞ்சுருளி-குளிகாவின் பந்த தத்துவம்‌. இது தான் படம்! இறுதியில் மனிதன்-மிருகம்-கடவுள் : இந்த மூன்று தத்துவங்களும் இயற்கையாகவே ஒன்றோடு ஒன்று பினையப்பட்டுள்ளது. அவை ஒன்றோடு ஒன்று உறவாடி வாழ தகுதி உடையது என்பதனைக் கூறி, தவறினால் ஒன்று மற்றொன்றாக மாறிவிடும் என்பதனையும் மிக தெளிவாக, அழகாக கூறியுள்ளது இந்த காந்தாரா!

Friday, December 30, 2022

சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள்

சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!!

♣ஆதம்பாக்கம் ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில்
♣அயனாவரம் ஸ்ரீ பரசுராமலிங்கேஸ்வரர் கோயில்
♣எழுச்சூர் ஸ்ரீ நல்லிணக்கீஸ்வரர் கோயில்
♣காட்டூர் (பொன்னேரி) திருவல்லீஸ்வரர் கோயில்
♣கோயம்பேடு ஸ்ரீ குருங்கலீஸ்வரர் கோயில்
♣குன்றத்தூர் ஸ்ரீ முருகன் கோயில்
♣குன்றத்தூர் ஸ்ரீ வட நாகேஸ்வரர் கோயில்
♣மாடம்பாக்கம் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோயில்
♣மைலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில்
♣மயிலாப்பூர் ஸ்ரீ விருபாக்ஷேஸ்வரர் கோயில்
♣மயிலாப்பூர் ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில்
♣மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோயில்
♣பம்மல் ஸ்ரீ அக்கீஸ்வரர் கோயில்
♣பாடி திருவலிதாயம் ஸ்ரீ திருவல்லீஸ்வரர் கோயில்
♣பூவிருந்தமல்லி ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில்
♣புரசைவாக்கம் ஸ்ரீ கங்காதீஸ்வரர் கோயில்
♣சைதாப்பேட்டை ஸ்ரீ பிரசன்னவேங்கட நரசிம்ஹ கோயில்
♣சைதாப்பேட்டை ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில்
♣திருப்போரூர் ஸ்ரீ கந்தசுவாமி கோயில்
♣திருவலிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில்
♣திருவல்லிக்கேணி ஸ்ரீ திருவேட்டீஸ்வரர் கோயில்
♣திருவல்லிக்கேணி ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
♣திருவொற்றியூர் ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோயில்
♣திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயில்
♣திருமழிசை ஸ்ரீ ஜகன்னாதபெருமாள் கோயில்
♣திருமுல்லைவாயல் ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் கோயில்
♣திருநீர்மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில்
♣திரிசூலம் ஸ்ரீ திரிஸுலநாதர் கோயில்
♣வேளச்சேரி ஸ்ரீ தண்டீஸ்வரர் கோயில்
♣வில்லிவாக்கம் ஸ்ரீ சௌம்யாதாமோதர பெருமாள் கோயில்
♣வில்லிவாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில்
♣வடபழனி வேங்கிஸ்வரர் கோயில்
♣வியாசர்பாடி ஸ்ரீ ரவீஸ்வரர் கோயில்
♣நெமிலிச்சேரி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்

பிற்கால கோயில்கள்:
♣1200 வளசரவாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில்
♣1500 நுங்கம்பாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
♣1673 ஜார்ஜ் டவுன் ஸ்ரீ கந்தசுவாமி கோயில்
♣18ம் நூற்றாண்டு கொசபேட்டை ஸ்ரீ கந்தசுவாமி கோயில்
♣1700 ராயபுரம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயில்
♣1717 மண்ணடி ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில்
♣1734 சிந்தாதரிபேட்டை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோயில்
♣1735 ஜார்ஜ் டவுன் ஸ்ரீ கச்சளீஸ்வரர் கோயில்
♣1762 பாரி முனை ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில்
♣1779 தண்டையார்பேட்டை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில்
♣1787 மண்ணடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்
♣19ம் நூற்றாண்டு அயனாவரம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில்
♣1800 கோலெட்பெட் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்
♣1806  ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அகஸ்தீஸ்வரர் கோயில்
♣1806 ஜார்ஜ் டவுன் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில்
♣1850 மேற்கு மாம்பலம் ஸ்ரீ கோதண்டராமர் கோயில்
♣1880 வடபழனி ஸ்ரீ முருகன் கோயில்
♣1900 நங்கநல்லூர் ஸ்ரீ அர்தனாரீஸ்வரர் கோயில்
♣1990 நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்

நமது திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள்

!!🥥ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ண பிரசாதம்🥥!! 

"நமது திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள்"

சிங்கப்பெருமாள் தோசை பிரசாதம்!

திருப்பதி என்றால் லட்டு, ஸ்ரீரங்கம் என்றால் புளியோதரை! 

 இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்மர் என்றால் சுவையான மிளகு தோசை தான் நினைவுக்கு வரும்.

அகோபிலம் என்றால் பானகம்! 

  இங்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை இருந்தாலும் மிளகு தோசைக்கே வரவேற்பு அதிகம். இந்த தோசைகள் பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருக்கும். அதில் எண்ணெய் பொடி சேர்த்து கொடுக்கின்றனர். இதை குழந்தைகள் விரும்பி உண்பதால்தோசைப் பெருமாள் கோவில் என்று செல்லமாக குறிப்பிடுகின்றனர்.

 ஒரு தோசை விலை ரூ.25

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் (சிங்கப்பெருமாள்) திருக்கோயில்

மண் உருண்டை பிரசாதம்!

திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அப்பம், அரவணை, நெய், லட்டு ஆகியவற்றை பிரசாதமாக தரும் கோயில்கள் உண்டு.

 ஆனால், கடன்தொல்லை தீர வேண்டும் என்பதற்காக மண்சாந்து உருண்டையை ராமநாதபுரம் அருகே திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தருகின்றனர். இங்குள்ள வில்வ மரத்தின் கீழ் உள்ள மண்சாந்தை உருண்டையாக உருட்டி தருகின்றனர். இதை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால் கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்

புற்றுமண் பிரசாதம்

தூக்கணாங்குருவிக்கூடு, சிலந்தி வலை, புற்று இவைகளை மனிதன் அவ்வளவு எளிதாக உருவாக்கி விட முடியாது. புற்று என்பது வழிபடத்தக்க ஒரு உருவம். கும்பாபிஷேக நாளில் மிருத்ஸங்க்ரணம் என்ற கிரியைக்கு புற்று மண் தேவைப்படுகிறது. 

புற்றுமண், துளசி செடி மண், வில்வமரத்தடி மண் இவைகள் புனிதமானவை. மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், திருவொற்றியூர், திருவேற்காடு போன்ற தலங்களில் புற்று மண் பிரசாதம் தரப்படுகிறது.

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்

வரட்டி சாம்பலே பிரசாதம்!

மயிலை முண்டகக் கண்ணி அம்மன் கோயிலில், ஆடிமாதம் பொங்கல் (ஏதாவது ஒரு வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில்) வைப்பது மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. 

அன்று பொங்கல் வைக்க உபயோகப்படுத்தப்படும் வரட்டியின் சாம்பல் விபூதிப் பிரசாதமாகத் தரப்படுகிறது.

அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில்

எலுமிச்சை சாறு பிரசாதம்!

பொதுவாக அம்மன் கோயில்களில் எலுமிச்சம் பழங்களைத்தான் பிரசாதமாகத் தருவர். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலில் அம்பாளுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சை அனைத்தும் பிரசாதமாகத் தரப்படுகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஏகவுரி அம்மன் கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு எலுமிச்சை சாறை பிரசாதமாக கொடுக்கிறார்கள். இதைப் பருகினால், கர்ப்பமாவார்கள் என்பது ஐதீகம்.

அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில்

அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில்

பச்சிலை பிரசாதம்!

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆனைமலை மாசாணியம்மன் ஆலயம். நெற்றியில் சக்கரத்துடன் சயன நிலையில் அம்மன் அருளும் இந்த ஆலயத்தில், பச்சிலை பிரசாதம் விசேஷம். 

இது, பெண்களுக்கான உடற்பிணிகள், வயிறு தொடர்பான நோய்களை நீக்கும் வல்லமையானது என்பர். தை அமாவாசையில் வழிபட வேண்டிய தலம் இது!

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்

ஐஸ்கிரீம் பிரசாதம்!

டேராடூன்-முசௌரி சாலையில் அமைந்துள்ளது சிவபுரி. இங்குள்ள ஸ்ரீபிரகாஷ் ஈஸ்வர் மகாதேவ் மந்திரில் காலை நேரங்களில் காராசேவும் பூந் தியும் பிரசாதமாகத் தரப்படுகிறது. மதிய வேளைகளில் சாதமும், பருப்பும் கூடவே ஐஸ்கிரீமும் பிரசாதமாகத் தருகிறார்கள்.

புளிய இலை பிரசாதம்!

குவாலியரில் இசைமேதை தான்சேன் சமாதி அருகில் ஒரு புளியமரம் உள்ளது. இது அவரே நட்டு வளர்த்த மரம் என்று கூறுகிறார்கள். இதன் இலை, பூவைத்தான் தான்சேனின் பிரசாதமாக இசை அன்பர்கள் பக்தியுடன் பெற்றுச் சுவைக்கிறார்கள்.

அம்மன் சன்னிதியில் விபூதி பிரசாதம்!
ஸ்ரீமுஷ்ணம் திருக்கூடலையாற்றூர் ஸ்ரீநர்த்தனவல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளது சிறப்பு. ஸ்ரீஞானசக்தி அம்மன் சன்னதியில் குங்குமமும், ஸ்ரீபராசக்தி அம்மன் சன்னிதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுகின்றன.

அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில்

வெற்றிலை பிரசாதம்!

செகந்திராபாத் ஸ்கந்தகிரியிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும், எல்.பி.நகர் அருகிலுள்ள கர்மன்காட் தியான ஆஞ்சநேயர் கோயிலிலும் வெற்றிலையினால் சகஸ்ரநாம, அஷ்டோத்தர அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு அதை பிசாதமாக க்கொடுக்கிறார்கள். அதனால் பக்தர்களும்  அர்ச்சனைக்காக அனுமனுக்கு நிறைய வெற்றிலை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

உப்பு மண் விபூதி பிரசாதம்!

மோகனூரிலிருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் ஒருவந்தூரில் உள்ளது பிடாரி அம்மன் கோயில். அம்பாள் சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கும் இத்தலத்தில் உப்பு மண் விபூதி பிரசாதமாகத் தரப்படுகிறது.

 இந்தப் பிரசாதத்தைப் பூசினால் வினைகள் யாவும் தீரும் என்பது இப்பகுதி  மக்களின் நம்பிக்கை. சிவன் பார்வதி இணைந்த சொரூபமே பிடாரி அம்மன் என்றும், குழந்தை பாக்கியம் பெற, திருமணத்தடை விலக, கல்வியில்  சிறந்து விளங்க இந்த அம்மனை வழிபட, வேண்டுதல் கைகூடும் என்றும் சொல்லப்படுகிறது.

அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில்

மிளகாய் வற்றல் பிரசாதம்!

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிரிவலப்பாதையில் மிளகாய் சித்தர் சமாதி உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மிளகாய் வற்றல் தரப்படுகிறது. இதை வீட்டிற்குக் கொண்டுபோய் சமையலில் பயன்படுத்தி சாப்பிட்டால் நோய் நொடிகள் அகலும் என்பது நம்பிக்கை!

பிரியாணி பிரசாதம்!

மதுரை திருமங்கலத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. வடக்கம்பட்டி எனும் கிராமம். இங்குள்ள முனியாண்டி கோயிலில் வருடா வருடம் தை மாதம் 2வது வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்து கடவுளைக் கும்பிடுகிறார்கள். அன்றைய தினம் கடவுளுக்கு பிரியாணி படைக்கப்பட்டு, அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தேங்காய் பிரசாதம்!

நவராத்திரி விழாவின் போது நெமிலி பாலா திரிபுரசுந்தரி கோயிலில் கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த வருடம் வரை கெடாமல் இருக்கும் அதிசயத்தைக் காணலாம்.

 அந்தக் தேங்காயை மறு வருடம் நவராத்திரி விழாவின் போது முதல் நாள் பூஜித்து உடைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம்.

இக்கோயிலில் குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் குழந்தைகள் விரும்பும் சாக்லெட் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 மேலும் சரஸ்வதியின் அம்சமாக பாலா திகழ்வதால் மாணவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இத்தேவியை வணங்குவதன் மூலம் கிரகிப்புத்திறன், ஞாபக சக்தி பெற்று கல்வியில் சிறந்து விளங்குவர்.

அருள்மிகு பாலா திருக்கோயில்

மண்டையப்பம் பிரசாதம்!

நாகர்கோவில் அருகில் உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் அம்மனுக்கு பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து மண்டையப்பம் எனும் பிரசாதம் செய்து படைக்க தீராத தலைவலியும் நீங்கிவிடும்.

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்

திருமண் பிரசாதம்!

கரூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக்கோயில். இங்கு அம்பாள் நான்கு கரங்களுடன், கிழக்கு முகமாக சற்றே ஈசான்யப் பார்வையுடன், அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

 இக்கோயிலில் நடக்கும் வைகாசி பெருவிழாவில், கம்பம் நடும் விழா விசேஷமானது. வேப்ப மரத்தின் மூன்று கிளைகளைக் கொண்ட ஒருபகுதியை.

 அதன் பட்டைகளை உரித்து, அதில் மஞ்சள் செருகி, ஆற்றில் பூஜித்து, கோயிலின் பலி பீடத்தின் அருகில் நடப்படுகிறது. இதையே பக்தர்கள் அம்பாளாகக் கருதி வழிபடுகிறார்கள். இக்கோயிலில் அம்மன் பிரசாதமாக திருமண் வழங்கப்படுகிறது.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

லேகிய பிரசாதம்!

பொதுவாக பெருமாள் கோயிலில் துளசியைப் பிரசாதமாகக் கொடுப்பார்கள். ஆனால் திண்டுக்கல் தாடிக்கொம்பு சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள தன்வந்திரி சன்னதியில் லேகியம் மற்றும் தைலத்தைப் பிரசாதமாகத் தருகிறார்கள். உடல்நல பாதிப்புக்கு உள்ளானோருக்கு இது மாமருந்து என்கின்றனர்!

அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில்

ருத்ராட்ச பிரசாதம்!

குடந்தை நாகேஸ்வரம் கோயிலிலிருந்து 4 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேப்பெருமாநல்லூர் திருத்தலம் இங்கு அருள்பாலிக்கும் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதர் சுவாமிக்கு ருத்ராட்சத்தினால் அர்ச்சனை செய்யப்படுகிறது. அர்ச்சனை செய்த ருத்ராட்சங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம்.

அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில்
வில்வக்காய் பிரசாதம்!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியிலுள்ள மறவர் கரிசல் குளம் கிராமத்திலிருக்கிறது. ராஜராஜேஸ்வரி சமேத விஸ்வநாதர் கோயில். 

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வணங்கி, வில்வ இலையையும் காயையும் பிரசாதமாக எடுத்துக்கொண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை! இங்குள்ள கோயில் கிணற்றில் ஆண்களே தண்ணீர் இறைக்கிறார்கள். பெண்களுக்கு அனுமதி இல்லை.

துளசி விபூதி பிரசாதம்!

சங்கரன்கோவில் சங்கரநாராயண ஸ்வாமி திருக்கோயிலில் சிவன் மற்றும் அம்பாள் சன்னிதிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது, அருள்மிகு சங்கரநாராயணர் சன்னிதி, இங்கே, காலை பூஜையில் மட்டும் துளசி தீர்த்தமும், மற்ற நேரங்களில் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில்

அழகர் கோயில் தோசை பிரசாதம்!
மதுரையிலிருந்து 20 கி.மீ., தூரத்தில் அழகர் கோயில் உள்ளது.

 இங்குள்ள அழகுமலையானை வணங்கினால், விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும்.

 மேலும் குழந்தைவரம், குடும்பநலம், கல்யாண வரம் வேண்டுவோர் இங்கு பிரார்த்தித்து நேர்த்திக்கடனாக பக்தர்கள் காணிக்கையாகக் கிடைக்கும்

 தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாக தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு, போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்
மருந்து பிரசாதம்

கேரள மாநிலம் கோட்டயம் அருகே, கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நோய் தீர்க்கும் மருந்து, பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அருள்மிகு நெல்லிக்காட்டு பகவதி திருக்கோயில்

கஷாயம் பிரசாதம்

கர்நாடகா மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

ஒரு முறை ஆதிசங்கரர், மூகாம்பிகை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை.

 அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கஷாயத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில்
கிணற்று நீர் பிரசாதம்

திருப்பதி அருகிலுள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கோயிலுள்ள கிணற்று நீரை பிரசாதமாக தருகின்றனர். இதை அருந்தினால் வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நள்ளிரவில் கோயில் நடைதிறப்பது நியாயமா ? இரவு 12 மணி


படித்தேன் ; பகிர்ந்தேன் .

நள்ளிரவில் கோயில் நடைதிறப்பது நியாயமா ? இரவு 12 மணிக்கு ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்காக கோவில் கதவுகள்  திறக்கப்படுகின்றன . இந்த நள்ளிரவு நாடகம் நியாயமா ? 

நன்றி ---BALA. GAUTHAMAN,Vedic Science Research Centre

இரவு 12 மணிக்கு ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்காக கோவில் கதவுகள்  திறக்கப்படுகின்றன . இந்த நள்ளிரவு நாடகம் நியாயமா ? 

இதற்குச் சமய ஆகமங்கள் சம்மதிக்கின்றனவா? ஆகம விதிகளைத் தளர்த்தும் அளவிற்கு இந்த நிகழ்வில் ஏதாவது சிறப்பு இருக்கிறதா? 

இந்தக் கேள்விகளுக்கு விடைகாண, நம் ஆலய வழிபாட்டு முறையை விவரிக்கும் ஆகமங்கள், பூஜை நேரத்தை எப்படி நிர்ணயம் செய்துள்ளது என்பதைப் பார்ப்போம். 

கோயில்களில் தினம் தோறும் செய்யப்படும் பூஜைகள் நித்தியக் கிரியை என்றும், விசேஷமாக நடத்தப்படும் பூஜைகள் நைமித்திக பூஜைகள் என்று ஆகமங்கள் குறிக்கின்றன. இதில் நித்திய பூஜைகள் எந்தக்காலத்தில் நடத்தப்படவேண்டும் என்று ஆகமங்கள் தெளிவாக விளக்கியுள்ளன. 

உஷத்காலம் : சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தொடங்கி, சூரிய உதயம் வரை உள்ள காலம். சூரிய உதயம் 6 மணி என்றால் அதிகாலை 4.30 முதல் 6 மணிவரை உஷத்காலம் (ஒரு நாழிகை 24 நிமிடங்கள்) 

கால சந்தி : சூரியோதையம் முதல் 10 நாழிகை வரை கால சந்தி. சூரிய உதயம் வரை உள்ள காலம். சூரிய உதயம் 6 மணி என்றால் காலை 6 முதல் 10 மணிவரை கால சந்தி. 

உச்சிகால : சூரியன் உச்சத்தில், அதாவது தலைக்கு நேர்மேலே இருக்கும் காலம் பொதுவாக மதியம் 11.30 முதல் 12.30 வரை உள்ள காலம் உச்சி காலம். இந்தப் பூஜைக்குப் பின் கோயில் நடை அடைக்கப்பட வேண்டும். 

சாயரக்‌ஷை : சூரிய அஸ்தமனத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை உள்ள காலம். சூரிய அஸ்தமனம் 6 மணி என்றால் மாலை 4.30 முதல் 6 மணிவரை சாயரக்க்ஷை. 

இரண்டாம் காலம் : சூரிய அஸ்தமனம் முதல் மூன்றே முக்கால் நாழிகை வரை உள்ள காலம். சூரிய அஸ்தமனம் 6 மணி என்றால் மாலை 6 முதல் 7.30 மணிவரை சாயரக்க்ஷை. 

அர்த்த யாமம் : கோயில் நடை அடைப்பதற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தொடங்கி கோயில் நடை அடைப்பதுடன் முடிவடையும். இந்தக் காலம் இரவு 7.30 முதல் 9 வரை. 

இந்தக் காலங்கள் காமிக ஆகமம் மற்றும் பல ஆகமங்களில் குறிக்கப்பட்டுள்ளன. ஆகம விதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கோயில்களில், இந்த விதிகளின்படியே பூஜைகள் நடத்தப்படவேண்டும். 

கால நேரம் தவிர, இறைவனுக்குப் படைக்க வேண்டிய நைவேத்யம், அர்ச்சிக்க வேண்டிய மலர்கள், அபிஷேகிக்க வேண்டிய திரவியங்கள் என்று அனைத்துமே ஆகமங்கள் தெளிவாக விளக்கியுள்ளன.

 சித்திரை முதல் பங்குனி வரை இறைவனுக்குப் பயன்படுத்த வேண்டிய மலர்களைப் புட்பவிதி என்ற நூலில் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப் பிரகாசர் குறிப்பிட்டுள்ளார். இவரது சீடர் குரு ஞான சம்பந்தரே தருமபுர ஆதீனத்தை ஸ்தாபித்தார். 

காலையில் 4.30 க்குத்தான் கோயில் நடை திறக்கப்பட வேண்டும், இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட வேண்டும் என்பது ஆகம விதி. 

இந்த விதியை மீறி தமிழ்ப்புத்தாண்டான சித்திரை ஒன்றை வரவேற்கக்கூட கோயில் நடையை நாம் உஷத்காலத்திற்கு முன் திறப்பதில்லையே! 

இந்த விதியை மீறி, கிறிஸ்தவப் புத்தாண்டிற்கு இரவு 12 மணிக்கு கோயில் நடை திறப்பது நியாயமா?

 அர்த்த யாம பூஜை முடிந்தபின், இறைவனை சிவிகையில் சுமந்து, கோயிலை வலம் வந்து பள்ளியறையில் அம்மையின் அருகில் கொண்டு அமர்த்தியவுடன், அம்மன் சன்னிதியைத் திரையிட வேண்டும். திரையிட்டபின் பள்ளியறை பூஜை, பால், பால் பாயாசம், வடை நைவேத்தியத்துடன் செய்யப்பட்டு, தாம்பூலம் சமர்ப்பிக்கப்படும். அது சமயம் தோத்திரப் பாடல்கள் பாடி, வாத்தியம் இசைக்கப்படும். அதன் பின் பள்ளியறைக்கதவுகளை சிவாச்சாரியார் மூடி அந்தச் சாவியை பைரவர் சன்னிதியில் கொண்டு சமர்பிப்பார். பின்னர் கோயிலை மூடி சாவியை வாயில் காப்பாளரிடம் கொடுப்பார். 

இது போலவே கோயில் நடையைத் திறக்கும் விதியும் ஆகமங்களில் திட்டவட்டமாகக் குறிக்கப்பட்டுள்ளது. சிவாச்சாரியார் காலையில் எழுந்து நீராடிவிட்டு, தனது அனுஷ்டானங்களை முடித்துவிட்டு ஆலயம் செல்ல வேண்டும். துவாரபாலர் மற்றும் நந்தி தேவரைப் பிரார்த்தனை செய்து அனுமதி பெற வேண்டும். அதன் பின் சகளீகரணம் செய்து, சாமான்யார்க்யம் கூட்டி அந்த நீரைத் தன் மீதும் பூஜா பொருட்கள் மீதும் தெளித்து சுத்தி செய்த பின்னரே சிவாச்சாரியார் பூஜை செய்யும் தகுதியைப் பெருகிறார். 

தகுதிபெற்ற சிவாச்சாரியார் காப்பாளரிடம் சாவியை வாங்கி கோயிலைத் திறந்து, பைரவர் சன்னிதிக்குச் சென்று, பொரி நைவேத்யம் செய்து பள்ளியறைச் சாவியை முத்திரையால் எடுக்கவேண்டும். அதன்பின் எல்லா சன்னிதிகளையும் திறக்கவேண்டும். திறந்தபின் பள்ளியறைக்குச் சென்று வாத்திய கோஷங்கள் முழங்க திருப்பள்ளி எழுச்சி பாடவேண்டும். 

அச்சமயத்தில் சிவாச்சாரியார் துவார பூஜை செய்து காலகாலனின் அனுமதியைப் பெறவேண்டும். திறவுகோல் நுழையும் துவாரத்தை பிந்துவாக நினைத்து அர்ச்சனை செய்து திறவுகோலை நாத வடிவமாக நினைத்து சிவ சக்தி மந்திரம் சொல்லிக்கொண்டு பள்ளியறைக் கதவைத் திறக்க வேண்டும். 

திறந்தபின் புனிதமான தீர்த்தத்தை தெளித்து நிர்மால்யம் களைய வேண்டும். அதன் பின் பாவனையால் இறைவனை ஸ்நானம் செய்வித்து அது தொடர்பான சடங்குகளைச் செய்து, இறைவனை வெளியே எடுத்துவர அனுமதி கோரி நிற்கவேண்டும். பின்னர் இறைவனை சிவிகையில் ஏற்றி கோயிலை வலம் வந்து மூலவர் அருகில் வைத்து, பூவை எடுத்து மூலவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் உஷத்கால பூஜை செய்யவேண்டும். 

காலையில் கோயிலைத் திறக்கும் கால நிர்ணயத்தைவிட, அதைத் திறக்கும் விதியும், நடை அடைக்கும் விதியும் பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைந்துள்ளன. இவைகள் அனைத்தையும் மீறுகிறது நள்ளிரவில் நடை திறக்கும் ஆங்கில மோகம். 

ஆகம விதிகளை, ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களில் மீறுவது மகா பாபமாகும். இந்தப் பாவத்திற்கான அபராதங்கள் மிகக்கடுமையானது மட்டுமல்ல அது நாட்டிற்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கும் என்பதையும் ஆகமங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. 

நம்மைப் பொருத்தவரை வேத, ஆகம விதிகளே இறுதியானது. 

ஆகமங்கள் மட்டுமின்றி, மருத்துவவ ரீதியாகவும் இந்த நள்ளிரவு நடை திறப்பு உகந்தது அன்று. 

சீன மருத்துவ முறையில், நம் உடலின் உறுப்புகள் அதிக ஆற்றலுடன் இயங்கும் நேரம், குறைந்த ஆற்றலுடன் இயங்கும் நேரம் என்று உறுப்புக்களின் இயக்கம் பற்றியும் அதை வைத்து மருத்துவம் செய்யும் முறையும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சீன உடல் உறுப்பு கடிகாரம் (Chinese organ body clock) ஒரு நாளை 12 ஆகப் பிரித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு உடல் உறுப்பு ஆதிக்கம் செலுத்தும் என்றும், அந்த உறுப்பையும், ஆதிக்கம் செலுத்தும் நேரத்தையும் குறிப்பிட்டுள்ளது. 

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரல் ஆற்றல் மிகுந்து இயங்கும் நேரம். இந்த நேரத்தில் நுரையீரலிலிருக்கும் நச்சுத்தன்மையான கழிவுகள் தளரும். இந்நேரத்தில் பிராண சக்தியை உடலுக்குள் சேகரித்தால், உடலுக்கு நன்மை பயக்கும். எனவே மூச்சுப் பயிற்சிக்கு இது உகந்த நேரமாகும். காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடலின் நேரம். உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற, குடலை இயக்கச் சரியான நேரம் இது. இந்த நேரத்தில் குளித்தல், தண்ணீர் குடித்தல் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். 

இந்த முதல் நான்கு மணி நேரத்தில் தான் ஆலயம் திறக்கப்பட்டு, தியானம், மூச்சுப்பயிற்சி, சந்தியாவந்தனம் போன்ற கர்மாக்களும் செய்யப்படுகின்றன. இரவு 9 முதல் 11 மணி வரை நாளமில்லா சுரப்பிகளின் (endocrine/ triple warmer) செயல்பாடு ஓங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்கினால், உடல் ஆற்றலைச் சேமிக்க உதவிகரமாக அமையும். 

இதன் பின் வரும் 2 மணி நேரங்கள் அதாவது இரவு 11 முதல் 1 மணி வரை பித்தப்பையின் நேரம் அதன்பின் வரும் 2 மணி நேரம் அதாவது இரவு 1 முதல் 3 வரை உள்ள நேரம் கல்லீரலின் ஆதிக்கம் மிகுந்த நேரம். இவ்வேளைகளில் தூங்காமல் இருந்தால் பித்தப்பை இயக்கக் குறைபாடு மற்றும் இரத்த சுத்திகரிப்பில் பாதிப்பு ஏற்படும். இதனால் மறு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. 

இந்த இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலான நேரம், பள்ளி அறை பூஜையுடன் நாள் முடிவுக்கு வந்தபின், உறக்கத்தை இன்றியமையாததாகக் காட்டுகிறது. 

நம் ஆகமங்களில் சொல்லப்பட்ட விதிகளைக் கடைபிடித்தால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம் என்பதை வழிமொழிகிறது சீன மருத்துவம். இதில் ஆச்சரியமொன்றுமில்லை, இந்தச் சீன மருத்துவத்தை வளர்த்த சித்தர் போகர்தானே பழனி மலையில் முருகனை ஸ்தாபித்தார். 

விஞ்ஞானமும், மெஞ்ஞானமும் உஷத்காலத்தில் ( அதிகாலை 4.30-6.00) தான் கோயில் நடை திறக்க வேண்டும், அர்த்தஜாமத்தில் (இரவு 9 மணி) கோவில் நடை அடைக்கப்பட வேண்டும். அர்த்த ஜாமத்திற்கும், உஷத்காலத்திற்குமிடையே எந்தச் செயல்பாடும் கூடாது என்று அறுதியிட்டுக் கூறியபின் நள்ளிரவில் கோயிலைத் திறந்து வழிபாடு நடத்துவதும், பூஜைகள் செய்வதும் நியாயமா? 

சூரியனின் இயக்கத்தையும், சந்திரன் மற்றும் கோள்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் பூர்வமாகக் காலத்தை கணிக்கும் நாம், எந்த அறிவியல் அடிப்படையுமின்றி, மதத்தின் அடிப்படையில் மட்டுமே அனுசரிக்கப்படும் புத்தாண்டிற்காக ஒரு புகழோங்கிய பாரம்பரியத்தை பலி கொடுப்பது நம் பண்பாட்டையும், மேன்மையையும் அழிப்பதற்கு ஒப்பாகாதா?

நன்றி ---BALA. GAUTHAMAN,Vedic Science Research Centre

அன்பர்களே,இப்பதிவு ஆங்கிலப்புத்தாண்டன்று திருக்கோயில் நடைதிறப்பது பற்றிய பதிவு ஆகும். மகாசிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி ஆகிய சிறப்பு நாள்களில்  ஆகமங்கள் விதித்தவாறு பூஜைகள் நடைபெறுவது கண்கூடு.

Tuesday, December 27, 2022

திதிகள் பற்றிய புரிதல்



திதிகள் பற்றிய புரிதல்...

               திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் தூரம் என்று பொருள்.அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை அளவிடுவது திதியாகும் நண்பர்களே.அமாவாசை நாள் அன்று சூரியனும் சந்திரனும் 0 டிகிரியில் இருப்பார்கள்.அதற்கு அடுத்த நாள் சந்திரன் சூரியனின்  பார்வையிலிருந்து 12 டிகிரி விலகிச் செல்லும்.இப்படி விலகி 12 டிகிரி  நிற்க்கும் தூரம்தான் பிரதமை.அடுத்து பிரதமையில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் துதியை.அடுத்து துதியையில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் திருதியை.அடுத்து திருதியையில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் சதுர்த்தி.அடுத்து சதுர்த்தியில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் பஞ்சமி.இப்படியாக 12 டிகிரி இடைவெளியில் அடுத்து சஷ்டி,சப்தமி,அஷ்டமி,நவமி,தசமி,ஏகாதசி,துவாதசி,திரயோதசி,சதுர்தசி என சந்திரன் சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று 15 ம் நாள் 180 டிகிரியில் ராசிச்சக்கரத்தில் சூரியனிலிருந்து ஏழாவது ராசியில் நிற்பது பௌர்ணமி ஆகும்.

              இப்படி அமாவாசைக்கு அடுத்து வரும் திதிகளுக்கு வளர்பிறை திதிகள் என்று பெயர்.அடுத்து இதே சுழற்சி முறையில் பௌர்ணமியில் இருந்து அதே 12 டிகிரி இடைவெளியில் ஒவ்வொரு திதியாக சூரியனை நோக்கி நெருங்கி சென்று 15 ம் நாள் சூரியனோடு 0 டிகிரியில் நிற்பது அமாவாசை ஆகும்.இப்படி பௌர்ணமிக்கு அடுத்து வரும் திதிகளுக்கு தேய்பிறை திதிகள் என்று பெயர். இப்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நகரும் ஒவ்வொரு 12 டிகிரி நகர்வுப்புள்ளிக்கு வைத்த பெயர்களே திதிகள் நண்பர்களே.இதில் அமாவாசையிலிருந்து சந்திரன் 180 டிகிரி விலகிச்செல்லும் போது இடைப்பட்ட காலத்தில் வரும் திதிகள் வளர்பிறை திதிகள் என்றும்,பௌர்ணமி திதியிலிருந்து சந்திரன் சூரியனை நோக்கி வரும் போது இடைப்பட்ட காலத்தில் வரும் திதிகள் தேய்பிறை திதிகள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.அமாவாசை முதல் பௌர்ணமி வரை 15 திதிகள் × 12 டிகிரி = 180 டிகிரி.பௌர்ணமி முதல் மீண்டும் அமாவாசை வரை 15 திதிகள் × 12 டிகிரி = 180 டிகிரி.30 × 12 = 360 டிகிரி.பதிவில் இணைத்துள்ள படத்தை பாருங்கள்.புரியும் நண்பர்களே.

             இந்த திதிகளில் குறிப்பிட்ட கிழமைகளில்,குறிப்பிட்ட திதி வருவது சுப திதிகள்/ அசுப திதிகள் என்று ஜோதிட சாஸ்திரத்தில்  வரையறுக்கப்பட்டுள்ளது.
 
நற்பலன் தரும் சுபதிதிகள்: 
          
             ஞாயிற்றுக்கிழமை வரும் அஷ்டமி திதியும்,திங்கட்கிழமை வரும் நவமி திதியும்,செவ்வாய்க்கிழமை வரும் சஷ்டி திதியும்,புதன்கிழமை வரும் திருதியை திதியும்,வியாழக்கிழமை வரும் ஏகாதசி திதியும்,வெள்ளிக்கிழமை வரும் திரயோதசி திதியும்,சனிக்கிழமை வரும் சதுர்த்தசி திதியும் சுபகாரியங்களுக்கு ஏற்ற திதிகள் நண்பர்களே.
 
சுபகாரியங்களுக்கு ஆகாத திதிகள்: 
 
              ஞாயிற்றுக்கிழமை வரும் சதுர்த்தசி திதியும்,திங்கட்கிழமை வரும் சஷ்டி திதியும்,செவ்வாய்க்கிழமை வரும் சப்தமி திதியும்,புதன்கிழமை வரும் துதியை திதியும்,வியாழக்கிழமை வரும் அஷ்டமி திதியும்,வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியும்,சனிக்கிழமை வரும் சப்தமி திதியும் சுபகாரியங்களுக்கு ஆகாத திதிகள்.இந்தக் காலங்களில் சுப காரியங்கள் தவிர்ப்பது நலம் நண்பர்களே.மேலே குறிப்பிட்டுள்ள விதிகளை மட்டும் வைத்தே சுப காரியங்களுக்கு நாட்களை தேர்வு செய்யக்கூடாது.நட்சத்திர தாராபலனோடு சேர்த்துப்பார்த்து சுப காரியங்களுக்கு நாட்களை தேர்வு செய்வது மிகச்சிறப்பு நண்பர்களே.

திதிகளில் செய்ய வேண்டிய காரியங்கள் மற்றும் பலன்கள்:

பிரதமை திதி

வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும்,திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும்.அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம்.உலோகம் கருங்கல் மரம் இவைகளில் சித்திரை வேலைகள் செய்யலாம்.கத்தி போன்ற ஆயுதங்கள் செய்யலாம்.மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் அதிக உழைப்பு இருக்கும்.விட்டுக்கொடுத்து போகும் தன்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.அவசர புத்தி இருக்கும் அவசரமாக ஒரு காரியத்தை செய்வார்கள்.குலதெய்வ அனுக்கிரகம் குறைவாக இருக்கும்.வீடு வண்டி வாகனங்கள் அமையும்.அதில் பிரச்சனை இருக்கும். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி நண்பர்களே.

துதியை திதி

அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை,ஆபரணங்கள் தயாரிக்கலாம்.விரதம்  இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம்.யாத்திரை செல்லலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலம் லாபம் உண்டு.வீடு வண்டி வாகன யோகம் உண்டு.தாய் பாசம் உடையவராக இருப்பார்.சுகவாழ்வு அமையும்.தந்தை சம்பந்தப்பட்ட உறவுகளில் பிரச்சனைகள் இருக்கும்.இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன் நண்பர்களே.

திருதியை திதி

குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார்கள்.மேடைப் பேச்சாளராக இருப்பார்.குழந்தைகளால் பிரச்சனை இருக்கும்.அரசு வழி ஆதாயம் உண்டு.சுய தொழிலில் இழப்பை சந்திப்பார்கள்.தந்திரசாலிகளாக இருப்பார்கள்.இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி) நண்பர்களே.

சதுர்த்தி திதி

முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது.  இந்த திதியில் பிறந்தவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை இருக்கும்.அதிகமாக அலைச்சல் பட வேண்டியது இருக்கும்.விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கும்.சிறுவயதில் விபத்தை சந்திக்கலாம்.சதுரங்க விளையாட்டில் ஆர்வம் இருக்கும்.மணவாழ்வில் பிரச்சனை இருக்கும்.எளிமையாக இருக்க விரும்புவார்.சாப்பாட்டு ராமனாக இருப்பார்.எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில்  கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது நண்பர்களே.

பஞ்சமி திதி

எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும்.இந்தத் திதியில் பிறந்தவர்கள் படிப்பில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.குலதெய்வ அனுக்கிரகம் இருக்கும்.எளிதில் காதல் வயப்படுவார்கள்.நிறைய ஏமாற்றங்களை சந்திப்பார்கள்.கடன் பிரச்சனை இருக்கும்.சொத்துக்கள் இறுதிக்காலத்தில் அமையும்.குழந்தைகள் மேல் பிரியமாக இருப்பார்.இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.பஞ்சமி திதியில் செய்யும் காரியங்கள் வெகு காலம் நிலைத்திருக்கும் நண்பர்களே.

சஷ்டி திதி

சிற்ப,வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.பசுமாடு வீடு வாகனம் விலைக்கு வாங்கலாம்.மருந்து உட்கொள்ளலாம் தயாரிக்கலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.சாணக்கியத்தனமும்,தந்திரமும் இருக்கும்.முன்கோபம் உடையவராக இருப்பார்.சுகவாழ்வை  விரும்புவார்.இதற்காக எந்த எல்லைக்கும் போவார்.வீடு வண்டி வாகன யோகம் உண்டு.கடன் பிரச்சனை இருக்கும்.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்.நொறுக்குத் தீனியை விரும்பி உண்பார்.இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும் நண்பர்களே.

சப்தமி திதி

பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம்.வீடு கட்டலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் தாயாருடன் கருத்து வேறுபாடு உடையவர்களாக இருப்பார்.பேச்சுத் திறமை உள்ளவர்களாக இருப்பார்.கூட்டுத் தொழில் சிறக்கும்.மனைவி வழி ஆதாயம் உண்டு.வலிமையான உடல் அமைப்பு உள்ளவர்.வீடு வண்டி வாகனங்கள் அமைவதில் தாமதம் உண்டாகும்.இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும் நண்பர்களே.

அஷ்டமி திதி

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம்.யுத்தம் செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் போராட்ட குணம் இருக்கும்.போராட்டமான வாழ்க்கையும் அமையும் அதில் வெற்றியும் பெறுவார்கள்.காதல் மற்றும் காம உணர்வுகள் அதிகம் இருக்கும்.மண வாழ்வில் நிச்சயம் பிரச்சனை இருக்கும்.சொத்து பிரச்சனைகள் உண்டாகும்.அதிகமாக விபத்துகளைச் சந்திப்பார்கள்.ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை நண்பர்களே.

நவமி திதி

சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம்.போர் செய்யலாம்.பகைவர்களை சிறை பிடிக்கலாம்.இந்த திதியில் பிறந்தவர்களுக்கு தந்தை மகன் கருத்து வேறுபாடு இருக்கும்.பொருளாதார பிரச்சனை இருக்கும்.அழகான தேகம் உடையவர்களாக இருப்பார்கள்.நேர்மையை கடைப்பிடிப்பார்கள்.அதுவே இவர்களுக்கு பிரச்சனையாகவும் இருக்கும்.குளிர் உணவுகளை அதிகம் விரும்புவார்.வழிபாடுகளில் ஆர்வம் இருக்கும்.இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை நண்பர்களே.

தசமி திதி

எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு தொழிலில் விரயங்கள் ஏற்படும்.வாக்குப்பலிதம் உடையவர்.கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைப்பவர்.தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும்.இனிப்பு வகைகளை விரும்பி உண்பார்கள்.போட்டிகளில் வெற்றி பெறுவார்கள்.இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை நண்பர்களே.

ஏகாதசி திதி

விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.ஆடை ஆபரணம் செய்யலாம்.வாஸ்து சாந்தி செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்களுக்கு அரசியலில் ஆர்வம் இருக்கும்.தந்தை வழி ஆதாயம் இருக்கும்.திருமண வாழ்வில் ரகசியம் இருக்கும்.இருதார தோஷம் இருக்கும்.உதவி செய்வதில் ஆர்வம் இருக்கும்.ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.இதற்கு, ருத்ரன் அதிதேவதை நண்பர்களே.

துவாதசி திதி

தனம் தானியங்கள் சம்பாதிக்கலாம்.சுபச் செலவுகள் தர்ம காரியங்கள் செய்யலாம்.நிலையுள்ள மற்றும் நிலை இல்லாத காரியங்கள் திருவோணம் நட்சத்திரம் வரும் நாள் தவிர்த்து செய்யலாம்.மதச்சடங்குகளில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஏமாற்றம் உண்டு.கல்வியில் ஆர்வம் இருக்கும்.சுறுசுறுப்பாக இருப்பார்.தன்னை அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்.இறுதிக்கால வாழ்க்கை செல்வச் செழிப்பாக இருக்கும்.சுய தொழிலில் ஏமாற்றத்தைச் சந்திப்பார்கள்.கவனம் தேவை. அதிதேவதை விஷ்ணு நண்பர்களே.

திரயோதசி திதி

சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் வாக்கால் தொழில் செய்வார்கள்.(ஆசிரியர்கள்,பேச்சாளர்கள்).பொருளீட்டுவதில் குறியாக இருப்பார்கள்.வாகன தொழில் சிறப்பாக இருக்கும்.உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.தந்தை மீது பாசம் உள்ளவராக இருப்பார்.குலதெய்வ வழிபாட்டில்  ஆர்வம் அதிகம் இருக்கும்.திரயோதசி திதிக்கு அதிதேவதை மன்மதன்.சிவபக்தராக இருப்பார்.வெகு காலங்கள் நிலைத்திருக்க வேண்டிய மங்கள காரியங்கள் செய்யலாம் நண்பர்களே.

சதுர்த்தசி திதி

பல் சம்பந்தப்பட்ட வைத்தியம் செய்யலாம்.மாமிசம் சாப்பிடலாம்.யாத்திரை செல்லலாம்.ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த திதி.வளர்பிறையில் மட்டும் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் காதல் விஷயங்களில் ஆர்வம் உடையவராக இருப்பார்.மதம் இனம் மாறிய காதல் உண்டாகும்.விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கும்.அதிகமாக உழைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.தந்தையால் பிரச்சனை ஏற்படும்.பணம் சம்பாதிப்பது நோக்கமாக இருக்கும்.மண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.காளி இந்த திதிக்கு அதிதேவதை நண்பர்களே.

பௌர்ணமி திதி

ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம்.போர் செய்வதற்கு வேண்டிய காரியங்கள் செய்யலாம்.தேவதை பிரதிஷ்டை செய்யலாம்.தோஷ பரிகாரங்கள் செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்களுக்கு பொருளாதாரம் நன்கு அமையும்.அழகானவராக இருப்பார். பேச்சாற்றல் உடையவராக இருப்பார்.சுய ஜாதகத்தில் சூரியன் சந்திரன் பரிவர்த்தனையில் இருந்தால் சிறப்பு.கலைத்துறைகளில் ஆர்வம் இருக்கும்.மகான்கள் மற்றும் சித்தர்கள் வழிபாட்டில் ஆர்வம் இருக்கும்.யோகக் கலையில் ஆர்வம் இருக்கும்.கார உணவுகளை விரும்பி உண்பார். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை நண்பர்களே.

அமாவாசை திதி

பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு 40 வயதிற்கு மேல் யோகம் உண்டாகும்.சுய உழைப்பால் முன்னேறுவார்.தனிமையை விரும்புவார்.சமையல் கலையில் ஆர்வம் இருக்கும்.இருதார தோஷம் இருக்கும்.வாக்குப்பலிதம் உள்ளவர். ஜோதிடம் நன்கு சித்திக்கும்.இரவில் கண்விழித்து வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.சிவன், சக்தி அதிதேவதை நண்பர்களே...

          ஒரு ஜாதகர் எந்த திதியில் பிறந்தாலும் திதியின் ஆரம்பத்திலும் முடிவிலும் பிறக்காமல் இருப்பது சிறப்பு.ஒரு ஜாதகர் எந்த திதியில் பிறக்கிறாரோ அந்தத் திதியின் இருப்பு நாழிகை அதிகமாக இருப்பது மிகச் சிறப்பு.அதிகமாக இருப்பது நல்ல பொருளாதாரத்தை கொடுக்கும்.திதியின் மொத்த நாழிகையை நான்காக பிரித்துக் கொள்ள வேண்டும்.அதில் முதல் பகுதியும்,கடைசிப்பகுதியும் தவிர்த்து நடுப்பகுதிக்குள் இருப்பு நாழிகை அமைவது சிறப்பு நண்பர்களே.திதியால் ஏற்படும் தோஷங்களுக்கும்,பாதிப்புகளுக்கும் திதி நித்திய தேவதைகளை வணங்கி வருவதும்,திதி நித்திய தேவதைகளுக்கு உண்டான காயத்ரி மந்திரங்களை உச்சாடனம் செய்வதும் மிகச்சிறப்பான நிவர்த்தியாக இருக்கும் நண்பர்களே...

நன்றி ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்

Sunday, December 25, 2022

தர்பை புல்_பற்றி தெரிந்துகொள்வோம்



#தர்பை_புல்_பற்றி
#தெரிந்துகொள்வோம்

தர்ப்பையினால்  செய்யப்படும் மோதிரம் போன்ற அமைப்பு பவித்ரம்  என்று அழைக்கிறோம்.

பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம்.

இந்த பவித்ரம்  செய்யப்படும் கர்மாவுக்கு ஏற்ப தர்ப்பை புல்லின் எண்ணிக்கை மாறுபடுகிறது.

அவை :-

1) ப்ரேத கார்யங்களில் ஒரு தர்ப்பை

2) சுப கர்மாவில் 2 தர்ப்பை

3) பித்ரு கர்மாவில் 3 தர்ப்பை

4) தேவ கர்மாவில் 5 தர்ப்பை

5) சஷ்டியப்த பூர்த்தி போன்ற சாந்தி கர்மாவில் 6 தர்ப்பை

தேவ கார்யங்களுக்கு கிழக்கு நுனியாகவும் பித்ரு கார்யங்களில் தெற்கு நுனியாகவும் உபயோகப்படுகிறது.

ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன. ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன.

குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.

கலச ஸ்தாபனம் போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது. ஏனென்றால் தர்ப்பை வழியாக ப்ராண சக்தி கும்பத்துக்குள் வருகிறது.

கல்யாணத்தில், கல்யாண பெண்ணிற்கும், சீமந்தத்திற்கும், அதே மாதிரி உபநயனத்தில் வடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.

உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் ஆஸனத்தைத்  தவிர மற்றதுக்கு  உபயோகப் படுவதில்லை.

தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் (பாய்) மிகவும் விசேஷம். தர்பாஸனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பலமடங்கு சக்தி உண்டு.

க்ரஹண காலங்களில் ( சூர்ய மற்றும் சந்திர ) இல்லத்தில் ஏற்கனவே பக்குவமாகி இருக்கும் பதார்த்தங்களிலும், குடிநீரிலும் தர்பங்களை போட்டுவைத்தால் எந்த வித தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.

பிராமணனுக்கு தர்பை புல் ஓர் ஆயுதம். முனிவர்களும், ரிஷிகளும் தர்ப்பைப்புல், தண்ணீர், மந்திரசத்தி மூன்றையும் இணைத்து செயற்கரியா செயல்களை செய்தனர்.

வரம் கொடுத்தனர், சாபம் கொடுத்தனர், அஸ்திரங்களை பிரயோகிதனர்.

பிரபஞ்சத்தில் பிராணசக்தியை கடத்தும் சக்தி தர்ப்பைக்கு உண்டு. அதனாலேயே சங்கல்பத்தில் "தர்பான் தாரயமான:" என்று விரலில் இடுக்கிக் கொண்டு பிராணயாமம் செய்கிறார்கள்.

குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித:

ச நித்யம் ஹிந்தி பாபானி தூல ராசிமிவாநல:

கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராமணன் அகங்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாவங்களை அழிக்கவல்லான்.

தர்ப்பையை உபயோகப்படுத்திய பின், அதை நான்காக பிரித்து வடக்கு பக்கமாக போடவேண்டும். பின்பு கண்டிப்பாக ஆசமனம் செய்தால்தான், நாம் தர்பையை உபயோகித்து செய்த கர்ம பலன் அளிக்கும்.!

பிராமணனுக்கு ஆயுதமே தர்பை தான்.

Friday, December 23, 2022

ஆஞ்சநேய தாந்த்ரீக பிரயோகம் :-



ஆஞ்சநேய தாந்த்ரீக பிரயோகம் :- 

பொறுப்பு துறப்பு :- நான் எனது வாழ்வில் எந்த சாதகம் - இறை மூர்த்த சித்'தி செய்ய முயற்சி செய்ததில்லை - காரணம் எனக்கு இந்த உலக வாழ்வில் தலையிட விருப்பம் இல்லை - மனித வாழ்வே அரங்கனின் பிரசாதமாக - அதனால்தான் கோவில் பிரசாதத்தை சுவை (ஆராய கூடாது )என்பதாக சொல்லி வைத்தார்கள் .. 

இந்த பதிவு - ஆஞ்சநேய ஸ்வாமியின் ஒரு தாந்த்ரீக படம் ட்விட்டர் இல் கண்டு அதை தேடி படித்த பொது - பல விவவரணமாக பதிவு காணப்பட்டது .. இது என்ன ??? 

ஆஞ்சேன்யேர் நமக்கு அடிமை பூதமாக மாறிவிடுவாரா??? என்றால் இல்லை - உங்களின் மனம் ஒடுங்கி - அந்த எங்கும் பரவி இருக்கும் -மாபெரும் ஆஞ்சநேய சக்தி -  wifi உடன் இணைந்து - நீங்கள் விரும்பும் இந்த உலக விஷயங்களை செய்து குடுக்கும் அவ்வளவே .. இதற்கு பயன்படும் சக்தி அது உங்களிடம் இருந்தே வரும் - அதை அடைய நீங்கள் நிறைய உழைக்க வேண்டும் -ஜெபிக்க வேண்டும் .. (பல சாமியாருங்க காசு வந்தவுடன் அதை விட்டு சுக வாழ்வு வாழ்ந்து பொம்மனாட்டி /பண விவகாரங்களில்  மாட்டிக்கொள்கிறார்கள் .. 

நான் இங்கே அந்த  மந்திரத்தை வெளியிட போவதில்லை - காரணம் நீங்கள் தான் அதை ஒரு குரு முகமாக அதை அறியவேண்டும் !!- உங்கள் சாதனை விளக்கை ஏற்றுகிறவரிடம் அந்த நெருப்பு இருக்க வேண்டும் - அது என்னிடம் இல்லை !! 

====================================================================

ஹனுமன் சாதனா சித்தி & விரிவான பிரயோகம்:- 

வ்ருதத்துடனும், தியானத்துடனும், 12,000 முறை அனுமன் மந்திரத்தை ஜபித்து, பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றை சமமாக கலந்து நெல் தானியங்களுடன் 1200 எண்ணிக்கையில் ஹோமம் செய்தால், அவர் / அவள் பூரணத்துவத்தைப் (சித்'தி)  பெறுவார்கள். இந்த பரிபூரணத்துடன், அவர்/அவள் தனது சொந்த மற்றும் தங்களை நாடி வருபவர்களின்  விருப்பங்களையும் நிறைவேற்ற தகுதியுடையவராவார்.

12,000 ஜெபம் , 1200 ஆவர்த்தி அக்னியில்  ஹோமம் -செய்யப்பட வேண்டும் .. இதற்கு வாழ்வியலில் நேமம் ஒழுக்கம் போன்றவற்றை குரு முகமாக அறியவேண்டும் - எண்ணையில் பொரித்த பரோட்டா சாப்பிட்டு விட்டு உடல் குறைக்க ஜிம் செல்ல முடியாது அல்லவா .

கதலி வாழைப்பழம், சாத்துக்குடி , வெல்லம் கலக்கப்பட்ட அரிசியால் செய்யப்பட்டஉணவு  , மாம்பழம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக 21 பிராமணர்களுக்கு  அன்னதானம் அளித்து (ஒரு ஆயிரம் ஜெபத்துக்கு ஒரு ப்ராமண போஜனம்) , கிரகங்கள், அசுரர்கள் - பிசாசு - தீய பார்வைகள் - ஏவல்கள் போன்றவற்றின் விளைவுகளால்  ஏற்படும் தீமைகள், அழியும் உடமைகள், வாழ்வில் உண்டாகும் எதிரிகள், தீமைகள் அனைத்தையும் வெல்ல முடியும். 

பிரயோகம் :- எப்படி பயன்படுத்துவது ?

ஒரு கிண்ணத்தில் இளநீரை எடுத்து, அதற்கு 108 முறை மந்திரம் சொல்லி, விஷம் அருந்தியவர்களுக்கு கொடுத்தால், விஷத்தின் பலன் நீங்கும்.

10 நாட்களுக்கு ஒவ்வொரு இரவும் 900 முறை மந்திரத்தை உச்சரித்தால், அவர் / அவள் எந்த எதிரியாலும் ஏற்படும் பயம் மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து தணிக்கப்படுவார்; எதிரிகள் நமது வாழ்வில் இருந்து மறைந்து போவார் .

அபிசாரிணி (abhicharika prayogas) பிரயோகத்தால் ஏற்படும் ஜுரம், முதலில் 108 முறை மந்திரம் சொல்லி விபூதியை வார்த்து, பிறகு அந்த விபூதியை நீரில் போட்டு மார்ஜாரா செய்து அல்லது அந்த விபூதியையே நோயாளியின் மீது தெளித்து வர குணமாகும். ஒரே சிகிச்சையில் ஒருவரை முழுமையாக குணப்படுத்த மூன்று நாட்கள் ஆகும். 

ஒரு திறமையானவர் "உங்" (கடம்ப மரம் ) (கடம்ப மரம் முருகனுக்கும், திருமாலுக்கும் உரியது எனச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. கொத்தாக உருண்டு பூக்கும் இதன் மலரின் நிறம் வெள்ளை. நன்னன் என்னும் அரசனின் காவல்மரம் கடம்பு. நீரோட்டமுள்ள கரைகளில் இது செழித்து வளரும். சாமியாடும் வேலன் மட்டும் இதனை அணிந்துகொள்வான். இதன் இலைகளை மாலையாகக் கட்டி முருகனுக்கு அணிவிப்பர்.) 

மரத்தின் வேரைக் கொண்டு, அதுவும் தனது கட்டைவிரல் அளவுக்கு அனுமன் சிலையை உருவாக்கினால், அதன் மீது பிராண பிரதிஷ்டை செய்து, அதன் மீது வெண்பூசணியால் பூஜை செய்து, வீட்டிற்கு எதிரே நிறுவி, அவர்/அவள் எந்த உயிர்கள், நெருப்பு, விஷம், மன்னர்களின் 'பகை' ஆகியவற்றால் பாதிக்கப்படாது. மேலும், அந்த நபர் தினசரி அடிப்படையில் செழிப்பு மற்றும் செல்வத்தை பெறுவார்.

நிறைய எதிரிகளை அழிக்க அவர்களுக்குள் சண்டை ஏற்பட பல வகை பிரயோகங்கள்  இருக்கின்றன .. அதாவது இந்த மந்திரத்தில் தேர்ச்சி பெற்றவர் இந்த மந்திரத்தால் வித்வேஷனையும் வசீகரனையும் (அதாவது அடுத்தவனை அழிக்க ) செய்ய முடியும். 

மகாவித்வேஷ் மந்திரம் (இது ஆஞ்சநேய மந்திரம் இல்லை முழுமையான எதிரியை அழிக்கும் மந்திரம் ) 

இந்த மந்திரம் ஜெபிக்க நீங்கள் வேறு ஏதாவது ஒரு தேவதை உபாசனையில் சித்'தி பெற்று இருக்க வேண்டும் - அதாவது இது ஒரு இணைப்பு சக்தி மட்டுமே !! (ஒரு நம்பிக்கைக்காக இதை செய்தியாக பதிவிட்டு இருக்கிறேன் ) 

ஓம் நமோ நாரதே அமுகஸ்ய அமுகேந் ஸஹ் வித்வேஷணம் குரு குரு ஸ்வாஹா.

ओम् नमो नारदाय अमुकस्य अमुकेन सह विद्वेषणं कुरु कुरु स्वाहा ।

இந்த மந்திரத்தை முதலில் ஒரு லட்சம் முறை உச்சரித்து நிரூபிக்கவும், பின்னர் நீங்கள் அதை பயன்படுத்த விரும்பினால், பின்வரும் வழியில் பயன்படுத்தவும் -

(1) பூனையின் நகங்களையும், நாயின் முடியையும் எடுத்து அந்த இடத்தில் வைத்து மேற்கூறிய மந்திரத்தை உச்சரிப்பதால், அந்த இடத்தில் வசிப்பவர்களுக்கு பகை உண்டாகும்.

(2) மேற்கூறிய மந்திரத்தைச் சொல்லி, முள்ளம்பன்றி என்னும் உயிரினத்தின் முள்ளைப் புதைத்து, அதில் வாழும் மக்களிடையே பகை உண்டாகும்.

(3) குதிரை முடியையும், எருமை முடியையும் எடுத்துக் கொண்டு மேற்கண்ட மந்திரத்தைச் சொல்லவும், தூபம் போடும் இடத்தில், இடையூறுகள் எழும், வெறுப்பு உண்டாகும்.

================================================================================

மந்திரங்கள் மனிதனின் மனத்தை செம்மை படுத்தும் - அதன் மூலமாக பிரபஞ்ச சக்தியை பயன்படுத்த முடியும் - நீங்க கையில் வைத்து இருக்கும் கத்தியை தீட்டுதல் (sharpaning ) ஜெபம் !! அதை கொண்டு காய்களை வெட்டுகிறீர்களா இல்லை அடுத்தவன் நெஞ்சில் சொருகுகிறீர்களா என்பது உங்கள் கரும வினையை எந்த திசையில் கொண்டு செல்கிறீர்கள் என்பது உங்கள் கையில் 

வினோத பல சிந்தனைகள் !!! - 

உங்களுக்கு எதுனா கேள்வி இருந்ததால் கேளுங்க - இந்த மந்தர வாத விஷயங்கள் பற்றி !!

விஜயராகவன் கிருஷ்ணன்

தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது?



#பூஜை_துவக்கத்தில்  Thank Fb

தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது?

#சங்கல்பம் உறுதி மொழி. இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பது.. இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்.. இப்படி துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிடுவது.. மேலும்...

சங்கல்பம்

சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும். திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை. இறை சந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாக கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதயும் கூறி, இதன நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும். சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம்.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும், புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் அறிந்து வியப்புற முடிகின்றது.

கிரியைகள் நடைபெறும் காலமும் இடமும் மிக முக்கியமானவை. அதனால் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இக்கிரியையைச் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வது மரபு.

இப்போது சாதாரணமாக நாம் அறிந்தவரையி ஆண்டு, மாதம், திகதி கூறுவதுடன் காலநிர்ணயம் முடிந்து விடுகிறது. பூவுலகத்தில், ஆசியாக் கண்டத்தில், இலங்கைத்தீவில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில்… என்னும் கிராமத்தில் என்று கூறுவதுடன் இடநிர்ணயம் முடிந்துவிடுகின்றது. ஆனால் இங்கே சுருக்கமாகன முறையிலும், விரிவான முறையிலும் தேவைக்கு ஏற்ற வகையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வேறு வேறு வகையான சில சங்கல்ப வாக்கியங்களின் தமிழ்க் கருத்து தரப்படுகின்றது.

“மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர 
ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய தேவஸ்ய… அஹம் அத்ய கரிஷ்யே”

என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காலவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெவத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும். 

ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி; கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.

பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.

“இறைவனின் கட்டலைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்)..…
என்ற பெயரையுடைய வருடத்தில்…. அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே….. நட்சத்திரத்திலே… கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலே… நட்சத்திரத்திற் பிறந்த…. பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும், இக் கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுகநலங்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும்…. இடத்திலுள்ள…. என்ற பெயரையுடைய இறைவனின்….. என்ற கிரியையைக் குருமுகமா நான் செய்கிறேன்.

இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று “நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப் போகிறேன்” என்று திடமாக உறுதி கொள்ளுதல்.

அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும். “இன்ன லாலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.

இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. “எந்தச் சுவாமியின் சந்நிதியில்” எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும். இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒருமணி நேரம் தேவை. ஆனால் அதன் சுருக்கத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும். அந்த விரிவான மஹா சங்கல்பத்திலும் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

ஓம் ஸ்ரீ பகவானும், மஹாபுருஷ்னும், ஸ்ரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலாற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும் அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவரும் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப்பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரமாண்டங்களில் ஒன்றானதும்,

வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பெற்றதுமாகிய;

இந்த பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் அதிட்டிக்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்னங்களும் அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்;

ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகியா இவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ளதும்;

அதலம், விதலம், சதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம் என்னும் ஏழுலகங்களுக்கு மேலுள்ளதும்;

பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்;

சக்கர்வாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும்; அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்;

இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் லோகபாலகர்களால் அதிட்டிக்கப்பட்டதும்;

சக்கரவாளகிரியால் சூழப்பட்டதும்; உப்பு, கருப்பஞ்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தஜலம் என்னும் ஏழு சமுத்திரங்களினால் சூழப்பட்டதும்;

ஜம்பு, ப்லக்ஷம், சால்மலி, குசம், கிரவுஞ்சம், சாகம், புஷ்கரம், என்னும் ஏழு தீவுகளொடு விளங்குவதும், மஹேந்திரம், மலயம், சையம், சுத்தி, ருக்ஷம், விந்தியம், பாரியாத்திரம் என்னும் ஏழு குலமலைகளொடு விளங்குவதும், மதங்கம், ஹிரண்யசிருங்கம், மாலியவான், கிஷ்கிந்தம், ருஷ்யசிருங்கம் என்னும் ஐந்து மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும், இமயம், ஏமகூடம், சுதாசலம், நிசாசலம், சுவேதாசலம், சுநாசலம், சிருங்கவதம் என்னும் ஏழு பெரு மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும்;

இந்திரகண்டம், கசேருகண்டம், தாமிரகண்டம், கபத்திகண்டம், நாககண்டம், சௌம்யகண்டம், கந்தர்வகண்டம், சரபகண்டம், பரதகண்டம் என்னும் ஒன்பது கண்டமயமானதும்;

மஹாமானசத் தாமரைவடிவவான ஐம்பது கோடி யோசனை விசாலமுடைய பூமண்டல நடுவிலே, சுமேரு, சிஷதம், ஏமகூடம், சந்திரகோணகூடம், மஹேந்திரகூடம்,விந்த்யாசலம், சுவேதாசலம் என்பனவற்றுக்கும், ஹரிவர்ஷம், கிம்புருவர்ஷம் என்பவற்றுக்குத் தெற்கே கர்மபூமியில்; மது, வன, குலம் என்பவற்றுக்குத் தென்புறத்திலே; பொதியமலைக்கு வடக்கே, தென்சமுத்திரத்திற்கும் இமயமலைக்கும் நடுவே உள்ளதும், ஒன்பது யோசனை அளவு கொண்டதும், பாரதம், கிம்புருஷ்ம், ஹரி, இளாவிருதம், குரு, பத்திராள்வம், ரம்யம், ஹிரண்மயம், கேதுமாலம் என்னும் ஒன்பது வர்ஷ்ங்களில் ஒன்றாகிய பாரத வர்ஷத்திலே, ஸ்வர்ணப்ரஸ்தம், சந்த்ரம், சுபித்தி, ஆவர்த்தகரமணம், மதங்கஜாவரணம், மஹ்வாரண, பாஞ்ச ஜன்யவகம், சிங்களம், இலங்கை என்னும் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட பாஸ்கர க்ஷேத்ரத்திலே, தண்டகாரண்யம், கதளிகாரண்யம், வடாரண்யம், தேவதாரண்யம் என்னும் பதினொரு வனங்களோடு கூடியதும்;

அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், கௌசலம், காஸ்மீரம், கசூரம், கர்ஜூரம், பர்ப்பரம், மருதம், குரு, காந்தாரம், சௌவீரம், சௌராஷ்டிரம், மத்ரம், மகதம், ஆந்திரம், நிஷதம், சிந்து, தசார்ணம், மாளவம், நேபாளம், பாஞ்சாலம், வங்காளம், மலையாளம், சீழம்,, கேரளம், சிங்களம், கௌடம், கோடம், கீகடம், கர்நாடகம், கரகாடம், மரகாடம், பாநாடம், பாண்டியம், புளிந்தம், குந்தம், திரிகர்த்தம், லாவந்தி, அவந்தி, விதேயம், விதர்ப்பம், கேகயம், கோசலம், கொங்கணம், டங்கணம், ஹூணம், மற்சம், வற்சம், சகலம்பாகம், பாஹ்லிஙகம், யவனம், சாளுவம், சப்பன்னம், என்னும் ஐம்பத்தாறு தேசங்களாககிய பலவித பாஷைகளையுடைய விஷேடித்த இராச்சியங்களினாலே அலங்கரிக்கப்பட்டதும்;

ஸ்வாம்யவந்தி குருக்ஷேத்திரத்திலே, கங்கை, யமுனை, துங்கபத்ரை, சந்த்ரபாகை, ப்ரணீதை, பம்பை, பாபப்ரசமனீ, பயோக்ஷி, பல்குனி, பவநாசினி, பீமரதி, சரஸ்வதி, குமுதவதி, சிந்துநதி, அர்ஜூனி, கிருஷ்ணவேணி, பிநாகினி, கோதாவரி, மலாபஹாரி, தாம்ரபர்ணி, காவேரி, வேகவதி, வஞ்சுழி, சரயு முதலிய ஆயிரம் நதிகளோடு விளங்குவதும்;

அயோத்தி, மதுரை, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரக முதலிய முக்திநகரங்களோடு கூடியதும் சுநகம், வற்சநகம், குல்மநகம், சவாமிநகம், மஹாமானச ஸ்ரீஓருஹ வடிவான புஷ்கரத்யம், திரிகூடம், கைலாசம் என்னும் இவைகளின் நடுவாகிய பூமண்டத்தில்;

பாற்கடல் நடுவே ஆதிசேடனது படமாகிய மஞ்சத்திற் சயனிக்கும் மஹாவிஷ்ணுவினுடைய உந்திக்கலத்திற் தோன்றியவரும் சகல வேத நிதியாயுள்ளவரும்;

சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலிய மகானகளுக்கும் இந்திரன் முதலிய முபத்து முக்கோடி தேவர் திர்யக் மனுடர் மலை முதலிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேத சராசரங்களுக்கும் அனேககோடி பிரMஆண்டங்களுக்கும் ஆதாரபூதமான சிருஷ்டியில் முயன்றவரும், இரண்டுபரார்த்தம் சீவிப்பவருமான பிரம்மாவின் முதற் பரார்த்தமாகிய ஐம்பது வௌஅது கழிந்தபின் இரண்டாம் பரார்த்தமாகிய ஐம்பது வருடத்தின் முதலாம் வருடத்திலே ,முதலாம் மாதத்திலே முதலாம் பக்ஷத்திலே முதலாம் நாளிலே பகலிலே இரண்டாம் சாமத்திலே மூன்றாவது முகூர்த்தத்திலே பதின்மூன்றாம் நாழிகையிலே நாற்பத்திரண்டு வினாடி சென்று நாற்பத்திமூன்றாம் வினாடியிலே முதற்பிராணம் தொடங்கும் காலத்திலே;

பார்த்திவம், அனந்தம், கூர்மம், பதுமம், வராகம், சுவேதவராகம், பிரளயம், என்னும் ஏழு கற்பங்களுள் சுவேதவராக கற்பத்திலே;

சுவாயம்புவர், சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷூஷர், வைவஸ்வதர், சூரியசாவவர்ணி, பிரமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, இந்திரசாவர்ணி, அக்கினிசாவர்ணி, ரௌச்சியர், பௌச்சியர் என்னும் பதினான்கு மநுக்களின் காலமாகிய மன்வந்தரங்கஊள் ஏழாவதாகிய வைவஸ்வத மன்வந்தரத்திலே; 

இருபத்தேழு சதுர்யுகம் கழிய இப்போது நிகழும் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திலே;

பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருடமுடைய கிருதயுகம்கழிய;

பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்றாறாயிரம் வருடமுடைய திரேதாயுகமும் கழிய;

எட்டுலக்ஷத்து அறுபத்துநாலாயிரம் வருடமுடைய துவாபரயுகமும் கழிய;

நாலுலக்ஷத்து முப்பத்தீராயிரம் வருடமுடைய நிகழ்வதான கலியுகத்திலே;

ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும் மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், த்சரதராமம், பலபத்திரராமம், பௌத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பௌத்த அவதாரத்திலே;

யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்திகளின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே;

ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணூற்றிருபத்து மூன்றாம் வருஷ்மாகிய வழங்குகின்ற சௌரமானம், சாந்திரமானம், சாவனமானம், நக்ஷ்த்திரமானம், பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகைகளாய் நடைபெறும் பிரபவ முதலிய அறுபது வருஷங்களுள்ளே:

மூன்றாம் விம்சதியான – சௌரமான – சார்வரி என்னும் பெயருடைய வருஷ்த்திலே தக்ஷிணாயத்திலே சரத்ருதுவிலே ஐப்பசித் மாதத்திலே பூர்வபக்ஷத்திலே வியாழக்கிழமையோடு கூடியதும், விசாகநக்ஷ்த்திரத்தோடு கூடியதும், ஆயுஷ்மான் யோகம், பாலவகரணம், துலாலக்னம் முதலிய புண்ணீய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.

கோத்திரத்தில்……, நக்ஷத்திரத்தில்…, ராசியில் பிறந்த…… பெயருடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள்முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழ்கின்ற பால்யம், கௌமாரம், யைவனம், வார்த்திகம் என்னும் பருவங்களில்;

மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தகளில், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் இவைகளினாலே, மெய்ம் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும்; வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும் என்னாற் சய்யப்பட்ட புத்திபூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடி, பொற்களவு முதலிய மகாபாதஙகங்களும் உபபாதங்களும்;

அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும், அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும், அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும்,மிகப்பயின்று செய்யப்பட்டவையும், இடையீடின்றிப் பயிற்சியாகாக்ச் செய்யப்பட்டவையும், நெடுங்காலம் பயிலப்பட்டவையும், ஒன்பதும் ஒன்பது வகையும், பலவும் பலவையும் ஆகிய எல்லப் பாவங்களையும்;

உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம், மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமான பர்வதத்திலே பாஸ்கரக்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவ்ர் சீதா ல்க்ஷ்மண பரத சத்துருக்ன ஹனுமாரோடு கூடிய ராமச்சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்;

சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில், ஹரிகரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிராமணர்கள் சந்நிதியில்;

இயன்ற நியமஙத்தோடும் இயன்ற வகையில் இயன்ற டிரவியங்களோடு தர்மசாஸ்திரங்களிற் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையாருபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும் பொருட்டு ஸ்ரீராமதனுஷ்கோடிஸ்நானத்தை (பொருத்தமான கிரியையை கூறவேண்டும்) நான் செய்கிறேன்.

இந்த சங்கற்பத்தில் மிகப்பல விடயங்கள் பற்றி நாம் மனங்கொள்ளலாம்.
1.    நாம் ஆலயங்களைலே கிரியைகள் ஆற்றத் தொடங்கும்போது திரிகரணங்களாலும் இறைவனை நாடி அவனையே சிந்தித்து மன ஒருமைப்பாடு கொண்டு அதன்பின் இச்செயலை நான் செய்து முடிப்பேன் என்று உறுதிகூறி சங்கல்பப் செய்வதன் அவசியம் புரிந்து கொள்ளப்படுவது.

2.    அந்த சங்கல்பத்திலே என்ன கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

3.    அங்கு பயன்படுத்தப்படும் சொற்செட்டான வார்த்தைப் பிரயோகங்களும் அழ்கான அடுக்கு மொழிகளும் அற்புதமான கற்பனை வளமும் சுவைத்து இன்புறத்தக்கன.

4.    புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும்சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதிக்ஹாசங்களிற் சொல்லப்பட்ட இத்தகைய விடயங்களையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்தல்.

5.    காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவுபடுதப்பட்டிருந்தது என்பதை அறிவதோடுபருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் அவதானிக்கத்தக்கவை.

6.    இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும். நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம். அந்தக்கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் என விரிந்து கொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணீற் காண முடிகிறது. நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கின்றோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருதவேண்டும். இதேபோல் நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் – யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான் என்னே என்ற வியப்பும் குறிப்பிடத்தக்கதன்றோ?

Friday, December 9, 2022

குங்குமம் தயாரிப்பது எப்படி ???

குங்குமம் 
தயாரிப்பது எப்படி ??? 

மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊற வைத்து, 

பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். 

புள்ளிகள் மற்றும் பூச்சிகள் தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

கொடி எலுமிச்சை மிகவும் நன்று. 

எலுமிச்சையை கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.

நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். 

இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்க கூடாது. 

பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.

வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, 

மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்க வேண்டும். 

நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாக சேர்க்க வேண்டும். 

இக் கலவையினை நிழலில் காய வைக்க வேண்டும். இதுவே  குங்குமப் பொடி. 

குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள். 

இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது.

தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள்.

நெற்றியில் 
புரவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை.

இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும்.

நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.

இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.

நெற்றியின் 
புரவ மத்திக்க நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக Pineal gland எனும் நெற்றிக் கண் சுரப்பி அமைந்துள்ளது.

இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் 

கண் போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள்.

இதனை நெற்றிக்கண் எனலாம்.

இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.

யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும். 

தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.

யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது 

நெற்றிக்கண் மீது கவனம் குவியும்.

ஞானக் கண் என்றம் அழைக்கப்படும். 

அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.

அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். 

அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்தக் கொண்டனர். 

இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப் பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. 

சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக் கொண்டார்கள்.

குங்கமத்தை நான் ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. 

இதை நெற்றியில் இடும் போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.

இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.

நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும்.

ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.

மின்கடத்தும் தன்மை நமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே 
நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.

வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். 

குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடு தான் உபயோகிக்கிறார்கள். 

அதுமட்டுமில்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன.

Tuesday, December 6, 2022

பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 53 ஆண்டு

  பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 53 ஆண்டு




"வரும் 11.12.2022 ஞாயிறு அன்று நமது பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 53 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு  10.12.2022 மாலை 6.30 மணிக்கு பழமுதிர்சோலை முருகன் கோவிலில்  தங்கரதம் இழுக்க உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்

வரும் 10.12.2022 ஞாயிறு பழமுதிர் சோலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சபை சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது"

Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai (Regd.No 32/16) 

Chamundi Supari
New 41 old 20/3 West Tower Street ,
Madurai -  625 001 
Cell: 9442408009 
chamundihari@gmail.com