பிரஸ்ன ஜோதிடம்:
விவாஹ முகூர்த்தம்.
1.உல்கா;
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து பத்தொன்பதாது நட்சத்திரம் உல்கா அதில் முகூர்த்தம் கூடாது,
2.பூகம்பம் :கோச்சாரத்திலிருந்து சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து ஒன்பாதவது நட்சத்திரம் பூகம்பம் . முகூர்த்தம் கூடாது,
3.உபாகம்;
சூரிய சந்திரன் கிரகணத்திற்கு முன்பு மூன்று நாளும் கிரகணம் முடிந்து மூன்று நாளும் முகூர்த்தம் கூடாது,
4.குளிகதோயம்.
குளிகன் உதயம் ஆகும் நேரம் முகூர்த்தம் கூடாது.
5.சஷ்டாஷ்டகம்.
முகூர்த்தம் லக்கினத்திற்கு சந்திரன், குரு 6.8.12 கூடாது
6.அஸத் திருஷ்டி.
முகூர்த்தம் லக்னம் பாவத்தை பாபர்கள் பார்க்க கூடாது
7.அஸத் ஆருடம்.
முகூர்த்த லக்கினத்தில் பாபர்கள் கூடாது
8.சித த்ருக்.
சுக்கிரன் முகூர்த்த லக்கினத்தை பார்ப்பது கெடுதி என சில க்ரந்தங்களில் சொல்லப்படுகிறது, .
ஆனால் பராசார ஹோரையில் முகூர்த்த லக்கினத்தை களத்திர காரகனாகிய சுக்ரன் பார்ப்பது மிக நன்று என சொல்லப்படுகிறது,
9.ஸந்தியா தோஷம்,
சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன்னும், பின்னும் இரண்டு நாழிகை காலம் தோஷம், அதில் முகூர்த்தம் கூடாது
10. கண்டாந்தம்.
அஸ்வினி, மகம், மூலம் கேது நட்சத்திரங்களின் முதல் பாதமும்
திருவாதிரை. சுவாதீ. சதயம், இராகு நட்சத்திரங்களின் கடைசி பாதங்களும் முகூர்த்தம் கூடாது
11.உஷ்ண கடிகை.
உஷ்ண கடிகை நட்சத்திர நாழிகையில் முகூர்த்தம் கூடாது.
12.தியாஜ்யம் நேரம் முகூர்த்தம் கூடாது
13.ஸ்திர கரணம்.
சகுனி. சதுஷ்பாதம், நாகவம், கிம்துஸ்க்னம் போன்ற கரணங்களில் முகூர்த்தம் கூடாது
15.ரிக்தை.
சதுர்த்தசி சதுர்த்தி, ந.அஷ்டமி, நவமி போன்ற திதிகளில் முகூர்த்தம் கூடாது
17.லாடம்.
சூரியன் நின்ற நட்சத்திரம் முதல் மூலம் நட்சத்திரம் வரை எண்ணி வரும் எண்ணை அந்த எண் பூராடம் நட்சத்திரம் முதல் எண்ணி வரும் நட்சத்திரம் லடாம் நட்சத்திரம் அன்று முகூர்த்தம் கூடாது
18.ஏகார்க்களம்.
மொத்தம் 360 பாகையிலிரூந்து சூரியன் நிற்கும் பாகையை கழித்து வரும் ஸ்புடத்திற்கு
உதய நட்சத்திரம் 1,2,7,10,11,14,16,18,20
ஆகிய. நட்சத்திரங்கள் முகூர்த்தம் கூடாது.
19.வைதிருதம்.
சூரியன் நின்ற நட்சத்திரம் முதல் 14,வது நட்சத்திரம் முகூர்த்தம் கூடாது
20.அஹிசிரசு.
வியதிபாதத்தின் பிற்பகுதி முகூர்த்தம் கூடாது.
21. விஷ்டி.
வளர்பிறை அஷ்டமி, ஏகாதசி, 6.முதல் 12 நாழிகை.பௌர்ணமி 12 நாழிகை கூடாது
22.அம்ஹஸ்பதி.
ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்த மாதம் கூடாது
சித்திரை. வைகாசி செய்யலாம்
23.ஸமஸர்ப்பம்.
அமாவாசை வராத மாதம் கூடாது
இவைகள் எல்லாம் இப்போது பார்த்து திருமணம் செய்ய முடியாது
ஆனால் இவை இலக்கணங்கள்
No comments:
Post a Comment