ஸ்ரீ முனீஸ்வரர்
முனீஸ்வரன் வரலாறு மற்றும்
முனீஸ்வரன் மந்திரம்:
முனீஸ்வரன் காயத்ரி:
முனீஸ்வரன் ஈசன் அம்சமாக கருதப்படுவர் ஆவார். முனிவர்களுக்கு எல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் என பொருள்படும் மேலும் முனீஸ்வரன் வழிபாடு என்பது இன்று நேற்று அல்ல பண்டைய காலத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டு இருக்கிறது கிராம காவல் தெய்வமாக மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியப்பனி, முனியப்பர் எனவும் அழைத்து வழிபடுகின்றனர்
முனி என்றால் "ரிக் வேதத்தில்" "தெய்வ ஆவேசம் படைத்தவர்" என்றும், பயமற்றவர் என்றும் பொருள், நாட்டார் தெய்வங்களில் முனி என்பது காவல் தெய்வத்தின் பெயர்"பஞ்ச முனிகள்" அதாவது ஐந்து முனிகள், பச்சை அம்மனுக்கு காவலாக பூலோகம் வந்ததாக வரலாறு உண்டு. சில இடங்களில் சப்த முனிகள் உண்டு. ஈஸ்வர பட்டம் பெற்றவர் முனீஸ்வரர் ஆவர் இந்த முனீஸ்வரன், சிவ அம்சம் கூடியவர்.
முன்னொரு காலத்தில் "அந்தகாசுரன்" என்னும் அசுரன் தேவர்களையும், மக்களை வதைத்து, இடையூறு செய்து வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தங்களை காக்கும் படி அன்னை பராசக்தியை அனைவரும் வேண்டினர், பார்வதி அம்மன் "காத்தாயி" என்ற பெயரில் பூமியில் அவதரித்து அசுரனை அழிக்க காத்தாயி அம்மன் லடாமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, வாழ்முனி,சட்டைமுனி, என்று ஏழு முனிகளை உருவாக்கி, அந்த ஏழு முனிகளும் சேர்ந்து அந்த நரகாசுரனை அடக்கி வதம் செய்தனர், பின்பு முனிகள் அனைவரும் ஒரே வடிவமாக மக்களை காக்க பூமிக்கு வந்தனர்.
பொதுவாக மக்களுக்கு முனீஸ்வரனை பற்றி நிறைய குழப்பங்களும் சந்தேகங்களும் உண்டு, இதில் உண்மை எது பொய் எது என்றும் குழப்பங்களும் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் நம்மை மற்றும் பூலோகம் உயிரினங்கள் - புல் முதல் அண்டசராசரம் வரை படைத்த இறைவன் ஈஸ்வரன் ஆவான். பரமாத்மாவில் இருந்தே ஜீவாத்மா பிரிந்தது. அதுபோல் தான் முனீஸ்வரன் சாட்சாத் ஈஸ்வரனின் அம்சமே. கலியுகத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கவும் மக்களை காக்கவும் வீர ஆவேசமாக அவதரித்தவரே "முனீஸ்வரன்" .
முனீஸ்வரன் வழிபாடு என்பது நம்மை காக்கும், ஆண்டி முதல் அரசன் வரை பாகுபாடின்றி வழிபாடும் தெய்வம் முனீஸ்வரன். கலியுகத்தில் ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் படியும் அவர்களுக்கு வழிபாடு செய்ய கூடிய எளிய முறை உள்ள ஒரே வழிபாடு முனீஸ்வரன் வழிபாடு மட்டும் தான்.
எல்லா தரப்பு மக்களும் வழிபாடு செய்யவே கிராமங்கள் தோறும் சிறு ஆலயங்களிலும் முனிகள் வீற்றிருக்கின்றனர்.
சிவன, பெருமாள், அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு , இவர் தான் காவலர் ஆவார். பெரிய ராஜகோபுரம் உள்ள கோவில்களிலும் முனீஸ்வரர்க்கு தனி சன்னதி உண்டு உதாரணமாக ஸ்ரீரங்கம் திருதலத்தில் ராஜா கோபுரத்தில் முனீஸ்வரர் சன்னதி உள்ளது. பல பெரிய தனி சன்னதிகளும் முனீஸ்வரன் காட்சி தருவதும் உண்டு இப்படி எல்லா இடங்களிலும் முனீஸ்வரன் வழிபாடு உண்டு.
இவர் கனல் வீசும் கண் உடையவர், அருள் ஒளிரும் மேனி உடையவர், சகல சௌபாக்கியமும் தருபவர், நள்ளிரவில் கண்ட நெடிய வெண்புகை வடிவத்தில் வலம்வருபவர் என்று பல நம்பிக்கைகள் உண்டு. "நம்பினார் கெடுவதில்லை" என்ற வாக்கின் அடிப்படையில் நம்பி வழிபட்ட பலருக்கு முனீஸ்வரன் இப்படி காட்சி தந்த வரலாறுகள் நமது கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான கதைகள் உண்டு.
நமது நாட்டில் மட்டுமல்ல "பர்மா" என்று அழைக்கப்பட்ட தற்போதைய "மியான்மர்" என்ற நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பு பல லட்சம் தமிழர்கள் வசித்தனர். "ரங்கூன்" என்று அழைக்கப்பட்ட "யாங்கூன்" இருந்து சுமார் 1 மணி நேரப்பயணம் வருகிற ஊர் "பிலிக்கான்" அங்கே முனீஸ்வரர்க்கு அற்புதமான ஆலயம் உள்ளது. நீதி, நியாயம் இவற்றை மக்களுக்கு வழங்கி வருவதால் இந்த தேசத்து மக்கள் இவரை"ஜட்க் ஐயா" என்றே அழைக்கிறார்கள்.
பர்மா மட்டுமல்ல மலேஷியா, சிங்கப்பூர் சீனா, ஜப்பானிலும் முனீஸ்வரன் வழிபாடு உள்ளது.
இது சம்மந்தமான ஆராய்ச்சியில் உள்ளோம் தீர்க்கமாக. ஆராய்ச்சி செய்து தெளிந்த பின்பு உங்களுக்கும் தெரிவிக்கிறோம்.
மலேசியாவில் மட்டும் 500 இக்கும் மேற்பட்ட முனீஸ்வ்ர் கோவில்கள் உள்ளன. Kuala Lumpur & Penang உள்ள கோவில் விபரங்கள் இதோ
முனீஸ்வரன் மந்திரம்:
'ஓம் ஹம் ஜடா மகுடதராய
உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய
சத்ரு சம்ஹாரனாயஜடா
முனீஸ்வராய நமஹ.'
முனீஸ்வரன் காயத்ரி:
" ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத் "
ஸ்ரீ முனீஸ்வரர் ஒருவர் தானா? சில கோவில்ல ஆக்ரோஷமா அருவா, சுருட்டு, சாராயத்தோட இருக்கிறாரு, சில கோவில்ல சாந்தமா தவம் கோலத்தில் இருக்கிறாரே!!!
நான் செவி வழி செய்தியாக கேட்டுள்ளேன் ஸ்ரீ முனீஸ்வரர் சைவம் என்று! எத்தனை ஸ்ரீ முனீஸ்வரர் உள்ளார் ?
ஸ்ரீ முனியாண்டி to ஸ்ரீ முனிஸ்வரன்
அதி காலங்களில் முனியாண்டி என்றே அழைக்கப்பெற்றார், எப்படி சனி பகவான் “ஈஸ்வரன்” பட்டம் பெற்றாரோ அதே போல் முனியாண்டியும் “ஈஸ்வரன்” பட்டம் பேற்று ஸ்ரீ முனீஸ்வரன் என்று போற்றப்பெற்று , எல்லா காவல் தெய்வங்களும் முதற் கடவுளாக இருக்கிறார்.
“ஈஸ்வரன்” - இறைவன் அல்லது ஆட்சியாளர் என்று பொருள்.
பொதுவாக சொல்வது சப்த முனிகள்- எங்களுக்கு தெரிந்ததை இங்கே குறிப்பிட்டுளோம்
1. வாழ் முனி
2. செம் முனி
3. கரு முனி
4. வேத முனி
5. கும்ப முனி
6. ஜடா முனி
7. நாத முனி
8. முத்து முனி
9. சிங்க முனி
10. லாட முனி
11. சன்னியாசி முனி
விளக்கமாக பார்ப்போம்
சப்த முனிகள் ......
ஸ்ரீ முனீஸ்வரர் ஒருவர் தானா? சில கோவில்ல ஆக்ரோஷமா அருவா, சுருட்டு, சாராயத்தோட இருக்கிறாரு, சில கோவில்ல சாந்தமா தவம் கோலத்தில் இருக்கிறாரே!!!
ஏழு என்ற எண்ணிக்கையில் உள்ள சப்த கன்னிகளை வழிபடும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது.
அதே போல சப்த(7) முனிகளையும் அவரது 21 பரிவாரங்கள் கொண்டாடும் மரபும், பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது.
சப்த முனிகள்
1.ஜடா முனி
2. வாழ் முனி
3. தவ முனி
4. நாத முனி
5. தர்ம முனி
6. சிவ முனி
7. மகா முனி
1. ஜடாமுனி
ரோம ரிஷியே ஜடாமுனியாக உள்ளார் என கூறப்படுகிறது. யோகப் பட்டை தரித்து, யோகாசனத்தில் பெரிய கூடைமுடிகளோடு இவர் காட்சி தருகிறார். அதிகமான ஜடைகளுடன் இருப்பதால், இவர் ‘ஜடாமுனி’ என வழங்கப்படுகிறார். குழந்தைகளுக்கு ஜடை விழுந்து முடி சிக்கலாகி விடும் போது இவருக்கு வேண்டிக் கொண்டு பயன்பெறுகின்றனர்.
2. வாழ்முனீ
அனைத்து பச்சையம்மன் ஆலயத்தில் மிகப்பெரிய வடிவத்தில் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பவர் வாழ்முனீஸ்வரர். திருமாலின் மறுவடிவான இவர், அன்னை பார்வதிக்கு காவலராக விளங்குகிறார். வான் முட்டிய கோலத்தில் இருப்பதால் இவருக்கு ‘வான்முனி’ என்று பெயர். இதுவே மருவி ‘வாழ்முனி’யாக வழங்கப்படுகிறது.
உக்கிர மாமுனியான இவர், வலது கரத்தில் மேல் நோக்கிய நீண்ட வாளையும், இடதுகரத்தில் கீழ்நோக்கிய குத்து வாளான சலாகையும் ஏந்தியுள்ளார். ஊன்றிய வலது காலடியில் அக்னிவீரன் தலை உள்ளது. இவர் போரிட வரும் வீர ராட்சதனைக் கத்தியால் குத்திய கோலத்தில் அமர்ந்துள்ளார். அனைத்து முனிவர்களுக்கும் இவரே பிரதானம்.
குழந்தைக்கு உண்டாகும் பாலரிஷ்டங்கள் நீங்க, இவர் மடியில் குழந்தைகளைப் படுக்க வைத்து எடுப்பார்கள். இவருக்குச் சிவப்பு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் எதிரிகள் தொல்லை விலகும். மேன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
3. தவ முனி
தவமுனி - அசுரர்களால் தேவர்கள் மற்றும் ரிஷிகளின் யாகத்திற்கு நிறைய தடைகள் வந்தமையால், அவர்களுக்கு பாதுகாப்பிற்கும், அவர்கள் பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கவும் தவ முனி உறுதுணையாக இருந்தார். வெண்ணிற தாடியுடன் காணப்படுவர்.
4. நாதமுனி
இசையில் சிறந்து விளங்கும் நாரதரே ‘நாதமுனி’யாகக் கருதப்படுகிறார். முதுகில் நீண்ட சடை, எடுத்துக் கட்டிய ஜடாமகுடத்துடன், கையில் மகர யாழை இசைக்கும் தோற்றத்தில் இவர் காணப்படுகிறார். இவருக்கு விலங்கு போட்டு வைத்திருப்பார்கள். ‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்றாலும், பூமியிலும் அவர் ஏதும் கலகம் செய்யாமல் தடுக்கும் நோக்கில், இந்த முனிக்கு விலங்கு பூட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
இவர் துடிப்பாகவும், அச்ச மூட்டுபவராகவும் இருப்பதால் இவரை விலங்கு பூட்டி வைத்துள்ளதாகவும் மற்றொரு காரணம் கூறப்படுகிறது. இவரிடம் வேண்டி குழந்தைப்பேறு பெற்றவர்கள் பிறந்த குழந்தைக்கு நாதமுனி என பெயர் சூட்டி மகிழ்கின்றனர். இவருக்கு ‘பூவிலங்கு முனி’ என்ற பெயரும் உண்டு.
5. தர்ம முனி
தர்மமுனி என்பவர் , தர்மத்தை நிலை நிறுத்தவும், நல்லதை நடத்துவதற்கும், மக்களை பாதுகாப்பவர் மற்றும் தீமையை அழிப்பவர்.
6. சிவன முனி
சிவ முனி- அவர் சிவனின் முகத்திலிருந்து தோன்றியதால் அவருக்கு சிவமுனி வடிவம் கிடைத்தது.
7. மகா முனி - அளவிட முடியாத தெய்வீக சக்தியைக் கொண்டிருந்த மகாமுனியாக ஆனார்.
21 பரிவார முனிகள்
சப்த முனிகளை பற்றி பார்த்தோம், இந்த பதிவில் 21 பரிவார முனிகளை பற்றி பார்ப்போம்
21 பரிவார முனிகள்
1.முனியாண்டி
2. பாண்டிமுனி
3. செம்முனி
4. கருமுனி
5.கொடுமுனி
6. தங்கமுனி
7. வேதமுனி
8. முத்துமுனி
9. லாட முனி
10. சத்திய முனி
11. சந்தனமுனி
12. கோரைமுனி
13. கொங்குமுனி
14. யோகமுனி
15. பாலயமுனி
16. கோட்டமுனி
17. பந்தள முனி
18.அக்னிமுனி
19. ராஜமுனி
20.சாமா / சலேமுனி
21. நொண்டிமுனி
செம்முனி, கருமுனி
இவர் சிவபெருமானின் அம்சமாகத் தோன்றி, பச்சையம்மனுக்குக் காவல் தெய்வமாக விளங்குகிறார். வாழ்முனிக்கு அடுத்த நிலையில் இருக்கும் முனிகள், செம்முனி - கருமுனிகளாகும். கருமுனி, பெயருக்கு ஏற்றபடி கருமை நிறத்திலும், செம்முனி, செந்நிறத்துடனும் காட்சி தருகின்றனர். இவர்கள் நீண்ட வாளையும், சலாகையும் ஏந்தி காட்சி தருகின்றனர் இவர்கள் மந்திர தந்திரங்களில் சிறந்தவர்களாகவும், பக்தர்கள் வாழ்வில் வளத்தை அளிப்பவர்களாகவும் திகழ்கிறார்கள். மேலைக் கடலோரத்து செம்மலை, கருமலையில் இருந்து இவர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. மக்களைக் காக்கவும், பச்சையம்மனுக்கு காவலராக நிற்கவும், சிவபெருமானின் அம்சங்களாக கருமுனி, செம்முனிகள் பூமிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காலடியில் தீயகுணம் கொண்ட மந்திரவாதிகளின் தலைகளைக் காணலாம்.
வேதமுனி
இவர் தன் கைகளில் ஏடுகளைத் தாங்கி, வேத நூல்களை பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் தோற்றத்தில் காணப்படுவார். வேத நூல்களை கற்பவர் என்பதால், ‘வேதமுனி’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஜடாமண்டலத்துடன் பிரமாண்ட மீசையும் கொண்டு காட்சி தருகிறார். இவர் வாழ்வில் நல்வழி காட்டுபவராக புகழப்படுகிறார்.
கும்பமுனி
கும்பத்தில் தோன்றிய முனிவர் அகத்தியர். இந்த அகத்தியரின் மறுவடிவமே கும்பமுனி ஆகும். அகத்தியரைப் போலவே, உருவத்தில் குள்ளமானவராக இவர் விளங்குகிறார். இவரை ‘முனிரத்தினம்’ என்றும் அழைப்பார்கள். செம்முனியும் அகத்தியரின் மறுவடிவம் என்று சொல்பவர்களும் உண்டு.
முத்துமுனி
முத்து மாலைகள், முத்து மகுடம், வெண்ணிற ஆடைகளைத் தரித்து வெண்மையான தோற்றத்தில் காட்சியளிப்பவர் முத்துமுனி ஆவார். பிரம்ம தேவரே ‘முத்துமுனி’யாக விளங்குகின்றார் என கூறப்படுகிறது. திருமாலின் அவதாரங்களில் ஒன்றான பரசுராமர்தான் ‘முத்துமுனி’ என்று சொல்பவர்களும் உண்டு. இவருக்கு ‘செட்டி முனி’ என்ற பெயரும் உண்டு. ஒரு சிலர் முருகப்பெருமானே முத்துமுனியாக இருப்பதாகவும் நம்புகின்றனர். இதனால் இவரை ‘முத்தையன்’ எனவும் அழைக்கிறார்கள்.
சிங்கமுனி
விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்தின் அம்சமே ‘சிங்கமுனி’ என கூறுகின்றனர். இவர் தனது கையில் வாளும், கேடயமும் கொண்டு விளங்குகிறார். முகம் சிலிர்த்த கோலத்தில் காட்சி தருகிறது. பிடரிகளுடன் கூடிய சிங்கமுகம் இவருக்கு அமைந்துள்ளது. இவரை வழிபாடு செய்தால், பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட துஷ்ட சக்திகள் அகலும். பெரும்பகை நீங்கும் என்பது நம்பிக்கை.
லாட முனி
பழங்காலத்தில் லாட தேசம் ஒன்று இருந்ததாகவும், அந்த தேசத்தைச் சார்ந்த முனியே ‘லாடமுனி’ என்றும் சொல்லப்படுகிறது. சில ஆலயங்களில் முனிகளின் வரிசையில், இந்த லாட முனியும் இடம்பெற்று இருப்பதைக் காணலாம். சில ஆலயங்களில் லாட சன்னியாசி என்ற பெயரில் இவர் வீற்றிருப்பார்.
சன்னியாசி முனி
முனிகள் கூட்டத்தில் உயரம் குறைந்த தனி மேடையில் இவரை தரிசனம் செய்யலாம். இவரை ‘சந்நாசி அப்பன்’ என்றும், ‘சன்னியாசி முனி’ என்றும் அழைப்பார்கள். இவர் கவுபீனம் (கோவணம்) தரித்து யோக தண்டத்துடன், புலித்தோலில் அமர்ந்து காட்சி தருவார். இவரோடு பைரவர் (நாய்) ஒன்றும் இருக்கும்......
உங்களுடைய வாழ்க்கையில் உள்ள அணைத்து பிரச்னைகளில் இருந்து விடுபட்டு, மன அமைதியாக, சந்தோஷத்துடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள என்றும் நம்முடன் துணை இருக்கும் ஸ்ரீ முனீஸ்வரரையம் வழிபடுங்கள்....
No comments:
Post a Comment