Tuesday, November 1, 2011

சித்தரின் ஜீவசமாதி







                                                          Click About: Mystic Selvam Ayya

ஆசை உடையவன் மனிதன்.பேராசை,முறையற்ற ஆசை கூடாது.அது நிச்சயம் சீரழிவில் கொண்டுபோய்விடும்.நாம் ஜீவசமாதிகளின் துணை கொண்டு நமது நியாயமான கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.


தமிழ்நாட்டில் சுமார் 1,00,000 ஜீவ சமாதிகள் இருக்கின்றன.நிச்சயமாக இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத்தான் இருக்கும்.இது தோராய மதிப்பீடு.ஏதாவது ஒரு கோரிக்கையுடன் அமாவாசைக்கு முன்னிரவு,அமாவாசை,அமாவாசைக்கு மறு நாள் இரவு ஆகிய மூன்று இரவுகள் ஏதாவது ஒரு ஜீவசமாதி உள்ள இடத்தில் தங்குங்கள்.ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து ஆயிரம் அடி தூரத்துக்குள் தங்கவும்.


இந்த மூன்று இரவுகளும் தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது;உப்பு,புளி,காரம்,எண்ணெய் சேர்க்கக் கூடாது.பால் பழம் அல்லது பால் சாதம் அல்லது பச்சரிசி சாதம்,வெல்லம் சாப்பிடலாம்.இந்த மூன்று இரவுகளுக்கு முன்பு ஒரு மாதம் வரையிலும் அசைவம்,மது பழக்கத்தைக் கைவிடவும்.ஜீவசமாதியில் இருப்பவரின் ஆவியின் துணையால்,உங்களின் கோரிக்கை நிறைவேறியதாக எண்ணுங்கள்.உங்கள் கோரிக்கை எட்டு தினங்கள் கழித்து நிறைவேறும்.மூன்று தினங்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பிவிடவும்.இதே மாதிரி பௌர்ணமிக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் முயற்சி செய்யலாம்.



ஜீவ சமாதியிடத்தில் தங்கியிருக்கும்போது,உபவாச முறையில் இருக்க வேண்டும்.சமாதியில் இருப்பவரின் பெருமையை எண்ணியவாறு இருக்க வேண்டும்.அனாவசியப் பேச்சு மற்றும் சிந்தனை சிறிதும் கூடாது.பொதுவாக எந்த சமாதியாக இருந்தாலும்,இயன்ற அளவு கனிவர்க்கங்கள் வைத்து வழிபடலாம்.பூக்கள் வைத்தும்,வாசனைப்பொருட்கள் தடவியும் வழிபடலாம்.தீபதூப நைவேத்தியம் சமாதிகளுக்கு உண்டு.கருப்பு திராட்சை,கற்பூர வள்ளி வாழைப்பழம்,பேரீட்சை பழம்,பால்,இளநீர்,சீனா கல்கண்டு,தேன் ஆகியவை முக்கியமான நைவேத்தியங்கள் ஆகும்.பசு நெய்தீபம்,தாமரை நூல் திரியில் ஏற்றுவது நன்று.


அனைத்து மதங்களுக்கும் இது பொருந்தும்.தங்களுடைய வசதியைப் பொறுத்து கூட்டியோ,குறைத்தோ செய்து கொள்ளலாம்.


இப்படித்தான் காரியம் சாதித்தேன் என்று தேவரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது;என்னதான் மந்திர,தந்திர பூஜைகள் செய்தாலும் அன்னதானத்திற்கு மேல்பட்டது எதுவும் கிடையாது.


இந்த தேவரகசியத்தை நமக்கு அருளிய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்!

எனது ஆன்மீக வழிகாட்டி,மிஸ்டிக் செல்வம் ஐயாவின் அன்புசீடர் புளியங்குடி சிவமாரியப்பன் அவர்களுக்கும் நன்றிகள்!!!



ஓம் சிவசிவ ஓம்


Thank: Mr.K.Veeramuni
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): விஜயாபதியில் இருக்கும் சித்தரின் ஜீவசமாதி

No comments:

Post a Comment