Wednesday, March 11, 2020

காரடையான் நோன்பு ஸ்பெஷல் !

Thank  FB Kala raj



காரடையான் நோன்பு ஸ்பெஷல் !

 'காரடையான் நோன்பு'  பெயர்க் காரணம்:


கார்காலத்தில் கிடைக்கும் நெல்லைக் குத்தி, அரிசி எடுத்து, அதில் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் அடையே 'காரடை' எனப்படுகிறது. அக்காலத்தில் தைமாத அறுவடை முடிந்து, வரும் புது நெல்லையே பொங்கலுக்கும் இந்த நோன்பிற்கும் உபயோகப்படுத்துவர். பார்ப்பதற்கு வடை போல இருந்தாலும், இது காரடை எனப்படுகிறது.

இந்த அடையை வைத்து நைவேத்தியம் செய்வதாலேயே இதற்கு 'காரடையான் நோன்பு' எனப் பெயர் வந்தது. கார்காலம் என்றால் 'முதல் பருவம் ' என்றொரு பொருளும் கூறப்படுகிறது. சுமங்கலிகளும் கன்னிப் பெண்களும் இந்த நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும்.

இந்த நோன்பின் பயன்:

கணவர் தீர்க்காயுளுடன் வாழவும், மாங்கல்ய பாக்கியம் பெருகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் கிடைக்கவும் இந்த நோன்பை நோற்க வேண்டும்.
சாஸ்திர சம்பிரதாயங்கள் கண்மூடித்தனமானவை அல்ல. அவை மக்களின் நன்மையை முன்னிட்டும், அக்கால வாழ்வியல் முறையைக் கருத்தில் கொண்டுமே ஏற்பட்டவை.சில சம்பிரதாயங்கள் வேண்டுமானால், காலம் மாறிப் போனதால்
மாறிப் போயிருக்கலாம். ஆனால் எல்லாவற்றையுமே அப்படிக் கூறிவிட முடியாது.

இந்திய பண்பாட்டின் சிறப்பே குடும்ப வாழ்க்கை முறைதான்.  திருமணம் என்பது இரு
குடும்பங்களின் இணைப்பு.
உயிரோடு இருப்பவர்கள் மட்டுமல்ல,  இறந்து தெய்வமாக அருளுகிற முன்னோர்களுக்கும் இதில் பங்குண்டு. அதனால் தான், திருமணத்திற்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனை,சுப சாந்தி, மூதாதையர் படைப்பு என்று வழிபாடு செய்கிறோம். இல்லறத்தின் கூறுகளான, தேவகடன் தீர்த்தல், பித்ரு கடன் தீர்த்தல், விருந்தோம்புதல், உறவுகளைப் பேணல், முதலிய யாவற்றையும் நிறைவேற்றுவது, திருமணமான தம்பதிகளின் கடமை. ஒரு ஆணும் பெண்ணும் இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, வாழ்வில் இணைவதை ஊரறியச் செய்யும் நிகழ்ச்சிதான் திருமணம்.

பெண்கள் இரண்டாம் தரப் பிறவிகளென்றும் சம்பிரதாயச் சடங்குகளைச் செய்ய உரிமையற்றவர்களென்றும் நினைப்பது தவறு. மனைவியில்லாமல் ஆணும் எந்தச் சடங்குகளையும் செய்ய இயலாது.அக்னிஹோத்திரத்திலிருந்து ஆரம்பித்து, வேள்விகள் வரை, எந்தச் சடங்கையும் செய்யத் தொடங்கும் போது,  'என் மனைவியைத் துணையாகக் கொண்டு' என்று
பொருள்படும் மந்திரம் சொல்லித்தான் ஆரம்பிக்கவேண்டும்.

திருமணம் செய்த பிறகு, அந்தப் பெண், புகுந்த வீட்டின் ஒரு அங்கம். எக்காரணம் கொண்டும் அவளைக் கைவிடுவது கூடாது. அது, இப்பிறவியிலும், இறப்பிற்குப் பின்னாலும் ஒருவனுக்குத் தீராத துன்பத்தைத்தரும்.
மனுநீதி, கணவனின் புண்ணியத்தில் பாதி, மனைவிக்குக் கிடைக்கும்
என்றும் மனைவியின் பாவத்தில் பாதி,கணவனை அடையும் என்றும் கூறுகிறது.

இயல்பாகவே செய்நேர்த்தி மிகுந்த பெண்களுக்கு, சம்பிரதாயங்களை அனுஷ்டிப்பதும்,பொறுமையாகக் கோபமின்றி விரதமிருப்பதும் பெரிய விஷயமில்லை. ஆகவே குடும்ப நன்மைக்காக விரதமிருப்பது, பெண்களின் கடமையாயிற்று என்பது பெரியோர்கள் கருத்து!.. தன்னில் சரிபாதியான கணவனின் நன்மைக்காக விரதமிருப்பது, நமது நன்மைக்காக விரதமிருப்பது போல்தானே.... இரண்டு கண்களில் ஒன்று நோயுற்றால் மற்றொன்று அழுவது இயல்பு தானே.....

இம்மாதிரி விரதங்கள் கணவன் மனைவி ஒற்றுமையைப் பலப்படுத்தும் சக்தி கொண்டவை. 'நானும் நீயும் வேறு வேறல்ல,ஒன்றுதான்' என்ற மனப்பான்மையே இன்று, பல தம்பதிகளிடம் தேவையாக உள்ளது.இந்த விரதத்தின் முக்கியப் பலனே, கணவன் மனைவி ஒற்றுமை தான்.

விரதம் இருக்கும் நாள்;

மற்ற விரதங்களைப் போல், குறிப்பிட்ட நாள், நட்சத்திரம் என்று இதற்கு எதுவும் இல்லை. மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நேரம் இந்த நோன்பைச் செய்யவேண்டும். சில சமயம், நடு இரவில் கூட இந்த நோன்பு வரும்.

இந்த வருடம், 14‍‍‍‍‍‍‍‍‍‍‍.3.20 அன்று காலை 10.30 மணியிலிருந்து, 11.30 மணிக்குள் இந்த நோன்பைச் செய்யவேண்டும்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள்,குங்குமம், நோன்புச்சரடு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மாவிலை, வாழை இலை, பூ (சரம் மற்றும் உதிரி), கற்பூரம், விளக்கு ஏற்றத் தேவையான பொருட்கள் (திரி, எண்ணெய் முதலியன), மாக்கோல மாவு, சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் தருவதானால், அதற்குத் தேவையான கிஃப்ட்,
ரவிக்கைத்துணி முதலியன.
       
நிவேதனத்திற்கு:

வெல்ல அடை, உப்படை, மற்றும் வெண்ணை.

முதல் நாள் செய்ய வேண்டியது:   

பூஜை அறையைத்துடைத்து, சுத்தம் செய்யவும்
மாக்கோலமிடவும்.
சுவாமி படங்களைத் துடைத்து, சந்தனம் குங்குமம் இடவும்.
கலசம் வைக்கத் தேவையான சொம்பு, மற்றும் பூஜைப் பாத்திரங்களைச் சுத்தம் செய்து, பொட்டு வைக்கவும்.
ஒரு தேங்காயை மஞ்சள் பூசி,குங்குமம் வைத்து, தயார் செய்யவும்.
அடை செய்யத் தேவையான மாவு தயாரித்து, வறுத்து வைக்கலாம் (நேரமிருந்தால்).
தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறில் திருமாங்கல்யம் அணிந்திருந்தால்)மாற்றிக் கொள்ளவேண்டும்.' மாசிக் கயிறு பாசி படரும்'  என்பது நம்பிக்கை.

நோன்பன்று செய்ய வேண்டியது.

அதிகாலையில் எழுந்து, நீராட வேண்டும்.  வீடு,வாசலை மெழுகிக் கோலமிட வேண்டும். வாசலில் மாவிலை கட்டுவது விசேஷம். அவரவர்கள் சம்பிரதாயப்படி உடை அணிந்து, தலையை பின்னி அல்லது முடிந்து கொண்டு, ஒரு கிள்ளுப் பூவை தலையில் வைத்துக் கொண்டு, நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் வைத்துக் கொண்டுதான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும்.  நம் இருதய கமலத்தில் தேவி உறைந்திருப்பதால், எந்தப் பூஜையானாலும் நம்மை சரியானபடி அலங்கரித்துக் கொண்டுதான் செய்ய வேண்டும்.                                                                             
சொம்பில் நீர் நிறைத்து, அதில் ஏலக்காய், பன்னீர் போன்ற வாசனைத் திரவியங்கள் சேர்த்து, பின் மாவிலைக் கொத்து, மஞ்சள் பூசிய‌ தேங்காய் வைத்து, ஒரு ரவிக்கைத்துணி சாற்றவும்.
ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, அதில் கலசத்தை வைக்கவும்.
பக்கத்தில் அம்மன் படம் வைக்கவும் (துடைத்து, பொட்டு வைத்து வைக்க வேண்டும்).

இதையே சாவித்திரி அம்மனாகக் கருதி வழிபடலாம். பொதுவாக, காமாக்ஷி அம்மனையே சாவித்ரி அம்மனாக வழிபடும் வழக்கம் இருக்கிறது.
கலசத்திற்கும், படத்திற்கும்,  பூ சாற்றவும்.நோன்புச் சரடில் ஒரு பசு மஞ்சளைத் துளையிட்டுக் கோர்க்கவும். இல்லாவிட்டால், பூ கட்டியும் வைக்கலாம். நோன்புச் சரடை, இரட்டைப்படை எண்ணில் வாங்கவேண்டும். இரண்டு சுமங்கலிகள் இருந்தால், நான்காக வாங்கவும். இரண்டை, கலசம், அம்மன் படத்துக்கு அணிவித்து விட்டு, இரண்டை உபயோகிக்கலாம். சிலர் துளசிச் செடிக்கும் கட்டுவதுண்டு.

பூஜை அறையில் அம்பாளுக்குப் பெரிய கோலமாக ஒன்றும், வீட்டில் சுமங்கலிகள் எண்ணிக்கைக்கேற்ப சிறிய மாக்கோலங்களும் போடவும்.
அம்மனின் கோலத்தில்,ஒரு தட்டில், தேங்காய் (உடைத்தது),வெற்றிலை, பாக்கு, பழம், பூ, அம்மனின் சரடு, முதலியவை வைக்கவும். மற்ற சிறிய கோலங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய நுனி வாழை இலையை வைக்கவும்.

சில வீடுகளில், ஒவ்வொரு இலைக்கும், தனித்தனியாக வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, சரடையும் வைத்து, இலை நுனியில் வைப்பர். இருப்பதில் வயதான சுமங்கலி, தன் இலையில் அம்மனின் சரடையும் சேர்த்து வைத்துக் கொள்வார். இது, அவரவர் வீட்டு வழக்கத்தைப் பொறுத்தது.

வாழை இலையை சிறிதாகக் கிழித்துத் தான்,அடையை வேக வைக்கவேண்டும். இட்டிலிப் பானை அல்லது குக்கரில் சிறிது வைக்கோல் சேர்த்து (கிடைத்தால்) வேக வைப்பது நல்லது. இதன் காரணம், இறந்த சத்தியவான் உடலை வைக்கோலால் மூடி விட்டுத் தான், சாவித்திரி எம தர்ம ராஜனின் பின் சென்றாள்.  வைக்கோல் சத்தியவானைப் பாதுகாத்தது  போல், கணவனை தெய்வ அருள் காக்கும் என்பது நம்பிக்கை.

வேகவைத்த இலையோடு, அடையை எடுத்து (இரண்டு அடைகளாக
இருக்க வேண்டும்),   நிவேதனம் செய்யும் நுனி வாழை இலையில் வைத்து, சிறிது வெண்ணையையும் வைக்கவும். உப்படையை தனியாக ஒரு தட்டில் வைக்கலாம்.

பூஜை செய்யும் வழக்கம் இருந்தால், கலசத்திற்கு பூஜை செய்யவும். மற்றவர்கள் முதலில் ஒரு விநாயகர் துதியைச் சொல்லி, பிறகு, கீழ் வரும் ஸ்லோகத்தை 21 முறை சொல்லவும்.

மங்களே மங்களாதாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே சதா

இதன் பொருள் :
'மங்கள ஸ்வரூபமாகவும்,
சர்வமங்களங்களுக்கும் ஆதாரமாகவும்,நித்ய மங்களங்களை அருளுபவளாகவும் இருக்கிற ஹே தேவி, எனக்கு, மாங்கல்யம் நிலைக்க அருளுவாய்'. 

பிறகு, கணவனின் நலனுக்காக மனதார வேண்டிக் கொண்டு,   

 'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் வைத்து, நோன்பு செய்தேன்.
ஒருக்காலும் என் கணவன் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்'

என்று கூறி,நீரைச் சுற்றி அடைகளை நிவேதனம் செய்ய வேண்டும். வெற்றிலை பாக்கையும் நிவேதனம் செய்ய வேண்டும். கற்பூரம் ஏற்றிக் காண்பிக்கவும். பிரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும்.

 உதிரிப் பூக்களை சமர்ப்பித்து, தேவியை வேண்டிக் கொண்டபின், வயதில் பெரிய சுமங்கலிகள், அம்மன் படத்துக்குச் சரடு சாற்றிவிட்டு, சிறியவர்களுக்குக் கட்டவும். பிறகு  அவர்கள் தங்களுக்குத் தாங்களே சரடு கட்டிக் கொள்ளலாம்.
சரடு கட்டும் போது, இலைக்கு எதிரில் ஒரு மணை போட்டு, அதில் உட்கார்ந்து கட்டவும். பிறகு சரடுக்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். நெற்றியிலும் இட்டுக் கொள்ள வேண்டும்.

நிவேதனம் செய்ததில் ஓர் அடையை வெண்ணையுடன் வைத்து கணவனுக்குக் கொடுத்து,  நமஸ்கரித்த பின்,  இலையில் உட்கார்ந்து சாப்பிடலாம்.பூஜை முடியும் வரை விளக்கு எரிய வேண்டும். எனவே தகுந்தபடி எண்ணை விடவும்.

மாசி முழுவதும் முடிவதற்குள் நோன்பைச் செய்துவிட வேண்டும்.சாவித்திரி தேவியின் கதையைப் படிப்பது, மிகவும் நல்லது. அன்று, அக்கதையைப் படிப்பவர்களை சாவித்திரி தேவியே நேரில் வந்து ஆசீர்வதிப்பதாக ஐதீகம்.எமதர்ம ராஜனும் 'தீர்க்க சுமங்கலியாக இருப்பாய் என்று ஆசி கூறுவாராம்.

அனைவருக்கும், தேவி சகல சௌபாக்கியங்களும் அருளிடப் பிரார்த்திக்கிறேன்.

Wednesday, March 4, 2020

Madurai Wedding Feast மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து


Madurai Sumptuous Wedding Feast 

A sumptuous feast awaits devotees on 04-05-2020 Madurai following the ‘Tirukkalyanam Virundhu ’ (celestial wedding) of Goddess Meenakshi and Lord Sundareswarar. The ‘Tirukkalyanam’ of Goddess Meenakshi with Lord Sundareswarar takes place on Wednesday at the junction of North and West Adi Streets.Being prepared by the Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai for the 22th consecutive year.

 The feast is being arranged for over 1,00,000 devotees , we are arrange at Sethupathi school, Madurai . “The menu comprises boondhi, Chakkarai Pongal , lemon rice, Tomato rice, Sambar rice and curd rice with water packet ”.The feast will commence at around 8.30 a.m. and go on till the last devotee leaves the place.

When we started providing the feast 22 years back, only around 1,500 devotees took part in the feast at Meenakshi temple itself. Now, it has grown to provide for over 75,000 . we arrange at Sethupathi school ,Madurai .

Apart from the ‘Tirukkalyaa Virundhu,’ another special feast was provided on 03-05-2020 evening  Known as ‘Mappillai Azhaippu Virundhu’ [Night Dinner] the feast comprising kesari, pongal, vadai was provided for people. We are welcome you come cutting of vegetable for feast and service .

We need volunteers for feast service ,if you are interests please register with us.

Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai (Regd.No 32/16) 
C/o Chamundi Vivekanandan
Chamundi Supari
New 41 old 20/3 West Tower Street ,
Madurai -  625 001 
Cell: 9442408009 , Shop: 0452-2345601
chamundihari@gmail.com


[ Madurai Meenakshi Miracle pic 
 Madurai Meenakshi Tirukkalyanam [wedding] feast at Setupati 
School here on Friday 30/4/2015. by Selvam Ramaswamy ]

மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து

சோலைமலை முருகன் கோயிலில் 40 ஆண்டுகள் கார்த்திகை மாதம் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.

22 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தேனய்யா அவர்கள். அவர் மீனாட்சி கோயிலுக்கு இடமாற்றப்பட்ட போது. 


திரு சாமுண்டி விவேகானந்தன் அவர்களை அணுகினார். "திருக்கல்யாணத்தின் போது ஊழியர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யக்கூடாதா" என்று கேட்டபோது,


திருமண விருந்து யோசனை தோன்றியது. பொதுமக்கள் கொடுக்கும் பொருட்களை கொண்டு முதன்முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே செவ்வந்தீஸ்வரர் சன்னதி முன்பு 1500 பேருக்கு திருமண விருந்து

அளிக்க ஆரம்பித்தோம். இன்று வரை இது இறைவனின் அருளால் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. அம்மன் சமைக்கிறார். நாங்கள் கரண்டியாக இருந்து பரிமாறுகிறோம்'' .

10 ஆண்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தன்று, 10,000 பேருக்கு பக்த சபை சார்பில், ஆடி வீதிகளில் விருந்து அளிக்கப்பட்டு வந்தது பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு காவல்துறை தடைவிதித்தனர்.



இந்தாணடு திருக்கல்யாணம் 4-05-2020 அன்று   நடக்கிறது 100000 பேருக்கு வழங்கபடுகிறது.இதை முன்னிட்டு, பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது.இந்த விருந்தில், பூந்தி, வாழைப்பழம், வடை  , கல்கண்டு சாதம் , எலுமிச்சைச்சாதம் , தக்காளிச்சாதம் , சாம்பார்ச்சாதம் மற்றும் தயிர்ச்சாதம் தண்ணீர் பாக்கெட் தட்டில் வழங்கப்படும்இடம்பெறுகிறது.

03-05-2020 அன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது ,மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி ,பொங்கல், வடை இடம்பெறும்.


விருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.


திருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்ய அழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.  

"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை "  Regd.No 32/16
C/o சாமுண்டி விவேகானந்தன்
சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell: 9442408009 , Shop: 0452 2345601.
chamundihari@gmail.com






Last year NewsPaper Report :




On the eve of Meenakshi Sundareswarar ‘Thirukalyanam’ (celestial wedding), the campus of Setupati Higher Secondary School is a hub of activity. While more than five hundred women are busy chopping vegetables in the school’s main hall , there are volunteers wheeling huge vessels of chopped vegetables and ingredients such as rice and pulses towards a kitchen set up in the school grounds. ( https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/preparing-a-banquet-for-75000-devotees/article7156379.ece )






Thanks  Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்



                 
ஓம் சிவசிவ ஓம்
Be Good & Do Good

Last year 


Pic Thank to
 — with Guna Amuthan and Selvam Ramaswamy.











 Pic by   

Wednesday, February 19, 2020

சிவராத்திரியின் மகிமை என்ன?



கேள்வி எண் : 210 : சிவராத்திரியின் மகிமை என்ன?


பதில் : "லூமினிபெரஸ் ஈத்தர்" ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு  பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து  தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது.  எனவேதான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அறிவியல் பூர்வமாக ஆதாரம் வேண்டும் என்றால் இங்கே நான் கொடுத்திருக்கும் சில படங்களை பார்த்துக்கொண்டே நான் சொல்வதைக் கேளுங்கள்.

ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது. இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது. மேலும் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறது.

பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் இரண்டு நீள்வட்ட பாதையில் உள்ளது. ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை. பூமி பெரிய நீள்வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதிக்கும் மாறும் நேரம் தான் இந்த மகா சிவராத்திரி நேரம். ( படம் பார்க்கவும் )

மேலும் ஈத்தர் என்ற சக்தி எப்பொழுதும் பூமியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தி சற்று அதிகமாக இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரி மட்டும் அபரிமிதமாக, அளவுக்கு அதிகமாக சக்தி இருக்கும். இதற்கு நிகர் வேறு எந்த மதமும் இருப்பதில்லை. எனவேதான் இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைக்கிறார்கள்.

ஈத்தர் சக்தி இரண்டு விதமான தன்மைகளில் பூமியை நோக்கி வரும் ஒன்று ஸ்பிரிங் (SPRING ) , இரண்டு ஃபால் ( FALL ). இதில் ஸ்பிரிங்க்கு சக்தி அதிகம். ஃபால்க்கு சக்தி குறைவு. ( படம் பார்க்கவும் )

மாசி மாசம் மகா சிவராத்திரியில் வரும் ஈத்தர் ஸ்பிரிங் தன்மைகொண்டது. இதற்குத் தான் அதிக சக்தி உண்டு. ஏனென்றால் ஈத்தர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும், பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றிக்கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழு சக்தியை இந்த மகாசிவராத்திரியில் மட்டுமே கிடைக்கும்.

அதேசமயம் 180 கேண மாற்றத்தில், ஆவணி மாதத்திலும் ஈத்தர் கிடைக்கும் ஆனால் அது ஃபால் என்ற தன்மையில் இருக்கும் அதற்கு சக்தி குறைவு மேலும் பூமி சுற்றி நகரும் அதே திசையில் ஈத்தரும் பின்தோடர்ந்து வருவதால் சக்தி குறைவாக இருக்கிறது.

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஈத்தர் 24 மணி நேரமும் பூமியை நோக்கி சைக்கிள் வேகத்தில் வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் புல்லட் வேகத்தில் வரும். ஆவணி, ஆடி மாதத்தில் கார் வேகத்தில் வரும். மாசி மாசம் மட்டும் ராக்கெட்டில் வேகத்தில் வரும்.

மகா சிவராத்திரி அன்று  பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடு இரவு 12 :15 AM முதல் 12: 45 AM வரை உச்சகட்ட ஈத்தர் சக்தி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இந்த நேரம் சிறப்பான நேரம். இந்த நேரம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறும்.


இந்த லூமினிபெரஸ் ஈத்தர்" ( Luminiferous Eather ) பல மதங்களில், பல மார்க்கங்களில் இறைவன்,கடவுள், பிரமாண்டம், இறைத்துகள் ஆற்றல், பேரறிவு, பிரபஞ்சம், பரமாத்மா மற்றும் அண்டம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

இதற்கு ஆதாரமாக கிமு நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் பல கண்டுபிடிப்புகளை கொடுத்துள்ளார். மேலும் 17 ம்  நூற்றாண்டு முதல் ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன் மற்றும் அகஸ்டின் போன்ற பல்வேறு விஞ்ஞானிகளும் இதைப்பற்றி வேறு வேறு பெயர்களில் கூறியிருக்கிறார்கள்.

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து, தூங்காமல், முதுகை நேராக வைத்து, விழித்திருந்து தியானம் செய்வது மிக மிக மிக மிக மிக சிறப்பு.

ஈதர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட் என்ற ஆனந்த சுரப்பி என்ற ஆனந்த மூளையை அடைந்து பலவிதமான நல்ல ஹார்மோன்களை சுரக்கும். இந்த நேரத்தில் நமக்கு நாமே நம்மை ஆசிர்வாதம் ( Self Blessing )
செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (  DNA ) ல்  கெட்ட பதிவுகளை  ( கர்மா ) அழிக்கும் வல்லமை உள்ளது.

மகா சிவராத்திரியில் பகலில் சக்தி கிடைக்காதா?

பகலில் சூரிய வெளிச்சம் இருப்பதால் ஈத்தர்  சக்தி சற்று குறைவாக இருக்கும். இரவில் சூரிய வெளிச்சம் இல்லாததால் சக்தி அதிகமாக இருக்கும். இரவு 9 மணிக்குத்தான் மெலடோனின்  ( Melatonin ) என்ற ஒரு திரவம் நமது உடலில்  சுரக்கும். மேலும் காலை 2 மணிக்குத்தான் நாம் பிரபஞ்சத்தோடு மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கும் நேரம். எனவே இரவு 9 மணி காலை 2 மணி வரை தான் அதிக சக்தி பெறும் நேரம் எனவே இரவில் கண் விழிக்கிறார்கள்.

அதை சிர்காடியன் ரிதம் என்று அழைப்பர். ( Circadian Rhythm )

மகா சிவராத்திரி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது மற்றும் நாடுகளில் இல்லை?

நமது நாட்டில் மட்டும்தான் ஆசான்கள் உள்ளதை உள்ளபடி அனைவருக்கும் ஓபனாக சொல்கிறார்கள். பல நாடுகளில் இந்த விஷயத்தை ஆசான்கள் மட்டும் புரிந்து தான் மட்டும் பயிற்சி செய்து சக்தியை எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் பல நாடுகளில் இதுபோன்ற விஷயங்கள் யாருக்கும் தெரிவதில்லை.

நண்பர்களே, இதை தான் "தூக்கம்" என்ற தலைப்பில், இரவு படுத்து தூங்குவதை விட உட்கார்ந்து தூங்குவதே சிறப்பு என்று நான் பத்து வருடமாக பேசி வருகிறேன். ( https://youtu.be/RSIzI1lR5Vs ).

இந்த ஈத்தரைத்தான் "ஈசன்" என்று சிலர் அழைக்கிறார்கள். ஈசனை தான் சிவன் என்று அழைக்கிறார்கள். "ஈத்தர் ராத்திரி" என்பது தான் சிவராத்திரி என்று கூறப்படுகிறது. எனவே மகா சிவராத்திரி தூக்கம் முழிப்பது அனைத்து ஜாதி மத மக்களுக்கும் நல்லது.

சிவராத்திரி முட்டாள்தனம் என்று சொல்லும் சிலருக்கு எனது கேள்வி உங்களுக்கு பெயரில் பிரச்சனையா? அறிவில் பிரச்சனையா? அறிவியலில் பிரச்சனையா?.

உங்களுக்கு பெயர் பிரச்சனை என்றால், உங்களுக்கு பிடித்த பெயரை வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் அறிவையும் அறிவியலை மாற்ற முடியாது.

இப்படி அறிவியல் பூர்வமாக சொன்னால் சிலருக்கு மட்டுமே புரியும் என்பதற்காக,  ஞானிகள் பல கதைகளைச் சொல்லி அனைவரையும் தூங்காமல் முழிக்க வைத்து சக்தி கிடைக்க செய்திருக்கிறார்கள்.

நன்றி : இந்த அறிவியலை எனக்கு புரிய வைத்த "வேதா ஜி" அவர்களுக்கு நன்றி.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.

https://youtu.be/mPFwczR0B9Y

Monday, February 17, 2020

ஹைந்தவ திருவலம் | அக்ஷய த்ருதியை | AKSHAYA THIRUTHIYAI ! - Thiruvalamsivan ayya

Thank : https://blaufraustein.wordpress.com/ 



 late Thiruvalamsivan  [Blau Frau Stein.]


Iam just copy from Ayya site for next round ...



ஹைந்தவ திருவலம் | அக்ஷய த்ருதியை | AKSHAYA THIRUTHIYAI !  

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை


|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||






|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”அக்ஷய த்ருதியை”

sri

‘அக்ஷயம்’ எனும் சமஸ்கிருத சொல்லுக்கு கூறப்படும் பொருள் “எப்போதும் குறையாதது’’. அள்ள அள்ளக் குறையாது, அள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது. இதற்கு உண்மையான அர்த்தம் என்ன வென்றால் இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான தருமங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பதே!

பூரியசஸ் மன்னரின் கதை சிறுவயது முதல் தமிழர் அனைவரும் அறிந்ததே, பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள்தான் திரிதியை!

அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் “அட்சய பாத்திரம்” போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால், அந்த திரிதியை தினத்தை “அட்சய திரிதியை” என்று சொல்லும் வழக்கம் வந்தது.

இந்து மதத்தை பொறுத்தவரை “வளருதல்” அல்லது “என்றுமே குறையாதது” என்னும் பொருளே “அட்சயம்”, பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திருதியையன்றுதான்.

அக்ஷய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அக்ஷய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் தினம் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

ஹிந்து இதிகாசப்படி, அக்ஷய திருதியை தினத்தன்றே வேத வியாசரை மகாபாரத இதிகாசத்தை எழுதச் சொல்லி அறிவுக்கும் தடைத் தகற்ப்புக்குமான கடவுள் விநாயகர் கட்டளையிட்டார். அது  வழமையாக பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. புராண வேத புத்தகங்கள் அவர் எவ்வாறு கடலிலிருந்து நிலத்தை பரசு வீசி மீட்டார் என்பது பற்றிக் கூறுகின்றன.

இந்த நாளில் குபேரர் விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான அதி தேவதையான லக்ஷ்மியை வணங்குவார் என ‘லக்ஷ்மி தந்தரம்’ கூறுகிறது. இந்த நாளில், குபேர லக்ஷ்மி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

கிருதயுகத்தில் வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய நண்பர் கிருஷ்ணரை சந்திக்க தனது கந்தலான மேலாடையில் ஒரு படி அவலை எடுத்துக்கொண்டு வந்தபோது, அந்த அவலை பாசத்துடன் உண்ட கிருஷ்ணர் ‘அட்சயம்’ என சொல்ல, குசேலரின் மண் குடிசை மாளிகையாகி குசேலர் வற்றாத பெரும் செல்வத்துக்கு அதிபதியானார், இவை நடந்ததும் அட்சயத் திருதியை அன்றுதான்.

கண்ணபிரான் அட்சய திருதியைப் பற்றி, தருமருக்கு ஒரு கதை கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் விளக்குகிறது. அந்தக் கதை:

சாகல் என்ற நகரில் தர்மன் என்ற ஏழை வணிகன் ஒருவன் இருந்தான். தெய்வ பக்தி மிகுந்தவன். அவன், வருடம் தோறும் அட்சய திருதியையின்போது புனித நதியில் நீராடி, இயன்றளவு தான தர்மங்கள் செய்தான். இதனால் மறு பிறவியில் அரசனாகப் பிறந்தான். அப்போதும் அட்சய திருதியை திருநாளில் தான தர்மங்கள், யாகம் ஆகியவற்றைச் செய்து மென்மேலும் சிறப்பு பெற்றான்.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், அட்சய திருதியை அன்று புனித நதியில் நீராடி, தான தர்மங்கள் செய்தால் உடல் பிணிகள் நீங்கும்.

இந்த நன்னாளில் சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ லட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அன்று பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும் சிராத்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ண கௌரி என்ற விரதம் கடைப் பிடிக்கிறார்கள். அன்று, கௌரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக ஸ்ரீ விநாயகர் வருவதாகவும் ஐதீகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.

கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம் கங்கோத்ரி. கங்கையின் வலது கரையில் கங்கோத்ரிக்கான ஒரு கோயில் இருக்கிறது. இது 20 அடி உயரத்தில், வெள்ளை கிரானைட் கற்களால், மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. அட்சய திருதியை அன்று இந்த கோயில் திறக்கப்படுகிறது. தீபாவளி முடிந்த பிறகு கோயில் மூடப்படும். கடுங்குளிர் காலத்தில் பனி உறைந்து கிடக்கும்போது இந்த கோவிலின் திருவுருவச் சிலை 25 கி.மீ. கீழேயுள்ள ‘முகிமடம்’ என்ற கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அட்சய திருதியை அன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில், ‘முக்கூடல்’ எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் கூடும் துறையில், ஏராளமான பக்தர்கள் நீராடுகிறார்கள். அட்சய திருதியை அன்று இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியை நாளன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பதினாறு பெருமாள் கோயில்களில் இருந்து புறப்படும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு, குடந்தை பெரிய தெருவுக்கு வந்து தரிசனம் தருகின்றனர்.

இத்தினத்தில் தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் செய்தால், திருமணத் தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள் அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

பாஞ்சாலி அபய மந்திரம்!

சித்திரை  மாத வளர்பிறையின் மூன்றாம் நாள், அட்சய திரிதியை நாளாகும். பெண் மானம் காத்த தினம் என இதை அழைக்கலாம். பாண்டவர்களில் மூத்தவரான தருமர், சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்ததுடன், தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார்.

துர்க்குணம் கொண்ட துரியோதனன், பாஞ்சாலியின் துகிலுரிய உத்தரவிட்டான். மானம் காக்கவேண்டி பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள்கூட அவளுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில் தெய்வமே துணை என

சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலயாச்யுத |

கோவிந்த! புண்டரீகாக்ஷ! ரக்ஷமாம் சரணாகதம் ||

எனக் கதறினாள். ஸ்ரீ கண்ணனின் அருளால் பாஞ்சாலியின் மானமும் காப்பாற்றப்பட்டது.

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்கள், பாஞ்சாலி சொன்ன இந்த அபய மந்திரத்தைச் சொல்லி, கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்ரஹத்தைப் பெறலாம்.

உண்மையில் அன்று சுமங்கலி பூஜை செய்வது மற்றும் உணவு, ஆடை போன்ற நம்மால் முடிந்த வாழ்வின் அடிப்படை பொருட்களை தானம் கொடுப்பது மிக சிறந்த செயலாகும். அன்றைய தினம் தானம் கொடுப்பவர்களிடம் எப்போதும் குறையாத அட்சய பாத்திரம் இருப்பது போல பலன் கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை.

அட்சய திருதியைக்கு செல்வம் (தங்கம்) வாங்க வேண்டும் என்று ஏன் வந்தது என்றால்? அத்தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்கலாம் என்பதும் இந்துமத நம்பிக்கை.

இந்து பெண்கள் தாலி முதல் அனைத்து தங்க ஆபரங்களையும் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியாக பார்ப்பதால் வந்த இடை சொருகல்தான் இந்த “தங்கம் வாங்க வேண்டும்” என்பது.

உண்மையில் அன்றைய தினம் லட்சுமி குடியிருக்கும் பொருட்கள் என்று பார்த்தால், நாம் வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சள், கைக்குத்தல் (முனை முறியாத பச்சரிசி) மற்றும் “கல்” உப்பு போன்றவைகளே!

நம் புது வீட்டின் கிரஹப் பிரவேசத்தில் முதன் முதலில் பசு நுழைய அத்துடன் “கல்” உப்பு மற்றும் அரிசியை முதலில் கொண்டு சென்று வைத்து, பின் கறந்த பசுவின் பாலை காய்ச்சுவது என்பது அந்தப் பொருட்களில் லட்சுமி குடியிருக்கிராள் என்ற நம்பிக்கையில்தான் (இப்போது பாக்கெட் பால்தான் எல்லாம் என்பது வேறு விஷயம்).

இந்த சுதினத்தில் லட்சுமிகரமான, மங்களகரமான பொருட்களை வாங்குவதே அடிப்படை அட்சயத் திருதியையின் நோக்கம்.

கற்காலத்தில் இடி, மின்னல், பாம்பு என்று தனக்கு தீங்கு அல்லது தன்னை விட சத்தி கொண்ட இயற்கை, வானம் பூமி என்று அனைத்தும் மனிதனுக்கு கடவுளாக தெரிந்தது.  அந்த வழி வந்த நமக்கு இன்னும் நம் அடிப்படை எண்ணம் மாறாமல் இப்போது தங்கம் அல்லது பணத்தில் அதிக மதிப்பு கொண்டவை மட்டும் லட்சுமியாக (கடவுளாக) தெரிகிறது.

அப்படி பார்த்தல் கூட சுக்கிரனை உரிய கிரகமாக கொண்ட லட்சுமிக்கு பொருத்தமாக அட்சயதிருதியை தினத்தில் வெள்ளி வாங்குவதுதான் குடும்ப நலனுக்கு பொருந்தும் என்பதுதான் சரியான கருத்து.

சான்றோர்கள் அட்சயத் திருதியையை யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும், அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தருமங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டு செல்லவும் கூறினார்களே தவிர தற்காலங்களில் நடைபெறுவதைப் போல தங்க வெள்ளி நகைகளை வாங்கிக் குவிக்கச் சொல்லவில்லை. ஆக, அட்சயதிருதியை அன்று லட்சுமியை மட்டும் மனதில் கொண்டு தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.

வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்யமுடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம் பிடிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அன்று தானம் கொடுப்பதால் ஆயுள் பெருகும். கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வு வளம் பெறும் என்று கூறப்படுகிறது.

அட்சயதிருதியை அன்று லட்சுமி மட்டுமில்லாமல், சிவன் பார்வதி, நாராயணனையும் மற்றும் நம் நலனுக்காக வாழ்ந்த முன்னோர்களையும் நினைத்து பூஜை செய்தால், நம் பாவம் அனைத்தும் விலகி நல்ல வாழ்வை பெறலாம் என்பதை புரிந்து கொண்டு, நம் வாரிசுகளுக்கும் இந்த உண்மை கருத்தை சொல்லி அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்வது நம் கடமையாகும்.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது, அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது எனறு நினைப்பது எந்த விதத்தில் சரி? அட்சய திருதியைக்கு பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை. முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த அட்சயத் திருதியை மோகம் மக்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. இந்நாளில் நகை வாங்க நகைக்கடைகளில் முன்பதிவு எல்லாம் செய்து கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது மக்களின் இந்த மோகம்.

யோசிச்சு பார்த்தால் மக்களின் அறியாமையே இந்த முட்டாள் தனத்திற்கு காரணம் என்று தோன்றும். அரசியல் வாதிகளை போலவே நகை கடைக்காரர்களும் மக்களை முட்டாளாகவே வைத்து கொள்ள விரும்புகின்றனர்.

அட்சய திருதியை சொல்லியிருக்கும் நம் மதம் புண்ணியம், பாவத்தை பற்றியும் சொல்லியுள்ளது. அட்சய திருதியை அன்று எத்தனை கிராம் தங்கம் வாங்கினோம் என்பதை அளவுகோலாக வைத்து இறைவன் நம்மை எடை போட போவதில்லை.

அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளில் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து. ஒரே நாளில் நகைக்கடைக்காரகளின் லாபத்தைப் பன்மடங்காகப் பெருக்குவது அல்ல நோக்கம்..

தங்கம், வைரம் போன்றவைக்கு விலை என்று ஒன்று உண்டு. ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயங்கள் என்று இவ்வுலகில் சில விஷயங்கள் இருக்கின்றன. உண்மையில் விலை மதிப்பில்லாதவை அவைகள் தாம். அவையெல்லாம் என்னவென்று யோசித்து பார்த்தால் உங்களுக்கே புரியும்.

ஏழை மாணவர்கள் கல்வி கற்க உங்களால் முடிந்ததை கொடுங்கள். பசித்திருப்போருக்கு அன்னதானம் செய்யுங்கள். முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு தான தருமங்களைச் செய்யுங்கள். அன்று செய்யும் நல்ல காரியங்களுக்கு ஒன்றுக்கு பத்தாக பலன் உண்டு. இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது எந்த விதத்தில் சரி?

ஆக, சித்திரை வளர்பிறையின் மூன்றாவது நாளான அட்சய திருதியையன்று செய்யும் எந்த ஒரு செயலும் விருத்தியாகும் என்றும், அதனால் அட்சயத் திருதியையன்று கடவுளுக்கு பூஜைகள் செய்து, தன்னால் ஆன தான தருமங்களை செய்து நல்ல முறைகள் வாழவே இந்து மதம் சொல்கிறது.

***
i-p2

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்