Friday, August 16, 2013

parikaram enral enna ?

ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் அவர்களின் அனுபவக்கருத்து



உலகத்தோடு ஒட்ட ஒழுகார் பல கற்றும் கல்லார் அறிவிலாதார் என்னும் குறள்படி உலக சமுதாயத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதன் சமுதாயத்தை அனுசரித்துத்தான் செல்ல வேண்டியுள்ளது.முற்றும் துறந்த முனிவர் ஊர் பிடிக்காமல் வனத்துள் போய் விடுவதால்,அவருக்கு எந்த விதக்கட்டுப்பாடும் இல்லை.இப்பொழுது மனித மன விடுதலைக்கு யோக மார்க்கங்கள் இருந்தாலும் 90% மக்கல் கிரியா மார்க்கத்தை விரும்புகிறார்கள். மந்திரம், தந்திரம்,எந்திரம் ஆகியவைகளின் பேரில்தான் முழு நம்பிக்கை வைக்கின்றார்கள். அதனால்தான் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் தாங்கமுடியாத அளவு பெருகிக்கொண்டே செல்கிறது.கலியுகத்தில் வாழும் மக்களுக்கு நிமிடத்துக்கு நிமிடம் பிரச்னைதான்.

என்றைக்கு பிரச்னை என்ற ஒன்று ஒரு மனிதனுக்கு ஏற்பட்டதோ அன்றே தீர்வு என்ற ஒன்றும் உள்ளது.அது என்ன தீர்வு என்பது நம் கண்களுக்கு புலப்படுவது இல்லை.ஏதோ ஒரு மாற்றுவழி இருக்கத்தான் செய்கிறது. அதைத்தான் பரிகாரம் என அழைக்கின்றனர்.ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல் உண்டு என்பதுதான் பரிகாரத்தின் தத்துவம்.


நம்பிக்கைதான் பல மதங்களின் மூலதனம்.மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் பல மதங்கள் கிடையாது.எனக்கு அருளாளர்கள் மேல் வைக்கும் நம்பிக்கை குறைவுதான்.ஆனால் அருளாளர்கள் கூறும் பரிகாரங்கள் மேல் முழு நம்பிக்கை உண்டு.கடந்த 40 ஆண்டுகளில் பல முறை பரிகாரங்களை பரீட்சை செய்து பார்த்துள்ளேன்.பரிகாரம் ஒரு முழுமையான தீர்வு இல்லை.விபத்தில் சிக்கியவனுக்கு முதலுதவி மாதிரிதான்.

பரிகாரங்கள் தற்காலிகமானவை.கொஞ்சம் சிந்திக்க,மூச்சுவிட கால அவகாசம் கிடைத்தவுடன் நிரந்தர நிவாரணத்தை மனிதன் தேட வேண்டும்.மனித காரியங்களுக்குத் தடையாக இருப்பது அவன் மனமும் உடலும்தான்.வெளி எதிரியே கிடையாது.கொல்லாமல் கொல்லும் நோய் அவனவன் உள்ளத்தில் இருக்கின்றது. கெட்ட நேரம் வரும்போதுதான் அடுத்தவர் சொத்தை அபகரிக்க எண்ணுகிறான்.அவனுக்கு நல்ல புத்தி சொல்ல ஆளில்லை.அதனால்தான் விநாசகாலே விபரீத புத்தி என பெரியோர்கள் கூறினர்.ஒன்று சுயபுத்தி வேண்டும்.அது இல்லாவிட்டால் சான்றோர்கள் புத்திமதியைக் கேட்டு அதன்படி நாணயமாக நடக்க வேண்டும்.இரண்டும் இல்லை எனில் ஒரு மனிதன் என்னதான் கலைகள் கற்றிருந்தாலும் அவன் தரித்திரமடைகிறான்.


நன்றி:ஆன்மீகப்பயணம் பக்கம் 223,224.

Thank: https://www.aanmigakkadal.com/2010/12/parikaram-enral-enna.html

No comments:

Post a Comment