Friday, April 8, 2016

Madurai Meenakshi Wedding Feast மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து

Madurai Sumptuous Wedding Feast 


A sumptuous feast awaits devotees on 19-04-2016 Tuesday Madurai following the ‘Tirukkalyanam Virundhu ’ (celestial wedding) of Goddess Meenakshi and Lord Sundareswarar. The ‘Tirukkalyanam’ of Goddess Meenakshi with Lord Sundareswarar takes place on Wednesday at the junction of North and West Adi Streets.Being prepared by the Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai for the 16th consecutive year.

 The feast is being arranged for over 70,000 devotees , we are arrange at Sethupathi school, Madurai . “The menu comprises boondhi, Chakkarai Pongal , lemon rice, Tomato rice, Sambar rice and curd rice with water packet ”.The feast will commence at around 8.30 a.m. and go on till the last devotee leaves the place.

When we started providing the feast 17 years back, only around 1,500 devotees took part in the feast at Meenakshi temple itself. Now, it has grown to provide for over 70,000 . we arrange at Sethupathi school ,Madurai .

Apart from the ‘Tirukkalyaa Virundhu,’ another special feast was provided on 18-04-2016, monday   evening  Known as ‘Mappillai Azhaippu Virundhu’ [Night Dinner] the feast comprising kesari, pongal, vadai was provided for people. We are welcome you come cutting of vegetable for feast and service .

We need volunteers for feast service ,if you are interests please register with us.

Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai
C/o Chamundi Vivekanandan
Chamundi Supari
New 41 old 20/3 West Tower Street ,
Madurai -625 001
Cell: 9442408009 , Shop: 0452-2345601

My father ChamundiVivekanandan organizing this events , Now i am in chennai , Regarding above feast call drop me chamundihari@gmail.com
Madurai Meenakshi Miracle pic 
 Madurai Meenakshi Tirukkalyanam [wedding] feast at Setupati 
School here on Friday 30/4/2015. by Selvam Ramaswamy ]

மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து


சோலைமலை முருகன் கோயிலில் 40 ஆண்டுகள் கார்த்திகை மாதம் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.

17 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தேனய்யா அவர்கள். அவர் மீனாட்சி கோயிலுக்கு இடமாற்றப்பட்ட போது. 


எனது தந்தை திரு சாமுண்டி விவேகானந்தன் அவர்களை அணுகினார். "திருக்கல்யாணத்தின் போது ஊழியர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யக்கூடாதா" என்று கேட்டபோது,


திருமண விருந்து யோசனை தோன்றியது. பொதுமக்கள் கொடுக்கும் பொருட்களை கொண்டு முதன்முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே செவ்வந்தீஸ்வரர் சன்னதி முன்பு 1500 பேருக்கு திருமண விருந்து

அளிக்க ஆரம்பித்தோம். இன்று வரை இது இறைவனின் அருளால் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. அம்மன் சமைக்கிறார். நாங்கள் கரண்டியாக இருந்து பரிமாறுகிறோம்'' .

10 ஆண்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தன்று, 10,000 பேருக்கு பக்த சபை சார்பில், ஆடி வீதிகளில் விருந்து அளிக்கப்பட்டு வந்தது பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு காவல்துறை தடைவிதித்தனர்.


இந்தாணடு திருக்கல்யாணம் 19-04-2016அஅன்று   நடக்கிறது 70 ஆயிரம் பேருக்கு வழங்கபடுகிறது.இதை முன்னிட்டு, பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது.இந்த விருந்தில், பூந்தி, வாழைப்பழம் , கல்கண்டு சாதம் , எலுமிச்சைச்சாதம் , தக்காளிச்சாதம் , சாம்பார்ச்சாதம் மற்றும் தயிர்ச்சாதம் தண்ணீர் பாக்கெட் தட்டில் வழங்கப்படும்இடம்பெறுகிறது.



18-04-2016 அன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது ,மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி ,பொங்கல், வடை இடம்பெறும்.


விருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.


திருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்ய அழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை"
C/o சாமுண்டி விவேகானந்தன்
சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell: 9442408009 , Shop: 0452 2345601.

என் தந்தை சாமுண்டி விவேகானந்தன் , இப்போது நான் சென்னை இருக்கிறேன் , என்னை அழைக்க chamundihari@gmail.com .




Last year NewsPaper Report :





On the eve of Meenakshi Sundareswarar ‘Thirukalyanam’ (celestial wedding), the campus of Setupati Higher Secondary School is a hub of activity. While more than five hundred women are busy chopping vegetables in the school’s main hall , there are volunteers wheeling huge vessels of chopped vegetables and ingredients such as rice and pulses towards a kitchen set up in the school grounds.( https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/preparing-a-banquet-for-75000-devotees/article7156379.ece)






Thanks  Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்




                 
ஓம் சிவசிவ ஓம்
Be Good & Do Good

Last year 



Pic Thank to
 — with Guna Amuthan and Selvam Ramaswamy.











 Pic by   

Wednesday, April 6, 2016

வாசியோகம் அடிப்படை



Note:  This is Very powerful don't do your self , Take Guru Guide....


கண்ணாக்கு மூக்கு செவி ஞானக் கூட்டத்தில்

பண்ணாக்கு வைத்த பழம் பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கினூடே அகண்ட வொளி காட்டி
பண்ணாக்கி நம்மைப் பதித்தவரே...




என்பதில் நந்திகேசவர் பெரிய நாக்காக இருக்கிறார். அதற்கு புறத்திலுள்ள கண்ட ஸ்தானத்தில் அண்ணாக்கு இருக்கிறது. அதுவே அகாரமாகும். அதற்கு தூக்கிய பாதம், குஞ்சிதபாதம், திருவடி என்ற பெயர்களும் உண்டு. அந்த அண்ணாக்குக்கு மேலே ஒரு நாக்கு இருக்கிறது. அதற்கு பேர் உண்ணாக்கு. அது உகாரம் ஆகும். அந்த அண்ணாக்கு உண்ணாக்கு என்ற இரண்டும் தராசுமுனை போல நிற்கிறது. சுவாமி இடது பாதம் அண்ணாக்கு மேலே ஊன்றி, வலது பாதம் புருவ நுனியிலிலே நிற்கிறது. இந்த வலது பாதம் ஆடியபாதம், நற்றாள் ஆகும். அந்த அண்ணாக்கு இருக்கப்பட்ட இடத்திலே மனோன்மணி சக்தி வாசம் செய்கிறாள். உண்ணாக்குக்கு மேலே புருவமத்தியிலே சதாசிவம் வாசம் செய்கிறார்...



சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட இடமே சத்தம் பிறந்த இடம். அதுதான் முச்சந்திகள் கூடும் இடமாகிய அகாரமும் உகாரமும் தராசுமுனையாய் நிற்கும். இவ்விரண்டுக்கும் நடுவே மனோன்மணியும் சதாசிவனும் நிற்கிறார்கள்.
இந்த இடமே இன்பதுன்பம் இல்லாத இடம். தீட்டு திடுக்கு அற்ற இடம். சகலமும் விளையாடப்பட்ட இடமாகும். தூக்கிய பாதத்தில் அணிந்த வீரகண்டா மணியும் பாதச் சிலம்பும் சதங்கையும் அவ்விடத்திலே ஒலிக்கும். அப்படி ஓசை உண்டான பின்பு சதாசிவமும் மனோன்மணியும் தரிசனமாகும். பிறகு ஒரு சோதி தோன்றும், அச்சோதியில் லயப்பட்டால் வெகுகாலம் ஒருவர் சீவித்து வாழலாம்...



இன்னும் விளக்க வேண்டுமானால்,நம் உடலில் உண்ணாக்கு மேலே உச்சிக்கு கீழேயுள்ள பாதை வலம்புரி சங்கென்று அழைக்கப்படும்.இந்த வலம்புரியில் இருகாது குறுக்கிடும் பகுதியில் ஒரு கிணறு உள்ளது.இந்த கிணற்றை நாதஉணவுதரும் தருமச்சாலை என்ற நற்சத்திரங்கள் என்றும் கூறுவர்.இந்த தருமச்சாலையிலே என்றும் வற்றாத சக்திநாதனுக்கள் அக்கினியாக கொழுமிக் கிடக்கின்றன.இந்த நாதனுக்களின் ஊற்றுக்கண்ணாக மயிராண்டி எனும் பிடரிக்கண்ணும் இந்த கிணற்றின் மேல்மூடியாக மூக்காண்டி என்ற புருவமத்தியின் உட்வாசலான குதம் இருக்கிறது.




மேலும் இந்த வலம்புரியே மரணந் தங்குந்தலமென்றும் கேள்வி உதயஸ்தானமென்றும் நாதாக்களின் அபிப்ராயம்.ஆகவே எவனொருவன் வலம்புரியிலுள்ள நாதாந்தக் கிணற்றில் நாதத்தை எழுப்புகின்றானோ அவனை எமன் நெருங்கமாட்டான்.மீறி தவறான எண்ணங்களினால் ஏற்படும் போக்குவரத்து செலவினால் கிணற்றில் நாதத்திற்கு பதிலாக கபமாக மரணத்தின் அஸ்திவாரம் போடப்படுகிறது.




வள்ளலார் கூறிய சுத்த சன்மார்க்க அனுபவம் கண்டத்திற்கு மேல் ஏன்?? என்பதும், ஞானமூலிகையான கரிசாலையும் தூதுவளையும் பயன்பாடு எதற்கு என்பதும், மேல் ஆதாரங்களை பற்றியும், உடுக்கை, சூலத்தின் வடிவங்கள் எதற்கு என்பதை படத்தைக் கொண்டு படித்தால் புரிந்துகொள்ளலாம். அண்ணாக்கை உண்ணாக்கை பற்றி எழுதாத சித்தர்களே இல்லை. 


இதன் அடிப்படை கொண்டே வாசியோகம் பழகப்படுகிறது. ஊதறிந்து ஊதுபவனே சித்தன் என்று அகத்தியர் ஞானத்தில் கூறிப்பிட்டதும் இதுவே ஆகும்.

Note:  This is Very powerful don't do your self , Take Guru Guide.... 

Monday, April 4, 2016

தில்லை நடராஜரின் கேரள வாசம்

Thank: Sunder Subramaniam

35 ஆண்டுகள் கேரளத்தில் வாசம் செய்த நடராஜர்!!!
சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமான் முகலாயர் படையெடுப்பின்போது சிதம்பரத்திலிருந்து கேரளத்துக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிதம்பரம் கொண்டு வரப்பட்டார் என தல வரலாறு கூறுகிறது.

முகலாயர் படையெடுப்பின் போது தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் கி.பி. 1648-ல் தில்லை ஸ்ரீநடராஜரையும் ஸ்ரீசிவகாமி அம்மையையும் தென்னாட்டுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்க எண்ணினராம்.
இரண்டு மரப் பேழைகளில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் அமரச் செய்து இரவு நேரங்களில் மட்டுமே பயணம் மேற்கொண்டு, தில்லைக்கு தென்பகுதியாக விளங்கும் மதுரையை நோக்கிச் சென்று குடுமியான்மலையை அடைந்தனர்.

பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர். அங்கு ஒரிடத்தில் பூமியிலே குழி தோண்டி பேழைகளை மறைத்து வைத்து அந்த இடத்தில் ஒரு புளிய மரத்தையும் நட்டனர். பின்னர் தில்லை திரும்பினர்.
தில்லையில் அமைதி திரும்பிய சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லை வாழ் அந்தணர்களின் இளம் தலைமுறையினர் குழுக்களாகப் பிரிந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அவ்வாறு பிரிந்து சென்றவர்களில் ஒரு குழுவினர் புளியங்குடியை அடைந்தனர். அங்கே பல பேர்களிடமும் விசாரித்தனர். யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், ஒரு வயதான குடியானவன் தன்னுடைய வேலையாளிடம், இந்த மாட்டைக் கொண்டு போய் அம்பலப் புளியில் கட்டு என்றாராம். இதைக் கேட்டதும் இவர்களுக்கு அது குறித்த விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியுள்ளது. அந்த வேலையாளிடம் கேட்ட போது அவன், எனக்கு எதுவும் தெரியாது, எங்கள் முதலாளியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.

முதலாளியிடம் சென்று கேட்ட போது அவரோ, இங்கே ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல காலங்களாக இந்த பகுதியில் வாழ்ந்து வந்தார். தினமும் இந்த அம்பலப் புளி அடியில் வழிபட்டு வந்தார். அவர் தான் அந்த சிறிய பொந்தில் திருவுருவங்களைக் கண்டாராம்.

இந்த இடத்தில் விலைமதிப்பில்லாத ஒரு சுவாமி இருக்கிறார் என்றும், அதனை அறிந்தவர்கள் ஒரு நாள் இங்கே வருவார்கள். அதுவரை இதைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் உண்மையானவர்களா என்று சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொன்னார் என்றார்.
இவர்களோ, நாங்கள் தான் அந்த மூலமூர்த்தியின் உரிமைதாரர்கள் என்று விளக்கி அவரிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு தில்லையை அடைந்தார்கள்.
பின்னர் பல நூறு தில்லைவாழ் அந்தணர்கள் அந்த இடத்தை அடைந்து, தக்க ஆதாரங்களை விளக்கிச் சொல்லி, அவர் சம்மதத்துடன் அந்த இடத்தைத் தோண்டி தில்லை நடராஜரையும், சிவகாமி அம்மையையும் வெளியே எடுத்தனர்.

பின்னர் தக்க பாதுகாப்புடன் அதே போன்ற பேழைகளில் வைத்து தில்லை நோக்கி எடுத்து வந்தனர்.

வரும் வழியில் திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலின் சபாபதி மண்டபத்தில் சிலகாலம் வைத்திருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோயில் வழியாக தில்லைக்கு வந்தார்கள்.
1686-ல் மறுபடியும் தில்லையில் பொன்னம்பலத்தில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் பிரதிஷ்டை செய்து, பல திருப்பணிகள் செய்து, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று தல வரலாறு கூறுகிறது.
-தினமணி
------------
இது முற்றிலும் உண்மை. முகலாயர் படையெடுப்பின்போது சிதம்பரம் கோயிலை தகர்க்க முற்பட்டனர். தீட்சிதர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தன் இன்னுயிரை ஈந்து கோயிலை காப்பாற்றினர். கோயிலில் உள்ள சிலைகள் வேறு இடத்திருக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வைத்தீஸ்வரன் கோயிலில் மிகவும் பிரசித்திபெற்ற முத்துகுமார(முருகன்) சுவாமி சிலை தில்லை நடராஜர் கோயிலுக்கு சொந்தமானது.