Showing posts with label temple. Show all posts
Showing posts with label temple. Show all posts

Friday, September 4, 2020

Online சத்சங்கம் 1 - சிவவாக்கியர் Google Meet 06/09/2020

 வணக்கம் !!

ஆத்ம கமலம் பக்தியுடன் வரவேற்க்கும் Online சத்சங்கம் (ஒவ்வொரு ஞாயிறும்)

இந்த வார தலைப்பு: “1 - சிவவாக்கியர்” By முருகேசன், ஆன்மிக நெறியாளர், மதுரை


தேதி: 6th September 2020

நேரம்: 11.30 AM IST

கட்டணம்: இறை பக்தி

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd

அன்புடன்

ஒருங்கிணைப்பாளர்கள்

ஹரி மணிகண்டன்  | +91 – 9841267823

வீரா கி | +91 – 9840646368

ஆத்ம கமலம் குழு


Greetings!  

Aathma Kamalam !!

Happy to invite your for the webinar session Online Sathsangam (Every Sunday Series)


Topic: “Sivavaakkiyar" By  Mr Murugesan, Madurai


Date: 6th September 2020

Time: 11.30 AM IST

Fee: Love on God

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd


 get update about the webinar, Please join the Aathma Kamalam Telegram Group


Thanks and Regards,

Coordinators:

Hari Manikandan V | +91 – 9841267823

Veera K | +91 - 9840646368

Team  - Aathma Kamalam

Friday, September 20, 2019

தேவர்கள் காட்டும் தீபங்கள் !!!


Thank to : Meenakshi Dasan FB

தேவர்கள் காட்டும் தீபங்கள் !!!
தேவரும் மூவரும் போற்றும் மதுரையம்பதியில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் சித்திரை திருவிழா கோலாகலமாக நடக்கவிருக்கிறது !!! உலகமே எதிர்நோக்கும் இத்திருவிழாவினை முன்னிட்டு சிறப்பு பதிவாக பலரும் அறியாத, ஆனால் அதே சமயத்தில் மிகமிக அற்புதமான "அஷ்ட திக்பாலக தீபம்" பற்றி இன்று காண்போம் !!!

மதுரையின் க்ஷேத்ர மஹாத்மியமும், திருவிளையாடல் புராணமும் மதுரைக்கும் தேவர்களுக்கும் உடனான சம்பந்தத்தினைப் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கிறது !!! இங்கே வீற்றிருக்கும் சோமசுந்தரப்பெருமானை தேவர்களின் தலைவனான சாக்ஷத் தேவேந்திரனே முதன்முதலில் பூஜித்தான். இதன் ஞாபகமார்த்தமாக இன்றளவும் வருடாவருடம் சித்திரைத்திருவிழா பன்னிரண்டாம் நாள் (சித்திராபௌர்ணமி) அன்று தேவேந்திர பூஜை ஐதீக விழா நடைபெறுகிறது !!! இதனைத்தவிர திருவிளையாடல் புராணத்தில் "கடல் சுவற வேல்விட்ட படலம், இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம், வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம், நான் மாடக்கூடலான படலம்..." போன்ற பல படலங்கள் தேவர்களை சம்பந்தப்படுத்தியதாகவே (கர்வபங்கம் செய்ததாகவே) உள்ளது குறிப்பிடத்தக்கது !!!

மிக முக்கியமாக, உமையன்னை, மாமதுரை மாதரசி, மதுரை மீனாட்சி தன் திருமண வைபவத்தினை முன்னிட்டு எட்டு திசைகளுக்கும் திக்கு விஜயம் செய்தருளினாள் !! ஒவ்வொரு திக்கிலும் இந்திரன், அக்னி, யமன், வருணன் என்று அந்த திக்கிற்கு அதிபதியான தேவருடன் போரிட்டு அவர்களை தலை வணங்க வைத்தாள் !!! இந்நிகழ்வும் சித்திரைத் திருவிழா ஒன்பதாம் நாள் "திக்விஜய" உற்சவமாக நடைபெறுவது யாவரும் அறிந்ததே !!! ஆக நம் மதுரை தெய்வங்களிடம் இந்த்ராதி அஷ்ட திக்பாலகர்களும் தோற்று, அவர்களை கைதொழுகின்றனர் என்பது கண்கூடாகின்றது !!!

நிற்க. மேற்கூறிய அனைத்தும் வெறும் ஏட்டோடு மட்டுமில்லாமல் தினம்தோறும் நடைமுறையில் இருப்பது தான் மதுரையின் சிறப்பு !!! மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு கால பூஜையின்போதும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது போல் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விதவிதமான தீபாராதனைகள் காண்பிக்கப்படுகின்றன !! ஆனால் அர்த்தஜாம பூஜையின் போது மட்டும் ஸ்பெஷல் (special) ஆக 8 கூடுதல் தீபாராதனைகள் காட்டப்படுகின்றன !!! அவைகளே "அஷ்ட திக்பாலக" தீபங்கள் !! இந்திர தீபம், அக்னி தீபம், வருண தீபம் என்று ஒவ்வொரு தீபத்திலும் ஒவ்வொரு திசைக்காவலரும் தத்தமது வாகனத்துடனும் ஆயுதங்களுடனும் கைகூப்பியவாறு வீற்றிருப்பர்(கீழே படங்கள் காண்க) !!!
இவர்களின் தீபத்தில் திரியிட்டு ஏற்றி அன்னைக்கும் சுவாமிக்குமாக காண்பிக்கும்போது அவர்களே வந்து தொழுவதாக ஐதீகம் !!!


அர்த்தஜாம பூஜைத்தவிர சில விசேஷ தினங்களுக்கும் காண்பிக்கப்படும் இத்தீபங்களின் அழகும், அதற்கென உள்ள பிரத்யேக மந்திரங்களின் ஒலியும் அதனை அறிந்து காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் !!! எங்கேயோ வானுலகில் கோட்டைக்கட்டிக்கொண்டு உலாவும் தேவர்கள் ஒவ்வொரு நாளும் தவறாது அத்தனை தூரம் இறங்கி வந்து சுவாமி அம்பாளை தரிசிக்கவருகின்றனர் என்றால், அருகிலேயே இருக்கும் நாமும் தவறாது தினமும் ஆலயம் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வராளை வணங்குவோம் !!! எதிர் வரும் சித்திரை திருவிழாவினை ஆர்வத்துடன் வரவேற்போம் !!!
பின் குறிப்பு : திருவிளையாடல் புராணம், திக்விஜயம், சிலப்பதிகாரம், திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை (அழகர்கோவில்), பாண்டியர்களின் இந்திரஹாரம் போன்றவற்றைகளையும் தேவர்களையும் ஒன்று சேர்த்து பார்க்கும்போது நிச்சயம் ஒரு தனி ஆழ்ந்த ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்பது நிதர்சனம் !!!

மீனலோசனி பாசமோசனி !!!

Friday, August 23, 2019

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் - 1 வது பதிவு

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் ...........1
இந்த தொடர் முழுமையாக சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்ட பழக்கவழக்கம் ,உணவு முறைகள் இவைகளை பற்றி ....
மணி ,மந்திரம் ,---வைத்தியம் .
சில விவரம்கள் ....
இந்த உலகில் புண்ணிய பூமியானது நம் நாடு ,பல நாடுகளை சேர்ந்த மகான்கள் ,சாதுக்கள் இங்கே வந்ததும் நம் பூமியின் அருமைகளை
புரிந்து இங்கே இருந்து விட்டார்கள் என்பது நாம் அறிந்தது .
பல வகையான தாவரம்கள் இங்கே உண்டு என்று நாம் அறிந்தது .
மனித குலம் நன்றாக வளமுடன் ,வாழ சித்தர்கள் பல விவரம்களை
கொடுத்து இருக்கிறார்கள் ....
இறைவன் மனிதனுக்க மிக மிக அவசியமானதாக கற்பக விருட்சம் என்னும் இளநீர் கொடுத்தார் ,மனிதனின் குலம் தழைக்க விதை இல்லாத வாழை மரம் கொடுத்தார் .
மனிதன் சுவைக்க பார்த்தவை எல்லாம் உன்ன தொடங்கிவுடன் பல வித
வியாதிகளுக்கு அடிமையானான் .
இறைவன் மிகவும் கருணை கொண்டு மனிதனின் உடம்பில் உள்ள சுரபிகள் ,உறுப்புகள் சரியாக பல பழ வகைகளை உண்டாக்கினார்
மனிதனின் முளை பலம்பட முளை போல் சீதாபழம் (custard apple )
கிட்னி பலம்பட கிட்னி போல ஆரஞ்சு
கண்கள் பலம்பட திராட்சை
பற்களை பலம்பட மாதுளை
இதயத்தை பலம்பட இதயம் போல ஆப்பிள்
ரத்தத்திற்கு பீட் ரூட்
பெண்களின் கருவறைக்கு பப்பாளியும்
இது போல நிறைய ......
இதை அறிந்த சித்தர்கள் எது எல்லாம் மனிதனுக்கு நன்மை செய்யும்
என்று கண்டு கொண்டு நமக்கு சொல்லி உள்ளார்கள் ...
மனிதன் உயிர் வாழ உணவு வேண்டும்
வியாதியால் இருக்கும் பொழுது மருந்து வேண்டும்
உணவை சுருக்கினால் மருந்து
மருந்தை சுருக்கினால் விஷம்
விஷத்தை சுருக்கினால் மணி
மணிகளை சுருக்கினால் மந்திரம் ......
உணவை சுருக்குவது என்பது .....
ஒரு உணவில் கிடைக்கும் சக்திகளை எடுத்து கொடுப்பது
அதாவுது ஆரஞ்சு பலத்தை உரித்து சாப்பிட்டவுடன் அவை வயிற்றில் செரித்து குருதியில் கலந்து அமிலம்களை பிரித்து இனிப்புகளை சேர்த்து
உபரிகளை வெளிய தள்ளும்
ஆரஞ்சு பலத்தில் உள்ள ரசத்தை எடுத்து பதபடுத்தி அதை சின்ன சின்ன
உருண்டையாக்கி வைத்தால் மருந்து
மருந்துடன் மருந்தை சேர்த்தல் விஷம்மாக மாறும்
பல விஷதுடன் விஷம் சேரும் பொழுது அது மணி . .
இதை நாகம் தேவதை கதைகளில் அறியலாம்
பல மணிகள் சேரும்பொழுது அது மந்திர ஒளி, ஒலிகளை தரும்
பல மணிகளை சோதிடர்கள் ,மந்திரவாதிகள் ,சித்து வேலை செய்பவர்கள் அணிய இது தான் காரணம்.
சில மணிகள் வியாதிகளை சரிசெய்யும் என்று சொல்ல இது தான் காரணம் .
மருந்து உன்று சரிசெய்யலாம்
மணி உடுத்தி சரிசெய்யலாம்
மந்திரம் சொல்லி சரிசெய்யலாம்
இது எல்லாம் சரி... வியாதிகள் வராமல் நாம் எப்படி உணவு பழக்க வழக்கம்
மேற்கொள்ள வேண்டும்
சித்தர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் ........

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் - .2 வது பதிவு

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் ...........2 வது பதிவு
சித்தர்கள் மனித குலம் தழைக்க சிறப்பாக வாழ பல நல்ல அற்புதமான தகவல்கள் தந்து உள்ளார்கள்
நம்முடைய பழக்க வழக்கத்தில் உள்ள சின்ன சின்ன செயல்கள் நமக்கு
வியாதிகளை கொடுக்கிறது ....
சித்தர்கள் சொன்னது ...
படுகையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும் பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்
காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .
கண்களை பற்றி உங்களுக்கு அறிய படவேண்டிய ரகசியம் .
கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .
நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான்
இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .
உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை
தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .
இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும் .
அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .
மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..
துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .
அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து
அவனை பார்க்கிறாள் .
பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .
குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .
கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .
அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .
இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .
கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .
அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .
நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய
நபர்களை சந்திக்கிறேன் .
அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..
என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான
உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...
காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .
பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது .....
சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன்
குளியல் .
குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .
ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .
உணவு எடுக்கும் முறைகள் பற்றி
அடுத்த பதிவில் பார்போம் ..........
Unlike · Comment · 

நம்முடைய கோவில்களும் சித்தர்களும் - 1 பதிவு

நம்முடைய கோவில்களும் சித்தர்களும் ................1 பதிவு
இந்த பதிவு நம் நாட்டில் உள்ள கோவில்களின் தன்மைகளைப்பற்றியும்
சித்தர்கள் கோவிலை பற்றிய கூரிய ரகசியம்களையும் பதிகப்பட்டுள்ளது 
அறிந்து பயன்பெறவும் .......
கோவிலை பற்றி முகநூல் அன்பர்கள் நிறைய தகவல்கள் பதிகிறார்கள்
இந்த பதிவில் சித்தர்கள் ஏன் ,எப்படி ,கோவில் உண்டாக்கி ,பயன்படுத்தி
அதை நமக்கு கொடுத்து உள்ளார்கள் என்பதனை பார்போம் .
கோவில் .........
தலம்,தீர்த்தம் ,மூர்த்தம் .......
கோவில் அமைந்த இடம் தலம் ....
கோவிலில் உள்ள ஊற்று நீர் (தீர்த்தம் )
கோவிலில் செய்யப்பட்டு உள்ள மூர்த்தம் (சிலைகள்)
உருவ வழிபாடு என்ற நகைப்பு ஒரு புறம்
இதை வைத்து சம்பாத்தியம் ஒரு புறம்
இது தவறு என்பது ஒரு புறம்
இவைகள் எல்லாம் இன்று நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்
அவர்களுக்குகாகவும் சித்தர்கள் நிறைய நான்மைகளை செய்து உள்ளார்கள்
ஆம் நாம் நாட்டில் பல மாறுதல்கள் ஏற்பட்டாலும் ,பல நபர்கள் கோவிலின் தன்மைகளை கெடுக்க ,மாற்றவோ ,அழிக்கவோ ,முற்பட்டாலும் முடிவில் தோல்வியாகி அவர்களிடம் மாற்றத்தை கொடுத்து உள்ளது நிறைய கோவில்கள் இதை நாம் பல புராணம் ,சரித்தரம் படிக்கும் பொழுது அறியலாம் .
எப்படி இந்த கோவில்கள் மனிதர்களுக்கு உதவி செய்கிறது என்று பார்போம் .....
கோவில்களின் அமைப்பு ...
ஒரு ஊற்று ,ஒரு மரம் ,ஒரு மூர்த்தம் என்பதனை பார்த்தோம் இவைகளை விரிவாக பார்க்கும் மூன் விருட்சி சாஸ்திரம் என்னும்
மரம்களை புரிந்து கொள்ளவேண்டும் .......
நம்முடைய நாட்டில் மட்டும் தான் அறிய வகை முலிகை உடைய வனங்கள் உண்டு .
இதில் மனிதனின் வியாதிகளை குணபடுத்தும் மரம் ,தாவரம் நிறைய உண்டு என்பதனை நாம் அறிவோம்
ஆம் நாம் மரம் ,தாவரம் என்று நினைப்பது என்ன என்பதனை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
அவைகள் எல்லாம் மனிதனாக இருந்து சிவா பெருமானை வழிபாடு செய்து அமரர்களாக மாறி இறைவனிடம் தாம் பூமியில் என்றும்
சஞ்சீவியாக இருந்து மனிதர்களுக்கு உதவி செய்ய பூமிக்கு வந்தது ...
சிவனின் பக்தரான ,சைவ முறையாக வாழ்ந்து உயிரை உண்டாக்கும்
மந்திரத்தை சிவனிடம் இருந்து பெற்ற அசுர (சைவர்கள் )குல ஆசான்
சுகர பகவான் நூலை படிக்கும் பொழுது நான் புரிந்து கொண்டது ...
ஆம் , சுக்ரஆசான் சைவர் ,அசுரர்கள் சைவர்கள் சிவ நெறியாளர்கள்
இவர்கள் தான் பூமியில் முலிகை ,செடி ,மரமாக வந்தார்கள் .இதை
சதுரகிரி மலை அந்தரங்க நூலில் அறியலாம்
எந்த முலிகை எப்படி ,எந்த நேரத்தில் ,என்ன சொல்லி பறிக்க வேண்டும்
என்ற விவரம்களை கும்ப முனி சொல்லி உள்ளார்
இந்த மரம்கள் மூலிகைகள் மலை மேல் வளரும் ,அவைகளை அழைத்து வந்து சிவபெருமானுடன் சேர்க்கும் பொழுது அவைகள் மருந்தாக
மாறும் தன்மையுடையதாக ஆகிவிடும் .
இந்த அமைப்பை முதலில் கண்டுபிடித்து அங்கே கோவிலை தேர்ந்து
எடுத்தார்கள் சித்தர்கள் ....
ஆம் சிவ பெருமான் வன நாதர்
அகில்மரம் வாழ்ந்த இடம் என்றால் கண்களுக்கு மருந்து ,இதை போல
தனி தனியாக விவரம்களை தரபோகிறேன் கவனித்து படித்து புரிந்து கொள்ளவும் ..
தல விருட்சம் என்றால் என்ன ?.............

தேகமும் யோகமும்..பகுதி-2 வியோகி வேதம்

https://www.vallamai.com/?p=55784

bout the Author

கவியோகி வேதம்
 has written 13 stories on this site.
kaviyogi.vedham@gmail.com http;//kaviyogi-vedham.blogspot.com/
PART1 

yoga
மனித மனத்தின் உளவியல் (எண்ணங்கள்)_தத்துவத்தை முழுதும் ஆராய்ச்சி செய்த ‘ஹேன்ஸ் சைல்’ என்பார் என்ன சொல்கிறார் தெரியுமா?
முற்கால மனிதர்களைவிடவும் இப்போதைய மனிதர்கள்தாம் சுமைகளை வீணாக மனத்தில் ஏற்றிப் போட்டுக்கொண்டு மகா அவஸ்தைப்படுகின்றோம் என்பார்.அவர் சொல்கிறார்.
“ மனித வாழ்க்கை என்பது எல்லோர்க்கும் இறைவன் அளித்த ஒரு நன்கொடை.
எது இயற்கையோ, எது இயல்பாக நம்முள்ளே மனத்திற்குள் இன்பமாக விதைக்கப்பட்டிருக்கிறதோ, அதை நாம் அழகாக முழுதும் ‘உணர்ந்து’ பிறர்க்குத் தொந்தரவில்லாமல் அனுபவித்தால் அதைவிட நமக்குச் சிறந்த அனுபவம் இருக்க முடியாது.ஆனால் இன்றைய விஞ்ஞான வசதி நிறைந்த உலகில் அதை நாம் அழகாக உணர்ந்து அனுபவிக்கிறோமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எது எதற்கோ வீணாக ஆசைப்பட்டு, வாழ்க்கையைச் சுமையாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம்..இயற்கையை உணரத்தவறுகிறோம்,’ என்பார்..
இந்தப் புதிய கருவி அல்லது புதிய வசதி நமக்கு உண்மையான இன்பம் தருமா? அல்லது நாளடைவில் சுமையாக மாறிவிடுமா? என்று ஆராயாமலே அதை எவ்வளவு விலை கொடுத்தேனும், (பேராசை எண்ணங்களால்!)- வாங்கத் தவிக்கிறோம்.
முதல் டென்ஷன் நமக்கு அப்போதுதான் ஆரம்பிக்கிறது.. சரி, அதை மிக சிரமப்பட்டு, உழைத்து,வாங்கியபின் கொஞ்சநாள் நமக்கு இன்பமாக இருக்கிறது.அது மகிழ்ச்சி கொடுப்பதாக உணர்கிறோம்.
..கருவியா மகிழ்ச்சி கொடுக்கிறது? என்பதை நாம் ஆராய்வதில்லை.. கொஞ்சநாளுக்குப்பின் அக்கருவியே, அல்லது அந்தப் புது வசதியே பல ரிப்பேர்களுக்கு உட்பட்டு நம் நிம்மதியைக் குலைக்கிறது. மீண்டும் டென்ஷன்!
வேறு ஒரு புதிய கருவி, அல்லது வசதி உங்களுக்கு இன்னும் நிறைய இன்பம் தரும் என்று வியாபார தந்திரம் சொல்கிறது.. மனம் சபலப்படுகிறது.வாங்கத் துடிக்கிறது. மீண்டும் டென்ஷனுடன் உழைத்து, காசு சேர்த்து அதை வாங்கி அது புதிய இன்பம் தருவதாக மகிழ்ச்சியில் திளைக்கிறோம். அதுவும் ரிப்பேர் ஆகிறவரை. ஆக, இயற்கையான மகிழ்ச்சி மனத்துள்ளேதான் என்று அறியாமலே காசையும், நிம்மதியையும் தொலைத்து மனத்தில் ஒரு ‘ஒற்றைக்காளை ’
பெரிய வண்டியைச் சுமப்பதுபோல் (நம் கிராமங்களில் பார்த்துள்ளோமே!!) பாரத்தை அனாவசியமாக ஏற்றி, “ என் வாழ்க்கையே ஒரு பெரிய சுமைதாங்கி சார்!,” என்று வீட்டுக்கு வருபவர் எல்லோரிடமும் ‘பீற்றிக்’ கொள்வதில் பெருமையடைகிறோம்..இந்த ஒரு ‘வண்டிச்சுமையை’ இயற்கையினின்றும் விலகி ஏதோ ஒரு மாயையில் சிக்குகிற மாயாமனம் அறிகிறதா, உணர்கிறதா என்றால் இல்லை..
எனக்குத் தெரிந்த ஒரு அறிஞர், நல்ல பேச்சாள நண்பர் இதுவரை ஒரு டெலிபோன் வசதிகூடச் செய்து கொள்ளவில்லை.செல்- கூட வைத்துக்கொள்வதில்லை. ஆனாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலக்கியக்கூட்டங்களில் பேச அழைக்கப்படுகிறார்.நகைச்சுவையும், கிண்டலும், அற்புதமான புதிய புதிய கருத்துக்களும் அவர் பேச்சில் அருவிபோல வந்து கொட்டும்.. அதனால் அவருக்கு எங்கும், எந்த ஊரிலும் பலத்த வரவேற்பு.
எப்படி சார் ஒரு டெலிபோனோ, அல்லது காரோ இல்லாமல் இத்தனைக் கூட்டங்களுக்கும் போய் அனாயாசமாகப் பேசுகிறீர்கள் என்று அவரைக்கேட்டேன்.
இருக்கிற இத்தனூண்டு மீசையைத்திருகியபடி அவர் சொல்வார்;- வேதம் சார்! சொல்லுங்கள்! இந்த செல்.. அல்லது டெலிபோனா போய்ப் பேசுகிறது?. …
நான்..;- ‘இல்லை ஐயா!’..
.. அவர்..;– ‘இவற்றை நான் ஒரு சுமையாகக் கருதுகிறேன்..சார்! அதுகளை வைத்துக்கொண்டால் அனாவசியச் செலவு மாசாமாசம் எனக்கு…எவனாவது சும்மாவானாலும் தொடர்பு கொண்டு வீண் சந்தேகம் கேட்டுக்கொண்டிருப்பான்.என் நேரமும் வேஸ்ட்!.அந்த நேரத்தில் நான் ஒரு புதிய நூலைப் படிப்பேனே! ஏராளமான கருத்துள்ள நூலாக நான் தேர்ந்தெடுத்துப்படிப்பதால்தானே, சுவையுறத் தொகுத்துச் சொல்வதால்தானே சார்!என்னைக் கூப்பிடுகிறார்கள்..இல்லையா? ஆர்வமுள்ளவர்கள் அவசியம் நேரில் என்னிடம் வருவார்கள். ஒப்புதல் தருவேன்.காரில் என்னை அழைத்துப்போனால்தான் பேசுவேன் என்பேன்.பேசவோ குறைந்த கட்டணம் தான் வாங்குவேன்.
அதனால் மற்றவர்களைவிட என்னை அழைத்துப் பேசவைத்தால் அவர்களுக்கும் லாபம். தொலைபேசித்தொல்லைகட்கு நான் பணம் கட்டாததால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு நேரடித் தொடர்பு கிட்டுகிறது.. நெருக்கம் அதிகமாகி எனக்கு இப்போ தமிழ்நாடு முழுதும் ஏராளமான நண்பர்கள்.
ஆக நான் விஞ்ஞானக் கருவிகளைச் சுமையாகக் கருதுவதால் அவற்றிலிருந்து ஒதுங்கி, தேவையானது மட்டும் வைத்துக்கொண்டு(அதாவது டி.வி மட்டும் அவர் வீட்டில் உண்டு- அதுவும் மனைவிக்காக,) காசையும் மிச்சப்படுத்துகிறேன். நேரத்தையும் கூட….
என்னை அழைக்க வருபவர்கள் இயற்கையான உண்மையான இலக்கியத் தாகத்துடன் வருவார்கள். அவர்களை நான் ஏமாற்றுவதேயில்லை.. என்ன வேண்டுமோ கொடுப்பேன். இதனால் நான் எக்காலத்திலும் டென்ஷனை மனத்தில் ஏற்றிக் கொள்வதில்லை.. என்மனைவியும் அப்படித்தான். இப்போதும் அவள் மிக்ஸி என்றால், க்ரைண்டர் என்றால் எத்தனை கிலோ கனம்? எவ்வளோ செலவு? எவ்வளோ மின் ஆபத்து?என்பாள்.
நீங்களே பார்த்தீர்கள் அல்லவா? அவள் பக்கத்து வீட்டுக்காரிகளை விட கட்டு குண்டாய் இருக்கிறாள். ஆரோக்கியமாயும் உள்ளாள். ஒரு தலைவலி என்றுகூட அவள் படுத்ததில்லை. என்று சொல்லி கடகட எனச் சிரித்தார்… உண்மை !அவர் வீட்டில் இன்னும் கிராமத்திலிருந்து கொண்டுவந்த அயனான அம்மியும், ஆட்டுக்கல்லும்தான்.
….அவரது பதிலைக் கேட்டு ஆச்சர்யமும், பலத்த மகிழ்ச்சியும் அடைந்து என்னை அறியாமலே ‘சப்பாஷ்’ என்று கைதட்டினேன்… தெரிகிறதா இப்போது? அவர் உண்மையாக இயற்கையுடன் கைகோர்த்துக்கொண்டே வாழ்க்கையை மிக அழகாக, அமைதியாகக் கொண்டுபோகிற தூய தமிழ் அறிஞர் என்று..! அதனால் வீண் தொந்தரவுகளை அவர் விலை கொடுத்து வாங்குவதில்லை.. அவரை நெருங்கிய நண்பர்கள் ‘சுமை வேண்டா சுப்பன்’ என்று ரகசியமாக அழைப்பர்.
… இவ்வளவு ஏன்? அண்மையில் மறைந்த திரு. காஞ்சிமகான் கூட ஒரு காரையோ, செல் போனோ பயன்படுத்தியதே இல்லை.. அவரிடம் பேசணும் என்றால் பக்தர்கள் நேரில்தான் போய்ப் பேசுவர்.
எங்கு போக வேண்டும் என்றாலும் அவர் கால்நடையாகத்தான் செல்வார். அந்த அளவுக்கு அந்த மகான் இயற்கையோடு கலந்து வாழ்ந்திருந்தார்…இறுதிவரை.
.. உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? நம் எல்லோரது மனப்பான்மையையும் உற்றுக்கவனித்தீர்களானால், சுமைகளை மனத்தில் ஏற்று வீணாக டென்ஷன் படுகின்றோம். அதேசமயம் இந்த டென்ஷனை அனாவசியமாகப் பிறர்மேலும் திணிக்கின்றோம்.. சொகுசுக்கு ஆசைப்பட்டு என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிவந்து போகிறவர் வருபவர் எல்லோரிடமும் கொஞ்சநாள் காட்டிப்பெருமைப்பட்டுக்கொண்டிருந்தார்..வாங்கிய பிறகு அதை எப்படி முறையாகப்பயன்படுத்துவது என்று தெரியவில்லை.. ஓரமாய் வைத்துவிட்டார்!அவரது மனைவியும் வீண்செலவு செய்துவிட்டீர்களே!
சரியான புடவை இல்லாமல் பழசைக்கட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறேனே. எனக்கு இரண்டு நல்ல புடவையாவது நீங்க அநாவசியமாகச் செலவழித்த காசில் எடுத்துக்கொடுத்திருக்கலாம்.. மனசில ஒரு சந்தோஷமாவது இருந்திருக்கும் என்று அடிக்கடி குத்திக்காட்டினாள்.
அவ்வளவுதான்! அவருக்கு டென்ஷன் ஏறிவிட்டது. பலநாட்கள் அவரால் நிம்மதியாகவே இருக்கமுடியவில்லை. எப்படியாவது அந்த வேண்டாத ஆண்ட்ராய்டு செல்லை வேறு ஒருவர்க்கு கொஞ்சம் விலைதள்ளியாவது விற்கப் படாது பட்டார்.அது அடுத்த டென்ஷன்… கடைசியில் அவரது அண்ணன் மகனே{கல்லூரியில் படிப்பவன்} ஒரு விலை சொல்லி எடுத்துக்கொண்டபின் தான் அவர் மனம் அமைதியுற்றது. ஆக தான் பட்ட அவஸ்தையை இன்னொருவரிடம் தள்ளினால்தான் மனம் நிம்மதி அடைகிறது.… அதனால்தான் ‘ஸைல்’ சொல்கிறார்.
“உள் மனத்திலிருந்தோ, அல்லது பிறர் மனம் மூலமாகவோ வருகிற ஒரு வேண்டாத, கெட்ட தூண்டுதலே மன அமைதியை இழக்கச் செய்து டென்ஷன் என்னும் பரபரப்பு எண்ணம் உண்டாகிறது.அது தற்காலிகமாகவோ இல்லை நிரந்தரமாகவோ கூட இருக்கலாம்.ஒன்று ..ஜாக்கிரதையாக இருந்து ‘அது’ ஏற்படாமல் உங்கள் மனத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.. இல்லையாயின் வந்தபின் பிராணாயாமம், தியானம் மூலம் நிச்சயம் அதிலிருந்து விடுபடுங்கள்.
இறைவன் கொடுத்த அழகிய சுதந்திர மனம் என்னும் பாத்திரத்துள் நீங்களே வேண்டாத குப்பையைப் போட்டீர்களாயின், நீங்களே தான் இறைத்தியானம் மூலம் அதனை வெளியே எடுத்து எறியவேண்டும்’ என்கின்றார்.எவ்வளவு உண்மையான பாஸிடிவ் ஆன உபதேசம் பாருங்கள்!
… எனவே அவர் சொல்கிற பிரகாரம் வெளித்தூண்டுதல்கள் ஆன அதிக வெய்யில், அதிகக்குளிர், அதிக மழை அல்லது பிறர் மனம் மூலம் வருகிற ‘ஸ்ட்ரெஸ்’ (மன அழுத்தம்) போன்றவற்றை மனோபலம், தியானம், எப்போதும் சாந்தமான எண்ணங்கள் முதலியவற்றால் போக்கிக்கொள்வோம்.அதே சமயம் நாமே வீணாக சஞ்சல மனத்தால் உண்டாக்கிக்கொள்கின்ற கோபம், காமம், பேராசை,அதீத பாசம், ‘தான்’ எனும் அகந்தையின் மூலம் செய்யும் வேண்டாத செய்கைகள் இவற்றை மகான்களின் உபதேசம், அவர்தம் வரலாற்றை எப்போதும் படித்தல்,நல்ல நல்ல இலக்கியநூல்களை, கவிதைகளைப் படித்து அனுபவித்தல் போன்றவற்றால் மனம் என்னும் நல்ல தெய்வீகப்பாத்திரத்துள் பிரகாசத்தை(தெய்வ ஒளியை)ஏற்றிவைப்போமாக!. இவை நாம் யோகா மற்றும் தியானம் கற்கும் முன் நெஞ்சில் கொள்ளவேண்டிய பயிற்சி முறை.. சரியா?
..(தொடரும்)

Friday, August 9, 2019

Tiger Hill in Omallure Kerala, India



Tiger Hill in Omallure. MAHASAMADHI (Kerala, India) about my Param guru and his Mahasamadhi in 1986 year: "in the Tamil month Panguni star Pururuttati, April 6, 1986 year in your astrological 723-first birthday, in front of many admirers of Bhagavan realized MAHASAMADHI. In ancient scriptures says that no one can achieve Samadhi in your birth month. Brahmananda surpassed and these restrictions, thus showing his boundless strength. 
He sat in his room in padmasane and pranayama. He then said Džanardanu: "I'm leaving", and handed him a mantra. Brahmananda bequeathed to people chanting this mantra: OM NAMO ŚIVAYA NAMAH OM SHIVA OM NAMO NAMAH PRABHAKARAJÂ ŚIVAYA OM SHIVA OM NAMO NAMAH PRABHAKARAJÂ ŚIVAYA OM SHIVA OM SHANTI, SHANTI PRABHAKARAJÂ, ŠANTIHI Then above his head a loud click, a strong vibration, and the light came out of his body through the top of the head. In the two years prior to the MAHASAMADHI of Swami warned of this moment. 

A realization of Brahmanandy manifested itself as the pervasive body of wisdom (jnana-DEHA), a body of pure elements (pranava-DEHA) and fully implemented throughout the body (Siddha-DEHA), where he had several at different times in different places.
One of the bodies he has implemented in Omallure. After his MAHASAMADHI has such a body of up to sixty centimetres. It is not subject to decomposition and emits very strong vibrations, purifying the consciousness of everyone who is not only the temple but also at a large distance from it. Even today, after ten years, his body still smells sweet.
Swami Brahmananda said: Samadhi is not death, but just a day when I'm gone ".
On this day, Swami personally prepared the food, distributed it to their fans and become immersed in Samadhi of light. Eyewitnesses of the events described various incredible phenomena that occur in the time before their eyes. They saw suddenly emerged a hurricane. Seen as lightning and clouds have delayed the whole sky and as electricity went out. Wind power has destroyed all incredible, and lightning flashed all over the place. All of this took place in unusual silence − neither people nor animals don't make no sound ... 

Swamiji promised to be back in three bodies and said that perhaps in his next birth it will come as a Yogini.
He bequeathed the Tiger Hill as a shrine for all lovers of all persuasions. All have equal rights in this holy place. Any one can worship and revere the place, offering him gifts and engaged in puja. It is believed that visiting this place at least once already will never forget and will receive an infinite blessing. Each month devoted admirers of Brahmanandy hand out food on Tiger Hill. 

By the way, in March 2015. -It is in this location will be opening his Museum, the pilgrimage program and workshop on yoga. If anyone is interested write to lichku Smiley "smile". Om Shanti!

Wednesday, July 31, 2019

Who is God? Siva? Yogi? Bhogi?

Q. Who is God?
A. It's not "Who" but "What" is God?
Q. Okay! Then "What" is God?
A. "That" is God!
Q. Who is That?
A. That is exactly "What" is God and not "Who".
Q. Now I am confused?
A. Good. That's what happens, when you try to understand "That", equating it with a "Who" and that too with your intellect.
Q. Why not?
A. Intellect is limited; how can it fully understand "That" which is limitless?
Q. Then how to understand?
A. By becoming one with it.
Q. How to become one with it?
A. By becoming aware of it.
Q. How's that possible?
A. By knowing that you are no different from it.
Q. When that happens, what happens?
A. What happens when salt or sugar is dropped in Water?
Q. It dissolves!
A. Indeed. You too shall dissolve and become a part of it.
Q. Which is?
A. Tat Twam Asi! (You are That!)
~ The Mirror simply reflects what's shown; it never changes with what's reflected.



Q. Who is Siva?
A. The indivisible and invisible whole.
Q. What is Jiva?
A. The divisible and visible parts of the whole.
Q. What's their connection?
A. The same that's there between a drop of Ocean and the Ocean.
Q. Is Siva an Ocean?
A. An ocean of all Jivas, which culminates in Siva.
Q. If Siva is the Ocean, then who is Shakti?
A. The power to make the Ocean churn out waves.
Q. With that what happens?
A. With each wave a new Universe is born.
Q. Where will it all go?
A. When the force is centrifugal, it's creation; When centripetal it's dissolution.
Q. What is the basis of all this?
A. Siva and Shakti!
Q. Where is the basis of all this?
A. Sri Chakra!
Q. What is this Sri Chakra?
A. A blue print of the Universe.
Q. Where to find it?
A. There where the deity resides.
Q. Where would it be?
A. In a temple of course.
Q. Which temple?
A. The Temple of Human Body.
Q. What?
A. The perfect Sri Yantra, is the body itself. In it, lies the gateway to another perfect world.




Q. Who is a Yogi?
A. The One who has controlled his Body, Mind and Breath.
Q. Who is a Bhogi?
A. The One who is controlled by Body, Mind and Breath.
Q. Who is a Drohi?
A. The One who has misused His Body, Mind and Breath.
Q. Who is a Devotee?
A. The One who is trying to control His Body, Mind and Breath.
Q. What is common between the above four?
A. The above four has all the above three, viz. Body, Mind and Breath in common. What they do with it, makes the difference.
Q. How is the Body of the four?
A. The Yogi's body is steady and light; the Bhogi's body is flabby and heavy; the Drohi's body is painfully famished by constant misuse.
Q. How is the Breath of the four?
A. For the Yogi, it's like steady candle flame in a windless night. For the Bhogi, sometimes it's steady, and at other times flickering. For the Drohi, it's constantly, in the fear of being extinguished.
Q. How is the Mind of the four?
A. The Yogi's mind is at peace; the Bhogi's mind is trying to find peace; the Drohi's mind is in pieces.
Q. You haven't told anything about the Devotee?
A. Yes. Because He has a choice between the three and can be whatever likes to be.

Tuesday, July 30, 2019

சமயகுரவர் & சந்தான குரவர் வேறுபாடுகள் : ஒரு பார்வை

சமயகுரவர் நால்வர் 

சந்தானகுரவர் நால்வர்

சமயகுரவர் & சந்தான குரவர் வேறுபாடுகள் : ஒரு பார்வை

சைவத்தில், சமயகுரவர் சந்தானகுரவர் என ஆசாரியர் இருவகையர். ஒவ்வொரு வகையிலும் நால்வர். சமயகுரவரும் நால்வர். சந்தானகுரவரும் நால்வர்.

சமயகுரவர் நால்வர் 
1. திருஞானசம்பந்தர் 
2. திருநாவுக்கரசர் (அப்பர்)
3. சுந்தரமூர்த்திகள்
4. மாணிக்கவாசகர் 


சந்தானகுரவர் நால்வர்
1. மெய்கண்டார்
2. அருணந்திசிவம்
3. மறைஞானசம்பந்தர்
4. உமாபதிசிவம்

•சமயகுரவர் நால்வரும் ஒருவருக்கொருவர் சீடர் அல்ல.
நால்வரும் தனித்தனி ஆசாரியர்கள்.

•சந்தான குரவர் நால்வரும் ஒரவருக்கொருவர் சீடர்

• சமயகுரவர்கள் தோத்திரங்களை அருளினார்கள்.

•சந்தான குரவர்கள் சாத்திரங்களைச் செய்தார்கள்

• சமயகுரவர்களால் திருமுறைகள் தோன்றின.

•சந்தானகுரவர்களால் சித்தாந்த சாத்திரங்கள் தோன்றின.

• சமயகுரவர்களால் கோயில்கள் விளக்கம் பெற்றன.

•சந்தானகுரவர்களால் மடங்கள் உண்டாயின

•சமயகுரவர்கள் கோயில் கோயிலாக நாடெங்கும் சென்று பாடினார்கள்.

•சந்தானகுரவர்கள் மடங்களில் இருந்துகொண்டு பாடஞ்சொன்னார்கள்

•சமயகுரவர்கள் பாடியருளிய திருமுறைகள் இன்றும் திருக்கோயில்களில் இறைவன் திருமுன்னர் வழிபாட்டுக் காலங்களில் ஒதப்பெறுகின்றன

•சந்தானகுரவர்கள் செய்தருளிய சாத்திரங்கள் மடங்களில் பாடங்சொல்லப்பெறுகின்றன.

•சமயகுரவர்கள் கோயில்களில் வழிபடப்பெறுகிறார்கள்

•சந்தானகுரவர்கள் மடங்களில் வழிபடப்பெறுகிறார்கள்

•சயமகுரவர் திருவுருவங்கள் நின்றகோலத்தில் விளங்கும்.

•சந்தானகுரவர் திருவுருவங்கள் அமர்ந்தகோலத்தில் விளங்கும்..


thank fb friend: 
Ankhamuthu Kumar

Yog is the True Guru

Once I was lecturing at the Oxford University, when a journalist asked me, “What is yog?” I told him, “Yog is guru”. He replied, “If you talk like this, we will not be able to publish this article, because in this part of the world, we do not believe in gurus.” I could not help but smile.  I told him, “We are one billion Indians, we can export yog in a billion ways to you, but if you ask me about yog, there is only one. Yog is guru. You and I can do nothing to change that.”
This is a problem that one faces not just in the West, but in this yug. I was asked recently, “Why is India, which boasts of great discoveries and inventions in the past, today a ‘third-world’ country? What happened to the richness of our culture and advancement of our sciences?” It disappeared with disrespect of the guru. Start respecting him, and it will be back.
Take a look at anyone from the age of 18 to 80, across nations— hardly anyone is willing to accept the guru. In the guru’s absence, neither the young nor the old know where they are headed. You switch on the television these days, and will find all sorts of yantras and mantras being sold on the idiot box; actors and actresses endorse the products, and the sellers make strange movements with their hands, claiming the ability to heal a person on the other side of the screen just by asking his name. Such dramas in the name of yog and the Vedic sciences create doubt in the minds of the masses about the shakti of the guru.
Let me explain who the ‘guru’ is. He is not someone in a fancy robe, with an impressive beard, who dances around trees and promises to cure illness by breathing like a monkey; of course, after emptying your pocket. That is an entrepreneur, who has devised an innovative marketing strategy to acquire assets. A guru is the giver of gyan, one who puts you on the path of experience and takes you beyond the realm of the five senses. Someone who is himself tied to the pleasures of the senses cannot take you beyond—the ultimate purpose of yog.
Vishvamitra created a parallel universe; his guru was Agastya Muni. Rama defeated the mighty Ravan, his guru was Rishi Vashishta. Hanuman single-handedly put Ravan’s Lanka to fire and carried the entire mountain of life with the sanjeevani buti and his guru was Surya Dev. Krishna gave the gyan of Gita, his guru was Sandeepan Rishi. Bhishma was the greatest warrior of his times, blessed with death at will; his guru was Lord Parshuram. Arjuna became the greatest archer under the sanidhya of his guru, Dronacharya. The guru of the devas is Brihaspati; the guru of asurs, Shukracharya. Even Adi-shakti, from whose womb manifested everything, created a guru—Param Guru Shiva. Thus the greatest of kings, the greatest of sages and even Ram and Krishna, who were gods, had gurus. Such is the importance of the guru.
A guru literally carries the shishya on a spiritual journey. One should be careful of calling someone a guru, because what you follow, is what you become. Watch for the traits of a yog guru: one who does not charge fees, whatever he says happens, and who is sthir in the five yamas. When you come in the guru’s company, you too start exhibiting his traits—disease disappears, you feel healthy and glowing, your thoughts manifest clearly, you start getting the experiences of the subtler worlds and a state of detachment and bliss sets in. A guru is not just the physical body; it is an energy through which gyan flows into the shishya, yet it is important for the guru to be in body. You get a guru as per your karmas and shreni, and it is not necessary that who was the guru of your forefathers will be your guru as well. Whoever can transfer the experience of yog to you is your guru. So my suggestion is, look for a guru, give the subject priority and you will be called on board on this beautiful journey called yog.
Yogi Ashwini is the spiritual head of Dhyan Ashram.
Thank: https://www.newindianexpress.com/


Thanks & Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்


                 
ஓம் சிவசிவ ஓம்
Be Good & Do Good