Wednesday, October 21, 2020

சொர்ணமலை கதிர்வேல் முருகன்

 





'கோவில்பட்டி

சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோயில்''..ஆலயதொடர்புக்கு:9442370758/9443114765 .இங்கு மூலவராக முருகனின் திருக்கைவேல் அமைந்து உள்ளது.இது முழுவதும் ஆறடியில் ஐம்பொன்னில் செய்யப்பெற்ற வச்சிரவேல் ஆகும்..கோவில்பட்டியில் இருந்து பிழைப்புக்காக இலங்கை சென்ற முருக அடியவர் இலங்கையில் உள்ள கதிர்காமம்முருகன் மேல் மிகுந்த பக்தி உள்ளவர்.கதிர்காமத்தில்  வேல் வழிபாடே சிறப்பாக  உள்ளது. திரும்பவும் அந்த முருகன் அடியவர் இலங்கையில் இருந்து

பல ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பும் பொழுது கதிர்காமம் முருகனை பிரிய மனம் இல்லாமல் கவலை கொண்டார்.தன் அடியவரின் வாட்டம் போக்க எண்ணிய கதிர்காமம் முருகன் அவரிடம் இருந்த ''வேல்''லுக்குள் தம்மை செலுத்தினார்.பின்னர் அசரீரியாய் ,''அன்பனே,உன் பொருட்டு யாம் இந்த வேல் மூலம் உன் ஊரான  கோவில்பட்டி க்கு வருகிறேன்.கதிர்காமத்தில் இருந்து பிடிமண் கொண்டு சென்று,அங்கு உள்ள மலை குன்றில் மூலவராக எனது இந்த திருக்கை

வேல் வைத்து வழிபடு,உன் வாட்டம் ,மற்றும் பிற அடியவர்களின் வாட்டத்தையும் யாம் களைவோம்''என்று கதிர்காமம் முருகன் அருளி மறைந்தார்.கோவில்பட்டிக்கு அந்த கதிர்காம கந்தனின் திருக்கை வேல் உடன் திரும்பிய அந்த முருகபக்தர் பின்னாளில் இலங்கை கதிர்காமம் முருகப்பெருமான் கூறியபடி

மலைக்குன்றில் ஆலயம் எழுப்பினார்.அந்த கதிர்காம முருகன் திருக்கை வேல்தான் இங்கு மூலவராக உள்ளது சிறப்பு.இத்தலத்தில் மாணிக்க விநாயகர்,பழனிஆண்டவர்,பைரவர் சன்னதிகளும் உள்ளன. சஷ்டி, கிருத்திகை, விசாகம்,பூசம் நட்சத்திர நாட்களில் இத்தலம் வந்து கதிர்வேலுக்கு பஞ்சாமிர்த அபிசேகம் செய்து,சிகப்பு மலர்கள் கொண்டு இத்தல மூலவர் கதிர்வேல்,மாணிக்க விநாயகர்,பழனி ஆண்டவர்,பைரவர் அர்ச்சனை செய்து,நெய் தீபம் ஏற்றி வழிபட

தொடர்ந்து 8 மாத வழிபாடு செய்து வர நம் எண்ணங்கள் யாவும் பூர்த்தி யாகும்.தொழில் விருத்தி உண்டாகும்.சகல அந்தரங்க குடும்ப பிரச்சனைகளும் விடை கிடைக்கும்.தீவினை,தீயவை,கர்மவினைகள் அண்டாது.இத்தலத்தில் வழிபடல் ,இலங்கை கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வழிபடுவதற்கு நிகரானது.சூரபத்மன் போன்ற அரக்கர்களை அழித்தொழித்த வேல் அல்லவா, அது நம் கடுவினைகள் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கும் என்ற நம்பிக்கையும் பொய்க்குமா என்ன?

சூரபத்மன் போன்ற அரக்கர்களை அழித்தொழித்த வேல் அல்லவா, அது நம்கடுவினைகள் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கும் என்ற நம்பிக்கையும் பொய்க்குமா என்ன? .கிருத்திகை நட்சத்திர நாளன்று இந்த வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்ன பிரசாதத்தை, மகப்பேறுக்காக ஏங்கும் பெண்கள் உட்கொண்டு, அடுத்த வருடமே தம் பச்சிளங் குழந்தையுடன் வந்து கதிர்வேலனுக்கு நன்றி சொல்கிறார்கள். கோவில்பட்டியில் பெரும்பாலான குடும்பங்களில் கதிர்வேல் முருகன், கதிரேசன், கார்த்திகேயன் என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயரிட்டு, தம் குலம் விளங்க அருள்புரியும் முருகனுக்கு

நன்றி தெரிவிக்கிறார்கள். இந்த மலையையே கதிரேசன் மலை என்றுதான்

அழைக்கிறார்கள். அதேபோல செவ்வாய்க்கிழமைகளில் வேலுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபடும் தொழில் முனைவோர், வெகு விரைவில் தொழில் அபிவிருத்தியும் வளமும்காண்கிறார்கள். மிகுந்த தொழில் அபிவிருத்தி அளிக்கும் ஆலயம் இது என்பதால்

இத்தலத்தினை சொர்ணமலை என்கிறார்கள் போலும்..மாதம் தோறும் இங்கு சொர்ணமலையை சுற்றி கிரிவலம் நடக்கிறது.அப்போது கிரிவலம் வரும் வழியில் ''ஒளி குகை''என்ற குகையின் வாசல் உள்ளது..அங்கு யாரும் செல்வதில்லை.அங்கு சித்தர்கள் பலர் தவம் இருந்து வருவதாக கூறுகிறார்கள்.சிலநேரங்களில் நள்ளிரவு பொழுதுகளில் பஜனை சத்தம் கேட்பதாகவும்

கூறுகிறார்கள்.திருக்கார்த்திகை தீப திருநாள் இங்கு சிறப்பு..திருக்கார்த்திகை நன்னாளில் இந்த சொர்ணமலை குன்றில்

''திருக்கார்த்திகை தீபம்''ஏற்றுகிறார்கள்.விருதுநகர் அருகில் உள்ள கோவில்பட்டியில் சொர்ணமலை அமைந்து உள்ளது.கோவில்பட்டியில் இருந்து 4 கிலோமீட்டர்..கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலுடன் இணைந்த திருக்கோயில் இதுவாகும்.'' ..."நாயேனை ஆட்கொண்டஅண்ணாமலையானைப் பாடுதும் காண்"."நாயேனை நாளும் நல்லவனாக்க,ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்"..."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடிநிழலில்"...கட்டுரையாக்கம்:அன்

பன்.சிவ.அ.விஜய்

பெரியசுவாமி,9787443462.

No comments:

Post a Comment