Wednesday, February 5, 2025

விவாஹ முகூர்த்தம்

பிரஸ்ன ஜோதிடம்:

விவாஹ முகூர்த்தம்.

1.உல்கா;
சூரியன்  நின்ற நட்சத்திரத்திலிருந்து பத்தொன்பதாது நட்சத்திரம்  உல்கா அதில் முகூர்த்தம்  கூடாது,

2.பூகம்பம் :கோச்சாரத்திலிருந்து சூரியன்  நின்ற நட்சத்திரத்திலிருந்து ஒன்பாதவது  நட்சத்திரம்  பூகம்பம் . முகூர்த்தம்  கூடாது,

3.உபாகம்;

சூரிய சந்திரன்  கிரகணத்திற்கு முன்பு மூன்று நாளும் கிரகணம் முடிந்து  மூன்று நாளும்  முகூர்த்தம்  கூடாது,

4.குளிகதோயம்.
குளிகன் உதயம் ஆகும் நேரம் முகூர்த்தம்  கூடாது.

5.சஷ்டாஷ்டகம்.
முகூர்த்தம்  லக்கினத்திற்கு  சந்திரன், குரு 6.8.12 கூடாது

6.அஸத் திருஷ்டி.

முகூர்த்தம்  லக்னம் பாவத்தை பாபர்கள்  பார்க்க கூடாது

7.அஸத் ஆருடம்.

முகூர்த்த லக்கினத்தில் பாபர்கள்  கூடாது

8.சித த்ருக்.
சுக்கிரன் முகூர்த்த லக்கினத்தை பார்ப்பது கெடுதி  என சில க்ரந்தங்களில் சொல்லப்படுகிறது, .
ஆனால் பராசார ஹோரையில் முகூர்த்த லக்கினத்தை களத்திர காரகனாகிய சுக்ரன்  பார்ப்பது  மிக நன்று  என சொல்லப்படுகிறது,

9.ஸந்தியா தோஷம்,

சூரியன்  அஸ்தமனம் ஆவதற்கு  முன்னும், பின்னும் இரண்டு  நாழிகை காலம் தோஷம்,  அதில் முகூர்த்தம் கூடாது

10. கண்டாந்தம்.

அஸ்வினி, மகம், மூலம்  கேது நட்சத்திரங்களின் முதல் பாதமும் 

திருவாதிரை. சுவாதீ. சதயம், இராகு நட்சத்திரங்களின் கடைசி  பாதங்களும் முகூர்த்தம்  கூடாது

11.உஷ்ண கடிகை.
உஷ்ண கடிகை நட்சத்திர நாழிகையில் முகூர்த்தம்  கூடாது.

12.தியாஜ்யம்  நேரம்  முகூர்த்தம்  கூடாது

13.ஸ்திர கரணம்.
சகுனி. சதுஷ்பாதம், நாகவம், கிம்துஸ்க்னம்  போன்ற கரணங்களில்  முகூர்த்தம்  கூடாது

15.ரிக்தை.

சதுர்த்தசி சதுர்த்தி, ந.அஷ்டமி, நவமி  போன்ற திதிகளில் முகூர்த்தம் கூடாது

17.லாடம்.

சூரியன் நின்ற நட்சத்திரம்  முதல்  மூலம்  நட்சத்திரம்  வரை எண்ணி வரும்  எண்ணை  அந்த எண் பூராடம்  நட்சத்திரம் முதல் எண்ணி வரும்  நட்சத்திரம்  லடாம் நட்சத்திரம்  அன்று முகூர்த்தம்  கூடாது

18.ஏகார்க்களம்.

மொத்தம்  360 பாகையிலிரூந்து  சூரியன்  நிற்கும்  பாகையை கழித்து வரும்   ஸ்புடத்திற்கு 
உதய நட்சத்திரம்  1,2,7,10,11,14,16,18,20

ஆகிய. நட்சத்திரங்கள் முகூர்த்தம்  கூடாது.

19.வைதிருதம்.

சூரியன்  நின்ற நட்சத்திரம் முதல்  14,வது நட்சத்திரம்  முகூர்த்தம்  கூடாது

20.அஹிசிரசு.

வியதிபாதத்தின் பிற்பகுதி  முகூர்த்தம் கூடாது.

21. விஷ்டி.
வளர்பிறை  அஷ்டமி, ஏகாதசி,  6.முதல்  12 நாழிகை.பௌர்ணமி  12 நாழிகை கூடாது

22.அம்ஹஸ்பதி.
ஒரு மாதத்தில்   இரண்டு  அமாவாசைகள் வந்த மாதம் கூடாது
சித்திரை. வைகாசி  செய்யலாம்

23.ஸமஸர்ப்பம்.
அமாவாசை  வராத மாதம் கூடாது

இவைகள்  எல்லாம்  இப்போது  பார்த்து  திருமணம்  செய்ய முடியாது 
ஆனால் இவை இலக்கணங்கள்

Monday, February 3, 2025

அமாவாசை கோயில்கள்


🙇 அமாவாசை கோயில்கள் 

இராமேஸ்வரம்

இராமேஸ்வரத்தில் தை அமாவாசை அன்று இராமநாதசுவாமியும், அம்பாளும் அக்னி தீர்த்தத்திற்கு வருவார்கள். அங்கு அவர்களுக்கு புனித நீராடல் நடைபெறும்.

குறிப்பாக தை அமாவாசை தினத்தில் இராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலில் அக்னி தீர்த்தமாடி, பின் கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கட்டங்களில் தீர்த்தமாடிய பின இராமநாதர் திருக்கோயிலில் வழிபடுவது சிறப்பு. 

இன்று இங்குள்ள தீர்த்தக்கட்டத்தில் ஒரு முறை நீராடினால் ஆயிரம் தீர்த்தக்கட்டத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.

சதுரகிரி

பூலோக கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் தை அமாவாசை விழா சிறப்பாக நடக்கும். 

முதல்நாள் பரிசுத்த பூஜைகளும், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கும். தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும் நடக்கும். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கான சிறப்பு வழிபாடும், சங்கொலி பூஜைகளும் நடக்கும். 

சிதம்பரம் 

தை அமாவாசையை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் ஏராளமானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர். 

தை அமாவாசை நாளில் தில்லைக் காளியை வழிபட்டால் நம் முன் ஜென்ம வினைகள் யாவும் விலகிவிடும் என்பது ஐதீகம். 

அமாவாசை நாளில் தில்லைக் காளிக்கு 108 திரவியங்களால் அபிஷேகமும் விசேஷ யாகமும் நடைபெறும். 

யாகத்தில், அபூர்வ மூலிகைகளுடன் மிளகாய்வற்றலும் போடப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வேண்டிக்கொண்டால், எதிரிகள் தொல்லை  ஒழியும் குடும்பத்தில் தம்பதிக்குள் ஒற்றுமை மேலோங்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சகோதரச் சண்டைகள் யாவும் தீர்ந்துவிடும்; தீய சக்திகள் விலகி ஓடும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமூர்த்தி மலை 

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. 

ஆண்டு தோறும்  தை அமாவாசை தினம் சிறப்பு நாளாகும்.  தை பட்ட சாகுபடியை துவக்குவதற்கு முன்பு விவசாயிகளை அமாவாசை தினத்தில் மாட்டு வண்டிகளுடன் வந்து மும்மூர்த்திகளை தரிசித்து விட்டு, சாகுபடி பணிகளை துவக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

அய்யாவாடி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்யங்கிரா கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் யாகம் நடைபெறுகிறது. இதில் தைஅமாவாசையன்று இந்த யாக்த்தில் கலந்து கொள்பவர்களுக்கு எதிரி தொந்தரவுகள் இருக்காது. 

திருச்சி உறையூர்

குங்குமவல்லி அம்மன் திருக்கோயிலில், அமாவாசை யாகம் சிறப்பாக நடக்கும். இங்குள்ள இறைவன் சுயம்புவாக லிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதராய் வாகனங்களில் எழுந்தருளியிருப்பது கோயிலின் தனி சிறப்பு.

இராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்ட தானம்

இராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 62 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது  சகல தீர்த்தமுடையவர் கோயில் இங்கு அம்மன்  பெரியநாயகி. 

இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தை மாதங்களில் வரும் அமாவாசைப் புனித நாளில், இந்தத் தலத்தில் திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும் என்பர். 

இந்தத் தலத்தில் திதி கொடுத்தால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம். அவர்களின் ஆத்மாவும் அமைதிபெறும். பிறகு சர்வதீர்த்தேஸ்வரரை வழிபட்டால். சகல ஞானமும் யோகமும் பெற்று இனிதே வாழலாம் 

வேதரண்யம் 

ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும். 

திலதர்ப்பணபுரி

இத்தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக் காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த தலங்களில் ஒன்று. 

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய வந்த இராமபிரான், இங்கே எள்ளும், நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால் இத்தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்ற பெயர் ஏற்பட்டது.

இங்கு சூரியனும், சந்திரனும் அருகருகில் இருப்பதால் இதற்கு நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் உண்டு.

ஈரோடு மாவட்டம் பவானி 

கூடுதுறையில் கோயில் கொண்டிருப்பவர் சங்கமேஸ்வரர். இத்தலம் பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகவும், இங்கு நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம். 

இங்கு அம்மன், நதி, தலம் மூன்றும் பார்வதியின் திருநாமங்கள் பெற்றும் அமைந்துள்ளதால் மிகச் சிறப்பு வாய்ந்தது.

திருச்செந்தூர்

முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும் திருத்தலம் திருச்செந்தூர். இங்கும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணற்றிலும், கடலிலும் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விளமல்

திருவாரூரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தலம் விளமல் என்ற ஸ்தலம். பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம். 

அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி பின் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.

குற்றாலம், பாபநாசம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது

திருநெல்வேலி

நெல்லையப்பர் ஆலயத்தில், ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று பத்ர தீபம்/ இலட்ச தீபம் ஏற்றுவார்கள். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களால் ஏற்றப்படும் 

திருவள்ளூர்

வீரராகவப் பெருமாள், சாலிஹோத்திர மகரிஷி என்பவருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வு அந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தை `அமாவாசை தலம்' என்றும் அழைப்பார்கள். 

தை அமாவாசை அன்று, பக்தர்களுக்கு தேனும், தினை மாவும் பிரசாதமாக வழங்கப்படும்.

ஆனைமலை 

இங்கு மாசாணியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் அம்மன், சயன கோலத்தில் இருப்பதை தரிசிக்கலாம். 

இங்கு தை அமாவாசை அன்று, பச்சிலை பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த பிரசாதம் வயிற்றுப் பிரச்சினைக்கு அருமருந்தாகும்.

திருஇந்தளூர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதர் கோவில் இருக்கிறது. 

தை அமாவாசை அன்று, இத்தல இறைவனான பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.

திருக்கடையூர்

அபிராமி பட்டருக்காக, தை அமாவாசை அன்று, வானில் பவுர்ணமி நிலவை தெரியச் செய்து அருளியவர், அபிராமி அன்னை. அந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று திருக்கடையூர் திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடத்திக் காண்பிக்கப்படும்.

தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டு ஆசீர்வாதம் பெறுவோம்.

அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார் மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿

**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என்‌ வரமே

இனிய ஈசன்  அகிலம் காக்கும் அண்ணாமலையார் அருளால் எல்லா நாளும் இனிய நாளே 🌹