Monday, November 17, 2014

மூவர்களின் ஜீவசமாதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே



மூன்று மகான்கள் சூட்சுமமாக அருள் பாலித்துவரும் 

அருள்நிறை ஸ்ரீ சங்கரானந்த சுவாமிகள்,
அருள்நிறை ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள்.
அருள்நிறை ஸ்ரீ மதுரை முனீஸ்வர சுவாமிகள்.



இந்த மூவர்களின் ஜீவசமாதிகளும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சிவகாசி சாலையில் கோவிந்தன் நகர் காலனி அருகே இருக்கும் சுடுகாட்டை ஒட்டி அமைந்திருக்கிறது.


வெகு காலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப் பகுதியில் வாழ்ந்து வந்தவர் அருள்நிறை ஸ்ரீமாணிக்கம் சுவாமிகள் ஆவார்.இவர் குளித்ததை பார்த்தவர்கள் எவருமில்லை;நானும் இவரைப் பார்த்திருக்கிறேன்.எப்போதும் இவர் பீடி குடித்தபடி காட்சியளிப்பார்;உடலெங்கும் அழுக்குத்துணிகளை அணிந்திருப்பார்;ஆனால், எப்போதும் இவரை நெருங்கும்போது கெட்ட வாடை வந்ததில்லை;நெசவாளர்கள் வாழும் தெருக்களிலும்,பஜார்களிலும் திடீரென யாரிடமாவது காசு கேட்பார்;தெருவுக்குள் எனில் சாப்பாடு கேட்பார்;அப்படிக் கேட்டு யார் இந்த சுவாமிக்குத் தருகிறார்களோ,அவர்களுக்கு அன்றிலிருந்து கஷ்டங்கள் நீங்கியிருக்கின்றன;பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது.எனக்குத் தெரிந்து,ஒரு குடும்பத்தினரிடம் தினமும் குறிப்பிட்ட நேரம் வந்து சாப்பாடு கேட்டிருக்கிறார்;பல நாட்களுக்குப் பிறகு,அந்த குடும்பத்தினர் இவரை திட்டிவிட,இவர் அதன்பிறகு அந்த குடும்பத்தார் இருக்கும் வீட்டுப்பக்கமே வருவதில்லை;இவர் வருவது நின்றது முதல் அந்தக்குடும்பம் குடும்பமாக இல்லை;


இவருடன் ஒரு சிலர் எப்போதும் இருந்திருக்கின்றனர்;தான் சமாதியாவதை முன்பே அறிந்திருந்து,இவர் தன்னோடு இருக்கும் கண்பார்வை குறைபாடிருந்த ஒருவரிடம் சொன்னார்: இன்று முழுவதும் என்னோடு இரு;நான் சமாதியானதும் உனக்கு முழுப்பார்வை தருகிறேன்.


ஆனால்,அந்த கண்பார்வை குறைபாடு இருந்தவர்,பயந்துகொண்டு அடுத்த சில நிமிடங்களில் இவரை விட்டு ஓடியே போனார்.

 அருள்நிறை ஸ்ரீமாணிக்கம் சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா ஒவ்வொரு சித்திரை மாதமும் வரும் மகம் நட்சத்திரத்தன்றும்,இவரது பிறந்த நாள் விழா பங்குனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்றும் வரும்.


அருள்நிறை ஸ்ரீ சங்கரானந்த சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் பரணி நட்சத்தன்று கொண்டாடி வருகின்றனர்.


அருள்நிறை ஸ்ரீ மதுரை சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா ஆனிமாதம் பூசம் நட்சத்திரத்தன்றும் கொண்டாடிவருகின்றனர்.


இந்த மூன்று நாட்களுமே கோலாகலமாக அன்னதானம் நடைபெற்றுவருகிறது.தவிர,சிறப்பு அன்னதானம் ஒவ்வொரு அமாவாசையன்றும்,பவுர்ணமியன்றும் நிகழ்ந்து வருகிறது.தவிர, தினமும் மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த மூவரும் ஏராளமான அற்புதங்களை செய்து வருகின்றனர்.


இவர்களின் அருளாசி கிடைக்க ஒரு சுலபவழி:(நமக்கு எடுத்துரைத்தவர்
கறுப்பு திராட்சை குறைந்தது ஒரு கிலோ; பேரீட்சைம்பழம் மூன்று பாக்கெட்கள்; டையமண்டு கல்கண்டு ஒரு கிலோ;நான்கு வாழைப்பழங்கள்; அரை லிட்டர் நல்லெண்ணெய்;பத்தி பாக்கெட் ஒன்று,கற்பூரம்  இவைகளை வாங்கிக்கொண்டு இந்த மூவர்களின் ஜீவசமாதிகளுக்கு  சனிக்கிழமை தோறும் சென்று காலை 9 முதல் 10.30க்குள் அல்லது மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் வேண்டிக்கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு எட்டு சனிக்கிழமைகளுக்குச் செய்துவர,  நிரந்தர வேலை கிடைக்கும்;பணக்கஷ்டம் எவ்வளவு நெருக்கடியாக இருந்தாலும் அடியோடு விலகிவிடும்.பல அன்பர்கள் இம்முறையைப் பின்பற்றி இன்று நிம்மதியாகவும்,வசதியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.எட்டு சனிக்கிழமைகளுக்குப்  பிறகும் தொடர்ந்து இவ்வாறு வழிபட்டு வர, படிப்படியான பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் என்பது அனுபவ உண்மை!!!

.....
குறிப்பு: படத்தில் வசீகரிக்கும் காந்தக்கண்களோடு இருப்பவர் அருள்நிறை சங்கரானந்த சுவாமிகள்; அமர்ந்த நிலையில் கழுத்தில் துண்டு போட்டிருப்பவர் அருள்நிறை மாணிக்கம் சுவாமிகள்; வயதான தாத்தா ரூபத்தில் அரச மரத்தடி போட்டோவிலிருப்பவர் அருள்நிறை மதுரை சுவாமிகள்;


ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete