|
சிவம் என்றால் கல்யாணம் , நிர்க்குணம் , மங்களம் என்று பொருள் என பெரியோர் சொல்ல கேட்டிருக்கிறேன். கல்யாணம் என்பது நன்மையையும் , நிர்க்குணம் என்பது குணமற்ற ஒன்றையும், மங்களம் என்பது சுபத்தையும் குறிக்கிறது.
சிவலிங்கம் என்பது மனிதனின் குறியை குறிக்கிறது என்பதெல்லாம் பிசகு. குணங்களை கடந்த இறைவனை குறிக்க இது ஒரு அடையாளம். அவ்வளவுதான். வெறும் அடையாளம் மட்டுமல்ல; அதில் ஒரு விசேஷத்தன்மையும் உள்ளது என்பதற்கு ருசு அதை வணங்குபவர்களுக்கு நன்மை கிடைக்கிறது என்றும் மாபெரும் அறிஞர்களும் அதை வழிபட்டுள்ளனர் என்பதுமே மட்டுமல்ல. வேதத்தில் இதை அப்படி உயர்வாய் சொல்லி உள்ளது என்கின்றனர்.
அருவ வழிபாட்டின் உருவம்தான் லிங்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அதன் பெருமையை அப்படி சொல்லி முடிக்க முடியவில்லை. ஆதிசங்கரர் என்னென்ன பெருமைகள் சொல்கிறார் இதற்கு? ஸ்ரீதரர் இதில் அல்லவோ மறைந்தார்? இதிலிருந்து அல்லவா ஒரு கை கிளம்பி “அத்வைதம்” சத்தியம் என்றது? அதென்ன சிவலிங்கத்தின் மேல் நாகம்?
இது வெறும் இனக்குறி என்றால் அதற்கு எதற்கு மாலை? அதற்கு ஏன் அஷ்டோத்திரம்? அதற்கு ஏன் நைவேத்தியம்? அதற்கு வேறு ஒரு தீபம் வேறு வருகிறதே? ஆக இது வெறும் உடம்பிலுள்ள ஒரு அங்கத்தை குறிப்பதல்ல.
ஒரு கோலுக்கு துணியை கட்டினாலும் பெண்ணை கற்பனை பண்ணுவது மனிதனின் இயற்கைதானே? ஆண் பெண் உடற்சேர்க்கை இது என்பது மகா பிசகு. பிறர் போகட்டும். இந்துக்கள் இப்படி நினைக்க கூடாது.
கோவில்களில் நிர்வாண அழகு பிம்பங்கள் இருப்பது, அதனால் விகாரப்படும் மனதினால், உள்ளே சென்று இறைவனை வசப்படுத்த முடியாது என்பதை சூசிக்கவே என ஆசான் சொன்னார். அப்படி இதற்கு ஒரு காரணம் இருக்கவே செய்யும்.
பால்கி
லிங்கம் ஒரு அடையாளம்
No comments:
Post a Comment