Wednesday, March 25, 2020

கைவல்ய நவநீதம்




கைவல்ய நவநீதம்


சில வாரங்கள் முன் சென்னையிலிருந்து  திருவாரூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
பூந்தோட்டம் தாண்டி செல்லும் சாலை பழுதுபட்டதால் நன்னிலம் வழியாக
செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
 நன்னிலத்தில் ஒரு சீவ சமாதி நுழைவாயில் இடப்பக்கமாக தெரியவே, வண்டியை
 நிறுத்திவிட்டு  உள்ளே சென்றோம்.  அங்கே திரு நாராயணகுரு சமாதியும் ஒரு சேர
அமைந்த  தண்டவேச்வர சமாதி ஆலயத்திற்கு சென்றோம்.அமாவாசையாக இருந்ததால்
ஒரே பரபரப்பாக இருந்தது. என்ன தோன்றியதோ அங்கிருந்தவர்களுக்கு,
 எங்களை முன் பக்கம் செல்ல வழி விட்டனர்.


எத்தனை ஆண்டுகள் சமாதி என்று கேக்க உள் இருந்தவர்கள் பல நூற்றாண்டு பழையது என்றார்கள். அதில் பூஜை நடத்தி கொண்டு இருந்தவர் தம்பி கைவல்ய நவநீதம் எழுதிய தண்டவேச்வர சுவாமிகள் சமாதி என்று சொல்ல ஒரு நிமிடம் மெய் சிலிர்த்து போனது. எத்தனை அறிய நூல், இதை எழுதிய ஞானி தலம் கண்டு கொள்ள முடிந்ததே என்று மெத்த மகிழ்ச்சி. சென்று சில மலர்கள் வாங்கி வருகிறோம்  என்று கூறியும் உள்ளிருந்தவர்கள் வழி தரவில்லை. எங்கிருந்தோ வந்துளீர்கள்    பூஜை முடியும் வரை
எங்கும் செல்லாதீர்கள் என்று உரிமையுடன் கூற அங்கேயே நின்றுவிட்டோம்.

திரு தாண்டவராயன் சுவாமிகள், திருவாரூரைச் சேர்ந்த, 'மதுவனம்' என்றும் அழைக்கப்படும், 'நன்னிலம், என்னும் சிற்றூரில் பிறந்து அங்கேயே விதேக முக்தி அடைந்தார்

Thandavaeswara swamigal : Birth 1408AD
Samadhi date : 1534AD (Vaigasi Visagam) LIVED FOR 126 YEARS Iin Physical body


நன்னிலத்தில், ஸ்ரீ நாராயண தேசிகர் என்று அழைக்கப்பட்ட ப்ருஹ்மஸ்ரீ நாராயண குருவிடம் ப்ருஹ்ம தீக்ஷை பெற்று துறவு ஏற்றார். அவருடைய நூலில், தமக்கு தம்மை வெளிப்படுத்திய குருவானவர், நாராயணன் என்றும், நாரணன் என்றும் குறிப்பிடுகின்றார். பிறிதொரு இடத்தில் வேங்கடேச முகுந்தன் என்று இவர் குறிப்பிடுவது, திருவேங்கட மலை மீது ஸ்ரீ வேங்கடேச்வரராக அருள் புரியும் ஸ்ரீ விஷ்ணுவாக இருக்கலாம்.

Narayanar swamigal : Birth 1378 AD
Samadhi date; 1449AD (Vaigasi visagam)

நூல் சிறப்பு: மொழிபெயர்ப்புகளும் உரைகளும்

சுவாமி கிருஷ்ணானந்தரின் மாணவரான ஸ்ரீ சங்கு சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட சங்கு கவிகள், கைவல்ய நவநீதத்தை, பாயிரம் பாயிரமாக சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார்.

இவ்வாறு ஒவ்வொரு பாயிரத்தின் மொழிபெயர்ப்பாக இல்லாமல், நூலின் மொத்தக் கருத்தையும் உள்வாங்கி, அதையொட்ட எழுதப்பட்ட 'ப்ரபோதாம்ருதம்' என்னும் சமஸ்கிருத நூலும், ஸ்ரீலஸ்ரீ தாண்டவராயன் சுவாமிகளின் சமகாலத்தில் இயற்றப்பட்டு, வழக்கில் இருந்து வருகின்றது.

Dr. கார்ல் க்ரால் (Dr.Karl Graul) என்னும் ஜெர்மன் அறிஞர், தன் 'Bibliotheca Tamulica' என்ற ஜெர்மானியப் படைப்பில் கைவல்ய நவநீதத்தை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்துப் பதிப்பித்தார். பஞ்சதசி பிரகரணம், ஆத்ம போத பிரகாசிகை, திருக்குறள் ஆகிய நூல்களின் மொழிபெயர்ப்புகளும் அந்தத் தொகுப்பில் பதிப்பிக்கப்பட்டன.

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஆசார்யன் துஞ்சிதே எழுத்தச்சன் என்னும் மலையாளப் பெருங்கவி, கைவல்ய நவநீதத்தை, கிளிப்பாட்டு என்னும் மலையாளப் பாடல் வகையில் மொழி பெயர்த்தார். அவர் தனது ஆன்மீகத் தேடல் பயணத்தில், தமிழகம் வந்து, இந்த் நூலைக் கற்று, மொழிபெயர்த்து, பிரபலப்படுத்தினார்.


கைவல்ய நவநீதத்திற்கு தமிழில் பலர் விரிவுரை எழுதி இருந்தாலும், பிறையாறு ஸ்ரீ அருணாசல சுவாமிகள், ஈசூர் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் சிதம்பரம் ஸ்ரீ பொன்னம்பல ஞானதேசிகர் (தத்துவார்த்த தீபம்) ஆகியோரது உரைகளே காலத்தால் முற்பட்டவை, கருத்தாழத்தால் மேம்பட்டவை.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில், மஹாவித்வான் வடிவேலு செட்டியார், வினா விடை அமைப்பில், கைவல்ய நவநீதத்திற்கு விளக்க உரை எழுதிப் பதிப்பித்தார்.
1933ல், ப்ருஹ்மஸ்ரீ திருமாநிலையூர் கோவிந்தய்யர் 'தாத்பர்ய தீபிகை' என்னும் உரையை எழுதி, தமிழ் மூலத்துடன், சங்கு கவிகளின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பையும், தன் உரையையும் ஒருங்கே பதிப்பித்தார்.
கைவல்ய நவநீதத்திற்கான ஆங்கில உரைகளில், சுவாமி ஸ்ரீ ரமணானந்த சரஸ்வதிகளின் ஆங்கில உரை மேலானதாகக் கருதப்படுகின்றது. இவரே 'அத்வைத போத தீபிகை' என்ற நூலுக்கும் ஆங்கில உரை எழுதியுள்ளார்.

கைவல்ய நவநீதம், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளால் சாதகர்க்குப் பரிந்துரைக்கப் பெற்றது. பாராயணத்துக்கான கைவல்ய நவநீதம் மூலமும், சிவ.தீனநாதன் அவர்களால் செய்யப்பட்ட உரைச் சுருக்கமும், ஸ்ரீ ரமணாச்ரமம் வெளியீடாகப் பதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ முனகல வெங்கடராமையா அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பும், அதிலிருந்து செய்யப்பட்ட தெலுங்கு மொழிபெயர்ப்பும் பதிப்பிடப்பட்டுள்ளன.

Thank
Posted 13th August 2012 by OHM SIVASAKTHINAGAMMAL

https://siththarway.blogspot.com/2012/08/blog-post_2045.html?m=1

No comments:

Post a Comment