Monday, September 26, 2016

பித்ரு என்றால் யார் PITRU POOJA IN TAMIL


MUNNOR VAZHIPAADU ENRAAL ENAA? PITRU POOJA IN TAMIL

பித்ரு என்றால் யார் என்று தெரியுமா குழந்தைகளே?  பித்ரு என்றால் இறந்து விட்ட - இறைவன் திருவடி அடைந்து விட்ட நம் முன்னோர்கள்  தான் பித்ருக்கள் என்று கூறுகிறார்கள்.
"தாத்தா தாத்தா தமிழில் இந்த பித்ரு என்பவர்களை எப்படி அழைக்க வேண்டும்" ஆவலுடன் கேட்டாள் பேத்தி ஹரிணி.
ஹரிணி, அவர்களை "முன்னோர்கள்" என்றும் அழைக்கிறார்கள்.  திருவள்ளுவர் போன்று விஷய ஞானம் உள்ளவர்கள் "தென்புலத்தார்" என்றும் அழைக்கிறார்கள்.
"தென்புலத்தார் என்றால் நாம் அவர்களை எப்படி சந்தோஷப்படுத்த வேண்டும்" தாத்தா கேட்டாள் இன்னொரு பேத்தி ஐசு.
அவர்கள் கடவுளா - சாமியா? என்று கேட்டாள் ஹரிணி.
"இல்லே ஐசு - நான் படித்து இருக்கிறேன் - மாதா, பிதா, குரு, தெய்வம் என்று.  இதிலே பித்ரு என்றோ தென்புலத்தார் என்றோ வரல்லியே" என்றான் அர்ஜுன்.
ஆமாம் இவர்கள் தெய்வ நிலையை அடையவில்லை.  பித்ரு லோகம் என்பது தெற்கிலே உள்ளது.  பிரம்ம லோகம் என்பது வடக்கிலே உள்ளது.  எனவே தான் இவர்களைத் தென்புலத்தார் என்று கூறுகிறோம்.  நமது முன்னோர்களை தென்புலத்தில் இருந்து வட புலத்திற்கு அழைத்துச் செல்வது மனிதனாகப் பிறந்த நமது கடமை.  ஒரு வகையிலே நன்றிக் கடன் என்று கூடச் சொல்லலாம்.  எனவே தான் வள்ளுவரும், "நன்றி மறப்பது நன்றன்று" என்று சொல்லி இருக்கிறார்.

MUNNOR VAZHIPAADU - PITRU POOJA - NANRIKKADAN
"என்ன பித்ரு பூஜை என்பது நன்றிக்கடனா?" என்றான் சூரியா.  ஆமாம்டா.  நன்றிக்கடன்.  நாம் கருவில் இருக்கும் போது நாம் தாயின் குருதியில் இருந்து நீர் என்னும் உயிர்ப்போருளை வாங்கி இருக்கிறோம்.  மூச்சு விட உயிர்க்காற்று வாங்கி இருக்கிறோம்.  போதிய அனல் அதாவது தீ இருந்ததால் உயிர் பிழைத்து இருக்கிறோம்.  பூமியில் இருந்து விளையும் பொருளைத் தாய் சாப்பிட்டதால் தான் நாம் உயிர் சத்து பெற்று வளர்ந்து இருக்கிறோம்.  இப்படி இயற்கை நமக்கு கருவில் இருக்கும் போதே பல உதவிகளைச் செய்து இருக்கிறது.  அதைப் பெறுவதற்கு பெற்றோர் உதவி புரிந்தனர்.  அதனால் தான் நாம் பிறந்தோம்.  எனவே நம் முன்னோர்களுக்கும் இயற்கைக்கும் கடன் பட்டு இருக்கிறோம்.  கடன் வாங்கினால் அடைக்க வேண்டும் அல்லவா.  நாம் கடன் வைத்து இறந்தால் நமது சந்ததி அதைச் சுமக்க வேண்டி வரும்.  சுமக்க முடியாத கடன் சேர்ந்தால் அந்த குளத்தில் இன்னல்கள் - துயரங்கள் அதிகம் வரும்.  எனவே கடனைத் திருப்பி செலுத்த வேண்டும்.  அமாவாசை அன்று - ஆடி அமாவாசை அன்று - மகாளய அமாவாசை அன்று இப்படி சில குறிப்பிட்ட நாட்களில் அவர்கள் நம்மிடம் வருவார்கள். நாமும் கடனைச் செலுத்த வேண்டும்.  பெரிய விடயம் அல்ல.  எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.  மரியாதையை கட்ட வேண்டும்.  வணங்க வேண்டும்.  நல்லது செய்யுங்கள் என்று வேண்ட வேண்டும்.  "ஏன் தாத்தா - இப்படி செய்ததாக நமது முன்னோர்கள் பாட்டுகளில் எழுதி வைத்து இருக்கிறார்களா?" என்றான் சூரியா.  ஆமாம் நான் கூட புறநானூறு படிக்கும் போது படித்து இருக்கிறேன்.

"அறப்போர் புரிந்த அந்நாட்களில், பசு, பெண்டிர் ஆகிய பலரைக் கொல்லக் கூடாது. இந்த வரிசையில், இறந்தோருக்குச் செய்ய வேண்டிய பிண்டோதககிரியை செய்ய பிள்ளை பெறாதவர்களையும் கொல்லக் கூடாது.என்று பழைய தமிழகத்தில் - பக்ஹ்ற்றுளி  ஆறு ஓடிய தமிழ்க் தேசத்தை ஆண்ட பாண்டியன்
பல் யாக சாலை முது குடுமிப் பெரு வழுதி அவ்வாறு இருந்தான் என்று புறநானூறு 9 கூறுகிறது.
” தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இருக்கும்
பொன் போல் புதல்வர் பெறாதீரும் ..”
புறநானுறு 234 -இல் வேள் எவ்விக்கு, அவன் மனைவி பிண்டம் வைத்ததாக குறிப்பு வருகிறது.
“தன்மனார் காதலி புன்மேல் வைத்த இச்சிறு பிண்டம்” என்று மனைவியைக் காதலி என்று சொல்லி, அவள் பிண்டம் வைத்ததாக வந்துள்ளது."  இத நான் சொல்லல்லே.  ஜெயஸ்ரீ சாரநாதன் என்று ஒரு அறிஞர் சொல்லுகிறார்.  அவர் பல விடயங்களைப் படித்தவர்.  அவருக்கு வான சாத்திரம் தெரியும். சாதகம் தெரியும்.  தமிழ் இலக்கியம் தெரியும்.  வடமொழி இலக்கியம் தெரியும்.  இப்படி கொள்ளை விடயம் அவருக்குத் தெரியும்டா.  அவரு தமிழ் ஹிந்து என்கிற வலைத் தளத்தில் எதை எல்லாம் நல்ல தமிழில் - எல்லோருக்கும் புரியிர மாதிரி சொல்றார்டா.  நான் போன வாரம் படித்தேன்.  உங்களுக்கு சொன்னா நீங்களாவது புரிஞ்சிகிட்டு இந்த தாத்தாவுக்கு மரியாதையை செய்வீங்களே என்று உங்களிடம் சொல்லுகிறேன் என்றார் தாத்தா. "ஏன் தாத்தா மத்த மதங்களிலே இப்படி முன்னோர்களைக் கொண்டாடுகிறார்களா?" என்றான் அர்ஜுன்.   டேய்.  நாம் தான் முன்னோர்களுக்கு மரியாதையை தருவது இல்லை.  அமெரிக்காவில் எல்லாம் கல்லறை எப்படி இருக்கு தெரியுமா.  ரொம்பத் தூய்மையாக இருக்குடா.  அவங்களும் கல்லறை நாள் என்று ஒன்று கொண்டாடுகிறார்கள்.  அன்றைக்கு பல கிறித்துவ நாடுகளில் விடுமுறை கூட விடுகிறார்கள்.  நான் இதை வலைத் தளத்தில் படித்து இருக்கிறேன்.  "தாத்தா.  காட்டுங்க அந்த வலைத் தளச் செய்தியை" என்றான் அர்ஜுன்.  காட்டினேன் அவனுக்கு.  நீங்களும் படியுங்கள்.  தெரிந்த உறவினர்கள் - நண்பர்கள் என்று மறைத்த மாமனிதர்களுக்கு மரியாதையை செலுத்தும் தினம் என்று கொண்டாடப் படுகிறது.  கல்லறைத் தூய்மை செய்து அவர்களுக்கு வேண்டிய - பிடித்த பண்டங்களை வைத்து திருநாளாகக் கொண்டாடுகிறார்கள்.  நமது ஊரிலும் கொண்டாடுகிறோம்.
Day of the Dead (Spanish: Día de los Muertos), is a holiday celebrated in Latin America and by Latin Americans living in the United States and Canada. The holiday focuses on gatherings of family and friends to pray for and remember friends and family members who have died. The celebration occurs on November 2 in connection with the Catholic holidays of All Saints' Day (November 1) and All Souls' Day (November 2). Traditions connected with the holiday include building private altars honoring the deceased using sugar skulls, marigolds, and the favorite foods and beverages of the departed, and visiting graves with these as gifts. Due to occurring shortly after Halloween, the Day of the Dead is sometimes thought to be a similar holiday, although the two actually have little in common. The Day of the Dead is a time of celebration, where partying is common.
தாத்தா- தாத்தா இந்த திருநாளை முதலில் கொண்டாடியவர் யார் தாத்தா? என்றான் சூரியா.  நாளைக்குச் சொல்கிறேன் என்றேன் நான்.  உங்களுக்கும் தான்.

MUNNOR VZHIPAADU - PITHRU POOJA MUTHALIL SEYTHATHU YAAR
முதன் முதலில் இந்த முன்னோர் வழிபாட்டை செய்தவர் ஈசன் தான்.  வராக அவதாரம் எடுத்து பூமியை காப்பாற்றி வெளியே கொண்டு வரும் போது நடைபெற்ற சம்பவம் என்று சொல்லப்படுகிறது.  இது மகாபாரதத்தில் வருகிற ஒரு கதை தானாம்.  நான் படித்ததை அப்படியே தருகிறேன்.  குழந்தைகளே நீங்களும் அதிகமாகப் படிக்க வேண்டும்.  இப்போது நமக்கு உள்ள வசதி இணையதளங்கள்.  எராளமாக உள்ளன.  நானும் அப்படி தமிழ் ஹிந்து தளத்தில் சுற்றியபோது கிடைத்த தகவல் தான் இது.  அதிலே ஜெயஸ்ரீ சாரநாதன் என்று ஒருவர் கட்டுரை எழுதி இருந்தார்.  அந்தக் கட்டுரையின் பின்னூட்டத்தில் தான் எவ்வளவு விபரங்கள்.  நீங்கள் எல்லாம் படிப்பதில்லை.  அதனாலே தான் நான் புரிந்து கொண்ட வரை உங்களுக்கு சொல்கிறேன்.  சரியா?  "தாத்தா நாங்களும் இனி படிப்போம் தாத்தா" உறுதி அளித்தார்கள் குழந்தைகள்.  சரி கதைக்கு வருவோம். படியுங்கள்.
தெய்வமே முதல் பித்ரு காரியம் செய்தவர் என்று மகாபாரதம் (சாந்தி பர்வம்- 355 அத்தியாயம்) கூறுகிறது. நர-நாராயணர், நாரதருக்குச் சொல்வதாக இது வருகிறது.
வராஹ அவதாரத்தில் பூமியைக் கடலிலிருந்து வெளியே கொண்டுவந்த போது, மத்தியானம் வந்து விட்டது. மத்யாநிஹம் செய்ய வேண்டி வராகர் ஆயத்தம் செய்த போது, தெற்றுப் பல்லில் கொஞ்சம் மண் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். தலையை ஆட்டி அவர் உதறின போது அவை மூன்று உருண்டைகளாக பூமிக்குத் தென்புறத்தில் போய் விழுந்தன. அவையே மூன்று தலைமுறை பித்ருக்களாக ஆகினர். அவர்களுக்கு வராகர் பிண்டம் வைத்து பித்ரு காரியம் செய்தார். பித்ரு காரியத்தை ஸ்தாபித்தவரும் அவர்தான். அதை நடத்தி உலகுக்கு வழி காட்டியரும் அவர்தான்.
சரீரம் இல்லாதவர்களுக்குப் பிண்டம் தர வேண்டும் என்றும், பித்ருக்களுக்குத் தருவது தன்னையே அடைகிறது என்றும் (அவரே இயற்கை, எல்லாம் அவரிடமே சென்று சேர்க்கிறது) இன்ன பிற நலன்களையும் வராகர் எடுத்துரைத்தார்.

அதனாலே தான் - அதாவது பூமா தேவியை வராகர் பாதுகாப்பாக கொண்டு வந்ததால் நாம் பூமியில் வசிப்பவர்கள் வராகரின் செயலை தொடர்ந்து செய்கிறோம்.  சரியா?  "தாத்தா முன்னோர்களை வேறு சமயங்களில் நாம் கொண்டாடுகிறோமா? "  என்றான் அர்ஜுன்.  சரியான கேள்வி.   திருமண நிகழ்சிகள் நடக்கும் போது நாந்தி என்று ஒரு நிகழ்ச்சி வரும்.  அதில் நாம் நமது முன்னோர்களை அழைத்து மரியாதை கொடுக்கிறோம்.  சில பகுதிகளில் முதலில் உணவு ஊட்டும் போது இப்படி மரியாதை செய்கிறார்கள்.   தாத்தா ஒரே சாமிக்கு எவ்வளவு பேர் வச்சிருக்காங்க ஏன் தாத்தா.  டேய் காது ஒண்ணு தான்.  பொத்தாம் பொதுவா சொல்றோம்.  ஆனா ஆங்கிலத்திலே OXYGEN, NITROGEN, HYDROGEN, CARBONDIOXIDE  என்று எவ்வளவு பேர் சொல்லி சொல்றாங்க.  அந்த மாதிரி தான் ஒவ்வொரு வேளை செய்த போது இறைவனுக்கு ஒவ்வொரு பேர்.  இந்த வராகர் கதையைத் தான் பாரேன்.
பூமி எங்கிலும் நீர் நிறைந்திருந்த போது, நிலப் பகுதிகளை வெளியே கொண்டு வந்த அந்த இறை சக்தி, வராஹம் எனப்பட்டது.குகை போன்ற பூமிக்குள் நுழைந்து, அதை வெளியே கொண்டு வந்ததால் அந்த தெய்வம் கோவிந்தன் எனப்பட்டது. கோ என்றால் பூமி. அவிந்தம் என்றால் அதை அடைந்து வெளிக்கொணருதல் என்று பொருள். கோவிந்தா என்றால் இருளாகிய குகையிலிருந்து, நம்மை வெளிக் கொணருபவன் என்று பொருள்.பூமியை வெளியே கொண்டு வந்தவுடன் உலகத்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தர்மத்தை உபதேசிக்கவே அவர் வ்ரிஷாகபி எனப்படுகிறார். அவர் சொன்ன முதல் மற்றும் முக்கிய தர்மம் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்பதே.


KOODAL AZHAGAR - KIRUTHAMAAL RIVER - FIRST AVATAAR OR VISHNU - PANDIYAN SYMBOL IN FLAG - REG
"தாத்தா பித்ரு பூஜை - முன்னோர் வழிபாடு இதெல்லாம் ஆரியர்கள் நம்மிடம் விதைத்த விதை என்னு என் நண்பனோட அப்பா சொல்றாரே தாத்தா.   உண்மையா?"
போடா போ இதெல்லாம் தேர்தலில் வாக்கு வாங்க கட்சிக்காரர்கள் பாடுகிற பாட்டு.  பகுத்தறிவுவாதி என்று பறைசற்றிக்கொள்வான்.  ஆனால் பகுத்து அறிய மாட்டான்.  உதரணத்துக்கு வருவோம்.  நாம் இப்போது மதுரையில் இருக்கிறோம்.  மதுரையைப் பத்தி நமக்குத் தெரியுமா.  பல விடயங்கள் தெரியாது.  மனு தர்மம் என்று சொல்வார்கள்.  மனு என்பவன் யார்?  ஒரு பெரிய சுனாமி வந்து உலகம் அழிந்த பிறகு முதன் முதல் தலையெடுக்கும் தலைவன் பெயர் தான் மனு.   அப்படி ஒரு மனு தான் சத்திய விரதன்.  அவன் யார் தெரியுமா.  ஒரு பாண்டிய மன்னன்.  இதை நான் சொல்லவில்லை.  பாகவதம் என்று திருமால் புகழ் பாடும் கதையில் சொல்லப்பட்டு உள்ளது.  இந்தா பாகவதம் பாண்டவர்கள் தலைமுறையில் வந்த பரீட்சித்து மாமன்னனுக்கு சொல்லோப்பட்டது.  அதிலே திருமாலின் முதல் அவதாரம் பற்றி வருகிறது.  திராவிட நாட்டில் ஒரு மன்னன் கிருதமால் நதிக்கரையில் இறைவனைத் தோலும் போது இறைவன் சிறிய மீன் வடிவத்தில் அவன் கையில் வருவதாகவும் பின்னர் குளத்தில் விட்டால் ஒரே நாளில் குளத்தை அடிக்கிற அளவுக்கு பெரியதாக ஆனதாகவும் பின்னர் கடலில் விட்டதகாவும் அங்கிருந்து ஏழு நாட்களில் உலகம் அழிந்ததாகவும் அந்தக் கதை தொடர்கிறது.  திருமால் கண்ணனாக வரும் முன்னர் - இராமனாக வரும் முன்னர் - பரசுரமானாக வரும் முன்னர் - நரசிம்மனாக வரும் முன்னர் - பன்றி அவதாரம் எனும் வராக அவதாரம் எடுக்கும் முன்னர் -  ஆமை எனும் அவதாரத்தை எடுத்து பாற்கடலைக் கடையும் முன்னர் - திருமகள் தோன்றும் முன்னர் அவர் எடுத்த முதல் அவதாரம் தான் மீன் எனப்படும் மச்ச அவதாரம்.   அப்போதே பாண்டியன் மண்ணில் தான் அவதாரம் எடுத்து இருக்கிறார்.  அப்போவே பாண்டிய அரசும் தமிழ் மொழியும் இருந்திருக்கின்றன.  அவ்வளவு பழைய நாடு நம் நாடு.  அதற்கு முன்னும் பாண்டிய அரசு கபாடபுரத்தில் இருந்து இருக்கிறது.- தென் மதுரையில் இருந்திருக்கிறது.  இப்படி மண்ணில் தோன்றிய முதல் குடி நம் குடி.   இராமர் இராவணனுடன் போர் புரிய நம் பாண்டிய மண்ணில் உள்ள உப்பூரில் கணபதி பூஜை செய்து உள்ளார்.  தேவிபட்டினம் என்னும் ஊரில் ஒன்பது கோள்களை வேண்டி இருக்குறார்.   திருப்புல்லாணியில் தர்பைப் புல்லின் மீது தவம் செய்து இருக்கிறார்.  அங்கிருந்து சேது எனப்படுன் பாலம் கட்டி இலங்கை சென்று உள்ளார்.  போரில் இராவணனை வெல்ல அவருக்கு நமக்குத் தமிழை கற்பித்த முனிவர் அகத்தியர் ஆதித்ய ஹிருதயம் என்னும் துதியைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்.   போரில் வென்ற பிறகு இராமேஸ்வரத்தில் இறைவனைத் தொழுது இருக்கிறார்.  மகாபாரதப் போர் நடக்கும் போது படைகளுக்கு உணவு தமிழகத்தில் இருந்து போய் இருக்கிறது.   இப்படி இறைவன் அவதாரம் முதலில் எடுத்த நாடான பாண்டிய நாட்டில் வாழும் நமக்கு யாரும் எதையும் சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை.  இறை வணக்கம் நமது நாட்டில் இருந்தது தான்.  இப்படி ஆரியம் - திராவிடம் என்று பிரித்துப் பேசி இதோ தமிழ் மொழியில் வல்லவர்கள் போல் காட்டிக் கொள்வார்கள்.  இந்த பாகவததிலேயே திராவிட  என்ற சொல் வருகிறது. அது பாண்டிய மன்னன் சத்திய விரதனைக் குறிக்கிறது.  மதுரையில் உள்ள கூடல் அழகர் கோவில் அருகே தான் கிருதமாலை  என்னும் நதி ஓடியது.  இன்னமும் ஓடுகிறது.  நாம் தான் அதை வாய்க்காலாக மாற்றி விட்டோம்.  பெருமாள் கோவிலே நதிக்கரையில் தான் இருந்து இருக்கிறது.  கோவிலை ஒட்டி மதில் சுவர்.  கோட்டைச் சுவர்.   பின்னர் பெரிய அகழி.   அகழிக்குத் தண்ணீர் தரும் அருமையான நதி.  சரித்திரம் படித்தவர்கள் இதை மறுக்க மாட்டார்கள்.  அகழியை மூடும் படி ஆணை இட்டவன் மாரட் என்னும் ஆட்சியாளன்.  அந்தப் பணியை முடித்தவன் பெருமாள் மேஸ்திரி.  எவர்கள் பெயரில் இன்னும் சாலைகள் உள்ளன இந்தக் கோவில் அருகில்.   மதுரை மாநகரின் நான்கு புறமும் நான்கு மாரட்டுச் சாலைகள், நான்கு மேஸ்திரி சாலைகள் இன்றளவும் உள்ளன.  எனவே ஆறு இருந்ததோ - ஆண்டவன் மீன் அவதாரம் எடுத்ததோ பொய்யாக இருக்க முடியாது.   அதனால் தான் பாண்டிய மன்னனின் கோடியில் மீன் பட்டொளி   வீசிப் பறந்தது. இப்படி நாமும் சொல்லிக் கொண்டே போங்கலம்டா என்றேன் என் பேரனிடம்.  சரி தானே அந்தக் காலத்தில் இருந்தே காலையிலும் மாலையிலும் கதிரவனை நதிக் கரையில் நின்று வழி படும் பழக்கம் இருந்திருக்கிறது.   பல மன்னர்கள் வடக்கு இருந்து உயிர் துறந்து இருக்கிறார்கள்.   ஏன்? மகாபாரத்தில் பீஷ்மர் கதிரவனின் வடதிசைப் பயணம் துவங்கிய பிறகு உயிர் நீதாரே?   ஏன்?  தென்புலம் போனால் பிதுர் என்னும் தென்புலத்தார் நாடு தான் போக முடியும்.  வடக்கு நோக்கிப் பயணம் போனால் இறை மண்டலம் போகலாம்.   இதெல்லாம் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து இருக்கிறது.  சிலருக்கு நம் மொழியில் சொன்னால் புரியாது.    அவர்களுக்கு ஆங்கிலத்தில் சொன்னால் தான் புரியும்.   இதோ:
Sownaka Maharishi, when he was doing the Tapas, he was covered by the small mud mountain (Putru). Yayaathi's daughter, while she was playing there, found two bright lights flashed from inside of the putru. But it was actually the eyes of Sownaka Maharishi. She took a small stick and poked his eyes. As a result of this, Sownakar got angry and gave her the sabham that all the childrens that are born to Yayaathi's daughter will be blind. Hearing this, she felt sorry for that and asked for Sabha Vimochana. Cooled by her devotion, Sownaka Maharishi, he himself married Yayaathi's daughter and earned 100 childrens and one among them was Janaka Maharishi.
A Pandiyan king by named Sathyavrathan, devoted this Koodal Azhagar and had a great belief towards him. One day, when he went to worship Koodal Azhagar. But before going into the temple, he washed his hands in the Kirutha maala river, where a fish was found in his hand. He thought that the fish might be the Emperumaan, Since fish was one of the Avathaars of Sri vishnu. Because of this only, the Pandiya Kings in their flags have the fish as the symbol.
The river Vaigai branched off into two near Madurai and ran on either side of the city like a garland. One branch known as Krittamala even now flows near the temple of Koodal Azhagar as a small canal.
Originally it was bigger and flowed near the temple for it is said that the temple was in the midst of a plantain grove on the banks of the river Kritamala.
முன்னோர் வழிபாட்டுக்கு மீண்டும் வருவோம். பேரனே அந்தக் காலத்திலேயே பித்ரு பூஜை அதாவது முன்னோர் வழிபாடு செய்ய குழந்தைகள் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு  உள்ளது.  நெட்டிமையார் என்னும் பெண் கவி பாண்டிய மன்னன் ஒருவன் புகழைப் பாடும் போது மன்னன் எப்படி முன்னோர் வழிபாடு செய்ய குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு போரிலிருந்து விதி விளக்கு அளித்தான் எனறு சொல்கிறார்.  என் குருநாதர் ஜெயஸ்ரீ சாரநாதன் கூறி உள்ளதை உங்களுக்கு அப்படியே தருகிறேன்.  அவர் பகுத்து அறிந்து சொல்கிறார்.   படியுங்கள்.

the poetess Nettimaiyaar, while praising the Pandyan king,Palyaaga shalai Mudu-kudumi Peruvazhuthi,singles out 5 issues that this king was very well known for.
This King although known for his expansionist tendency and had won many a war,had always stood by Dharma in that,he took care not to harm the 5 types of beings (4)

They were the cattle,The Brahmins,The womenfolk,The sick and
Those people who were not blessed with sons to do pithru shraddha!!
“Then pula vaazhnarkku arum kadan irukkum pon pOl pudhalvar peraadheerum”,
says the poetess.
The poetess does not just say issueless- people.
She characterizes them as those who have not been blessed with sons who will remove the pithru ruNam or pithru kadan to those in the South (pithru lokam)
If such a person who has not yet got an issue goes on war and is killed, his lineage gets cut with him.
Instead if such a person is spared to live on, there will still be some chance that he will get progeny sometime in future.
Bringing an end to one’s lineage by one’s action such as war was considered to be against dharma.
So care was taken that the above types of people were kept away from the violence of war.
This has also been reflected in the famous grammar work, Thol kaappiyam.
Thol kaapiyam lists down certain persons who are not to be harmed by the invading king.
They are the lazy ones, those who have no sons, the old, the disabled, those named as a female and the disarmed ones.
“sirappudai arasiyalaavana:
madindha uLLatthOnaiyum,
maga-p-peraadhOnaiyum,
mayir-k-kulaindhOnaiyum,
adi-p-pirakkittOnaiyum,
peN peyarOnaiyum, padai izhandhOnaiyum, piravum
etthanmai udaiyOnaiyum kollaadhu viduthal.” (5)
The special note about the verse in PuranaanUru is that it was written more than 5000 years ago.
This 11 line verse actually contains 5 information of interest to us in our present context of discussion.
The ones on not harming women and issueless ones were discussed here.
The ones on cattle and the festival of Indra (munneer vizhavu) which again depict Aryan practices will be taken up at an appropriate context.
The 5 th information is about the king’s land which got sub-merged later.
The poetess praises the king for eternal fame – for as many years as the number of sands of the river PahruLi of his land! Pahruli was existent during the times of Tamil sangam -II
The 2nd Tamil sangam was presided by none other than Krishna of Dwaraka. After that, this river and the lands adjoining it went under water, when the southern sea surged.
So this poem must have been written either at the time of Krishna or before the time of Krishna. As per these evidences, Krishna lived more than 5000 years ago. And PahruLi river exited only until his times.
So the poem in discussion was written 5000 years ago and the dharma in terms of not harming the women and the issueless ones, indicating the stress laid on pithru kaaryam was the Supreme Dharma for Tamils 5000 years ago.

திரௌபதி என்னும் பெண்மணி துகில் உரியப்பட்ட போது வேடிக்கை பார்த்தது மகாபாரதக் கதை.  ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டது தெரிந்தவுடன் மாண்ட மன்னனின் கதை சிலப்பதிகாரம்.  தமிழர் நீதி அவ்வளவு மாண்புடன் விளங்கியது அந்நாளில்.
Even the disrobing of a woman, the daughter-in-law (Draupadi) that was reported in the Kaurava’s court, during the times of Krishna could never even be imagined in Tamil lands.
There is not a single report of such dishonor done to a woman in the court of a Tamil king.
Instead the king had fallen dead on coming to know of the misdeed done to a woman (kaNNagi).
Such was the high order of values that was prevalent in this part of Aryavartha.
முன்னோர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை விளக்க புறநானூற்றுப் பாடல் ஒன்றில் வரும் தகவலை என் குருநாதர் கூறுகிறார்.  கோப்பெரும் சோழன் வடக்கிருக்கும் நோன்பினை மேற்கொள்ள சென்றபோது அவனது நண்பர்கள் பலர் உடன் சென்றனர்.  அப்போது புலவர் ஒருவர் - மகவு இல்லாதவர் வந்த போது மன்னன் தடுத்து நிறுத்தி - மகவு பிறந்தபின் வடக்கிருக்கும் நோன்பு மேற்கொள்ளச் சொல்கிறார்.  இதோ அந்த தகவல்.   Again PuranaanUru brings out another verse
which tells about the supreme importance given for begetting sons for the sake of doing pithru kaaryam. When the Chola king KOpperum Cholan decided to go on Vanaprastha (this again is an Aryan practice based on ashrama dharma), his friends too wanted to join him.
One of them was a poet, Potthiyaar.
But the king refused to accept him to join him in vanaprastha (where he will sit on fast, facing the North) because the poet did not have issues.
He told the poet to be with his wife, get children and then join him.
This is expressed by the poet (6) who came to see the place where the king died in vanaprastha. Begetting children for the sake of doing pithru kaaryam is thus a dharmic practice for Tamils too, making them no different from those in the rest of Aryavartha.
முற்காலத்தில் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனறு கற்றுத் தருவதற்கு முன்னரேயே முன்னோர் கடன் பற்றி கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.  ஏன் என்றால் கடன் முதலில் கழிக்கப்படவேண்டும்.
It is known from the Taittriya Upanishad that before proceeding to teach the student that the mother is god, the father is god etc (Mathru devO bhava, pithru devO bahva..),
the teacher told the student the importance of pithru kaaryam.
The student was reminded that he must not forget to do the oblations to devas and departed ones.
“Deva pithru kaaryaabhyaan na pramathidavyam” (2) Never forget to do deva-pithru kaaryam was the order by the teacher.
Pithru kaaryam was the core issue around which the Dharma itself was woven in those days.

MAHALAYAP PATCHAM - PITHRU POOJA - MUNNOR KADAN
"தாத்தா ஒரு சின்ன கேள்வி கேட்டதுக்கு இவ்வளவு பெரிய பதிலை இவ்வளவு கோபமாகச் சொல்றீங்களே  "  என்றான் பேரன் சூரியா.  ஆமாண்டா நாகரிகத்திலே சிறந்த நாம் மற்றவர்களிடம் கருத்துக் கடன் வாங்கினோம் என்றால் அது சரியில்லை.  அதனால் தான் இப்படி புரியற மாதிரி விளக்கமா சொல்ல வேண்டி வந்தது.
"சரிங்க தாத்தா நேற்று நாள்காட்டியிலே மஹாலய பட்சம் ஆரம்பம் என்று போட்டு இருந்ததே.  ஏன் தாத்தா?  அப்படின்னா என்ன தாத்தா? " என்றான் பேரன் அர்ஜுன். நல்ல கேள்வி.   நாம் தினசரி வீட்டில் கடவுளைக் கும்பிடுகிறோம்.  அலுவலகம் சென்றால் அங்கேயும் கும்பிடுகிறோம்.   கோவிலுக்கோ - மாதா கோவிலுக்கோ - பள்ளிவாசலுக்கோ சென்று இறைவனை வணங்குகிறோம்.  ஆனால் தெருவில் தேரில் அல்லது பல்லக்கில் இறைவன் நம்மைக் காண வந்தால் என்ன செய்கிறோம்.  வாசலில் தேங்காய்-பழம் வைத்து இறைவன் வரும் போது சூடம் ஏற்றி தொழுவதில்லையா.  அந்த மாதிரி முன்னோர்கள் புரட்டாசி பௌர்ணமி முதல் மகாளய அமாவாசை முடிய நமது இல்லத்து வாசலில் வந்து நமக்கு ஆசி வழங்கக் காத்திருக்கிறார்கள்.  நாம் முறையாகப் பூசை செய்ய வேண்டும்.   தினசரி நாம் உணவு உண்ணும் முன் - நம் முன்னோர்களை - தந்தை வழி மற்றும் தாய்வழி முன்னோர்களை நினைத்து  - அவர்களுக்கு மூன்று கவளம் ஒரு இலையில் எடுத்து வைத்து - சிறுது நீரை ஒரு ஏனத்தில் வைத்து படைக்க வேண்டும்.  அவர்களை மனதார நினைத்து அதை ஏற்றுக் கொள்ளும் படி கூற வேண்டும்.   பின் உணவை உண்ண வேண்டும்.
"சரிங்க தாத்தா.  இனிமே முன்னோரை நினைத்து பின்னரே சாப்பிடுவேன்.  சரியா." என்றான் பேரன் ஒம்சாய்.  நன்று நன்று என்றேன் நான்.  "தாத்தா இந்தா முன்னோர் வழிபாட்டை நமது மொழியில் புரிந்து கொண்டு செய்வது எப்படி.  ஐயர் வந்தால் நமக்கு புரியாத மொழியில் இதோ சொல்கிறார்.  புரிந்து செய்தால் நன்றாக இருக்கும்" என்றான் சூரியா.   சொல்கிறேன் கேளுங்கள்.


PITHRU POOJAI IN TAMIL LANGUAGE - MUNNOR VAZHIPAADU IN TAMIL
முன்னோர்களுக்கு வழிபாடு தாய்மொழியில் நடத்தவேண்டும் என்று நான் முன்னர் ஒரு கட்டுரையில் கூறியிருந்தேன்.  அதை எப்படி செய்யலாம் என கீழே விபரமாகக் கூறி உள்ளேன்.
முன்னோர்களுக்குப் பூசை என்பது நாம் செய்ய வேண்டிய இன்றியமையாத பணிகளில் ஒன்று.  இதை அவர்கள் இறந்த தேதி அல்லது திதியைத் தெரிந்து கொண்டு அன்றைக்குச் செய்வது நலம்.(இவை எல்லாம் என் சொந்த கருத்தக்கள்.  ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.  மறுப்பவர் ஐயரை வைத்து அவர் கூறும் வழிமுறைப்படி மிகச் சிரத்தையாக இப்பணியை  மேற்கொள்ள வேண்டும்.)  ஆனால் ஒருமுறை அருள் கூர்ந்து இப்பணியை எப்படி சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
                                                     

                                                   முன்னோர் வழிபாடு


கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து

பண்ணுறத் தெளிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் - ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழி போல்
எண்ணிடப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ

பூசையும் பூசைக்கேற்ற பொருள்களும் பூசை செய்யும்
நேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு நல்கும்
ஈசனும் ஆகிப் பூசை யான் செய்தேன் எனும் என் போத
வாசனையதுவுமான மறை முதல் அடிகள் போற்றி

தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
மனிதனாகப் பிறவி எடுத்த நாம் எவ்வளவோ இடர்ப்பாடுகளை அனுபவிக்க நேரிடுகிறது. இறைவன் எல்லோரையும் ஒன்றாகவே படைத்தான் என்றால் நமது இடர்ப்பாடுகளுக்கு என்ன தான் காரணம்? சிலர் சொல்கிறார்கள் நம் முன்வினைப் பயன் தான் காரணம் என்று. ஆம் அதுவும் ஒரு காரணம்.
வினைப்பயனின் கொடுமையைத் தணிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? படைத்த நம் இறைவனின் துணையையும் நம் முன்னோர்களின் துணையையுமே நாட வேண்டும். இறைவனின் துணையை நாடினால் அவர் தாய், தந்தை, குரு ஆகியோரை நாம் எப்படிப் போற்றியிருக்கிறோம் என்பதைப் பார்ப்பார். எனவே நாம் நமது பெற்றோரையும் ஆசிரியரையும் தினசரி வணங்க வேண்டும். போற்ற வேண்டும். அன்பு செலுத்த வேண்டும். கிருத்துவத்திலே கூட இறந்தவர்களுக்காக பல நாடுகளிலே ஒரு நாளை ஒதுக்கி வைத்து அதை அரசு விடுமுறையாக வைத்துள்ளார்கள். அதை சில பகுதிகளிலே கல்லறைத் திருநாள் எனக் கொண்டாடுகிறார்கள். சில பகுதிகளிலே மரித்தோர் நாள் என்று கொண்டாடுகிறார்கள். அன்று மக்கள் எங்கிருந்தாலும் தனது சொந்த ஊருக்கு வந்து பெற்றோர் மற்றும் நெருக்கமானவர்களின் கல்லறையைச் சுத்தம் செய்து வழிபாடு செய்கிறார்கள். (விக்கிபீடியா என்ற வலைத்தளத்தில் மரித்தோர் நாள் என்பதை ஆங்கிலத்தில் அடித்துத் தேடினால் விபரம் கிடைக்கும்)

சிவராத்திரி அன்று மக்கள் எங்கு பணி புரிந்தாலும் தனது சொந்த ஊருக்கு வந்து அங்கு நடைபெறும் தனது குலதெய்வ வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள். குலதெய்வ வழிபாடு முன்பு முன்னோர்கள் வழிபாடாகத் தான் இருந்திருக்க வேண்டும்.
இப்பிறவியில் ஒரு பெற்றோருக்கு மகனாகப் பிறக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தாயிற் சிறந்த கோயில் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை வேத வாக்கியமாகக் கொண்டு பெற்றோர் இருக்கும் வரையில் மனம் கோணாமல் மகன் எனப்பட்டவன் அவர்களுக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும். தாயும் தந்தையும் இல்லையென்றால் இந்த வாழ்க்கை நமக்கு இல்லை என்பதை உணர்ந்து அவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் நமது ஆசிரியர் வருகிறார். நமது பெற்றோர் நாம் நல்ல அறிவினைப் பெற வேண்டும் என்பதற்காக கல்வி நிறுவனங்களில் இந்த காலத்தில் சேர்த்து விடுகிறார்கள். முன்னால் தனிப்பட்ட ஆசிரியர்-குரு- துறவி போன்றவர்களிடம் தமது குழந்தைகளை ஒப்படைத்து கல்வியைப் புகட்டினார்கள். நாம் இதிகாசங்களைப் படித்தாலும் சரி - சரித்திரத்தைப் படித்தாலும் சரி இது நமக்குப் புலப்படும். அவர் கற்றுக் கொடுத்து தான் நாம் உலகத்தைத் தெரிந்து கொண்டோம். வாழும் வழியைக் கற்றுக் கொண்டோம். இக்காலத்தில் குரு தவிர நாம் தினசரி படிக்கக்கூடிய நாளிதழ்கள் மற்றும் வானொலி, தொலைக்காட்சிப் பெட்டி, வலைப்பின்னல்கள், போன்றவற்றிலிருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம். நாம் இவைகளில் நல்லவற்றையே கருத்தில் கொள்ள வேண்டும். இவ் விஷயத்தில்  அன்னப்பறவையைப் பின்பற்ற வேண்டும். ஏன் என்றால் நமக்கு கிடைக்கக் கூடிய- நாம் படிக்கக் கூடிய - நாம் தெரிந்து கொள்ளக் கூடிய செய்திகளிலிருந்து தான் நம் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே ஒருவகையில் நாம் சிறப்பாக வாழ்ந்தாலும் சரி - சீரழிந்தாலும் சரி அதற்கு நாம் தான் காரணம் ஆகின்றோம். நாம் தெய்வத்தைத் தொழுவதற்கு முன் மாதா, பிதா மற்றும் குரு ஆகியோருக்கு நமது கடமைகளைச் செவ்வனே ஆற்ற வேண்டும். அவர்கள் மனம் புண்படாதபடி நமது கடமைகளை ஆற்ற வேண்டும்.

அப்போது தான் நாம் இந்த பிறவிச் சுழலிலிருந்து விடுபட முடியும்.
வழிபாட்டினைச் செய்யும் போது நான்- எனது என்ற தன்னுணர்வின்றி தியாக உணர்வுடன் வழிபாட்டினைச் செய்ய வேண்டும். உலக மக்களிலே ஒவ்வொருவருக்குமே குறைந்தது ஏழு தலைமுறைகளைத் தாண்டியவர்களாகத் தான் உத்தம மூ£தையர்கள் பெரும்பாலும் வந்தமைகின்றார்கள். அதாவது கடந்த 7 தலைமுறைகளாகவே கலியுகத்திலே சரியான முறையிலே நல் ஒழுக்கஇ நல்ல பண்பாடு உள்ள மக்களாக வாழமுடியாமல் சமுதாய வாழ்க்கை அமைந்து விட்டது. ஆனால் நாம் பெறுவதற்கு அரிய மானிடப் பிறவியைப் பெற்று உள்ளோம். எனவே எட்டுத் தலைமுறைகளுக்குத் தாண்டி இருக்கின்ற பித்ருக்களை மனதார, வாயார, உரக்கக் கூவி அழைத்து பித்ருக்களே, எங்களைக் காப்பாற்றுங்கள் என்று துதிக்க வேண்டும் நமது முன்னோர்களில் சிலர் முறையான வழிபாட்டின் காரணமாக அல்லது சந்ததிகள் செய்த பித்ருபூசை போன்ற நற்செயல்கள் மற்றும் முன்னோர் வழிபாட்டின் காரணமாக பித்ரு என்று அழைக்கப்படும் நிலையை அடைந்திருப்பர். ஆனால் பலர் அவர்கள் செய்த வினைகள் காரணமாக வினைப் பயனைத் துய்க்கும் பொருட்டு பல இடங்களில் பல வடிவங்களில் பல பிறவிகளில் இருப்பர். இவர்களும் பித்ரு என்ற நிலையை அடைய நாம் செய்யும் இந்த முன்னோர் வழிபாடு மிகவும் உதவும். முன்னோர்களுக்கு மட்டுமல்ல - நாம் நேசித்த நண்பர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்குக் கூட நாம் இவ்வகை வழிபாட்டின் மூலம் ஏற்றத்தைத் தர முடியும். இதற்குக் காருண்ய தர்ப்பணம் என கூறுவர்.

தந்தை இறைவனடி எய்திய பிறகு ஒரு மகனின் கடமை என்ன?

தந்தைக்கும் அவருடைய முன்னோர்களுக்கும் நீர்க்கடன் என்பதை முழு உணர்வோடு விருப்பத்தோடு செய்ய வேண்டும். தந்தை இப்படிப்பட்ட வழிபாட்டை மேற்கொள்ளவில்லை அல்லது முன்னோர்களில் எவரும் செய்து பழக்கமில்லை என்று அலட்சியமான பதிலை நாம் சொல்லக் கூடாது. காரணம் நாம் இன்று நன்றாக இருந்தாலும் அது பித்ரு என்று அழைக்கப்படும் நமது முன்னோர்களின் நல்லாசியே காரணம். நாம் பல்வேறு வகையான இடர்ப்பாடுகளில் சிக்கிக் கொண்டிருந்தாலும் அதற்குக் காரணமும் நாம் முறையாக முன்னோர்களை வழிபடாததே அல்லது நமது முன்னோர்கள் முறையாக வழிபாட்டினை மேற்கொள்ளாததே. இப்படி இருப்பதால் பித்ரு தோஷம் உண்டாகிறது.

பித்ரு தோஷம் என்றால் என்ன?

நம் முன்னோர்கள் இறந்தவுடன் எல்லோரும் இறைவனடி எய்துவது இல்லை.  அவரவர்கள் வினைப்படி தொடர்ச்சி இருக்கும்.  இறந்த நேரத்தைப் பொருத்தும் பின்பிறவி அமையும்.   அதனால் தான் குழந்தைகளுக்கு இறைவனின் பெயரை வைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.  இறக்கும் போது நிறைவேறாத ஆசையின் காரணமாக மகனை அழைத்தால் கூட இறைவனை அளித்த பலன் கிடைக்குமே என்ற நம்பிக்கையின் அடிப்படயில் தான் இந்த வழக்கம் வந்துள்ளது.  மனிதனாக பிறந்தவனுக்கு சில கடன்கள் உள்ளன.  தேவ ருணம் - பித்ரு ருணம் என்பார்கள் வட மொழியில்.  ருணம் என்றால் கடன்.  அதை அடைக்க வேண்டும்.  இறைவனின் கடனை அடைக்க அவனைத் துதிக்க வேண்டும்.  இயற்கைத் துதிக்க வேண்டும்.  எனவே தான் அந்த களங்களில் ஆற்றங்கரையில் காலையிலும் மாலையிலும் கதிரவனைத் தொழுது வந்திருக்கிறார்கள்.  எரியோம்பி உள்ளார்கள்.  மூச்சுப் பயிற்சி செய்து உள்ளார்கள்.  காற்று - நீர் - தீ - பகலவன் இப்படி இயற்கையோடு இயைந்து நமது மொன்னோர்கள் வாழ்ந்து உள்ளார்கள்.
            நாம் இந்த அடிப்படை உண்மையை உணர்ந்து முறையாக பித்ரு பூசை என்னும் வழிபாட்டினை முறையாகச் செய்ய வேண்டும்.  முன்னோர் கடனை அடைக்க வேண்டும்.  அவர்கள் மூலமாக இயற்கைக்கு பட்ட கடனை அடைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்முடைய குலம் தழைத்தோங்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். பிணிகள் வரா. வந்தாலும் விரைவில் நீங்கும். புகழ், நீண்ட நாள் வாழ்வு, நல்ல மகப்பேறு, வீடு-வாகன வசதி, பதவி உயர்வு, இறுதியில் வீடு பேறு தானாக தேடி வரும். குடும்பம் தழைத்தோங்கும். இதை நாம் படித்தால் மட்டும் போதாது. வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். வள்ளுவப் பெருந்தகை நமக்கு அறிவுறுத்தியது போல் கசடறக் கற்க வேண்டும். கற்றபடி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

சிரார்த்த தினத்திலும், தர்ப்பண தினத்திலும் இறந்தவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கலந்து நீர்க்கடன் செய்து, அன்றைய தினம் இயன்ற அளவு ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, காக்கைக்கு உணவிட்டு, பசுவுக்குத் தீவனம் கொடுத்து, புத்தாடைகளை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இப்படிச் செய்வதால் நாம் முன்னோர்களின் அருளாசியைப் பெறலாம்.

நாமும் நம் குடும்பத்தினரும் நலமாக- வளமாக வாழ இக்கடமையைத் தவறாமல் நாம் செய்தே ஆக வேண்டும். முன்னோர்களுக்குச் செய்யும் கடமைகளை நல்ல ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். இன்றியமையாத பணிகளை ஒதுக்கிவிட்டு இப்படிப்பட்ட பணிகளுக்காக நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கிறதே - பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே இந்தப் பணிகளைச் செய்யக் கூடாது. இந்தக் கடமையைப் பற்றிப் படிக்க வேண்டும். அதன்படி நடக்க வேண்டும். பிறரிடம் கூடி இதன் இன்றியமையாததை நாம் எல்லோருக்கும் உரைக்க வேண்டும். அப்பொழுது தான் நம் பண முற்றுப் பெறும். இது வீடு போன்ற அமைப்பில் உள்ள ஒரு பணி. படி - நடை - கூடம் - முற்றம். இது தான் வாழ்க்கைமுறை.

முன்னோர்களைத் திருப்திப்படுத்துவதையே பித்ரு பூசை - பித்ரு தர்ப்பணம் என்று கூறுகிறார்கள். தர்ப்பணம் என்றால் திருப்திப்படுத்துவது என்று பொருள். முன்னோர்களைத் திருப்திபடுத்துவது என்பது தகப்பனார் வழியிலே இறந்த ஆறு பேருக்கும், தாய் வழியிலே ஆறு பேருக்கும் செய்ய வேண்டும்.

தந்தை வழியில் ஆறு பேர் யார்?

தந்தை-தாய்
தந்தையின் தந்தை- தந்தையின் தாய்
தந்தையின் தாத்தா-தந்தையின் பாட்டி
தந்தையின் முப்பாட்டன் - தந்தையின் முப்பாட்டி
தாய் வழயில் ஆறு பேர் யார்?
தாயின் அப்பா- அம்மா
தாயின் தாத்தா-பாட்டி
தாயின் முப்பாட்டன்-தாயின் பாட்டிக்கு முப்பாட்டி
(எந்தை தந்தை தந்தை தந்தை தன் மூத்தப்பன் எனப் பெரியாழ்வார் கூறுவார்)
இது ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாவிட்டால் ஒரு பேனாவை எடுத்து கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி பெயர்களை எழுதிக் கொள்ளவும். பலருக்கு முன்னோர்களின் பேர்கள் தெரிய வாய்ப்பு இருக்காது. காரணம் இன்றைய நாகரிகம்.

தந்தை வழி முன்னோர்கள்

த.- தந்தை
தத- தந்தையின் தந்தை
ததத- தந்தையின் தந்தையின் தந்தை
தததத- தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தை
ததததத- தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தை

அ- அன்னை
தஅ- தந்தையின் அன்னை
ததஅ-தந்தையின் தந்தையின் அன்னை
தததஅ- தந்தையின் தந்தையின் தந்தையின் அன்னை
ததததஅ-தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தையின் அன்னை

அன்னை வழி முன்னோர்கள்

அத- அன்னையின் தந்தை
அதத-அன்னையின் தந்தையின் தந்தை
அததத-அன்னையின் தந்தையின் தந்தையின் தந்தை
அதததத-அன்னையின் தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தை
அததததத-அன்னையின் தந்தையின் தந்தையின் த்ந்தையின் தந்தையின் தந்தை

அஅ- அன்னையின் அன்னை
அதஅ- அன்னையின் தந்தையின் அன்னை
அததஅ-அன்னையின் தந்தையின் தந்தையின் அன்னை
அதததஅ-அன்னையின் தந்தையின் த்நதையின் தந்தையின் அன்னை
அததததஅ-அன்னையின் தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தையின் அன்னை

இதை நன்கு கவனித்து பேர்களைக் குறித்துக் கொள்ள வேண்டும் ஒருவேளை பெயர்
தெரியவில்லை என்றால் இறைவனின் அல்லது இறைவியின் பெயரைக் குறித்துவைத்துக் கொள்ளவெண்டும்.  பெயர் தெரியவில்லையா?  முன்னோர்களே - தந்தை வழி முன்னோர்களே - தாய்வழி முன்னோர்களே என்று மனம் உருகி நினைக்க வேண்டும்.

அதே போல் காருண்ய தர்ப்பணம் செய்ய விரும்புவோர் மறைந்து போன நண்பர்கள், உறவினர்கள்- அதாவது மேலே உள்ள பட்டியலில் இல்லாத தாய்-தந்தையின் முன்னோர் அல்லாதோர், மறைந்து போன நமது ஆசிரியர்கள், நாம் யாரை எல்லாம் மதித்தோமோ அவர்களில் இறந்திருந்தால் அவர்கள் பட்டியல், நாம் நேசித்த உயிரினங்கள் இவற்றை எல்லாம் பட்டியல் இட வேண்டும். இதே போல பேரிடர்களின் போது அதாவது சுனாமி, விமான விபத்து, இரயில் விபத்து போன்று பலவகை விபத்துகளில் இறந்தவர்களுக்கும் நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

உளத் தூய்மையுடனும் உள்ள உறுதியுடனும், நல்ல உணர்வுடனும் இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது மிக இன்றியமையாதது.

முன்னோர் வழிபாட்டின் போது ஐவகையில் மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே நாம் தூய்மையாக இருக்க வேண்டும்

1. உடல் தூய்மை
2. உளத் தூய்மை
3. உணவுத் தூய்மை
4. சொல் தூய்மை
5. செயல் தூய்மை

இப்பணிக்கு இன்றியமையாதவை ஆறு பொருட்கள்

அமர்வதற்கு புல்லினால் ஆக்கப்பட்ட பாய் அல்லது தூய்மையான பருத்தி ஆடை
தாமிரம் அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட தட்டு ஒன்று
தூய்மையான நீருடன் கூடிய தாமிர பாத்திரம்
தூய்மையான - கசடுகள் நீக்கப்பட்ட எள்
தர்ப்பைப் புல்
தர்ப்பையினால் செய்யப்பட்ட மோதிரம்
நாம் யாருக்காக வழிபாடு செய்கிறோமோ அவர்களின் பட்டியலை நாம் தயாராக வைத்திருக்க வேண்டும்

காருண்ய வழிபாட்டிற்காக நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், நாம் நேசித்த பிற உயிரினங்கள் பட்டியல்

பணியைத் துவக்குவோமா?
குறைந்தபட்சம் இரண்டு விளக்குகளை ஏற்றுக
கிழக்கு நோக்கி நாம் அமர வேண்டிய பாயை விரிக்க அல்லது தூய துணியை விரிக்க
இறைவனே நல்ல சிந்தனை ஏற்படவும் கெட்ட எண்ணங்கள் இருந்தால் விலகவும்
தங்களை வேண்டி இந்த தண்ணீரை வழிகாட்டும் இறைநூலாகக் கருதி உட்கொள்கின்றேன் எனக் கூறி தாமிர பாத்திரத்தில் உள்ள நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்

என்னுடைய அறிவையும் ஆற்றலையும் தூய்மைப்படுத்துவதற்காக
இந்த நீரை அருந்துகிறேன் எனக் கூறி நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்

நான் செய்யும் செயலைத் தூய்மைப்படுத்தவும் நல்வழிப்படுத்தவும் தீய செயல்களைத் தடுத்து நிறுத்தவும் இந்த நீரை இறை நெறியாகக் கருதி அருந்துகிறேன் எனக் கூறி நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்

நல்லவையே நடக்க வேண்டும் என்பதற்காகவும் தீய எண்ணங்கள் வராமல் தூய்மையான மனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காவும்
என வேண்டி இந்த நீரை இறை மொழியாகக் கருதி அருந்துகிறேன் எனக் கூறி நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்

பூணூல் அணிந்தவர்கள் மட்டும் பூணூலில் உள்ள முடிச்சு வலது உள்ளங்கையில் வானத்தை பார்ப்பது போல் வைத்துக் கொண்டு, மற்றொரு பாகத்தை இடது கையில் தண்ணீர் பாத்திரத்தை மூடியவாறு வைத்துக்கொண்டு

இந்த ஒளிமயமான பூணூலை - தூய்மையாக இருக்கவும், ஆயுள்-ஆரோக்யம்-தைர்யம் ஏற்படவும் குலம் தழைத்தோங்கவும்
அணிந்து கொள்கிறேன் எனக் கூறி அணிந்து கொள்ள வேண்டும்

மூன்று தர்பைப் புல்களால் செய்த மோதிரத்தை அணிய வேண்டும். மூன்று புல்லை அமரும் இடத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். மோதிரத்தை அணியும்போது தர்பைப் புல்லினால் செய்யப்பட்ட மோதிரத்தை -

வருண விரலில் மோதிரத்தைப் போட்டுக்கொள்கிறேன். பாபத்தை நீக்க, நீண்ட ஆயுள் பெற, உடல் வளம் பெற, ஒளிமயமான எதிர்காலத்திற்காக, என் முன்னோர்கள் திருப்தி அடைய நான் இப்போது அர்ப்பணிக்கும் இப்பணிக்காக புல்லினால் செய்யப்பட்ட இம்மோதிரத்தை நான் அணிகிறேன் எனக் கூறி மோதிரத்தை அணிய வேண்டும்

குருவையும்  குருவின் குருவையும் உலகங்களுக்கு எல்லாம் தலைவராய் விளங்கும் இறைவனை அறியும் பொருட்டு நான் வணங்குகிறேன்.

குருவே போற்றி
குருவின் குருவே போற்றி
இறைவா போற்றி

முதலில் கணபதியை பூசை செய்க

எங்கும் நிறைந்த இறைவனே - எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழிக்கும் இறைவனே - கணபதியே இடையூறுகள் நீங்க உங்களை வணங்குகிறேன்.

ஐந்து கரத்தனே யானை முகத்தனே
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனே
நந்தி மகனே ஞானக் கொழுந்தே
அல்லல் அகற்றுபவனே
தடைகளைத் தகர்ப்பவனே
கணபதியே உன் தாளிணையைப் பணிந்து
இப்பணியை மேற்கொள்கின்றேன்
இப்பணி இனிதே நிறைவேற
தடைகள் அகன்றிட
தாங்கள் இங்கு எழுந்தருளி அருளாசி வழங்க வேண்டும்
இப்படிக் கூறியவுடன் வலது கையால் இடது பக்க நெற்றியிலும் இடது கையால் வலது பக்க நெற்றியிலும் ஐந்து முறை குட்டிக் கொள்ளவும்

மூன்று புல்களை ஆசனமாக வைக்க வேண்டும்

பின்னர் பித்ருக்களுக்கு இறைவனான சூரியநாராயணரைப் பூசை செய்க

பூமியிலும் மற்ற உலகத்திலும் சூரியனின் ஒளி பிரகாசிப்பது போல எனது ஆத்மா தூய்மையடைந்து ஒளி வீசட்டும். தங்களை நான் பூசை செய்கிறேன். வாழ்வில் எனக்கு எல்லா வளங்களையும வழங்கி இப்பணி நிறைவேற அருளாசி வழங்குங்கள்.

பகலவனே
கதிரவனே
உலகுக்கு ஒளி வழங்கும் வள்ளலே
வழி காட்டும் வள்ளலே
இறைவனே ஈசனே எந்தையே
தொடங்கும் இப்பணி இனிதே நிறைவேற
தாங்கள் எழுந்தருளி அருளாசி வழங்க வேண்டும்
அனைத்து இடையூறுகளும் தடைகளும் விலகி
இறைவன் மனம் உவந்து
நல்லதாலும் கெட்டதாலும் தாக்குதல்கள் வராமல் இடையூறுகள் வராமல்
இறைவரே உளம் கனிந்து அருளாசி வழங்க வேண்டும்
இறைவனின் ஆணையால் - சான்றோர்கள், ஆன்றோர்கள், அந்தணர்கள் அருளாசியுடன்
இந்தியத் திருநாட்டில் - திராவிட தேசத்தில் - ................ஆண்டில்............ஊரில்

இன்று திதி ............................... நட்சத்திரம் ............................கூடிய அமாவாசைத் திதியில் எனது பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்களான தந்தைவழி மற்றும் தாய்வழி பித்ருக்களும் திருப்தி அடையும் வண்ணம் எள்ளும் தண்ணீரும் சேர்த்து தர்ப்பணம் செய்கிறேன். அருள்கூர்ந்து அருளாசி வழங்க வேண்டும் எனக் கூறி

அனைவரையும் எழுந்தருளச் செய்ய வேண்டி இருப்பதால்
பூணூல் உள்ளவர்கள் வலமாக மாற்றிக் கொண்டு - நீரினால் கையைத் தூய்மையாக்கிக் கொண்டு
தெற்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.

அனைத்து இடையூறுகளும் நீங்க
இறைவனே நீங்கள் திருப்தியடைய
இடையூறுகள் இனி வராமல் இருக்க
எல்லா நன்மைகளும் என்னை வந்தடைய
தோஷங்கள் பாபங்கள் விலக
இறைவனின் ஆணையால்
சான்றோர்கள் ஆன்றோர்கள் அந்தணர்கள் அருளாசியுடன்
எனது பெற்றோர்கள் மற்றும் மூதாதியர்களான அன்னை மற்றும் தந்தை ஆகிய இரண்டு வம்சத்தைச் சேர்ந்த முன்னோர்களும் திருப்தி அடையும் வகையில் எள்ளும் தண்ணீருமாக சேர்த்து இறைக்கிறேன். அர்ப்பணிக்கிறேன் எனக் கூறி.

3 தர்பைப் புல்களை நேர்கோடாகவும்
3 தர்ப்பைப் புல்களை செங்குத்தாகவும் வைக்கவும்

இப்பொழுது புல் நான்கு புறங்களில் மூன்று மூன்றாக மொத்தம் 12 நுனிகள் உள்ளன
மேல்புறம் உள்ள மூன்று நுனிகளும் சமீபத்தில் தந்தை வழியில் இறந்த 3 ஆண் முன்னோர்களைக் குறிக்கிறது

கீழ்புறம் உள்ள மூன்று நுனிகள் சமீபத்தில் தந்தை வழியில் இறந்த 3 பெண் முன்னோர்களைக் குறிக்கிறது

வலது புறம் உள்ள 3 நுனிகள் சமீபத்தில் இறந்த 3 அன்னையின் வகையில் இறந்த ஆண் பெருமக்களைக் குறிக்கிறது

இடதுபுறம் உள்ள 3 நுனிகள் சமீபத்தில் இறந்த 3 அன்னையின் வகையில் இறந்த பெண் பெருமக்களைக் குறிக்கிறது

இதைப் புரிந்து கொண்டு நாம் பட்டியல் தயார் செய்ய வேண்டும்.

உயிருடன் இருப்பவர்களைப் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

முன்னோல் வழிபாட்டினையொட்டி பூணூலை இடப்பக்கமாக மாற்றிக் கொள்ளவும்

இறைவனே போற்றி ஈசனே போற்றிஎந்தையே போற்றி எனக் கூறிக் கொண்டே
ஒன்றுபட்ட மனத்துடன் மன நிறைவுடன்
மறைந்த நமது முன்னோர்களிடம் அவர்களுக்கு ஆசனம் அளித்திருப்பதாகவும் அதில் வந்து அமரும்படியும் வேண்ட வேண்டும்
பித்ரு லோகத்தில் உள்ள எனது தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களே
தாய் மற்றும் தாய்வழி முன்னோர்களே
இரு வம்சத்தைச் சேர்ந்த முன்னோர்களே
அனைவரும் இந்த தர்ப்பைப் புல்லினால் உள்ள ஆசனத்தில் எழுந்தருள வேண்டும். இதோ இந்த எள்ளைச் சமர்ப்பிக்கிறேன். என் மேல் கருணை கொண்டு பஞ்சு போல் விரிக்கப்பட்ட இந்த தர்ப்பைப் புலலின் மேல் எழுந்தருள்வீர்களாக.

இப்பொழுது தான் நாம் தர்ப்பணத்தை துவக்கப் போகிறோம்.

இப்பொழுது வலது உள்ளங்கையில் கட்டைவிரல் மோதிரவிரல் நுனிகளால் எள்ளை எடுத்துக் கொண்டு முன்னோர்களில் மூத்தவரின் பெயரைக் கூறி

எங்கள் பூசையை ஏற்க வந்திருக்கும்
எமது தந்தை வழி முன்னோர்களே
தாய் வழி முன்னோர்களே
மனங்குளிர வார்த்த எள் நீர் ஏற்று
மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர்

என்ற பாடலைப் பாடிக் கொண்டே

அனைவருக்கும் எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணம் செய்கிறேன்
எனக் கூறிக் கொண்டே எள்ளும் நீரும் ஊற்ற வேண்டும்.
இவ்வாறு மூன்று முறை மந்திரத்தை ஓத வேண்டும்

நீரானது வலது பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் எள்ளும் நீரும் வர வேண்டும்

வரிசையாக மேல்புறம் உள்ள மூன்று நுனிகளும் சமீபத்தில் தந்தை வழியில் இறந்த 3 ஆண் முன்னோர்களைக் குறிக்கிறது

கீழ்புறம் உள்ள மூன்று நுனிகள் சமீபத்தில் தந்தை வழியில் இறந்த 3 பெண் முன்னோர்களைக் குறிக்கிறது

வலது புறம் உள்ள 3 நுனிகள் சமீபத்தில் இறந்த 3 அன்னையின் வகையில் இறந்த ஆண் பெருமக்களைக் குறிக்கிறது

இடதுபுறம் உள்ள 3 நுனிகள் சமீபத்தில் இறந்த 3 அன்னையின் வகையில் இறந்த பெண் பெருமக்களைக் குறிக்கிறது

12 நுனிகளுக்கும் உரிய பெயர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக
மூன்று முறை எள்ளும் நீரும் விட வேண்டும்
அதாவது 36 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பித்ரு லோகத்தில் உள்ள எனது தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களே
தாய் மற்றும் தாய்வழி முன்னோர்களே
இரண்டு வம்சத்தைச் சேர்ந்த மூதாதியர்கள் அனைவருக்கும்

பாத்யத்திற்காக நீரை வழங்குகிறேன்
அர்க்கியத்திற்காக நீரை வழங்குகிறேன்
ஆசமநீயத்திற்காக
மதுபர்க்கத்திற்காக
ஸ்நானத்திற்காக
வஸ்த்திரத்திற்காக
உபவீதத்திற்காக
ஆபரணங்களுக்காக
எள் சமர்ப்பிக்கிறேன்
கந்தம் சமர்ப்பிக்கிறேன்
சூர்ணம் சமர்ப்பிக்கிறேன்
தில அட்சதான் சமர்ப்பிக்கிறேன்
புஷ்பமாலை சமர்ப்பிக்கிறேன் எனக்கூறி பூவை இட வேண்டும்.
என வேண்டி இந்த எள்ளும் நீரும் சமர்ப்பிக்கிறேன் எனக் கூறி

ஆசனம் வழங்குவதாகவும்
கைகழுவ
கால் அலம்ப
முகம் கழுவ
உடல் தூய்மை செய்ய
நீர் தருவதாகக் கூறி சிறிது சிறிதாக நீர் விட வேண்டும்.

பிறகு உடை வழங்குவதாகக் கூற வேண்டும்
கந்தம் வழங்குவதாகக் கூற வேண்டும் சந்தனத்தை இட வேண்டும்
மஞ்சள் வைப்பதாகக் கூற வேண்டும்
அட்சதை சமர்ப்பிப்பதாகக் கூற வேண்டும்
பூக்களை சமர்ப்பிக்கிறேன் எனக் கூறி பூக்களைத் தூவ வேண்டும்.
உயிருடன் இருப்பவர்களை இந்த வழிபாட்டிற்கு அழைக்கக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
mahalaya_paksha_tharpanam[4]
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள உள்ள எந்தன் தந்தையே உங்களைப் போற்றி வழிபடுகிறேன்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள தந்தையின் தந்தையான பாட்டனாரே உங்களைப் போற்றி வணங்குகிறேன்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள தாத்தாவின் தந்தையாகிய முப்பாட்டனாரே உங்களைப் போற்றி வணங்குகிறேன்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள முப்பாட்டனாரின் தந்தையே உங்களைப் போற்றி வணங்குகிறேன்
(தாய்-தந்தை உள்ளவர்கள் தந்தையே-தாயே என வணக்கம் சொல்லக் கூடாது)

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள தந்தையின் தாயே அப்பத்தாப் பாட்டியே வணக்கம். போற்றி வணங்குகிறேன்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள தந்தையின் பாட்டியே தங்களைப் போற்றி வணங்குகிறேன். வணக்கம்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள தாத்தாவின் பாட்டியே தங்களைப் போற்றி வணங்குகிறேன். வணக்கம்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள அம்மாவின் தந்தையே தங்களைப் போற்றி வணங்குகிறேன். வணக்கம்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள என் அம்மாவின் தாத்தாவே தங்களைப் போற்றி வணங்குகிறேன். வணக்கம்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள அம்மாவின் முப்பாட்டனாரே தங்களைப் போற்றி வணங்குகிறேன். வணக்கம்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள அம்மாவின் முப்பாட்னாரின் தந்தையே நான் தங்களைப் போற்றி வணங்குகிறேன். வணக்கம்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள அம்மாவின் அம்மாவாகிய பாட்டியே வணக்கம்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள அம்மாவின் பாட்டியே வணக்கம்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில்உள்ள முப்பாட்டியின் அம்மாவே வணக்கம்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள எனது மூதாதையர்களின் உடன்பிறப்புகளை போற்றி பூசை செய்கிறேன்
இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள எனது உளள எனது மற்ற உறவினர்களையும் நண்பர்களையும்
நான்கு வகை இலைகளாலும் மலர்களாலும் போற்றி பூசை செய்கிறேன்
தூபம் ஏற்றுகிறேன்
தீபம் ஏற்றி வழிபடுகிறேன்
உணவு படைக்கிறேன்
தேங்காய், பழவகைகள், அரிசி, பருப்பு வெல்லம், கீரை, காய்கறி வகைகள் அனைத்தையும் தங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய எனது தந்தையே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன் ஏற்றுக்கொள்வீரகளாக

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய எனது தாத்தாவே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன் ஏற்றுக்கொள்வீரகளாக

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய எனது முப்பாட்டனாரே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன்

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய அம்மாவே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன், ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய என் தந்தையின் அம்மாவே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய என் தந்தையின் பாட்டியே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய என் தாத்தாவின் பாட்டியே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய அம்மாவின் தந்தையே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய அம்மாவின் தாத்தாவே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய முப்பாட்டனாரின் தந்தையே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய அம்மாவின் அம்மாவான பாட்டியே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய முப்பாட்டியே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்

இறை மண்டலத்தில் முன்னோர் மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய முப்பாட்டியின் மாமியாரே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்

அம்மாவின் முப்பாட்டியின் மாமியாரே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்

எள் நீர் ஊற்றியாகிவிட்டது

இப்பொழுது பூணூல் போட்டவர்கள் வலமாக மாற்ற வேண்டும்

இந்த தர்ப்பைப் புல்லின் மீது எழுந்தருளியுள்ள
தாய் மற்றும் தந்தை ஆகிய இரு வம்சத்தில் உள்ள மூதாதியர்களை நான் வணங்குகிறேன். வலம் வந்து வணங்குகிறேன்.

என்னுடைய அன்பான வணக்கத்தைத் தாங்கள் அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்

அன்புள்ளம் கொண்ட தந்தையை தாயே வணங்குகிறேன்
தாத்தாவே பாட்டியே வணங்குகிறேன்
முப்பாட்டனாரே முப்பாட்டியே வணங்குகிறேன்
நீர், நெருப்பு காற்று, உலகம், கோபம், வெறுப்பு மற்ற உறவினர்கள் ஆகியவர்களால் தாங்கள் அதிருப்தி அடையாமல் இருக்கும்படி வேண்டியும் திருப்தி அடையும்படி வேண்டியும் தங்களை மீண்டும் வணங்குகிறேன்.

இப்பணி முடிந்தவுடன் முன் நிலைக்கு எல்லோரையும் கொண்டு செல்லவேண்டும். நமது வீட்டில் வந்து நம்முடனேயே அவர்கள் இருக்க முடியாதல்லவா அதனால் அவர்களின் இருப்பிடத்திற்கு அனுப்ப வேண்டும்.

பித்ருலோகத்தில் உள்ள எனது தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்கள் மற்றும் தாய் அவர்வழி முன்னோர்கள் மூதாதியர்கள் இந்த தர்ப்ப ஆசனத்தில் எழுந்தருளி இருக்கிறீர்கள். நான் தங்களை வழிபட்டேன். வழிபாடு நிறைவு பெற்றதால் அனைவரும் பித்ருலோகத்தில் அவரவர்களுடைய இருப்பிடத்திற்கு எழுந்தருள வேண்டும்.

தர்ப்பைப் புல் ஆசனத்தைக் கலைக்க வேண்டும்

தாய்-தந்தை இரு வம்சத்திலும் பிள்ளை இல்லாதவர்கள்
பிள்ளை பெற்றும் இல்லாதவர்கள்
சரியான வகையில் மரணமடையாதவர்கள் இவர்களுக்கு எல்லாம்
பின்னர் காருண்ய தர்ப்பணம் என்ற பெயரில்
இதே போல பெயர்களைக் கூறி கீழ்க்கண்ட பாடலைப் பாடிக் கொண்டே
எம் உற்றாரே உறவினரே
நண்பர்களே
அறிந்தோ அறியாமலோ
உணவுக்காகவும் பிற பணிகளுக்காகவும்
பயன்படுத்தப்பட்ட தாவரங்களே- மலர்களே-உயிரினங்களே
மனங்குளிர வார்த்த எள் நீர் ஏற்று
மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர்
எள்ளும் நீரும் விட வேண்டும்

தர்ப்பண வேலைகள் முடிந்தவுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து புல் மோதிரத்தைக் கழற்றி பிரித்துப் போடவும்

இறைவனே நல்ல சிந்தனை ஏற்படவும் கெட்ட எண்ணங்கள் இருந்தால் விலகவும்
தங்களை வேண்டி இந்த தண்ணீரை உட்கொள்கின்றேன் எனக் கூறி தாமிர பாத்திரத்தில் உள்ள நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்

என்னுடைய அறிவையும் ஆற்றலையும் தூய்மைப்படுத்துவதற்காக
இந்த நீரை அருந்துகிறேன் எனக் கூறி நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்

நான் செய்யும் செயலைத் தூயமைப்படுத்தவும் நல்வழிப்படுத்தவும்
இந்த நீரை அருந்துகிறேன் எனக் கூறி நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்

நல்லவையே நடக்க வேண்டும்
என வேண்டி இந்த நீரை அருந்துகிறேன் எனக் கூறி நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்

பின்னர் 12 முறை தென்முகமாக முன்னோர்களையும் இறைவனயும் வணங்க வேண்டும்.

பிறகு பொட்டு, சந்தனம், குங்குமம் பூசிக் கொண்டு அட்சதையைப் போட்டுக் கொண்டு மூதாதையர்களையும், குலதெய்வத்தையும் பிரார்த்திக்க வேண்டும்.

குருக்களுக்கு தட்சணை தந்து மரியாதை செய்ய வேண்டும்
நீங்களே மனதார மேர்கண்டவைகளைக் கூறி செய்திருந்தால்
நான் செய்த பூசையில் வழிபாட்டில் குற்றம் குறைகள் இருந்தால் என்னை மன்னித்து அருள் புரிய வேண்டும் முன்னோர்களே மற்றும் பிற உறவினர்களே - உயிரனங்களே என்று கூற வேண்டும்.
பின்னர் இவ்வாறு ஊற்றிய எள்ளையும் நீரையும் ஓடும் ஆற்று நீரில் அல்லது கடலில் அல்லது குளத்தில் அல்லது கண்மாயில் விடலாம்
அல்லது
எள்ளை மட்டும் பிரித்து அதை காக்கைக்கும் மரங்களுக்கும் இடலாம்
நீரை மட்டும் மரத்திற்கு ஊற்றலாம்

சரி இந்த தர்ப்பணத்தை நாம் எப்போது செய்ய வேண்டும். சூரிய உதயத்தில் செய்ய வேண்டும்.

எங்கு செய்யலாம். வீட்டிலேயே செய்யலாம். ஆற்றோரம், கடலோரம் என்றால் மிகவும் சிறப்பு வசதி வாய்ப்பு இருந்தால் காசி, இராமேஸ்வரம், கயா, பிரயாகை, அரித்துவாரம், திருவள்ளூர், கும்பகோணம், செங்கல்பட்டு அருகே மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமான சீவரம், திருவிடைமருதூர், முறப்பநாடு, பாபநாசம் போன்ற காவிரி, கங்கை, தாமிரபரணி போன்ற நதிக்கரைகளில் செய்வது மிகவும் உத்தமம்.

தகப்பனார் இல்லாதவர்கள் மட்டுமே இந்த பித்ரு பூசைகளைச் செய்ய அதிகாரம் பெற்றர்கள் ஆவர். ஆனால் தந்தையானவர் உயிருடன் இருந்தும இப்படிப்பட்ட பூசைகளை செய்யவில்லை என்றால் குடும்பமே கலங்கும். கஷ்டங்களை அனுபவிக்கும். அதை சந்ததியினர் அனுமதிக்க முடியுமா? முடியாது. எனவே, தந்தை உயிருடன் இருக்கும் போது தனயன் இந்த வழிபாட்டினைச் செய்யலாமா? என்று நாம் யோசிக்கக் கூடாது. இது தேவையில்லாத சிந்தனை. தாராளமாக தனயன் இவ்வழிபாட்டினைச் செய்யலாம். முன்னோர்களை வழிபடும் உரிமை எல்லோருக்கும் உண்டு.

ஆணுக்குப் பெண் சமம் என்று வந்த பிறகு பெண்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்யலாம். (வேதம் என்பது வாழ்க்கைக்கான ஒரு நெறிப்படுத்துதல் தான். இப்போது உள்ள நடைமுறையில் அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக முற்காலத்தில் நான்கு வர்ணங்கள்-சாதிப் பிரிவுகள் இருந்தன. இப்போது அது தேவையில்லை என்று போராடுகிறோம். தவறு. இப்போதும் பிரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. முதல் அமைச்சர் அரசுச் செலவில் விமானத்தில் போவது போல் அரசாங்கத்தில் பணியாற்றும் ஓர் எழுத்தரோ அல்லது கடைநிலை ஊழியர் விமானத்தில் செல்ல முடியுமா? முடியாது. காரணம் அரசாங்கம் பணியாளர்களை பல வகைகளாக - நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளது. அது போலத்தான் வாழ்க்கை நெறிமுறைக்கு வழிகாட்டக்கூடிய தன்மைகள் காலத்துக்கு ஏற்றவாறு மாறத்தான் செய்யும். நாம் மாற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும். உடையலங்காரம் அல்லது உணவு வகைகளை வேதகாலத்தில் உள்ளது போல் நாம் இப்போது வைத்துள்ளோமா? இல்லை. இவற்றை எல்லாம் மாற்றமுடியும் என்றால் தேவைக்கேற்றபடி பிற பணிகளிலும் மாற்றம் செய்து கொள்ளலாம்.)
கடல் கடந்து சென்று திரும்பினால் முன்னாள் கோவிலுக்கும் விடமாட்டார்கள்.  ஆனால் இப்போது அப்படியா?  மேரி இருக்கிறோம் அல்லவா?
வீட்டில் மகனே இல்லை என்றால் முன்னோர் முக்தி அடைய வழி என்ன?
ஆண் சந்ததி இருந்தும் முன்னோர் வழிபாட்டினைச் செய்யவில்லை என்றால்
அதைப் பெண்கள் செய்து முன்னோர்களை அமைதிப்படுத்த வேண்டும். அவர்கள் ஆசியினைப் பெற வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விட நாம் உணவாக உட்கொண்ட- வாழ்க்கையில் பல வேலைகளுக்குப் பயன்படுத்திய
ஒரறிவு ஈறறிவு, முன்று அறிவு, நான்கு அறிவு, ஐந்தறிவு உயிரினங்களுக்கும் நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

வழிபாடு முடிந்தவுடன் நாம் அன்னதானம் போன்ற தானங்களைச் செய்ய வேண்டும். இதை விளக்க மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. போரில் கர்ணன் மாண்ட பிறகு அவன் மேலுலகம் சென்றான். அங்கு அவனுக்கு உணவாகக் கிடைத்தவை தங்கத்தாலான உணவுப் பண்டங்களே. ஏன் என்று கேட்டதற்கு தர்ம தேவதை பதில் சொல்கிறது நீ ஏழைகளுக்கு உணவு அளிக்கவில்லை தங்கத்தால் பரிசே கொடுத்திருக்கிறாய். அன்னதானம் செய்யாததால் உனக்கு இங்கு அன்னம் கிடைக்கவில்லை என்று பதில் உரைக்கப்பட்டது. அதன் பின்னர் 16 நாள் அவகாசம் கேட்டு பூவுலகம் வந்து அன்னதானம் போன்ற பிற தானங்களைச் செய்து பரிகாரம் தேடினான் என்று கதை நீள்கிறது. எனவே மானுடப் பிறவி கிடைக்கும் போதே அன்னதானம் போன்ற பிற தானங்களைச் செய்து மகிழ வேண்டும்.

. பாரதமெங்கும் குறிப்பாகத் தமிழகமெங்கும் எண்ணற்ற சித்தர்கள் மற்றும் மாமுனிகள் சீவசமாதிகள் உள்ளன. இப்படிப்பட்ட சத்குருக்களை யதீந்ந்திரர்கள் என்பர். இங்கே பௌர்ணமி, துவாதசி போன்ற திதி நாட்களில் சாம்பிராணி தூபமிட்டு, மந்தாரை இலைகளில் முழுமையுமாக உணவு வகைகளை வைத்து குறைந்தது 12 பேர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். ஆசிகள் பெற்றிட வேண்டும். இவற்றை யதிமாளயத் திருநாளில் செய்வது மிக உத்தமம்.

இது தவிர பிந்து தர்ப்பண பூசை என்பதை நம் முன்னோர்களாகிய சித்தர்கள் நமக்கு வகுத்துக் கொடுத்துள்ளனர். பிந்து என்பது சீவனின் கரு ஆகும். சீவனின் கரு என்பது நமது சூக்கும சரீரங்களின் பிறப்புகளுக்குக் காரணமாக அமைகிறது. முற்காலத்தில் சந்தியாவந்தனம், அமாவாசை பூசை முதலியவற்றில் பித்ரு பூசை ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. இதனால் பித்ரு என்னும் தெய்வீக நிலை அடைந்த நம் முன்னோர்கள் உளம் மகிழ்ந்து தம் குலத்தினருக்கு அருளாசியை வழங்கினார்கள். மேல்நிலை அடைந்த நம் முன்னோர்கள் நாம் மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை நாம் உணர்ந்து வாழ வேண்டும் என்று கருதுகிறார்கள். எனவே தான் அக்காலத்திலே பலவிதமான தானங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் ஓமங்கள் செய்யும் போது தானங்களும் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஆடை அளித்தல், உணவு அளித்தல், குடை அளித்தல், காலணி அளித்தல், பசுவினை வழங்குதல், செல்வத்தை-தங்கத்தை வழங்குதல், பாத்திரங்கள் வழங்குதல், விளக்கு வழங்குதல், படுக்கை வழங்குதல் போன்ற பலவித தானங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. தனமுள்ளவன் தானம் செய்யவேண்டும் என்பது விதி. அப்போது தான் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து வரும் தலைமுறை சிறப்பாக இருக்க வேண்டும். தனம் உள்ளவன் தானம் செய்யாமல் தனக்கே ஒதுக்கி மகிழ்ந்தால் அவனுடைய வரப்போகின்ற தலைமுறை அல்லலுக்கு ஆளாக நேரிடும் என்பது நிதர்சனமான உண்மை. இதை நாம் பல குடும்பங்களின் தலைமுறைகளை ஆராய்ந்தால் புலப்படும்.

இது தவிர நித்ய தர்ப்பணப் பூசை என்பதுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது என்ன தினசரி செய்ய வேண்டிய முன்னோர் பூசை?

தினமும் காலையில் எழுந்து இறைவனைத் துதித்து சிறிது நீர் அருந்தி பின்னர் தேனில் ஊறிய இஞ்சியை எடுத்து இறைவா இதை என் முன்னோர்களைத் திருப்திப்படுத்த உட்கொள்கிறேன் எனக் கூறி உட்கொள்ள வேண்டும். முன்னோர்களே இதை மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறி உட்கொள்ள வேண்டும். சில பொருட்களை நாம் பூசைக்கு உகந்தவையாக ஏற்றுக் கொள்கிறோம். அவை வாடினாலும் பூசைக்காக ஏற்றுக் கொள்ளப்படும். துளசி, வில்வம், விபூதி, தேன், இஞ்சி போன்றவை இவற்றில் அடக்கம். இவற்றை நீங்கள் வெளியூருக்குச் சென்றாலும் எடுத்துச் சென்று தடையில்லாமல் முன்னோர்களை வழிபடலாம்.

இப்படி முன்னோர் கடனை நாம் அடைக்க - தினமும் - முடியாத பட்சத்தில் - அமாவாசை அன்று - கிரகணங்களின் போது - அவர்கள் நினைவு நாள் அன்று - நினைத்து துதித்து அவர்கள் ஆசியைப் பெற்று வளமுடன் வாழ வேண்டும்.  எந்தெந்த விஷயத்திலோ நாம் வெளிநாட்டவர்களைப் போல் நடக்க முயற்சி செய்கிறோம்.  அவர்களது கல்லறைகளைப் போய்ப் பாருங்கள்.  அமெரிக்காவில் எல்லாம் எப்படி வைத்து இருக்கிறார்கள்.  முன்னோர்களுக்கு எப்படி மரியாதை செய்கிறார்கள்.  IN GOD WE TRUST  என்று தங்கள் பணத்தில் அச்சிட்டு வழங்குகிறார்கள்.  இங்கே நாமோ கடவுள் இல்லை என்று சொல்பவனைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம்.  கடவுளை நம்புபவன் முட்டாள் என்று  கூறுபவனைத் தலைவன் என்று ஏற்றுக் கொள்கிறோம்.  நம் இன்னல்களுக்கு மூல காரணமே நம்பாமை தான்.  இந்த ஆமை தான் நமது நாட்டில் நுழைந்து எல்லோரையும் கெடுத்து விட்டது.

ஏன் தர்பைப் புல் உபயோகிக்க வேண்டும்?
ஏன் எள் உபயோகிக்க வேண்டும்? இப்படி பல கேள்விகள்.  அவ்வளவுக்கும் ஏன் குருநாதர் ஜெயஸ்ரீ சாரநாதன் தன்னுடைய பெயரில் வைத்திருக்கும் வலைத் தளத்தில்  பதில் சொல்கிறார்.  நானும் அவ்வப்போது தமிழில் தருகிறேன்.

MUNNOR VAZHIPAADU - RIG VEDA TEXT
முன்னோர்களை எப்படி மனம் உருக அழைக்க வேண்டும் என்று ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதாகவும்  கூறி அதன் ஆங்கில மொழி பெயர்ப்பைக் கொடுத்திருக்கிறார் என் குருநாதர் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள்.
The Rig hymn is given here.
This contains the entire essence of tarpanam. HYMN XV. Pithrus (Fathers)
1. MAY they ascend, the lowest, highest, midmost, the Fathers who deserve a share of Soma- May they who have attained the life of spirits, gentle and righteous, aid us when we call them.
2 Now let us pay this homage to the Fathers, to those who passed of old and those who followed, Those who have rested in the earthly region, and those who dwell among the Mighty Races.
3 1 have attained the gracious-minded Fathers, I have gained son and progeny from Visnu. They who enjoy pressed juices with oblation seated on sacred grass, come oftenest hither.
4 Fathers who sit on sacred grass, come, help us: these offerings have we made for you; accept them. So come to us with most auspicious favour, and give us health and strength without a trouble.
5 May they, the Fathers, worthy of the Soma, invited to their favourite oblations. Laid on the sacred grass, come nigh and listen: may they be gracious unto us and bless us.
6 Bowing your bended knees and seated southward, accept this sacrifice of ours with favour. Punish us not for any sin, O Fathers, which we through human frailty have committed.
7 Lapped in the bosom of the purple Mornings, give riches to the man who brings oblations. Grant to your sons a portion of that treasure, and, present, give them energy, ye Fathers.
8 Our ancient Fathers who deserve the Soma, who came, most noble, to our Soma banquet,- With these let Yama, yearning with the yearning, rejoicing eat our offerings at his pleasure.
9 Come to us, Agni, with the gracioug Fathers who dwell in glowing light, the very Kavyas, Who thirsted mid the Gods, who hasten hither, oblation winners, theme of singers' praises.
10 Come, Agni, come with countless ancient Fathers, dwellers in light, primeval, God-adorers, Eaters and drinkers of oblations, truthful, who travel with the Deities and Indra.
11 Fathers whom Agni's flames have tasted, come ye nigh: ye kindly leaders, take ye each your proper place. Eat sacrificial food presented on the grass: grant riches with a multitude of hero sons.
12 Thou, Agni Jatavedas, when entreated, didst bear the offerings which thou madest fragrant, And give them to the Fathers who did cat them with Svadha. Eat, thou God, the gifts we bring thee.
13 Thou, Jatavedas, knowest well the number of Fathers who are here and who are absent, Of Fathers whom we know and whom we know not: accept the sacrifice wellprepared with portions.
14 They who, consumed by fire or not cremated, joy in their offering in the midst of heaven,- Grant them, O Sovran Lord, the world of spirits and their own body, as thy pleasure wills it.
எங்கள் முன்னோர்களே எங்கே நீங்கள் இருந்தாலும் இப்போது இங்கே வந்து இந்த தர்பைப் புல் ஆசனத்தின் மீது அமருங்கள்.  உங்கள் பெயர் சொல்லி இருந்தாலும் சொல்ல விட்டாலும் என் முன்னோர்களே வாருங்கள் வந்து அமருங்கள்.  வந்து எங்களையும் எங்கள் வம்சத்தினரையும் வாழ்த்துங்கள்.  இடர் எதுவும் எங்களை அணுகாத படி நாங்கள் வாழ ஆசி வழங்குங்கள்.  என்று நாம் நமது முன்னோர்களை இறைஞ்ச வேண்டும்.  உரிய மரியாதைகளை செய்து அவர்களை திரும்ப அவரவர் இடத்திற்கு அனுப்ப வேண்டும்.  இது தான் நமது கடமை.
பின்னர் இறைவனிடம் அவர்களுக்காக இறைஞ்ச வேண்டும்.  அவர்களுக்கு நல்ல வாழ்வு அளித்து அவர்களை இறை உலகத்திற்கு அழைத்துச் செல்லும்படி நாம் வேண்ட வேண்டும்.  பிற பிறவிகளில் இருந்து பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து மீண்டு அவர்களை இஎரைவனுடன் சேர்த்துக் கொள்ளும் படி நாம் இறைவனை வேண்ட வேண்டும்.  இது தான் மனிதனாக பிறந்த நமது கடமை.  முன்னோர்களுக்கான கடன்.
"இறைவனே எங்கள் முன்னோர்கள் எந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் விரும்பியதை வழங்குங்கள்.  அவர்கள் புதைக்கப்பட்டு இருந்தாலும் எரியூட்டப்பட்டிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவர்களை வாழ்த்தி உயர்த்துங்கள் இறைவனே."
எல்லோரும் இந்த பட்சம் முழுவதும் இப்படி இறைவனை வேண்டுங்கள்.  மனம் உருக வேண்டுங்கள்.  முன்னோர்களுக்காக மட்டும் அல்ல - நமக்காக பயன்படுத்திய அத்தனை உயிரினங்களுக்கும் இப்படி வேண்டுங்கள்.


Halloween day - whether it is related to pithru pooja?
நான் அமெரிக்காவில் தொலைகாட்சியில் திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் உண்டு.  ஆனால் சில நாட்களாக திகில் திரைப்படங்களாக வந்தன.  அதிலே பூசணிக்காய் அடிக்கடி காண்பிக்கும் கட்சிகளும் வந்தன.  என் மகனிடம் ஏன் இப்படிப்பட்ட திரைப்படங்களைப் போடுகிறார்கள் எனறு கேட்டேன்.   இந்த மாதம் பூராவும் இப்படித் தான் இருக்கும் எனறு பதில் வந்தது.  திடீர் எனறு சில வீடுகளின் வாசல்களில் அச்சமூட்டும் வகையில் பொம்மைகள் வைக்கப்பட்டன.  பேரங்காடிகளில் கருப்பு வண்ண அச்சமூட்டும் பொம்மைகள் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன.  கேட்டதற்கு ஹல்லோவீன் நாள் வருகிறது அதனால் தான்
இப்படி வருகிறது எனறு சொன்னார்கள்.  நான் யோசித்துப் பார்த்தேன்.  எங்கள் சமுதாயத்தில் புரட்டாசி மதத்தை பூத மாதம் எனறு சொல்லுவார்கள்.  புரட்டாசி மாதத்தில் தான் மகாளய
அமாவாசை வருகிறது.  மகாளய பட்சம் வருகிறது.  புரட்டாசி மாதத்தில் தான் நம் சமுதாய மக்களில் பலர் கோவிந்தா லக்ஷம் கோவிந்தா எனறு சனிக்கிழமைகளில் வீடுகளில் பிச்சை கேட்டு இறைவனுக்கு படையல் படைக்கும் விசேஷம் நடக்கும்.  இங்கும் அதுபோல இந்த   நாட்களில் அக்டோபர் 31 அன்று குழந்தைகள் பாத்திரம் ஏந்தி பிச்சை கேட்கும் நிகழ்ச்சி  நடப்பதாகவும் கூறினார்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  தகவலைத் திரட்ட விக்கிபீடியாவை  நாடினேன். அதில் உள்ள தகவல்களில் சில பகுதியை அப்படியே தருகிறேன்.
Celtic Pagans consider the season a holy time of year.Celtic Reconstructionists, and others who maintain ancestral customs, make offerings to the gods and the ancestors.
ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும்.   ஆம்.  இங்கு இது ஒரு விடுமுறை நாளாக உள்ளது.அமெரிக்காவில் யுனிசெப் நிதி திரட்டும் திட்டம் இந்த கொண்டாட்டத்துடன் சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது. பிலடெல்பியாவின் புறநகர்ப் பகுதி ஒன்றில் 1950 ஆம் ஆண்டில் இவ்வழக்கம் அறிமுகமானது. பின்னர் அது 1952 ஆம் ஆண்டில் தேசிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டது. பள்ளிகள் தங்கள் மாணவர்களின் கைகளில் சிறு பரிசுப் பெட்டிகளை கொடுத்து வீடுகளுக்கு அனுப்புவார்கள். அவர்கள் வீடுகளில் இருந்து யுனிசெப்புக்கான ஆலோவீன் நிதியைப் பெற்றுத் திரும்புவர். இத்தகைய வகையில் இதுவரை 118 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை மாணவர்கள் திரட்டியளித்துள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.  படைப்பதாக கொண்டாடுகிறோம்.
இது செல்டிக் புது வருடம் என அறியப்படும்.[7]
இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான இடைவெளி இந்நாளில் மெலிந்து போவதாய் பழைய செல்ட் இனத்தவர் நம்பினர். அன்றைய நாளில் தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர்.   நாமும் நமது முன்னோர்கள் இந்த மகாளய பட்சத்தில் வருவதாகக் கருதி வழிபடுகிறோம்.  மகாளய அமாவசை முன்னோர் வழிபாட்டுக்கு ஒரு முக்கிய தினமாக உள்ளது.  நாமும் ஏறத்தாழ இந்த நேரத்தில் தான் நமது முன்னோர்களை வழிபடுகிறோம்.  முன்னோர் வழிபாடு என்பது உலகம் பூராவும் பரவி உள்ளதற்கு இது ஒரு அடையாளம்.  ஆனால் கிருத்துவ சமயவாதிகள் இந்த விழாவை எதிர்பதாகவும் இது பேகன் எனும் உருவ வழிபாடு செய்வோரின் வழக்கம் என்றும் அவர்கள் கூறுவதாகவும் அந்தக் கட்டுரை மூலம் தெரிகிறது.  தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.
இந்த கொண்டாட்டத்தில் ஒரு சிறிய தீயை எழுப்பி அவற்றுள் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் இடப்படுகின்றன. பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் கெட்ட ஆவிகள் செய்வதைப் போல கிழிக்கப்படுகின்றன.
 சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.
நாமும் போகிப் பண்டிகையின் போது இப்படி  செய்கிறோமே.
நாம் புரட்டாசியில் பிச்சை வாங்கி இறைவனுக்குப்
அடுத்த பதிவில் மீண்டும் தொடரலாம்.

https://pithrupooja.blogspot.com/2010/10/pitru-pooja-on-mahaalaya-amaavasya.html
PITRU POOJA ON MAHAALAYA AMAAVASYA
பித்ரு பூஜையை நாம் ஏன் செய்ய வேண்டும் என்று என் நண்பர் என்னிடம் கேட்டு இருந்தார்.   நான் அவரை ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் கட்டுரையையும் அதன் தொடர்பாக வந்த கேள்வி பதில்களையும் தமிழ் ஹிந்துவில் பார்த்து படிக்கும் படியும் முடிந்தால் குருஜி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் பதிவுகளை படித்துத் தெரிந்து கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டேன்.  இருந்தாலும் ஒருதடவை சுருக்கமாக நினைவு கூறவேண்டியது மகாளய அமாவாசையின் போது செய்ய வேண்டிய ஒரு கடமை.
பெற்றோர், பாட்டன்- பாட்டி,முப்பாட்டன்-பாட்டி என்று மூன்று தலைமுறைகளிலிருந்து முறையே, physical (Bhoo tattwa), vital (bhuvah tattwa), mental (swah tattwa) என்று
உடல் ரீதியானது,இரத்தம் போன்ற திரவ ரீதியானது,மனம் என்னும் அறிவு, மனநிலை ரீதியானது
என்றவாறு மூன்று நிலைகளில் பெறுகிறோம்.
மருத்துவ ஆராய்ச்சியிலும் இது தெரியவந்துள்ளது -
அதாவது physical - உருவம் சம்பந்தமான எலும்பு போன்றவற்றின் அமைப்பு பெற்றோரை ஒட்டி அமைகிறது.
இரத்தம், ஹார்மோன்கள் போன்றவை பாட்டன்மாரிடமிருந்து வருகிறது. உதாரணமாக, ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் வந்தால், அவரது பிள்ளைக்கு அந்த நோய் வரும் சாத்தியத்தை விட, பேரனுக்கு வரும் சாத்தியம் அதிகம்.
மனநிலை சம்பந்தப்பட்டவை, அறிவு கூர்மை முதலியன, முப்பாட்டன்மாரிடமிருந்து வருகின்றன.
அவர்களுக்கு பித்ரு காரியம் செய்யும்போது, இந்த மூன்று நிலைகளில் நாம் அவர்களிடமிருந்து பெற்றது, அவர்களைத் திரும்பி அடைகிறது.
அவர்கள் மறு பிறவி எடுத்திருந்தாலும், அவர்களை அடைகிறது. உதாரணமாக மறு பிறவி எடுத்த முப்பாட்டனுக்கு, நாம் தரும் தர்ப்பணம், அவரது, அப்போதைய மனோ நிலையில் ஒரு செறிவைக் கூட்டித் தருகிறது. ஒரு செயலை எப்படிச் செய்வது என்ற தவிப்பில் அவர் அப்பொழுது இருந்தால், சட்டென்று ஒரு idea உதயமாகி மனம் சரியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
எனவே முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடனைத் தவறாமல் செய்யுங்கள்.   ஏதாவது கோவிலில் இறைவன் இந்த மாதிரி தனது பக்தனுக்காக செய்கிறாரா என்றும் அவர் கேட்டார்.  சரி முதலில் அவர் படிக்கும் முன் செய்திச் சுருக்கம் போல் தருவோம் என்று கூறினேன்.  திருவண்ணமலையில் அருணச்சலேஸ்வரரே இப்படி வள்ளலா மகாராஜாவுக்காக செய்வதாகக் கூறுவார்கள்.  மேலும் நான்   நடந்து கொண்டிருக்கும்.  இறைவனே பிதுர் காரியத்தை ஒரு கடனாகச் செய்யும் போது நாம் எம்மாத்திரம்?  மறவாமல் பித்ரு காரியங்களைச் செய்யுங்கள்.
 சொன்னா கட்டுரையில் வந்த தகவல். "செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் உள்ள நென்மேலி என்ற கிராமத்திலிருக்கும் பெருமாளும் தன் பக்தனுக்குப் பிண்டம் கொடுக்கிறார். இதைப் பற்றி திரு AMR அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் எழுதியிருந்தார்.இந்தக் கோயிலுக்குச் சென்று நானும் தரிசித்திருக்கிறேன்.

பக்தனுக்கு ஈமக் கிரியையும், வருடாந்திர திவசமும் செய்யும் பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் என்னும் ஆராவமுதன் ஆவார். நாராயண சுவாமி என்னும் தன பக்தனுக்கு இவ்வாறு செய்கிறார்.

இந்த பிண்டம் வைக்கும் பகவான் மாயாபூர் கோபிநாத்.
கோவிந்த கோஷரின்(சைதன்யா பிரபுவின் சிஷ்யர்) மகன் (மனைவியும்) இறந்துவிட்ட பின் - பகவான் கோபிநாத் கோஷரிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வார் அதாவது மகன் ஸ்தானத்தில் அவர் கோஷர்க்கு பிண்டம் வைப்பதாகவும், அதற்க்கு மாறாக தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கோஷர் நித்யம் பிரசாதம் செய்து தனக்கு கொடுக்க வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்

https://pithrupooja.blogspot.com/2010/10/pitru-pooja-on-amavaasya-why-what-is.html
PITRU POOJA ON AMAVAASYA - WHY - WHAT IS THE REASON?
பல்வேறு சமயங்களில் முன்னோர் வழிபாடு இருந்தாலும் அது செய்யப்படும் நாள் குறித்து
நமக்குத் தகவல்கள் சரியாகக்க் கிடைக்கவில்லை.  ஆனால், நமது சமயங்களில் இந்த வழிபாட்டினை அமாவாசை தினம் அன்று செய்கிறோம்.  என் என்று யோசித்துப் பார்த்தேன்.  ஆம்  சூரியன் என்பவர் நமது சாதகத்தைக் கணிக்கும் போது தந்தைக்கு காரகன் என்று சொல்கிறார்கள்.  சந்திரனை தாய்க்குக் காரகன் என்று சொல்கிறார்கள்.  சூரியனும் சந்திரனும் இணையும் தினமே அமாவாசை என்னும் தினம்.  எனவே தான் நாம் நமது முன்னோர்களை அப்படிப்பட்ட இன்றியமையாத தினத்தில் வழிபடுகிறோம்.  நமது பிறப்புக்கு அவர்கள் தானே காரணம்.
முழுநிலவு நாளை இறைவனின் வழிபாட்டுக்கும்
அமாவாசை நாளை முன்னோர் வழிபாட்டுக்கும்- தென்புலத்தாருக்கும்   வைத்துள்ளார்கள்.
நான் இன்று ஒரு தளத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சுவையான தகவல் கிடைத்தது.  அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  அதில் வந்த வாசகத்தை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.
IV. Karthru Krama (The order of eligibility for carrying out death ceremonies)
1. Chandrika
1000 holy periods of eclipses, 10000 vyathee padam or one lakh Amavasyas are not equivalent to one sixteenth of a dwadasi. Three half crores of such Dwadasi will not become equivalent to one sixteenth of the death day of parents. This means that the death anniversary of our parents is a very holy day. You have to do the rituals with devotion and interest on that day.
பல கோடி துவாதசி தினங்கள் ஒரு பித்ரு பூஜைக்கான தினத்திற்கு ஈடாகாது.  அவ்வளவு இன்றியமையாத தினம் முன்னோர் வழிபாட்டுத் தினம்.  எனவே நாம் நமது முன்னோர்களை அவர்களுக்கு உரிய நாளில் வழிபாடு செய்து பயன் பெற வேண்டும்.  அந்த வழிபாட்டினை உவகையோடு - விருப்போடு - தூய பொருட்களை கொண்டு செய்ய வேண்டும்.

https://pithrupooja.blogspot.com/2010/10/birth-death-what-is-our-duty-inbetween.html
BIRTH - DEATH - WHAT IS OUR DUTY INBETWEEN?
நாம் நமது பிறப்பையோ, இறப்பையோ மிகவும் பொருட்படுத்தாது, நாம் வாழும் இயல்பு நிலையை ஆராய்ந்து பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எது எதற்கோ நாம் நேரம், காலம் என்று செலவழிக்கிறோம், ஆனால் இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு மிகவும் யோசிப்போம். மதுரையில் வாழும் நாம் என்றாவது இரமணர் வசித்த இல்லத்தைப் பார்த்திருக்கோமா?   அந்த இல்லம் எங்கு உள்ளது என்றாவது நமக்குத் தெரியுமா?  ஆம்  அந்த இல்லம் அங்கயற்கண்ணி ஆலயத்தின் எதிர்புறம் உள்ள தெருவில் உள்ளது.   சிறு சிறு நகைக்கடைகளுக்கு நடுவில் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் இருக்கும்.  அதற்கு எதிரில் உள்ள இல்லத்தைநோக்குங்கள்.   அங்கு பெயர்ப் பலகை இருக்கும்.   உள்ளே செல்லுங்கள்.   கண் மூடி துதித்துப் பாருங்கள்.  உங்கள் அனுபவம் வித்தியாசமாக இருக்கும்.  அந்த இல்லத்தின் மாடி அறையில் தான் இரமண மகரிஷிக்கு அந்த மரண அனுபவம் தோன்றி ஞான நிலையை நோக்கிச் செல்லும் எண்ணம் உதித்து உள்ளது.
நமது பிறப்பு மற்றும் மரணம் பற்றி அந்த பெருமகனார்  என்ன  சொல்கிறார் என்று பார்க்கலாமா?
மரண பயம் மிக்க உள அம்மக்கள் அரணாக
மரணபவம் இல்லா மகேசன் - சரணமே
சார்வார் தம் சார்வோடு தாம் சாவுற்றார் சாவு எண்ணம்
சார்வரோ சாவாதவர்
“உள்ளது நாற்பது” என்ற அவர் நூலில் வரும் பாடல் இது.
“நான் இறந்து விட்டேன், இந்த உடலை இப்போது எடுத்துக் கொண்டு போய் மயானத்தில் எரித்து விடுவார்கள்; ஆனால் நான் இன்னும் இதோ இருக்கிறேனே? ஆக நான் இந்த உடல் இல்லை”
என்ற தன் சத்து-சித்து-ஆனந்த நிலையை சிறு வயதிலேயே உணர்ந்த அனுபவத்தின் பேரில் எழுதப்பட்டது என்றே நாம் கொள்ளலாம். இச்செய்யுள் நமக்கு என்ன சொல்கிறது?
மரண பயம் மிகத் தீவிரமாக உள்ள நல்ல குணமுடைய மனிதர்கள், பிறப்பு இறப்பு என்ற இரண்டும் இல்லாத ஒரு பாதுகாப்புள்ள கோட்டையாக விளங்கும் இறைவனின் கால்களைப் பிடித்து இறைஞ்சி  அடைக்கலம் அடைவார்கள். தனது பந்த பாசங்கள், பற்றுக்கள் இவைகளோடு அடைக்கலம் அடைந்தவர்கள் தம்முடைய ஜீவ பாவமும் அறவே ஒழிந்தவர் ஆவார்கள். அப்படிச் சாவாத தன்மையடைந்த ஜீவன் முக்தர்கள் மறுபடியும் மரணத்தைப் பற்றிய எண்ணத்தை அடைவார்களோ?
சாதாரணமாக ஒருவனின் வைராக்கியத்தைச் சொல்லும்போது பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் என்று இரண்டைச் சொல்வார்கள். ஒன்று பிறப்பையும், மற்றது இறப்பையும் பற்றியது. இது இரண்டுக்கும் இடையில் தானே வாழ்க்கை அமைகிறது. அதனால் இவ்விரண்டையும் சொல்லி விட்டால் எல்லாம் சொன்னது போல என்று பெரியோர்கள் நினைத்திருக்க வேண்டும்.
ஒருவன் தன் மனைவிக்குக் குழந்தை பிறக்கும் போது படும் கஷ்டத்தை நினைத்துக்கொண்டோ, அல்லது ஒரு பெண்ணே தனது நிலையை நினைத்து அவதிப்படும்போதோ, இன்னுமொரு குழந்தை வேண்டாமே என்று நினைப்பதுதான் பிரசவ வைராக்கியம்.  இது நமது நாட்டில் பெண்களுக்கு உறுதியாக ஏற்படக் கூடிய ஒன்று.   அமெரிக்கத் திருநாட்டில் பிரசவத்தின் போது கணவனும் உடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார்.   மனைவி அல்லல் படுவதை அந்த நாட்டில் கணவன் காண முடிகிறது.   அதனால் பிரசவ வைராக்கியம் ஆண்களுக்கும் அந்த நாட்டில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.   சிற்றின்பத்தின் காரணமாக மனைவி படும் துன்பத்தை நேரில் பார்ப்பதால் குழந்தையின் பேரில் அந்த தந்தைக்கு அதிக ஈடுபாடு வருகிறது.   குழந்தையின் மழலையில் அது காலப் போக்கில் கரைந்து போகலாம்.
அதுபோலவே ஒருவன் தனது உற்றாரோ, சுற்றமோ இறந்து போகும்போது, மயானத்தில் இட்டு விட்டு வரும் போது நமக்கும் ஒருநாள் இப்படித்தானே நடக்கும், இனி அனைவருடனும் மிக அன்பாகவும், கருணையுடனும் இருக்க வேண்டும் என்று நினைப்பது மயான வைராக்கியம்.   பணம் - புகழ் எதுவும் உடன் வராது என்பது விளங்கும்.  அப்படியானால் இறுதி வரை எது வரும்?    நான் யார்? அழியும் இந்த உடலா?  அழியாத உயிரா?   ஏன் இந்தப் பிறவி?  மற்ற உயிரினங்களையும் இறைவன் படித்து உள்ளானே?   ஓர் அறிவு முதல் ஐந்து அறிவு வரை உள்ள உயிரனமாக தான் பிறக்காது பகுத்து அறியும் ஆறாவது அறிவுடன் பிறந்தது ஏன் என்ற கேள்வி பிறக்கும்.  இதுவும் பின்னாளில் ஓரளவாவது கரையக் கூடும்.  சிலர் தொடர்ந்து நான் யார் நான் யார் என்ற கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஆனாலும் ஒருவரை நல் வழியில் கொண்டு வருவதற்கு, மரண பயத்தைப் போன்றதொரு சாதனம் வேறு கிடையாது. ஞானம் பெறுவதற்கும், நாம் உலகில் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்வதற்கும் அது ஒரு பயனுள்ள சாதனம் தான்.இரமணருக்கு ஞானம் அப்படித்தான் வந்தது. மற்றவர்கள் நல்ல வழியில் செல்வதற்காவது அதை உபயோகப்படுத்திக் கொண்டால் அவர்களுக்கு நன்மையே.
அப்படி வரும் மரண பயத்தைப் பற்றி சிறிதேனும் யோசித்தவர்கள் நன்கு தெளிவு அடைவார்கள். ஏனெனில், மரணம் என்பதை யாரும் தவிர்க்க முடியாது. ஒன்று சொல்வார்களே? வாழ்க்கையில் நிச்சயமானது என்று ஒன்று உண்டென்றால் அது மரணம்தான் என்று. இதை விட உண்மையான வாக்கியம் வேறு ஒன்று உண்டோ? தவிர்க்க முடியாது என்பதை நினைவில் கொண்டு மேலும் அதை அலசினால், அப்படிப்பட்ட மனிதர்களில் பலர் முதலில் செய்வதென்ன?
இறைவனைத் துதிப்பார்கள். ஏன்? மரணம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு முடிவினைக் குறிக்கிறது. அதனால் முடிவே இல்லாத இறைவனைத் துதித்து முடிவுள்ள தமக்கு ஒரு பாதுகாப்பினைத் தேடுகிறார்கள். அப்படித் தேடுபவர்கள், முடிவில்லாத இறைவனிடம் அடைக்கலம் அடைகிறார்கள் என்றுதான் பொருள். அந்தச் சரணாகதி ஒரு முழுச் சரணாகதி என்றால் இறைவனை நாடுபவர்களும் இறைவனைப் போலவே முடிவற்றவர்களாக ஆவதால், அவர்களுக்குச் சாவு என்று ஏதும் உண்டோ என்று கேட்கிறார் இரமணர். அதற்குப் பின்னும் அவர்களுக்கு மரண  பயம் வருமென்றால், அவர்களது சரணாகதி முற்றான  சரணாகதி இல்லை என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?
அப்படியென்றால் அவர்கள் தங்கள் சரணாகதியை முற்றாக்கும்  முயற்சியில்தான் ஈடுபட வேண்டும். எவ்வளவோ முயன்றுதான் பார்க்கிறேன், முடியவில்லையே என்று பலர் சொல்வார்கள். சிலர் இப்படித்தான் எனக்கு இருக்கும் போலிருக்கிறது, என்று தம் வினையை நொந்து கொள்வார்கள். அதற்கு இரமணர் என்ன சொல்வார் என்று பார்க்கலாம்.
வினை முதல் நாம் ஆயின் வினைப் பயன் துய்ப்போம்
வினை முதல் ஆரென்று வினவித் - தனை அறிய
கர்த்தத்துவம் போய்க் கருமம் மூன்றும் கழலும்
நித்தமாம் முக்தி நிலை
 செய்யப்படும் செயல்களின்  கர்த்தா நாமே என்று எண்ணினால், அந்தக் கர்மங்களினால் விளையக்கூடிய பயனையும் நாமே அனுபவிப்போம். இந்தக் செயல்களைச்  செய்யும் கர்த்தாவாகிய நான் யார் என்று விசாரித்து தனது உண்மை நிலையை  அறிந்தால், செயல்களைச்  செய்யும் கர்த்தா நான் அன்னும் அகம்பாவம்  நீங்கும்.   நான் என்ற நினைப்பு - எண்ணம் நம் மனதிலிருந்து அகல வேண்டும்.  அத்துடன் சஞ்சிதம், ஆகாமியம், பிராப்தம் என்ற மூன்று கர்மங்களும் அழிந்துவிடும்.   முன்வினை அழியும்.  இப்பிறப்பில் உள்ள வினை அகலும்.   இரட்டைகளிருந்து - நல்லது, கெட்டது - என்று பகுத்துப் பார்க்காமல் எல்லாம் இறைவன் நமக்குத் தந்த அனுபவம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.  இன்பங்கள் வரும் போது நாம் இறைவனை நினைப்பது இல்லை.  துன்பம் வரும் போது மட்டும் துன்பத்தின் காரணத்தைத் தெரிந்து கொள்ள ஜோதிடம் பார்க்கிறோம்.  என் நல்லது நடந்தது என்று யாராவது ஜோதிடம் பார்கிரோமா? கிடையாது.   எல்லாம் இறைவன் செயல் என்று ஏற்றுக்கொள்ளும் பற்றற்ற நிலை நோக்கி சிறிது சிறுதாக நாம் பழக வேண்டும்.  இந்த நிலையே நித்தியமாகிய முக்தி நிலை.
இது “நான்” எனும் கணவன் இறந்துவிட்டால் அவனது மூன்று மனைவிகளும் கைம்மை அடைவதைப்போல, கர்த்தா நான் இல்லை என்றால் கர்மம் மூன்றும் நம்மை ஒட்டாது. இது  முன்பே இரமணர் சொன்ன கருத்துதான். ஆனாலும் இதில் ஒரு சிறப்பு என்ன என்றால், அப்படி அவர் முன்பு சொன்னது ஞானிகள் விஷயத்தில். இப்போது அவர் சொல்வதோ எவர் விஷயத்திற்கும் பொருந்தும். இதுதான் இரமணர் போன்ற ஞானிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் கண்ணில் ஞானி என்றோ, அஞ்ஞானி என்றோ எந்தப் பாகுபாடும் கிடையாது. “நான்” எனும் தன்முனைப்பாகிய அகந்தையை  அழித்துவிட்டு ஒருவன் இருக்கிறான், இன்னொருவன் அதை அழிக்க முடியாது இருக்கிறான். அதைத் தவிர வேறு வித்தியாசம் ஏதும் இல்லை.
ஆக நம்மைப் பொறுத்தவரை நாம் ஞானி ஆவதற்கு ஒரு எளிதான வழி சொல்லியிருக்கிறார். அதாவது, நாம் செய்யும் செயல் எதுவானாலும் “அது அவன் செயல்” என்று உளமார நினைத்து அவனுக்காகவே செய்ய வேண்டும். அது போதும். இதுவேதான் முற்றான  சரணாகதி என்று சொல்லப்படுவது அல்லவா? அதில் சிறிது தவறி நாம் செய்கிறோம் என்றோ, அவனா செய்கிறான் என்றோ சிறிதாவது சந்தேகம் அடைந்தாலோ, நாம் நமது வினையைக் கூட்டிக் கொள்கிறோம் என்றே ஆகும். அப்போது அதன் பலனையும் நாமே எதிர்கொள்ள வேண்டும் - இப்பிறவியிலோ அல்லது எப்பிறவியிலோ. அப்படி என்றால் பிறந்தவன் எவன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
பிறந்தது எவன் தன் பிரம்ம மூலத்தே
பிறந்தது எவண் நான் என்று பேணிப் - பிறந்தான்
அவனே பிறந்தான் அவன் நிதம் முனீசன்
அவன் நவன் நவன் தினமும் நாடு
எவனொருவன் தான் பிறந்தது எங்கே என்று விசாரித்து, தனது இருப்பிடமாகிய பிரம்ம மூலத்தில் பிறந்தானோ (மூலத்தை அடைந்தானோ) அவனே பிறந்தவன் ஆவான். அப்படிப் பிறந்த அவன் நித்தியமான முனீசன் ஆவான். அவன் எப்போதும் புதுமையோடு விளங்குவான் என்று அறியவேண்டும்.
நான் உடல் இல்லை - மனம் இல்லை -புத்தி இல்லை  …. என்று இவ்வாறான நிலைகள் எல்லாவற்றையும் கடந்து எவன் தனது “என்றும் உள்ள”  வடிவத்தை உணர்ந்து அதிலேயே நிலைத்து நின்று, சகல உயிரினங்களையும்  அவ்வாறே காண்கிறானோ, அவனே பிறப்பு - இறப்பு எனும் நிலைகளைக் கடந்த சிறப்பை அடைந்தவன். அதுவரை அவன் மீண்டும் மீண்டும் வந்து இறுதியில் இந்த நிலையையே அடைகிறான். “அடைகிறான்” என்பதைவிட “என்றும் இப்படியே உள்ளோம்; ஆனாலும் அதை உணராது இருந்தோம்” என்பதைத் தெரிந்து கொள்கிறான். இதுவே பேரறிவு எனப்படுகிறது. எதைத் தெரிந்து கொண்டால் மேலும் தெரிவதற்கு ஏதுமில்லையோ அதைவிட சிறப்பு ஏதும் உண்டோ?
அந்தச் சிறப்பை அடைபவர்கள் எந்த வழி அவர்களுக்கு இயல்பாக இருக்கிறதோ அதன் மூலம் அடையலாம், வேறு வழிகள் வாயிலாய் வந்து சேர்ந்தாலும் மற்ற வழிகளின் தாக்கங்களையும் அவர்கள் அப்போது உணரலாம். ரமணர் உறுதியாகக் கூறுகிறார்:
ஆதலினால் அறிவு மயமாம் சுத்த
இதயத்தே அகத்தைச் சேர்க்கும்
சாதனையால் வாதனைகளொடு வாயு
ஒடுக்கமுமே சாருந் தானே
 அறிவு சொரூபமான தூய சச்சிதானந்த இதயத்தில் மனதை அதனிடம் சேர்க்கும் பயிற்சியினால் வாசனைகளின் அழிவும், பிராண வாயுவின் ஒடுக்கமும் தானாகவே அடையக்கூடும்.
ஒருவன் தனது இயல்பான வழிகளில் செல்லும் மனத்தைக் கட்டுப் படுத்தியோ, பிராண வாயுவை அடக்கிச் செய்யும் பயிற்சிகள் மூலமோ, இறைவனிடம் பக்தி செலுத்தியோ, தம் தம் கடமைகளைச் செவ்வனே ஆற்றியோ, வேறு எந்த வழிகளிலோ சென்று தனது ஆன்ம நிலையை எய்தலாம். ஆன்ம நிலையை எய்தியவன் மேலே சொன்ன அனைத்தும் தமக்குப் பொருந்துகிறது என்றும் பின்னர் உணரலாம். காரணத்தினால் காரியத்தையும், காரியத்தினால் காரணத்தையும் முன்னும் பின்னுமாக இருவரும் உணர்வார்கள்.
நான் இதைச் செய்து அதை அடைந்தேன் என்று இங்கு கூற வாய்ப்பில்லை. நான் என்னை விசாரித்துத் தன்னை உணர்ந்தேன், ஆனாலும் அன்றும் இன்றும் எப்போதும் அப்படியே உள்ளேன் என்று சொல்லாமல் சொல்லி, நினையாமல் நினைப்பதே இங்கு உள்ள சிறப்பு.
சரி நேரம் கிடைத்தால் மதுரையில் உள்ள அன்பர்கள் அவர் வசித்த இல்லத்திற்குச் சென்று வாருங்கள்.   அவர் பிறந்த இடம் கூட மதுரைக்கு அருகில் உள்ளது.  காரியாபட்டியில் இருந்தும் அருப்புக்கோட்டையில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.  திருச்சுழி என்பது அந்த ஊரின் பெயர்.  ஒரு பெரிய சிவன் கோவிலும் உள்ளது.  பாண்டிய நாட்டுத் தலங்களிலே ஒன்று இந்த தலம்.


INRU VETRITH THIRUNAAL - SAKTHIK KADAVULAITH THOZHUVOM
ஒன்பது நாள் இரவுத் திருவிழா முடிந்து வெற்றித் திருநாள் வந்து விட்டது.   கோவில்களில் கூட்டம் அலைமோதியது.   இறைவியை அழகு படுத்தி அலங்காரவல்லியாக மக்கள் கண்டு களித்தனர்.   இந்த ஒன்பது நாளும் நான் பாரதியாரின் தோத்திரதைச் சொன்னேன்.   உள்ளம் எங்கிலும் புத்துணர்ச்சி பொங்கியது.இதோ அந்த தோத்திரம்.
எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றி
மற்று ஆங்கே
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி
வேண்டினேனுக்கு அருளினள் காளி,
தடுத்து நிற்பது தெய்வதமேனும்
சாரு மானுடவாயினும் அதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி,
பாரில் வெற்றி எனக்குறுமாறே
என்னும் எண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி எதனினும் வெற்றி,
கண்ணும்   ஆருயிரும் என நின்றாள்
காளித்தாய் இங்கு  எனக்கருள் செய்தாள்,
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கி நில்லாவோ?
விண்ணு ளோர்  பணிந்து  ஏவல் செய்யாரோ?
வெல்க காளி பதங்கள் என்பார்க்கே.
- மகாகவி பாரதி

இந்த இறைவியைத் தான் எப்படி எல்லாம் கவிஞர்கள் போற்றுகிறார்கள் - அதையும் இன்று பார்ப்போமே. புராணங்களில் இறைவியின் திரு அவதாரமும்,  பெருமைகளும்  கூறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா ஆயிரம் திருநாமம் என்னும் தோத்திரம் உள்ளது. அயக்ரீவர் என்ற மகரிஷி (திருமாலின் திருஅவதாரமாகக் கூறப் படுவதும் உண்டு) பொதிகையில் வாழ்ந்த தமிழ் முனிவர் என்று போற்றப்படுகிற அகத்திய முனிவருக்கு உபதேசம் செய்வதாக 183 பாடல்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப் பட்டுள்ளது. அகத்தியரும், அவரது மனைவி உலோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள் (உ லோபாமுத்திரையால் போற்றப் பட்டவள் என்றே ஒரு நாமம் லலிதா ஆயிரம்திருநாமத்தில் உண்டு).  இதிலே வரும் சில போற்றிகளை நாம் இன்று பார்ப்போம்.
 அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவளே போற்றி
 ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவளே போற்றி
தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவளே போற்றி
 மனமாகிய கரும்புவில்லை உடையவளே போற்றி
ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவளே போற்றி
பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளே போற்றி
 பின்  அங்குசத்தால் பாசத்தை- ஆசையை  வெட்டி எறிபவளே போற்றி.
 நீண்ட கண்களையுடையவளே போற்றி
 சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்கச் செய்பவளே போற்றி
 கால் நகங்களின் ஒளியால் வணங்குவோர் அகத்திலுள்ள இருட்குணங்களை அகற்றுபவளே போற்றி
 அவள் பாதகமலத்தின் தூசியே வேத மங்கையின் வகிட்டில் விளங்கும் குங்குமம்
 அனைத்து ஆகமங்களாகிய சிப்பிகளுக்கும் உள்ளிருக்கும் நன்முத்தே போற்றி
 கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவளே போற்றி
கலியின் களங்கங்களை நாசம் செய்பவளே போற்றி
 ஆசையற்றவளே போற்றி
ஆசையைப் போக்குபவளே போற்றி
மோகமற்றவளே போற்றி
மோகத்தை நாசம் செய்பவளே போற்றி
பாவமற்றவளே போற்றி
பாவத்தை நாசம் செய்பவளே போற்றி
வேற்றுமையில்லாதவளே போற்றி
வேற்றுமையைப் போக்குபவளே போற்றி போற்றி
காமனுக்கு உயிரூட்டிய மருந்தே போற்றி
நினைத்த வடிவத்தைத் தகுபவளே போற்றி
உயிர்களிடத்தில் உணர்வாக இருப்பவளே போற்றி
அன்பே வடிவானவளே போற்றி
அன்பைப் பொழிபவளே போற்றி
 விலங்கியல்பில் வாழ்வோருக்கு பயங்கரமானவளே போற்றி
 கலைகளின் இருப்பிடமானவளே போற்றி
 கலைகளை மாலையாகத் தரித்தவளே போற்றி
 வீராங்கனையே போற்றி
 வீரர்களின்  அன்னையே போற்றி
 என்றும் வெல்லும் சேனைகளை உடையவளே போற்றி
ஞான ஆனந்த ஒளியே போற்றி
படைப்பைச் செய்பவளே  போற்றி
 பிரம்மன் வடிவானவளே போற்றி
காப்பவளே போற்றி
கோவிந்தன் வடிவானவளே போற்றி
அழிப்பவளே போற்றி
 மறைப்பவளே போற்றி

 இப்படி ஆயிரம் திருநாமங்களிலே பல கதைகள் போற்றிகள் உண்டு.  இப்படிப் போற்றி வளர்ந்த காரணத்தாலேயே அழைத்தால் வருவாள் என்ற உறுதியுடன் அபிராமி மீது திருக்கடையூரில் பக்தர் ஒருவர் அபிராமி அந்தாதியைப் பாடுகிறார்.  உரிமையுடன் அழைக்கிறார்.
 ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சின் உள்ளே பொன்றாது நின்று புரிகின்றவாறு இப்பொருள் அறிவார் அன்று ஆல் இலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே. என்று நமக்கு எடுத்துக் கூறுகிறார்.   அவர் பாடிய பாடலைக் கேட்டு சந்திரனை உதிக்கச் செய்தாள் இறைவி.
பாரதியாரோ தான் புரிந்து கொண்ட இறைவியை நம் மனக்கண் முன் நிறுத்தும் போது
யாதுமாகி நின்றாய் காளி!
யாதிலும் நீ நிறைந்தாய்.
இயற்கையென் றுனையுரைப்பார்
சிலர் இணங்கும் ஐம்பூதங்க ளென்று இசைப்பார்
செயற்கையின் சக்தி யென்பார்
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம்
 அதை அன்னையெனப் பணிதல் ஆக்கம்
மூலப் பழம்பொருளின் நாட்டம்
 இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம்.
துன்பமிலாத நிலையே சக்தி
தூக்கமிலாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத்திருக்கு மெரியே சக்தி
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி


https://pithrupooja.blogspot.com/2010/10/inru-vetrith-thirunaal-sakthik.html
என்றெல்லாம் நமக்கு விளக்குவார். இப்படி நமக்கு எல்லாமாக உள்ளவள் அந்த இறைவி.  அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள்.  அவளைத் துதிப்பதால் அவள் நமக்கு என்ன தருவாள்.  இது பாமரனின் கேள்வி.  அபிராமி அந்தாதியை நமக்கு அருளியவர் கூறுவார்:
தனம் தரும், கல்வி தரும்,
ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும்,
தெய்வ வடிவும் தரும்,
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்,
நல்லன எல்லாம் தரும்.
 இப்படி நல்லனவற்றை எல்லாம் தந்து தீமையை அளிக்கும் அந்த சக்தியை - இறைவியை நாம் போற்றித் துதிக்கும் திருநாளே இந்த வெற்றி விழா.  துதியுங்கள் - பலனடயுங்கள்.

https://pithrupooja.blogspot.com/2010/10/pithrupooja-in-temples.html
PITHRUPOOJA - IN TEMPLES
பித்ரு பூஜை என்று அழைக்கப்படுகிற முன்னோர் வழிபாடு  சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள குருங்காலீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்களில் 2000 ஆண்டில் நான் சென்னை சென்று இருந்தபோது நடந்து கொண்டிருந்தது.  அறிவிப்பு பலகையில் அறிவிப்பு கூட நான் பார்த்தேன்.  ஆனால் பின்னர் அந்த பூஜை சில நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு விட்டது என்று தெரிந்து கொண்டேன்.  அந்த பூஜை வேறு தெய்வத் தளங்களில் செய்யப்படுகிறதா என்று தேடிக் கொண்டிருந்த போது கேரளா மாநிலத்தில் ஒரு கோவிலில் உள்ளது குறித்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். தளத்தின் பெயர் https://hindulegacy.blogspot.com/2010/10/thirunelli-pithru-temple.
திருநெல்லி என்ற ஊரில் பித்ரு பூஜை சிறப்பாக நடப்பதாக அறிந்தேன்.
ராமச்சந்தர் என்பவர் ஒரு அருமையான பதிவினை கொடுத்து இருந்தார். வயநாடு மாவட்டத்தில் மனந்தவாடி என்ற நகரில் இருந்து 32 KM தொலைவில்   இந்த கோவில் இருப்பதாகத் தகவல் கொடுத்து உள்ளார்.  இது கோழிக்கோடு புகைவண்டி நிலையத்தில் இருந்து 72 KM  தொலைவில் உள்ள தலம். பிரம்மகிரி என்னும் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்த கோவில் உள்ளது.  நடைபயணத்தில் இருந்த பக்தர்கள் பசியாற இறைவனை வேண்டியபோது ஒரு நெல்லி மரம் தோன்றியதாகவும் அதன் பலன்களைப் புசித்து அவர்கள் பசியாரினார்கள் என்றும் திருத்தல வரலாறு உரைக்கிறது.  கோவிலுக்கு சிறுது தொலைவில் பாப நாசினி என்னும் ஆறு உள்ளது.  முன்னோர்களுக்கு இங்கு வழிபாடு நடத்தினால் மிகச் சிறப்பு என்றும் அமாவாசைகளில் இங்கு பலர் வந்து வழிபாடு நிகழ்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  கயையில் செய்யப்படும் முன்னோர் வழிபாட்டுக்குச் சமமானது என்று கூறுகிறார்கள்.  வழியில் ஒரு குகையில் சிவன் கோவில் ஒன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  முடிந்தால் போய் வாருங்கள்.

கடந்த வாரம் மகாளய அமாவாசையின் போது ஒரு பதிவினை கீழ்க்கண்ட வலைத் தளத்தில் படித்தேன்.
https://ecopackindia.wordpress.com/2010/10/07/pithru-paksha-the-importance-of-tarpana-mahalaya-amavysa/
அதில் முன்னோர் வழிபாட்டினைப் பற்றி கேட்டு அறிந்து பிறருக்குச் சொல்வதே ஒரு நல்ல விடயம் என்று கூறப்பட்டு இருந்தது. "In fact , circulating , sharing information on Oblations is also one of service or Tarpan to our Pitars, forefathers !"  மகாளய பட்சத்தின் போது ஒவ்வொரு நாளும் முன்னோருக்காக செய்யப்படும் வழிபத்தின் பலனும் கொடுக்கப்பட்டு இருந்தது. முதல் நாள் பொருள், இரண்டாம் நாள் செல்வம், மூன்றாம் நாள் பெருமை, நான்காம் நாள் வியாபார விருத்தி,  நான்காம் நாள் எதிரிகளை வெல்லல், ஐந்தாம் நாள் அனைத்து பேறுகளும், ஆறாம் நாள் புகழ், ஏழாம் நாள் இறைப் பலம், இப்படி வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.  அதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.
Viritually speaking there are two reasons for all of our mundane problems. One caused by the planets, the other by departed spirits. 1st Moon Bestow WEALTH  -
2nd Moon Bestow progeny
3rd Moon Bestow Business prosperity
4th Moon Overpowering enemies
5th Moon Bestow All prosperity
6th Moon Bestow Fame
7th Moon Bestows divine strength
8th Moon Bestow Intelligence
9th Moon Gains from women
10th Moon Bestow Success in undertakings
11th Moon Prosperity of children and intelligence to children
12th Moon More progeny and gains through education
12th Moon More progeny and gains through education
13th Moon Blessed with many vehicles and renders Peace and longevity
14th Moon Mahalaya New Moon – Those who are not able to do Tarpan on all the above phases of the Moon, should definitely offer tarpan on this day in order to accrue the above said benefits and also will receive benefits by doing Tarpan for those who died due to weapons or accidents. During this day the known and unknown souls that have departed during the last 30 years are treated equal to God
We should constantly take care of them in order to have a peaceful life. Once a year there is a great celebration in the Pitra loka for 2 weeks. It is called Mahalaya fortnight. It starts on September 27th (this year), right after the full moon and ends on the Mahalaya new moon day, October 10th. This two-week period is the most important period to appreciate your departed ancestors.

எனவே முன்னோர்வழிபாட்டினை மறவாது செய்யுங்கள்.  இறை வழிபாட்டினைப் போன்றதே இந்த வழிபாடும்.

1 comment: