Saturday, September 10, 2022

எல்லாம் வல்ல சித்தர் !!!



திருவாலவாயாம் மதுரையம்பதியிலே ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வருகின்ற திங்கட்கிழமை (12/09/2022) அன்று சுந்தரானந்த சித்தர் ஜென்ம தின குருபூஜை விழா என்று வழக்கில் இல்லாத ஒன்று புதியதாக ஏற்பாடு ஆகியுள்ளது !!! இத்தருணத்தில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் வீற்றிருந்து அருளும் சித்தரை பற்றின முக்கியமான தகவலை நாம் தெரிந்துகொள்வது இன்றியமையாதது !!!

சித்தர்கள் ஏராளமானோர் இருந்தாலும் அதில் 18 பேர் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர் !!! அதில் ஒருவர் சுந்தரானந்தர் என்படுகிறவர் !!! போகர் அகத்தியர் போன்றோர்களுடன் தொடர்புடையவராகவும், வாக்கிய சூத்ரம், வைத்தியதிரட்டு, தீட்சா ஞானம் போன்ற நூல்களை யாத்ததாகவும் கூறப்படுகிறது !!! இவர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தார் என்றும் எனவே வரும் திங்கட்கிழமை இவருக்கு ஜென்ம நக்ஷத்திரம் நிகழ்கிறது என்றும் சொல்லப்படுகிறது !!! இவை அனைத்தும் சுந்தரானந்தர் என்னும் சித்தருடன் தொடர்புடைய செய்திகள் !!!
மாமதுரையில் ஸ்வாமியே சித்தராக வந்து அடியார்களுக்கு அருள் செய்துள்ளார் !!! பொன்னனையாள் என்னும் அடியவள் திருப்பூவனத்தில் ஸ்வாமிக்கு பொன்திருமேனி செய்ய ஆசைப்பட சோமசுந்தரப்பெருமானே சித்தராக எழுந்தருளி பித்தளையை பொன்னாக மாற்றி அருளியனார் !! இவரே கல்யானைக்கு கரும்பு கொடுத்தவர் ஆவார் !!! இவரின் சரித்திரம் அறிய நமக்கு ஒரே reference  திருவிளையாடல் புராணம் !!! ஹாலாஸ்ய மஹாத்மியத்திலும் சரி வேம்பத்தூரார் மற்றும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணங்களிலும் சரி மதுரையின் கடவுள் சொக்கநாதப்பெருமான் சோமசுந்தரக்கடவுளே "ஆஞ்ஞா சித்தர்" "எல்லாம் வல்ல சித்தர்" "வல்ல சித்தர்" என்னும் பெயர் கொண்டு சித்தராக வந்ததாக தெரிவிக்கிறது !!! இந்த ஆஞ்ஞா சித்தருக்கான சன்னதியே மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி சன்னதி முதலாம் பிரகாரத்தில் கோஷ்ட துர்க்கைக்கு அருகில் நாம் காணலாம் !!! இவருக்கு ஓர் உற்சவ திருமேனியும் உண்டு !! வருடாவருடம் பொங்கல் அன்று லீலையோடு கூடிய புறப்படும் உண்டு !!!
மேற்கூறிய ஆஞ்ஞா சித்தர் எனப்படும் எல்லாம் வல்ல சித்தரின் புராண வரலாறு முழுவதுமாக 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தர் எனப்படும் சித்தரோடு முற்றிலும் வேறுபட்டது !!! எல்லாம் வல்ல சித்தர் போகரோடு தொடர்புடையவர் அல்லர் !!! சுந்தரானந்த சித்தர் கல்யானைக்கு கரும்பளித்தவரும் அல்லர் !!! மதுரையில் ஸ்வாமியின் திருநாமம் சுந்தரேஸ்வரர் என விளங்குவதாலும் அவரே சித்தராக வந்ததனாலும் சுந்தரானந்தர் என்னும் சித்தர் ஒருவர் இருப்பதன் காரணத்தினாலும் நேர்ந்த குழப்பம் இது !!! எடுத்துக்கட்டாக சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் விநாயகரின் அருளால் கைலாசம் ஏகிய ஒளவையாரும், வள்ளல் பாரியோடு தொடர்புடைய ஒளவையாரும் முற்றிலும் வேறுபட்டவர்கள் !!! வள்ளல் பாரியும் சுந்தர மூர்த்தி நாயனாரும் இரு வேறு காலத்தை சேர்ந்தவர்கள் !!! ஆனால் பெயர் ஒன்றாய் இருப்பதனால் இரண்டு ஒளவையையும் ஒன்று என கருதி நாம் குழப்பிக்கொண்டோம் !!! அதனைப்போலவே தான் இந்த சித்தர் கதையிலும் !!! எல்லாம் வல்ல சித்தர் 18 சித்தர்களில் ஒருவர் இல்லை !!! இவர் இறைவன் !!!
மதுரையில் சுவாமி விறகு வெட்டியாகவும், மண்சுமந்த கூலியாளாகவும், வளையல் வ்யாபாரியாகவும் வந்ததனைப் போலவே தான் எல்லாம் வல்ல சித்தராகவும் வந்தார் !!! சுவாமி புராணத்தின்படி பிச்சாடனராகவும் வந்துள்ளார் .. அதனை காட்டும் விதமாக அதே கோலத்தில் அவருக்கு எப்படி சன்னதி இருக்கிறதோ அதனைப்போலவே இங்கே சுவாமி எல்லாம் வல்ல சித்தராகவும் வந்துள்ளார் எனபதனை குறிக்க அதே கோலத்தில் அவருக்கு இங்கு மீனாட்சி அம்மன் கோவிலில் சன்னதி உள்ளது !!! சொக்கநாதப் பெருமான் ஆதி அந்தம் இல்லாத பரம்பொருள் !!! அவருக்கு ஜென்மதினமும் இல்லை அவரின் சமாதி என்று ஒன்று இல்லவும் இல்லை !!! 

மீனலோசனி பாசமோசனி !!!

No comments:

Post a Comment