Friday, January 23, 2015

திருவொற்றியூர் பட்டினத்தார் சித்தர் கோவில் கும்பாபிஷேகம் 26–ந் தேதி

March uzhavarappani at  pattinathar temple, tiruvottiyur, chennai
திருவொற்றியூர் பட்டினத்தார் சித்தர் கோவில் கும்பாபிஷேகம் 26–ந் தேதி

சென்னை திருவொற்றியூரில் எண்ணூர் விரைவுச்சாலையில், கடற்கரைக்கு மேற்கே அமையப்பெற்ற கோவில் ஸ்ரீபட்டினத்து அடிகள் கோவில் என்று அழைக்கப்படும் பட்டினத்தார் கோவில் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள பழைய ஜீவசமாதியின் மீது கட்டப்பட்டிருந்த கட்டிடம் சேதமடைந்ததால், பழைய கட்டுமானத்தை நீக்கி புதிதாக திருப்பணிகள் நடந்து வருகிறது.

26–ந் தேதி கும்பாபிஷேகம்

விழாவையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், கோபூஜை நடக்கிறது. வரும் 24–ந் தேதி காலை 7.30 மணிக்கு சாந்தி ஹோமமும், அன்று மாலை 5 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜையும் தொடங்குகிறது. 25–ந் தேதி காலை 8 மணிக்கு 2–ம் கால யாகசாலை பூஜையும், அன்று மாலை 6 மணிக்கு 3–ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

வரும் 26–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு 4–ம் கால யாகசாலை பூஜையும், காலை 6 மணி முதல் காலை 7 மணிக்குள் மூலஸ்தானம் ஸ்ரீபட்டினத்தார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து விசேஷ அபிஷேகமும், இரவு 7 மணிக்கு பட்டினத்தார் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

பட்டினத்தார் வரலாறு
காவிரி பூம்பட்டினத்தில் சிவநேசர்–ஞானகலை தம்பதிகளுக்கு குபேரனே பட்டினத்து அடிகளாக தோன்றினார். திருவெண்காடர் என்ற இளமை பருவத்து பெயருடன் வளர்ந்தார். சிவசிதம்பரம்–சிவகாமி அம்மையாரின் மகளான சிவகலையை மணந்தார். குழந்தைபாக்கியம் இல்லாத காரணத்தால் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை வணங்கியதால் மகாலிங்கேஸ்வரரே அவருக்கு மகனாக தோன்றினார்.

மகனை உரிய பருவத்தில் வியாபாரம் செய்ய வெளியூருக்கு அனுப்பினார். வியாபாரம் முடிந்து விதிவசத்தால் கொண்டு வந்த பொருட்களை ஆராய்ந்து பார்த்தார். மகன், தன்தாயிடம் கொடுத்துவிட்டு சென்ற பெட்டியில் காதற்ற ஊசியும், ஓலை ஒன்றும் இருந்தது. இதன் மூலம் ஞானமடைந்து பட்டினத்தார், முக்தி வேண்டி இல்லறம் துறந்து, கோவில்களை தரிசனம் செய்து வந்தார்.


‘‘பேய்கரும்பு’’
‘‘பேய்கரும்பு இனிக்கும் இடத்தில் உமக்கு முக்தி கிடைக்கும’’ என்று அசரீரி கிடைத்தது. பல தலங்களை தரிசனம் செய்துவிட்டு திருவொற்றியூர் வந்த உடன் பேய்கரும்பு இனிக்கவே, தனக்கு முக்தி தரும் தலம் இதுவே என முடிவு செய்து திருவொற்றியூர் ஈசனை வணங்கி கடற்கரையில் விளையாடியபடி ஜீவசமாதி நிலையை அடைந்தார்.

அந்த இடம் தற்போது பட்டினத்து அடிகள் கோவிலாகும். இங்கு சிவலிங்கம் வடிவில் பட்டினத்தார் ஜீவசமாதி காணப்படுகிறது. இங்கு ஆடி உத்திராட நட்சத்திர குருபூஜையும், உத்திராட நட்சத்திர அபிஷேகமும் சிறப்பாக நடந்து வருகிறது.

thank: https://www.dailythanthi.com/

1 comment:

  1. பட்டிணத்தார் திருவடிகள் போற்றி

    ReplyDelete