மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.,17 ல் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம் நடக்கிறது. பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாண தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,8 காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. ஏப்.,9 முதல் 14 வரை காலை 7:00 மணிக்கு மாசி வீதிகளில் தங்கப் பல்லக்கு, இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி வீதி உலா நடக்கிறது.
ஏப்.,15 மீனாட்சி அம்மன் கோயில் ஆறுகால் பீடத்தில் இரவு 8:00 மணிக்கு மேல் 8:24 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.,16 மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், ஏப்.,17 கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9:50 மணிக்கு மேல் 10:14 மணிக்குள் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம், ஏப்.,18 கீழமாசி வீதியில் தேரோட்டம் நடக்கிறது.திருக்கல்யாண விருந்துபழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் தலைவர் விவேகானந்தன் கூறியதாவது: மதுரை வடக்கு வெளி வீதி சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் 19வது ஆண்டு மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்.,16 மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி, பொங்கல், பக்கோடா, கற்கண்டு பால் வழங்கப்படும்.
ஏப்.,17 திருக்கல்யாண விருந்து காலை 6:00 முதல் பகல் 2:00 மணி வரை நடக்கிறது. இதில் அசோகா, வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், காய்கறி கூட்டு, ஊறுகாய் ஆகியவற்றை தட்டு மீது வாழை இலையில் வைத்து வழங்கப்படும்.காய்கறி நறுக்கிக் கொடுத்து உதவும் பக்தர்கள் ஏப்.,16 மாலை 4:00 மணிக்கு மேல் அரிவாள் மனை, கத்தி ஆகியவற்றுடன் பள்ளிக்கு வர வேண்டும்.மாட்டுத்தாவணி, பரவை காய்கறி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், வணிகர்கள், வியாபாரிகள் சார்பில் மளிகை பொருட்கள் வழங்குகின்றனர்.
இச்சேவையில் பங்கு பெறும் பக்தர்கள் ஏப்.,13, 14ல் பள்ளியில் பொருட்களை கொடுத்து ரசீது பெற்று செல்ல வேண்டும். இதற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் விழா ஏப்.,7 காலை 7:00 மணிக்கு பள்ளி செயலர் பார்த்தசாரதி தலைமையில், தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நடக்கிறது, என்றார்.
தொடர்புக்கு 94424 08009.
No comments:
Post a Comment