சும்மா #3
வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
எண்ணங்களின் பிறப்பை இப்போது பார்ப்போம்.
உள்ளத்தில் எப்போதும் இரண்டு செயல்கள் மாறி மாறி நடந்துகொண்டேஇருக்கின்றன.
ஒன்று, நினைப்பு.
இன்னொன்று, மறப்பு.
மனத்திரையில் ஓர் எண்ணம் தோன்றுகிறது. நம்மை அறியாமலேயே அது போய் விடுகிறது. ஆனால், வேறொன்று வந்து விடுகிறது. இருந்தாலும், மனது வெற்றிடமாக இருப்பதேயில்லை. மனதில் எந்தவொரு நினைப்புமே இல்லாமலோ, மறப்பும் இல்லாமலோ இருப்பது கடினமாக இருக்கிறது.
நினைப்பு" என்பது எப்படி ஒரு active process ஸோ அதுபோலவே மறப்பு என்பதுவும் ஒரு active processதான்.
ஒன்றை நாம் உணருகிறோம்.
இன்னொன்றை நாம் உணருவதில்லை.
மறப்பு என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம்தான்.
"நினைக்கத் தொ¢ந்த மனமே!
உனக்கு மறக்கத் தொ¢யாதா?"
நினைவையெல்லாம் மறக்கமுடியாமல் போனால் பைத்தியம் அல்லவா பிடித்துவிடும்!
பழங்காலத்து யோக நூல்களில் எண்ணத்தை "வாக்" என்று குறிப்பிடுகிறார்கள். இந்த வாக்குகளில் நான்கு உண்டு. பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகா¢ ஆகியவை.
வைகா¢யும் இரண்டாக இருக்கிறது.
சொல் வடிவத்திலும் வாக்கிய அமைப்பிலும் எண்ணம் விளங்குவதைத்தான் "வைகா¢" என்கிறோம். அது பேச்சாக வெளியில் பா¢ணமிக்கும்போது அதை "தூல வைகா¢" என்றும், வெறுமனே அதே வடிவில் மனதில் மட்டுமே வெளிப்பாடு கொண்டு விளங்கும்போது அதனை "சூட்சும வைகா¢" என்றும் கூறுகிறோம். இதெல்லாம் ஏதாவது ஒரு மொழியில் அமைந்திருக்கும் - தமிழ் , இந்தி, ஆங்கிலம் என்று.
வைகா¢ வாக்குக்கு அடிப்படையான இன்னொரு நிலையில் அதற்கு முன்னதாக விளங்கும். இதனை "மத்யமா" வாக் நிலை என்போம்.
Instinct என்பது சொல் வடிவம் பெறாத ஓர் எண்ணக்கூறு.
இதைப்போன்ற நிலையில்தான் மத்யமா விளங்கும். இதை யோக நூல்கள் மயில் முட்டையுடன் ஒப்பிடும். மயில் முட்டையில் வெளியே ஓடு இருக்கிறது. அதனுள்ளே வெண் கரு, மஞ்சள் கரு எல்லாம் இருக்கின்றன.
அதற்குள் மயிலின் அனைத்துக்கூறுகளும் விளங்குகின்றன.
இதுவேதான் முழு மயிலாகப் பா¢ணமிக்கிறது. மயிலை வைகா¢ என்றால் முட்டைதான் மத்யமா.
மத்யமா நிலையில் இருக்கும் எண்ணத்தை நாம் சாதாரணமாக முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால், வைகா¢ நிலையில் உணரலாம். யோகிகள் மத்யமா நிலையை உணருவார்கள்.
இதற்கும் அடிப்படையான இன்னொரு புராதன நிலை உண்டு. அதை "பஸ்யந்தி" என்று கூறுவார்கள்.
மத்யமா நிலையில் பா¢ணமிக்கும் முன்னதாக எண்ணம் பஸ்யந்தி நிலையில் விளங்கும்.
இந்த நிலை இன்னும் சூட்சுமமானதொன்று.
விதையிலிருந்து வெளிவந்த முளையைப்போன்ற நிலை.
இதற்கும் அடிப்படையான ஆதார நிலையை "பரா" வாக் என்பார்கள். முளைக்கும் முன்னால் உள்ள விதையின் நிலையைப் போன்றது அது. யோக நூல்கள் பராவை ஆலவிதைக்கு ஒப்பிடும். ஆலவிதையிலிருந்து முளை தோன்றி, அது செடியாகி, அதன் பின்னர் தண்டு, கிளை, கொப்பு, காம்பு, இலை, விழுது, என்ற முழு ஆலமரமாகப் பா¢ணமிக்கின்றது அல்லவா?
ஆலவிதை - பரா
முளை - பஸ்யந்தி
செடி - மத்யமா
ஆலமரம் - வைகா¢
இப்படியாகத்தான் எண்ணம், பேச்சு, எழுத்து எல்லாம் தோன்றுகிறது. மாபெரும் யோகியரே பஸ்யந்தி, பரா வரைக்கும் சென்று வாக், எண்ணங்களை உணரமுடியும். அப்படிப்பட்டவர்கள் பரா நிலையிலேயே எண்ணத்தின் பிறப்பை நிறுத்தி விடுவார்கள்.
இந்த நிலைதான் "சும்மா" இருக்கும் நிலை.
"சொல் அற; சும்மா இரு!" என்பது அருணகி¡¢யாருக்கு முருகன் கூறிய உபதேசம். அந்த மாபெரும் பொருள் அறியமுடியவில்லை என்று அருணகி¡¢யார் கூறுகிறார்.
எண்ணங்களை அற்றுப்போகச் செய்ய வேண்டுமானால், முதலில் வைகா¢யை அடக்கி, மத்யமாவை அடக்கி, பஸ்யந்தியையும் அடக்கி, முடிவில் பரா நிலையில் ஒன்றுமே எழும்பாமல் நிறுத்தவேண்டும்.
இவ்வாறு செய்யும் அதே நேரத்தில் "மனஸ்" எனப்படும் உள்ளப்பகுதி ஒடுங்கி விடும். ஏனெனில் அங்கு எண்ணங்கள் ஏதும் நிலவ மாட்டா. புத்தி, சித்தம், அஹம்காரம்,ஆகிய மற்றவையும்கூட இல்லாமல் போய்விடும்.
மனசு அழிந்த நிலை இதுதான். இந்த நிலையில்தான் உணர்வுகள்கூட இருக்கமாட்டாதே? ஆகவே எதுவும் உணரப்படவும் மாட்டாது, பதிப்பிக்கப்படவும் மாட்டாது.
இதுதான் நினைவும் மறப்பும் அற்ற நிலை.
நினைப்பு இருந்தால்தானே மறதி ஏற்படுவதற்கு?
இதைத்தான் "சும்மா" இருத்தல் என்பார்கள்.
"தி¡¢புடி ஞானம்" என்று ஒரு விஷயம் இருக்கிறது. காண்பான், காணும் செயல், காட்சிப்பொருள், இவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகள்; இதைத்தான் தி¡¢புடி என்பது.
சும்மா இருக்கும்போது தி¡¢புடி ஞானம் அற்றுப் போய்விடும்.
மனசு இயங்கும்போது உணர்வுகள், உணர்ச்சிகள் இருக்கும். உணர்வு இருந்தால்தான் ஓர் அனுபவம் எப்படியிருக்கும் என்பதை உணரமுடியும்.
ஆனால், உணர்வு, மனசு எல்லாம் இருக்கும்போது சும்மா இருக்கும் நிலை ஏற்படமாட்டாது. சும்மா இருக்கும்போதோ மனசு, உணர்வுகள் இரா.
ஆகவேதான் சும்மா இருக்கும் தன்மை எப்படியிருக்கும் என்பதனைச் சொல்ல முடியாது.
"கண்டவர் விண்டதில்லை;
விண்டவர் கண்டதில்லை"
நினைப்பும் இல்லை, மறதியும் இல்லை;
வாக்கும் இல்லை, மனமும் இல்லை;
இரவும் இல்லை, பகலும் இஇல்லை.
அது ஒரு Twilight Zone.
"வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே
எந்தன் உள்ளம் தெளிவித்து"
ஒளவையார்
ஒளவையார் "விநாயகர் அகவ"லில் மேற்கூறியவாறு சொன்னவாக்கும் மனமும் இல்லாத நிலைதான் "சும்மா இருப்பது".
"ஆங்காரம் உள்ளடக்கி, ஐம்புலனைச்சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?"
=பத்திரகி¡¢யார்
அந்தத் தூங்காமல் தூங்கும் நிலையும் அதுதான். ஐம்புலன்களின் செயல் பாட்டினை நிறுத்தினால் ஆங்காரமாகிய "தான்" என்னும் உணர்வு இருக்கமுடியாது அல்லவா?
"வேட்டை பொ¢தென்றே, வெறி நாய் துணை கொண்டு,
காட்டில் புகுவேனோ? கண்ணே, ரகுமானே!"
- குணங்குடி மஸ்தான்
ஐம்புலன்களை மஸ்தான் சாகிபு வெறிநாய்களாக உருவகப்படுத்தியிருக்கிறார். இதனை "ரகுமான் கண்ணி" என்னும் பகுதியில் காணலாம்.
அவர்கள் யோகியராக இருக்கட்டும்; Sufiக்களாக இருக்கட்டும்; யூத Essenes ஆக இருக்கட்டும்; Augustine, St.Theresa போன்ற Christian Mystics ஆகவோ, சீன Taoist ஆகவோ, Zen பெளத்தராகவோ, அல்லது நம் தமிழ் சித்தர்களாகவோ இருக்கட்டும். யாராகவே இருந்தாலும் அவர்களுடையது ஒரு common மொழி.
அதுதான் "சும்மா இருக்கும்" மொழி.
"மோனம் என்பது ஞானவரம்பு".
No comments:
Post a Comment