சித்தர் தன் மாணவனிடம் விளக்கம்
உன்னை அறிவித்தது யார்? இந்த உலகத்தை அறிவித்தது யார்?.
என்னை அறிவித்தது எது? என்று ஆராயும்போது என்னை குனிந்து பார்கிறேன். எனக்கு இரண்டு கைகள் இரண்டு கால்கள் மற்றும் உடம்பு இருப்பதை அறிந்தேன். எப்படி அறிந்தேன்? யார் அறிவித்தது? என்று ஆராயும்போது அறிவு தான் அதை உணர்த்தியது என்பதை தெரிந்துகொண்டேன். இந்த உலகத்தை அறிவித்ததும் அதே அறிவுதான் என்பதை தெரிந்துகொண்டேன் . நான் யார் என்று ஆராயும்போது நானும் அறிவாகவே உள்ளேன் என்பதை அறிந்துகொண்டேன். அறிவே எல்லாமாக இருக்கிறது. உலக பொருட்கள் எல்லாம் அறிவின் தத்துவமே உண்மையில் அவை மாயையே. மாயையும் அறிவிலேருந்து தோன்றியது. இங்கே அறிவு மட்டுமே உள்ளது. ஆகையால் மற்றவையெல்லாம் மாயையே என்று அறிந்து சும்மா இருத்தல் சித்தி அளிக்கும். சும்மா இருத்தல் என்பது நாம் அறிவு என்பதை உணர்ந்துகொண்டு நம்மை சுற்றி எது நடந்தாலும் அதை பற்றி ஆராயாமல் அதில் தலையீடாமல் சும்மா இருத்தலே சும்மாயீரு ஆகும். உண்மையெய் உணராமல் அறிவாகிய நாம் புலன்கள் வழியாக தன்னை சுற்றி இருக்கும் மாயையை ஆராய்ந்து துன்பபட்டுகொண்டு இருக்கிறோம் அறியாமை விலகியதும் அமைதி ஏற்படுகிறது அதிவே சும்மா இருத்தல் ஆகும். முழுமையான அறிவில் புலனுணர்வு எல்லாம் கடந்து சும்மா இருப்பதே சுகமாகும். அங்கெ நானும் இல்லை உலகமும் இல்லை இறைவனாகிய அறிவும் இல்லை எதுவுமே இல்லை என்பதே உண்மையாகும். நாமும் சும்மா இருக்க முயற்சி செய்வோம்.
முக்திநிலை, சித்திநிலை விளக்கம்
சுத்தஅறிவே இறைநிலையாக இருக்கிறது. சுத்தறிவே ஆன்மாவாகி பின் தேகமகிறது. தேகமும் அறிவே தான். தேகத்துக்கு கை, கால் முதலிய் இந்திரியங்கள் எதுவும் இல்லை என்பது தான் உண்மை. கண் இல்லாமல் பார்க்கவும், காது இல்லாமல் கேட்கவும், நாக்கு இல்லாமல் சுவைக்கவும் முடியும் என்பது உண்மை. அறிவு, ஆன்மா, தேகம் மூன்றும் வொன்றே என்ற முழு அறிவு விளக்கம் பெறும்போது சித்திநிலை கைகூடும். உடம்பு வேறு ஆன்மா அறிவு வேறு,வேறு என்று நினைக்கும்போது முக்திநிலை ஏற்படுகிறது. அறிவின் விளக்கமாக உலகம் இருக்கிறது. இதில் தனிதனி பிரிவுகள் எதுவும் இல்லை. எந்த இயக்கமும் இல்லை என்ற சுத்தறிவு விளங்கும்போது தத்துவங்கள் மறைந்து சுத்ததேகம்,பிரணவதேகம் அடுத்து ஞானதேகம் உருவாகும்.
காலசக்கரம்
அறிவின் சலனதிலிலிருந்து அன்பு உருவாகியது. அந்த அன்பை காட்ட ஆன்மா உருவாகியது. ஆன்மா அன்பை அனுபவிக்க உடம்பு எடுத்தது. உடம்பின்மேல் உள்ள ஆசையால் உலகம் உருவாகியது. ஆசை நிராசையாக ஆகும்போது கோபம் வஞ்சகம் போன்ற பத்து குணங்கள் உருவாகியது. இதனை அடிப்படையாக கொண்டு காலசக்கரம் சுழல ஆரம்பித்தது. இதனால் காலம் என்ற ஒன்று உருவாகியது. இதுநாள்வரை காலசக்கரம் சுழல்கிறது. எல்லாம் தானே என்கின்ற தன்னை அறிதல் நடக்கும்போது அறியாமை நீங்கி அறிவு தன்னிலையை அடைந்து அமைதியடைகிறது. அது நடக்கும்வரை காலசக்கரத்தில் மாட்டி சிக்கி தவிக்கிறது. ஒருவன் தன்னை போல் பிறர் கஷ்ட படகூடாது என்ற நல்ல மனதுடன் சமூகசேவை செய்து பின் நல்லவனாக வாழ்ந்து பின் இறந்து அடுத்தபிறவி பெற்று காலசக்கரத்தில் சுழல்கிறான். தன்னை ஆன்மா என்று உணர்ந்தவன் நல்ல ஆன்மீகவாதியாக சேவைசெய்து பின் இறந்து அடுத்தபிறவி பெற்று காலசக்கரத்தில் சுழலுகிறான். தன்னை அன்புரு என்று உணர்ந்தவன் தெய்வமாக மதிக்கபெற்று பின் இறந்து அடுத்தபிறவி பெற்று காலசக்கரத்தில் சுழலுகிறான். தன்னை அறிவு என்று உணர்ந்தவன் தத்துவங்களை கடந்து சித்தியடைந்து அடுத்தபிறவி பெறா மல் சுத்தசிவநிலையில் கலக்கிறான். காலசக்கரதிலிருந்து விடுதலை பெறுகிறான்.
உயிர்.
uyir b.r. uyir73@yahoo.com
Mon, May 31, 2010, 2:51 AM |
No comments:
Post a Comment